இந்த வரிசையில் உள்ள முந்தைய பதிவுகளை பார்க்க அதற்கான லேபலை சுட்டவும்.
இதுவரை நாம் தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி எழுதியதில் என்னால் குறிப்பிடப்பட்டவர்கள்:
1. தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பவர்கள்
2. கோலங்கள் அபி, தொல்காப்பியன் போன்ற மசோகிஸ்டுகள்
3. தாங்கள் முன்னுக்கு வந்தால் மட்டும் போதாது அடுத்தவர்கள் தோல்வி அடைய வேண்டும் என நினைப்பவர்கள்
4. சம்மன் இல்லாமல் ஆஜராகி தேவையற்ற, அனேக சமயங்களில் உபயோகமற்ற ஆலோசனைகள் தருபவர்கள்
5. தாம் செய்யும் ஒரு தவறுக்கும் பொறுப்பேற்காது, அதை மற்றவர்கள் தலையில் கட்டுபவர்கள்
6. எமோஷனலாக பிளாக்மெயில் செய்பவர்கள்
7. கழுத்து மட்டும் குறைகளை சுமந்து யார் சாதாரணமாக எதையும் சொன்னாலும் தன்னை தாக்குவதாக நினைத்து கொண்டு பிறாண்டுபவர்கள் (they have a chip on their shoulders)
இப்பதிவுக்கு நான் தேர்ந்தெடுத்த தவிர்க்க வேண்டிய நபர் தாங்கள் சொல்வதை அவர்களே சீரியசாக எடுத்துக் கொள்ளாது அவர்கள் சொன்னதை அப்படியே நம்புபவர்களை நட்டாற்றில் விடுபவர்கள்.
பழைய அம்புலிமாமாவில் நான் படித்த ஒரு கதை இங்கு நினைவுக்கு வருகிறது. ஒரு கல்விமான் தன் வித்தைகளை அரசரிடம் காட்டி பரிசு பெற தலைநகரத்துக்கு சென்றான். சில நாட்களிலேயே திரும்ப வருவதாக அவன் பிளான். அவன் தன் ஊரை விட்டுக் கிளம்பும் முன்னால் அவன் ஊரைச் சேர்ந்த அவன் நண்பன் தனக்கு அர்ஜெண்டாக சில பொருட்கள் தன் ஆராய்ச்சிக்காக தேவைப்படுகின்றன என்றும், அவை தலைநகரில் மட்டும்தான் கிடைக்கும் என்றும், அவன் அவற்றை தான் திரும்பும்போது கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான்.
அவன் தலைநகரத்துக்கு சென்று அரசரைப் பார்த்தான். அவர் அவன் மேல் இம்ப்ரெஸ் ஆகி அவனுக்கு உடனடியாக அரசில் முக்கிய பதவி அளித்து, உடனேயே வேலையைத் துவங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஆனால் அவன் அதற்கு தலைநகரிலேயேதான் தங்க வேண்டும். இவனோ அரசரிடம் தான் உடனேயே தன்னூருக்கு திரும்ப வேண்டும் என பிடிவாதமாகக் கூறி, நண்பன் கேட்டப் பொருட்களை வாங்கி ஊர் திரும்ப அவன் தந்தை அவன் வேலையில் உடனடி சேராததற்காக அவனைக் கடிந்து கொண்டார்.
இவன் தன் நண்பனைக் கண்டு அவனிடம் பொருட்களை கொடுக்க, அவனோ தலையை சொரிந்தவாறே “அடேடே நான் உன்னிடம் கேட்டதே மறந்து போயிற்றே, மேலும் இப்போது நான் வேறு ஆராய்ச்சியில் இறங்கியுள்ளதால் இவை எனக்குத் தேவையில்லை, நீயே வைத்துக் கொள்” எனக்கூறி விட்டு அப்பால் சென்றான்.
இது ஒரு கதைதான் என்றாலும் இப்போதும் இம்மாதிரி அடிக்கடி நடக்கிறதே.
இன்னொரு வகை நபரும் மேலே நான் சொன்னவருடன் நெருங்கிய சம்பந்தம் கொண்டவர்.
இப்படித்தான் நாங்கள் தில்லியில் இருந்தபோது ஆண்டுக்கொரு முறை சென்னைக்கு வந்து போய் கொண்டிருந்தோம். அக்கம்பக்கத்து பெண்மணிகள் என் மனைவியிடம் சென்னையில் கிடைக்கக் கூடிய பல பொருட்களை வாங்கி வரச் சொல்லுவார்கள். அவரும் சில முறை அவ்வாறு செய்து பார்த்தார். ஆனால் பொருட்களை பார்த்து, அவை தமக்கு பிடிக்கவில்லை ஆகவே வேண்டாம் என்பார்கள் சிலர். பலர் பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் தராமல் இழுக்கடிப்பார்கள்.
என்னவாயிற்றென்றால், என் மனைவி தன் அக்கம்பக்கத்தாரிடம், முக்கியமாக தில்லியில் இருக்கும் எங்கள் உறவினர்களிடம் தான் ஊருக்குச் செல்வதையே மறைத்து விடுவார். சாதாரணமாக அவர் என் மகளுடன் கிளம்பிப் போன ஒரு மாதம் கழித்துத்தான் நான் கிளம்புவேன். என்னிடம் இம்மாதிரி பொருட்களை வாங்கச் சொன்னால் நான் தாட்சணியம் இன்றி மறுப்பேன். அப்படி மறுக்க முடியாத சிலரிடம் அவர்கள் பட்ஜெட் என்ன எனக்கேட்டு முன்னாலேயே முழுப் பணமும் வாங்கி விடுவேன். பிறகு அப்பணத்தை தில்லியில் இருக்கும் எனது வங்கியிலேயே போட்டு விட்டு குஷாலாக சென்னை செல்வேன். பொருட்கள் வாங்க மாட்டேன்.
ஊருக்கு வந்ததும் பணம் கொடுத்தவர்கள் கேட்டால், அவர்களுக்கேற்ற பொருள் மிக அதிக விலையானதாலும், அவை நன்றாக இல்லாததாலும் வாங்கவே இல்லை என்றும், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் பணம் வேறுவகையில் செலவழிந்து விட்டதாகக் கூறி சில நாட்களுக்கு பின்னால் அதை திருப்புவேன். ஆகவே என்னிடம் அவ்வாறு கேட்டவர்கள் பிறகு கேட்டதேயில்லை. விட்டது சனி.
என் மனைவியிடமும் கடுமையாகக் கூறினேன். இனிமேல் ஏதாவது யாருக்காவது வாங்கி வரவேண்டும் முதலிலேயே பணம் வாங்கிவிட வேண்டும் என்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
15 hours ago
2 comments:
இன்னொரு வகையும் தவிர்க்க பட வேண்டியவரே. தன்னால் முடியாத ஒரு உயர்ந்த விஷயத்தை ஒருவர் செய்யும் போது, அவரையும் அவர் செய்யும் காரியத்தையும் கேவலமாக விமர்சனம் செய்து, உயர்ந்த செயல் செய்தவரை தன் மீதே வருத்தப்படவைத்து, அவரையும் தன நிலைக்கு கொண்டு வரும் கீழ்த்தரமானவரே அந்த வகை.
சிறந்த உதாரணம்: பெரியார் மற்றும் அவரது சீடர்கள்.
எல்லோரையும் பணக்காரர்கள் ஆக்க முடியாவிட்டாலும் எல்ல்லோரையும் ஏழையாக்க முடியுமே என்று சமத்துவம் பேசுபவர்கள்.
எதாவது ஒரு தவிர்க்க முடியாத நபர், ஊருக்கு வரும் போதெல்லாம் தங்க நகை வாங்கி வரச் சொல்வதும் , பின்னர் தட்டிக் கழிப்பதும் எங்களுக்கு வாடிக்கை.ஓவ்வொரு ட்ரிப்பிலும் அது போல் வேண்டாது சேர்ந்த நகை நிறைய.
ஆனாலும் தங்கம் விலை இப்போது கண்ணாபின்னா என்று ஏறி விட்டதால் அதுவும் ஒருவகையில் நன்மையாக போய்விட்டது.
Post a Comment