11/07/2008

டோண்டு பதில்கள் 07.11.2008

அனானி (அதாவது இளவேனில்):
please explain in your style:
டோண்டுவின் குறிப்பு: பழமொழிகள் இங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
1. எதையும் ஒத்திப் போடாதீர்கள். ஒத்திப் போடுவதற்கு ஓர் அடிப்படைக் காரணி இருக்கிறது. இது நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். ஒத்திப்போடுவதே நமது வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது.

பதில்: அப்ப்டி ஒரேயடியாகக் கூற இயலாது. நிலைமையைப் பொருத்துத்தான் எல்லாமே. எப்படியுமே செய்ய வேண்டியதை என்னவோ ஒத்திப் போடக் கூடாதுதான்.அதே சமயம், சில விஷயங்களை ஒத்திப் போடலாம். உதாரணத்துக்கு இருவர் சண்டை போடும்போது விஷயம் என்ன என புரிந்து கொள்ளாது ராபணா என மூக்கை விடுவது, பிறகு மூக்கை இழப்பது.

02. வாழ்வில் பயப்படுவதற்கு என்று எதுவும் இல்லை, புரிந்து கொள்வது மட்டுமே இருக்கிறது.
பதில்: இரவில் தெருவில் நடக்கும்போது கீழே கிடப்பது பாம்பு என பயந்து பார்ப்பவன், விளக்கு வெளிச்சத்தில் அது கயிறு என உணர்ந்து, சீ, இதற்கா பயந்தோம் என எண்ணி அதை வேண்டுமென்றே மிதித்து நடப்பதைப் போலத்தான்.

03. நம் இதயம் நம்மை அழைத்து செல்லுகிற வழியை உன்னிப்பாக கவனித்து அதன் வழியில் செல்ல வேண்டும்.
பதில்: உண்மைதான், நமக்கு நல்லது எனப்படுவதை செய்ய வேண்டியதுதான். ஆனால் அதே சமயம் அதனால் உபத்திரவங்கள் வரும்போது அவற்றையும் ஏற்று கொள்வதே சிறப்புடையது. அப்போது பழியை யார் மீதாவது போட நினைப்பது சரியில்லை.

04. ஒரு புதிய மனோபாவத்தை புத்திசாலித்தனமாக மட்டுமல்லாது இதயபூர்வமாகவும் அரவணைத்து செல்லுங்கள்.
பதில்: அதைவிட முக்கியம் புதிய மனோபாவத்தின் சாதக பாதகங்களை உணர்ந்து கொள்வது.

05. மிகவும் திறமையான மாலுமிகளுக்கு காற்றும் அலையும் எப்போதுமே துணையாக இருக்கின்றன.
பதில்: இதில் மறைந்துள்ள உண்மை என்னவென்றால் ஒரு திறமையான மாலுமி எப்படிப்பட்ட அலையையும் காற்றையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள தெரிந்தவன் என்பதே.

06. நம் ஒவ்வொருவருக்கும் உரித்தான தனித்தன்மை மிக்க ஆற்றல் நம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அதுவே நம்முள்ளிருக்கும் ஆக்க சக்தியாகும்.
பதில்: ஆற்றல் மட்டும் போதுமா. அது தேவைப்படும்போது அதை உபயோகித்து காரியம் ஆற்றுவதன்றோ முக்கியம். அனுமனுக்கு வந்த சாபம் அவன் தனது சக்தியறியாமல் போக வேண்டுமென்பது. அவனுடைய சக்தியை எடுத்து கூற ஜாம்பவான் வர வேண்டியிருந்தது. அவன் அனுமனுக்கு அவன் சக்தியை பற்றி எடுத்து கூற அனுமன் சாபம் விலக அவன் கடலைத் தாண்டி இலங்கை செல்ல முடிந்தது.

07. ஆக்கத்திறனே நமது ஆன்மாவிற்கான பிராண வாயு, அது துண்டிக்கப்பட்டுவிட்டால் நாம் காட்டு மிராண்டிகளாகிவிடுவோம். உருவாக்க வேண்டிய விடயங்களை நாம் உருவாக்கியே ஆகவேண்டும்.
பதில்: சும்மா சோம்பி இருக்கலாகாது. ஐ.டி.பி.எல்.-லில் நான் இருந்தபோது ஒரு விஷயம் நடந்தது. எங்கள் ஜி.எம். ஒருவர் தனது 58 வயதில் ஓய்வு பெற்றார். எனக்கு ஒரே ஆச்சரியம். நான் அவரது வயது ஐம்பது இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். இளமை தோற்றம் + சுறுசுறுப்பு நிறைந்த மனிதர். அவருக்கு நல்ல பார்ட்டி கொடுத்து வழியனுப்பினோம். ஒரு மாதம் கழித்து அவர் ஒரு வேலையாக அலுவலகம் வந்தார். எனக்கு ஒரே திகைப்பு. மனிதர் இப்போது 70 வயதினராக தோறம் அளித்தார். அலுப்பு நிறைந்த முகம். முழுத்தலையும் நரைத்திருந்தது. "என்ன சார் உடம்புக்கு" என்று நான் கேட்டேன். "அதெல்லாம் ஒன்றும் இல்லை, மனதுதான் சோர்வாக இருக்கிறது" என்றார் அவர். அப்போது எனக்கு வயது 40. ஒரு நிமிடம் யோசித்தேன், ஏன் இவ்வாறு நடக்கிறது என்று. இந்த மனிதரையே எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு கம்பெனியே சகலமும். எப்போதும் வேலை, வேலை என்று ஆழ்ந்திருப்பார். வீட்டை கவனிக்கக் கூட நேரமின்றி இருந்திருக்கிறார். ஆனால் இப்போது? திடீரென வேலை இல்லை. வேறு பொறுப்புகளும் இல்லை. குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ந்து வேலைக்கு போயாயிற்று. இவரது தேவை குடும்பத்துக்கு இல்லை. ஆகவே தான் உபயோகமற்றவனாகி விட்டோம் என்ற காப்ளக்ஸே அவருக்கு வந்திருக்கிறது. சட்டென்று முதுமை தாக்கி விட்டது.

08. ஒருமித்த கவனத்துடன் எடுத்து வைக்கும் சின்னச் சின்ன அடிகள் இறுதியில் ஒரு பெரிய இலக்கையே தொட வைக்கும்.
பதில்: சமீபத்தில் 1973-ல் ஒரு டாகுமெண்டரி படம் பார்த்தேன். நாளை நாளை என வேலையைத் தள்ளிப் போட்டதி கோப்புகள் மலைபோல மேஜை மேல் குவ்ந்திருக்கின்றன. முதலில் மலைப்பாக உணர்ந்தவன் சரி எங்கிருந்தாவது ஆரம்பிப்போம். உதாரணத்துக்கு இக்கடிதத்துக்கு பதிலெழுதிடுவோம் என நினைத்து ஆரம்பிக்கிறான். பிறகு ஒவ்வொன்றாக வேலைகளை செய்ய ஆரம்பிக்க, திடீரென அச்சமயத்துக்கு செய்வதற்கான வேலைகள் ஒன்றுமே மிஞ்சவில்லை என்பதை கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறான். நீங்கள் கூறியது எனக்கு இதை நினைவுபடுத்தியது.

09. ஆயிரம் மைல் பயணம் என்பது முதலாவது அடியில் இருந்தே ஆரம்பிக்கிறது.
பதில்: மேலே சொன்ன பதில் இங்கும் பொருந்தும்

10. வாழ்க்கையின் ஓட்டத்தை வேகப்படுத்துவதை விட முக்கியமான விடயங்கள் அதிகமுள்ளன.
பதில்: அதானே, வாழ்க்கை தானாகவே ஓட்டமாக ஓடிவிடும்போது நாம் என்ன அதை வேகப்படுத்துவது?

11. மற்றவர்களுக்கு நமது மனக்கதவுகளை மூடிவிடக் கூடாது. அப்படி மூடினால் அதனால் பாதிக்கப்படப் போவது நாமேதான்.
பதில்: கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும். கேட்டால் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். கேட்காவிட்டால் நிச்சயமாகக் கிடைக்காது. அப்படிக் கிடைப்பது எல்லாம் அம்புலிமாமா கதைகளில்தான் சாத்தியம்.

12. ஒருவர் நமக்கு அருமையான நண்பராக இருக்கலாம், அதற்காக அவர் நமது கொள்கையை உடையவராக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கக் கூடாது.
பதில்: ஏனெனில் அந்த அருமையான நண்பரும் நம்மைப் பற்றி அப்படியே எதிர்பார்ப்பார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

13. நமக்குள் ஒலிக்கும் குரலை எந்தளவுக்கு உன்னிப்பாக கவனிக்கிறோமோ அதுபோலவே வெளியே கேட்கும் குரலையும் கவனிக்கிறோம்.
பதில்: வெளியேயிருந்து என் வீட்டம்மாவின் குரல் “இன்று காலை ஏழரை மணிக்கு மின்வெட்டு வரும்” எனக் கூறுகிறது. உள்ளிருக்கும் முரளி மனோஹரின் குரலோ “அதற்குள் என்ன தட்டச்சு செய்ய முடியுமோ அதை செய்து தொலை டோமரு” என்று இடித்துரைக்கிறது. ஆகவே நான் இப்போதைக்கு எஸ்ஸாகிறேன், இக்கேள்வியிலிருந்து.

14. உங்கள் எதிர்காலத்தை நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக எதிர் பார்க்கிறீர்களோ அதுபோலவே உங்கள் கடந்த காலத்தையும் திரும்பிப் பாருங்கள்.
பதில்: அந்த நாளும் வந்திடாதோ

15. உங்களுக்குள்ளேயே நீங்கள் சொல்லிக்கொள்ள வேண்டிய வல்லமை தரும் பத்து செய்திகள்.
டோண்டுவின் குறிப்பு: உதாரணங்கள் அல்பமாகவும் மொக்கையாகவும் இருப்பது வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் பிராக்கெட் போடுவதில் ஊக்கம் கொண்டிருக்கும் பலருக்கு அது உண்மையே. பதில்கள் அவர்களுக்கு சமர்ப்பணம்.
அ. உங்களுடைய உள்ளுணர்வுகளை நம்புங்கள்.

பதில்: அந்தப் பெண் ஒத்துவரமாட்டாள். ஆகவே அவளை விட்டு வேறு பெண்ணுக்கு பிராக்கெட் போடு என்று உங்கள் உள்ளுணர்வு கூறினால் அவ்வாறே செய்வது நலம்.
ஆ. உங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயற்படுங்கள்.
பதில்: முடிந்த அளவுக்கு பிராக்கெட் போட்டீர்கள். பலன் இல்லையென கவலைபடாதீர்கள் என்று ஓரிடத்தில் கூறியதை ஒருவர் நினைவுகூர்ந்து மேலே போட வேண்டிய பிராக்கெட்டுகளை வரிசைப்படுத்தி அவற்றுக்கான முன்னுரிமையுடன் கவனிக்கவும்.
இ. உங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதங்களைக் கணக்கிடுங்கள்.
பதில்: இவ்வளவு முனைப்பாக பிராக்கெட்டுகள் போட்டதில் எவ்வளவு சினேகிதங்கங்கள் கிடைத்தன!
ஈ. குறைவே நிறைவு.
பதில்: ஆம். இவ்வளவு பிராக்கெட்டுகள் போட்டும் பலனில்லையே என நோவதை விடுத்து மேலே பிராக்கெட்டுகள் போட வாய்ப்பிருக்கிறதே என்பதை எண்ணும்போது இக்குறைவுதான் நிறைவு.
உ. உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள்.
பதில்: அப்போதுதான் அடுத்து யாருக்கெல்லாம் பிராக்கெட் போடுவது என்பதை தீர்மானிக்கலாம்.
ஊ. அடிக்கடி பிறரை அங்கீகரியுங்கள்.
பதில்: முக்கியமாக நீங்கள் பிராக்கெட் போடும் பெண்களை. அப்போதுதான் அவர்கள் உங்களை அங்கிகரிக்க கூடும்.
எ. தேவைப்படும்போது உதவி கோருங்கள்.
பதில்: பிராக்கெட் விஷயத்தில் தோழனிடம் உதவி கோரலாம், ஆனால் அதே சமயம் இதே விஷயத்தில் அவன் உங்களது உதவியைக் கோரும்போது மறக்காமல் உதவி செய்யவும். அப்போது மட்டும் புத்தராக அவதாரம் எடுத்து போதிக்கலாகாது.

ஏ. தீர்வுகளில் கவனம் செலுத்துங்கள்.
பதில்: பிராக்கெட் போடப்படும் ஃபிகரின் சில்வஸ்டர் ஸ்டால்லோன் போன்ற அப்பனோ அண்ணனோ முறைமாமனோ என்று யாராவது வந்து தொலைத்தால் எஸ்ஸாகி ஓடும் வழிகளை தீர்மானித்து வைத்து கொள்ளவும்.

ஐ. எல்லாவற்றையும் தீர்மானிப்பது மனோபாவமே.
பதில்: போனால் போகட்டும் போடா என்றிருந்தால்தான் அடுத்த பிராக்கெட்டில் மனதை ஈடுபடுத்த இயலும்.

ஒ. நின்று நிதானித்து ரோஜாக்களின் நறுமணத்தை நுகருங்கள்.
பதில்: அப்போதுதான் நீங்கள் பிராக்கெட் போடும் பெண் உங்கள் கலையுணர்ச்சியை அறிந்து கொள்வாள்.

16. உங்கள் மனதில் பதிந்திருப்பதைத்தான் உருக்கொடுத்து வெளிப்படுத்துகிறீர்கள்.
பதில்: “கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா அல்லது ஓடிப் போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா” என வடிவேலு ஒரு படத்தில் பார்த்திபன் கூறுவதை ஏற்று பஸ் ஸ்டாண்டில் உள்ள மஞ்சள் உடை அணிந்த ஃபிகரைப் பார்த்து பாட, அவர் பெண் போலீசாக மாறிய சோகம் பார்த்துமா இக்கேள்வி தேவை?

17. நமக்கு வேண்டியதைக் கேட்பது என்பது நாம் வல்லமை பெற வேண்டியதற்கு உதவும் கலையாகும்.
பதில்: பிராக்கெட் போடப்பட்ட பெண் அதற்காக செருப்பால் அடித்தால் அதைத் தாங்கும் வல்லமையும் நீங்கள் சொல்லும் வல்லமையில் அடக்கம்.

18. உங்கள் ஆசைகளை நிறைவேற்றவே இந்த உலகில் உள்ள பஞ்ச பூதங்களும் காத்துக் கிடக்கின்றன.
பதில்: “ஆமாம், சீக்கிரம் என்ன ஆசை என்பதை சொல்லித் தொலை. எங்களுக்கு வேண வேலைகள் உள்ளன” என்று அதே பஞ்ச பூதங்கள் கூறுவதாக கேள்வி.

19. வெளிச்சத்தை பிரதிபலிக்க இரண்டே வழிகள்தான் உண்டு ஒன்று நாம் மெழுகுவர்த்தி போல விளக்காக இருக்கலாம் இல்லை அதன் ஒளியை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கலாம்.
பதில்: அதாவது நாமே நொந்து நோம்பு நூக்கலாம் அல்லது நோகாமல் நோம்பு நூக்கலாம்.

20. உங்களுக்குள் இருந்து தானாக வெளிப்படும் மாய சக்தியும் அது தரும் தீர்வும்தான் உங்களுக்கு மகத்தான வெற்றியை பெற்றுத் தருகிறது.(compiled -courtesy-elavenil)
பதில்: ரொம்பவும் முனைந்து பெற்ற இக்கேள்விகளும் உங்களுக்குள் இருந்த அந்த மாபெரும் சக்தியின் வெளிப்பாடுதானோ இளவேனில்?


பாண்டிய நக்கீரன்:
1. தேவர் ஜெயந்தி கொண்டாட்டம் (101) பற்றி?
பதில்: வெறும் ஓட்டு வேட்டை அரசியல்.

2. ஜெயலலிதா அம்மையார் மீது தாக்கியது பற்றி?
பதில்: கண்டிக்கத்தக்கது.

3. ஸ்டாலின் திடீர் பிரார்த்தனை பற்றி?
பதில்: எங்கு பிரார்த்தனை, யாரிடம் பிரார்த்தனை? என்ன பிரார்த்தனை? யாருக்கு மொட்டை?

4. அழகிரி வராதது பற்றி?
பதில்: அவர் மனதில் என்ன ஓடுகிறதோ அவருக்கே அது வெளிச்சம்.

5. வைகோவின் சிறை வாசம் (சாமான்ய நிலை)பற்றி?
பதில்: அவரது ராசி அப்படி. வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல் ஏதாவது பேசி தொந்தரவுக்குள்ளாவதே அவர் வேலையாகிப் போயிற்று. தமிழீழம் வந்து பிரபாகரன் ஆட்சிக்கு வந்தாலும் அங்கு போய் ஏதாவது பேசி, அங்கும் சிறைப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

6. கலைஞர் அவ்ர்களின் நிதி திரட்டல் பற்றி?
பதில்: கீழே கேட்கப்பட்டுள்ள பத்தாம் கேள்வியே இதற்கு விடை.

7. விஜய்காந்த் மெளனம் (இலங்கை விவகாரம்) பற்றி?
பதில்: நிலையை அவதானம் செய்கிறாரோ?

8. தா.பாண்டியன் அணுகுமுறை (opposite view of cpim) பற்றி?
பதில்: இலங்கை இடியாப்பச் சிக்கலில் மற்றுமோர் சிக்கல்.

9. திரையுலகினரின் தாராள மனது பற்றி?
பதில்: ரொம்பத்தான் தாராளம். கவுதமி ஆஆஆயிரம் ரூபாய் தந்தாராமே.

10. மின்தடை விவகாரம் திசை திருப்பட்டது பற்றி?
பதில்: இக்கேள்வியே ஆறாம் கேள்விக்கான விடையானது விந்தை.


அனானி (02.11.2008, பிற்பகல் 01.03-க்கு கேட்டவர்):
1. are we heading towards " usa fall""
பதில்: நிலைமை அவ்வளவு மோசமாகாது. வரவுக்குள்ளேயே செலவழிக்க வேண்டும், சேமிக்க வேண்டும் என்னும் கொள்கைகள் இந்தியர்களிடம் இன்னமும் அதிக அளவில் உள்ளதால் சமாளிக்க இயலும்.

2. are medias and oppsite parties playing politics in this case also. please clarify whether we are safe or not?
பதில்: அதெல்லாம் செய்தால்தான் அவை எதிர்கட்சிகள். மீடியாவுக்கு தனது சர்குலேஷன் முக்கியம்.

3. staff cuts are under consideration
பதில்: எதிர்பார்க்க வேண்டியதுதான். அப்படியே இல்லாவிட்டாலும் சம்பளக் குறைவு நிச்சயம்.

4. real estate is becomming tight
பதில்: ஒரு தேக்க நிலைதான். அவசரத்துக்கு நிலங்களை விற்க முடியாது. பலருக்கு வேலை பறிபோவதால் அவர்களால் விலை குறைந்தாலும் வாங்க இயலாது. ஆக இழுபறியாகத்தான் நிலைமை இருக்கும்.

5. share market is suffocating
பதில்: சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.

6. it/bpo sector are finding ways to maitain their position
பதில்: வேறு வழி? அபரித, டாம்பீக செலவுகளை குறைப்பது முக்கியம். புது வாடிக்கையாளர்களை தேடி பிடிக்க வேண்டும். நல்ல வேலைக்காரர்களை இழக்கலாகாது. கம்பெனிகளில் உள்ள எச்.ஆர். பிரிவினருக்கு தலைவலிதான்.

7. staff intake is in question
பதில்: நல்ல வேலைக்காரர்களுக்கு எப்போதுமே தேவை உண்டு. சகட்டு மேனிக்கு ரெக்ரூட் செய்வதென்னவோ நிற்க வேண்டியதுதான்.


நக்கீரன் பாண்டியன்:
1. நடிகர் ரஜினியின் பேட்டி பார்த்தீர்களா (சன் டீவி)?
பதில்: பார்க்கவில்லை. இணையத்தில் சுட்டி தேடினேன், கிடைக்கவில்லை. குமுதம் ரிப்போர்டரில் வந்ததை எனது பதிவாகப் போட்டுள்ளேன். ஒரு வேளை அதைத்தான் குறிப்பிடுகிறீர்களா?

2. அவரை அரசியலுக்கு இழுக்காமல் அவரது ரசிகர்கள் விடமாடார்கள் போலிருக்கே?
பதில்: மாட்டிக் கொள்ளாமல் இருப்பது ரஜனியின் சாமர்த்தியம்.

3. விஜய் ராஜேந்தரை மட்டும் உண்ணாவிரதத்தில் காணோம் என்பது?
பதில்: என்ன, அவர் வரவில்லையா? நான் கவனிக்கவில்லையே.

4. இலங்கை நிதிக்கு மிகச் சொற்ப அள்வில் நன்கொடை கொடுத்துள்ள நடிக /நடிகர்?
பதில்: அதுவும் உரியவருக்கு போகுமா என்ற நிலை தெரியாதபோது வேறு என்ன எதிர்பார்ப்பது?

5. அஜித்துக்கு என்னாஆச்சு?சபை அறிந்து பேசும் ஆற்றல் சுட்டு போட்டாலும் வராது போலுள்ளதே?
பதில்: அவர் வந்ததே நிர்பந்தத்தில்தான் என்ற போது அவர் வேறு என்ன பேசியிருந்தாலும் பிரச்சினை ஆகியிருக்கும்.

6. ரஜினியின் பாராட்டு சத்யராஜின் பேச்சு பற்றி?
பதில்: Damage limiting exercise?

7. நக்கலா, பாராட்டா? பயமா?
பதில்: பயம் கலந்த மரியாதை?

8. ச.குமார் அரசியல் வியாபாரம் எடுபட்டது மாதிரி தெரியவில்லையே?
பதில்: சித்தப்பாவை (சித்தியின் கணவரை) விட்டு விடுங்கள் பாவம்.

9. அரசு டீவி-சன் டீவி விவகாரம் எந்த நிலையில் உள்ளது?
பதில்: டி.டி.எச். வந்து விடும் போலுள்ளதே.

10. அரசுப் போக்குவரத்துத்துறை களை கட்டுவது போலுள்ளதே?
பதில்: களையா கல்லாவா?


அனானி (05.11.2008, காலை 05.34-க்கு கேட்டவர்):
1. please explain mouse test(எலிக்குட்டி சோதனை)
பதில்: இது பற்றி நான் பல தருணங்களில் பல பதிவுகள் போட்டுள்ளேன். “போலி டோண்டு” என்னும் லேபலின் கீழ் நீங்கள் அவற்றைப் பார்க்கலாம்.


நக்கீரன் பாண்டியன்:
1. இவ்வளவு ஏற்பாடும் "எந்திரன்" என்ற படத்துக்குக்காக என்பதை பார்க்கும் போது?
பதில்: என்ன சும்மாவா? எவ்வளவு கோடியை விட்டுள்ளார்கள்?

2. ரஜினியின் பேட்டிக்கு எதிர் பேட்டி கொடுக்க சீமான் முயற்சியை பாரதிராஜா தடுத்து விட்டார் போலுள்ளதே?
பதில்: அப்படியா? இது எனக்கு புதிய செய்தி. எங்கு படித்தீர்கள் இதை?

3. அஜித்துக்கு எப்படி பேசவேண்டும்,நடக்கவேண்டும் என அறிவுரை கூறும் ரஜினி தன் விசயத்தில்?
பதில்: சாதாரணமாக ஊருக்குத்தான் உபதேசம் என்பார்கள்.

4. ராகவேந்திரா மண்டப விவகாரத்தில் கலைஞரிடம் நன்றிக் கடன் பட்டுள்ளதாகவும் எனவே அவரது வாழ்நாள் உள்ளவரை அரசியலுக்கு no உண்மையா?
பதில்: அப்படி இல்லை என்றுதான் நினைக்கிறேன். ரஜனி சொந்த குழப்பத்தால்தான் இதுவரை அரசியல் பிரவேசம் பற்றி முடிவு எடுக்கவில்லை. இப்ப அது டூ லேட்னு நான் நினைக்கிறேன்.

5. அவரை கடுமையாய் எதிர்த்த மருத்துவர் ஐயா இப்போது வெகுவாய் பாராட்டுகிறாரே?
பதில்: இப்போது மருத்துவர் உள்ள நிலையில் அவர் பாடே அவருக்கு பெரிதாக இருக்கும்போது தேவையின்றி ஏன் பிரச்சினைகளை வளர்க்க வேண்டும் என நினைக்கலாம் அல்லவா?

6. திரைப்படக் கலைஞர்கள் உண்ணாவிரத்தை படம் ஓடவேண்டும் என்னும் காரணத்துக்காகத்தான் என்று சொன்னது அடுத்த பிரச்சனை ஆகிவிடுமா?
பதில்: யாருடைய படம்? இது என்ன புதுக்கதை?

7. சத்யராஜிக்கும் ரஜினிக்கும் என்ன பிரச்சனை?
பதில்: கண்டிப்பாக அடுத்த உலக அழகி யார் என்பதில் பிரச்சினை இருக்க வாய்ப்பில்லை.

8. நடிகர்கள் உண்ணாவிரதத்தில் ரஜினியின் பாராட்டு. சத்யராஜைப் பார்த்து பயந்தா? நக்கலா?
பதில்: இதே மாதிரி கேள்விக்கு மேலேயே பதில் சொல்லி விட்டேன்.

9. சோவின் ஆலோசனைப் படி ரஜினி நடக்கிறார் என்ற செய்தி உண்மையா?
பதில்: அப்படி சோவின் ஆலோசனையைக் கேட்டிருந்தால் 1996-லேயே அரசியலுக்கு வந்திருப்பார். தற்சமயம் சோ அவருக்கு ஆலோசனை ஏதும் சொல்லவில்லை என்றுதான் படுகிறது.

10 சுப்பிரமணிய சாமியும் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு முயற்சி செய்தாரே?
பதில்: எப்போ?


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10 comments:

Madhu Ramanujam said...

//ஸ்டாலின் திடீர் பிரார்த்தனை பற்றி?
பதில்: எங்கு பிரார்த்தனை, யாரிடம் பிரார்த்தனை? என்ன பிரார்த்தனை? யாருக்கு மொட்டை?//

நல்ல காமெடி!

ரமணா said...

149,148,147.....................1



3,00,000

பாராட்டுக்கள்

வாழ்த்துக்கள்

dondu(#11168674346665545885) said...

//149,148,147.....................1//

இப்போதைய நிலைமை காலை 9.09 மணிக்கு:
111, 110, 109, 108, ..............1

நன்றி ரமணா அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//ஸ்டாலின் திடீர் பிரார்த்தனை பற்றி?
பதில்: எங்கு பிரார்த்தனை, யாரிடம் பிரார்த்தனை? என்ன பிரார்த்தனை? யாருக்கு மொட்டை?//
இந்த வார ஸ்டார் குறியீடு தகுதிக்கான பதில் .
நானும் இந்த பதிலை ரசித்தேன் !

வால்பையன் said...

அரசியல் சம்பந்தபட்ட கேள்வி பதில்களை ரசித்தேன்

Anonymous said...

10,9,8,7,6,5,4,3,2,1

Advance Congrats

Ramakrishanahari

thenkasi said...

தடைகள் பல கடந்து தொடர் சாதனை
தொடர வாழ்த்துக்கள்.

3,00050 லிருந்து 4,00,000 நோக்கிய வெற்றிப்பயணம் 31.12.2008க்குள் பெரும் வெற்றி பெற்றிட, காக்கும் பெருமாளின் அருள் கிடைத்திட வணங்கி வாழ்த்தும்

Anonymous said...

valakkam pola aruvai

Anonymous said...

// Anonymous said...
valakkam pola aruvai

November 07, 2008 3:41 PM



Today the blog of dondu sir has got 3,00,000 hits.

All are congratulating Sri.Dondu Ragavan for this golden day on this special occasion.( more than 1000 hits on the same day)

The answers of dondu sir is excellent.

You are having liberty to make the dondu's question answer(14-11-2008) ,
a
memorable,
lovable,
adorable,
remarkable,
notable,
pleasurable,
enjoyable,
delightful
and
entertaining
one.

please do it sir.

Thanking you in anticipation.

Anonymous said...

//ஸ்டாலின் திடீர் பிரார்த்தனை பற்றி?
பதில்: எங்கு பிரார்த்தனை, யாரிடம் பிரார்த்தனை? என்ன பிரார்த்தனை? யாருக்கு மொட்டை?//

டோண்டு அய்யா,

மஞ்ச துண்டு கும்பல் பிரார்த்தனை பலித்தால்,மற்றவர்களுக்கு மொட்டை அடிப்பதாக வேண்டிக்கொள்வார்கள் என்ற உண்மையை காஷுவலாக சொல்லியிருக்கிறீர்கள்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது