ஸ்கீஸோப்ரீனியா என்ன என்பதை தெரியாமலேயே நம்ம சாருநிவேதிதா எழுதுகிறார். உண்மை கூறப்போனால் ஸ்கீஸோப்ரினியா என்பது ஒரு மனிதனுக்குள் பல பெர்சனாலிட்டிகள் இருப்பதுதான். ராபர்ட் லூயி ஸ்டீவென்ஸன் எழுதிய டாக்டர் ஜெகில் & மிஸ்டர் ஹைட் நாவல் இந்தக் கருவைத்தான் அடிப்படையாகக் கொண்டது.
ஒரே மனிதனுக்குள் நல்லவனும் அரக்கனும் குடிகொண்டிருக்க மாறிமாறி அவர்கள் அந்த மனிதன் மேல் மேலாண்மை பெறுவதால் வரும் குழப்பங்களை அந்த நாவல் சொன்னது. அதில் முக்கியமாக ஒரு அடிப்படையில் நல்ல மனிதனின் மனதை கெட்ட எண்ணம் கொண்டவனது ஆத்மா ஆக்ரமிப்பதால் வரும் பிரச்சினைகளைத்தான் ஜெகில் ஹைட் கதை பேசுகிறது. ஆனால் உல்டாவாக யோசித்து பார்த்திருக்கிறீர்களா? அதாவது சராசரி குணநலன்களுடன் உள்ள ஒரு மனிதனை ஒரு நல்ல ஆத்மா ஆக்கிரமிப்பதால் என்னென்ன வரும் என்று நினைத்து பார்த்துள்ளீர்களா? சற்று கற்பனையை ஓட்டிப் பாருங்கள். முடியாவிட்டாலும் கவலையில்லை. ஏற்கனவே ஃபிரெஞ்சு எழுத்தாளர் Pierre Boulle இதை கற்பனை செய்து ஒரு அருமையான கதையை எழுதியுள்ளார். அது அவரது Quia Absurdum (Sur la Terre comme au Ciel) (சொர்க்கத்திலும் பூமியிலும் அபத்தங்கள்) என்ற சிறுகதை தொகுப்பில் வருகிறது. இக்கதையின் தலைப்பை மறந்து விட்டேன். தேடி இன்னொரு முறையும் படிக்க ஆவல்.
மற்றப்படி சமீபத்தில் 1970 என்று கூறுவதை total recall என்று கூறிக்கொள்ளலாம். இப்படித்தான் நான் சமீபத்தில் 1958-ல் பார்த்த ‘சபாஷ் மீனா” என்னும் படத்தை மீண்டும் நண்பர்களுடன் சமீபத்தில் 1972-ல் பார்க்க, அப்போது சமீபத்தில் 1958-ல் பார்த்த படக்காட்சிகள் வசனம் உட்பட சம்பந்தப்பட்ட காட்சி வருவதற்கு சில நொடிகள் முன்னால் வர என்றெல்லாம் நடப்பதை பற்றியும் சமீபத்தில் 1955-ல் நான் கேள்விப்பட்ட ஆடுதுறை ரகுவை சமீபத்தில் 1972-ல் சந்தித்து அவரை பெயரை கேட்டே அடையாளம் கண்டு கொண்டது பற்றியும் நான் ஏற்கனவே எழுதியுள்ளேன்.
மறுபடியும் ஸ்கீஸோ ப்ரினியா பற்றி பேசுவோமா? நர்கீஸ் நடித்த “ராத் அவுர் தின் (இரவும் பகலும்)” என்னும் கதையிலும் இதே தீம்தான். இணையத்திலேயே உதாரணம் பார்க்கலாமே. ஒரு பதிவில் ஒரு மனிதரைப் ப்ற்றி ஆகா ஓகோ என புகழ்வது, வலையுலக டெண்டுல்கர் எனக் கூறுவது, இன்னொரு பதிவில் அதே பதிவரை காண்டு கஜேந்திரன் என்று நையாண்டி செய்வது போன்ற செயல்பாடுகளை வைத்திருப்பதும் ஸ்கீஸோபிரீனியாதான். என்ன செய்வது ஏதோ பூர்வஜன்ம கர்மா என்றுதான் கூற வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: கடைசி பத்தியில் சொன்ன பதிவர் உதாரணம் ஸ்கீஸோப்ரினியாவுக்கானது இல்லையென பதிவர் அக்னிப் பார்வை கூறியுள்ளார். இணையத்தில் தேடிப் பார்த்தபோது அவர் சொன்னதுதான் சரி எனத் தெரியவருகிறது. மருத்துவத் துறையில் இல்லாத சாதாரண பொது மக்கள் (நான் உட்பட) மேலே சொன்னது போலத்தான் புரிந்து கொண்டுள்ளோம் என்றும் புரிகிறது. அக்னிப் பார்வைக்கு என் நன்றி. அது மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸார்டராம்.
கிறிஸ்துவமே ஐரோப்பாவின் பண்பாட்டுமையம்
-
நியூயார்க் நகரின் மையத்தில் அமர்ந்து செய்த ஒரு காணொளி. அந்த இடத்தில்
அப்போது உருவான எண்ணம் அப்படியே வெளிவரவேண்டும் என நினைத்தேன். மைக்
பொருத்துவது வரை ஒரு ...
3 hours ago
20 comments:
சமீபத்திய பூர்வ ஜென்ம கர்மாவா ?
மன்னிக்கவும் நீங்களும் ‘Multiple Personality Disorderd ' ப்ற்றி பேசுகிறீர்கள், ஸ்கிசியோவை பற்றியில்லை.
ஸ்கிசியோ ‘"மனப்பிறழ்ச்சி’ அல்ல ‘உளச்சிதைவு’ ஆக தான் இருக்கும் (எனக்கும் தமிழில் சரியாக தெரியவில்லை’
நாமக்கு சினிமா பற்றி பேசவும், சினிமா பார்க்கவும் விருப்பமாக இருக்கும், ஆனால் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கோ சினிமாவே பிடிக்கது- நம்மையும் தனிமைபடுத்துகிறார்கள் என்று கொண்டால், தனிமயில் நாமே ஒரு மனிதனை உருவாக்கி,அவனை நண்பனாக்கி, அவன் உடன் சினிமாவை பற்றி பெச அரம்பித்துவிடுவோம். பிரச்சனை இது தான், நம்மை பொருத்தவரை அவர் உண்மை (உண்மையில் அவர் பொய்).ஒரு கட்டதில் இந்த ‘Illusion or delusion' தாண்ட முடியாமல் தவிப்போம். உண்மை உலகு பிடிக்காமல் போய்விடும்.
Multiple Personility Disorder :
ஒரு மனிதன் சிந்தனையில், பல மனிதர்கள் பல கருத்துடயவர்கள்.
Sczohio: ஒரு மனிதன் சிந்தனையில், பல மனிதர்கள் ஒரே கருத்துடயவர்கள்.
இது மூளையில் ஏற்படும் ஒரு வித கெமிக்கல் இம்பலன்ஸ்..
இன்னும் புறிந்து கொள்ள இந்த் படங்களை பார்க்கலாம்..
1.A Beautiful Mind
2.7 G Rainbow Colony
3 lahe ro Munnabhai
ஒரு குறிப்பு இந்த நோய் என்னை தாக்கி, அதிலிருந்து மீண்டவன்..
டக்டர் மருந்துகளுடன் கொடுத்த suggestion எனக்கு நோயை புரிய வைக்க ’1.A Beautiful Mind’ இந்த் படத்தை அடிகடி பார்க்க வைப்பார்( நான் இந்த் படத்தை 200 முறையவது பார்த்திருப்பேன்)..
அதுக்காக சமிபத்தில் காந்தி இருந்துவிட்டார் என்பதெல்லாம் ஓவர்
நன்றி அக்னி பார்வை. நீங்கள் சொல்வதுதான் உண்மை. ஸ்கீஸோப்ரெனியாவால் பீடிக்கப்பட்டவர்கள் கடவுளின் குரலைக் கேட்பதாகவெல்லாம் கூறுவார்கள். காதில் குரல்கள் கேட்பது இந்த நோயின் முக்கிய அறிகுறி.
போதைப் பொருள் உட்கொண்டாலும் இந்த நிலைமை தற்காலிகமாக வருகிறது என நினைக்கிறேன்.
ஆனால் மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸார்டரை எல்லோருமே (நான் உட்பட) ஸ்கீஸோப்ரினியாவாகத்தான் நினைத்து வந்து கொண்டிருக்கிறோம் என்பது இப்போது புரிகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அதுக்காக சமிபத்தில் காந்தி இறந்துவிட்டார் என்பதெல்லாம் ஓவர்//
நான் சமீபத்தில் என்று குறிப்பிடும் நிகழ்ச்சிகள் எல்லாமே நானே தனிப்பட்ட முறையில் அனுபவித்ததாக இருந்தவைதான். காந்தி இறந்தபோது எனக்கு இரு வயது கூட நிரம்பவில்லை. எனது நினைவு சமீபத்தில் 1950-லிருந்துதான் உள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இது சம்பந்தபட்ட எல்லா பதிவு, பின்னூட்டம் படிச்சு, நெட்ல தேடி படிச்சி எனக்கும் ஸ்கீஸோப்ரீனியா வந்துரும் போல இருக்கு... இதுக்கு யாராவது ஒரு என்ட் கார்டு போட மாட்டிங்களா???
Hi Dondu.. Suuupeerrr Shot.. I was expecting a good reply for a blog which commented personally ill about you.. Every1's finger point out you.. But You didn't comment about other bloggers.. Keep it up.. Still.. U r a not out batsman.. Keep Rocking..
Russell Crowe நடித்து வெளிவந்த A Beautiful mind என்ற படம் இந்த நோய்க்கு சரியான உதாரணம். இந்தக் கதை John F Nash என்ற நோபல் பரிசு பெற்ற mathematician- ன் உண்மை கதையைத் தழுவியது. அவரைப் பற்றிய ஒரு கட் அண்ட் பேஸ்ட்.
John Forbes Nash, Jr. (born June 13, 1928), is an American mathematician and economist whose works in game theory, differential geometry, and partial differential equations provided a basis for successive scientific research across a number of disciplines and mathematical insight into the forces that govern chance and events inside complex systems in daily life; his theories are still used today in market economics, computing, accounting and military theory. His doctoral thesis on the so-called "Nash equilibrium" revolutionized economics.In 1994, he won the Nobel Prize in economics, and to this day he keeps an office at Princeton.
கதை சொன்ன விதத்திற்கும் Russell Crowe -ன் நடிப்பிற்கும் எத்தனை தடவை வேண்டுமானாலும் இப்படத்தை பார்க்கலாம். -குப்புக் குட்டி
//John F Nash என்ற நோபல் பரிசு பெற்ற mathematician- ன் உண்மை கதையைத் தழுவியது.//
ஒரே ஒரு திருத்தம். ‘தழுவியது’ இல்லை. John Nash கதையேதான் Beautiful Mind திரைப்படம்
கேள்விகள்
எம்.கண்ணன்
1. பெரும்பாலும் எல்லா அரசு அதிகாரிகள் (ஏன் பொதுத்துறை அலுவலக அதிகாரிகள் கூட) தங்கள் நாற்காலியில் ஒரு டர்க்கி டவலை (பூ துவாலை ?) போட்டு அதன் மீது சாய்ந்து கொள்கின்றனரே ? அதில் என்ன சௌகர்யம் ?
2. இந்திய/தமிழக அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கை என்ன ஆனது ? இப்போதெல்லாம் இது பற்றி யாரும் பேசுவதில்லையே ? மக்கள்தொகை பெருகினால் நாடு நல்லாருக்கும்னு நெனைக்கிறாங்களா ?
3. சஞ்சய் காந்தி பிரதமராக இருந்திருந்தால் நாடு எப்படி இருந்திருக்கும் ?
4. வெளிநாட்டு மருமகளான சோனியாவை வீட்டுக்குள் சேர்த்த இந்திராகாந்தி, உள்நாட்டு இந்து மருமகளை வெளியேற்ற என்ன காரணம் ?
5. மணியடிக்கும் அமைச்சருக்கு முப்பத்தாறாயிரம் கோடி ரூபாய் ஸ்விஸ் வங்கியில் இருக்கிறதாமே (குமுதம்) ? இவ்வளவு பணம் இந்தத் துறையில் எப்படி கிடைத்தது ?
6. ஸ்பெக்டிரம் ஊழலில் கிடைத்த பல்லாயிரம் கோடி ரூபாய்கள் ஃப்ரூட் லாங்குவேஜ் ஸ்விஸ் வங்கிக் கணக்கில் போடப்பட்டுள்ளதாமே ? (குமுதம்) அவ்வளவு பணத்தை வைத்து என்ன செய்வார் அந்தக் கவிஞர் ?
7. சோ, சுஜாதா இவர்களுக்குப் பிறகு பிராமணர்களின் உணர்வுகளை மீடியாவில் முன்னெடுத்துச் செல்ல யாரும் இருப்பது போல் தெரியவில்லையே ? (கவனிக்கவும் - இங்கு பிராமணீயத்தைக் குறிப்பிடவில்லை - பிராமணர்களின் உணர்வுக்கு ஒரு புரிதலையும் ஒரு ஸ்பேஸ் கிரியேஷன் செய்வது பற்றி) வேறு யார் தற்போது இருக்கிறார்கள் ?
8. ஹிண்டுவில் ரீடர்ஸ் எடிட்டர் பத்திகளில் பெரும்பாலும் என்.ராமின் நிலையை வாசகர்கள் வறுத்து எடுக்கின்றனரே ? அதை ரீடர்ஸ் எடிட்டரும் அனுமதிக்கிறாரே ? ஹிண்டுவில் வரும் ஆங்கிலத்தில் தற்போது அடிக்கடி தவறாக வருவது சுட்டிக் காண்பிக்கப்படுகிறது. ஹிண்டு நிருபர் மகனார் சொல்வது என்னவோ ?
9. வீட்டில் உடுத்துவது வேட்டியா ? லுங்கியா ? ஏன் ?
10. ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன் போன்ற மெலடி பாடகர்களை தற்போது பாடல்களில் காணமுடிவதில்லையே ? என்ன காரணம் ?
11. உங்கள் கேள்வி பதில் பகுதியை புதன்/வியாழனில் வெளியிட்டால் பதில்கள் பற்றிய விவாதங்கள் பின்னூட்டங்களில் அதிகம் வருமென்று நினைக்கிறேன். வெள்ளியில் வருவதால், பின்னூட்டங்கள்/விவாதங்கள் அவ்வளவாக இல்லை. உங்கள் கருத்து என்ன ?
டோண்டு அய்யா,
நம்ம மஞ்ச துண்டு மாமன்னனுக்கு schizophrenia வா அல்லது multiple pesonality disorder சமாசாரமா?
This is a perennial complaint in the Tamil writers' world. Why should be one unhappy and jealous about others who are prospering?
Most consider themselves intellectuals and comments freely about others. When will this curse go?
for Friday - last week I asked you whether Patil should still remain in the cabinet? - you now have the answers - Do you feel that these resignations will set things right?
1. Whom do you think instigated Mumbai siege this time ?
2. How do you think India should react ? I know you admire Israel. Will you call for strikes against Pakistan ? I am sure you will keep in mind Pak's nuclear weapons capability.
3. What is your opinion of blanket coverage of Mumbai siege by English news channels ?
4. Most bloggers are severely castigating Barkha Dutt of NDTV, Rajdeep Sardesai of CNN-IBN and Arbab Goswami of Times Now. Do you agree that these correspondents overstepped their limits this time?
5. What is your take on Shri Hemant Karkare's wife's refusal of Shri Modi's one crore compensation ?
6. Lastly, whom do you think is in the wrong - Maj. Sandeep's father for refusing to meet with Kerala Chief Minister or Kerala CM's uncharitable comments ?
நீங்கள் அவரைச் சொல்லுரீங்க
அவர் உங்களை சொல்லியிருக்கார்.
இது தேவையா
தவிர்த்திருக்கலாமே.
இரண்டையும் படிக்கும் போது
ஒருவர் மேல் ஒருவர் சேற்றை வாரி இறைப்பது
பண்புகாக்கும் செயலாகது.
மூத்த பதிவர் நீங்கள்
பொறுத்தார் பூமி ஆள்வார்
விட்டுக்கொடுத்தவன் கெட்டுப்போனதில்லை
schizophrenia enbathu manachidhivu .idhu perumbalum 17 alladhu 18 vayadhil start aagum. adhilirundhu avarudaiya irappu varai niraya relapses vara vaaippirukkiradhu .treatment eduthukkondal controlil vaikkalam .illaiendral rombavum kadinam. wikipediavil parungal
Nice post Sir.
This article shows about USA people.
http://www.msnbc.msn.com/id/28002991/?gt1=43001
நீங்கள் சொல்வது மனச்சிதைவு நோயைப் பற்றி.
முதலில் அங்கே எழுதியிருப்பது உங்கலை பற்றி என்ற எண்ணத்தை விடுங்கள், ஏனன்றால் அதுவும் ஒரு அறிகுறி.
மனச்சிதைவு நோயுள்ளவர்களிடம் எனக்கு நிறைய பரிச்சியம் உண்டு.
அதை பற்றி தனியாக பதிவாக இடுகிறேன்.
multiple personality disorder நோயை தமிழில் ”பன்மனோபாவ ஒழுங்கின்மை நோய்” என்று கூறலாம்
மேலும் விபரங்களுக்கு http://www.payanangal.in/2008/09/vidhathu-karuppu-marmadesam-multiple.html பதிவை படிக்கலாம்
அல்லது சந்திரமுகி படத்தை பார்க்கலாம் :)
பாப்பான் பார்ப்பணன் பார்ப்பான் ஆகியவற்றெல்லாம் சொல்லி எழுப்பும் மடையங்கள் பல வகையுள்ளார்கள்; இவை கீழ் வருமாறு :
1) OBC சான்றிதழைக் கைப்பற்றும் தெலுங்கு பேசும் சாதியினத்தவர்.
2) OBC சான்றிதழைக் கைப்பற்றும் கன்னடம் மொழி பேசும் சாதியினத்தவர்.
3) இந்தி மொழி பேசும் OBC முஸ்லிம்கள் மற்றும் இதர சாதிகள்.
இவர்கள் தாங்கள் தமிழர் அல்ல என்பதை மறைக்கும் வழிகள் கீழ் வருமாறு:
1) வஞ்சகமாக ஒரு தமிழ் பெயர் வைப்பது.
2) தாங்கள் வெறுக்கும் தமிழர்களை அவர்கள் தமிழழே கிடையாது என பறைசாடுவது.
3) இந்து, தெலுங்கு மற்றும் தமிழ் அல்லாத இதர மொழி பேசுவோர்களை தாங்கள் தான் "உண்மைத் தமிழர்கள்" என அழைப்பது.
முதலில் தமிழ் நாடு என்கிற மாநிலத்தில் முதலில் தமிழ்மை என்பது கிடையாது. எல்லாமே ஒரு பெரிய வஞ்சகம்.
1)பள்ளிக்கூடங்களில் தொடரும் இந்தி திணிப்பு : நமது தமிழக அரசு தமிழ் கட்டாய மொழி என்பதை பெயர் பெற்றுவிட்டது தவர அதை அமல்படுத்துவதில்லை. தமிழகத்தில் பெரும்பாலுமான CBSE ராணுவ Matric பள்ளிகளில் இந்தி மொழி திணிக்கப்பட்டு வருகிறது. CBSE பள்ளிகளில் தனி விதிவிலக்கு!! ஆனால் கர்நாடக CBSE பள்ளிகளில் கன்னடம் கட்டாயம்; பஞ்சாப் CBSEஇல் பஞ்சாபி; மகாராஷ்டிராவில் மராட்டி எப்படி அமல்படுத்தப்படுகிறது?
2) இந்தி பேசும் நபர்களுக்கு ஐ ஐ டி, விமானநிலைய, இரயில் நிலைய பாதுகாப்புப் பணிகளில் சிறப்பு இடஒதுக்கீடு.
3) தமிழ் பள்ளிகளை மூடுவது.
4) தமிழ் பேசும் சமூகத்தினரை "அவர்கள் தமிழே கிடையாது" என வஞ்சகப்பேச்சு பரவுதல்.
5) இந்தி பேசும் பீஹாரிகளுக்கு போலி ரேஷன் அட்டைகள் வழங்குவது.
6) சென்னை, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாக்குமரி போன்ற இடங்களில் தமிழ் பலகைகளே இல்லாமல் இந்தி மற்றும் ஆங்கிலப் பலகைகளில் மட்டும் கடைகள் நடத்துதல்.
7)கல்வித்துறையில் தமிழ் அறியாத OBCகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு.
இதன் பின்னணியின் நமது தமிழ்நாட்டின் தெலுங்கு பேசும் அரசும் அவர்களின் இணையவழி தொண்டர்களில் பார்ப்பான் நாடகம் தொடர்ந்து நடைபெறுகிறது.
தமிழ் ஓவிய, விடாது கருப்பு, கறுப்புப் பையன், தமிழ்ச்சி, லெமூரியன் போன்ற போலித் தமிழ்ர்கள் உண்மையிலேயே இந்திக்கார்களின் விலைமாதுகள் ஆவார்கள்.
இன்னும் 50 வருடங்களில் தமிழ்நாட்டில் போலித்தமிழ் OBC வெறித்தனத்தால் தமிழ்நாடு தமிழை விட்டு இந்தி, தெலுங்கு, கன்னடம் மட்டும் பேசும் மாநிலம் ஆகும்.
Post a Comment