2/08/2009

டூ டு டூ டு டூடூ

இதுவும் மீள்பதிவே. முதலில் இப்பதிவு போட்ட தேதி 19.02.2006 விடியற்காலை 03.51-க்கு. இப்போது மீள்பதிவு செய்ய என்ன காரணம்? யூ ட்யூப்தேன். முதல்ல பதிவு போடச்ச யூட்யூப்பின் மகத்துவம் தெரியாது. இப்போ தெரிஞ்சுக்கிட்டேன். அம்புடுத்தேன். நான் ரசிச்ச சீன்களுக்கு ஹைப்பர்லிங் தர முடியறது.

மேலும் இது எனக்கு ரொம்ப பிடிச்ச படம் வேற. கேக்கணுமா? இப்ப முதலில் போட்ட பதிவை பார்க்கலாமா?

அன்பே சிவம் பார்த்து விட்டு, நேராக வந்து ஒரு தூக்கம் போட்டேன். அவ்வளவு மனம் கனமாக இருந்தது. இப்போது விடியற்காலை (19.02.2006) 03.25-க்கு முழிப்பு வந்து இப்பதிவை போடுகிறேன்.

இப்படம் ஒரு பொங்கலன்று எங்கள் நங்கநல்லூர் வேலன் திரையரங்கில் புதிதாக ரிலீஸ் செய்யப்பட்டபோது முதல் நாள் முதல் ஷோ டிக்கட் வாங்கி பார்க்கும் தவற்றை செய்தேன். ஆம் வெறுமனே பார்த்தேன் அவ்வளவுதான். வசனம் காதில் விழாதபடி ஒரு மாணவ ரௌடி கும்பல் ஒன்று ஒவ்வொரு சீனிலும் ஓ என்று கத்தி கலாட்டா செய்தது. இருந்தாலும் காதில் அப்படியும் இப்படியுமாக விழுந்த வசனங்கள் இன்னமும் சரியாக கேட்க முடியவில்லையே என்ற விசனத்தை ஏற்படுத்தியது.

நேற்றுத்தான் ஆசை தீர படம் பார்த்தேன். உறைந்து போனேன். "அன்பே சிவம்" பாட்டு simply haunting. கமல் கமல்தான். சாதாரணமாக அவர் நிலையில் இருக்கும் எந்த பெரிய ஸ்டாரும் செய்யக்கூடிய தவற்றை அவர் செய்யவில்லை, அதாவது எல்லா காட்சிகளிலும் தானே டாமினேட் செய்வது. மாதவன் பாத்திரத்துக்கு உயிர் கொடுத்தார். அவர் எரிச்சலுடன் கமலுடன் பேசும் ஒவ்வொரு வசனமும் சுபர்ப். இப்படத்திற்கு பிறகு பிறகு ரொம்ப நடிக்காமல் போய் விட்டார். நடித்திருந்தால் கமலுக்கு ஏற்ற வாரிசாக வந்திருக்கலாம்.

நாசர், சந்தானபாரதி ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை மிகக் கச்சிதமாகவே செய்தார்கள். ரயில் ஸ்டேஷனில் எத்தனை நேரம் நிற்கும் என்பதற்கு பதிலாக ஸ்டேஷன் மாஸ்டர் கூறியதுதான் மேலே தலைப்பில் உள்ளது. அதாவது 1.58 முதல் 2.02 வரைக்குமாம். மாதவன் இதை கேட்டு டென்ஷன் ஆவது சுபர்ப்.

சாதாரணமாக கதாநாயகன் எல்லா இடர்களையும் மீறி கதாநாயகியை திருமணம் செய்வதுதான் விதி என்பதை எவ்வளவு அனாயாசமாக உடைத்தெறிந்துள்ளார் கமல்! அவர் கடைசி வரை கிரணைப் பார்த்து பேசாமல் இருந்ததே இப்படத்துக்கு ஒரு கவிதை டச் கொடுத்தது. கடைசியில் சந்தான பாரதி கேட்டுக் கொண்டதற்கேற்ப தான் மறந்தும் கூட திரும்பி வந்துவிடக்கூடாது என்ற உறுதியுடன் கமல் தன்னுடைய "வளர்ப்பு மகனுடன்" செல்ல, படம் முடிந்ததற்கு அடையாளமாக மௌனமாக கிரெடிட்ஸ் திரையில் தெரிய ஆரம்பித்தது படம் ஹைக்ளாஸ் என்பதை காட்டியது.

ஆனால் இந்த கவிதை டச்சே படத்தின் பாக்ஸ் ஆபீஸை பாதித்தது என்றாலும் மிகையாகாது. நம்மூர் ஆடியன்ஸ் எதிர்பார்ப்பதே வேறு. வீர பாண்டிய கட்டபொம்மனாக எம்.ஜி.ஆர். நடித்திருந்தால் தனக்கு தூக்கு போட விட்டிருந்திருக்கவே மாட்டார் என்று அங்கலாய்த்தாராம் ஒரு ரசிகர்!

பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் என் வீட்டம்மா வந்து காதை பிடித்து திருகும் முன்னால் கணினியை மூடி ஜூட் விடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

29 comments:

வசந்தன்(Vasanthan) said...

அன்பே சிவம் தோற்றது ஏன்?

மாயவரத்தான் said...

//நம்மூர் ஆடியன்ஸ் எதிர்பார்ப்பதே வேறு. வீர பாண்டிய கட்டபொம்மனாக எம்.ஜி.ஆர். நடித்திருந்தால் தனக்கு தூக்கு போட விட்டிருந்திருக்கவே மாட்டார் என்று அங்கலாய்த்தாராம் ஒரு ரசிகர்! //

You too dondu sir?!

உண்மையிலேயே ஒரு ஆளுக்கு திறமை இருக்கு அப்படீன்னு நெனச்சா அதை மட்டும் பாராட்டுங்க.

உங்க அளவுக்கு பெரும்பான்மையான மக்களுக்கு உண்மையான திறமையை மதிக்கும் அறிவு இல்லைன்னு நீங்களாகவே நெனச்சுக்கிட்டு இப்படி எல்லாம் பேசுவதும்/எழுதுவதும் சரியா?!

என்ன செய்யுறது? நம்மூர் ஆடியன்ஸ் எல்லாம் அப்படி தான் (என்னையும் சேர்த்து தாண்!). எங்களையெல்லாம் உங்க ரேஞ்சுக்கு 'கோபுரமா' உயர்த்தவே முடியாது. அதனால உங்கள மாதிரியான ஆடியன்ஸ் எங்கே இருக்காங்களோ, 'அங்கே' போய் 'தெறமய' காட்டி பாராட்ட வாங்க வெண்டியது தானே.

இப்படியெல்லாம் கம்பேர் பண்ணி பேசுறதுக்கு 'சோற்றால் அடித்த பிண்டங்கள்' மாதிரியான அரசியல்வா(ந்)தியின் டயலாக்கே மேல்.

கானா பிரபா said...

ராகவன்

நீங்கள் குறிப்பிடது போன்று அன்பே சிவம் தமிழ் சினிமாவின் சில பார்முலாக்களைத் தகர்த்தெறிந்த அருமையான படம். மதனின் வசனங்கள் இதற்குப் பெரிய பலம். இப்படத்தைப் பார்க்கும் போது ரீப்பிளே செய்து வசனங்களையும் காட்சிகளையும் ரசித்தேன்.
கமல் ஆங்கிலப் படங்களைக் காப்பியடிக்கின்றார் என்ற குற்றச்சாட்டுகளைப் பற்றி எனக்குக்கவலையில்லை நல்ல தமிழ் (சினிமா) சாப்பாட்டை அவர் கொடுக்கின்றாரே அதுவே போதும்.

dondu(#11168674346665545885) said...

நன்றி வசந்தன் அவர்களே. ஹிட் ஃபிலிமாக்க என்ன செய்திருக்கலாம் என்பதை பற்றி நானும் சிந்தித்துள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் மாயவரத்தான். டேக் இட் ஈஸி. இவ்வளவு நல்ல படம் ஓடாமல் போயிற்றே என்ற அங்கலாய்ப்பில் வந்ததே இப்பதிவு. கண்டிப்பாக வணிக வழி படங்களை கேலி செய்தல்ல. நானும் சகல கலா வல்லவனையும், சந்திரமுகியையும், ராஜா கையை வச்சாவையும் ரசித்தவன்தான்.

"அமர், அக்பர், ஆந்தணி" என்ற ஹிந்தி படத்தில் கதாநாயகர்களின் பார்வையற்ற அம்மா சாயிபாபா கோயிலுக்குள் வர, பின்னால் வந்த வில்லன்களை ஒரு பாம்பு வந்து தடுக்க, சாயிபாபா சிலையின் கண்களிலிருந்து அருள் ஒளி வந்து அப்பெண்மணி பார்வை பெற்றபோது மகிழ்ந்து கைதட்டியவர்களுள் நானும் ஒருவன். இப்போது கூட அப்படம் டி.வி.யில் வரும்போது அக்காட்சிக்காக காத்திருப்பது என் வழக்கமே.

இவ்வளவும் கூறுவதற்கு காரணம் நான் ஒன்றும் சராசரிக்கு மேற்பட்டவன் இல்லை என்பதை குறிப்பதே.

இப்படத்திலும் மேலே உள்ள வசந்தனின் சுட்டியில் குறிப்பிட்டது போல காட்சிகள் அமைந்திருந்தால் ஒரு வேளை ஹிட் படமாகவே அமைந்திருக்கலாம்தான்.

இப்போது யோசித்து பார்க்கும்போது கமல் தன்னை கிரணுக்கு காட்டாதுபோவது ஒரு மனிதாபிமான செயலாகவே படுகிறது. அப்பெண் இவரைப் பார்த்திருந்தால் எவ்வளவு மனளைச்சலுக்கு உள்ளாகி இருந்திருப்பார். மாதவனை விட்டு இவரைத் திருமணம் புரிந்திருந்தால் பிற்கால வாழ்க்கை? இல்லையென்றால் அவருக்கு தன்னைப் பற்றி எழக்கூடிய தாழ்வு மனப்பான்மை?

அப்படியும் ஏன் அங்கலாய்க்கிறேன் என்று கேட்கிறீர்களா? என்ன செய்வது என் அபிமான நடிகர் படம் தோல்வியடைந்ததே என்ற வருத்தம்தான் காரணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இதே படத்தைப் பற்றிய தருமியின் பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://dharumi.weblogs.us/2006/02/18/189
கை கொடுங்க தருமி சார். நானும் பதிவு போட்டேன், விடியற்காலை 3 மணிவாக்கில். படம் முடிந்ததும் கனத்த மனத்துடன் சீக்கிரமே படுக்கச் சென்றேன். பாதியில் விழிப்பு வந்து பதிவு போட்டுவிட்டு மறுபடியும் தூங்கச் சென்றேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post_19.html

இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய மேற்படி பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். அது அங்கு வருகிறதா என்பதைப் பார்த்துவிட்டே மட்டுறுத்தல் செய்யவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பின்னூட்டத்துக்கு நன்றி கானா பிரபா அவர்களே. நீங்கள் கூறுவதுடன் முழுமையாகவே ஒத்துப் போகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜோ/Joe said...

Kamal is Legend!

தருமி said...

this is too much, Dondu. இப்பதான் அறுவை சிகிச்சை முடிச்சிட்டு இருக்கீங்க, இப்ப இப்படி ராக்கோழி மாதிரி நேரங்கெட்ட நேரத்தில எழுந்திரிச்சி உக்காந்து லொட்டு லொட்டுன்னு தட்டணுமா, என்ன?

இப்பவும் எனக்கு இந்தப் பின்னூட்டத்துக்காக ஒங்க "சேத்தாளி"ட்ட இருந்து அந்த 'பலான' மயில் வருமோ?

dondu(#11168674346665545885) said...

You are 100% right, Joe.

Regards,
Dondu N.Raghavan

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் தருமி அவர்களே. ஸ்விட்ச் போட்டதுபோல 3 மணிவாக்கில் விழிப்புவர, என் படுக்கைக்கு அருகில் இருந்த என் கணினியை என்னையறியாமல் ஆன் செய்து, இணைய இணைப்பு கொடுத்து, பதிவு போட்டு, கணினியை மூடி மறுபடியும் படுத்தது எல்லாம் சுமார் 20 நிமிட நேரத்தில் முடிந்தது.

சேத்தாளி இன்னும் செந்தமிழில் மெயில் போடவில்லையா? ஆச்சரியமாக இருக்கே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பினாத்தல் சுரேஷ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://penathal.blogspot.com/2006/02/19-feb-06.html
ரொம்பத்தான் நொந்துவிட்டீர்கள் போலிருக்கிறது? அதான் நான் ஏற்கனவே ஜோசஃபிடம் கூறிவிட்டேனே எங்களைப் போன்ற பெரிசுகள் அடிக்கும் லூட்டியைப் பற்றி.

என்னுடைய கிட்டத்தட்ட அறுபதுவயசில் வெறுமனே கடந்த நான்கு ஆண்டுகள் மட்டுமே கணினியுடன் டச் இருந்திருக்கிறது என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லைதான்.

இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய, நீங்கள் சுட்டியுள்ள கமல் பதிவிலும் பின்னூட்டமாக இட்டு விடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post_19.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

வெளிகண்ட நாதர் said...

நல்ல சினிமாக்கள் வர்த்தக ரீதியா தான் தோல்வி அடைய முடியும், அதனுடய தாக்கம் எப்பவும் நமக்குள்ள இருக்கும். ஆனா ஜனரஞ்சகங்கிறது எல்லாருக்குள்ளயும் உட்கார்ந்திட்டு இருக்கிற ஒன்னு!

உங்க சேத்தாளி மயிலு தொந்தரவு தாங்கமுடியல டோண்டு! இந்தோ உங்களுக்கு பின்னோட்டம் போட்டுட்டேன்ல, அவ்வளவுதான். அந்த பலான மயிலு அடுத்து வர வேண்டியதுதான்.

dondu(#11168674346665545885) said...

மிக நல்ல படம் வர்த்தக ரீதியாகவும் வெற்றியடையும்போது அதன் சுகமே தனிதான். உதாரணங்கள்: நெஞ்சில் ஓர் ஆலயம், சங்கராபரணம்.

பலான மயிலு இன்னுமா விடவில்லை. அந்தாளுக்கு வேறே வேலையே இல்லை போலிருக்கு. என்னுடைய ஹிட் கவுண்டரை ஓட விட்டுத்தான் அவனுக்கு மறு வேலை போலிருக்கு. வழக்கமா குப்பைத் தொட்டிக்கு அனுப்பவேண்டிய மயிலுதானே.

நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

J S Gnanasekar said...

கமல் மறைமுகமாகச் சொன்ன சில விஷயங்கள் (நான் கேள்விப்பட்டவை):

1) கதாபாத்திரங்களின் பெயர்களின் மூலம் கதை சொல்லப்பட்டு இருக்கும். கடைசியில் கதாநாயகியை மணப்பவர் அன்பரசுதான்; நல்லசிவம் இல்லை. எனவே அன்பே ஜெயிக்கும்; சிவம் இல்லை.

2) இப்படத்தில் ஒவ்வொரு பாத்திரத்தின் பெயரையும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகப் புரிந்திருப்பார்கள். உதாரணமாக, பாலசரஸ்வதி என்ற பெயரை, பாலா என்று சிவம் புரிந்திருப்பார்; சரசு என்று அர்ஸ் புரிந்திருப்பார். இதேபோல்தான் நல்லசிவம், அன்பரசு என்ற பெயர்களும்.

3) ஸ்டுடியோவில் வரையப்பட்டு இருக்கும் அந்த பரமசிவன் படம். உண்மையில் அதைப்பார்த்து ஆச்சரியப்படாதவர்கள் இருக்கவே முடியாது.

4) கழுத்துப் பட்டன் போட்டு இன் பண்ணாமலும், வலதுபக்கம் மட்டும் தலைசீவியும், பிளாட்பாஃர்ம் ஷூவும், கட்டுப்படாத கீழ்த்தாடையுடன், தடியான கண்ணாடியுடன் வலம்வரும் கமல்ஹாஸ்சனுக்கு அந்தவருட தேசிய விருது கொடுக்காமல், வழக்கம்போல் அவ்விருது பலபேர்களிடம் நல்லபெயர் வாங்காமல் போனது மறுக்க முடியாத உண்மை.

-ஞானசேகர்

dondu(#11168674346665545885) said...

முதற்கண் உங்களுக்கு நன்றி. நீங்கள் உங்கள் பதிவில் போட்டிருந்ததிலிருந்துதான் அன்பே சிவம் படம் காண்பிக்கப் போகிறார்கள் என்பதை அறிய முடிந்தது. அப்பதிவு இப்போது காண முடியவில்லையே?

அவார்ட் எல்லாம் கமிட்டியினரின் சுய விருப்பு வெறுப்புகளில் வருவது. அது இல்லாததால் கமல் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Raj Chandra said...

After "AaLavanthaan", I didn't watch any of the Kamal's shadow directed movies, including "Anbe Sivam", but looking at your review and other comments, I think I will watch it soon.

BTW, Mr. Raghavan, your clone did put a hilarious comment in my blog appreciating my mother, sisters and everyone, but anyway, I introduced the moderation and I am expecting more from him.

Take care.

Regards,
Rajesh

பழூர் கார்த்தி said...

கமல் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை
குருதிப்புனல், அன்பே சிவம், மகாநதி, ஹேராம், பதினாறு வயதினிலே & இந்தியன்

dondu(#11168674346665545885) said...

தயா அவ்ர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://deedaya.blogspot.com/2006/02/910.html

அந்தப் பாட்டில் பாடுபவர்களின் ட்ரெஸ்கள் மாறுமே. அதை வைத்தே பல நாட்கள் கடந்தன என்று கூறி விடலாமே. மற்றப்படி அன்பே சிவத்தில் ஒவ்வொரு நாளாக காண்பிக்க இது என்ன நியூ வேவ் படமா என்ன?

சில படங்களில் 6 வருடங்கள் கழித்து என்று கேப்ஷன் போடுவார்கள் (உதாரணம் ஜெண்டில்மேன்). அதுவும் ஒரு உத்தி. மோம் கீ குடியா (மெழுகு பொம்மை) என்னும் படத்தில் வெறும் பின்னணி இசையில் ஒரு மரம் பூப்பதையும், இலைகள் உதிர்வதையும், மழை பெய்வதையும், மறுபடியும் பூப்பதையும் காட்டியே சில ஆண்டுகள் கழிந்தன என்பதை சூசகமாகக் காட்டுவார்கள்.

இம்மாதிரி ஒரு பாட்டில் முரல் எப்படி வரைய முடியும் என்று கேட்கும் சில பேர்வழிகளுக்காகவே எம்.ஜி.ஆர். படம் ஒன்றில் ஜோதி லட்சுமி தன் கொண்டை ஊசியை எடுத்து அதைக் காமெரா முன்னால் வைக்க அந்த ஊசியை மெதுவாக சுழற்றி, பிறகு அதை வைத்து பூட்டைத் திறப்பதைக் காட்டுவார்கள். படம் தேடி வந்த மாப்பிள்ளை. அம்மாதிரி கூட செய்யலாம்.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டு ராகவனே இட்டான் என்பதை நிரூபிக்கும் முறையில் அதன் நகலை என்னுடைய கமல் பற்றியப் பதிவில் பின்னூட்டமாக இட்டு விடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post_19.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

PPattian said...

That Kudai (Umbrella) fight spoilt an otherwise excellent movie. The flashback could have been shortened to make it slick.

In my opinion Madhavan did what Jayaram did in Thenali and Pasupathi did in Mumbai Express, they outplayed Kamal in certain scenes. Of course, Kamal is appreciated for giving ample screen presence to his talented co-actors.

dondu(#11168674346665545885) said...

நன்றி ppattian அவர்களே. குடை சண்டை நம்ப முடியாத சீன். ஆனால் என்ன செய்வது, பாக்ஸ் ஆஃபீஸ் என்று ஒன்று இருக்கிறது, டிஸ்ட்ரிபியூட்டர்கள் என்ற குழு இருக்கிறது. மேலும் ஹீரோ இமேஜ் என்று வேறு இருக்கிறது.
ஆனால் இன்னொரு விஷயமும் உண்டு. இவ்வளவு உடல் லாகவத்தோடு இருந்த ஹீரோ, பின்னால் நடக்கவே சிரமப்படுவது நல்ல காண்ட்ராஸ்ட் அல்லவா. இப்போதும் அவன் தன் நல்ல பண்புகளை இழக்காது, அதே சமயம் "டூ டு டூ டு டூடூ" என்றெல்லாம் கூறி மாதவனை கலாய்ப்பது மிகவும் ரசிக்க முடிந்தது அல்லவா.

//Of course, Kamal is appreciated for giving ample screen presence to his talented co-actors.//
சொன்னாலும் சொன்னீர்கள் சரியாகச் சொன்னீர்கள். சிவாஜியோ எம்ஜீஆரோ செய்யத் துணியாத விஷயம் இது. யாதோன் கீ பாராத்தின் தமிழாக்கமான நாளை நமதேவில் எம்ஜீஆருக்கு தர்மேந்திரா ரோலும் வேண்டியிருந்தது, விஜய் அரோரா ரோலும் வேண்டியிருந்தது, டூயட் பாடுவதற்காக. இதுவாவது பரவாயில்லை அண்ணன் தம்பிகள் என சமாதானம் சொல்லலாம். ஜஞ்சீர் படத்தின் தமிழாக்கத்தில் (பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை) பிரான் மற்றும் அமிதாப்பின் ரோல்களை எம்ஜீஆரே செய்தார்.

சிவாஜியும் இவ்விஷயத்தில் தவறு செய்தார். பிரான் மற்றும் மனோஜ் குமார் செய்த ரோல்களை சிவாஜியே ஏற்றுக் கொண்டார் (மன்னிக்கவும் இரு படங்கள் பெயரும் ஞாபகம் இல்லை, பிறகு வந்ததும் எழுதுகிறேன்).

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

PPattian said...

உங்கள் விளக்கத்துக்கு நன்றி டோண்டு அவர்களே

//BTW, Mr. Raghavan, your clone did put a hilarious comment in my blog appreciating my mother, sisters and everyone, but anyway, I introduced the moderation and I am expecting more from him.//

He had visited my site too with same words of appreciation. There is a way to idntify the "duplicate" comments.

When a duplicate submits his comment using the "Other" option in the Choose an identity column, the e-mail we receive does not have any hyperlink to his blogger profile.

When a genuine blogger account holder submits a comment, in the e-mail we receive, his name is hyperlinked to his profile page.

Of course, this is possible only if you have turned on the comment notification option in your "comments" settings.

So.. as soon as I recieved the mail I knew it was a டுகால்டி டோண்டு.

dondu(#11168674346665545885) said...

I am distressed for you ppattian and am relieved that you have taken things in your stride.

I would like to add a few more points to the question of bogus comments.

1. In the other option, there will be no photos but then if you have not enabled photo option in your comments publication page, this aspect will not help and it is here that I characterized the other option as the most dangerous one.
2. My imitator (by the way the term "clone" will not be correct in this context) did open a duplicate blog along with photos including my profile number within brackets after the display name just as I do. But then the mouseover will betray his right number the bottom left of the screen.

Having said all that the best way is to ignore him and behave as if nothing has happened.

இப்போதுதான் சிவாஜி மற்றும் மனோஜ் குமார் நடித்த படங்கள் நினைவுக்கு வந்தன, என் மகன் மற்றும் பேயிமான் (Be-imaan).

Regards,
Dondu N.Raghavan

Anonymous said...

//"அமர், அக்பர், ஆந்தணி" என்ற ஹிந்தி படத்தில் கதாநாயகர்களின் பார்வையற்ற அம்மா சாயிபாபா கோயிலுக்குள் வர, பின்னால் வந்த வில்லன்களை ஒரு பாம்பு வந்து தடுக்க, சாயிபாபா சிலையின் கண்களிலிருந்து அருள் ஒளி வந்து அப்பெண்மணி பார்வை பெற்றபோது...//
அழுவாச்சியா இருந்திருக்கும் போலிருக்கே. நிஜமாவே சீன் காண்பிச்சாங்க போலிருக்கு. :)))(((

ஒண்ணுமில்ல, ஆனந்தக் கண்ணீர்தான்.

சிவகடாட்சம்

dondu(#11168674346665545885) said...

//சீன் காண்பிச்சாங்க போலிருக்கு. :)))(((
ஒண்ணுமில்ல, ஆனந்தக் கண்ணீர்தான்.//

அட இதுவும் நல்லாத்தான் இருக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு சார்

திரையுலகில் அவரவர்கள் தத்தம் ரூட்டில் பயணம் செய்து பணம், புகழ், வெற்றி அடைய முயற்சித்து வெற்றியும் பெற்றார்கள்.

சிவாஜி, எம்.ஜி.ஆர், - ரஜினி, கமல் என்று.

இதில் ஒருவரை ஒருவர் கம்பேர் செய்வது ஆரோக்கியமான விஷயம் அல்ல.

dondu(#11168674346665545885) said...

@ஆர்.கோபி
இப்பதிவு முதலில் வந்தபோதே நண்பர் மாயவரத்தானும் இதே விஷயத்தை கூறியுள்ளார். அவருக்கு அப்போது சொன்ன பதில்தான் இங்கும். அது 16.02.2006 அன்று தரப்பட்டது. மேலே பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//சாதாரணமாக கதாநாயகன் எல்லா இடர்களையும் மீறி கதாநாயகியை திருமணம் செய்வதுதான் விதி என்பதை எவ்வளவு அனாயாசமாக உடைத்தெறிந்துள்ளார் கமல்!//

இதை பாக்கியராஜ் அந்த ஏழு நாட்கள் படத்தில் செய்து விட்டார்.
கமல் ஜஸ்ட் காப்பி

புருனோ Bruno said...

இந்த படம் குறித்த என் பதிவு * 12.சினிமா - அன்பே சிவம், அன்பு, கடவுள், பொதுவுடமை, தொழிற்சங்கம்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது