11/10/2010

Dress code - குடியரசு தலைவர் மாளிகையில் டோண்டு ராகவன்

பிப்ரவரி 2000 ஆண்டு நான் தில்லியில் இருந்தபோது ஒரு துபாஷி வேலைக்கு என்னைக் கூப்பிட்டிருந்தார்கள். மொராக்கோவிலிருந்து ஒரு வணிக தூதுக்குழு அந்த நாட்டின் வணிகத்துறை மந்திரியின் தலைமையில் வந்திருந்தது. அதற்கு பிரெஞ்சு துபாஷி தேவை. அதற்காக என்னை அழைத்திருந்தார்கள்.

அக்குழு வரச்சொன்ன இடத்துக்கு போய் சேர்ந்ததுமே என்னை ஒரு காரில் ஏற்றி அழைத்து சென்றார்கள் ராஷ்ட்ரபதி பவனுக்கு. அங்கு குடியரசு தலைவர் கே. ஆர். நாராயண் தன்னை சந்திக்க வந்த மொராக்கோ மந்திரிக்கு விருந்தளித்தார். பெரிய மேஜையை சுற்றி அவர், அவரது மனைவி, பிரதமர் வாஜ்பேயி, ராம் விலாஸ் பாஸ்வான் போன்றவர்கள் அமர்ந்திருந்தனர். நாராயணன் அவர்கள் அருகில் மொராக்கோ மந்திரியின் மனைவி அமர அவர்கள் நாற்காலிகளுக்கு நடுவில் சற்றே பின்தள்ளி மொராக்கோ வெளியுறவு அமைச்சகத்திலிருந்து வந்த மொழிபெயர்ப்பாளர், மேஜைக்கு எதிர்ப்பக்கத்தில் மொராக்கோ மந்திரி திருமதி நாராயணன் அவர்கள் நடுவில் சற்றே பின்னால் வைக்கப்பட்ட நாற்காலியில் இந்தியத் தரப்பு துபாஷி டோண்டு ராகவன். மொராக்கோ மந்திரியிடம் நான் முதலிலேயே பிரெஞ்சில் பேசுமாறும், மொழிபெயர்ப்பு செய்யவே நான் வந்துள்ளேன் எனவும் கூறிவிட்டேன். விருந்து பாட்டுக்கு நடந்தது. எல்லோரும் உண்டனர், இரு துபாஷிகளும் வேடிக்கை பார்க்க வேண்டிய கட்டாயம். விருந்து முடிந்து எல்லோரும் போனதும் இரண்டு துபாஷிகளுக்கும் அத்தனை சர்வர்களுமாக சேர்ந்து அன்புடன் விருந்து பரிமாறினர், அதே ஐட்டங்கள் எங்களுக்கும் போடப்பட்டன.

ஆனால், விருந்துக்கு முன்னால் நடந்ததுதான் சுவாரசியமான நிகழ்ச்சி. இப்பதிவின் முக்கியப் பொருளும் அதுவே.

மாளிகைக்குள் சென்றதும் என்னை முதலில் நேர்காணல் செய்தது அம்சமான ஒரு சுமார் 26-வயது ஃபிகர். சரளமான ஃபிரெஞ்சில் பேச ஆரம்பித்தார். வெளியுறவு மந்திரி அலுவகத்தில் அசிஸ்டண்ட் செக்ரடரி அவர், ஐ.எஃப்.எஸ். படித்தவர். நானும் அதே மொழியில் பேச அவருக்கும் எனது ஃபிரெஞ்சு மொழியாளுமையில் திருப்தி ஏற்பட்டது.

பிறகு என்னை ஏற இறங்க பார்த்தவர் மொழிபெயர்ப்பாளர்கள் சூட், கோட், டை எல்லாம் அணிந்திருக்க வேண்டுமே அதை என்னிடம் யாரும் சொல்லவில்லையா எனக்கேட்க, நான் குடியரசு மாளிகைக்கு வரப்போவதே அங்கு வந்த பின்னால்தான் எனக்கு தெரிந்தது என்றதும் யோசனையில் ஆழ்ந்தார். எனக்கு இந்த சூட் டை எல்லாம் அலர்ஜி. வேண்டுமானால் நான் அங்கிருந்து சென்றுவிடட்டுமா என நம்பிக்கையுடன் கேட்க, அவர் மாற்று ஏற்பாடுகள் செய்ய நேரமில்லை என்றும், என்னை மாதிரி விஷயம் தெரியாமல் வருபவர்களுக்காகவே கோட் டை எல்லாம் வைத்திருப்பதாகக் கூறி என்னிடம் அவற்றை தந்தார். டை கட்ட எனக்குத் தெரியும் என்பதை காட்டிக் கொள்ளாது நான் பாவ்லா காட்ட, அவரே எனக்கு டையையும் கட்டிவிட்டார். பிறகு கோட் அணிந்து சென்றேன். அதன் பிறகுதான் டின்னர், மேலே சொன்னபடி.

ஆனால் டின்னருக்கு வந்திருந்த வாஜ்பேயி, ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் இந்திய முறைப்படியே உடை அணிந்திருந்தனர். ஆந்திராவிலிருந்து ஒரு எம்.பி. பஞ்சக்கச்ச வேட்டி அணிந்து வந்தார். அவர்களுக்கெல்லாம் ட்ரெஸ் கோட் கிடையாது போல. என்ன செய்வது, அதுதான் வாழ்க்கை.

கோட் மற்றும் டையை அப்பெண்மணியிடம் திருப்பி அளிக்கும்போது அவரிடம் அவரே இவ்வளவு அழகாக ஃபிரெஞ்சு பேசக்கூடியவராக இருக்கும் நிலையில் என்னை ஏன் கூப்பிட்டார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் தனது ஸ்டேட்டசுக்கு அது ஒத்துவராது எனக்கூறிவிட்டார். என்ன இருந்தாலும் துணைச்செயலாளர் அல்லவா. அவர் கூறியதிலும் தவறில்லைதான்.

பிறகு வணிகத்துறை அமைச்சகத்துக்கு சென்றோம். அப்போது மந்திரி முரசொலி மாறன். எனக்கு அவருக்கும் மொராக்கோ தூதுக்குழுவுக்கும் இடையில் தமிழ்-பிரெஞ்சு துபாஷியாக செயல்படலாம் எனப்பார்த்தால் அன்றைக்கென்று அவர் வரவில்லை. துணைமந்திரி ஒருவர்தான் வந்திருந்தார். அவரிடம் ஆவலாக ஹிந்தியில் மொழிபெயர்க்கட்டுமா எனக்கேட்க அவர் ஆங்கிலத்திலேயே பேசுமாறு கூறிவிட்டார். எனக்கு ஏமாற்றம்தான். என்ன செய்வது. வாடிக்கையாளர் சொல்வதே வேதவாக்கு (The customer is always right).

எனக்கு ஒரு சந்தேகம். வெள்ளைக்காரன் நம்நாட்டை விட்டுப் போய் அறுபத்தி மூன்று ஆண்டுகள் ஆனாலும் இந்த மாதிரி ட்ரெஸ் கோடுகள் வைத்திருக்க வேண்டுமா? ஆனால் இந்த நிகழ்வைப் பொருத்தவரை பிரச்சினை இல்லைதான். தில்லியின் குளிருக்கு அது தேவைதான். நானே ஷு, முழுக்கை சட்டை மற்றும் முழுக்கை ஸ்வெட்டர்தான் போட்டிருந்தேன். ஆகவே கோட் டை அணிவதில் பிரச்சினை இல்லைதான். இருப்பினும் மே மாத தில்லி வெயிலில் ஒரு வாடிக்கையாளர் ஃபுல் சூட் அணிந்து ஜெர்மானியரை வரவேற்க என்னை அழைத்து சென்றால், வந்தார் அந்த வெளிநாட்டுக்காரர் அரை டிராயர் டீ ஷர்ட் அணிந்து. நான் சற்றே திரும்பி என் புன்முறுவலை மறைத்துக் கொண்டேன்.

சீதோஷ்ண நிலைக்காக வெள்ளைக்காரன் கோட் அணிகிறான், அவன் ஊரில் பிச்சைகாரனும் சூட் போடுகிறான். நமக்கென்னெ கேடு? ஏன் இந்த அடிமை புத்தி?

அன்புடன்,
டோண்டு ராகவன்

7 comments:

ராம்ஜி_யாஹூ said...

fully agree with u. But us, uk ppl dont insist us to change dress code.

virutcham said...

நம்ம சென்னை சீதோஷ்ண நிலைக்கு சற்றும் ஒவ்வாத ஷூ, socks , tie மாட்டி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அங்கே இன்னும் அதே chubby cheeks dimple chin rosy lips, curly hair, blue eyes இருந்தால் teachers pet என்று நமக்கு சற்றும் பொருந்தாத rhymes படிப்பது வரை இந்த அடிமை புத்தி காசு கொடுத்து வாங்கும் பெருமிதமாகவே கருதப் படுகிறது

hayyram said...

//டை கட்ட எனக்குத் தெரியும் என்பதை காட்டிக் கொள்ளாது நான் பாவ்லா காட்ட, அவரே எனக்கு டையையும் கட்டிவிட்டார்// நல்ல வேளை நீங்கள் பாண்ட்டுக்கு ஜிப் போடத் தெரியாதது போல பாவலா காட்டவில்லை. என் நெஞ்சு வெடிச்சிருக்கும்.

Sathish said...

I like the part 'The customer is always right'. Please watch this video http://www.youtube.com/watch?v=8GmElzQvepg&feature=related

உண்மை said...

same dress code applies to what the present lawyers have during the court session - a black overcoat from shoulder to bottom of the leg. Why do we need this?

Unknown said...

//நல்ல வேளை நீங்கள் பாண்ட்டுக்கு ஜிப் போடத் தெரியாதது போல பாவலா காட்டவில்லை. என் நெஞ்சு வெடிச்சிருக்கும்.// - That was funny hayRam.

Mr.Dondo, Yes, you are right, here in US my company lets me wear business casuals during summer, and formals(suit & tie) during other seasons.

No the homeless do not wear suits, that is wrong info. They try to get the whole body covered. On a side note, if you get a chance please read "Street lawyer" By John Grisham, it talks abt the life of homeless in and around the DC area.

uthamanarayanan said...

Problem and disgusting feature is we are given to a false pretense of going out with western attire; and we don't seem to have been taught to feel prestige of wearing our traditional dress, leave alone so called pants and full hand shirts.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது