சென்ற ஆண்டு துக்ளக் ஆண்டு விழா கூட்டத்திற்கு சென்ற சமயம் நான் இவ்வாறு எழுதியிருந்தேன். "ஆனால், இந்த களேபரத்தின் நடுவிலும் அரங்குக்கு வெளியில் அலயன்ஸ் பதிப்பகத்தார் போட்டிருந்த ஸ்டாலில் சோ புத்தகம் ஒன்றை வாங்க மறக்கவில்லை. (அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் என்னும் அப்புத்தகத்தை வைத்து சோ பற்றிய பதிவுகள் இன்னும் சில போடப் போவதையும் இங்கே கூறிவிடுகிறேன்)". அதற்கு இப்போதுதான் நேரம் வந்தது.
முதலில் சோ அவர்களது சட்ட அனுபவங்களுடன் புத்தகம் ஆரம்பிக்கிறது. அவரது குடும்பத்தினரில் பலர் வக்கீல்கள். ஆகவே இவரும் அந்த தொழிலுக்கு போனதில் ஆச்சரியமே இல்லை. ஆரம்பத்திலிருந்தே அவர் தனது உழைப்பால் வெற்றிகள் பல பெற்றார். ஆனால் அவற்றைப் பற்றி இந்த புத்தகத்தில் குறிப்பிடும்போது அவற்றுக்கெல்லாம் தனது அதிர்ஷ்டமே காரணம் என்று குறிப்பிடுகிறார். அதுதான் சோ. அவர் எப்போது என்ன செய்வார், என்ன சொல்வார் என்பதை கணிப்பது கடினம். அதை அவர் திரும்பத் திரும்ப நிரூபித்து வருகிறார்.
ஒரு கொலை குற்றவாளிக்காக வாதாடும்படி அவர் கோர்ட்டாலே நியமிக்கப்பட்டிருக்கிறார். குற்றவாளியோ 23 வயதே ஆன இந்த இளம் வக்கீலின் மேல் நம்பிக்கை இல்லாமல் பேசி, ஒத்துழைப்பு தர மறுத்து விட்டார். அவர் தான் தனது மனைவியை கொலையை செய்ததாக ஒப்பு கொண்டாலும் சோ அவர்கள் விடாது வாதாடி, சந்தர்ப்ப சூழ்நிலை, இறந்தவர் தன் கணவனுக்கு உண்மையின்றி நடந்து கொண்டது ஆகிய சூழ்நிலைகளை நிறுத்தி (extenuating circumstances) ஆயுள் தண்டனையாக வந்திருக்க வேண்டிய தண்டனையை ஏழு ஆண்டுகள் தண்டனையாக குறைக்க செய்தார்.
தனது சீனியரின் (சோ அவர்களது தாத்தா) வழக்கை அவர் இல்லாத நேரத்தில் திறமையாக நடத்தி, கடைசியில் வாதங்கள் செய்ய வேண்டிய நிலையில் கட்சிக்காரர் சீனியர் வந்துதான் வாதாட வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, இவருக்கு சங்கடமான நிலைமை ஏற்பட்டது. அப்போது நடந்ததை அப்புத்தகத்திலிருந்தே மேற்கோள் காட்டி எழுதுகிறேன்.
நான் பேசாமல் நின்று கொண்டிருந்தேன். இந்தக் கட்சிக்காரர், இப்படி நடு நீதிமன்றத்தில் காலை வாரிவிடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தலையை நிமிர்த்தி யாரையும் பார்க்கக்கூட முடியவில்லை. இந்த அவமானத்தை எப்படி சகிப்பது என்பது புரியாமல் நின்றேன்.
நீதிபதி திரு. ராபர்ட் செல்லையா ஒரு முடிவுக்கு வந்தார். "சீனியர் வக்கீல் வந்து வாதங்களை நடத்தும் வரை, வாய்தா தருவதற்கு நான் தயாராக இல்லை. வழக்கு முடிகிற நிலையில், இந்த வாய்தா அனாவசியமானது. இவரே (நான்) வாதங்களை சமர்ப்பிக்கட்டும். அது உமக்கு பிடித்தமில்லையென்றால், வாதங்கள் இல்லாமலே வழக்கை முடித்து, தீர்ப்பு வழங்குகிறேன்" என்றார்.
கட்சிக்காரருக்கு வேறு வழியில்லாமற் போயிற்று. பேசாமல் சம்மதித்தார். நீதிபதி என்னைப் பார்த்து, "இப்போதே வாதங்களை வைத்துக் கொள்ள உமது மனநிலை இடம் தரவில்லையென்றால், இடைவேளைக்கு பிறகு வாதங்களை வைத்து கொள்ளலாம்" என்றார். நான் மனம் ஒடிந்து போயிருப்பேன் என்பது அவருடைய நினைப்பு. ஆனால் சூடு, சொரணை - இதற்கெல்லாம் அப்பாற்பட்டவனாக நான் இருந்ததால், அப்போதே வாதங்களைத் தொடங்கி விட்டேன் (நேரம் கழித்தால் - கட்சிக்காரர் மீண்டும் மனம் மாறி விட்டால் என்ன செய்வது?)
இரண்டு நாள் எனது ஆர்க்யுமெண்ட்ஸ் நடந்தது. எதிர்த் தரப்பு வாதமும் முடிந்தது.. தீர்ப்பு என் தரப்புக்கு சாதகமாக வந்தது.
எல்லோரும், தாத்தாவும் பாராட்டினாலும் சோ இப்புத்தகத்தில் அது பற்றி எழுதும்போது, இந்த வெற்றியால் மேலும் மேலும் வக்கீல் தொழிலில் தான் ஆழ்த்தப்பட்டு நாடக உலகத்துக்கு வரமுடியாமல் போய் விடுமோ, அது தன்னிடமிருந்து தப்பித்து கொண்டு விடுமோ என்றெல்லாம் தனது பயத்தைப் பற்றி தமாஷாக எழுதுகிறார். அதுதான் சோ.
பிறகு நாடகங்களிலும் ஈடுபடும் வசதிக்காக டி.டி.கே. கம்பெனிகள் குழுமத்தில் சட்ட ஆஃபீசராக சேர்ந்தார். அதில் சேருவதற்கான தேவையான சட்டப்பிரிவுகள் பற்றி அப்போது அவருக்கு அவ்வளவாகத் தெரியாத நிலை அப்போது. பின் எப்படி அவர் இவ்வேலைக்கு பொருத்தமானவராக வர இயலும் என்ற கேள்வி நேர்க்காணலில் அவரிடம் வைக்கப்பட, பதினைந்தே நாட்களில் அவற்றை படித்து தயாராக வருவதாக அவர் வாக்களித்தார். அவாறே 15 நாட்களில் சம்பந்தப்பட்ட சட்டங்களையெலாம் அலசித் தீர்த்திருக்கிறார். சட்டங்களைப் பொருத்தவரையில் எது எங்கே இருக்கிறது என்று அறிந்து, உடனே அந்த இடத்தில் பார்வையை செலுத்தத் தெரிந்தால் போதும்; எல்லாவற்றையும் மனப்பாடம் செய்யத் தேவையில்லை என்ற விஷயத்தையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிறார் அவர். வேலையும் கிடைத்தது. அதுதான் சோ.
அக்காலக் கட்டத்தில் நடந்தது என்னவென்பதை புத்தகத்திலிருந்து பார்ப்போம்.
தொழில் கோர்ட்டுகளிலும், ட்ரேட் மார்க்குகள் பதிவகத்திலும், கம்பெனிகளின் சார்பில் ஆஜராகி, விசாரணை, வாதங்கள் ...இவையெல்லாம் ஒரு புறம். நான் எழுதிய 23 நாடகங்களில் இந்தக் காலக்கட்டத்தில் சுமார் 10 எழுதப்பட்டன. நாடக நிகழ்ச்சிகள் சுமார் 2000. நடித்த சினிமாக்கள் 100க்கும் மேல். நான் திரைக்கதை - வசனம் எழுதிய 12 படங்களில் 7 இந்த நேரத்தில்தான் உருவாயின; கல்கி பத்திரிகையில் ஒரு தொடர் நாடகம், ஒரு தொடர் நாவல், ஸ்தாபன காங்கிரஸுக்காகவும் மற்றப்படியும் நூற்றுக்கணக்கான பொதுக் கூட்டங்கள். இவையெல்லா தவிர துக்ளக் பத்திரிகையின் ஆரம்ப வருடங்கள். 1961-லிருந்து, எமெர்ஜ்நென்ஸி காலமாகிய 1975 வரை இத்தனை காரியங்களையும் ஒரே சமயத்தில் நான் செய்து கொண்டிருந்தேன். இவற்றில் ஏதேனும் ஒன்றில் மட்டும் நான் முனைந்திருந்தால், ஏதாவது உருப்படியாகச் செய்திருக்கலாம். இந்த புத்தி அப்போது வரவில்லை. ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தேன்.
இத்தனையையும் செய்துவிட்டு கேஷுவலாக அதற்கெல்லாம் காரணமே தான் ஒரு குழப்பவாதியாக இருந்ததே காரணம் என்று கூறி விடுகிறார். அதுதான் சோ.
இத்தனை செய்தாலும் எல்லாவற்றிலும் கணிசமான வெற்றியைப் பெற முக்கியக் காரணமே அவரது அயராத உழைப்புதான் என்று நான் அடித்து கூறுவேன். மீண்டும் இந்த விஷயத்தில் திரும்ப வந்து உங்களைப் படுத்துவேன் என்று கூறி எச்சரிக்கையும் செய்து விடுகிறேன். அதுதான் டோண்டு ராகவன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
சுயவிமர்சனம், கடிதம்
-
நமது கிராமங்களும் மோசடிகளும், கடிதம் ஆசிரியருக்கு, குறைந்தபட்ச சுய
விமர்சனத்தின் அளவைக் கொண்டுதான் ஒரு பண்பாட்டின், சமூகத்தின், தனி மனிதனின்
தரத்தை அறிக...
38 minutes ago
31 comments:
பன்முகவாதியான சோவிடம் எனக்கு மிகவும் பிடித்தவைகள்.
1,துக்ளக் ஆசிரியர்
2,நாடக கதைவசனகர்த்தா
3,நடிகர்
4,அரசியல் ஆய்வாளர்
மற்ற விஷயங்களைப் பற்றி அதிகம் தெரியாது.எனவே அதைப் பற்றி எழுதுங்கள்..
நூத்து சொச்சம் பிரதிகள் விற்கும் பத்திரிகை என்று துக்ளக்கை ஒரு அல்லக்கை விமரிசனம் செய்திருந்தது நியாபகத்திற்கு வந்தது.
பத்து பேரு கூட படிக்காத வலைப்பூ வைத்திருக்கும் அந்த நபருக்கே தான் ஒரு 'இது' என்று நினைப்பு வந்திருக்கையில் சோ குறித்து அந்த நபருக்கு எதுவுமே தெரியாததில் வியப்பில்லை.
சோ ஒரு 'நிறை குடம்'
சோ அவர்களை கருணாநிதி & கோ, அடிக்கடி கருவேப்பிலை மாதிரி தான் பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் தனது கொள்கை, கடமையிலிருந்து மாற்றம் இல்லாமல் செல்வதில் அவர் கெட்டிக்காரர் தான்.
இதெல்லாம் இந்த மாக்களுக்கு எங்கே புரியப்போகிறது. புரியாததினால் தான் இப்பவும் இப்படி இருக்கிறார்கள். என்ன நான் சொல்றது?!
இவர் ஏன் ஜெயலலிதாவிர்க்காக வாதாட கூடாது?
வால்பையன்
//இவர் ஏன் ஜெயலலிதாவிற்காக வாதாட கூடாது?//
பல காரணங்கள் அவர் அவ்வாறு செய்யாமல் இருப்பதற்கு.
அவர் இப்போது சட்ட பிராக்டீஸ் செய்வதில்லை, ஜெயலலிதாவுக்காக வாதாட பல வக்கீல்கள் ஏராளமாக உள்ளனர். மேலும் ஜெயலலிதாவிடம் வேலை செய்ய சில குணநலன்கள் வேண்டும். அது சோவிடம் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நாடக நடிகராய்,நகைசுவை திரப்பட நடிகராய்,புகழ் பெற்ற டி.டி.கே நிறுவன சட்ட அலோசகராய்,திரைப் படம் மற்றும் வார,மாத ,தினப் பத்திரிக்கை எழுத்தாளராய்,அரசியல் விமர்சகராய்,இதிகாச புராணா காவிய நயங்களை இயம்புவராய்,அரசியல் கட்சிகளின் ஆக்கபூர்வ ஆலோசகராய்,சில சமயம் கூட்டணிகளை உருவாக்குபவராய்,தனக்கு மிகவும் பிடிக்கும் பா.ஜ.கட்சிஎன்றாலும் தப்பு செய்யும் போது அதன் மீது விமர்சன அனல் கக்குவராய்,37 வருடங்களாய் தாக்குப்பிடித்து (இம்சைகள்,மிரட்டல்கள்,கேலி கிண்டல்கள்,இன்னல்கள்-இவைகளை தாண்டி) துக்ளக் பத்திரிக்கையாளராய்
(first investigative journalist in tamil )
வெற்றி பவனி வரும் சோ அவர்களின் அதிர்ஷ்டம் /தந்த/(தரப் போகும்) அனுபவப் பதிவுகள்
டோண்டு ராகவன் அவர்களின் வலைப்பூ மணிமகுடத்தில் ஒரு மாணிக்க கல்லாய்
ஒளிவிட்டு பிரகாசிப்பது உறுதி.
தங்களின் பதிவுகள் மூலம் திரு சோ வைப் அதிகம் தெரிந்துகொள்ள இயலுகிறது..
சோவின் துக்ளக் கேள்விபதில்களில் எந்த ஒரு சிரியஸ் கேள்விக்கும் மிக்க நகைச்சுவையோடு பதில் இருக்குமே...
தாங்களும் அவ்வாறே முயன்று பாருங்களேன்....
அதற்காக என்னிடமிருந்து மொக்கை கேள்விகள் வராது என்று நினைத்துவிடாதிர்கள். கண்டிபாக அறுத்து தள்ளபோகிறேன்
//நூத்து சொச்சம் பிரதிகள் விற்கும் பத்திரிகை என்று துக்ளக்கை ஒரு அல்லக்கை விமரிசனம் செய்திருந்தது நியாபகத்திற்கு வந்தது.//
புதன் கிழமை வெளிவரும் துக்ளக் எந்த ஊர் கடைகளிலும் வெள்ளி கிழமை கிடைக்காது . விற்று தீர்ந்து விடும் .
ஐந்து லட்சம் பிரதிகள் பிரிண்ட் செய்வதாக எப்பொழுதோ திரு சோ அவர்கள் எழுதியதாக ஞாபகம் !
1.சோ ராமசாமி அவர்களின் பேரில் , சோ என்பதன் விரிவாக்கம் என்ன விளக்கவும்.( initial இல்லை என்பார்கள்)
2.இவரைப் போல் சொந்தப் பெயர் கடந்து ஒரெழுத்துப் பெயருடன் பத்திரிக்கை உலகில் பகழ் பெற்றவர் யாரேனும் உண்டா?
3.ஆங்கிலப் புலமை இருந்தும், வடஇந்திய அரசியல் விமர்சனத்தை தாங்கிய ஆங்கில நாளிதள் தொடங்க ஏன் முயற்சி செய்யவில்லை?செய்து வெற்றி பெற வில்லையா?
4.விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து தைரியமாக
(m.g.r ஆட்சி,ஜெயலலிதா அவர்களின் 10 ஆண்டுகால ஆட்சி, கலைஞரின் 10-15 கால ஆட்சி ) விமர்சன்ம் செய்து வரும் சோ போல் வேறு யாரும் இருக்கிறார்களா?
5.சில அரசியல் கட்சிகளை தீவிரமாக எதிர்த்து விமர்சித்தாதால் ரசயானம் கொண்டு அவர் தலை முடி வளார வண்ணம் செய்தாக ஒரு வதந்தி பரவியது(சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால்) அதில் உண்மை உண்டா?கட்டுக் கதை தான?
6.திரைப் படத்துறையில் "நாகேஸ்" மேல் கோபம் கொண்டு MGR , சோ அவர்களுக்கு தன் படங்களில் முன்னுரிமை வழங்கியும் ,நடிப்புத் திறமை இருந்தும்(நகைச்சுவையில்) பெரிய வெற்றி கிட்டவில்லையே ?(என் அண்ணன்,தேடிவந்த மாப்பிள்ளை,அடிமைப்பெண்,....)
7.முகமது பின் துக்ளக் வெற்றி பெற்றது போல் பின்னாளில் வெற்றி தொடராததற்கு" துக்ளக்" பத்திரிக்கையில் ஈடுபாடு காரனாமா?
8.துக்ளக் பத்திரிக்கையின் விற்பனைச் சரிவு "மாயவரத்தார்" கோபப்படுவது போல் உண்மையா?
9.நக்கீரன்,தராசு,நெற்றிக்கண் இவைகளின் செய்தி தரத்தைவிட துக்ளக் நன்றாக இருந்தும் இக்கால தலைமுறையினருக்கு பிடிக்கவில்லையா?
10.junior vikatan,kumudam reporter
வாரத்துக்கு இரு முறை வந்து விற்பனையில் சக்கை போடு போடும் போது ,துக்ளக்கு என்ன ஆச்சு ?
கால மாற்றம் காரனாமா?மக்கள் புது trend ஐ விரும்ம்புவதாலா?
(fast-faster-fastest)
//இத்தனை செய்தாலும் எல்லாவற்றிலும் கணிசமான வெற்றியைப் பெற முக்கியக் காரணமே அவரது அயராத உழைப்புதான் என்று நான் அடித்து கூறுவேன். மீண்டும் இந்த விஷயத்தில் திரும்ப வந்து உங்களைப் படுத்துவேன் என்று கூறி எச்சரிக்கையும் செய்து விடுகிறேன். அதுதான் டோண்டு ராகவன்//
நான் ரொம்ப ரசித்த உங்களின் க்ளாசிக் வரிகள். நல்ல கட்டுரை டோண்டு சார். :)
//அனானி (27.05.2008 மாலை 06.25க்கு கேள்வி கேட்டவர்:
1. மறு ஜென்மத்தை இந்து மதம் நம்புவதுபோல் பிற மதத்தவர்கள் நம்பாததன் காரணம் என்னாவாயிருக்கும்?
பதில்: இந்திய துணைகண்டத்தில் உண்டான எல்லா மதங்களுக்குமே பூர்வ ஜன்ம நம்பிக்கை உண்டு.
//
இது உண்மை இல்லை என்று நினைக்கிறேன் டோண்டு சார். புத்த மதத்தில் சொர்கம், நரகம், மறுஜென்மம் ஏதுமே கிடையாது. இந்திய துணைகண்டத்தில் உண்டான மதம் தானே புத்த மதமும்?
//புத்த மதத்தில் சொர்கம், நரகம், மறுஜென்மம் ஏதுமே கிடையாது. இந்திய துணைகண்டத்தில் உண்டான மதம் தானே புத்த மதமும்?//
உங்கள் பிரமையை கலைக்க வேண்டியிருக்கிறது கயல்விழி அவர்களே. புத்த ஜாதகக் கதைகள் கேள்விப்பட்டதில்லையா? அதில் போதிசத்வர் (புத்தர்) எடுத்த வெவேறு பிறவிகள் கூறப்படுகின்றனவே.
ஒரு பிறவியில் யானை, இன்னொரு பிறவியில் கிளி என்றெல்லாம் வந்து உலகை உய்வித்தாரே. பல விலங்கு, மானிட ரூபங்கள் அதில் உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Why you people still hanging CHO..and wasting your Time.
CHO is an expired Non-rechargeable battery. He lost his creditability.
Of course, he will do some surprises occasionally -like meeting kalanger recently.
Cho cheeee… so Please leave Cho ‘as-it-is’ basis. He will retire peacefully.
Sathappan
'''இவர் ஏன் ஜெயலலிதாவிர்க்காக வாதாட கூடாது?
-வால்பையன்'''
What an IDEA ..great
Kokka makkan
// sathappan said...
Why you people still hanging CHO..and wasting your Time.
CHO is an expired Non-rechargeable battery. He lost his creditability.
Of course, he will do some surprises occasionally -like meeting kalanger recently.
Cho cheeee… so Please leave Cho ‘as-it-is’ basis. He will retire peacefully.
Sathappan
May 31, 2008 8:21 PM//
டோண்டு சாரின் அருமையான பதிவை படித்தபிறகும் இப்படிச் சொல்வது சரியில்லை.
டோண்டு ஐயாவிற்க்கு தெரிந்திருக்கலாம். சும்மா தகவலுக்காக -
//சோ ராமசாமி அவர்களின் பேரில் , சோ என்பதன் விரிவாக்கம் என்ன விளக்கவும்.( initial இல்லை என்பார்கள்)//
'சோ' என்பது ஒரு செல்லப் பெயர். அந்த காலத்தில் 'பிருஹஸ்பதி' என்று செல்லமாக திட்டுவார்கள். அந்த மாதிரி 'சோழன் பிரம்மஹத்தி' என்றும் சொல்வார்கள். குழந்தைப் பருவத்தில் அவரை அவர் வீட்டார் 'சோ' (அதிகமாக வாயாடுவதால் 'சரியான சோழன் பிரும்மஹத்தி' என்ற அர்த்தத்தில்) என்று கூப்பிட, அதையே தனது பெயராக கொண்டுள்ளார் என்று நினைக்கின்றேன்.
"இதெல்லாம் இந்த மாக்களுக்கு எங்கே புரியப்போகிறது. புரியாததினால் தான் இப்பவும் இப்படி இருக்கிறார்கள்."
Yes you are correct saying Mayavarathan.
"புதன் கிழமை வெளிவரும் துக்ளக் எந்த ஊர் கடைகளிலும் வெள்ளி கிழமை கிடைக்காது . விற்று தீர்ந்து விடும் .
ஐந்து லட்சம் பிரதிகள் பிரிண்ட் செய்வதாக எப்பொழுதோ திரு சோ அவர்கள் எழுதியதாக ஞாபகம் !"
It is good Joke 2008 :-)))
"இவர் ஏன் ஜெயலலிதாவிர்க்காக வாதாட கூடாது?"
Val cho losee all PNL code so he can not entre court nowdays :-))
"ஒரு பிறவியில் யானை, இன்னொரு பிறவியில் கிளி "
This is only ans by Mr. Dondu never one say like this!! becoz he have the courage
what a discover Dondu sir you are Great :-))
puduvai siva.
1கடைசியில் கர்நாடக் அரசியலில் ஜாதியின் ஆதிக்கம் தான் (லிங்கர் மற்றும் ஒக்கலிகர்)பா.ஜா.வை ஆட்சிக் கட்டில் ஏற வழிவகை செய்துள்ளது.ஒக்கலிகர் வாக்குகளை காங்கிரசும்,ம.த.ஜ.தளமும் பிரிக்க
மீண்டும் ஒட்டு சதவிதங்களின் வேடிக்கை தானே சார்?
2.தனது ஜாதித் தலைவர்கள் அரசியல் கொள்கை கொலைகலையும்,கோமாளி வித்தைகள் செய்தாலும் ஓட்டுப் போடும் போது கண்ணை மூடும் போக்கு மாறினால்தான் நல்லது
3.குஜாரத்தில் இந்த ஜாதிப் பிரச்சனை,தாக்கம் சுத்தமாக இல்லையா?
காந்தியின் பிறந்த மண்ணிற்காவது அந்தப் பெருமையுண்டா?
4.காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் போல் எடியூரப்பாவும் அண்டை மாநில தண்ணிர் பிரச்சணைகளை பேசிதீர்க்கலாம் என்பது பிரச்சனையின் தீவிரத்தை குறைத்து கடைசியில் நமக்கு உலகம் போற்றும் பொறுமைக்காரன் பட்டம் கொடுக்கவா?
5.இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை கட்டுப் படுத்தும் நோக்கோடு செயற்கையாக பெட்ரோல் விலையுர்வினை தனது வல்லமையை பயன்படுத்தி அமெரிக்கா செய்ய முயல்வதாக வல்லுனர்களின் கருத்தை
ஜு.வி ல் பார்த்தீர்களா?
அணுஆயுதத்தடை மற்றும் 123 ஒப்பந்தங்களில் இந்தியாவின் கையெழுத்து கிடைக்காது என்றா கோபமா?
தமிழ் வலைபதிவில் கூகுல் விளம்பரம் எவ்வாறு போடுவது?
கொஞ்சம் விளக்கினால் நானும் போட்டுகுவேன்.
//உங்கள் பிரமையை கலைக்க வேண்டியிருக்கிறது கயல்விழி அவர்களே. புத்த ஜாதகக் கதைகள் கேள்விப்பட்டதில்லையா? அதில் போதிசத்வர் (புத்தர்) எடுத்த வெவேறு பிறவிகள் கூறப்படுகின்றனவே.
ஒரு பிறவியில் யானை, இன்னொரு பிறவியில் கிளி என்றெல்லாம் வந்து உலகை உய்வித்தாரே. பல விலங்கு, மானிட ரூபங்கள் அதில் உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
இது என்னுடைய ப்ரமை எல்லாம் அல்ல. என்னுடன் வேலை செய்யும் ஒரு சீனர் புத்த மதத்தை சேர்ந்தவர். அவர் சொன்ன தகவலை தான் குறிப்பிட்டேன். இந்த பிறவிக்கதைகளை நான் கேள்விப்பட்டதில்லை. சில புத்த நண்பர்களின் கருத்துப்படி, புத்த மதம் மற்ற ட்ரெடிஷனல் மதங்களை விட ரொம்ப வேறுபட்டது.
ஒரு சந்தேகம் கேட்டா சொல்ல மறுக்கறீங்களே டோ ண்டு சார். இங்கிலிசுலேயே வேற பதிவு எழுதறீங்க.
1.புதிய குடியிருப்புகளில் வாழும் சொந்தக்காரார்களால் உருவாக்கப்பட்டு நன்றாக பராமரித்து வரும் இந்து பிள்ளையார் கோவில்களை, வருமானம் கூடிவிட்டது எனக் காரணம் கூறி இந்து அறநிலயத்துறையின் கட்டுப் பாட்டில் எடுப்பதை நிதிமன்றம் மூலம் தடுக்கமுடியாதா?
2. அங்கு பூஜை,புனஸ்காரங்கள் முன்பு நடந்தது போல் இல்லை எனும் காரணத்தை நீதிமன்றம் ஏற்குமா? சட்டம் என்ன சொல்கிறது?சட்டத்தின் முன் அனைவரும் சமாம் என்பது இதில் என்னாயிற்று?
3.அரசால் சர்ச்,மசூதி இவைகளை கைவக்க முடியவில்லையே? மைனாரிட்டி
தரும் சட்ட பலமா?அவர்களின் ஓட்டு பல ஒற்றுமையா?
4.கடவூளை மற,கடவுள் கிடையாது எனும் பகுத்தறிவு கட்சிகளின் ஆட்கள் அறங்காவலராய் அம்ர்ந்து செய்யும் அநீதிகளை கூட தடுக்க முடியாத கையாலாகாத் தனம் எப்போது மாறும்?
5.இந்துக்களில் கடவுள் நம்பிக்கை யுள்ளவர்கள்,கடவுளை பூஷிப்பபவர்கள் இப்போது மிக அதிமாக கோவில்களில் தெரிகிறார்கள்.
தங்களைப் போன்ற பெரியவர்கள், ஆன்மிக வதிகள்,உண்மையான சாமியார்கள்,மத குருக்கள், துணை கொண்டு பக்தியில் பிரகாசிக்கும் பல இனப் பிரிவு ,குறிப்பாக தென் மாவட்டங்களில் நாடார் சமுதாயம்,மேற்கு மாவட்டங்களில் கவுண்டர்,நாயுடு இனம், ஆகியோரின் உண்மை பக்தியை அடிப்படையாக வைத்து வரும் தேர்தலில் எல்லாக் கழகங்களுக்கும் எதிர் வாக்குகள் மூலம் ஒரு அதிச்சி வைத்தியம் கொடுத்தால்
ஒரு நல்ல மாற்றம் வருமா?
-தென்காசி விஸ்வநாதன்
ஜெய் அவர்களே,
அட்சென்ஸில் கணக்கு துவங்கவும். அதற்கு முன்னால் உங்களது இப்போதைய பிளாக்கர் கணக்கிலேயே முதலில் ஆங்கில வலைப்பூ ஒன்றைத் துவக்கவும். அட்சென்ஸில் ஆங்கில வலைப்பூவின் முகவரியை அளிக்கவும். அது ஏற்கப்பட்டதும் தமிழ் வலைப்பூவின் முகவரியையும் அதே கணக்கில் சேர்த்து கொள்ளலாம்.
நேரடியாக தமிழ் வலைப்பூவை வைத்து திறக்க முயற்சி செய்யாதீர்கள். அவர்கள் தமிழை ஏற்க மாட்டேன் என்பார்கள். ஆகவே ஆங்கிலம் வழியாக செல்லவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1.தமிழகத்தில் முதல் நிலை அந்தஸ்து பெற்ற கோவில்களில் பழனி,திருச்செந்தூர் ஆகியவற்றின் ஆண்டு வருமானம் ப்ல லட்சங்கள் எனற் போது அங்குள்ள சீருடைப் பணியாளர்கள் பக்தர்களிடம் காசு கேட்டு கை யேந்துவது ஏன்,நல்ல சம்பளம் கொடுக்கப் படவில்லையா?
இல்லை எல்லோருக்கும் உள்ள் பற்றாக் குறையா?கையூட்டு கைங்கரியங்களும் விடுதிகளில்,சிறப்பு வழிபாடு,பிரசாத ஸ்டால் ஆகியவற்றில் லஞ்சம் போற்றி போற்றி என வேறு அப் பககுதி உழியர்கள் ,திருந்தவே மாட்டார்களா?
2.சரி பாவம் உழியர்கள் தமிழகத்தின் தாரக மந்திரமே கூடி கொள்ளையடி என்று ஆகிவிட பிறகு என்ன சொல்ல.
ஆனால் வேதம் படித்த கடவுள் தண்டிப்பார் என்பதில் நம்பிக்கை உள்ள பரம்பரை முக்காணி ஐயர்களும்
பக்தர்களை ஏமாற்றலாம?
3.இவர்களையெல்லம் கேரள கோவில் களுக்கு refresher training or in service training கொடுத்தால் நல்லது?
4.நமது கோவில்களில் பணம் படைத்தவருக்கு தரப் படும் முன்னுரிமைகள் தேவையா?
5.ஆந்திரா,கர்நாடக,கேரளா கோவில்களில் அனுசரிக்கப் படும் ஆசாரன் ,அனுஸ்டானம், அர்ச்சகர்களின் அர்பணிப்பு,பக்தி பரவசத்தோடு செயல்படும் முழு அன்னதானங்கள் இங்கே வேறுமாதிரி இருப்பதற்கு பகுத்தறிவு அரசியல் கட்சிகளும் காரணமா?
நமது அர்ச்சகர்களே அரசியல் வாதி போல் நடந்தால் ?
<==
சட்டங்களைப் பொருத்தவரையில் எது எங்கே இருக்கிறது என்று அறிந்து, உடனே அந்த இடத்தில் பார்வையை செலுத்தத் தெரிந்தால் போதும்; எல்லாவற்றையும் மனப்பாடம் செய்யத் தேவையில்லை என்ற விஷயத்தையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிறார் அவர்.
==>
அட, இதைத்தான் நாங்க மென்பொருளில் செய்துட்டு வர்ரோம்.(யாருப்பா அது, எது எங்க இருக்குன்னுகூட தெரியாம வர்ரதுன்னு சொல்றது.அதுக்குத்தான் கூகிளாண்டவர் இருக்காரே) இனிமே,யாராவது வேலையே தெரியாம மென்பொருள் வேலைக்கு வந்துர்ரங்கன்னு சொன்னீங்க...பிச்சுப்புடுவோம்
//அட, இதைத்தான் நாங்க மென்பொருளில் செய்துட்டு வர்ரோம்.(யாருப்பா அது, எது எங்க இருக்குன்னுகூட தெரியாம வர்ரதுன்னு சொல்றது.அதுக்குத்தான் கூகிளாண்டவர் இருக்காரே)//
சமீபத்தில் ஐம்பதுகளில் சோ அவர்கள் சட்ட பிராக்டீஸ் செய்தபோது கூகிள், ஈகிள் எல்லாம் கிடையாது என்பதை மனதில் நிறுத்தினால் அவரது கூற்றின் மகத்துவம் இன்னும் நன்றாகப் புரியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
குடும்பத்தினரில் பலர் வக்கீல்கள். ஆகவே இவரும் அந்த தொழிலுக்கு போனதில் ஆச்சரியமே இல்லை//
குலக்கல்வி மெத்தட் ??
//அவர் எப்போது என்ன செய்வார், என்ன சொல்வார் என்பதை கணிப்பது கடினம். அதை அவர் திரும்பத் திரும்ப நிரூபித்து வருகிறார்.//
இந்த கேரக்ட்டர் யாருக்கு இருக்கும்
நல்ல காமெடி பதிவு...நன்றி :))
//நூத்து சொச்சம் பிரதிகள் விற்கும் பத்திரிகை ///
மாயவரத்தான் அவர்களே...
மெய்யாலுமே அதுதான உண்மை...அல்லக்கை சொன்னாலும் சரி நொள்ளக்கை சொன்னாலும் சரி...நாலு கடையில போயி துக்ளக் கொடுங்கன்னு கேட்டா வெளியுலக ஜந்துவை பாக்குறது மாதிரி பாக்குறானுங்க...
ஒருவேளை மைலாப்பூர் வெஸ்ட் மாம்பலம் வாசகர்கள் "சந்தா" கட்டி ஆயிரக்கணக்கா வாங்கிடுறாங்களா ???
///இவர் ஏன் ஜெயலலிதாவிர்க்காக வாதாட கூடாது?///
இந்த தலையில ஹீல்ஸ் பதம் பார்த்தா உள்ளாற வழிஞ்சுக்கிட்டிருக்க மூளையே வெளிய வந்துடும் வாலு...
சோ ராமசாமி அவர்களின் பேரில் , சோ என்பதன் விரிவாக்கம் என்ன விளக்கவும்.( initial இல்லை என்பார்கள்)
திராவிட பெத்தடின் கும்பல் அதனை சோ-மாறி என்று கூறுவது உண்டு. வரவணையானை கேட்கலாம்.
2.இவரைப் போல் சொந்தப் பெயர் கடந்து ஒரெழுத்துப் பெயருடன் பத்திரிக்கை உலகில் பகழ் பெற்றவர் யாரேனும் உண்டா?
இந்த "உலகப்புகழ்" உலகத்திலேயே யாரும் கிடையாது ( அப்ப 'சே' ன்னு ஒரு போராளி இருந்தாரே அவரு ? )
யோவ் தமிழ்நாடு தாண்டினா தெரியுமா இவரை ?
3.ஆங்கிலப் புலமை இருந்தும், வடஇந்திய அரசியல் விமர்சனத்தை தாங்கிய ஆங்கில நாளிதள் தொடங்க ஏன் முயற்சி செய்யவில்லை?செய்து வெற்றி பெற வில்லையா?
யாரு படிக்கறது ? ஒன்னையே தாங்க முடியல.
4.விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து தைரியமாக
(m.g.r ஆட்சி,ஜெயலலிதா அவர்களின் 10 ஆண்டுகால ஆட்சி, கலைஞரின் 10-15 கால ஆட்சி ) விமர்சன்ம் செய்து வரும் சோ போல் வேறு யாரும் இருக்கிறார்களா?
ப.வீ.சிரீரங்கன் என்பவர் இருக்கிறர். அவர் யேர்மனி ஊப்பற்றாலில் இருக்கிறார். அவரை கொல்லப்போவதாக முட்டுக்கடை முருகேசன் சொன்ன வதந்தியை நம்பி எப்படியும் கொல்லப்போறாங்க என்று முக்காலெ மூனுவீசம் நாள் குளிக்காமலே இருக்கிறார் :)))
5.சில அரசியல் கட்சிகளை தீவிரமாக எதிர்த்து விமர்சித்தாதால் ரசயானம் கொண்டு அவர் தலை முடி வளார வண்ணம் செய்தாக ஒரு வதந்தி பரவியது(சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால்) அதில் உண்மை உண்டா?கட்டுக் கதை தான?
இது போன்ற தனிப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை..அடுத்த பதிலை பார்க்கவும்...
6.திரைப் படத்துறையில் "நாகேஸ்" மேல் கோபம் கொண்டு MGR , சோ அவர்களுக்கு தன் படங்களில் முன்னுரிமை வழங்கியும் ,நடிப்புத் திறமை இருந்தும்(நகைச்சுவையில்) பெரிய வெற்றி கிட்டவில்லையே ?(என் அண்ணன்,தேடிவந்த மாப்பிள்ளை,அடிமைப்பெண்,....)
தலைமுடி விரைவாக கொட்டிப்போனது தான் காரணம் :)
7.முகமது பின் துக்ளக் வெற்றி பெற்றது போல் பின்னாளில் வெற்றி தொடராததற்கு" துக்ளக்" பத்திரிக்கையில் ஈடுபாடு காரனாமா?
என்னது வெற்றி பெற்றதா ? யார் சார் சொன்னது ?
8.துக்ளக் பத்திரிக்கையின் விற்பனைச் சரிவு "மாயவரத்தார்" கோபப்படுவது போல் உண்மையா?
உண்மைதான்...மாயவரத்தார் ஒருவேளை விஜயகாந்த் போல புள்ளி விவரத்துடன் வரலாம்...
9.நக்கீரன்,தராசு,நெற்றிக்கண் இவைகளின் செய்தி தரத்தைவிட துக்ளக் நன்றாக இருந்தும் இக்கால தலைமுறையினருக்கு பிடிக்கவில்லையா?
இக்காலத்தலைமுறை எவன் புக்கை விரிச்சு வெச்சு படிக்கறான் ? எல்லாம் கம்பூட்டர், டி.வின்னு பூட்டானுங்க...
10.junior vikatan,kumudam reporter
வாரத்துக்கு இரு முறை வந்து விற்பனையில் சக்கை போடு போடும் போது ,துக்ளக்கு என்ன ஆச்சு ?
கால மாற்றம் காரனாமா?மக்கள் புது trend ஐ விரும்ம்புவதாலா?
(fast-faster-fastest)
அதில் இருக்கும் நச்சு கருத்துக்கள் நாட்டு மக்களில் 1% பேருக்கு பிடிக்குறதுன்னு வெய்யுங்க...
அதுல பாதிபேர் கோயில் குளம் என்று வேலை செய்வதால் அவுங்களுக்கு டைம் இருக்காது...
மீதி படிச்சவங்களும் அமெரிக்கா ஆப்பிரிக்கான்னு பூட்டாங்க...
மீதி இருக்கறது கொழைந்தங்களும் வீட்ல இருக்க லேடீஸும்...
லேடீஸ் வாங்குறது ஆனந்த விகடன்...
கொழைந்தங்க எதுக்குய்யா துக்ளக் வாங்கனும் ???
பி.குறிப்பு: டோண்டு சார், நான் கொஞ்சம் மிமிக்ரை பண்ணிட்டேன்...இதே கேள்விகளுக்கு உங்க பதில்களை எதிர்பார்க்கிறேன்...
செந்தழல் ரவி அவர்களே,
சோ பற்றிய கேள்விகளுக்கு நான் ஏற்கனவே கூறிய பதில்களுக்கான உங்கள் எதிர்வினைகளைத்தான் கூறியுள்ளீர்கள். அவை உங்கள் கருத்து. நான் கூற அதில் ஏதுமில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
செந்தழல் ரவி, துக்ளக் பத்திரிகையை பிராமணர்கள் மட்டும் தான் வாங்குகிறர்கள் என்று எழுதியிருக்கிறர்கள்.
அப்படியெனில் தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுக்க பரவியிருக்கும் அல்லூலுயா கும்பலை நம்பி நீங்கள் ஒரு பத்திரிகை ஆரம்பித்து வெற்றிகரமாக ஏன் நடத்தக் கூடாது? அல்லது அப்படி நடக்கும் ஒரு பத்திரிகையையாவது உதாரணம் கூறுங்களேன்.
Post a Comment