ரீடர்ஸ் டைஜஸ்டின் ஆரம்பம் மிக சாதாரணமானது. பல பத்திரிகைகள், புத்தகங்கள் ஆகியவற்றிலிருது தொகுத்து அவற்றை அவற்றை தங்கள் வாசகர்கள் படித்து பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் டெவி வாலஸ் மற்றும் அவரது மனைவி லீலாவால் ஆரம்பிக்கப்பட்டது இது. முதல் இதழ் 1922-ல் வந்தது. ஒரு இதழ் பத்து அமெரிக்க டாலர் செண்டுகள் விலைக்கு சந்தாதாரர்களுக்கு தபால் மூலம் அனுப்பட்ட இந்த பத்திரிகை 1929-ல் கடைகளுக்கு வந்தது. பத்து லட்சம் காப்பிகள் இலக்கு 1935-ல் எட்டப்பட்டது. 1994-ல் சர்குலேஷன் 100 கோடியை எட்டியது. ஆகஸ்ட் 2005 ஆயிரமாவது மாத இதழாகும் (80 வருடங்களுக்கு மேல்). தற்சமயம் ரீடர்ஸ் டைஜஸ்ட் 49 எடிஷன்களாக, 20 மொழிகளில் அச்சிடப்பட்டு 61=க்கும் அதிகமான நாடுகளில் வாங்க முடிகிறது. 2005-ல் கூட ஒரு புது ருமேனிய எடிஷனைக் கொண்டு வந்தார்கள்.
புள்ளி விவரங்கள் போதும் என நினைக்கிறேன். இனிமேல் ரீடர்ஸ் டைஜஸ்ட் என் வாழ்க்கையில் என்ன பங்கு வகித்தது என்பதைப் பார்க்கலாம். நான் 1962-லிருந்து ரீடர்ஸ் டைஜஸ்டை மாதா மாதம் படிக்க ஆரம்பித்தேன். அதன் கம்யூனிச எதிர்ப்பு, இஸ்ரேல் ஆதரவு, அமெரிக்க நிலையின் பிரதிபலிப்பு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டேன். பல கட்டுரைகள் வெவ்வேறு மூலங்களிலிருந்து திரட்டப் பட்டவை. அவை புத்தகங்களாக இருக்கும் பட்சத்தில் அவற்றை அமெரிக்க நூலகத்தில் தேடி படித்தேன். அறுபதுகள் முழுக்க அதனால் நான் நல்ல முறையில் பாதிக்கப்பட்டேன். வீட்டில் இந்திய எடிஷன் வந்தது. அமெரிக்க எடிஷனுக்கு அமெரிக்க நூலகம் செல்வேன். அதனுடைய It pays to increase your word power, drama in real life, book of the month, humor in uniform, life's like that, laughter the best medicine ஆகிய பகுதிகள் என்னை மிகவும் கவர்ந்தன. கம்யூனிசத்தின் புளுகு பிரசாரங்கள், சோவியத் யூனியன் சரித்திரத்தை தங்களுக்கேற்ப திருத்தி எழுதுவது ஆகியவற்றை இப்பத்திரிகை தோலுறுத்திக் காட்டியது. என்னைப் போலவே இளைஞர்கள் பலரும் இப்பத்திரிகையால் ஈர்க்கப்பட்டனர். அவ்வப்போது ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ்களிலிருந்து எனக்கு பிடித்த கட்டுரைகளை சேர்த்து, பைண்ட் செய்து வைத்துக் கொள்வது என் வழக்கம்.
வயதானவர்களும் ரீடர்ஸ் டைஜஸ்டின் பிடியிலிருந்து தப்பவில்லை. முக்கியமாக சீதாப்பாட்டி. அவர் டைஜஸ்டை படித்துவிட்டு அவ்வப்போது அப்புசாமி தாத்தாவை படுத்துவது தமிழ் கூறும் நல்லுகம் முழுதும் அறிந்த செய்தியாகும். முதல் கதையிலேயே டைஜஸ்டில் வந்த கட்டுரை ஒன்றில் பொடி போடுவதின் கெடுதியைப் பற்றி படித்துவிட்டு அப்புசாமிக்கு பொடிபோட தடா விதித்தவர் சீதாப்பாட்டி.
போன வருடம் அமெரிக்க நூலகத்துக்கு சென்றிருந்தேன். செக்யூரிடி சோதனைகள் என்று படுத்தினார்கள். எல்லாம் முடிந்து உள்ளே போனால் ரீடர்ஸ் டைஜஸ்ட் கிடைக்கவில்லை. விசாரித்தால் அதை வரவழைப்பதை நிறுத்தி விட்டார்களாம். பிறகு நான் அமெரிக்க நூலகங்களுக்கு செல்லவில்லை. ஒரு சகாப்தமே முடிந்த உணர்வு எனக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
7 comments:
ரீடர்ஸ் டைஜஸ்ட் என் வாழ்வில் உச்சகட்டத்தில் இருந்தது அறுபதுகள் முழுக்க, எழுபதுகளில் கணிசமான பாகம் அவ்வளவே. அக்கட்டுரைகளை இப்போது நினைவிலிருந்துதான் கொண்டு வர வேண்டும். முயற்சிப்பேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்பின் டோண்டு ஐயா
கம்யூனிசத்துடனான போரில் அமெரிக்கா வெல்ல ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்ற பத்திரிக்கைகள் மிக முக்கிய காரணம்.டைஜஸ்டுக்கு போட்டியாக ரஷ்யர்கள் ஸ்புட்னிக் என்ற பத்திரிக்கையை டைஜஸ்ட் போன்றே கொண்டுவந்தனர்.விலை மிக குறைவு.ஆனால் டைஜஸ்டோடு அதனால் போட்டி போட முடியவில்லை.ஸ்புட்னிக்,பிராவ்தா அனைத்தும் கோர்பசேவ் காலத்தோடு முடிந்து போய்விட்டன.
ஸ்புட்னிக்கை டைஜஸ்டுடன் கண்டிப்பாக ஒப்பிட முடியாது. சிகரெட் விளம்பரங்களை இப்போதெல்லாம் பல பத்திரிகைகள் போடுவதில்லை. பல நாடுகளில் அதை சட்டப்படி தடை கூட செய்திருக்கின்றனர். ஆனால் அதற்கு முன்னோடி ரீடர்ஸ் டைஜஸ்ட்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
செல்வன், என்ன தான் சொல்ல?! காசு கொடுத்து "மாங்கா" ஆக வேண்டுமா, ஸ்புட்னிக் படித்து? அதுக்குத்தான் இந்தியப் பத்திரிக்கைகள் நிறயவே இருக்கின்றன..
இப்போதும் அதே புழுகுகளை புழுகிக் கொண்டிருக்கின்றன.
டோண்டு சார்,
ரீடர்ஸ் டைஜெஸ்ட் ஒரு நல்ல பத்திரிக்கை தான், பல நேரங்களில் ரசா-பாசமான கட்டுரைகள் இருக்கும், 18-19 வயதில் காசு கொடுத்து அழ வேண்டுமா? என்று தோன்றியது.
ஒரு காலத்தில் விளம்பரமே வராதாமே, ரீடர்ஸ் டைஜெஸ்டில்..உண்மையா?
ஷங்கர்.
டைஜஸ்டு படிப்பதில் எனக்கு மிகப் பிடித்த ஒன்று கட்டுரைகளிலும், கதைகளிலும் சோக முடிவுகளே கிடையாது. நான் படித்த வரை, சோக முடிவிலான விஷயங்களைப் பற்றி எழுதும் போது, தொடக்கத்திலேயே முடிவை சொல்லி விட்டு, பின்னர் ஃபிளாஷ் பேக்கில் நல்ல நிகழ்வுகளை எழுதுவார்கள்.
படித்து முடித்தவுடன் மனத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஒன்று ரீடர்ஸ் டைஜஸ்டு. வாசகர்கள் எழுதி அனுப்பும் எல்லா பகுதிகளுமே எனக்குப் பிடிக்கும்.
இப்போது இந்தியப் பதிப்பும் கிடைக்கிறதே. இந்தியா டுடே குழுமமே இதையும் வெளியிடுகிறது. அமெரிக்கப் பத்திரிகை அழகாக இந்திய வாசகர்களையும் கவரும் வண்ணம் வெளியாகிறது.
நன்றி சங்கர் அவர்களே. ரீடர்ஸ் டைஜஸ்டை பற்றிப் பேசும்போதெல்லாம் என் மனம் நன்றியால் நிறைகிறது.
விளம்பரம் இல்லாமலேயே ரீடர்ஸ் டைஜஸ்டா? வாய்ப்பே இல்லை. அமெரிக்க பத்திரிகை விளம்பரம் இன்றி? நோ சான்ஸ்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வணக்கம் மா.சிவகுமார் அவர்களே. இந்தியப் பதிப்பு பல ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் (வருடம் தெரியாது) ஹிந்தியிலும் அது எளி வர ஆரம்பித்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment