விக்ரம்:
1) what do you think are the root causes for dirtiness, poverty, corruption, caste/religion fights, terrorism etc in India? What solutions you suggest?
பதில்: பொருளாதார முன்னேற்றம் சமமாகப் பரவவில்லை என்பதும் இதற்கெல்லாம் ஒரு காரணமே. மேலும் ஜாதி பற்றியெல்லாம் பேசி சண்டை போடுபவர்களிடம் தேவைக்கதிகமாக நேரம் கைவசம் இருக்கிறது என நினைக்கிறேன். தன் சுயமுன்னேற்றத்தைப் பற்றி சிந்தித்து செயல்படும்போது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் கூட போதாது என்ற நிலைமையாக இருக்கும். மேலும் சிங்கப்பூர் மாதிரி கடுமையான சட்டங்கள், அவற்றை வேண்டியவர் வேண்டாதவர் என்ற மனப்பான்மைக்கு இடம் கொடாது செயலாக்கும் மனத்திண்மை, அத்திண்மையை ஊக்குவிக்கும் தலைமை ஆகியவையும் தேவை.
2) what will be the future of DMK after Karunanidhi and ADMK after Jayalalitha?
பதில்: இரு கட்சிகளிலும் கொந்தளிப்பு இருக்கும். திமுகவில் பல வாரிசுகள் வந்து போட்டியிடும்போது அதிமுகவில் வாரிசு என்று யாரும் அடையாளம் காட்டப்படாத நிலையில் வேறுவித குழப்பங்கள்தான் வரும். அதிலும் அதிமுக என்பது எம்.ஜி.ஆர். என்னும் தனிமனிதரால் ஒற்றையாக உருவாக்கப்பட்டது. அவருக்கு பிறகு சரியோ தவறோ ஜெயலலிதா தன்னை அவருக்கு வாரிசாக நிலைப்படுத்தியதால் மேலும் 20 ஆண்டுகளுக்கு மேல் தாக்கு பிடித்துள்ளது. இப்போது ஜெயலலிதாவின் நிலையே ஆட்டம் கண்டுள்ளது. சொத்து குவிப்பு மற்றும் வருமான வரி ஏய்ப்பு வழக்கில் அவர் தண்டனை பெறும் வாய்ப்புகள் அதிகம். உட்கட்சி ஜனநாயகம் என்பதையே அக்கட்சி கேள்விப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது.
3) what is the basic reason for the never-ending Brahnmin Vs (so-called) Dravidians especially in the net?
பதில்: ஹிட்லருக்கு யூதர்கள் கிடைத்ததுபோல திராவிட அரசியல்வாதிகளுக்கு பார்ப்பனரை எல்லாவற்றுக்கும் பொறுப்பாக்குவது பிடித்திருக்கிறது. ஒரு உறுதியான ஓட்டு வங்கி பார்ப்பனரிடம் இல்லாத வரைக்கும் இந்த நிலையில் மாற்றம் வர வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன். பார்ப்பனரிடமும் ஒரு உறுதி வர வேண்டும். பல பார்ப்பனர்கள் தம் ஜாதியை மெனக்கெட்டு மறைத்து, தாங்கள் பார்ப்பனர் இல்லாதவர் போல நடித்து அவர்களும் பார்ப்பனரைத் தாக்குகின்றனர். இதே மாதிரி பல யூதர்கள் அவர்களை கிட்டத்தட்ட 2000 ஆண்டு அடக்கி துன்புறுத்திய போது தம் அடையாளங்களை மறைத்து அவர்களும் யூதர்களைத் தாக்கினர். ஆனால் ஒன்று, அவர்கள் அடையாளம் காணப்பட்ட சந்தர்பங்களில் அவர்களும் மற்ற யூதர்களைப் போலவே தாக்கப்பட்டனர். ஹிட்லர் காலத்தில் அவ்வாறான யூதர்களும் விஷவாயுவிலிருந்து தப்பிக்க இயலவில்லை. அதே போலத்தான் இங்கு பல பார்ப்பனர்களைப் பார்க்கிறேன். நம் இணையத்திலேயே தான் பார்ப்பனன் என்பதை மறைத்து தானும் பார்ப்பனரைத் தாக்கிய ஒரு பதிவாளர், திடீரென அவரது நெருங்கிய நண்பராலேயே கிராஸ்பெல்ட் என்று 'அன்புடன்' அழைக்கப்பட்டது நடந்தது. ஞாநியின் விஷயம் பலரும் அறிந்தது. அது சம்பந்தமாக நான் இட்ட இந்தப் பதிவில் கூறியதுதான் இங்கும் பொருந்தும்.
அனானி: (25.04.2008 அன்று மாலை 05=28-க்கு கேள்வி கேட்டவர்)
1. விவேகானந்தர் இல்லம் பிரச்சினை பற்றி. சட்டப்படி உத்தரவு போடாததால், நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்கிறார் கருணாநிதி அவர்கள். வாய்மொழி உத்தரவு இல்லாமலா அரசாங்க அதிகாரிகள் நேரடியாகச் சென்று மடத்து நிர்வாகிகளிடம் மூன்றே நாளில் காலி செய்யவேண்டும் என கேட்டார்கள்? தொழிலதிபர் ஒருவர் தொலைபேசியில் முதலில் இடத்தை காலி செய்துவிட்டு அப்புறம் சந்திக்க வேண்டியவர்களை சந்தியுங்கள் என்கிறார். ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகக் கருதுகிறீர்களா? இந்த அல்லல்கள் அகல தமிழர்கள் என்ன செய்யவேண்டும்?
பதில்: இது சம்பந்தமாக நண்பர் என்றென்றும் அன்புடன் பாலா அவர்கள் போட்ட பதிவில் நான் இட்டப் பின்னூட்டத்தை முதற்கண் இங்கு வைக்கிறேன்.
"இதில் நிறைய விஷயங்கள் கவனிக்க வேண்டியுள்ளன.
1. 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அந்தக் கட்டிடம் ஹெரிடேஜ் திட்டத்தின் கீழ் வரும்.
2. குத்தகை 2010 வரை இருக்கிறது எனக் கூறப்பட்டது. அவ்வாறிருக்க அந்தத் தொழிலதிபர் யார் வந்து இங்கு நாட்டாமை செய்வதற்கு?
3. இப்போதிருக்கும் அரசியல் நிலையில் தொழிலதிபர் நிஜமாகவே முதல்வர் கூறியதை ஃபார்வேர்ட் செய்திருக்கவும் சாத்தியக்கூறு உண்டு. அப்படியே இருந்தாலும் அவர் என்ன முதலமைச்சரின் பி.ஏ.வா?
4. அந்தத் தொழிலதிபர் யார் என்பதை அடையாளம் கண்டு கொள்வது அவசியம்.
5.//அந்த தொழிலதிபர், "முதல்வரிடம் நீங்கள் சொன்னதை தெரிவித்தேன். உங்கள் தலைவர் 23ம்தேதி சென்னை திரும்பியவுடன் 24ம்தேதி இடத்தை காலி செய்து விடுங்கள். அதன் பின் வேண்டுமானால் என்னை வந்து சந்திக்கட்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்" எனக் கூறினார்.//
என்ன ஆணவமான பேச்சு? முக்கியமான இத்தருணத்தில் முதல்வர் பார்க்க மாட்டாராம், ஆனால் விழாக்களில் குத்தாட்டம் போட்டால் மட்டும் ஆவென்று வாய் பிளந்து மணிக்கணக்கில் ரசிப்பாராம்.
6. பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாரதியார் கூறியது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
7. தமிழகத்தில் ஆற்காட்டு வீராசாமி அவர்களின் தொட்டுக்கோ தொடச்சிக்கோ மின்சாரத்துக்கே பயங்கர வெட்டுகள் கோடையில் வரவிருக்கும் நிலையில் விவேகானந்தர் இல்ல விஷயம் தேவைதானா?
8. ஹூம், தமிழகத்துக்கு மோடி மாதிரி ஒரு முதன்மந்திரி இல்லாமல் போனது தமிழகத்தின் துரதிர்ஷ்டமே.
மணிவண்ணன்:
எனது கேள்விகள்:
1. நயன்தாரா, திரிஷா, அஸின், ஸ்ரேயா இவர்களில் யார் டாப்பு? விளக்கத்துடன் பதில் தேவை(உடனே சமீபத்தில் என்று பத்மினி ராகினி என்ற கதை எல்லாம் வேண்டாம்)
பதில்: எல்லோருமே கண்ணுக்கு குளிர்ச்சியாக அம்சமாக உள்ளனர். நால்வரையுமே பிடிக்கும். அவர்களை நான் 'எனது' காரில் தள்ளிக் கொண்டு போனது பற்றி பதிவு போட்டுள்ளேன்.
2. அடுத்தவரை மதிக்கும் போக்கு கலைஞர் ஜெயலலிதா ஓப்பிடுக
பதில்: அந்தப் போக்கு கலைஞரிடம் சற்று அதிகம்தான்.
3. சென்னை கடற்கரை - தாம்பரம் மின்தொடர் வண்டியில் பயணம் செயதது போது கிடைத்த ஏதாவது மறக்க முடியாத அனுபவம்..
பதில்: சென்னையில் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்வது போல கிட்டவில்லை. ஆனால் பம்பாயில் கிட்டியதை பதிவாகப் போட்டுள்ளேன்.
4. ஒரு நம்பர் லாட்டரிக்கும் ஷேர் மார்கேட்டில் முதலிட்டிக்கும் வித்யாசம் என்ன?
பதில்: இதற்கான பதிலை நண்பர் வால் பையன் அற்புதமாகக் கூறுவார்.
5. தசாவதாரம் முதல் நாள் முதல் காட்சி டிக்கட் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
பதில்: கண்டிப்பாகச் செல்ல மாட்டேன். ஏற்கனவே அன்பே சிவம் முதல் நாள் முதல் ஷோ பார்த்து மனம் நொந்ததை இன்னும் மறக்கவில்லை.
யாரோ:
1. டோண்டு பதில்களுக்கு கேள்விகள் அனுப்புபவர்களின் மோட்டிவேஷன் என்ன என்று நினைக்கிறீர்கள்?
கேள்விகளுக்கு பதில் சொல்பவர்களுக்கும் கேள்வி கேட்பவர்களுக்கும் இடையில் ஒரு மாதிரியான வெறுப்பு-அன்பு உறவு நிலவுகிறது என்பதை பலர் பல சமயங்களில் கூறியுள்ளனர். கேள்வி கேட்பவர்கள் பலருக்கு அதை செய்யாமல் இருக்க இயலாது. பத்திரிகை உலகில் இதற்கு உதாரணம் பூதப்பாடி ராமலிங்கம் என்பவர் எனக்கு தெரிந்து சமீபத்தில் 1977-லிருந்து இன்றுவரை கேள்விகள் கேட்டு வந்துள்ளார். அதே போல பதில் சொல்பவர்களும் தங்களை தேவைக்கு அதிகமாக மதிப்பிட்டு கொண்டு எல்லாவற்றையும் பற்றி கருத்து சொல்லும் கந்தசாமிகளாக மாறி விடுகின்றனர். பயங்கர அறுவை சாமி அது. அந்த விஷயத்தில் அரசு (எஸ்.ஏ.பி.) கேள்வி கேட்பவர்களையும் தன்னுடன் அணைத்து, தேவையானால் புது அனுபவங்களையும் நாடிச் சென்று, தனது சந்தேகங்களையும் வெளிப்படையாகக் கூறிச்சென்றார். ஏதோ நண்பருடன் சேர்ந்து கலாய்ப்பது போன்ற உணர்வு வரும். அவர்தான் எனக்கு ரோல் மாடல். அந்த மனப்பான்மையை வளர்க்க மிகவும் முயற்சி செய்கிறேன்.
மகேஸ்:
1. வாங்கும் திறன் அதிகரித்திருப்பதால் விலைவாசி பற்றிக் அச்சப்படத் தேவையில்லை என்று கூறுபவர்கள் விவசாயிகளுக்கு நெல்லுக்கு விலை அதிகம் கொடுக்க முன்வராதது ஏன்?
பதில்: இது என்ன போங்கு? நகர்ப்புற ஓட்டுகள் பறிபோனால் நீங்களா அவற்றைப் பெற்று தருவீர்கள்?
சாத்தப்பன்:
1. French kiss? –Explain, have any Tamil kiss?
பதில்: கிஸ்ஸடிப்பின் ஃபிரெஞ்ச் கிஸ்ஸடிமின் அஃதலின் கிஸ்ஸலின் கிஸ்ஸாமை நன்று
2. Have you used ‘ipot’ unit?
பதில்: இல்லை. அது என்னவென்று தெளிவாகத் தெரியாது. ஆனால் பெயர் மட்டும் கேள்விப்பட்டுள்ளேன். அதற்கு ipod என்று பெயர் என நினைக்கிறேன்.
3. Still you believe ‘Manu discrimination’?
பதில்: பிராமண துவேஷம் எங்கெல்லாம் நடக்கிறதோ (தமிழகத்தில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும்) அங்கெல்லாம் மேற்கோள் காட்டப்படுவது ‘ மனு ஸ்மிருதி’ எனப்படும் மனுவின் நீதி நூல். இது நீதி நூல் என்பதையே பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மனிதர்களால் உருவாக்கப்பட்டு, காலத்திற்கேற்ப மாறுவது ‘ஸ்மிருதி’ . அந்தந்த கால கட்டத்திற்கும் , மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப, பல்வேறு ஸ்மிருதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்போது அனைவராலும் தூற்றப்படும் மனு ஸ்மிருதி கிருதயுகத்திற்க்கானது. இதை கலியுகத்தில் பயன்படுத்தியது நம் முன்னோர்கள் செய்த முதல் தவறு. ஆயினும், மனு ஸ்மிருதியில் எவ்வித பிழையும் இல்லை.
முதலில் மனு ஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ள வர்ணாசிரம முறைகள் அதன் ஒரு மிகச் சிறிய பகுதி என்பதை அனைவரும் உணர வேண்டும். கல்வி, வாழ்க்கை முறை, பக்தி, குற்றங்கள், தண்டனைகள், போர் முறை, திருமணம், சாட்சி சொல்லும் முறை, ஒற்றர்கள் என பல சமுதாய, அரசியல் விஷயங்களும் மனு ஸ்மிருதியில் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி அனைத்து விஷயங்களையும் விவாதிக்கும் ஒரு நீதி நூல் உருவாக்கப்பட்டது ஆச்சர்யமே!
மனு ஸ்மிருதி மனிதர்களை வர்ண முறையில் நான்காகவும், ஆசிரம முறையில் நான்காகவும் பிரிக்கிறது. வர்ண முறையில் பிராமணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர் என அவரவர் செய்யும் தொழிலின் அடிப்படையிலும், ஆசிரம முறையில் சிறுவர் (வயது < 8), பிரம்மச்சாரி (8-16), சம்சாரி (16-4 மற்றும் சந்நியாசி (>4 எனவும் பிரிக்கிறது. ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமைகளையும், வாழ்க்கைமுறைகளையும் விளக்கமாக எடுத்துரைக்கிறது மனு தர்மம். இவை அனைத்தும் மக்கள் வாழ்க்கையை நெறிப்படுத்த உருவாக்கப் பட்டனவே அன்றி, பாழ்படுத்த அல்ல.
பிராமணர்கள் வேதம் ஒதுவதற்கும், பக்தி மார்க்கத்தைப் பரப்புவதற்கும், க்ஷத்ரியர்கள் ஆட்சி செய்து நீதி வழங்கவும், வைசியர்கள் நியாயமான வியாபாரம் செய்யவும், சூத்திரர்கள் உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளை செய்வதற்கும் பணிக்கப்பட்டனர். இதில் பிராமண துவேஷர்களின் வாதம் யாதெனில், மனு ஸ்மிருதியில் பிராமணர்களுக்கு உயரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது, மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது?
‘சத்திரியனை விட உயர்ந்தவன் இல்லை. ஆகையால் ராஜசூயம் நடக்கும்போது, பிராமணன் க்ஷத்ரியனை விட தாழ்வான இடத்திலேதான் அமர வேண்டும்’ - இது சதபத புராணம் கூறுவது. ‘சந்திரன், வாயு, அக்னி, சூரியன், இந்திரன், குபேரன், வருணன், யமன் ஆகிய எட்டு உலக நாயகர்களின் அம்சங்களைக் கொண்டவன் அரசன். ஆகையால் அவனுக்கு அசுத்தம் கிடையாது’ என்றும் சொல்கிறது. பிராமணன் அரசனாக முடியாது என்றும் கூறுகிறது மனு தர்மம். இதிலிருந்து, சத்திரியர்களே உயர்வானவர்களாக சொல்லப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.
மற்றொரு குற்றச்சாட்டு, பிராமணர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன என்பது. உதாரணமாக பிராமணனுக்கு வரி விலக்கு என்பது. இதை மனு தர்மம் யாருக்கு அளிக்கிறது? நன்கு கற்றறிந்து, வேதம் ஓதி, இரந்து உண்ணும் பிராமணனுக்கே இச்சலுகை. பிராமணனாகப் பிறந்து, வேறு தொழில் ஒருவன் செய்வானாயின் அவனுக்கு எவ்வித சலுகையும் வழங்கவில்லை மனு தர்மம். மாறாக, வன்மையாகக் கண்டிக்கிறது. எவ்வளவு வசதியாக இருந்தாலும், ஜாதியைப் பொறுத்து சலுகை வழங்கும் இன்றைய சட்டங்களைப் போற்றுவோருக்கு, மனு ஸ்மிருதி தவறாகத்தான் தெரியும்.
நன்றி நண்பர் லட்சுமிநாராயணனுக்கும் சோ அவர்களுக்கும்:
4. You have any ‘Sarojadevi’stories in PDF?
பதில்: இல்லை. சமீபத்தில் எழுபதுகளில் படித்த கதைகள் நெஞ்சில் உள்ளன. பி.டி.ஃப்-ல் இல்லை. அதில் ஒரு தூள் ஜோக் உண்டு. ஆனால் அதைக் கூறினால் இங்கு பலர் கோபிப்பார்கள். ஆகவே இங்கு அது வேண்டாம்.
5. Have you visited “Sriperumamthur’and had darsan of Ramanujer?
பதில்: போயிருக்கிறேன். அவரது ஜன்ம நட்சத்திரத்தன்று அங்கு நடத்திய விசேஷ பூஜையை கண்டு களித்துள்ளேன்.
6. Can you find my age based on my qtns?
பதில்: இது பற்றிய ஒரு ஜோக்தான் நினைவுக்கு வருகிறது. அது உங்கள் கேள்விக்கு பதிலாகாது என்பதால் அது இங்கு வேண்டாம். மற்றப்படி உங்கள் வயதை என்னால் ஊகிக்க இயலாது.
பாலா:
1. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதாக நம்ம மஞ்ச துண்டு அய்யா சொல்றாரே?அந்தா அய்யாவோட சிரிப்பில் நீங்க எதைப் பார்க்கறீங்க?
பதில்: சமீபத்தில் 1971 மார்ச் மாதம் துக்ளக்கில் வந்த கார்ட்டுன் ஒன்று நினைவுக்கு வருகிறது. அறிஞர் அண்ணா பேசுகிறார் ஒரு பொது கூட்டத்தில், "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்" என்று. அதை பெரியார் கேட்கிறார். ஆகா அங்கேயும் இறைவன் இருக்கிறானா என மனதுக்குள் கருவுகிறார். பிறகு அப்பக்கம் ஓர் ஏழை துக்கத்துடன் தலையை தொங்கப் போட்டு வர, பெரியார் கையில் செருப்புடன் நிற்கிறார், "அவன் மட்டும் சிரிக்கட்டும் பாக்கறேன்" என்று எண்ணிக் கொண்டு. ரிக்சாக்காரன் படத்தில் வருகிறது ஒரு பாட்டு "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்..."
அனானி (டோண்டு பதில்கள் - 14.03.2008-பதிவில் 26.04.2008 மாலை 6.22-க்கு கேட்டவர்)
1. தமிழக கோயில்களில்,கேரள கோயில்களில் கடைபிடிக்கப்படும் ஆசாரமுறைகள் கடை பிடிக்கப்படுவதில்லை.இதை சரி செய்வது எப்படி?
பதில்: நீங்க வேற, கோவிலை இங்கே விற்றுவிடாமல் இருந்தால் போதாதா?
2. திடீரென்று தமிழக கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறதே,கடவுளை ஏற்றுக் கொள்ளும் தன்மை அதிகரித்து விட்டதா?
பதில்: அதுதான் பெரியாரின் ராசி. பிள்ளையார் சிலைகளை உடைத்தார். தெருவுக்கு தெரு பிள்ளையார் கோவில்கள் பெருகிறன. ராமர் படத்துக்கு அவமரியாதை செய்தார் ராம நாம சங்கீர்த்தனம் எல்லா இடங்களிலும் கேட்க ஆரம்பித்தது. ஈ.வே.ரா. அவர்களுக்கு ஆழ்வார் பட்டம் தருதல் தகும்.
3. சாதாரண சோதிடர் கூட தினம் ரூபாய் 300 (கிராமத்தில்)வருமானம் ஈட்டுவதாக சொல்கிறார்கள்,இது நல்லதற்கா?
பதில்: ஜோசியர்களுக்கு நல்லதுதானே. மற்றப்படி எனக்கு ஜோசியத்தில் நம்பிக்கை இல்லை.
4. பக்தி மற்றும் சோதிட வார, மாதப் பத்திரிக்கைகள் விற்பனை படு அமர்களப்படுகிறதே?
பதில்: மக்களுக்கு பய உணர்வு அதிகமாவதையே காட்டுகிறது.
5. கடவுள் மறுப்பு கொள்கையில் மிகத் தீவிரம் காட்டியவர்கள் கூட (50 வயதுக்கு மேல்)பக்திமானாகி விடுவதன் காரணம் யாது?
பதில்: ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா
தர்ம தேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா
6. இந்து இதிகாசங்களில் கடுமையாக கூறப்பட்டுள்ள தண்டனைகள் தவறு செய்பவர்களுக்கு இப் பூலோகத்தில் வாழும் போது தரப் பட்டால் மக்களின் ஆன்மீகம்(கடவுள் பக்தி)வளருமல்லவா?
பதில்: இல்லை. பயத்தால் வருவதை விட சுயத்தால்தான் நல்லொழுக்கம் வரவேண்டும். இந்து மதத்தில் அதைத்தான் சுதந்திர விருப்பம் என்று கூறுவார்கள்.
7. பொதுவாக எல்லாச் சாமியார்களுமே ஏதாவது தப்பு செய்து கடைசியில் மாட்டிகொள்கிறார்களே(அவர்களது கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கம் காரணாமா?)
பதில்: அதுவும் காரணமே.
சாத்தப்பன்:
1. I accidentally read about so called ‘CHO’ in one of the Blog.
I feel the content/arguments are near truth about CHO.
After reading I only conclude - CHO is cheating everybody, including his Fanatic followers. Please read the sample:-
"தனக்கு முன் ஏதாவது கேள்வி வைக்கப்பட்டு விட்டால் சோவிற்கு, தலைகால் புரியாது. (தலையும் முழங்காலும் ஒரே மாதிரி வழவழப்பாக இருப்பதனாலோ என்னவோ). ஆரம்பித்து விடுவார். தொடர்ந்து உளறுவதில் ஏதாவது சரியான கருத்து வந்து விட்டால், தான் புத்திசாலி என்கிற பொன்னாடையையும், பேத்தலான விஷயங்களுக்கு நகைச்சுவை நையாண்டி என்கிற போர்வையையும் போர்த்துக் கொள்வது இவருடைய நீண்டகால வாழ்நாள் சரித்திரம்.”””
Please read the balance here and let us have your un-biased answer.
பதில்: மிகுந்த பார்ப்பன துவேஷத்துடன் எழுதப்பட்ட ஒரு பதிவுக்கு விருப்பு வெறுப்பற்ற பதில் எப்படி ஐயா சாத்தியம்? இருப்பினும் முயற்சிக்கிறேன். அப்பதிவுக்கு சம்பந்தப்பட்ட ஞாநி அவர்கள் கொடுத்த எதிர்வினையை பார்த்து கொள்ளவும். நான் மேலும் கூற விரும்புவது என்னவென்றால் ரத்னேஷ் அவர்கள் பார்ப்பன வெறுப்பாளர். தான் பின்னூட்டமிடும் பதிவின் பொருளுக்கு சம்பந்தமில்லாத வகையில் பார்ப்பனரை வம்பிக்கிழுத்து இவர் துவேஷம் செய்ததை நான் மறக்கவில்லை. ஆகவேதான் இவர் பார்ப்பனர் என்பதாக இப்போது மட்டும் அடையாளம் காணப்பட்ட ஞாநிக்கு பதிலளிப்பதாக நினைத்து கொண்டு இன்னொரு பார்ப்பனர் சோவுக்கு எதிராக ஞானி எழுதியதை உல்டா செய்து பதிவு போட்டுள்ளார். இந்த அழகில் சோ அவர்களே ஞாநி கருணாநிதி அவர்களை பற்றி விகடன் ஓ கட்டுரையில் கூறியதை குறை கூறியவர். நானும் எனது அது சம்பந்தப்பட்ட "ஞானி சொன்னது என்ன" என்னும் பதிவில் அவ்வாறுதான் கூறியுள்ளேன் என்பதையும் தகவலுக்காகக் கூறிவிட்டு செல்கிறேன்.
பாலா:
நம்ம முதல்வர் சமீபத்தில் நடந்த "தசாவதாரம் பாடல் வெளியீடு" என்ற நாட்டுக்கு மிகவும் அவசியமான நிகழ்ச்சியில் பல மணி நேரம் கலந்து கொண்டது மட்டுலல்லாமல்,ஜாக்கி சான்,மல்லிகா ஷெராவத் போன்றவர்களைப் பற்றி பல விஷயங்களை கற்றறிந்து,அவர்களைப் பற்றி, அவர்களுக்கே தெரியாத விஷயங்களையெல்லாம் சொல்லி உலகத்தையே வியக்க வைத்தார்."ஆஹா, என்ன கடுமையான உழைப்பு இது "என்று வழக்கம் போல், ஓசி பிரியாணி உடன்பிறப்பு குஞ்சுகள், குருட்டுப் பார்வையோடு, ஜாலியா ஜம்ப் அடித்து ஆர்கஸம் அடைந்தன.இதைப் பற்றி சில கேள்விகள்.
1)இப்படி, சினிமா கும்பல் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும்,குத்தாட்டத்துக்கும் முனைந்து முனைந்து ஆராய்ச்சி பண்ணி, உழைப்பதால் முதல்வருக்கு, (சினி)மாமுனைவர் என்ற ,பட்டம் தரலாமா?
பதில்: முதல்வர் எந்த சந்திப்புக்கு சென்றாலும் அங்கு பேச வேண்டிய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வார். அவரிடம் உள்ள இந்த நல்ல பழக்கம் அவருக்கு பெருமை அளிக்கிறது.
2)மஞ்ச துண்டின் சினிமா மோகத்தைக் கண்டு மகிழும் குஞ்சுகளின் IQ சுமார் எந்த லெவலில் இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?
பதில்: சினிமா மோகத்துக்கும் ஐ.க்யூ.வுக்கும் என்ன சம்பந்தம்?
3)முதல்வருக்கு கேவலமாக ஜல்லி அடிக்கும் சினிமா கலைஞர்களில் கமல்ஹாசன் முதல் இடத்தில் இருப்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: பிழைக்கத் தெரிந்தவர். அதே சமயம் முதல்வரிடமும் அவர் பாராட்டும் விஷயங்கள் இருக்கலாம் அல்லவா?
அடுத்த வாரம் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
3 hours ago
21 comments:
வணக்கம். இது நான் உங்களுக்கு இடும் முதல் பின்னூட்டம். இரண்டாவது கேள்விக்கு நீங்கள் பாதி பதில் அளித்துள்ளீர்கள். அது முழுக்க பிராமண பார்வையில் அமைந்துள்ளது. கேள்வி பதில் எழுதும் தாங்கள் இரு பக்க பார்வையோடு எழுதுதல் நலம்.
இது என் கருத்து, அதுக்காக இதை பற்றிய என் கருத்து பார்க சுட்டி என்று ஒரு பத்து லின்க் கொடுத்துடாதீங்க சார் .... தாவு தீர்ந்துடும். :-))
சரவணன்
//இரண்டாவது கேள்விக்கு நீங்கள் பாதி பதில் அளித்துள்ளீர்கள்//
எந்த கேள்வியை குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரியவில்லை. கேள்விகளின் சீரியல் நம்பர்கள் கேள்வி கேட்பர்களின் பெயரின் கீழே ஒவ்வொரு முறையும் புதிதாகச் செயல்படுத்தப்படுகிறது. ஆக ஒட்டு மொத்தமாக ஒன்றிலிருந்து ஐம்பது கேள்விகள் என தொடர் எண்ணிக்கை வராது.
நீங்கள் முதலில் கேட்ட விக்ரமின் கேள்விகளிலிருந்து குறிப்பிட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன். அப்படியென்றால் கூட அது மூன்றாம் கேள்வி, இரண்டாம் கேள்வி அல்ல. ஆகவே நான் உங்களை கேட்டு கொள்வது என்னவென்றால் நீங்கள் குறிப்பிடும் கேள்வி முழுக்கவும் நகலெடுத்து ஒட்டி விடவும்.
இப்போது உங்கள் கருத்துக்கு வருவேன். கடந்த அறுபது ஆண்டுகளாக பார்ப்பனர்களை அடக்கி ஆளும் மனோபாவம் இருந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணமே தங்களது எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை பலியாடாக்கும் யுக்திதான். என்ன, அவ்வாறு பலியாடாக இருக்க என்னைப் போன்றவர்கள் உடன்படுவதில்லை. எங்கள் தரப்பை நாங்கள்தான் சொல்ல வேண்டும். அடக்குமுறை செய்பவர்களது தரப்பை நான் ஏன் கூற வேண்டும்? இந்த இடத்தில் என்னிடம் வேறு பார்வையை பார்க்க இயலாது.
அதே போல நான் லின்க் தருவதில் என்ன பிரச்சினை? நான் புதிதாக புனைந்து எதையும் கூறவில்லை, ஏற்கனவே கூறியதுதான் என்பதை நிரூபிக்கும் இச்செயலால் எனது கன்ஸிஸ்டன்சி பேணப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பெரியார் கையில் செருப்புடன் நிற்கிறார், "அவன் மட்டும் சிரிக்கட்டும் பாக்கறேன்" என்று எண்ணிக் கொண்டு. ரிக்சாக்காரன் படத்தில் வருகிறது ஒரு பாட்டு "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்..." //
டோண்டு அய்யா,
அடேடே, நீங்க கூட மஞ்ச துண்டு அய்யாவோட சிரிப்புல பெரிய தாடிக்கார வில்லன் சிரிப்பை பாக்கறீங்களா?எனக்குக் கூட அய்யாவோட சிரிப்பைப் பாக்கும் போது ,வஞ்சகமாக அரியணையைக் கைப்பற்றிய பிறகு,ஒரிஜினல் அரசனைக் கைது செய்ய, கை தட்டி, கட்சி மாறிய சேவகர்களை அழைத்து"யாரங்கே, இவனைக் கொண்டு போய் பாதாளச் சிறையில் அடையுங்கள் ,ஹ ஹ ஹ "என்று இடி போல் இறங்கும் பி எஸ் வீரப்பாவின் அட்டகாச வில்லன் சிரிப்பு தான் ஞாபகத்துக்கு வருகிறது.
பாலா
ஆமாங்க மூணாவது கேள்விதான். நான் இங்கு புதியவன் வலைபூ ஆரம்பிப்பது எப்படின்னு எதாவது லின்க் இருந்தா கொடுங்கள்.
அப்புறம் மீண்டும் கேள்விக்கு போவோம், எப்படி சார் இவ்வளவு வேகமா இவ்வளவு லைன் தமிழ்ல அடிக்கறிங்க உண்மையிலேயே நீங்கள் ஒரு இளையர்தான். அப்புறம் இந்த அறுபது ஆண்டுகளாக பிராமணர்களை பலியாடாக்கியது சரிதான். ஆனால் அதற்கு முன் பல நூற்றாண்டுகளாக தலித்கள் ஒடுக்கபட்டனர் என்பது உண்மையா இல்லையா..
இதில் உண்மை என்னவெனில்,
1. பிராமணனை எந்த தலித்தும் துன்புறுத்தவில்லை ( பெரும்பாலும் )
2. முன்னர் தலித்தை பிராமணனும் ஒடுக்கவில்லை ( பெரும்பாலும் )
இவை இரண்டும் நடு ஜாதியினராலேயெ செய்யபட்டது(பெரும்பாலும்) இட ஒதுக்கீடு என்னும் பொழுது நான் பிற்படுத்தபட்டவன் அல்லது மிகவும் பிற்படுத்தபட்டவன் என்பதும், அதே திருமணம் என்று வரும் பொழுது என் ஜாதி முக்கியம் மற்றவை தாழ்ந்த ஜாதி என்பதும் நடு ஜாதியினரே. இந்த நடு ஜாதியில் வந்த பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் இதன் ஆனி வேர்கள்.
இது நீங்க தலித் மற்றும் பிராமன ஜாதியிலிருந்து அவர்களை அவர்களுக்காகவே பிரதினிதி படுத்தும் தலைமை (அரசியலில்) வேன்டும் அது தலித் சமூகத்தில் நடந்துவிடாமல் நடு ஜாதியினர் பார்த்துகொள்வர். பிராமணர் எதற்கு வம்பு என ஒதுங்குவர். இந்த ஜல்லியும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
ஏ அப்பா எல்லாம் என் கருத்துப்பா.. ரொம்ப கும்மிடாதீங்க என்னை.. சார் என் நிலமைய பாருங்க முதல் முதலில் விவாததுல கலந்துக உங்க பதிவை எடுதுருக்கன் பாருங்க.
இது ஜாலிக்கு, ( அடுத்த வார கேள்விக்கும்தான் )
நல்லாதான் பதில் சொல்ரீங்களெ நீங்க ஏன் அரசியலுக்கு வர கூடாது, அட்லீச்ட் உங்க வார்டு கவுன்சிலரா ஆகலாம் இல்லை
ரொம்ப தைரியமா பெசரீங்களெ நீங்கா இருக்கரது சென்னை வாழரது 2008 உங்கள் கருத்துகளை கருதுக்களாலேயே எதிர்ப்பார்கள் என்று எப்படி உஙளுக்கு நம்பிக்கை, ஆட்டோ அனுப்பினா என்ன செய்வீங்க
அப்புறம் இது முக்கியமான் கேள்வி தேமுதிக கட்சிக்கு கொபசெ என்று யாரை போடலாம் ரோஜா, ராதிகா, பானுப்ரியா, அசின் இல்லை அந்த பெண் இன்னும் பிறக்கவில்லை பிறந்து வளர்ந்து விஜயகாந்த் கூட நடித்த உடன் முடிவு செய்து கொள்ளலாம்
அப்புறம் ரொம்ப ரொம்ப முக்கியமான் கேள்வி, நீங்க ஏன் சிறந்த கேள்வி கேட்பவர்களை தேர்ந்தெடுத்து பரிசு கொடுக்க கூடாது, உதாரணத்துக்கு இந்த சிறந்த கேள்விக்கு பரிசு கொடுப்பதில் இருந்து ஆரம்பிக்கலாம்
சரவணன்
//நீங்க கூட மஞ்ச துண்டு அய்யாவோட சிரிப்புல பெரிய தாடிக்கார வில்லன் சிரிப்பை பாக்கறீங்களா?//
பெரியார் அவர்கள் சிரிப்பில் நான் எந்த வில்லத்தனமும் பார்க்கவில்லை. அவரைப் பொருத்தவரையில் தன் கொள்கைகளில் வெளிப்படையாகவே இருந்தார். காலதேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப மாற்ற வேண்டி வந்தபோது அதையும் வெளிப்படையாகவே செய்தார். அவர் கொள்கைகளைப் பற்றி எனக்கு விமரிசனம் உண்டு என்றாலும் தனிப்பட்ட முறையில் அவர் தன்னைப் பார்க்க வரும் இளையவர்களை கூட மரியாதையாகத்தான் அழைத்து உபசரித்தார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இவை இரண்டும் நடு ஜாதியினராலேயெ செய்யபட்டது(பெரும்பாலும்) இட ஒதுக்கீடு என்னும் பொழுது நான் பிற்படுத்தபட்டவன் அல்லது மிகவும் பிற்படுத்தபட்டவன் என்பதும், அதே திருமணம் என்று வரும் பொழுது என் ஜாதி முக்கியம் மற்றவை தாழ்ந்த ஜாதி என்பதும் நடு ஜாதியினரே. இந்த நடு ஜாதியில் வந்த பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் இதன் ஆணிவேர்கள்.//
நான் கூறவந்ததன் சாரத்தை அழகாகக் கூறியுள்ளீர்கள். அதே சமயம் என்னைப் போன்றவர்கள் எடுக்க வேண்டிய நிலையின் கட்டாயத்தையும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
மற்றப்படி உங்கள் 4 கேள்விகள் அடுத்த வாரப்பதிவுக்கான வரைவுக்கு சென்று விட்டன. நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இந்த நடு ஜாதியில் வந்த பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் இதன் ஆணிவேர்கள்//
சரவணன் அய்யா,
அய்யய்யோ என்னங்க இது?கடசியில நம்ம மஞ்ச துண்டு,மானமிகு,தயாநிதி மாறன் போன்ற ஒடுக்கப்பட்ட க்ரீமிலேயர் ஓபிஸி கும்பல் தான் ஆணிவேர்களா?இந்த விஷயத்தை நம்ம ராஜவனஜ் அய்யாகிட்ட சொன்னாக்க தேவலை.அவர் என்னடான்னா இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி ஆணிவேரை அடியோடு பிடுங்க வெறியோடு அலைந்து கொண்டிருக்கிறார் பாவம்.
பாலா
Nice answers.
நான் இப்பதான் உள்ள வரன், கொஞ்ச நாளா பதிவுகளை படித்துவருகிறேன் எழுதனும்னு ஆசைதான். எப்படி எழுதறோம் என்பதை விட எங்க எழுதறோம் அப்படினு பார்த்து குழு முத்திரை குத்தி நம்மளையும் கும்மிடுவாங்களோன்னு ஒரு தயக்கம் இருந்தது.
இன்று அலுவலகத்தில் ஆணி புடுங்கும் வேலை இல்லாததால் துணிந்து எழுதவந்துட்டன். இனி அக்கவுன்ட் ஓப்பன் பண்ணி நாமளும் ஆட்டைய ஆரம்பிக்கவேண்டியதுதான். சரி முதல்ல விவாதமே டோண்டு சார் பதிவுல இறங்குவோம் அவரும் லேசுல விட மாட்டார் நமக்கும் நல்ல ஓப்பனிங் கிடைக்கும்னு ஒரு அல்ப ஆசைதான்.
// bala said..
அய்யய்யோ என்னங்க இது?கடசியில நம்ம மஞ்ச துண்டு,மானமிகு,தயாநிதி மாறன் போன்ற ஒடுக்கப்பட்ட க்ரீமிலேயர் ஓபிஸி கும்பல் தான் ஆணிவேர்களா?இந்த விஷயத்தை நம்ம ராஜவனஜ் அய்யாகிட்ட சொன்னாக்க தேவலை.அவர் என்னடான்னா இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி ஆணிவேரை அடியோடு பிடுங்க வெறியோடு அலைந்து கொண்டிருக்கிறார் பாவம்.
பாலா //
வடிவேலு ஸ்டைலில் படிக்கவும், ஏன்... ஏன் இந்த கொலை வெறி.. யாரை கொண்டு போய் யார்கிட்ட கனெக்ஷன் குடுக்கர.. நான் நல்ல இருக்கரது பிடிக்கலியா, நான் உன்னைய ஏதாச்சும் பண்ணனா .. நான் பாட்டுக்கு ஓரமா கும்மி அடிக்கதானெ வந்திருக்கன் .. வேணாம் ஸ்ஸ்ட்டாப்பு.. நிறுத்திக்குவோம்
:-))))
அய்யா பாலா அவர்களே,
சினிமா பார்த்து வளர்ந்த கலாச்சார்முங்க நம்மளது.. அதனால அதுல இருந்தே ஒண்ணு சொல்ரனுங்க. ரமணா அப்படினு ஒரு படம் அதுல போலிஸ் அரசு அதிகாரிங்களை கூட்டிகொண்டுபோய் அடி பின்னுவாங்க ரமணா யாருன்னு கேட்டு. அந்த போலிஸ்காரன் (சிங்) சொல்லுவாரு you tamilans are sentimental idiots, கொஞ்ச நேரம் கழிச்சு அவங்க அம்மாங்கல்லாம் வந்து பார்க வருவாங்க அப்ப பசங்ககிட்ட வலிச்சாலும் தாங்கிக்கோ ஆனா பேரை மட்டும் சொல்லாதே அப்படின்னுவாங்க.
அப்ப நம்ம யூகி சேது தமிழர்கள் யார் மீதும் அன்பு வைக்க மாட்டங்க மீறி வச்சுட்டா கடைசி வரை மாத்திக்க மாட்டங்க, sir, we are not sentimental idiots இங்க தொண்டர்களை தப்பா பயன்படுத்தி ஏமாத்துன தலைவர்கள் உண்டு ஆனா தலைவர்களை ஏமாத்துன தொண்டர்கள் இல்லை அப்படின்னு சொல்லுவார்.
இந்த வசனம் நூறு கேள்விகளுக்கு பதில் சொல்லும்னு நெனைக்கரன். பலபேர் சிலரின் அபிமானி/தொண்டன்/ரசிகன் என்ற வட்டத்துக்குள் வந்து விட்ட பிறகு அதை தாண்டி யோசிக்ககூட முடிவதில்லை அவர்களின் பிம்பத்தை நிலைநிறுத்துவது கடமை என ஏற்றுகொள்கிறார்கள்.
மறுபடியும் சொல்லிகரன் யாரயும் குறிப்பிட்டு சொல்லை அதனால என்னைய அடிக்கும்போது மெதுவா அடிங்க ஃபேசுல மட்டும் அடிக்காதிங்க அப்புறம் கிளாமர் போயிடும் என்ன நான் சொல்றது வரட்டா..
நாமல்லாம் அந்த மாதிரி சின்னவட்டம் கிடையாது அடுத்த முதல்வருக்கு அடுத்த முதல்வராக போகிற கேப்டனுக்கு யார் கொபசெ அப்படின்னு டோண்டு சார்கிட்ட கேட்டு இருக்கன். என்னா அவங்கதான் அடுத்ததுக்கு அடுத்ததுக்கு அடுத்தது முதல்வரா ஆகபோரங்க !!!! ..
நாங்கல்லாம் எவ்வளவு ஸ்பீடா திங்க் பண்றோம் பாருங்க.. ;-)
சரவணன்
Dondu sir,
Wonderful .wow..
Your answers are all(!) near un-biased one .
track is good goahead
விவேகானந்தர் இல்லத்தின் மேலாளரை மிரட்டிய தொழிலதிபர் பற்றிய விவரங்களை வெளியிட அந்த மேலாளருக்கு என்ன தயக்கம்.?
//விவேகானந்தர் இல்லத்தின் மேலாளரை மிரட்டிய தொழிலதிபர் பற்றிய விவரங்களை வெளியிட அந்த மேலாளருக்கு என்ன தயக்கம்?//
அதானே!
அன்புடன்,
டோண்டு ராகவப்
என்ன இது அநியாயமா இருக்கு .. யாருமே என்னை கும்ம வரலை, என்ன டோன்டு சார் இது நியாயமா.. இங்க மணி 1.45 நள்ளிரவு எனக்கு இங்க. உங்க பதிவுல வந்து பேரை வாஙலாம்னா நடக்கது போல இருக்கே..
சரி வாங்க நாம அடிச்சுப்போம்.. :-)
மொத கேள்வி எடுத்துப்போம் .. திருப்பி அடிக்கும்போது நான் சொன்னா மாதிரி மெதுவா அடிங்க ஓகேவா...
// 1) what do you think are the root causes for dirtiness, poverty, corruption, caste/religion fights, terrorism etc in India? What solutions you suggest?
பதில்: பொருளாதார முன்னேற்றம் சமமாகப் பரவவில்லை //
நீங்க சொன்னது 50% சரி .. ஆனால் அதற்கு பிறகு சொன்னது என்னால் ஒத்துகொள்ளமுடியவில்லை (எல்லாம் வெட்டி சண்டை வலிக்கதான்....:-) )
அடுத்து நீங்க சொன்னது
//தன் சுயமுன்னேற்றத்தைப் பற்றி சிந்தித்து செயல்படும்போது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் கூட போதாது என்ற நிலைமையாக இருக்கும் //
இதை காந்திக்கோ இல்லை காமரஜருக்கோ இல்லை உங்க வழிக்கே வந்தாகூட ராஜாஜிக்கோ இல்லை மக்கள் தலைவர்கள் யாருக்குமே பொருத்த முடியாஅது ஏன் என்றால் அவர்கள் சுய முன்னேற்றத்தை விட சமூக முன்னேற்றதுக்குதான் பாடு பட்டார்கள். அவர்களின் 24 மனி நேரமும் சுய சிந்தனை இல்லாமல் வறுமயிலும் அறியாமயமயிலும் வாழும் மனிதரின் விடுதலைக்கே செலவானது. நீஙள் சொன்னது சாதரண மிக சாதரண அவரவர் பொருளாதாரத்தை உயர்தும் செயல் ( மறுபடியும் தனி மனித உயர்வே சமுதாய உயர்வுனு சொல்லி டவுசர் கழட்டதீங்கா :-))) ). இங்கு இருக்கும் நமது மக்கள் என்ன நடக்குது அவனை சுத்தி, என்று தெரியாத அல்லது தலைவன் சொல்லுவதை குருட்டுதனமா நம்பும் மிகவும் சாதரண யோசிக்கதெரியாத மக்கள். நமக்கு நிச்சயமாக நல்ல தலைவர்கள் தேவை , சுதந்திரதுக்கு பிறகு நம்மிடையே நல்ல தலைவர்கள் இல்லாததே, நாம் சுதந்திரம் வாஙியதே தேவையா என்று பட்டி மன்றம் வைக்கும் அளவுக்கு போனது.
(forgive me for spelling mistakes i dont know how to correct some)
//என்ன இது அநியாயமா இருக்கு .. யாருமே என்னை கும்ம வரலை, என்ன டோன்டு சார் இது நியாயமா.. இங்க மணி 1.45 நள்ளிரவு எனக்கு இங்க. உங்க பதிவுல வந்து பேரை வாங்கலாம்னா நடக்காது போல இருக்கே..//
இது என்ன போங்கு? நீங்க வந்தது என்னவோ அனானியாகத்தான். அப்புறம் உங்களை கண்டுக்க எங்கே வருவாங்களாம்? உங்களுக்கே இந்த ஃபிலிம் காட்டறது ஓவராத் தெரியல்ல? அதே சமயம் இதுதான் உங்களுக்கு நல்லது. விளையாட்டுக்கு கூட உங்களை யாராவது அந்த மாதிரி கண்டுக்கணும்னு ஆசைப்படாதீங்க.
பை தி வே, உங்க கமெண்ட் என் பதிவுக்கு வந்த நேரம் 12.21 நள்ளிரவு. அப்ப நீங்க மலேசியாவிலேயோ சிங்கப்பூரிலோ இருக்கணும் கரெக்ட்?
//நீங்கள் சொன்னது சாதாரண மிகச் சாதாரண அவரவர் பொருளாதாரத்தை உயர்த்தும் செயல்//
உண்மைதான். நான் பேசியது சாதாரண தனிப்பட்ட ஜனங்களுக்குத்தான். அவரவர் முன்னேற்றம்தான் அவங்களுக்கு முக்கியமாக இருக்கணும். அதில் மாற்று கருத்துக்கே இடம் இல்லை. தலைவர்களுக்கான அறிவுறைகள் கொடுக்க நான் யார்? அவங்க அஜெண்டாவே வேற. தமிழ்க்கல்வி கட்டாயமாக்கணும்னு சொல்லற தலைவருங்க அந்த உபதேசத்தை ஊராருக்கு மட்டும் தருவாங்க. தங்கள் வீட்டு பசங்களுக்கு கான்வெண்டிலேதான் இடம் தேடுவாங்க. அதுக்குத்தான் நான் சொல்றேன் தொண்டர்களிடம், இந்த ஒரு விஷயத்திலாவது தலைவர்களை பின்பற்றும்படி. மனசிலாச்சா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
// பை தி வே, உங்க கமெண்ட் என் பதிவுக்கு வந்த நேரம் 12.21 நள்ளிரவு. அப்ப நீங்க மலேசியாவிலேயோ சிங்கப்பூரிலோ இருக்கணும் கரெக்ட்? //
ஆமாம் சார் இங்க ஒரு 6 மாசமா குப்பை கொட்டிகிட்டு இருக்கன். சென்னைல இருக்கும் வரை இந்த ப்ளாக்ஸ் எல்லாம் தெரியாது இங்க வந்துதான் தெரிந்தது. டைம் பாஸ் பண்ண இப்படி ஒரு சூப்பர் வழி இருப்பது தெரிஞ்சுது. இனிமேல் நாமளும் குட்டைய குழப்ப வேண்டியதுதான். சரி யாரோட பதிவுகளை படிச்சா எப்படி ப்ளாக் ஆரம்பிப்பது என்று இருக்கும்னு சொல்லுங்க சார்.
நீங்கள் ஆரம்பத்தில் போட்டது போல புதிர்கள் ஏன் போடுவதில்லை .. கூகுள் மூலமாக அந்த புதிர்கள் வழியாகதான் நான் உஙள் பதிவுக்கே வந்தேன் அப்புறம்தான் இங்க இவ்வளவு பேரு விளையாடுகிறார்கள் என்பது தெரிஞ்சது. மீண்டும் புதிர்கள் பொடுஙள்
சரவணன்
நீங்கள் லக்கிலுக்கோட பதிவுகளை படிங்க. நல்லா இருக்கும், முக்கியமா காண்டு கஜேந்திரன் பதிவுகள். கிண்டல் பண்ணுவதில் மன்னன் அவர்.
உதாரணத்துக்கு பார்க்க: http://madippakkam.blogspot.com/2008/02/blog-post_27.html
அன்புடன்,
டோண்டு ராகவபன்
Narasimhanji
After reading some of your answers with regards to Manusmriti and other worldly matters, the only word that comes to my mind is 'Bravo'...
Best Regards
நன்றி கணேஷ் (கே.கே. நகர் கிறுக்கன்). உங்கள் பாராட்டுகள் முறிலும் சோ அவர்களுக்கே போக வேண்டும், அவருக்கு பிறகு பதிவர் லட்சுமிநாராயணன் அவர்களுக்கு.
நான் செய்ததெல்லாம் நோவாமல் நகல் எடுத்து ஒட்டியதுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இவை இரண்டும் நடு ஜாதியினராலேயெ செய்யபட்டது(பெரும்பாலும்) இட ஒதுக்கீடு என்னும் பொழுது நான் பிற்படுத்தபட்டவன் அல்லது மிகவும் பிற்படுத்தபட்டவன் என்பதும், அதே திருமணம் என்று வரும் பொழுது என் ஜாதி முக்கியம் மற்றவை தாழ்ந்த ஜாதி என்பதும் நடு ஜாதியினரே. இந்த நடு ஜாதியில் வந்த பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் இதன் ஆணிவேர்கள்.//
well said..
i have a doubt
almost all castes of people have friends in all castes
but at what point does it change to such a state..
do u think everyone get's influenced only with the words of politicians..
i don't think so..
then where else is the change?
சமீபத்தில் நீங்கள் இரண்டரை வயது குழந்தையாக இருந்தபொழுது நடந்த சுவாரசியமான சம்பவம் ஏதேனும்...
-- மகேஸ்
// anu said...
well said..
i have a doubt
almost all castes of people have friends in all castes
but at what point does it change to such a state..
do u think everyone get's influenced only with the words of politicians..
i don't think so..
then where else is the change?//
சரியான பாய்ன்ட். நீங்கள் சொல்வது போல மிகபெரும்பான்மையோனோர் அரசியல்வாதியின் பேச்சை கேட்பதில்லை. நீங்கள் கேட்கமாட்டேன் என்றாலும் நமது சமூக சட்டங்கள் அவர்களால்தான் நிர்ணயிக்கபடுகின்றன.
நீங்கல் ரேஷன் கடையில் அரிசி வாங்காத ஆளாய் இருக்கலாம், இந்த அரசியல்வியாதிகளை அண்டி பிழைக்கவேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம் ஆனாலும் நாம் இவர்களுடன் இவர்கள் வடிவமைக்கும் சமுதாயத்தில்தான் வாழ்ந்தாக வேண்டி இருக்கிறது. அதற்கே நான் அவர்களை குறை சொல்வதைவிட நல்ல அரசியல்வாதிகள் ஒடுக்கபட்ட ( இங்கு உயர்ந்த மற்றும் தாழ்ந்த இரண்டையும் உள்ளடக்கியதே ஒடுக்கப்பட்ட ) சமுதாயத்தில் உருவாகுவதே இதற்கு தீர்வு என்று சொன்னேன்.
அரசியல் ஆதரவு இல்லாத சமூக மாற்றங்கள் சுலபமாய் அரசியல்வியாதிகளால் சுவீகரிக்கப்பட்டு தோற்கடிக்கப்படும்.
to make it brief, come out of the intellectual level. If you have to search for something, go and search in the place where it would be available.
சரவணன்
"For every good deed, there is one less evil deed"
Post a Comment