என்ன தோன்றியதோ எனக்கு தெரியவில்லை. சாதாரணமாக வியாழனன்று இரவு கேள்வி பதில்களை பிழை திருத்தி விட்டு வரைவு ரூபத்திலேயே வைத்திருந்து வெள்ளியன்று காலைதான் அச்சிடுவேன். ஆனால் நேற்று இரவு எல்லாம் செய்து முடிந்ததும் அடுத்த நாள் விடியற்காலை (அதாவது இன்று காலை) 5.00-க்கு தானே அச்சுக்கு செல்லுமாறு பிளாக்கரில் முன்அமைவு செய்து விட்டுத்தான் படுக்கப் போனேன்.
கடந்த இரண்டு நாட்களாக ஆட்டம் போட்ட நிஷா புயல் காரைக்காலருகே கரை கடந்திருந்தாலும் சமத்தாக மேற்கு நோக்கி நகராமல் காரைக்காலுக்கு வடமேற்கே ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் தாழ்வழுத்த மண்டலமாக மையம் கொண்டுள்ளது என்று கூறினார்கள். படுக்கப் போகும்போது வெளியே மயான அமைதி. வீட்டுக்கு வெளியே தேங்கியிருந்த நீர் எல்லாம் கூட வடிந்து விட்டிருந்தது.
இன்று விடியற்காலை 04.30-க்கு திடீரென முழிப்பு வந்தது. மின்சாரம் நின்று போயிருந்தது. கட்டிலிலிருந்து காலை தரையில் வைத்ததும்தான் தெரிந்தது கணுக்காலளவு ஆழத்துக்கு தண்ணீர் என. எல்லா அறைகளுக்குள்ளும் தண்ணீர். இதற்கு முன்பு நான் நவம்பர் 2005-ல் குறிப்பிட்டது போல வெள்ளம் உள்ளே வந்திருக்கிறது. இம்முறை பரவாயில்லை. எல்லாம் எங்கள் தெருவில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால்களின் உபயம். தெருவில் தண்ணீர் தேங்கவில்லை. நான்கு நாட்கள் இம்மாதிரி மழை பெய்த பிறகுதான் வெள்ளம் உள்ளேயே வந்தது. ஆனால் கடந்த முறைகளில் ஒரு நாள் விடாது மழை பெய்தாலே கதை கந்தல்தான்.
இன்று காலை எங்கள் கவுன்சிலர் குமார் (காங்கிரஸ் - தமாகா) நகராட்சி இஞ்சினியருடன் சேர்ந்து வீடுகளுக்கெல்லாம் விஜயம் செய்தார். அவருக்கு நன்றி. இரண்டு நாட்களுக்கு முன்னால் எங்கள் தெருவில் அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ் கட்டுபவர் வடிகால்களில் ஜல்லி எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்ததை சத்தம் போட்டு நீக்கச் செய்திருக்கிறார். இல்லாவிட்டால் இன்றைய நிலைமை இன்னமும் மோசமாகியிருக்கும்.
டாய்லட்டிலும் பீங்கானை தாண்டி தண்ணீர் தேங்கியிருந்தது. ஆனால் பார்த்து கொண்டிருக்கும்போதே அது வடிய ஆரம்பித்தது. இன்று காலை சற்று நேரம் முன்னால்தான் மின்சாரம் வந்தது. அறைகளிலிருந்து தண்ணீரை பக்கெட்டுகளில் நிரப்பி வெளியே கொட்ட வேண்டியிருந்தது. இப்போதுதான் கணினியில் அமர முடிந்தது. பதிவு அதற்குள் காலை சரியாக 5 மணிக்கு பப்ளிஷ் ஆகிவிட்டது. இரண்டு பின்னூட்டங்கள் வேறு. முதல் பாராவில் நான் கூறியபடி ஏதோ உள்ளுணர்வு இருந்திருக்க வேண்டும்.
ரொம்பத்தான் படுத்துகிறாள் நிஷா. இன்னும் மேக மூட்டமாகத்தான் உள்ளது. மறுபடியும் ஏதேனும் ஏடாகூடமாக செய்வாளோ என்ற பயம் இருக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
15 hours ago
8 comments:
மழை இன்னும் தொடரும் போல் தெரிகிறதே.
சென்னைக்கு வந்த சோதனையா?
தாழ்வான பகுதிகளிலும் ,குடிசை பகுதிகளிலும் வாழும் ஏழை எளியோரின் நிலை இன்னும் பரிதாபம்.
அரசு மற்றும் மாநகராட்சி அலுவலர்களின் மக்கள் துயர் துடைக்கும் பணி எப்படியுள்ளது.
பம்பாயில் நெருப்பு
சென்னையில் காற்றும் மழையும்
பஞ்சபூதங்களுக்கு என்ன கோபமோ!
மழையில நாமா நனஞ்ச்சா அது சந்தோசம் கூடவே சில சமயம் சலதோஷம். ஆனா வீடு நனைந்தால், ரொம்ப கஷ்டம் பர்னிச்சர் பேப்பர் எல்லாம் நனைந்து விடுகிற அவஸ்தை அது. திருச்சி தில்லை நகரில் உள்ள என் உறவினர் வீட்டில், சுவரில் தண்ணீர் போட்ட வாட்டர் மார்க் ரொம்ப நாள் இருந்தது. ஆனா இப்பதான் காவிரிஅதோட கரையக் கூட நனைக்க முடியாமல் கிடக்கே ! குப்புக் குட்டி
We should appreciate the work of your local authority person. you are gifted. I want you to highlight on issues relating to the T.G.Nagar subway and the new high way built over the Adambakkam lake area (near anjaneyar temple) which have made the T.G.Nagar area before that as water reservoirs. We had to suffer one night and day full to drain the water and till now 9:20PM the water is running up to ankle level in the streets. It is a fault on the authorities to have the lake closed and therefore all the houses here are flooded. IT HAS NEVER HAPPENED SO BAD BEFORE.
இக்கேயும் அதே நிலை தான்,
ஆனால் இந்த புயல் பல உயிர்களை காவு வாங்கியிருப்பது வருத்தமான செய்தி.
ரெண்டு நாளைக்கு வெளியே செல்ல வேண்டாம்
1.இந்தியாவை மட்டும் குறி வைத்து தொடர்ந்து திவீரவாதிகள் தாக்குவதன் காரானம் என்ன?
2.அப்பாவி பொது மக்களை கொல்லுவது ஏன்?
3.இவர்களை தயார் படுத்தும் நாடு எது என்பதை தெரிந்தும் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே?
4.பொதுவாக இந்தியாவில் ஒரு சில மத மோதல்கள் இருந்தாலும் எல்லா அரசுகள் மதநல்லிணக்கத்தை நன்றாகத்தானே செயல் படுத்துகின்றன?பின் ஏன் இப்படி?
5.இந்திய பாதுகாப்பு வீரர்களின் முன்னால் எந்த பயங்கர வாதிகளின் பாச்சா பலிக்காது என்று நன்றாய் தெரிந்தும் தற்கொலைப் படையாய் வரும் இளைஞர்களை மூளைச் சலவை செய்வது யார்?
Dondu Sir:
where have you disappeared? mumbai was burning but there was no post from dondusir!! surprise.
nisha must have really done you in.
@Sethuraman:
I have already given comments in Enrenrum anbudan Bala's blog post. Coming Friday questions too contain reference to this carnage.
Regards,
Dondu N. Raghavan
//காலை வாரிவிட்ட நிஷா/
அடுத்தது உஷாவா
அடுத்த புயல் கடலுர் அருகே?
உங்களது மழை நனை நிகழ்வுக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு டோண்டு சார்
Post a Comment