7/30/2009

பலே எஸ்.வி. சேகர்

இது ஒரு மீள்பதிவு. புது பதிவாகத்தான் போட நினைத்தேன். ஆனால் போன ஆண்டின் பதிவையே சற்றே இற்றைப்படுத்தினாலே போதும் என மனதுக்கு பட்டதாலேயே இந்த மீள் பதிவு. முதலில் பழைய பதிவைப் பார்ப்போம். பிறகு இற்றைப்படுத்துகிறேன்.

“நகைச்சுவையில்தான் இவர் தூள் கிளப்புவார் என நினைத்திருந்தேன். பலே, மனிதர் அதிமுக செயற்குழு/பொதுக்குழு கூட்டங்களுக்கு தனக்கு அழைப்பு அனுப்பாத விஷயத்தில் முனைந்து சிக்சர்களாகவும் கோல்களாகவும் அடித்து தூள் கிளப்பி விட்டார்.

போன ஜூ.வி. இதழில் எப்படியும் தான் வானகரத்தில் நடக்கவிருந்த பொதுக்குழு மீட்டிங்கிற்க்கு அழைப்பில்லாவிட்டாலும் போகப்போவதாக எஸ்.வி.சேகர் அவர்கள் கூறியதை பற்றி கழுகார் ஒரே வரியில் க்ரிப்டிக்காகக் குறிப்பிட்டு பறந்தார். உண்மையாக அந்த மீட்டிங்க் நடந்த தினத்தில் அவர் செய்த வியூகங்கள் கலகலப்பை உண்டாக்கின என்றால் மிகையாகாது. பொதுக்குழு பபரப்பையும் 'ஹைஜாக்' செய்து எல்லோரும் தன்னை பார்க்கும்படி செய்து விட்டார் 'அன்றைய தினத்தில்'.

பிப்ரவரி 13-ஆம் தேதி வானகரம் ஏரியாவே பரபரப்பில் இருந்த போது எஸ்.வி.சேகர் அவர்கள் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் பொருட்டு கோட்டைக்கு சென்று கொண்டிருக்கிறார் என்ற தகவல் சூடாக வந்தது. ஜெயலலிதா அவர்களை வரவேற்பதற்காக பொதுக்குழு வளாகத்தில் காத்திருந்த செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் ஆகியோரது செல்போன்கள் எல்லாம் அடுத்த நிமிஷம் பிஸியாகி விட்டன. ஆனால் எஸ்.வி.சேகரின் மொபைலோ 'ஸ்விட்ச் ஆஃப்'பில்'.

அது போதாது என்று ஜெயலலிதா அவர்கள் காரில் வந்து இறங்கி, "எஸ்.வி. சேகர் வந்தாரா" என்று கேட்க அடிப்பொடிகள் டரியல் ஆனார்கள். அதே சமயம் கோட்டையில் மொத்த மீடியாவும் எஸ்.வி.சேகரை சூழ்ந்து கொள்ள, தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் வைத்தி அங்கே ஆஜராகி, "அண்ணே, அம்மாவை விட்டு போயிடாதீங்கண்ணே" என்று அவர் காலில் விழுந்து கெஞ்ச, ஒரே ரகளைதான். எம்.நடராஜனின் தம்பி ராமச்சந்திரனும் வந்து சேகரிடம் பேசினார். பிறகு மீடியாவிடம் பேசிய சேகர், "நான் அதிமுகவை விட்டு போக மாட்டேன். நான் வாங்கியிருக்கும் புது காருக்கு ஃபேன்ஸி நம்பர் வாங்கவே வந்தேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பினார். :))))))))

சேகர் வானகரம் வந்தபோது பொதுக்குழு முடிந்துவிட்டது. இருந்தும் ஜெயலலிதாவுக்கு பெரிய வணக்கம் வைத்தார். தனக்கு அழைப்பு அனுப்பவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி விட்டார்.

முழு விவரங்களை காண லேட்டஸ் ஜூனியர் விகடன் இதழ் (20-02-2008) பார்க்கவும்.

எது எப்படியோ என்ன செய்தால் காரியம் நடக்குமோ அதற்கேற்ப செயல்பட்டு சேகர் தான் நினைத்ததை சாதித்து விட்டார்.

இது சம்பந்தமாக சில எண்ணங்கள். அதிமுகவில் ஜெயலலிதாவை மீறி செயல் புரியும் தைரியம் யாருக்கும் இல்லை. ஆக, அழைப்பு அனுப்பாத விஷயம் அவருக்கு தெரியாமல் போயிருக்காது. தன் கீழ் இருப்பவர்களை இம்மாதிரி மோதவிட்டு யார் வெற்றிபெறுகிறார்களோ அவருக்கு ஆதரவளிப்பது பல தலைவர்களின் உத்தியே. எல்லோரையும் திரிசங்கு நிலையில் வைப்பதே ஜெயலலிதா அவர்களின் ஸ்டைல். இம்முறை எஸ்.வி. சேகர் சாதித்திருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் அவர் ஒன்றை மறக்கக் கூடாது. அதாவது ஜெயலலிதா அவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி. எஸ்.வி.சேகர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஜெயலலிதாவை ரொம்பவும் நெருங்கி விடக்கூடாது. தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதுவே பலன் தரும்.

அதே சமயம் எந்த சொந்த விஷயத்துக்கும் out of the way உதவி கேட்கக்கூடாது. சோ அவர்கள் சிறந்த பத்திரிகையாளராக செயல்படுவதன் சூட்சுமமே அதுதான். தனக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை பாஜக தந்தபோது, தனது சுதந்திரம் பாதிக்கும் வகையில் தான் செயலாற்ற இயலாது என்று கூறியே அவர் அப்பதவியை ஏற்று கொண்டார். கடந்த 38 ஆண்டுகளில் தனது தனிப்பட்ட விஷயங்களில் யாரிடமும் போய் சிபாரிசுக்கு அவர் நின்றதாகத் தெரியவில்லை. அம்மாதிரி அணுகுமுறையை எஸ்.வி. சேகர் அவர்களும் பாவிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்”.

இப்போது இற்றைப்படுத்தலை பார்ப்போம். வெகு நாட்களாகவே சேகரின் அதிமுக வாழ்க்கை நாட்கள் எண்ணப்பட்டன என்பதில் எனக்கு ஐயமே இல்லை. எப்போது அது முடியும் என்பதுதான் கேள்வி. சாதாரணமாக ஜெயலலிதா என்றாலே வெளிக்கு போகும் அதிமுக உறுப்பினர்கள் மத்தியில் எஸ்.வி. சேகர் மிக பளிச்சென்ற விதிவிலக்காக இருந்தார். அதுவே தலைவிக்கு பொறுக்கவில்லை என்பது க்ளியராகத் தெரிகிறது. மகாபாரதத்தில் கூறப்படும் கணிக நீதியை ஏறக்குறைய மாற்றமேயின்றி அப்படியே பாவிப்பவ்ரகள் நமது அரசியல் தலைவர்கள். அந்த நீதியின் சில அம்சங்கள் இதோ.

தண்டனை வழங்க எப்போதும் தயாராக இருக்கும் அரசனைக் கண்டு குடிமக்கள் அஞ்சுவார்கள். அதே போல எதிரிகளை ஒழிப்பதில் தாட்சண்யமேயின்றி நடந்து கொள்ள வேண்டும். எதிரி முழுமையாக அழிக்கப்படவேண்டும். எதிரி மிக பலவானாக இருந்தால் சமயம் பார்த்து அவனை கொல்ல வேண்டும். அதற்கு சாம, தான, பேத, தண்ட முறைகளை முறையாக பிரயோகிக்க வேண்டும். அம்முறையில் எதிரியை அழித்த பிறகு, அவர்கள் சாவுக்கு வருந்துவது போன்ற பாவனை செய்ய வேண்டும். அம்மாதிரி செய்தால் எதிரியின் நண்பர்கள் இவன் பக்கமே இருந்து விடுவார்கள். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் எதிரிகள் என்பது உறவினர்களையும் சேர்த்து, உள் எதிரிகளையும் குறிக்கும். ஆக மனிதாபிமானம் என்பதை சுத்தமாக கண்பித்தலே கூடாது. இந்த ரீதியிலேயே இந்த கணிக நீதி கூறிக்கொண்டு செல்கிறது.

மீண்டும் சேகர் விஷயத்துக்கு வருவோம். அவர் இத்தனை அவமானங்களை சகித்து கொண்டு கட்சியில் எப்படி தொடர்ந்தார் என்பது பலருக்கு புரியாதிருந்தது. விஷயம் என்னவென்றால், அவராக ராஜினாமா செய்திருந்தால் அவரது எம்.எல்.ஏ. பதவி கட்சித் தாவல் தடுப்பு சட்டப்படி பறிபோயிருக்கும். இப்போது கட்சியே அவரை நீக்கியதால் அவர் கட்சித் தாவியராக கருதப்பட மாட்டார். ஆகவே அவரது பதவி அப்படியே இருக்கும். இனிமேல் அவர் சட்டசபையில் பேச தடை ஏதும் இருக்கக் கூடாது.

அதிமுக வரலாற்றில் சேகர் ஒரு மைல்கல். சாதாரணமாக அதிருப்தியாளர்கள் தலைவியின் காலில் விழுவதுதான் நடந்து வந்துள்ளது. இவர் வித்தியாசமாக நடந்து கொண்டிருக்கிறார் இதுவரைக்கும். இனிமேலும் அப்படித்தான் நடப்பார் என கருதுகிறேன்.

இந்தத் தருணத்தில் திருநாவுக்கரசர் பற்றி பேசாமல் இருக்கவியலாது. தனக்கென ஒரு ஃபால்லோவிங் வைத்திருந்த அவர் தேவையின்றி ஜெயிடம் பலமுறை சரணடைந்தது என் மனதை உறுத்துகிறது. இப்போதும் கூட அவர் பாஜகவை விட்டு அதிமுகவுக்கு திரும்பலாமா என்ற யோசனையில் இருப்பதாக செய்திகளில் படித்தேன். அவ்வாறு செய்தால் அவர் இருக்கும் சுயமரியாதையை இழப்பார் என்பதே நிஜம்.

எது எப்படியானால் என்ன. Sekar has won the war of nerves. ஆகவே மீண்டும் கூறுவேன், சபாஷ் எஸ்.வி. சேகர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

53 comments:

சாலிசம்பர் said...

சேகருக்கு சிறப்பு பரிகார பூஜை காத்துண்டு இருக்கு.

Anonymous said...

S.V.Segarukku aappu pinnaadi varum.

Anonymous said...

டோண்டு ஐயா,

பதிவுக்கு சம்பந்தமில்லாத கேள்வி, optimistic என்பதற்கான சரியான தமிழ் வார்த்தை என்ன?

நன்றியுடன்,
சங்கர்.

dondu(#11168674346665545885) said...

@ ஜாலி ஜம்பர் மற்றும் அனானி,

இதைத்தான் நான் பதிவின் கடைசி இரண்டு பத்திகளில் கூறியுள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//optimistic என்பதற்கான சரியான தமிழ் வார்த்தை என்ன?//
எல்லாம் நல்லபடியாகவே நடக்கும், நாளை நமதே என்னும் மனப்பான்மை, நேர்மறை எண்ணங்கள் என்றெல்லாம் கூறலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//இது சம்பந்தமாக சில எண்ணங்கள். அதிமுகவில் ஜெயலலிதாவை மீறி செயல் புரியும் தைரியம் யாருக்கும் இல்லை. ஆக, அழைப்பு அனுப்பாத விஷயம் அவருக்கு தெரியாமல் போயிருக்காது. தன் கீழ் இருப்பவர்களை இம்மாதிரி மோதவிட்டு யார் வெற்றிபெறுகிறார்களோ அவருக்கு ஆதரவளிப்பது பல தலைவர்களின் உத்தியே. எல்லோரையும் திரிசங்கு நிலையில் வைப்பதே ஜெயலலிதா அவர்களின் ஸ்டைல். இம்முறை எஸ்.வி. சேகர் சாதித்திருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் அவர் ஒன்றை மறக்கக் கூடாது. அதாவது ஜெயலலிதா அவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி. எஸ்.வி.சேகர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஜெயலலிதாவை ரொம்பவும் நெருங்கி விடக்கூடாது. தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதுவே பலன் தரும்.//

நல்ல அறிவுரை டோண்டு சார். இப்படித்தான் முன்பு சரத்குமாரை ஆதரித்து காரியம்(?)ஆனதும் கழட்டி விட்டார். எனவே எஸ்.வி.சேகர் கொஞ்சம் முஞாக்கிரதையாக இருப்பது நல்லது.

//அதே சமயம் எந்த சொந்த விஷயத்துக்கும் out of the way உதவி கேட்கக்கூடாது. சோ அவர்கள் சிறந்த பத்திரிகையாளராக செயல்படுவதன் சூட்சுமமே அதுதான். தனக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை பாஜக தந்தபோது, தனது சுதந்திரம் பாதிக்கும் வகையில் தான் செயலாற்ற இயலாது என்று கூறியே அவர் அப்பதவியை ஏற்று கொண்டார். கடந்த 38 ஆண்டுகளில் தனது தனிப்பட்ட விஷயங்களில் யாரிடமும் போய் சிபாரிசுக்கு அவர் நின்றதாகத் தெரியவில்லை. அம்மாதிரி அணுகுமுறையை எஸ்.வி. சேகர் அவர்களும் பாவிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.//

இது பார்ப்பனர்களின் தனிப்பட்ட குணநலன் ஆயிற்றே. வளர்த்து விட்டவனையே வயிற்றில் எட்டி மிதித்து அவனையும் மிஞ்சி அவன் கட்சியையே கைப்பற்றிக் கொண்டு கட்சித்தலைவனையே யார் என்று கேட்கும் நிலை இன்று நேற்றா வந்தது? அதுக்கு அதிமுகவின் முன்னாள் கொள்கை பரப்பு(?) செயலாளர் ஜெ.ஜெயலலிதாவே சிறந்த சாட்சி ஆச்சே சார்!

அன்புடன்,
கோமண கிருஷ்ணன்,
பழைய வண்ணாரப் பேட்டை.

Anonymous said...

டோண்டு அவர்களே,

எனக்கு ஒரு சின்ன சந்தேகம். பார்ப்பனர்கள் எந்த தப்பு செய்தாலும் அதனை ஆதரித்து ஏதோ பெரிதாக சாதித்து விட்டதாக புளகாங்கிதம் அடைந்து கொள்ளும் நீங்கள் திராவிடர்கள், திராவிடக் கட்சிகள் நல்லதே செய்தாலும் அதனை ஆதரிக்காமல் ஆபாசமாக திட்டி மகிழ்வது ஏன்? இதான் பார்ப்பன ஈனபுத்தி என்பதா?எனக்கு விளக்கமாக பதில்சொல்லுங்கள்.

Anonymous said...

கும்பகோணத்துல குடுமி ராமநாதன் குடுமி ராமதாநன்ன்னு ஒருத்தன் இருந்தான். வேலைமுடிஞ்சதும் அவன் போன இடமே தெரியல.

அதேபோல ஸ்ரீபால், தேவாரம், மலைச்சாமின்னு அரசு அதிகாரிங்களை வளைச்சு போட்டும் அம்மாவை திருப்திப் படுத்த முடியல.

பாவம். தயிர்சாதம் துன்னுட்டு மேடைல கூத்து கட்டுற எஸ்.வி.சேகர் வந்தா ஜெயாவை திருப்திபடுத்த முடியும்?

Anonymous said...

தமிழ்நாட்டு அரசியலை எடுத்துக் கொண்டோம் என்றால்...

பாமக ஒரு சந்தர்ப்பவாத மரம் வெட்டும் கட்சி.

மதிமுக - கொள்கையே இல்லாத ஒரு கட்சி

விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் இதெல்லாம் xxxx xxxx xxxx.

காங்கிரஸ் இத்தாலிக்காரியின் கைகளில் இருக்கு.

விஜயகாந்த் ஒரு தெலுங்கர். கோழி கூவி பொழுது விடியாது.

திமுக ஊழல் மலிந்த குடும்ப கட்சி.

எனவே இவை எல்லாம் வைத்து பார்க்கும்போது நமக்கு அதிமுகதான் பிடிக்கிறது.

ஏன்னா, தீவிரவாதத்தை ஒழிப்பதாகட்டும், மக்கள் ஒற்றுமையாக இருப்பதாகட்டும், புலிகளை நசுக்குவதாகட்டும், உயிர்ப்பலி தடை கொண்டு வருவதாகட்டும். எல்லாமே நம் மனசுக்கு பிடித்தமான செயல்கள்.

எனவே மாநிலத்தில் அதிமுகவும், மத்தியில் பாஜக(ஆர்.எஸ்.எஸ்) துணையோடு ஆட்சி செய்தால் நாடு சுபிட்ஷமா இருக்கும் என்று நினைக்கிறேன்.

வரதராஜன்,
பார்த்தசாரதி கோவில் சமீபம்,
சென்னை.

Anonymous said...

டோண்டு ஜயா,

இன்னும் சற்று நேரத்தில் தொண்டன் என்றோ குண்டன் என்றோ உங்களை திராவிட வெறிபிடித்த தீவிரவாதிகள் திட்டப்போவது உறுதி.

ப்ராமண துவேஷத்தைத்தவிர அவர்களுக்கு வேறு என்ன தெரியும்? கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?

வலையுலக துக்ளக்

Anonymous said...

ப்ராமணர்கள் தீவிரமான அரசியலில் குதித்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல் நடத்தும் திராவிட தீவிரவாத கட்சிகளை நாட்டில் இருந்து அப்புறப்படுத்தி ராமராஜ்யம் அமைக்க பாடுவடுவோம்.

ஜெய்ஹிந்த்.

Anonymous said...

தற்போது அமுகவில் தொண்டன் என்ற பெயரில்; குண்டர் கும்பல்கள் இப்பதிவை கிண்டல் அடித்து எழுதிக் கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தபடாத தகவல்கள் தெரிவிக்கின்றன!

Anonymous said...

வழக்கமாக இங்கே பின்னூட்ட வரும் நம் பாலாவை காணவில்லையே டோண்டு சார்?


கிருஷ்ணகுமார்.

Anonymous said...

//ார்ப்பனர்கள் எந்த தப்பு செய்தாலும் அதனை ஆதரித்து ஏதோ பெரிதாக சாதித்து விட்டதாக புளகாங்கிதம் அடைந்து கொள்ளும் நீங்கள் திராவிடர்கள், திராவிடக் கட்சிகள் நல்லதே செய்தாலும் அதனை ஆதரிக்காமல் ஆபாசமாக திட்டி மகிழ்வது ஏன்? இதான் பார்ப்பன ஈனபுத்தி என்பதா?எனக்கு விளக்கமாக பதில்சொல்லுங்கள்//

உனக்கு சொந்த புத்தி கிடையாதா.

திராவிடமணி

Anonymous said...

வந்துட்டன்!!!

பின்னூட்ட பாலா

Anonymous said...

//S.V.Segarukku aappu pinnaadi varum//

stalinkku athukku muunadi varuthu
from madurai

N Suresh said...

அன்புள்ள ஐயா

எனது கருத்துக்களை வெளிப்படையாக சொல்கிறேன். தவறு இருந்தால் சொல்லவும்.

எஸ்.வி சேகர் இப்போது எம்.எல்.ஏ வாக இருக்கிறாரா இல்லையா என்று கொஞ்சம் குழப்பமாக உள்ளது ( உங்களின் பதிவால் அல்ல, வெளியே காணும் குழுப்பத்தால்)

சோவை நீங்கள் பாராட்டுவது என்னமோ நியாயமாக படவில்லை. நீங்கள் குறிப்பிடும் அளவிற்கு உயர்ந்த ஒரு மனிதராக சோ அவர்கள் இருந்திருந்தால் அவர் பஜகா கொடுத்த எம்பி பதவியை வேண்டாம் என்று தானே சொல்லியிருந்திருக்க வேண்டும்.

சோவை விட எஸ்.வி. சேகர் பரவாயில்லை என்று தோன்றுகிறது. குறைந்த பட்சமாக எஸ்.வி சேகர், அவருடைய கட்சியின் விலாசமும் அதற்கேற்ப கருத்தும் குழப்பாமல் தெளிவாக சொல்கிறாரே!

Anonymous said...

//வழக்கமாக இங்கே பின்னூட்ட வரும் நம் பாலாவை காணவில்லையே டோண்டு சார்?

கிருஷ்ணகுமார்.//

ஆடு நனையுதே என்று ஓனாய் ஒன்று அழுததாம்.

ரவி said...

இந்த பதிவை கண்டிப்பாக நான் ரசிக்கவில்லை...உங்கள் கருத்தும் எனக்கு ஏற்புடையது அல்ல...ஆனால் அந்த பின்னூட்டம் நான் போடவில்லை...வழக்கம்போல் மலேசியா மூர்த்தியின் ரீ எண்ட்ரி...நீக்கவும்..

Anonymous said...

பதிவுக்குச் சம்பந்தம் இல்லைதான், என்றாலும் டோண்டு சார் பார்க்க இச்சுட்டி.
சரவணன்

Anonymous said...

உனக்கு நீயே பல பேருகளில் பின்னூட்டம் போட்டுக்கறீயேடா கெழட்டு பாடு. இதுக்கு பதிலா xx xx, xx xx xx xx xx.

கோமணகிருஷ்ணன்

Anonymous said...

கோமனகிருஸ்ணன், இன்னும் நீ டாக்டர் பாக்க போகலியா. மருந்து ஒழுங்க சாப்புடு.
உனக்கு பைத்தியம் நிச்சயம் குணமடையும். நம்பிக்கையை இழக்க வேண்டாம்
யாம் இருக்க பயம் ஏன். இந்த சரவணன் இருக்க பயம் ஏன்.

dondu(#11168674346665545885) said...

இன்று சனிக்கிழமை. திருவல்லிக்கேணி நூலகத்துக்கு செல்ல வேண்டும். பின்னூட்டங்களை வந்தபின் மட்டுறுத்துகிறேன்.

கோமணகிருஷ்ணன் உங்கள் பின்னூட்டங்களை வந்தபின் மட்டுறுத்தி நிராகரித்து கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கருவேலம் பூ said...

கண்டிப்பாக சேகருக்கு பூஜை உண்டு. தற்பொது அல்ல அம்மாவுக்கு தெரியாதா யாரை எப்போது எப்படி நடத்த வேண்டும் என்று ( ஆடிட்டருக்கு செருப்படி ஞாபகம் இருக்கா ?)

கருவேலம் பூ said...

சேகருக்கு கண்டிப்பாக சிறப்பு பரிகார பூஜை காத்துண்டு இருக்கு.

ஆடிட்டருக்கு செருப்படி ஞாபகம் இருக்கா?

dondu(#11168674346665545885) said...

கருவேலம்பூ அவர்களே,

நீங்கள் கூறியது நடக்கும் வாய்ப்பு உண்டுதான். அதைத்தான் பதிவின் கடைசி இரு பத்தியில் கோடி காட்டியுள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Dondu avargale, en peyaril pala poligal aabaasa pinnoottam ittullaargal. i will not write bad words

komanakrishnan

dondu(#11168674346665545885) said...

அனானியாக வந்தால் அதுதான் கஷ்டம் கோமணகிருஷ்ணன். உங்கள் அடையாளம் உங்களுக்கு மட்டும் வேண்டுமாயின் பிளாக்கர் பின்னூட்டம்தான் சிறந்த வழி.

இது பற்றி நான் பல பதிவுகள் போட்டு விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

"பதிவு" நடந்த நிகழ்வை பற்றி, கூடவே உங்கள் கருத்தையும் சொல்லியிருக்கிறீர்கள்.
பின்னூடங்கள் பதிவை பற்றி மட்டுமல்லாமல் உங்களை தாக்குவது போலே உள்ளது.
அதை ஏன் அனுமதிக்கிறீர்கள்.

வால்பையன்

Anonymous said...

ஜெயலலிதா செய்வது பயம் கொண்ட அரசியல். தன்னை விட வேறு யாராவது பலம் கொண்டு விட கூடாது என்ற தற்காப்பு அரசியல்
கருணாநிதியும் செய்வது அதே ஆனால் அரசியல் தனது இரு பிள்ளைகளுக்கு மத்தியில்.

இந்த சுயநல நோக்கம் கொண்ட தலைவர்கள் தான் தமிழ்நாட்டின் வரம் என்றால் அதை சாபகேடு என்று தான் சொல்ல வேண்டும்

dondu(#11168674346665545885) said...

//இந்த சுயநல நோக்கம் கொண்ட தலைவர்கள் தான் தமிழ்நாட்டின் வரம் என்றால் அதை சாபகேடு என்று தான் சொல்ல வேண்டும்//
என்ன செய்வது, எல்லா மாநிலங்களுக்கும் குஜராத் முதலமைச்சர் மாதிரி கிடைப்பார்களா என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Baski said...

Well done S.Ve.Sekar.

My best wishes to all other BRAVE admk members... good luck.

Prabhu S said...

@luckylook & others who critizize Mr. Raghavan for supporting Sve.Shekar,

I think you guys have inferiority complex for not being a Bhramin. Whatever Mr.Raghavan wrote you guys just hanging over he supported him because he is bhramin he didn't support because he is a non-Bhramin. What the heck ?

If you are not interested with what he has published here, leave your comment appropriate to that and not against all the Bhramins.

Though I'm not ok with Mr.Raghavan's views over this issue, I'm much disgusted too see your comments.

You guys should think about that , He critizied Jayalalitha's attitude in this and she herself a bhramin

dondu(#11168674346665545885) said...

//@luckylook & others who critizize Mr. Raghavan for supporting Sve.Shekar,//
இது என்ன புதுக்கதை. லக்கிலுக் இப்பதிவில் எங்குமே பின்னூட்டமிடவில்லையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Prabhu S said...

//டோண்டு அவர்களே,

எனக்கு ஒரு சின்ன சந்தேகம். பார்ப்பனர்கள் எந்த தப்பு செய்தாலும் அதனை ஆதரித்து ஏதோ பெரிதாக சாதித்து விட்டதாக புளகாங்கிதம் அடைந்து கொள்ளும் நீங்கள் திராவிடர்கள், திராவிடக் கட்சிகள் நல்லதே செய்தாலும் அதனை ஆதரிக்காமல் ஆபாசமாக திட்டி மகிழ்வது ஏன்? இதான் பார்ப்பன ஈனபுத்தி என்பதா?எனக்கு விளக்கமாக பதில்சொல்லுங்கள். //

I've taken the above comment is from luckylook as it was published with his name .. Is this from "Anony" ? If so, appologies to luckylook.

கிருஷ்ண மூர்த்தி S said...

பாஸ்கி முதல் கடைசி நான்கு பின்னூட்டங்கள் தான் ஜூலை முப்பத்தொன்றாம் தேதி,. அதற்கு முந்தினதேல்லாம் சென்ற பெப்ருவரியில் ஒரிஜினல் பதிவுக்குப் போட்ட பின்னூட்டங்கள் போல.

அதனால் தான் லக்கிலூக் பெயர்க் குழப்பம் இன்றைக்கு வந்திருக்கிறதென்றே எண்ணுகிறேன்.

அப்புறம், எஸ் வீ சேகர் மாதிரி துணுக்குத் தோரணம் கட்டுகிற காமெடியன்களை எல்லாம் சீரியஸா எடுத்துக்க வேண்டுமா என்ன?

சேகரை விட, முழுநேரக் காமெடியன்கள், இரண்டு கழகங்களிலுமே நிறையப் பேர் இருக்கையில், இந்தத் துணுக்குத் தோரணம் ஒன்று கழன்றதால், என்ன ஆகி விடப் போகிறது?

Anonymous said...

எலலா பார்ப்பனரும் சேகரைக் கைகழுவி விட்டாச்சு...ஏனா அவரு பார்ப்பனரின் ஜென்மவிரோதி மு.க காலிலே விழுந்தனாலே.

ஆனா ஒரே ஒரு பார்பப்னரு மட்டும் சப்போட்டு பண்றாரு.

கண்டு பிடி...கண்டுபிடி...

Anonymous said...

அவாளுடைய நடவடிக்கை சரி இல்லை என்ற காரணத்தால் அவாள் கோபப்பட்டு அவாளை அவாளின் கட்சியிலிருந்து நீக்கியதற்கு அவாளின் அதரவாளர் அவாளின் பாச உணர்வோடு பதிவு போட்டால் !

செழியன் said...

அதிமுகவின் கூடாரம் கலைகிறது

அனைவருக்கும் இலவச டீவி

அரிசி ஒருகிலோ ஒரு ரூபாயில்

அன்னையர் குல நலத்திட்டங்கள்

அண்ணாவின் அற வழியில் கலைஞர்

அடுக்குமாடி குடியிருப்புகள் சாமானியர்க்கு

அரசு ஊழியர் நலம் காக்கும் அரசு

அனைத்து தரப்பும் மகிழ்ச்சிக்கடலில்

அன்னை சோனியாவின் நம்பிக்கை நட்சத்திரம்

அரசு பேரூந்துகளின் ஆனந்த களி நடனம்

அல்லா போற்றும் அரசு

அன்பர் புகழ்பாடும் அரசு

அறிஞர் பாரட்டும் அரசு

அரசு மான்ய விலையில் மசலாப் பொருட்கள்

அன்றாடம் காட்சிகளுக்கு அருமையான மருத்துவ காப்பீடு

அம்பிகள் ஜம்பம் இனி பலிக்காது

பல அனிதா ராதகிருஷ்ணன்கள் கழகத்தில் இணைவர்


தென்மாவட்டங்கள் சினிமா கவர்ச்சியில் மயங்கி ,இரட்டை இலை வாக்கு வங்கியாய் இருந்ததை தனது சாதுர்யத்தால்,ராஜ தந்திரத்தால் முழுவதுமாய் மாற்றி MRT ஐ, வாழும் ராஜ ராஜ சோழனின் கழக கோட்டையாய் மாற்றிய மாவிரன்
அஞ்சா நெஞ்சன்
அண்ணன் அழகிரிதான் அடுத்த முதல்வர்.

Anonymous said...

தொடரும் 32 கேள்விகள்

1.சைஸ் ஜீரோ திகில் பேஷன் பற்றி?
(ஒல்லிக் குச்சி உடம்புக்காரிகள்)
2. சில்மிஷ சேட்டைகள் செய்யும் பாதிரியார்கள் பற்றி?
3.இவர்களுக்கும் கபட சாமியார்களுக்கும் என்ன வித்யாசம்/
4.இதுமாதிரி பாலியியல் பலாத்கார தகவல்கள் இஸ்லாமில் ?
5.பர்கூரில் நாமினேசனில் கோட்டை விட்ட தேமுதிக?

Anonymous said...

dondu avargale

many poli komana krisnans writing bad posts in my name. be warning

real komanakrishnan

Anonymous said...

//Anonymous said...

dondu avargale

many poli komana krisnans writing bad posts in my name. be warning

real komanakrishnan

// அட்ரா சக்க! அட்ரா சக்க ! said...

கோமனகிருஸ்ணன், இன்னும் நீ டாக்டர் பாக்க போகலியா. மருந்து ஒழுங்க சாப்புடு.
உனக்கு பைத்தியம் நிச்சயம் குணமடையும். நம்பிக்கையை இழக்க வேண்டாம்
யாம் இருக்க பயம் ஏன். இந்த சரவணன் இருக்க பயம் ஏன்.//

கோமனகிருஸ்ணன்@gmail.com
என்ற ப்ளாகர் கணக்கு ஓபன் பண்ணி கமெண்ட் போட்டு ஜமாய்க்கவும்.

போலிகள் ஓடிவிடுவர்.

இருக்கவே இருக்கு டோண்டு புகழ் எலிக்குட்டி சோதனை

ஒரு புகைபடமும் இணைத்துவிட்டால்

100 % பாதுகாப்பு?

மங்களம் உண்டாகட்டும்.

சத்யமே ஜெயம்

பகவான் கிருபை உண்டு
உங்கள் நீண்ட கால நண்பர் டோண்டுவின் ஆதரவும் தொடரும்

வஜ்ரா said...

//
//optimistic என்பதற்கான சரியான தமிழ் வார்த்தை என்ன?//
எல்லாம் நல்லபடியாகவே நடக்கும், நாளை நமதே என்னும் மனப்பான்மை, நேர்மறை எண்ணங்கள் என்றெல்லாம் கூறலாம்.
//

Optimism என்றால் "நன்னம்பிக்கை" என்று விக்ஷனரி கூறுகிறது

Rajaraman said...

சீன கைக்கூலி கம்யுனிச கைத்தடி ராமுக்கு உண்மையிலேயே ஈன மானம் இருந்தால் உடலில் இந்திய ரத்தம் ஓடினால் (புரியும் என்று நினைக்கிறேன்) The Hindu என்ற பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த கழிசடையை போன்ற தேச விரோத சக்திகளை இந்திய தேச பற்றுள்ள அனைவரும் பகிஷ்கரிக்க வேண்டும்..

Sathya said...

வணக்கம் ஐயா - நம் சந்திப்பின் புகைப்படங்கள் இங்கு உள்ளன.

http://picasaweb.google.com/chinnappaiyan/dondu

passerby said...

Optimist is antonym for pessimist.

Both indicate some blind belief.

Optimists believe blindly that only good will happen. They disregard all that can stand in the way of such good things becoming realiites. He may believe that a terminally ill person will survive even after the doctor has given up all hopes. Opitimists are invariably believers in gods or a Supreme Powerful deity, which encourages such gut feeling.

Pessimists believe blindly that only bad will happen. They disregard all obstacles that prevent such bad becoming a reality. They believe that a healthy person will die even after doctor has opined nothing is wrong and the patient will recover in in good health. Pessimists do not believe in God because, the belief preempts all pessimism.

From the above, you can understand that both are bad traits in us. The personality developers talk about only the trait, Positive Thinking, which borders on optimism, yet with a vareity of checks and balances.

The right position is to take arms against the sea of troubles and get your way. Failing which, accept the overwhelming negative reality and learn to live with it - by making the best of the worst world.

அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற்றாக வேண்டும்.

Anonymous said...

The pessimist complains about the wind; the optimist expects it to change; the realist adjusts the sails.”

- William Arthur Ward

Anonymous said...

32 கேள்விகளின் தொடர்ச்சி

6.சீன சாக்லேட் மற்றும் மொபைல்களுக்கு இந்தியாவின் தடை சீனாவின் கோபத்தை போராய் மாற்றுமா?
7.மாநில ஆளுநராக இருந்தவர்களில் யார் செம்மையானவர்?காரணம்?
8.மாநில ஆளுநராக இருப்பர்களில் யார் செம்மையானவர்?காரணம்?
9.இரண்டு நிலைகளிலும்( கேள்வி 8,7),பதவிக்காலத்தில் மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானவரின் பதவிக்காலம் எது ?யார்? எந்த மாநிலம் ?உங்கள் விமர்சனம்?
10. அவர்களில் மாவீரன்,100 % நேர்மையாளர் யார்? அவரின் பராக்கிரமாம் பற்றி?
11. இந்தியாவின்அரிஹந்த் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் நம் கட்ல் பலத்தை கூட்டியதால் ,இனி சீனாவின் வாலட்டம் இலங்க பகுதியில் ஒடுங்குமா?
12.சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை கேட்கும் கருணாநிதியின் கோரிக்கை எடுபடுமா?
13.இந்தியாவின் மக்கள் தொகை 112 கோடியைத் தாண்டிவிட்டதே! உணவுக்கு ?
14.அவ்வப்போது எழும் ராட்சத அலைகளால் மும்பை, சென்னை,குமரி என்னவாகும்? இதுவும் குளேபல் வார்மிங் தானா? விளக்கவும்?
15.கமல் மகள் ஸ்ருதி நடித்துள்ள இந்தி படம் லக் பார்த்தீர்களா?எப்படி?
16.முதல்வரின் கோபாலபுரம் வீடு இலவச மருத்துவமனையாகிறது என்ற செய்தி உணர்த்துவது ?
17.கலைஞர் காப்பீட்டு திட்டம்-இதுவும் பணம் பண்ணும் கலைஞரின் தந்திரம் எனும் சிலரின் புள்ளி விவரக் குற்றச்சாட்டு பற்றி?
18.தமிழ் நாட்டில் எம்.எல்.ஏ.க்களுக்கு இனி ரூ. 50 ஆயிரம் சம்பளம்,இலவச வீட்டு மனை அடுத்து? இப்படியே போனால்?
19.தமிழ்கத்தில் உள்ள கந்து வட்டி, கட்டப் பஞ்சாயத்தை ஒழிக்க இயலுமா?
20.கந்து வ்ட்டி,மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி,தின வட்டி, சினிமாத் துறை வட்டி விரிவாய் விளக்கவும்?
21.அநியாயமாய் இப்படி வட்டி வாங்கி
மற்றவரை வாட்டியவர்களுக்கு நரகத்தில் என்ன தண்டனை கிடைக்கும்?
22.ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கிய அனுபவம் உண்டா?அப்படி என்ன அங்கே இருக்கு?
23.ராமாயணத்தை இனியும் விமர்சிப்பேன் -முதல்வர் கருணாநிதி -உங்கள் விமர்சனம்?
24.பயிற்சி டாக்டர்கள் உதவித் தொகை உயர்வு-போராட்டம்-முதல்வரின் பிடிவாதம்-கடைசியில் கனிந்த்தது எப்படி?இதுவும் ஸ்டாலினாலா?
25.சமச்சீர் கல்வி திட்டம் வரமா? சாபமா?
26.கர்நாடக இசைக் கலைஞர் டி.கே. பட்டம்மாள் பற்றி?
27.தீவிரவாதம்- பயங்கரவாதம்- வித்தியாசம் எதில்-இதில் எது முந்துகிறது?மனித குலத்தை அழிக்க?
28.பாலாற்றை பாலைவனமாக்க செய்யும் ஆந்திராவின் அணைத்திட்டம்?
29.ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலின் பேட்டி-தினமணியில்-
ஜெயலலிதாவின் தைரியம் பிடிக்கும்-இது எப்படி இருக்கு?
30. இந்துக் கோயில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்க அரசு ஆலோசனை பற்றி?
31.வாக்குப்பதிவு இயந்திரம் மீதான புகாரை மறுக்கும் கமிஷன் பற்றி?
32. (இது பற்றி முன்பு பதிவு போட்டுள்ளீர்கள்)-இந்திய தண்டனை சட்டம் 497-ல் திருத்தம் செய்ய கோரிக்கை முதல்வருக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கடிதம் பற்றி உங்கள் கருத்து?

Anonymous said...

//ந்தத் தருணத்தில் திருநாவுக்கரசர் பற்றி பேசாமல் இருக்கவியலாது. தனக்கென ஒரு ஃபால்லோவிங் வைத்திருந்த அவர் தேவையின்றி ஜெயிடம் பலமுறை சரணடைந்தது என் மனதை உறுத்துகிறது. இப்போதும் கூட அவர் பாஜகவை விட்டு அதிமுகவுக்கு திரும்பலாமா என்ற யோசனையில் இருப்பதாக செய்திகளில் படித்தேன். அவ்வாறு செய்தால் அவர் இருக்கும் சுயமரியாதையை இழப்பார் என்பதே நிஜம்.//


avar soodu kanda ponnai.
aanalum vithi , avar enna seyvaar paavam.

ராஜரத்தினம் said...

திரு டோண்டு அவா(ர்களு)க்கு,
உங்களின் இன உணர்வு எப்படியும் வெளிவரும் என்று எனக்கு தெரியும். அதனால்தான் இன்று முதல் பின்னூட்டம்.உங்களின் பல பதிவுகளுக்கு நான் ரசிகன். ஆனால் இந்த போலி மதசார்பின்மை போல் உங்களின் போலி நடுநிலைமை பற்றியும் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எஸ்.வி.சேகருக்கு என்ன சபாஷ்.Bullshit. எந்த காலத்திலும் எஸ்.வி.சேகருக்கு ஜெயலலிதா தேவை இல்லை. ஆனால் இது போன்ற போலிகளை கட்சியில் வைத்திருந்தது ஜெயலலிதாவின் தலை எழுத்து. எஸ்.வி.சேகருக்கு அந்த கட்சியில் சேரும்போதே அவருக்கு ஜெயலலிதாவை பற்றி நன்றாக தெரியும். தனி மனித எதிர்ப்புதான் அதிமுக. அதனை நம்பாதவர்கள், அதிமுக வில் இருக்கமுடியாது. அதிமுக அழிந்தாலும் சரி. எங்களை போன்றோர் ஆதரவு இருக்கும் வரை எங்கள் ஏகாம்பரநாதரும் சரி, உங்கள் திருப்பேரை பெருமானும் சரி அதிமுகவை அழியவிடமாட்டார் என்று நம்புவோம். கட்சியில் சேர்ந்தபோது காஞ்சி சங்கராச்சாரியரின் போட்டோவை ஹாலில் இருந்து எடுத்தவர், எம்.எல்.ஏ ஆனபின்னும் அவர் அப்படித்தான் இருக்கவேண்டும்.ஆனால் அவர் ஸ்டாலின் கூடவும், தயாநிதி மாறனுடனும் போட்டோ எடுத்த அன்றே அவர் அதிமுக வில் இருக்கும் அடிப்படை தகுதியை இழந்துவிட்டார். உடனே இதுக்கு அந்த அம்மா கூடத்தான் ஸ்டாலின் கூட போட்டா எடுத்துக்கொண்டாரே என்று மொக்கையாக யோசிக்கவேண்டாம். அதுவும் அந்த தயாநிதிமாறன் ஜெயாடீவி செய்தி சேனலுக்கு கொடுத்த தொல்லை எந்த உண்மை அதிமுக காரனுக்கும் கோபம் ஏற்படுத்தும்.அந்த அடிப்படை குணம் கூட இல்லாத ஒரு போலி எங்கு இருந்தாலும் அது அந்த இடத்திற்குதான் அவமானம். சபாஷாம். சபாஷ். Bullshit.

நிஜாம் கான் said...

டோண்டு சார்! எல்லாரும் “போலி டோண்டு” பத்தி பேசுறாங்களே! நாம இந்த ஏரியாவுக்கு புதுசுங்கிறதால அந்தக் கதய ஒரு பதிவா/மீள் பதிவா போடக்கூடாதா?
பி.கு: இதை டோண்டு பதில்கள் பகுதியில் பயன்படுத்தி இரண்டே வரிகளில் பதிலளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

dondu(#11168674346665545885) said...

@எதிரொலி நிஜாம்
எனது வலைப்பூவில் உள்ள போலி டோண்டு என்னும் கேபலில் சுட்டினால் 11 பதிவுகள் இருக்கும். அவற்றைப் பாருங்கள். தெளிவு பிறக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

// dondu(#11168674346665545885) said...

@எதிரொலி நிஜாம்
எனது வலைப்பூவில் உள்ள போலி டோண்டு என்னும் கேபலில் சுட்டினால் 11 பதிவுகள் இருக்கும். அவற்றைப் பாருங்கள். தெளிவு பிறக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//


11 பதிவின் சுருக்கத்தை ஒரு பதிவாய் போட்டால் நலம் பயக்கும்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது