1/11/2006

நந்தவனத்தில் ஓர் ஆண்டி

இது ஒரு பழைய பதிவு. தமிழ்மணத்திற்குள் இணைந்த புதிதில் டிஸம்பர் 2004-ல் போடப்பட்டது. அதே மாதிரி கட்டத்தில் இப்போது நந்தவனத்திலும் அதே பிரச்சினை தலை தூக்குவதால் இங்கு மறுபடியும் பதிவு செய்கிறேன், அதன் பின்னூட்டங்களுடன்.

தமிழ் வலைப்பூ பட்டியலில் இருந்து எலிக்குட்டியை ஒரு வலைப்பூவின் சுட்டியின் மேல் வைத்து இடது க்ளிக்கிட்டால் சில சமயம் ஒரு புது ஜன்னல் திறக்கிறது, சில சமயம் பட்டியலின் ஜன்னலே மாறி விடுகிறது.

இரண்டாவது நடக்கும் போது ஒவ்வொரு முறையும் பட்டியலுக்கு திரும்பி வரத் தனியாகச் சொடுக்க வேண்டியிருக்கிறது. இல்லாவிடில் எலிக்குட்டியை வலது க்ளிக்கிட்டு, புது ஜன்னலில் திறக்கும் ஆணையைச் சொடுக்க வேண்டியிருக்கிறது.

இது சிறிது அயர்ச்சியைக் கொடுக்கிறது.

வலைப்பூ பட்டியல் சுட்டியில் இருந்து எப்போதும் புது ஜன்னலில் திறக்க என்ன ஸெட்டிங் தேவைப்படுகிறது? கூகளில் இதற்கானத் தனி ஏற்பாடுகள் உண்டு. இங்கும் அம்மாதிரி உண்டா? யாராவது உதவ முடியுமா?

நன்றி,
டோண்டு ராகவன்.

11 comments:

Jayaprakash Sampath said...

பொதுவான வலைப்பதிவுகள் பட்டியலில் இருக்கும் பதிவுகளைச் சுண்டினால், அவை புதிய ஜன்னலில் திறக்கும். நடு சென்டரில் இருக்கும் special purpose வலைப்பதிவுகள் எல்லாம் அதே ஜன்னலில் திறக்கும். இதைத் தவிர்க்க, எப்போது எதைச் சுட்டுவது என்றாலும், எலிக்குட்டியை வலது பக்கம் கிளிக்கி, " open in New Window' என்பதை தேர்வு செய்தால் புதிய சன்னல் திறக்கும். படித்து விட்டு மூடிவிடுங்கள். ஒரே சன்னலில் படித்தால், எங்கே துவங்கினோம், இப்போது எங்கே இருக்கிறோம் என்றே தெரியாது. மாயவலை இது.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அந்தப் பக்கமே அப்படி அமைக்கப்பட வசதி இருக்கிறது. தமிழ்மணத்தில் உள்ளது போல. ஓய்வாய் ஒரு நாளில் காசியோ மதியோ இதைச் செய்ய முடியும். அவர்களுக்கு ஒரு மடல் அனுப்புங்கள்.

ENNAR said...

ஆம் அப்படித்தான் எனக்கும் உள்ளது

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

hold shift key while left clicking. This will always open the link in new window..If u already know this tip..he he sorry :)

dondu(#11168674346665545885) said...

"hold shift key while left clicking. This will always open the link in new window."

இது, இது, இதைத்தான் எதிர்பார்த்தேன். எனக்கு முற்றிலும் புதிய தகவல் ஒன்றை சொன்னதற்கு மிக்க நன்றி. திசைகள் பக்கத்திலும் போய் செய்து பார்த்தேன். இது அங்கும் வருகிறது.

இந்த உதவிக்கு பிரதியாக நான் அறிந்து கொண்டதை கூறுவேன்.

While typing in MS Word, it may come about that you have inadvertently pressed the caps lock key. When you now start typing everything will be in caps. No need to despair.
Release caps lock, put the cursor before each word and press shift+F3. The entire word will go into lower case. If you again press shift+F3 in the same cursor position, you will get caps for the first letter and if you repeat it once more, all the words will be in caps and so on. This is better than retyping everything isn't it?

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

டோண்டு சார்,

உங்க பதிவும் பின்னூட்டங்களும் ஒரு கணினி வகுப்பு போல இருந்திச்சு.

நன்றி.

dondu(#11168674346665545885) said...

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும் என்ற கொள்கை இருந்தால் தினம் புதிதாக ஒன்றைக் கற்கலாம், புதிதாக மற்றவருக்கும் சொல்லலாம் ஜோசஃப் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மகேஸ் said...

Its very easy to open a new window when clicking on a hyperlink.
press "Shift" key when clicking the hyperlink. this opens a new window at all times.
(I cann't install tamilfonts in my office, hence i am typing in english. sorry about that)
-- Mahendran Mahesh..

dondu(#11168674346665545885) said...

மகேஸ், நீங்கள் 7 மணிநேரம் லேட். ரவிசங்கர் ஏற்கனவே இதை கூறிவிட்டார். இருந்தாலும் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தகடூர் கோபி(Gopi) said...

டோண்டு ஐயா,

"hold shift key while left clicking. This will always open the link in new window."

நானும் அதைத்தான் சொல்ல நினைத்தேன்.. ரொம்ப லேட்...

மகேஸ், உங்க அலுவலகத்தில இருந்து தமிழில் தட்டச்சு செய்ய:

உங்கள் கணினியில் மென்பொருள் நிறுவ உங்களுக்கு உரிமை இருக்குமானால்:

எ-கலப்பை

இல்லையென்றால்:

புதுவை தமிழ் எழுதி
தகடூர்

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் கோபி. உங்களுக்கும் அந்தக் கனவுப் பெண்ணிற்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். சென்னை வந்தால் என்னுடன் அவசியம் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண்கள் 044-22312948 மற்றும் 09884012948.

உங்கள் காமராஜ் ஹிந்தி எழுத்துரு பெட்டியைப் பற்றிப் பேசவேண்டும்.

பை தி வே இகலப்பையைப் போல ஹிந்தி மொழிக்கு ஏதாவது மென்பொருள் உண்டா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது