நண்பர்களே,
இன்று மாலை 6 மணியளவில் சென்னை உட்லேண்ட்ஸ் டிரைவ்-இன்னில் ஒரு சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பு வைக்க எண்ணியுள்ளோம் (டிபிஆர். ஜோசஃப் மற்றும் நானும்). சென்னை வலைப்பதிவாளர்கள், சென்னையில் தற்சமயம் இருக்கும் வெளியூர் வலைப்பதிவாளர்கள் ஆகியோரைக் கண்டு உரையாட ஆசை. சந்திப்பு சுமார் 2 மணி நீடிக்கலாம்.
குறைந்த அவகாச அறிவிப்புக்கு மன்னிக்க வேண்டுகிறோம். வர எண்ணம் உள்ளவர்கள் இப்பதிவின் பின்னூட்டமாக அதை வெளியிடலாம். தொலைபேசியிலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
டோண்டு ராகவன்: 9884012948
டி.பி.ஆர். ஜோசஃப்: 9840751117
என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
20 comments:
யாரெல்லாம் வர முடியுமோ வாருங்கள்...
அன்புடன்,
வரவேற்கும்,
டிபிஆர்.ஜோசஃப்
சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு வெற்றிகரமாகவும் நல்லபடியாகவும் நடைப்பெற எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிராத்திக்கிறேன். நான் வரஇயலாவிடினும் என்மனம் அந்நேரம் அங்கேயேதான் இருக்கும்.
நிகழ்ச்சியை வலைப்பூவில் பதித்தால் பயன்பெறுவேன்.அழைப்புக்கு
நன்றி!
வாழ்க வளமுடன்.
நான் நிச்சயம் வருகின்றேன்
வலைப்பதிவாளர்களின் சந்திப்பு நல்ல கருத்து. முடியுமாயின் தகுந்த கால இடைவெளியில் (3 மாதத்துக்கு ஒருமுறையோ அல்லது 6 மாதத்துக்கு ஒருமுறையோ) ஏற்பாடு செய்ய இயலுமாயின் அனைவரும் கலந்துக் கொள்ள ஏதுவாகும். இதற்கான செலவை எல்லோரும் பகிர்ந்துக் கொள்ளலாம். திருவாளர்கள் ஜோசப் டோண்டு அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். மற்றோருமுறையேனும் கலந்துக் கொள்ள விழைகிறேன்.
அன்புடன்
சந்தர்
பின்னூட்டம் இட்டவர்கள், இடப்போகிறவர்கள் எல்லோருக்கும் நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ரொம்ப தூரத்துல இருக்கேன். அதனால சந்திப்பு நல்லபடியா நடக்க வாழ்த்தமட்டும் தான் முடியும்.
மீட்டிங்குக்கு வாழ்த்துக்கள் டோண்டு ஐயா,
மீட்டிங் ஸ்பெஷல் அஜெண்டா ஏதும் உண்டா இல்லை வழக்கமான சந்திப்பா?
ராகவன் தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள். இம்முயற்சி தொடர்ந்து வெற்றி பெறட்டும்.
சந்திப்பு
நன்றி வெங்கடரமணி, செல்வன் மற்றும் சந்திப்பு அவர்களே.
"மீட்டிங் ஸ்பெஷல் அஜெண்டா ஏதும் உண்டா இல்லை வழக்கமான சந்திப்பா?"
வழக்கமான சந்திப்பு, அதே சமயம் ஒரு விஷயத்தைப் பற்றி நிச்சயம் பேசுவோம்!
அன்புடன்,
டோண்டு ராகவன்
அவசியம் வருகிறேன்.
ஏற்பாட்டுக்கு நன்றி
ஜயராமன்
வேறு நிகழ்ச்சிக்கு போவதாக முன்னதாகவே எடுத்திருந்த முடிவை மாற்ற இயலவில்லை. அடுத்தமுறை கண்டிப்பாக வருகிறேன். சந்திப்பு நன்றாக நடைபெற வாழ்த்துக்கள்.
ஓகை நடராஜன்.
என்ன ராகவன் சார். இவ்வளவு தாமதமாக சொல்கிறீர்கள். எனக்கு மிகுந்த விருப்பமெனினும் இன்று வெளியூர் செல்வதாய் முடிவாகிவிட்டது. இப்படி யாராவது சென்னையில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய மாட்டார்களா என நினித்திருந்தேன். ஆனால் இப்போது வர முடியாமைக்கு மிக வருந்துகிறேன். மிக விரைவில் அடுத்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்வோம். எனது ஆர்வத்தை சொல்லவே இந்த மறுமொழி. நன்றி.
திடீர் முடிவாக எடுக்கப்பட்ட சந்திப்பு. மன்னிக்க வேண்டுகிறோம். பரவாயில்லை, வர முடியாதவர்களை அடுத்த முறை சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இனிதாய் நடந்து முடிய வாழ்த்துக்கள்..
முன்னரே அறிவித்திருந்தால் அனைவரும் கலந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும்.
வர ஆசை இருப்பினும் இன்று மாலை 6 மணிக்கு முக்கியமான கிளையண்ட் ஒருவரை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் வைத்திருக்கிறேன்...
வலைப்பதிவாளர் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக்கள்!!!
வணக்கம் சார்,
நல்லபடியாக நடத்துங்கள் வாழ்த்துக்கள்
வர இயலாமை அதிக தூரம் வேலைச் சுமை இதுதான் காரணங்கள்.
ஜோசப் சார் சென்னையில் தான் உள்ளார்களா?
நன்றி நிலவு நண்பன், லக்கிலுக், கிருஷ்ணன், என்னார், அருள்குமார், ஓகை அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்பின் டோண்டு,
முன்னமே அறிவித்திருந்தால் அதற்கேற்ப என் வேலைகளை தள்ளியே முன்னமோ செய்து முடித்திருப்பேன்.
எனிவே,சந்திப்பு இனிமையாக அமையட்டும்.
மீண்டும் ஒரு வாய்ப்பு கிட்டும் என்ற நம்பிக்கையில்
ப்ரியன்.
சந்திப்பு(கூட்டம்) இனிதே நடக்க வாழ்த்துக்கள். நான் இந்தியா வரும் போது இது போல் ஏதும் சந்திப்பு நடத்தினால் நன்றாக இருக்கும்
சந்திப்பு(கூட்டம்) இனிதே நடக்க வாழ்த்துக்கள். நான் இந்தியா வரும் போது இது போல் ஏதும் சந்திப்பு நடத்தினால் நன்றாக இருக்கும்
Post a Comment