பல மாதங்ககளுக்கப்புறம் ஒரு திரைப்படம் தியேட்டரில் போய் பார்த்தேன். ஒரு எக்ஸல் கோப்பை ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சுக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். மொழிபெயர்ப்பு வேலையை விட பிரெஞ்சு எழுத்துகளுக்கு ஆக்ஸண்ட் போடுவதுதான் சள்ளை பிடித்த வேலை. மொத்தம் 11 ஆக்ஸண்டுகள். அவற்றை கேப்பிடல் எழுத்துக்களிலும் போட வேண்டும். வேர்ட் கோப்பாக இருக்கும் பட்சத்தில் தட்டச்சுப் பலகை குறுக்கு வழிகள் வைத்துக் கொள்ளலாம். ஆனால் எக்ஸல் மற்றும் பவர் பாயிண்டில் அந்தப் பாச்சா பலிக்காது. அதற்காகவே நான் க்ளிப் போர்டை உபயோகித்து ஒரு வழி கண்டு பிடித்திருக்கிறேன். கஷ்டம்தான், ஆனாலும் செய்யக் கூடியதே. ஆனால் விளைவு என்னவென்றால், வெகு சீக்கிரம் களைப்பை உண்டு பண்ணும். இன்று மாலை வீட்டம்மா அபூர்வமாக சினிமா போக வேண்டும் என்ற ஆசையைக் கூற, அதை நிறைவேற்றுவதை விட எனக்கு என்ன வேலை? ஆகவே ஜெர்ரி படத்திற்கு போனேன். போய் விட்டு ஃபிரெஷ்ஷாக வந்தேன். இப்பதிவைப் போடுகிறேன்.
நல்ல விஷயம் என்னவென்றால் ஒரு படத்தைப் பற்றி ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லை, கிரேஸியின் வசனங்கள் தூள் ஆக இருக்கும் என்பதைத் தவிர. ஆனாலும் படம் நன்றாகவே இருந்தது. மேரேஜ் மேட் இன் சலூன் என்ற நாடகத்தின் தீம்தான். அது ஏற்கனவே பொய்க்கால் குதிரையாகவும் வந்திருக்கிறது. அதை வேறு மாதிரி உல்டா செய்து ஜெர்ரியாக்கியிருக்கிறார்கள். கிரேசி ட்ரூப்பின் முக்கிய நடிக நடிகையர் துணைப் பாத்திரங்களில். இதில் என்ன விசேஷம் என்னவென்றால் அவர்களைத் தவிர வேறு எந்த முகமும் - கதாநாயகன் நாயகி உட்பட - எனக்குப் பரிச்சயமில்லை. ஆனால் சும்மா சொல்லக் கூடாது, அவர்களும் நன்றாகவே வேலை செய்திருக்கிறார்கள். சூப்பர் மார்க்கெட்டில் மாட்டிக் கொண்டு அவர்கள் பாடும் பாடலின் வார்த்தைகள் பின்னணி இசையின் களேபரம் இன்றி க்ளியராக காதில் விழுகிறது, நல்லப் பாடல்.
படம் ஓடுமா என்று தெரியவில்லை. வெற்றி பெற எல்லாத் தகுதிகளும் உள்ள படம் அவ்வளவுதான் கூற முடியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
13 comments:
சார்,
கிரேசி மோகனின் டைமிங்க்கா கண்டிப்பாக பார்கனும்.
நீண்ட நாட்களுக்கப்புறமா வந்தேன்.எப்படி நலமா சார்?
படத்தைத்திறம்பட இயக்கிய எம் நண்பர் காந்தனைப் பற்றி ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம்!
கிரேசி மோகனின் டைமிங்தான் அவரது பலம். அவரும் அவர் தம்பி பாலாஜியும் அடிக்கும் கொட்டங்கள் தமிழ் நாடக உலகம் அறிந்ததே. இப்போது சினிமாவுக்கும் வந்திருக்கிறார். ஒரு ஆறுதலான விஷயம். இப்படத்தின் ஒரிஜினல் ஐடியாவைக் கொடுத்த மேரேஜ் மேட் இன் சலூன் நாடகத்தில் மாது பாலாஜிதான் ஹீரோ. சினிமாவில் அவர் வேறு ரோலில் அடக்கி வாசித்திருக்கிறார். சினிமா என்பது மாறுபட்ட மீடியம் என்பதைத் தெரிந்து நடந்திருப்பது அவருக்கும் கிரேசிக்கும் பெருமை சேர்க்கிறது.
காந்தன் அவர்கள் நன்றாகவே டைரக்ட் செய்திருக்கிறார். அவர் சகோதரர்தான் ஹீரோவாமே?
வாருங்கள் ஸ்ரீரங்கன் அவர்களே. நலமா? Wie geht's Ihnen und Ihrer Familie?
அன்புடன்,
டோண்டு ராகவன்
மன்னிக்கவும், என் பின்னூட்டத்தில் ஒரு தவறு வந்து விட்டது. காந்தன் அவர்கள் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் மௌலியின் சகோதரர். கதாநாயகனாக நடித்திருக்கும் ஜித்தன் ரமேஷின் சகோதரர் இல்லை.
நான் ஏற்கனவே கூறியபடி கிரேசியின் நடிக நடிகைகளைத் தவிர வேறு யாரையுமே என்னால் அடையாளம் காண முடியவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சார்....
வேலனில் பார்த்தீர்களா?
நான் தேவிபாலாவில் நேற்று மதியம் நண்பர்களுடன் பார்த்தேன்.... நானும் இதற்கு சும்மா திரை விமர்சனம் எழுதி இருக்கிறென்.... சரியா பாருங்கள்....
http://madippakkam.blogspot.com/2006/05/blog-post_29.html
ஆம், வேலனில்தான் பார்த்தேன். வீட்டிலிருந்து கூப்பிடு தூரம்தானே. பால்கனி டிக்கெட் 40 ரூபாய். அதிகமோ?
நீங்கள் குறிப்பிட்டப் பதிவில் பின்னூட்டமிட்டு விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஈஸ்வர் அவர்களே, இப்படத்தைப் பொருத்தவரை போட்ட பணத்தை எடுத்து விடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கிரேஸி மோகனின் வசனங்களில் எனக்கும் அதீத நம்பிக்கை உண்டு.
ஆயின் அது மட்டுமே போதுமான்னுதான் தெரியலை. அடுத்த முறை சென்னைக்கு வரும்போது பார்க்க வேண்டும்
காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் பிரதீப் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நேற்று கோயம்பேடு ரோகிணியில் பார்த்தேன்.. டிக்கெட் விலை 50 ரூபாய்... நல்ல தரமான காமெடி...அந்த ஒப்பனிங் மொழிபெயர்ப்பு காட்சியும் வசனமும் பற்றி மொழிப்பெயர்ப்பாளர் எதாவது சொல்லியிருப்பார் என்ற ஆவலில் வந்தேன்... சொல்லவில்லை எனோ?:))
சார், உண்மையச் சொல்லுங்க. ரொம்ப நாள் கழிச்சு மும்தாஜ் நடிச்சிருக்காங்கன்னு தானே பார்க்கப் போனிங்க ;-)
இல்லை கேவிஆர் அவர்களே. எனக்கு பிடித்தது நக்மாதான். தற்சமயம் ஜோதிகா, சூர்யாவுடன் சேர்ந்து வரும் பட்சத்தில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment