ரீடிஃப்-ல் சோ அவர்கள் அளித்த பேட்டியின் தமிழாக்கம் இது. நன்றி ரீடிஃப். ஓவர் டு ரீடிஃப். (மொழி பெயர்ப்பு: டோண்டு ராகவன்)
துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் இந்தியாவின் மிகவும் மரியாதைக்குரிய அரசியல் ஆய்வாளர்களில் ஒருவர்
அவர் தனக்கே உரித்தான முறையில் ஷோபா வாரியருடன் ஸ்ரீலங்கா பிரச்சினை பற்றியும் புலிகள் பற்றியும் பேசுகிறார்.
கேள்வி: திடீரென தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சிகளும் ஒட்டுமொத்தமாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஏன் இத்தனை ஆர்வம் காண்பிக்கிறார்கள்?
பதில்: முதலில் கம்யூனிஸ்டுகளிடம் இது ஆரம்பித்தது. அவர்களுக்கு தமிழகத்தில் பேச வேறு விஷயங்கள் இல்லை. அணுசக்தி ஒப்பந்தத்தில் மக்களின் கவனத்தைத் திருப்ப இயலாது. இத்தனை நாட்களாக மத்தியில் காங்கிரசையும் மாநிலத்தில் திமுகவையும் ஆதரித்து வந்துள்ளனர். இப்போது இப்பிரச்சினை அவர்களிடம் சிக்கியது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே.
ஜெயலலிதா உடனேயே மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். வைக்கோ அதை எப்போதுமே செய்து வந்துள்ளார். அவரை மிஞ்சுவதற்காக ராமதாசும் பேச வேண்டியதாயிற்று. இவ்வளவு நடந்த பிறகு கருணாநிதியால் எவ்வாறு சும்மா இருக்க இயலும்? தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கெல்லாம் தான் தலைவர் என சொல்லிக் கொள்கிறவர் அல்லவா அவர்? அதனால்தான் அவர் இவ்வாறெல்லாம் செயல்பட வேண்டியுள்ளது.
அவருக்கு அத்தனை அக்கறை இருந்தால் தனது அரசின் ராஜினாமாவை சமர்ப்பித்து சட்டசபையைக் கலைக்கச் பரிந்துரை செய்து தான் மக்களிடம் போகப் போவதாகச் சொல்ல வேண்டியதுதானே. அவர் அவ்வாறு செய்யவில்லை.
மாநில அனைத்து கட்சிகள் தீர்மானத்தில் காங்கிரசுக்கும் பங்கு உண்டு என்பது தெரிந்ததே. காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் மத்திய அரசை கவிழ்ப்பதாகக் கூறி பயமுறுத்துவார்கள் என யாரும் நினைத்து பார்த்திருக்க முடியாது!
கேள்வி: தமிழக மக்களுக்கு புலிகள்பால் அனுதாபம் இருக்கிறது என நினைக்கிறீர்களா?
பதில்: புலிகள்பால் அனுதாபம் இல்லை. இலங்கைத் தமிழர்கள்பால் இருக்கலாம். ஆனால் அதை ஒரு தேர்தல் பிரச்சினையாக பார்க்கும் அளவுக்கு அது இல்லை. அதன் மேல் மக்கள் ஓட்டளிக்குக் நிலையில் இல்லை.
பதில்: எந்த அளவுக்கு அவர்களுக்கு இலங்கைத் தமிழர்கள் மேல் அனுதாபம் உண்டு?
இலங்கைத் தமிழர்கள் அமைதியான சூழ்நிலையில் சம உரிமை அடிப்படையில் சிங்களவர்களுடன் வாழ வேண்டும் எனத் தமிழ் நாட்டினர் விரும்புவார்கள். புலிகளை கடுமையாக விமரிசனம் செய்யும், புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கைகளில் தலையிடுவதை தீவிரமாக எதிர்க்கும் நானே இந்திய-ஸ்ரீலங்கா ஒப்பந்தம் செயலாக்கப்பட வேண்டும் என கூறி வருகிறேன்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழர்களுக்கு சுயாட்சி கிடைக்கும், சிங்களவர்களுடன் சம உரிமையோடு அமைதியாக வாழ இயலும். இது மிகவும் நல்ல விஷயமாக இருக்கும். இந்த ஒப்பந்தம் நிறைவேறாமல் போனதற்கு புலிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.
கேள்வி: புலிகள் அதிகாரம் செலுத்தும் பகுதிகளை இலங்கை ராணுவம் கைப்பற்றும் என நினைக்கிறீர்களா? இலங்கை அரசு அதை மிக விரைவில் செய்யப்போவதாகக் கூறுகிறது. ஆனால் நான் பழநெடுமாறனுடன் இது பற்றிப் பேசும்போது இலங்கை அரசு புருடா விடுவதாகக் கூறினார்...
பதில்: அங்கிருப்பது யுத்தச் சூழ்நிலை. அதில் இரு தரப்பினருமே பிரசாரத்தில் ஈடுபடுவர். அங்கு கிடைப்பது செய்தி அல்ல, பிரசாரம்தான். ஆகவே, இலங்கை அரசானாலும் சரி புலிகளானாலும் சரி அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்க இயலாது. உண்மை எங்கேயோ நடுவில் உள்ளது. அல்லது அவர்கள் இருவரில் ஒருவர் கூறியது முழு உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் நமக்கு அது நிச்சயமாக்த் தெரியாது.
ராணுவம் முன்னேறுகிறது என்பதில் ஐயமில்லை. புலிகளுக்கு இழப்புகள் உண்டு. ஆனால் முன்னமும் இம்மாதிரி நடந்துள்ளது. இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது. ஆனால் அதனால் விவகாரம் முடிந்து விடவில்லை. எனக்கு உண்மை நிலவரம் தெரியாது. ஆகவே ராணுவத்தின் கை ஓங்கியுள்ளது, புலிகள் தோற்கின்றனர் என ஒட்டுமொத்தமாகக் கூற நான் தயாராக இல்லை. ஆனால் அது நடக்க வேண்டும் என விரும்புகிறேன்
கேள்வி: சர்வதேசத் தடைகளால் புலிகளுக்கு எந்தளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது?
பதில்: புலிகளுக்கு பாதிப்பு நிச்சயம் ஏற்பட்டுள்ளது. பணம் மற்றும் ஆயுதங்கள் பெறுவதில் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கேள்வி: வடக்கு பகுதியைக் கைப்பற்றியவுடன் அரசியல் தீர்வு காணப்படும் என மஹிந்த ராஜபக்சே கூறுகிறாரே. அவரை நீங்கள் நம்புகிறீர்களா?
பதில்: அங்குள்ள தமிழர்களின் நலனுக்காக புலிகள் செயல்படுவதாகக் கருதப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை. எது எப்படியானாலும் அங்கு அவர்கள் பிரதிநிதிகளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஏனெனில் மற்ற எல்லா பிரதிநிதிகளையும் அவர்கள் கொன்று விட்டார்கள். மற்ற எல்லா மிதவாத, தீவிரவாதத் தலைவர்களை கொன்றது அவர்களே, இலங்கை அரசு அல்ல. ஆயிரக்கணக்கான தமிழர்களை அவர்கள் கொன்று குவித்துள்ளனர். தாங்கள்தான் ஒரே பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை செய்தனர். பெருமளவுக்கு இதை அவர்கள் நிறைவேற்றவும் செய்தனர் .
ஆகவே, புலிகள் கிட்டத்தட்ட ஒடுக்கப்பட்டு ராணுவ ரீதியாகச் செயலிழக்கச் செய்யப்பட்டவுடன் -- கொல்லப்பட்டு என்ற அளவுக்கு நான் சொல்ல மாட்டேன் ஏனெனில் அங்கு அவர்கள் பல காலமாக இருக்கின்றனர் -- இந்தியா தலையிட வேண்டும். அந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேச வேறு யாரும் இருக்க மாட்டார்கள்
இந்தியா தலையிட்டு ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை அமுலுக்கு கொண்டுவர இலங்கை அரசைக் கட்டாயப்படுத்த வேண்டும். அங்கு ஒரு சமஷ்டி அரசு நிறுவப்பட்டு தமிழர்கள் சிங்களவர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும்.
கேள்வி: அவ்வாறு இந்தியா தலையிட்டால் இலங்கை அரசு அது தனது உள்விவகாரம் எனக் கூறினால்?
பதில்: இந்தியாவுக்கு தான் சொல்வதை நிறைவேற்ற தேவையான செல்வாக்கு உண்டு. முன்னமும் இதைத்தான் கூறினார்கள், ஆனால் ஒரு இலங்கை ஜனாதிபதி இந்திய அமைதிப் படையை அனுப்புமாறு கோர வேண்டியிருந்தது.
கேள்வி: கருணா வெளியேறியதால் புலிகள் எந்த அளவு பலவீனம் அடைந்துள்ளனர்?
கிழக்கில் பலவீனம் அடைந்ததில் சந்தேகம் இல்லை. வடக்குப் பகுதிகளில் அவ்வளவாக இல்லை. இந்தக் கடினமான சூழ்நிலையிலும் கிழக்கு பகுதியில் தமிழர் ஒருவர் தலைமையில் தற்காலிக அரசு அமைப்பதில் இலங்கை அரசு வெற்றியடைந்துள்ளது. இதில் ராஜபக்சேவின் பங்கை ஒத்து கொள்ள வேண்டும்.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு நிஜமாகவே அக்கறை இருந்தால் அவர்கள் சண்டை நடக்கும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வேறு இடங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறு பிரபாகரனை வற்புறுத்த வேண்டும். இப்போது என்ன நடக்கிறதென்றால் பொது மக்களை புலிகள் தங்களுக்கு கவசமாக பயன்படுத்தி வருகின்றனர். இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கைகளை மக்கள் கொலையாக (genocide) சர்வதேச அரங்கில் காட்டுவதே புலிகளின் இச்செயல்பாட்டின் நோக்கம். இது மக்கள் கொலை அல்ல.
இதை மக்கள் கொலையாக வர்ணிப்பது பிதற்றல் என அறிக்கை கொடுத்துள்ளார் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் ஆனந்த சங்கரி. புலிகள்தான் பொதுமக்களை பத்திரமான இடங்களுக்கு செல்லவிடாமல் தடுக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆகவே தமிழக கட்சிகள் பிரபாகரனிடம்தான் தங்கள் கோரிக்கையை வைக்க வேண்டும். மத்திய அரசிடமோ இலங்கை அரசிடமோ அல்ல.
கேள்வி: பிரபாகரனிடம் அவர்களுக்கு இம்மாதிரி கோரிக்கை வைக்கும் அளவுக்கு செல்வாக்கு உண்டா?
பதில்: இல்லை என நினைக்கிறீர்களா? அதிமுக மற்றும் காங்கிரசைத் தவிர்த்து மீதி எல்லோரிடமும் அம்மாதிரி செல்வாக்கு உண்டு. வைக்கோ, திருமாவளவன், ராமதாஸ் மற்றும் திமுகாவுக்கு அதிகமாகவும் மற்றவர்க்கு சற்றே குறைவாகவும் செல்வாக்கு உண்டு.
இலங்கைத் தமிழர்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் அம்மாதிரி கூற வேண்டும். அதன்றி பிரபாகரன் மேல்தான் அக்கறை என்றால் இப்போது செயல்படுவது போலத்தான் செய்ய வேண்டும், செய்கிறார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர், கே.சச்சிதானந்தன்
-
மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன் 2024 விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு
விருந்தினராகக் கலந்துகொள்கிறார். கே.சச்சிதானந்தன் – தமிழ் விக்கி
சச்சிதானந்தனை வாச...
23 hours ago
35 comments:
சோவின் பேட்டி இன்றய இலங்கைப் பிரச்ச்னையை தெளிவாய் படம் பிடித்துக்
காட்டுகிறது.
வலைப்பூவில் படித்தால் ஒரே குழப்பமாய் இருக்கும் சமயத்தில் ஒரளவுக்கு தெளிவு எல்லோருக்கும்
அதுவும் போரில் யார் முன்னனி என்பதற்கு சோ அவர்களின் வெளிப்படையான பதில் அவரது விமர்சகர்களையும் பாராட்ட வைக்கும்.
டோண்டு சார் இது என்ன?
"ரீடிஃப்-ல் சோவின் செவ்வி"
செவ்வி என்றால் பேட்டி என்று பொருள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஆகவே ராணுவத்தின் கை ஓங்கியுள்ளது, புலிகள் தோற்கின்றனர் என ஒட்டுமொத்தமாகக் கூற நான் தயாராக இல்லை. ஆனால் அது நடக்க வேண்டும் என விரும்புகிறேன்//
is this really good for the tamils?
//
is this really good for the Tamils?//
Yes. In the immediate future, it will be good at least for the innocent Tamils being used by Tigers as human shield against their will.
Regards,
Dondu N. Raghavan
//இலங்கைத் தமிழர்கள் அமைதியான சூழ்நிலையில் சம உரிமை அடிப்படையில் சிங்களவர்களுடன் வாழ வேண்டும் எனத் தமிழ் நாட்டினர் விரும்புவார்கள். புலிகளை கடுமையாக விமரிசனம் செய்யும், புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கைகளில் தலையிடுவதை தீவிரமாக எதிர்க்கும் நானே இந்திய-ஸ்ரீலங்கா ஒப்பந்தம் செயலாக்கப்பட வேண்டும் என கூறி வருகிறேன்.//
திரு. டோண்டு அவர்களே!!
புலிகள் தமிழர்களைக் கொன்று போட்டதாகவே இருக்கட்டும். தமிழகக் கட்சிகள் பிழைப்பு நடத்துவதாகவே இருக்கட்டும்.
”புலிகளைத்தான் எதிர்க்கிறோம், தமிழர்களை ஆதரிக்கிறோம்” என்று பொய் சொல்லித்திரியும் சோ போன்ற விலங்குகள் இதுவரை தமிழர்களுக்காகச் செய்தது என்ன என்று கொஞ்சம் எழுதுவீர்களா
ஈழத்தைத் தாயமாகக் கொண்ட பூர்வீகத்தமிழர்களுக்கு எதுவும் செய்திருக்க வேண்டாம். இந்திய வம்சாவளித் தமிழர்களான மலையகத் தமிழர்களுக்காக என்ன செய்து கிழித்தன இந்த மிருகங்கள்?
இந்திய-இலங்கை ஒப்பந்தந்தத்தை விட்டுத்தள்ளுங்கள். தமிழன் என்ற அடையாளத்தைத் தன்னுயிரை மாய்த்தாவது உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழனை நம்மைப் போன்ற பார்ப்பனிய நரிகளால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? அவர்களுக்காகப் போடப் பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம் நிறைவேறினாலென்ன அல்லது அவன் இல்லாமல் ஒழிந்தாலென்ன நமக்கேன் கவலை.
சாஸ்திரி-பண்டாரநாயகா ஒப்பந்தத்தின் படி இந்திய வம்சாவளித்தமிழர்களை ஆடுமாடுகள் போல பங்கு போட்டன இந்திய இலங்கை அரசுகள். இந்தியாவின் பங்குக்குத் திருப்பியனுப்பப் பட்ட இந்த அப்பாவித் தோட்டத் தொழிலாளர்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் அளிக்கப் படாமல் இந்தியாவின் பல பகுதிகளில் குடியேற்றப் பட்டு பல இடங்களில் கொத்தடிமைகளாக மாற்றப் பட்டனர்.
தன்பங்குக்கு வைத்துக் கொண்ட மீதி மலையகத் தமிழர்களுக்கு இன்று வரை குடியுரிமை அளிக்காமல் அவர்களின் உழைப்பை மட்டும் சுரண்டிச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. உலகத்திலேயே எந்தவொரு நாட்டிலும் குடியுரிமை இல்லாத மனிதர்களாக தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இம்மலையகத் தமிழர்கள். அவர்கள் துப்பாக்கியையும் தூக்கவில்லை, வன்முறையிலும் ஈடுபடவில்லை. பார்ப்பனிய அடையாளத்துக்குப் போட்டியாக தமிழன் என்ற அடையாளத்தை எதிர்வைக்கும் அளவுக்கு எந்த பலமுமில்லாதவர்கள் அவர்கள். நீங்கள் விரும்பும் படியே வாழும் 'அக்மார்க்' இந்தியத் தமிழர்கள் அவர்கள். அப்படியிருந்தும் அவர்கள் மேல் கொஞ்சமாவது இரக்கமுண்டா இந்த இந்திய தேசியவெறி பிடித்தலையும் நாய்களுக்கு?
சாஸ்திரி- பண்டாரனாயகா ஒப்பந்தம் அப்படியே கிழிந்து குப்பையில் கிடக்கிறது. சோ, இராம், சாமி போன்ற பார்ப்பனிய மிருகங்கள் அவர்களுக்கு என்ன செய்து கிழித்தன என்று கேட்டுச் சொல்லுங்கள். இலங்கையில் ஆள்பவர்களிடம் பதக்கம் வாங்கிக் கொண்டு, தினமும் போன் போட்டுப் பேசி அவர்களது அடியாட்களாகத் திரிகினறன இந்த மிருகங்கள்.
தயவுசெய்து தமிழர்களிடம் கரிசனமுள்ளவர்களாகக் காட்டிக் கொள்ளாதீர்கள். எப்படி உங்கள் சாதியடையாளத்தை உண்மையுடன் உயர்த்திப் பிடிக்கிறீர்களோ, அதைப்போல் இதிலும் உண்மையாக இருங்கள். பொய்க் கரிசனமெல்லாம் எதற்கு?
நன்றி - சொ.சங்கரபாண்டி
//புலிகள் தமிழர்களைக் கொன்று போட்டதாகவே இருக்கட்டும்.//
அது என்ன இருக்கட்டும்? அதுதான் உண்மை.
//இந்திய வம்சாவளித் தமிழர்களான மலையகத் தமிழர்களுக்காக என்ன செய்து கிழித்தன இந்த மிருகங்கள்?//
அப்படியா? புலிகள் என்ன செய்து கிழித்தனர் என்பதைப் பட்டியல் போடுங்கள். இசுலாமியரை 24 மணி நேர கெடு வைத்து துரத்திய புலிகளுக்கு வக்காலத்தா, பேஷ்.
//எப்படி உங்கள் சாதியடையாளத்தை உண்மையுடன் உயர்த்திப் பிடிக்கிறீர்களோ, அதைப்போல் இதிலும் உண்மையாக இருங்கள். பொய்க் கரிசனமெல்லாம் எதற்கு?//
முதலில் உங்கள் முதுகில் உள்ள பார்ப்பன வெறுப்பை பார்த்து கொள்ளுங்கள். ஆஊன்னா பாப்பான்னா இந்த பாப்பான் வந்து கேப்பான் என்பது மாற்ற முடியாதது.
டோண்டு ராகவன்
//மற்ற எல்லா மிதவாத, தீவிரவாதத் தலைவர்களை கொன்றது அவர்களே, இலங்கை அரசு அல்ல. //
அப்படி கொல்லப்பட்ட யாரும் பிரபாகரனின் ஜாதிக்காரர்கள் இல்லை என்பதை கவனித்தீர்களா?
விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட பலர் தலித்துகள்.
சோவின் இந்த பேச்சை கண்டித்து நான் ராஜினாமா பண்றேன்.
என்ன நான் எம்.பி இல்லையா!
அப்போ எம்.பி பதவி கொடுங்க!
அப்புறம் ராஜினாமா பண்றேன்.
//முதலில் உங்கள் முதுகில் உள்ள பார்ப்பன வெறுப்பை பார்த்து கொள்ளுங்கள். ஆஊன்னா பாப்பான்னா இந்த பாப்பான் வந்து கேப்பான் என்பது மாற்ற முடியாதது.
//
Well said!
//அங்குள்ள தமிழர்களின் நலனுக்காக புலிகள் செயல்படுவதாகக் கருதப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை.//
சரியான தருணத்தில் வந்த பேட்டி இது. எங்களது நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு பஸ் ஓட்டுனர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். அவ்வப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக புலிகளுக்கு பணம் அனுப்பி வந்தார். அதற்கான ரசீதை கூட ஒரு முறை என்னிடம் காண்பித்திருக்கிறார். ஆனால் அவராகவே மனமுவந்து அதை கொடுத்தார் என்று தான் முதலில் நான் நினைத்தேன். பிறகு தான் தெரிந்தது, அது அப்படி இல்லை என்று.
அவர் என்னிடம் கூறியது என்னவென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இலங்கைக்கு செல்லும் பொழுது கொழும்பிலிருந்து யாழ்பாணத்து செல்ல வேண்டும் என்றால் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை தாண்டியவுடன் யாழ் தீபகற்பத்துக்குள் செல்ல முதலில் புலிகளின் அனுமதி வேண்டுமாம். இவர் வெளி நாட்டில் உள்ளார் என்றால் புலிகளின் இயக்கத்துக்கு இவர் 'நன்கொடை' அளித்துள்ளாரா என்பதை அவர்கள் தங்களுடைய தஸ்தாவேஜுகளில் சரி பார்த்த பிறகே இவரை உள்ளே நுழைய விடுவார்களாம். இல்லை என்றால் இவர் தன்னுடைய வீட்டுக்கே செல்ல முடியாதாம்.
இப்போது இவர் தனது மனைவி, குழந்தைகளை கொழும்புக்கு மாற்றி விட்டார். ஒரு காலத்தில் புலிகளின் பெரிய அனுதாபியாக இருந்த இவர், இப்பொழுது அவர்களை வெறுக்கும் அளவுக்கு மாறி விட்டார். இலங்கையில் சாதாரண மக்கள் விரும்புவது முதலில் அமைதியை தான் என்று கூறுகிறார்.
எப்படியோ, இவர்களுக்கு விடிவு காலம் வந்தால் நல்லது தான்.
Dear Dondu sir,
When are you planning to drop the ‘Dead donkey CHO”. Please think and write about Tamils in srilanka on your OWN and what's come out of your own brain and NOT from irrelevant item Number ‘CHO’.
Please try.
Yours sathappan
@சாத்தப்பன்
சோ அவர்களை புரிந்து கொள்ளும் திறமை எல்லோருக்கும் இருக்காது என்பதே நிஜம். அப்படி அவரை கணிக்க தெரியாதவர்களில் உங்களையும் காண்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1.காலம் இவ்வளவு மாறிய பிறகும் அந்த பிராமண எதிர்ப்பை விடமால் இருப்பது மனவேதனையை தரவில்லையா?
2.போன தலைமுறையினர் செய்ததாய் சொல்லப்படும் ஒரு சில நல்லது அல்லாத செயல்களுக்கு 2வது,3வது தலைமூறையை துவஸ்தம் பண்ணுவது நியாயமா?
3.பிராமண (ஆசிரியர் ,மருத்துவர் ,வக்கீல்,ஆடிட்டர்,முதலாளி......)வேண்டும்,
ஆனாலும் எதிர்ப்பை காட்டுவேன் இது சரியா?
4.ஒடுக்கப் பட்டவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற கொள்கைக்காக ஒரு முன்னேறிய அறிவு சால் இனத்தையே ஒளித்து கட்ட நினைக்கிறார்களே?
5. இப்படி இவர்களுக்கு தவறுதலாய் போதிக்கும் பல தலைவர்களின் அம்மா,மனைவி,மருமகள்,பேத்தியின் கணவன் பிராமண சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பது புரியவில்லையே .இதை சரி செய்வது எப்படி?
// dondu(#11168674346665545885) said...
@சாத்தப்பன்
சோ அவர்களை புரிந்து கொள்ளும் திறமை எல்லோருக்கும் இருக்காது என்பதே நிஜம். அப்படி அவரை கணிக்க தெரியாதவர்களில் உங்களையும் காண்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
sariyaana neththi ati
வால்பையன் said...
சோவின் இந்த பேச்சை கண்டித்து நான் ராஜினாமா பண்றேன்.
என்ன நான் எம்.பி இல்லையா!
அப்போ எம்.பி பதவி கொடுங்க!
அப்புறம் ராஜினாமா பண்றேன்.
-----------------------------------
Vaal Paiyaaa, Besh Besh, romba nannaaa Irukkuuuuu
//அப்படியா? புலிகள் என்ன செய்து கிழித்தனர் என்பதைப் பட்டியல் போடுங்கள். இசுலாமியரை 24 மணி நேர கெடு வைத்து துரத்திய புலிகளுக்கு வக்காலத்தா, பேஷ்.//
'சோ'க்களின் கூற்றுப்படி புலிகள்தான் தமிழர்களுக்கு எதிரிகளாயிற்றே, இனி அவர்கள் தமிழர்களுக்காகக் கிழித்ததை
எப்படிப் பட்டியலிடமுடியும்?
பதினெட்டு வருடங்களுக்கு முன்பு புலிகள் துரத்தியனுப்பிய வரலாற்றைப் பேசி இசுலாமியர்களுக்காக இவ்வளவு கரிசனப்படும் நீங்கள் ('சோ'க்கள்) குஜராத்தில் இசுலாமியர்களை அரசு எந்திரத்தை வைத்துப் படுகொலை செய்த நரேந்திர மோடியை கன்னத்தில் போட்டு வணங்கி வருகிறீர்களே. அடிக்கடி 'சமீபகால'த்தைப் பற்றிப் பெருமை பேசும் உங்களுக்கு ஒருவேளை 'சமகாலம்' என்பது என்னவென்றே மறந்து போச்சோ? அல்லது ஆட்சியாளர்கள் இனப்படுகொலை செய்தால், அது கொழும்பானாலும் குஜராத்தாலும், இனிப்பாக இருக்குமோ? என்னய்யா நியாயம்?
இன்னும் நான் கேட்ட கேள்விக்கு உங்களிடமிருந்து பதிலில்லை. எந்த வன்முறையிலும் ஈடுபடாத, பாரதியார் சொன்னபடி “கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவையென அறியவுமிலாத” அப்பாவி ஜீவன்களான இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காகப் போடப் பட்ட சாஸ்திரி-பண்டாரநாயகா ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்தியா என்ன செய்தது? புலிகளும். பிற போராளி இயக்கங்களும் தலையெடுத்தது எண்பதுகளின் ஆரம்பத்தில். 1964ல் இந்தியா போட்ட மேற்படி ஒப்பந்தத்தை நிறைவேற்றுமாறு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே? இத்தமிழர்களுக்கும், இவ்வொப்பந்தத்துக்கும், புலிகளுக்கும் எந்தத் தொடர்புமில்லை. புலிகள் தோன்றுவதற்கு முன்பு பதினாறு ஆண்டுகளாக இந்திய அரசு என்ன செய்தது. டெல்லிக்கும், கொழும்புக்கும் மாமா வேலை பார்க்கும் சோக்கள் இதற்காக என்னத்தைக் கிழித்தார்கள் என்று கேட்டால் உடைந்த ஒலித்தட்டுப் போல ”புலிகள், புலிகள்” என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ‘சோ'க்களின் முகத்திரைகளை கிழிப்பது இலங்கை அரசுதான். கொஞ்சமாவது சூடுசொரணையிருந்தால் இலங்கை அரசைக் கேளுங்கள்.
//முதலில் உங்கள் முதுகில் உள்ள பார்ப்பன வெறுப்பை பார்த்து கொள்ளுங்கள். ஆஊன்னா பாப்பான்னா இந்த பாப்பான் வந்து கேப்பான் என்பது மாற்ற முடியாதது.//
பிறப்பு ஒன்றையே அடிப்படையாக வைத்து பார்ப்பனர்களை குற்றம் சாட்டுவது குற்றம் என்று நான் நினைக்கிறேன். ஈழப்பிரச்னையிலோ அல்லது தமிழ்நாட்டுப் பிரச்னைகளிலோ தமிழ்ச் சமூகத்துக்கு விரோதமான எதிர்க்கருத்துக்களை அவர்கள் முன்வைத்தாலும் கூட அவர்களை வெறுப்பது தவறு என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்களுடைய புரிதலில்தான் கோளாறு என்றெண்ணுகிறேன்.
ஆனால் சோ-சுவாமி-இராம் போன்ற கடைந்தெடுத்த பார்ப்பனியப் பயங்கரவாதிகளை பார்ப்பனியக் கொள்கையடிப்படையில்தான் விமர்சிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அவர்கள்தான் ஒட்டு மொத்த பார்ப்பனர்களையும் தவறான வழியில் சிந்திக்க வைக்கின்றனர். அவர்களிடமிருந்து விடுதலையடைய வேண்டியது பார்ப்பனரல்லாதோர் மட்டுமல்ல, அப்பாவிப் பார்ப்பனரும் கூடத்தான். பார்ப்பனர்-பார்ப்பனல்லாதோர் ஒற்றுமின்மைக்குத் தடையாக இருப்பது இது போன்ற பார்ப்பனியப் பயங்கரவாதிகள்தான்.
நன்றி - சொ.சங்கரபாண்டி
(பி.கு: இவ்விடுகையில் வரும் பின்னூட்டங்களில், புலிகள் மேல் குற்றங்களைச் சுமத்தும் 'சோ'க்கள், ஏன் அனானிகளாகவே வருகின்றனர்? இந்தியாவில்தான் புலிகளுக்கு ஆதரவில்லை என்று 'சோ'க்கள் சொல்லி வருகின்றனரே. உண்மையான அடையாளங்களில் வருவதில் என்ன பயம் அல்லது தயக்கம்? ஒருவேளை இவையெல்லாம் முரளிமோகன்களின் வேலையாக இருக்குமோ?)
//நன்றி - சொ.சங்கரபாண்டி
(பி.கு: இவ்விடுகையில் வரும் பின்னூட்டங்களில், புலிகள் மேல் குற்றங்களைச் சுமத்தும் 'சோ'க்கள், ஏன் அனானிகளாகவே வருகின்றனர்? இந்தியாவில்தான் புலிகளுக்கு ஆதரவில்லை என்று 'சோ'க்கள் சொல்லி வருகின்றனரே. உண்மையான அடையாளங்களில் வருவதில் என்ன பயம் அல்லது தயக்கம்? ஒருவேளை இவையெல்லாம் முரளிமோகன்களின் வேலையாக இருக்குமோ?)//
It is too much.
Please dont find fault about the honesty of dondu sir.
He is courageous,bold,trustworthy,open hearted,outspoken..etc.
It is beyond doubt that all the comments are written by bloggers/other readers.
As per his saying
All the comments of readers are sent to dondu's email.
After editing it is published in his blog.
There is no need for him to comment as annonyms .
He has got enormous guts to say/write/publish his opinions/comments in his own name.
This is happening regularly (100 %)
//பதினெட்டு வருடங்களுக்கு முன்பு புலிகள் துரத்தியனுப்பிய வரலாற்றைப் பேசி இசுலாமியர்களுக்காக இவ்வளவு கரிசனப்படும் நீங்கள்..//
நீங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததற்கெல்லாம் பேசுவீர்கள். அதற்கு முன்னால் 18 ஆண்டுகள் ஒன்றுமேயில்லை. இப்பதிவு புலிகள் எதிர்ப்பு பதிவு. அவர்களை எதிர்த்து பின்னூட்டம் போடுபவர்களது கருத்து வாதத்துக்கேற்றதாக இருந்தால் அனுமதிக்கிறேன். போலியாரையே எதிர்த்து செயல் புரிந்த எனக்கு எது நல்ல பின்னூட்டம் எது வெத்துவேட்டு பின்னூட்டம் என்பது தெரியாதா என்ன?
சோ, ராம் ஆகியோரது கருத்து பிடிக்கவில்லையெனில் அதை எதிர்த்து எழுதலாம். அதெப்படி அவரது சாதியை பற்றி எழுதப் போயிற்று? இதில்தான் உங்கள் பார்ப்பன வெறுப்பு வெளியில் தெரிகிறது.
ஞாநி இத்தனை ஆண்டுகள் உங்களுக்கு நல்லவர், ஆனால் ஓரிரு கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் உடனே அவர் பார்ப்பனர் என்பது நினைவுக்கு வந்து தொலைக்கிறது. இதுதான் பார்ப்பன வெறுப்பு.
ஆனால் இதற்காகவெல்லாம் டோண்டு ராகவன் கவலைபட மாட்டான். அவன் சொல்லவந்ததை நேரடியாகவே சொல்லிப் போவான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஆனால் இதற்காகவெல்லாம் டோண்டு ராகவன் கவலைபட மாட்டான். அவன் சொல்லவந்ததை நேரடியாகவே சொல்லிப் போவான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
100/100 sathayamana vaarththai
On the influential clergy, the report notes that a number of Christian churches in the Wanni are stridently pacifist. But as a group, they were unable to resist conscription of their young. When one of their young dies in battle, the ministers of the churches and the Pentecostal faith have preached at funerals that God in his mercy took away these young people to spare them the pain of killing others. “Young conscripts, who resist the LTTE as conscientious objectors, are liable for heavy punishment. For this reason, several of them have taken personal vows and informed their parents and guides not to worry on their account as in whatever situation they find themselves, they have sworn not to kill, but are ready to be killed instead,” the report says.
The UTHR-J further observes that the LTTE had a large camp at Moonru-Murippu, now overrun by government forces. The camp had scores of metal cages, with pointed wires extending inside. Conscripted persons who refused to fight were shut inside. “The pointed wires ensured that they had to stand in a bent position and get pricked if they tried to move. They were let out only when they agreed to the LTTE’s demands. These cages had, during the ceasefire, been used to coerce people, particularly businessmen abducted for extortion. By October 2008, the LTTE had once again become very aggressive in conscription. They visited families with lists provided by Village Headmen (GS [gram sevak] officers). For a family with three or four children, they demanded two fighters; one for a family with two; and none for a family with one. The general attitude of the populace now is not to quarrel with the LTTE. They figure that many of those who objected to conscription had been placed on the front line and are dead. But many of those who joined without resistance have been placed in safer areas and have survived. Since early September, sources from the Wanni say that the LTTE has conscripted 9,000 ‘very young’ persons who are now under training,” the report says.
.....At this time, there was a wave of bombing and shelling around Kilinochchi, in which the LTTE political office was hit. A shell fell in Ruthirapuram, injuring a girl in her 30s.
“The LTTE came there and wanted to shift the people to the East Wanni. Some people objected saying that they want to go to the government-controlled area. The LTTE named a large sum of money adding that if anyone would pay that sum, they could pay and go.
மேலும் படிக்க http://www.flonnet.com/stories/20081205252404800.htm
லங்காரத்னா ராமின் குரூப் இப்படித்தான் எழுதும் என எண்ண வேண்டாம். இதோ இலங்கை அரசையும் குறை சொல்கிறது கட்டுரை...
The report also raises some disturbing questions about the excessive emphasis of the Mahinda Rajapaksa government on the military strategy with little or no attention paid to the resolution of the genuine grievances of the minorities in the island nation and the manner in which it has left innocent civilians stranded in the war zone at the mercy of the Tigers. It notes that in the North, as the Army advances along the western half of the Wanni and edges closer to Kilinochchi, an estimated 200,000 displaced civilians (the latest U.N. figures say the number of IDPs is close to 300,000) attempting to escape the ravages of the war, are getting hemmed in.
As per the report, the IDPs, forced to move at short notice owing to the continual bombing and shelling, had even stopped putting up temporary shelters. “The choices for them were never human. Initially they moved north to escape shelling from the advancing army. Then the LTTE prevented those who tried to move into government-controlled areas. The government in turn confines those escaping LTTE-controlled areas in mass detention centres from which they are not allowed to leave. Those in Vavuniya find themselves in a place of crime and lawlessness, where torture, murder, extortion, abduction and rape are routine and women are powerless. The blame lies mainly with the security forces and Tamil paramilitary elements working alongside them,” it says.
1.இன்று இறைவனடி சேர்ந்த நடிகர் நம்பியார் சுவாமியின் கலைப்பணி/ஆன்மிகப் பணி பற்றிய செய்திகள் விரிவாய் சொல்லவும்?
2.அஞ்சலி செலுத்த வந்த புன்னகை அரசிக்கு( கே.ஆர்.விஜயா) என்னாச்சு? உடல் நலக் குறைவா?
3.அவரது 90 ஆண்டு வயதில் எல்லாக் கடமைகளையும் முடித்து உடல் நலக் குறைவின் காரனமாய் (Heart attack)
இயற்கை ஏய்திவிட்டார். சினிமாவில் நடிப்பதை நிறுத்திய பிறகும் ,அஞ்சலி செலுத்த வருகிறவர்கள் அழுது ஆர்பாட்டம்( குறிப்பாக நடிகை மனோரமா ஆச்சி)செய்து கலைஉலகத்துக்கு பெரிய இழப்பு என உபசார வார்த்தை சொல்வது பற்றி -டோண்டு சாரின் கமெண்ட் என்ன?
4.அரசியல் தலைவர் ஒருவர் மற்றொருவர் மீது போட்ட மானநஷ்ட வழக்கில் யாருக்காவது பணம் கிடைத்துள்ளாதா?
5.மீண்டும் சோ/மோடி/டோண்டு எதிர்ப்பாளர்கள் பார்ப்பன துவேசத்தை,புலிகள் ஆதரவு/எதிர்ப்பு போர்வையில் தொடங்கிவிட்டார்களே?
சோவுக்கு எதுக்குப்பா இவ்வளவு முக்கியத்துவம், யாரு சொன்னா என்ன அதுக்கு உஙக கருத்து என்ன அதை மட்டும் சொல்லுங்க அய்யா! சாத்தப்பன்- ற பெற வச்சுகிட்டு அது முதலியாரா, கோனாரா, நாட்டுக் கோட்டை செட்டியாரா-ன்னு ஆராய்ச்சி பண்ணின நல்லா இருக்குமா. கருத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க சார்.கம்ப்யூட்டர் வந்ததும் அதில ஜாதகம் கணிக்க ஆரம்பிச்சத பார்த்து சிரிப்பா சிரித்தேன் ஒரு காலத்தில். ஆனா இப்போ இந்த கணினியில் (வலையில் வலை பூவில்) ஜாதி சச்சரவா பார்த்து சிரிப்பதாஅழுவதா ? டெக்னாலஜி வளர்ச்சிக்கு ஏற்ப நம்ம பிரச்சனைகளையும் அப்டேட் பன்னிவச்சுகிறீங்க, புலிகேசியில வருவது போல ஒரு சாதி சண்ணடை மைதானம் தொறக்க வேண்டியது தான் என்று நினைக்கிறேன். சோவின் பல கருத்துக்கள் எனக்கு அந்த நேரத்துக்கு கேட்கப் பிடிக்காது, ஆனால் அது அவர் சொல்லியபடி நடக்கும் போது அப்பவே அந்த ஆளு சொன்னாரே என்று இருக்கும். அவர் என் பிரியமான எதிரி ! -உண்மையான வருத்தத்துடன் குப்புக்குட்டி.
என்ன சொல்லுகிறார் சோ?
இலங்கைத் தமிழர்கள் விடுதலைப்புலிகளிடம் மாட்டிக்கொன்டு கஷ்ட்டப்படுகின்றனர். அதனால் அந்த தமிழர்களை காக்க அந்த தமிழர்களையே குன்டுபோட்டு கொல்லுகிறார்கள் அப்படி க்கொல்வது சரிதான் என்று சொல்லுகிறாரா?
இல்லை தமிழர்கள் விடுதலைப்புலிகளிடம் கஷ்ட்டப்படுவதைவிட செத்துப்போவதே மேல் என்ற நல்லென்னத்தில்தான் இலங்கை அரசு அவர்களை கொல்லுகிறது என்று சொல்லுறாரா?
மக்கள் ஆதரவு இல்லாமல் ஒரு இயக்கம் இப்படி ஒரு நிர்வாகத்தினை வெற்றிகரமாக இத்துனை வருடம் செய்யமுடியாதுன்னு இவருக்கு தெரியலையா?
புகழ்பெற்ற திரைப்பட பாடல் வரிகளுக்கு உங்கள் ஸ்டெயிலில் விளக்க்ம் கொடுக்கவும்.
அ.தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
ஆ.கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
இ.ஒவ்வொரு உறவாய் இழந்த பின்னும்
வலியுடன் வாழ்க்கையை தொர்ந்து வந்தான்
கடைசி உறவையும் இழந்த பின்னே
கல்லைப் போலே கிடந்து விட்டான் ........
ஈ.காசை எடுத்து நீட்டு
கழுதை பாடும் பாட்டு
ஆசை வார்த்தை காட்டு
உனக்குங் கூட ஓட்டு
உ.மேடை ஏறிப் பேசும்போது
ஆறு போல பேச்சு
கீழே இறங்கிப் போகும்போது
சொன்னதெல்லாம் போச்சு
ஊ.செப்பு கொஞ்சம் சேர்க்கலன்ன
தங்கம் அழியாது
தப்பு கொஞ்சம் பன்னலன்ன
சங்கு கனியாது
எ.கொடுத்தத திருப்பி நான் கேட்க
கடனா கொடுக்கலையே
உனக்குள்ளதானே நான் இருக்கேன்
உனக்கது புரியலையே
ஏ.கொஞ்சனாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா
ஐ.நீ நடக்கும் புல்வெளியில்
பனித்துளிகள் துடைத்து வைப்பேன்
நீ பேசும் தாய் மொழியில்
வல்லினங்கள் களைந்து வைப்பேன்
ஒ.ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
ஓ.சந்தோசம் , சந்தோசம் , வாழ்கையின் பாதி பலம் ,
சந்தோசம் இல்லை என்றால் , மனிதர்க்கு எது பலம்
ஓள.காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
இலங்கைத் தமிழர்கள் விடுதலைப்புலிகளிடம் மாட்டிக்கொன்டு கஷ்ட்டப்படுகின்றனர். //
எப்புடி கஷ்டப்படுறாங்கன்னுதான் இங்லீசுல மேல எழுதீருக்குதே படிக்கல?
//
thenali said...
எப்புடி கஷ்டப்படுறாங்கன்னுதான் இங்லீசுல மேல எழுதீருக்குதே படிக்கல?
//
நமக்கு ஆங்கிலம் அவ்வளவா வராதுங்கோ
1.சீனாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பொருளாதாரப்போட்டி,எல்லைத் தகராறு,நதிநீர் பங்கீட்டு தாவா இந்தியா சீனா தேசத்துக்கிடையே உள்ள ராஜீய உறவுகளில் உள்ள உரசல் பெரிய அளவு மோதலுக்கு வழிவைக்கும் எனும் அரசியல் பார்வையாளர்களின்
இன்றய பத்திரிக்கை செய்தி பற்றிய தங்களின் கருத்து?
2.அதிமுக மீண்டும் 3 வது அணியை நோக்கியா?
3.ஜெ.யின் ஒரு கோடி கேட்டு வழக்கு?
4.மின்சார சுடுகாட்டுப் பராமரிப்பு தனியார் வசம்?(build/operat/transfer)
5.டெல்லி யாருக்கு? இலவச திட்டங்கள் அறிவிப்பு ஒட்டுகளைபெற -பா.ஜ.வும் - இது நல்லதிற்கில்லயே?
1)மானமிகு(!!) தமிழர் தலைவர்(!!) வீரமணியின் சமீபத்திய விடுதலையில் பார்ப்பனர்களை கிழிகிழியென்று கிழித்துள்ளனர்!! கவனித்தீர்களா? புலி ஜால்ரா போடாததால் பார்ப்பனர்கள் தமிழ் எதிரிகள் என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றனராம்!! உங்கள் கருத்து இதைப்பற்றி?
2)'மானமிகு', 'தமிழர் தலைவர்' இந்த்தப்பட்டங்கள் யார் வீரமணிக்கு கொடுத்தது?. அதற்கு அவர் தகுதியானவரா? உங்கள் கருத்து?
3)'தமிழர் தலைவர்' வீரமணி!! 'தமிழினத் தலைவர்' கருணானிதி!! பின் யார்தான் தமிழருக்கு தலைவர்?!! 'மானமிகு' என்றால் என்ன அர்த்தம்?
4) பார்ப்பனருக்கு என்று தாய்மொழி இல்லையாம்!! தாய்னாடு இல்லையாம்!!! தமிழ் நாட்டில் ஒட்டிக்கொண்டு தமிழை வைத்துதான் பொழைப்பு நடத்திக்கொண்டு உள்ளார்களாம்!!! உங்கள் கருத்து?
5) வீரமணி போன்றவர்க்கு ஏன் பிராமணர் மீது இத்தனை வெறுப்பு? ஏன் விடுதலையில் மற்ற உயர்சாதி துவேஷங்கள் பற்றி பேசுவதில்லை? ஏன் பிராமணரை மட்டும் குறி வைக்கின்றனர்?
6) பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல என்று சொல்ல வீரமணி போன்றோருக்கு என்ன தகுதி? அவர்கள் என்ன தமிழின் உரிமையாளர்களா அல்லது தமிழ் அவர்கள் முப்பாட்டன் வீட்டு சொத்தா? இப்படிச்சொல்லும் இவர்கள் எப்படி ஒரு தமிழர் அல்லாத (கன்னடர்) பெரியாரை ஏற்றுக்கொண்டார்கள்/
விக்ரம்
Two questions this time Dondu Sir.
1) Give us a list of books (both Tamil and English) you enjoyed reading this year.
2) With just 41 days to go for 2008 to fade into history, what are your impressions of this year ?
//மீண்டும் சோ/மோடி/டோண்டு எதிர்ப்பாளர்கள் பார்ப்பன துவேசத்தை,புலிகள் ஆதரவு/எதிர்ப்பு போர்வையில் தொடங்கிவிட்டார்களே?//
saaththappanum kuppukuutyum murpokku thiraavidak kuttini polirukke.
yeppthaan ivangallam maaruvaangkalo?
dondu sar maathiri paarppana yethirippai thunivodu yethirkkavendum
//நமக்கு ஆங்கிலம் அவ்வளவா வராதுங்கோ//
எனக்கும் சுமாரத்தான் வரும். அத வைச்சு அஜிஸ் பண்ணிக்க வேண்டியதுதான்.அந்த ஆங்கில கட்டுரையின் அதன் சாரம் இதுதான் - LTTE அமைப்பில் சேர விரும்பாதோரை அடைத்து கூண்டுகள் LTTE-யிடமிருந்து கைப்பற்றபட்ட பகுதிகளில் இருந்ததாம்.அக்கூண்டுகளில் கம்பிகள் நீட்டிக் கொண்டிருக்குமாம், அடைக்கப்பட்டோர் நேராக நிற்க முடியாமல் வளைந்துதான் நிற்க வேண்டுமாம்.சேர ஒப்புக்கொண்டால் விடுவிக்கபடுவராம். சேரும் போது அடம்பிடித்தால் போர் முனையில் சண்டையிட வைத்து காலி செய்துவிடுவார்களாம்.அப்புறம் அரசு கட்டுபாட்டில் உள்ள சண்டை நடவாத இடங்களுக்கு தமிழ்மக்கள் பாதுகாப்பு கருதி செல்ல விரும்பினால் LTTEக்கு மிக அதிக அளவில் காசு தர வேண்டுமாம்.
இந்த மாதிரி செய்திகளில் அடிப்படையில்தான் சோ தனது நிலைப்பாட்டினை எடுத்திருக்க வேண்டும். உண்மை நிலை ஈழத்தில் வசிக்கும் சாதாரண தமிழனுக்குதான் வெளிச்சம். பொதுவாக பிளாக்கில் எழுதும் புலம் பெயர்ந்து வசதியாக வாழும் எழுத்தாளர்களை முழுவதும் நம்புவதற்கில்லை. அவர்கள் ஈழத்தின் கஷ்டங்களிலிருந்து தப்பி விட்டவர்கள். தனி ஈழம் கிடைத்தால் பெருமையாக சொல்லிக்கொள்ளுவார்கள், 10% பேர் கூட திரும்பமாட்டார்கள் என நினைக்கிறேன்.
பொதுவாக இலங்கை பிரச்சனை தொடர்பாக ப்ளாக்கில் எழுதுபவர்களை நாண் கண்டு கொள்வதில்லை. தமிழ் நாட்டில் வாழ்பவன் என்ற முறையில் சில கருத்துகளை சொல்வது என் கடமை
இங்கு ப்ளாக்கி விடுதலை புலி ஆதராளர்கள் மிக கடுமையாகவே எழுதுகிறார்கள். உ.தா .சொ.சங்கரபாண்டி .இவர் யாரென்று எனக்கு தெரியாது.
இலங்கை பிரச்சனை விவாதம் எங்கு நடந்தாலும் சோ சுபரமணிய சுவாமி இந்து ராம் என்று அதே புராணத்தை பாடி விட்டு செல்வார்.
இவர் கருத்துகளை எல்லாம் சீரியசாக எடுத்து கொண்டால்..அயோடா
. ராமகிருஷ்ண ஹரி ! டோண்டு சார் -ன் எதிர்ப்பு நான் பார்த்தவரையில் எதிர்வினை
தான். இங்க ஒருத்தர் ஆங்கிலம் அவ்வளவா வராதுன்னா மாதிரி நீங்க தமிழ் தெரியாத தமிழரா ? அய்யா உங்களை மாதிரி நுனிப் புல் மேய்பவர்களால் எதையும் எதிர்க்கமுடியாது. ஒரு விஷயத்தில் உறுதியா இருக்கனும்னா,முதலில் நிறைய மன உறுதி வேணும். எதிர்ப்புக் காட்ட நிறைய ஹோம் வொர்க் செய்யணும். ஏதாவது பிரச்சனைன்னா பஸ்-ஐ எரிப்பாங்களே அது மாதிரி இருக்கு உங்க பின் னுனூடம்.இந்த மாதிரி எழுதினா இன்னமும் உங்கள் தரப்பு நியாயம் எடுபடாமல் தான் போகும். என் பதிலில் நான் சொன்னது என்ன? சாதி வேண்டாம், கருத்து ,மட்டும் பேசுங்கள் என்று தானே ! சாத்தப்பன் கூட சாதிய இழுக்கலையே ! (டோண்டு சார் இந்த இடத்தில் ஏன் மவுனமாகீட்டிங்க)
தமிழ் விளங்காத உங்களுக்கு சோவுக்கு நான் செய்திருப்பது வஞ்சப் புகழ்ச்சி என்று தெரிய நியாயம் இல்லை. சோ-ஐ நான் திட்டி இருந்தால் கூட அது எப்படி பார்ப்பான எதிர்ப்பு என்பீர்கள். அவரின் தொழில் சாரந்த, கருத்து சார்ந்த விமர்ச்னமாகத் தானே அதைப பார்க்க வேண்டும். நீங்கள் இப்போது சாதியுடன் எப்படி சம்மந்தமில்லாமல்
equvate செய்கிறேர்களோ அப்படி தான் அவர்களும் செய்கிறார்கள் வேறு மதத்தினரிடம் சாதி வேறு பாடு இன்னும் இருக்கத் தான் செய்யுது, ஆனா வலையில் அது எங்கேனும் தட்டுப் படுகிறதா ?
அகமும் புறமும் விளங்காமல் எதையாவது எழுதுறதா ? முதலில் என் (முதல்) பதிலை ஒரு முறை படிக்கவும், மீண்டும் உங்கள் கருத்து அது தான் எனில், போகட்டும் விட்டு விடுங்கள். குப்புக்குட்டி.
//ராமகிருஷ்ண ஹரி ! டோண்டு சார் -ன் எதிர்ப்பு நான் பார்த்தவரையில் எதிர்வினை
தான். இங்க ஒருத்தர் ஆங்கிலம் அவ்வளவா வராதுன்னா மாதிரி நீங்க தமிழ் தெரியாத தமிழரா ? அய்யா உங்களை மாதிரி நுனிப் புல் மேய்பவர்களால் எதையும் எதிர்க்கமுடியாது. ஒரு விஷயத்தில் உறுதியா இருக்கனும்னா,முதலில் நிறைய மன உறுதி வேணும். எதிர்ப்புக் காட்ட நிறைய ஹோம் வொர்க் செய்யணும். ஏதாவது பிரச்சனைன்னா பஸ்-ஐ எரிப்பாங்களே அது மாதிரி இருக்கு உங்க பின் னுனூடம்.இந்த மாதிரி எழுதினா இன்னமும் உங்கள் தரப்பு நியாயம் எடுபடாமல் தான் போகும். என் பதிலில் நான் சொன்னது என்ன? சாதி வேண்டாம், கருத்து ,மட்டும் பேசுங்கள் என்று தானே ! சாத்தப்பன் கூட சாதிய இழுக்கலையே ! (டோண்டு சார் இந்த இடத்தில் ஏன் மவுனமாகீட்டிங்க)
தமிழ் விளங்காத உங்களுக்கு சோவுக்கு நான் செய்திருப்பது வஞ்சப் புகழ்ச்சி என்று தெரிய நியாயம் இல்லை. சோ-ஐ நான் திட்டி இருந்தால் கூட அது எப்படி பார்ப்பான எதிர்ப்பு என்பீர்கள். அவரின் தொழில் சாரந்த, கருத்து சார்ந்த விமர்ச்னமாகத் தானே அதைப பார்க்க வேண்டும். நீங்கள் இப்போது சாதியுடன் எப்படி சம்மந்தமில்லாமல்
equvate செய்கிறேர்களோ அப்படி தான் அவர்களும் செய்கிறார்கள் வேறு மதத்தினரிடம் சாதி வேறு பாடு இன்னும் இருக்கத் தான் செய்யுது, ஆனா வலையில் அது எங்கேனும் தட்டுப் படுகிறதா ?
அகமும் புறமும் விளங்காமல் எதையாவது எழுதுறதா ? முதலில் என் (முதல்) பதிலை ஒரு முறை படிக்கவும், மீண்டும் உங்கள் கருத்து அது தான் எனில், போகட்டும் விட்டு விடுங்கள். குப்புக்குட்டி//
some of the old comments of mr. saththappan in dondu's blog were written with some remarks against bramins.
comments are being written in blogs that, for all happeninigs ,bramins are the root cause.
based on that only I have asked dondu sir to continue the fight for right cause.( unnecessary remarks on bramins)
Now your are telling that you are above board .
welcome .
If it is so.
thank you mr .kuppukutti
keep it up
முதலில் தமிழினத்தின் உண்மையான தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.. நம் தமிழினத்தில் எட்டப்பன்களும் கருனாகளும் இருக்கும் வரையில் ஒன்று அல்ல நூறு பிரபாஹரனின் பிறப்பும் பயனற்றுப் போகும்... தின்கிற சோத்துல என்னைக்காவது என்னைக்காவது உப்பு போட்டு சாப்புட்டு இருக்கும், உண்மையிலே கண் இருந்து பார்வை இருக்கும், காது இருந்து கிடக்கும் திறன் இருக்கும், நெஞ்சில் ஒரு துளி அளவேனும் ஈரம் இருக்கும், அணுவளவு மனிதாபிமானம் இருக்கும் எந்த ஒரு மனிதனும் ஈழத் தமிழ் மகளுக்கு எதிராக ஒருவார்த்தை கூட பேச இயலாது..ஏதோ ஒரு மனிதனுக்கே இது எனில் தமிழர்கள் எந்த அளவு உணர்வுடன் இருக்கவேண்டும்.. விடுதலைப்புலிகள் அல்லது ஈழத் தமிழர்கள் மீது குற்றம் கண்டுபிக்க முயற்சிக்கும் எந்த ஒரு தனி மனிதனுக்கும் நான் சொல்லும் ஒரே வார்த்தை.. தனி ஒரு மனிதன் செய்த குற்றங்களுக்கே அவனை தூக்கிலிட கூடாதென்று சர்வதேச மனித உரிமை ஆணையம் கருத்து வெளியிட்டு இருந்தது.. எனில் எங்கோ நடந்த சிறு பிழைக்கு ஒரு இனத்தையே அழிப்பது எந்த வகையில ஞாயம்.. குற்றம் சொல்லும் யாரும் ஈழத் தமிழரின் வரலாறு தெரிந்து பின்பு பேசுங்கள்... ஒரு சில விசயங்களை யாரோ சொல்ல கேட்டு பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள்.. தவறு செய்து இருக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம், செய்த தண்டனைக்கு இந்த இனப்படுகொலை தேவை என்றால், குஜராத்தில் இந்துக்கள் செய்தவைக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள், ஈராக்கில் அமெரிக்கா செய்த கொடுமைக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள், இங்கிலாந்து உலகுக்கு செய்த கொடுமைக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள், ஹிட்லரின் இனம், இன்னும் எத்தனை எத்தனை சமுதாயங்களே கொல்லாத குற்றங்களை செய்து முடித்துள்ளது.. உங்கள் ஆதரவு இல்லை என்றாலும் பரவில்லை கட்சியின் பெயராலும், சாதியின் பெயராலும், பெரிய அறிவு ஜீவி என்ற நினைப்பிலும் கருத்து சொல்வதை நிறுத்தி கொள்ளுங்கள்..
Post a Comment