4/09/2009

டோண்டு பதில்கள் - 09.04.2009

கிருஷ்ணன்:
1. டோண்டு சார் தங்கள் கணிப்பில் திமுக கூட்டணி எவ்வளவு சீட்ஸ்? அதிமுக கூட்டணி எவ்வளவு சீட்ஸ் வெற்றி பெறும்?
பதில்: அதெல்லாம் சொல்ல முடிந்தால் நான் இங்கேயா உட்கார்ந்திருப்பேன். 5-ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் போட்டு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து வாடிக்கையாளர்களை வரச் செய்து, மூன்று கேள்விகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி வெற்றிகரமான ஜோசியனாகியிருப்பேனே. சரி, கேட்டு விட்டீர்கள், ஏதோ என்னால் குன்ஸாக சொல்ல முடிந்தது, திமுக கூட்டணி 8 அதிமுக கூட்டணி 32.

2. இஸ்ரேல் பற்றி தெரிந்துகொள்ள நல்ல புத்தகங்கள்?
பதில்: இஸ்ரேல் உருவாவதை ஒரு காவியமாக வடித்தவர் லியோன் ஊரிஸ் என்னும் யூத எழுத்தாளர், அவரது எக்ஸோடஸ் என்னும் நாவலில். இஸ்ரேல் பற்றி நன்கு அறிய அதன் நையாண்டி எழுத்தாளர் எஃப்ரைம் கிஷோனின் சாட்டயர் புத்தகங்கள் படிக்கலாம். நான் அவரது பல புத்தகங்களை அவற்றின் ஜெர்மானிய மொழிபெயர்ப்பில் படித்துள்ளேன். சும்மா சொல்லப்படாது மொழிபெயர்ப்பாளர் ஃப்ரீட்ரிட்ச் தோர்பெர்க் பின்னிப் பெடலெடுத்து விட்டார்.
இந்த தளத்துக்கு போனால் பல புத்தகங்கள் பற்றி விவரங்கள் அறியலாம்.


அனானி (03.04.2009 பிற்பகல் 4.01-க்கு கேட்டது):
1. ஏழை பார்ப்பனர்களுக்கு இடஒதுக்கீடு அவசியம் இல்லையா?
பதில்: வெறுமனே ஏழைகள் என்று இருந்தால் கண்டிப்பாக வரவேற்பேன். அதில் என்ன பிராமணர் எனத் தனியாக ஒரு ஒதுக்கல்? கூடாது.

2. உங்கள் நண்பர் லக்கிலுக்கும் பார்ப்பனர் என்பது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டதே? அவர் ஏன் பார்ப்பனர்களை வசைபாடுகிறார்?
பதில்: சும்மா கோவி கண்ணனும் லக்கியும் ஒருவரையொருவர் வடகலை மற்றும் தென்கலை ஐயங்கார்கள் என தமாஷுக்கு கலாய்த்ததை இப்படியா சீரியசாக எடுத்து கொள்வது? லக்கியின் சாதி நான் கேட்டதில்லை, அறியவும் ஆசையில்லை. ஆனால் அதே சமயம் பார்ப்பனர் இல்லை என்பது நிச்சயமாகவே தெரியும்.

3. எதிர்காலத்தில் பார்ப்பனர்கள் பூணூலை துறப்பார்களா?
பதில்: மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.

4. பார்ப்பனர்கள் ஏன் ஒரு கட்சி ஆரம்பிக்கவில்லை.
பதில்: பிறாமணானாம் அனேகத்வம், அதாவது பார்ப்பனர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது.

5. நீங்கள் இந்த முறை யாருக்கு ஓட்டு போடும் எண்ணம். பாஜகவுக்கா?
பதில்: எங்கள் தொகுதியில் பாஜக நின்றால் அதற்குத்தான் எனது வோட்டு. இல்லாவிட்டால் அதிமுக.

5. போலி டோண்டு செத்துவிட்டானா?
பதில்: போலி டோண்டுவுக்கு குடும்பம் என்று உண்டு. அதுவும் அவன் குடும்பத்தினர் பட்ட மன உளைச்சலுக்கு பிறகு அவன் திருந்தியிருப்பான் என்றுதான் படுகிறது.

6. உண்மைதமிழனுக்கு மிரட்டல் வந்ததே. அது போலியிடம் இருந்து வந்திருக்கலாம் இல்லையா?
பதில்: செயல்வகை எனப் பார்த்தால் அவன் வேலை மாதிரித்தான் இருக்கிறது. இருப்பினும் அவன் அதற்கு துணிவானா என்பதுவும் கேள்விக்குறியே. வேறு யாராவது காப்பியடித்து செயல்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.

7. சூடான இடுகைகளில் உங்கள் பதிவுகள் வராததால் ஹிட்ஸ் குறைந்திருக்கிறதா?
பதில்: அது இருக்கட்டும், அதனால் பாதிக்கப்படவில்லை. ஆனால் இம்மாதிரி ஆர்பிட்ரரியாக தமிழ்மணம் செயல்படுவது குழந்தைத்தனமாக உள்ளது.

8. நீங்கள், கோவி, செந்தழல், லக்கி ஆகியோரை நீக்கியபிறகு சூடான இடுகைகள் தரம் உயர்ந்துவிட்டதா?
பதில்: நாங்கள் நால்வரும் நீக்கப்பட்டதற்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்ப்புகளே காரணம். வேறு ஒன்றும் இல்லை.

9. உங்களுக்கு நமீதாவை பிடிக்குமா. நயனதாராவை பிடிக்குமா. நமீதா இட்லி சாப்பிட்டிருக்கிறீர்களா?
பதில்: ரெண்டு பேருமே சேர்ந்து வந்து நண்பர்களாக இருப்போம் என்றால் வேண்டாம் என்றா கூறப்போகிறேன்? குஷ்பூ இட்டலி சாப்பிட்டிருக்கிறேன். அதற்கு ஜெனரிக் பெயர் செட்டி நாட்டு இட்டலி. அதுதான் நமீதா இட்டலி.

10. ஐதராபாத்தில் பிராமணர்கள் மட்டுமே வசிக்ககூடிய பிரம்மாண்ட குடியிருப்புகள் கட்டுவது சரியா?
பதில்: தனியார் முயற்சியாக இருக்கும் என நினைக்கிறேன். அரசு வரிப்பணம் செலவழித்து இக்குடியிருப்பு கட்டப்பட்டால் அது கண்டனத்துக்குரியதே. மற்றப்படியென்றால் இல்லை.

11. அருந்ததீ பட விமர்சனம் எழுதுவீர்களா?
பதில்: ரோலர் கோஸ்டரில் ஏறிய ஃபீலிங் அப்படத்தைப் பார்த்தபோது. பலர் எழுதியாகிவிட்டது. புதிதாக எழுத எனக்க்குத் தோன்றவில்லை.


Certifiedasshole:
1. பிராமணர்கள் ஏன் வெறுக்க படுகிறார்கள்? பொய்ப் பிரச்சாரம் மட்டும்தான் காரணமா?
பதில்: நீங்கள் அளித்த சுட்டியைப் பார்த்தேன். அதில் கூறப்பட்டுள்ளவை ஏற்கத் தக்கவையே.


வஜ்ரா:
1. "நான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் வருண் காந்தியை ரோட் ரோலர் கொண்டு நசுக்கி சாகடித்திருப்பேன்" என்று மத்திய மந்திரி லல்லு பிரசாத் யாதவ் கூறியது Attempt to murder ஆகாதா?
பதில்: கண்டிப்பாக, ஆனால் இதையெல்லாம் தேர்தல் கமிஷன் கண்டு கொள்ளாது. லாலுவும் சால்ஜாப்பு எல்லாம் கூறுகிறாரே. பார்ப்போம்.


எம். கண்ணன்:
1. தினமும் ஜெயலலிதாவிடம் மாவட்ட / வட்டச்செயலாளர்கள், பேரவை ஆட்கள் 25 லட்சம் பணப்பெட்டிகளை கொடுத்து போட்டோ எடுத்துக் கொள்கிறார்களே - எங்கிருந்து கிடைக்கிறது இவ்வளவு பணம்? ஒரு சின்ன சூட்கேசுக்குள் 25 லட்சத்தை அடக்க முடியுமா? இல்லை இதெல்லாம் கருப்பை வெளுப்பாக்கும் உத்தியா?
பதில்: சின்னக்கவுண்டர் பட ரேஞ்சுக்கு மொய்விருந்து போடுவதாக படித்தேன். மீதியெல்லாம் கட்சியின் உள்விவகாரங்கள். ஒரு செக்‌ஷன் ஆயிரம் ருபாய் நோட்டுகள் ஒரு லட்சம் ரூபாய். பத்து செக்‌ஷன்கள் கொண்ட ஒரு பண்டில் 10 லட்சம் ரூபாய். மூன்று பண்டில்கள் 30 லட்சம் ரூபாய். தாராளமாக ஒரு சூட்கேசில் வரும்.

2. திமுக இன்னும் டீ குடிக்க காசு ஏற்பாடு செய்யவில்லை போலிருக்கிறதே?
பதில்: இல்லை என்று உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா?

3. பாமகவை தோற்கடிக்க புகையிலை/சிகரெட்/மதுபான கம்பெனிகள்/அதிபர்கள் வியூகம் செய்துள்ளார்கள் போலிருக்கிறதே? பாமக 7 இடங்களிலும் தோற்றால் என்ன ஆகும்?
பதில்: அன்புமணி கதை க்ளோஸ்.

4. கலைஞர் டிவியில் இரவு 10.30மணிக்கு வெட்டிப்பேச்சு லீக் (விபிஎல்) என ஐபிஎல்லுக்கு போட்டியாக ஆரம்பித்துள்ளனரே? சரியான அறுவையாக இருக்க்கிறதே ? அதெப்படி எல்லோரும் பிராமணராக பிடித்துப் போட்டார்கள்? (பாஸ்கி, நீலு, ஞாநி.. மற்றுமொருவர்)
பதில்: நான் கலைஞர் டி.வி. பார்ப்பதில்லை. ஆகவே நிகழ்ச்சி பற்றி கருத்து ஒன்றும் கூறுவதற்கில்லை. பார்ப்பனராக தேடிப்பிடித்திருக்க மாட்டார்களாக இருக்கும். தொலைக்காட்சி சொல்வழக்கில் அவ்வாறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களை talents என்பார்கள். அவர்களில் பலர் பார்ப்பனராக இருப்பது யதார்த்தம், என்ன செய்வது? கலைஞர் டிவி என்பது ஒரு தனியார் வணிக நிறுவனம். அங்கெல்லாம் இட ஒதுக்கீடு செல்லாது.

5. கடைசியில் மாலனும் ஜெயாடிவியில் ஐக்கியமாகிவிட்டாரே? (இரவு 9.30மணி அரசியல் விவாதங்கள்). சன் குழுமத்திலிருந்து ஆட்டோ வரும் என்ற பயமில்லையா?
பதில்: மாலன் செய்வது சம்பளத்துக்கு வேலை. இதில் என்ன கொள்கை வந்தது? எங்கு நல்ல சம்பளம் வருமோ அங்கு வேலை. இதில் என்ன பிரச்சினை?

6. தமிழ் சானல்களில் செய்திவாசிக்கும் பெண்மணிகளில் உங்களுக்குப் பிடித்த செய்தி வாசிப்பாளர் யார்? ஷோபனா ரவி? சந்தியா? ஃபாத்திமா பாபு? ஜெயஸ்ரீ? ரத்னா? உஷா? ரமணி மணி? ஏன்?
பதில்: ஷோபனா ரவி. அவரது அழுத்தம்திருத்தமான, சரியான ஏற்ற இறக்கங்களுடன் கூடிய உச்சரிப்பு, சொல்லும் செய்திகளின் சீரியஸ்னசுக்கு ஏற்ற முகபாவம் ஆகியவை என்னைப் பொருத்த வரையில் இவரிடம்தான் அதிகம். ஆங்கில செய்தி வாசிப்பாளர்களில் எனக்கு பிடித்தது காவேரி முகர்ஜி.

7. 10 வருடங்கள் முன்பு வரை பிரா, ஜட்டி, பனியன்கள் என விற்று வந்த பல பெருங்கடைகளும் தற்போது 'லிங்கரி' என எஃப் டிவி தாக்கத்தில் புதுபுது விதங்களில் பெண் உள்ளாடைகளை அறிமுகப்படுத்துகின்றனரே ? எஃப் டிவியால் கிடைத்த அறிமுகம் தானே இது?
பதில்: உலகமயமாக்கல் காரணமாக வந்தவை இவை.

8. வைரமுத்து தற்போதெல்லாம் படங்களுக்கு பாட்டெழுதுவது இல்லையா? பிரபல இசை அமைப்பாளர்கள் ஏன் அவரை விட்டு விட்டனர்?
பதில்: இம்மாதிரி சினிமா சம்பந்தமான கேள்விகளுக்கு நான் உதவி கேட்கும் நபர் லக்கிலுக். அவர் சொவது என்னவென்றால், ரஹ்மான் தமிழில் இசை அமைப்பதை குறைத்து விட்டதால் வைரமுத்து பாடல்களும் அவ்வளவாக வருவதிலையாம். ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒரு பாடலாசிரியர். மற்றப்படி வைரமுத்து பாட்டு எழுதாமல் இல்லை, எழுதிக் கொண்டுதான் இருக்கிறார், சற்றே குறைவான அளவில்.

9. அழகிரி மத்தியில் அமைச்சராகிவிட்டால் பாராளுமன்றத்தில் எந்த மொழியில் பேசுவார்? எம்.பி.க்குப் போட்டியிடுவது தயாநிதி மாறனுக்கு டெல்லியில் செக் வைக்கத்தானே?
பதில்: இதென்ன கேள்வி? தமிழில்தான் பேசுவார், பேச வேண்டும்? மொழிபெயர்ப்பாளர்கள் எதற்கு இருக்கிறார்கள்? கேள்வியின் அடுத்த பகுதி குடும்ப பாலிடிக்ஸ். இது பற்றி எனக்கு கருத்து இல்லை.

10. தமிழ்நாட்டில் கள்ள உறவுகள்/தொடர்புகள் அதனால் ஏற்படும் கொலை போன்ற செய்திகளுக்கு தமிழ் டிவி சீரியல்கள்தானே காரணம்?
பதில்: தவறான பார்வை. கள்ள உறவுகள் தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்குமே நிறைந்துள்ளன, பல ஆயிரம் ஆண்டு காலமாக. சீரியல்கள் வெறுமனே இருக்கும் நிலையை பிரதிபலிக்கின்றன, அவ்வளவே.

இது பற்றி ஒரு கதை. ஒருவன் சர்ச்சில் பாதிரியார் அளித்த 10 கட்டளைகள் பற்றிய பிரசங்கம் கேட்டு கொண்டிருந்தான். பாதிரியார் சொன்னார், “திருடாதே” என்று. அவனுக்கு அப்போதுதான் உறைத்தது அவனது குடையை யாரோ அபேஸ் செய்து விட்டிருந்தனர் என்று. மனக்குழப்பத்துடன் இருந்தான். அடுத்த கட்டளைகள் முறை வரும்போது “சோரம் போகலாகாது” என்று பாதிரியார் கூறினார். அப்போதுதான் அவனுக்கு தான் குடையை எங்கே வைத்தோம் என்பது ஞாபகத்துக்கு வந்ததாம். மனக்குழப்பம் போயே போயிந்தி.


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

25 comments:

ராமகுமரன் said...

திரு. பா. ராகவனின் நிலமெல்லாம் இரத்தம் இஸ்ரேல் உருவான விதத்தையும் , இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் பிரச்சனைகளையும் அழகாக விவரிக்கிறது. ரிச்சர்ட் பென் கிரேமரின் 'ஹௌ இஸ்ரேல் லாஸ்ட் ' இஸ்ரேலின் யதார்த்த நிலைமைகளை அலசும் நல்ல புத்தகம்

Anonymous said...

http://dbsjeyaraj.com/dbsj/archives/293

Anonymous said...

//லக்கியின் சாதி நான் கேட்டதில்லை, அறியவும் ஆசையில்லை. ஆனால் அதே சமயம் பார்ப்பனர் இல்லை என்பது நிச்சயமாகவே தெரியும்.//

முதல் வாக்கியத்துக்கும் இரண்டம் வாக்கியத்துக்கும் காண்ரவெர்ஸியாக இருக்கிறதே?

dondu(#11168674346665545885) said...

//முதல் வாக்கியத்துக்கும் இரண்டம் வாக்கியத்துக்கும் காண்ரவெர்ஸியாக இருக்கிறதே?//
நீங்கள் சொல்லியிருக்கன் வேண்டிய வார்த்தை காண்ட்ரடிக்சன் (முரண்பாடு), காண்ட்ரவெர்சி (சர்ச்சைக்குரிய விஷயம்) இல்லை.

இதில் என்ன காண்ட்ரடிக்சன் வந்தது? அவர் பார்ப்பனர் இல்லை என்பதை ஆரம்பத்திலிருந்தே பல முறை காட்டி வந்துள்ளார். நான் கேட்டு தெரிந்து கொள்ள ஒரு தேவையுமே இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//திமுக கூட்டணி 8 அதிமுக கூட்டணி 32. ///
அண்ணா... ஒங்க அபிலாச படிக்க நன்னா இருக்கு.. அதுக்காக அதுதான் கரக்ட்டுன்னு போட்டு, எங்க பொறட்டி எடுக்கறேளே...

அம்பீஸ்வரன்

Magesh said...

Dondu sir,

I am a big fan of your posts. I have missed a lot of episodes of Enge Brahminan? Are these episodes available online?

Also I have one small question? What is the exact tamil word for "Option".

For e.g, how do I translate the line
" You have four options".

Regards
Magesh

வால்பையன் said...

//திமுக கூட்டணி 8 அதிமுக கூட்டணி 32.
//

வர வர உங்களுக்கு நல்லா நகைச்சுவை வருது!

வால்பையன் said...

//எதிர்காலத்தில் பார்ப்பனர்கள் பூணூலை துறப்பார்களா?
பதில்: மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.//

ஆமாம் சோத்துக்கே இல்லாட்டியும் பூணுல் தான் முக்கியம்!

வால்பையன் said...

//பார்ப்பனர்கள் ஏன் ஒரு கட்சி ஆரம்பிக்கவில்லை.
பதில்: பிறாமணானாம் அனேகத்வம், அதாவது பார்ப்பனர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது.//

அப்படியே இருந்தாலும் வேளியே சொல்லி கொள்வதில்லை!
உதாரணம்:சோவும் அவ்ரது பிராமண நண்பர்களும்!

வால்பையன் said...

//எங்கள் தொகுதியில் பாஜக நின்றால் அதற்குத்தான் எனது வோட்டு. இல்லாவிட்டால் அதிமுக. //

யாருக்கு போட்டாலும் கண்டிப்பாக அது நல்லவர்களுக்கு இல்லை!
அபிமானிகளுக்காவது போட வேண்டியது தான்!

வால்பையன் said...

//உண்மைதமிழனுக்கு மிரட்டல் வந்ததே. அது போலியிடம் இருந்து வந்திருக்கலாம் இல்லையா?//

போலி கிரகத்துக்கு நிறைய துணை கிரகங்கள் உண்டு அதையும் மறந்து விட வேண்டாம்!

யாரையும் நம்ப முடியாது!
போலி நம் அருகிலேயே அமர்ந்து ஒரு நாள் சரக்கு அடித்திருக்கலாம்!

வால்பையன் said...

//சூடான இடுகைகளில் உங்கள் பதிவுகள் வராததால் ஹிட்ஸ் குறைந்திருக்கிறதா?//

தமிழ்மணத்திலிருந்து வரும் ஹிட்சை விட எனக்கு டோண்டுவின் வலைத்தளத்தில் இருந்து அதிக ஹிட்ஸ்கள் கிடைக்கிறது. அப்படியானால் தமிழ்மணத்தை விட சிறந்த திரட்டி டோண்டுவின் வலைத்தளமா!

எனக்கு ஆமாம்னு தான் தோணுது!

வால்பையன் said...

//ரெண்டு பேருமே சேர்ந்து வந்து நண்பர்களாக இருப்போம் என்றால் வேண்டாம் என்றா கூறப்போகிறேன்?//

அப்படி ஒரு வாய்பு ஏற்பட்டால் எனக்கு இண்ட்ரோ கொடுங்க!

அளவில்லா ஜொள்ளுடன்!
வால்பையன்

வால்பையன் said...

//ஐதராபாத்தில் பிராமணர்கள் மட்டுமே வசிக்ககூடிய பிரம்மாண்ட குடியிருப்புகள் கட்டுவது சரியா?//

சமத்துவபுரத்தில் எல்லோரும் கலந்து இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா?

வால்பையன் said...

//வருண் காந்தியை ரோட் ரோலர் கொண்டு நசுக்கி சாகடித்திருப்பேன்" என்று மத்திய மந்திரி லல்லு பிரசாத் யாதவ் கூறியது Attempt to murder ஆகாதா? //

வில்லாதி வில்லன் படத்தில் ரோடுரோலர் கொண்டு கொலை செய்த குற்றத்தை இன்னோரு சத்தியராஜ் வழக்காடி விடுதலை வாங்கி தருவார்.
அது போல் இதையும் புஸ்வானம் ஆக்கி விடலாம்!

ஆனாலும் லாலு பேசியது ஓவர் தான்!

dondu(#11168674346665545885) said...

@மகேஷ்
சம்பந்தப்பட்ட பதிவின் தலைப்பிலேயே சாதாரணமாக சுட்டி இருக்கிறது. அதை க்ளிக் செய்தால் வீடியோவுக்கு செல்லலாம்.

ஆப்ஷனுக்கு தமிழ்ச்சொல் தெரிவு என்பதாகும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//
9. உங்களுக்கு நமீதாவை பிடிக்குமா. நயனதாராவை பிடிக்குமா. நமீதா இட்லி சாப்பிட்டிருக்கிறீர்களா?
பதில்: ரெண்டு பேருமே சேர்ந்து வந்து நண்பர்களாக இருப்போம் என்றால் வேண்டாம் என்றா கூறப்போகிறேன்? குஷ்பூ இட்டலி சாப்பிட்டிருக்கிறேன். அதற்கு ஜெனரிக் பெயர் செட்டி நாட்டு இட்டலி. அதுதான் நமீதா இட்டலி.
//

ப்பூ...ப்பூ....நமீதா வும் நயந்தாராவும் இன்று வந்தவர்கள். டோண்டு அவர்கள் சரோஜா தேவி இருக்கும் போதே இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் தான்.

சரோஜா தேவி, தேவிகா, ஹேமா மாலினி, ஸ்ரீதேவி, திவ்யா பாரதி, சில்க் ஸ்மிதா, நக்குமா, குஷ்பு, ஜொதிகா, என்று எத்தனையோ prefix வந்து போய்விட்டது. இட்டிலி மட்டும் மாறவே இல்லை.

வெடிகுண்டு வெங்கட் said...

தல, தல,

வெளியில வா தல. நம்ம சங்கத்து அபியோட கல்யாணம் நின்னு போச்சு தல.

வந்து என்ன மேட்டருன்னு கேளு தல.

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.

dondu(#11168674346665545885) said...

//வந்து என்ன மேட்டருன்னு கேளு தல.//
நிக்கல்லேன்னா பாஸ்கர் துப்பாக்கியாலே சுட்டிருப்பானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராமகுமரன் said...

//எதிர்காலத்தில் பார்ப்பனர்கள் பூணூலை துறப்பார்களா?
பதில்: மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.//

ஆமாம் சோத்துக்கே இல்லாட்டியும் பூணுல் தான் முக்கியம்!


இந்த கேள்வி கேட்டது ஒரு அபத்தம் , அதை பதிப்பிற்தது ஒரு அபத்தம் , அதற்கு ஒருவர் பின்னூட்டம் எழுதியிருப்பது அதை விட அபத்த‌ம்.
இந்துக்களிடையே மத ஒற்றுமை இல்லை . ஒருவரையொருவர் ஏளனமாக பேசிக்கொண்டே நம்மிடையே ஒற்றுமை இல்லை. இதே மாதிரி எதிர்காலத்தில் முஸ்லிம்கள் சுன்னத்தை துறப்பார்களா , கிறித்துவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவதை துறப்பார்களா என்று நாம் கேட்பதில்லை. பிராமனர்கள் அனியும் பூனூலே இப்பொழுது ஒரு சம்பிரதாயத்திற்காகத்தான் இருக்கிறது. இதை அவர்கள் அணிந்தால் உங்களுக்கு என்ன அணியாவிட்டால் உங்களுக்கென்ன. அவர்கள் உடம்பு அவர்கள் அணிந்து கொள்கிறார்கள்.
உங்களிடம் யாரும் ஒன்றும் சோற்றுக்கு நிற்கவில்லை . உயிரே போனாலும் தன் தர்ம‌த்தை விட மாட்டேன் என்று எத்தனையோ பேர் வரலாற்றில் இருந்திருக்கிறார்கள். கோவாவில் எத்தனையோ பிரமானர்கள் கிறித்துவத்திற்கு மாறாமல் போர்த்துகீசியர்களால் சித்திரவரதை படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம் படையெடுப்பகளின் பொழுது பல பேர் உயிர் விட்டாலும் விடுவோம் தவிர மதம் மாற மாட்டோம் என்று இருந்திருக்கிறார்கள். சீக்கிய் குரு தெக் பகதூர் அவுரங்கசீபிற்கு பயப்படாமல் தன் மதம் காக்க இன்னுயிரை தியாகம் செய்த வரலாறெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன்

வெடிகுண்டு வெங்கட் said...

டோண்டு சார்,

//நிக்கல்லேன்னா பாஸ்கர் துப்பாக்கியாலே சுட்டிருப்பானே//

அப்போ நீங்களும் இந்தக் கொடுமைய பாக்குறீங்களா சார்? வேணாம் சார். ஒரு ரெண்டு மூணு வருஷம் பிரேக் விட்டு பாருங்கள். கதை அங்கேயே இருக்கும். (அதாவது கதை என்று ஒன்று இருந்தால்).


//மற்ற மெகாசீரியல்கள் இதன் கால்தூசுக்கும் சமமாகாது என்பதைக் கூறவும் வேண்டுமோ?// சார், இந்த பதிவே ஒரு காமெடிக்காக தான் எழுதப் பட்டது. நீங்கள் அதை சீரியஸ் ஆகா எடுத்துக் கொண்டீர்கள் போல இருக்கிறதே?

நீங்கள் என்னுடைய பதிவில் உள்ள மற்ற பதிவுகளை படித்து பார்த்தீர்களே ஆனால் ஆமொதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இருந்தாலும் உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

ஒரு நாள் சீரியல் பாத்ததுக்கே எனக்கு தாங்கல. மத்தவங்க எல்லாம் எப்படி தான் இதப் போயி ஐந்து ஆறு வருடமாக பாகுரான்களோ?

கொடுமை ஐயா கொடுமை.

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.

dondu(#11168674346665545885) said...

@வெடிகுண்டு வெங்கட்

நல்ல சீரியல்கள் வரவில்லை என புலம்புகிறோம். எப்போதாவது அத்தி பூத்தாற்போல எங்கே பிராமணன் போன்ற நல்ல சீரியல்கள் வரும்போது கண்களை மூடிக் கொள்கிறோம்.

நிற்க. கோலங்கள் சீரியலின் கான்சப்ட் நல்லதுதான். எல்லாவித எதிர்ப்புகளையும் மீறி ஒரு பெண் வளர்வது என்பது மனதுக்கு நிறைவாகவே இருக்கிறது. அதுவும் டி.ஆர்.பி. ரேட்டிங் என்பது இரக்கமே இல்லாத ஒரு அரக்கன். ஒரு நிமிடத்தில் அது ஒரு சீரியலை குப்பைத் தொட்டியில் தள்ளிவிடும். இந்த சீரியல் இந்த விஷயம் பொருத்து விடாது மேல் நிலையில் இருப்பது எல்லோராலும் முடியும் சாத்தியம் அல்ல.

என்ன அந்த கான்சப்டுக்கு மட்டும் உண்மையாக இல்லாது பல சம்பந்தமில்லாத விஷயங்களையும் கொண்டு வருவதால் சீரியல் நீர்த்து போகிறது.

//ஸ்போர்ட்ஸ், நியூஸ், மற்றும் மூவீஸ் சேனல் தான் சரிப்பட்டு வரும்//
அங்கு மட்டும் என்ன வாழ்கிறதாம்? மூவீஸ் சேனலில் காவியங்களையா காட்டுகிறார்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

கலங்கிய கண்கள் பனித்தது எப்படி?

//இந்த கொடுமையான காட்சியை போய்ப் பார்த்து விட்டு வருமாறு பொருளாளர் அவர்களையும், வீரபாண்டி ஆறுமுகம் ,துரைமுருகன் மற்றும் கழக முன்னோடிகள் சிலரையும் அனுப்பி வைத்தேன் . அவர்களும் என்னுடன் சேர்த்து கண்கலங்கினர்!
மு.க //
http://tamilkutty.blogspot.com/2008/11/blog-post_21.html

venki (a) baba said...

டோண்டு பதில்கள் பகுதிக்கு:

1) தமிழ்நாடு கேரளா தவிர மற்ற அணைத்து மாநிலங்களிலும் பாஜகா- வுக்கு நல்ல ஓட்டு வங்கி தற்பொழுது உள்ளது. இந்திய அளவிலான கூட்டணியிலும் காங்கிரசை விட பாஜகா முந்துகிறது. ஒருவேளை பாஜகா ஆட்சி அமைத்தால் அந்த ஆட்சி, இந்தியா இதுவரை கண்ட ஆட்சிகளை விட ஒரு சிறந்த ஆட்சியை அளிக்கும் என எதிர்பாக்கலாமா?

2) அணைத்து காங்கிரஸ் காரர்களும் இப்பொழுதும் எப்பொழுதும் ( ஒரு 50 வருடங்களாக) ஒரு குடும்பத்தின் தலைமையையே சாடி இருந்திருகிறார்கள். இந்தியா சுதந்திர போராட்டத்தில் தொண்டாற்றி பல நல்ல தலைவர்களை கொண்டிருந்தவர்களுக்கு ஏன் இந்த நிலைமை?

3) ஏன் நண்பன் ஈரோடு தொகுதியை சேர்ந்தவன். அத்தொகுதியில் காங்கிரஸ் மற்றும் மதிமுக இடையேதான் போட்டி நிலவுகிறது. பாஜக போட்டியிட்டாலும் அது டெபாசிட் கூட பெறாது என்று என் நண்பன் உறுதியாக கூறுகிறான். யாருக்கு ஓட்டுப் போடுவது என்று அவன் குழப்பத்தில் உள்ளான். இப்படி ஒரு சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

ராதாகிருஷ்ணன் said...

வலையுலக பீஷ்மருக்கு எனது பணிவான வணக்கங்கள்!
நான் தங்களின் நீண்ட நாளைய வாசகன் ஆயினும் பின்னூட்டம் இதுவரையில் இட்டதில்லை.

கீழ்வரும் எனது கேள்விக்கு அடுத்த கேள்வி-பதில் பதிவில் பதில் தந்தீர்கள் என்றால் தன்யனாவேன்.

1. நிருமலன் என்ற பெயர் சிவனைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று ஆயினும் சமஸ்கிரதத்தில் அதற்கு சரியான தமிழ் அர்த்தம் என்ன? (நடராஜர் என்றால் நடனத்தின் அதிபதி; சுயம்புலிங்கம் என்றால் தானாக தோன்றிய லிங்கம் என்பது போன்ற சரியான அர்த்தம்)

நன்றி!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது