7/06/2009

ஜெயா டிவி நேர்காணல் - 08.07.2009

போன மாதம் காலைமலருக்காக என்னை பேட்டி எடுத்தார்கள். அது காலை ஜெயா செய்திகளுக்கு பிறகு சிறப்பு விருந்தினர் பகுதியில் 08.07.2009 காலை 07.30 மணி அளவில் ஒளிபரப்பப்படும் என்னும் தகவல் கிடைத்தது. இது ந்ண்பர்களின் தகவலுக்கு மட்டுமே.

வலைப்பூக்கள் பாவிப்பது, அவற்றில் நான் சாதாரணமாக என்னவெல்லாம் எழுதுவேன் ஆகிய கேள்விகள் கேட்கப்பட்டன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

14 comments:

Unknown said...

வாழ்த்துக்கள் டோண்டு. ஒலிபரப்பானபின் ஒளிநாடாவை இணையத்தில் ஏற்றுங்கள்.முடிந்தால் என்ன கேள்விகள் கேட்கப்பட்டன, என்ன பதில் சொன்னீர்கள் என்பதை தனிபதிவாக போடலாமே?பேட்டி ஒளிபரப்பானபின் போட்டாலும் சரிதான்

அ.மு.செய்யது said...

ஏற்கெனவே ஜெயாடிவியில் இதே காலைமலரில்

துபாஷி டோண்டுவுடன் ஒரு பேட்டி வந்ததில்லையா ??

இப்போது வ‌லைப்ப‌திவ‌ர் டோண்டுவுட‌னா ??

வாழ்த்துக்க‌ள் !!!

R.Gopi said...

வாழ்த்துக்கள் டோண்டு சார்.

தகவலுக்கு நன்றி......நண்பர் செல்வன் கூறியது போல், ஒளிநாடாவை இணையத்தில் ஏற்றினால், என்னை போன்ற வெளிநாடு வாழ் ரசிகர்களும் (??) கண்டு களிக்க ஏதுவாகும்.

முடியாத பட்சத்தில், அது பற்றி, ஒரு விரிவான பதிவு போடலாம்......

மங்களூர் சிவா said...

wow கலக்கல்! 8ம் தேதி நிகழ்ச்சியை பாத்துட்டு வந்து பின்னூட்டறேன்
:)))

Anonymous said...

ஜெயா டிவியில் காலை மலர் பேட்டிக்கு வாழ்த்துக்கள்

கேள்விகள்:

எம்.கண்ணன்

1. கொடநாட்டில் ஜெ. மற்றும் சசியின் நாட்கள் எப்படி இருக்கும் ? என்னதான் அலைச்சலுக்குப் பிறகு ஓய்வு என்றாலும் மாதக்கணக்கில் ஒருவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தால் மக்கள் எப்படி நம்பிக்கை கொள்வார்கள் ? எப்படி இவரை நம்பி நீங்கள் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டீர்கள் ? இல்லை இது கலைஞருக்கும் ஜெ.வுக்கும் உள்ள மறைமுக டீலா ?

2. இவ்வாறு ஓய்வுக்குப் போவது பற்றியும், தினசரி அறிக்கை விடுவது பற்றியும் பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிப்படையாக எழுதியும், அவரது அட்வைசர்களான சோ போன்றோரும் சொல்லியிருக்கக்கூடும். இன்னமும் தன்னை மாற்றிக் கொள்ளாமல் அரசியல் நடத்தும் ஜெ.வின் மனதில் என்னதான் பிளான் இருக்கும் ? ஓடு மீன் ஓட கதை போல் கருணாதியின் மறைவுக்காக காத்திருக்கும் – playing the waiting gameமா ?

3. வடிவேலு, விவேக் - இருவருக்கும் (அல்லது அவர்களின் கதை இலாகாவிற்கும்) கற்பனை வறட்சி போல தெரிகிறதே ? இவர்களுக்குப் பின் வேறு நல்ல காமெடியன்கள் வரவில்லையே ?

4. எல்லோரையும் சும்மா வாயால் ஓட்டிக்கொண்டிருக்கும் (பாடி லாங்வேஜ் துளியும் இல்லாத) சந்தானத்தை எப்படி ரஜினி எந்திரனில் தன் கூட காமெடியனாக சேற்றுக் கொண்டார் ?

5. சமீபத்தில் எழுத்தாளர் சத்யராஜ்குமார் எழுதியுள்ள கதையில்
(http://inru.wordpress.com/2009/06/08/twilight/) (தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்) ஒரு வயதான தந்தை 'ஹிண்டு பேப்பர் படிக்கணும்' என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். இதை பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஹிண்டு பேப்பரை பலரும் தற்போதெல்லாம் வெறுக்க ஆரம்பித்துவிட்டாலும் (என்.ராமின் கம்யூனிஸ்ட் சார்பு, இலங்கை பற்றிய கண்ணோட்டம், இன்ன பிற காரணங்களுக்காகவும்), மாற்று பேப்பர்களான டைம்ஸ், டெக்கான் கிரோனிக்கிள் வ்ந்திருந்தாலும், அமெரிக்காவிலிருந்தபடியே நெட்டில் ஹிண்டுவை அதே பேப்பர் வடிவத்தில் படிக்க வசதி இருந்தாலும், இப்படி சென்னையில் உட்கார்ந்து ஈசி சேரோ இல்லை காற்றாட ஹிண்டு பேப்பர் படிக்க வேண்டும் என்கிற ஆசை ஏன் இன்னும் பலருக்கும் உள்ளது ? (முதல்வன் படத்திலும் மணிவண்ணன் பேசுவதாக சுஜாதா வசனம் எழுதியிருப்பார்) - இதன் உளவியல் காரணங்கள் என்னவாக இருக்கும் ? யாரும் தினகரனோ, தினமணியோ, தினமலரோ, எக்ஸ்பிரசோ படிக்கவேண்டும் என அங்கலாய்ப்பதில்லை ?

6. மூக்குப் பொடி போடும் பழக்கம் தற்போது மிகவும் குறைந்துவிட்டது போலுள்ளதே ? முன்பெல்லாம் பெரிசுகள்தாம் பொடிபோடுவர். தற்போதைய தலைமுறையினர் (பெரிசுகளும்) பான் மசாலா, குட்கா, சிகரெட் என மாறிவிட்டனர் போலுள்ளதே ? பொடி போடுவதில் அப்படி என்ன இன்பம் இருக்க முடியும் ?

7. தற்போது சிகரெட் பாக்கெட்டுகளில் வரும் படம் (மே- 31க்குப் பிறகு) எத்தனை பேரை சிகரெட் குடிப்பதை குறைக்கச் செய்யும் ? உங்கள் சிகரெட் பிடிக்கும் நண்பர்கள் இந்த படங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் ?

8. ஒரு கூட்டத்தில் அல்லது திருமண ஹாலில் 10 - 15 பிராமண இளம்பெண்கள் இருந்தால் அதில் ஐயங்கார் பெண்கள் மாத்திரம் கூடிய அழகுடன் தெரிகிறார்களே ? ஏன் அப்படி ? ஐயங்கார் பெண்களிடம் ஏன் அழகு கூடுதலாக இருக்கிறது (பெரும்பாலும்) ??

9. சாலையில் நீங்கள் 'உங்கள்' காரில் (அல்லது இன்னொருவருடன் டூவீலரில்) சென்று கொண்டிருக்கும் போது குறுக்காக அல்லது ராங்காக வரும் ஆட்களை என்ன சொல்லி திட்டுவீர்கள் ? உங்களுக்கு வரும் கோபத்தில் வரும் முதல் கெட்ட வார்த்தை எது ? (சில சமயம் சொல்லா விட்டாலும், மனதிற்குள் தோன்றும் கோபமான வார்த்தை எது ?)

10. ஐடிபிஎல் நினைவுகள் பதிவுகள் குறைந்துவிட்டனவே ? உங்களின் பெரும்பாலான வாசகர்களுக்கு அந்தப் பதிவுகள்தான் பல விஷயங்களைச் சொல்கிறது.

அக்னி பார்வை said...

மிக்க மகிழ்ச்சி...

Anonymous said...

வாழ்த்துக்கள்.

பாண்டிய நக்கீரன்

ரமணா said...

1.வருமானவரிச் சலுகைகள் எதிர்பார்ப்பு பெய்த்து விட்டதே?
2.பொதுத்துறை அளிக்கும் (வீட்டு வசதி)சலுகைகள் வரி நீக்கம்‍அமைச்சர் சொல்லும் காரண‌ம் சரியா?
3.பங்குவாணப‌ம் மீண்டும் சரிவை நோக்கியா?
4.பொதுத்துறை பங்குகளை விற்பது விதை நெல்லை விற்பத‌ற்கு சமம் எனும் தொழிற்சங்கங்களின் கருத்தில் உண்மை இருக்கிறதா?( பங்கு விற்பனையில் வரும் பணம் இதர செலவீனங்களுக்காம் ‍‍_ ‍‍வட்டச் செலவு)
5.ஸ்விஸ் பாங்கில் பல வர்த்தக சூதாடிகள் வைத்துள்ள கறுப்பு பணத்தையும் ,அம்பானி சகோதரர்கள் போலுள்ளோர் செய்துள்ள வருமானவரி வரம்புமீறல்களை சரி செய்தாலே மத்திய அரசின் செல்வாக்கு உயருமே?

Anonymous said...

//10. ஐடிபிஎல் நினைவுகள் பதிவுகள் குறைந்துவிட்டனவே ? உங்களின் பெரும்பாலான வாசகர்களுக்கு அந்தப் பதிவுகள்தான் பல விஷயங்களைச் சொல்கிறது.//

Anonymous said...

Congratulations Dondu Si. Hope they asked you about your work on Enge Brahamanan too.

Now for the questions.

1. What's your opininon on Thuklag Satya.
2. How is the real estate market in Chennai?.
3. Have u visited Periyar Science and Techonology museum in Chennai?

Regards.
Partha.

வால்பையன் said...

இரண்டாவது முறையாக!

செலிபிரட்டி டோண்டு வாழ்க!

யாராவது சென்னையில கட் அவுட் வையுங்கப்பா!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அடேடே, சூப்பர் நியூஸ்! சென்ற முறை நாம் சென்னையில் சந்திக்க முடியாமல் போய் விட்டது. இம்முறை வரும்போது கண்டிப்பாக சந்திப்போம்.

கன்கிராட்ஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Anonymous said...

1) துளிக்கூட புது சரக்கே இல்லாமல் விகடன் கடந்த பல மாதங்களாக "மீள் பதிவு / கட் அண்ட் பேஸ்ட் பதிவு" போல பழைய விகடன்களிருந்து கட்டுரைகளை, கதைகளை, பேட்டிகளை எடுத்துப் போடுவது (விகடன் பொக்கிஷம்) சரியென்றால் பதிவர்கள் செய்வதும் சரிதானே ? ஏன் விகடன் இந்த அளவிற்கு தாழ்ந்துவிட்டது ? அதன் தற்போதைய உரிமையாளரின் சினிமா ஆர்வத்தாலா ? (Actually தற்போது படிக்கும் படி இருப்பது அந்த பொக்கிஷம் பக்கங்கள் மட்டுமே)
Read also: http://thamizthoughts.blogspot.com/2009/07/blog-post_03.html

2) திருவல்லிக்கேணி ஹிந்து ஹைஸ்கூலில் இருந்த தேசிகாச்சாரி என்னும் ஆசிரியர்தான் தனக்கு உந்துதல் என எஸ்.வி.ரங்காராவ் பேட்டியில் வந்துள்ளதே (விகடன் பொக்கிஷம்) - நீங்கள் படிக்கும்போது தேசிகாச்சாரி ஆசிரியராய் இருந்தாரா ?

3) அவுட்லுக்கில் கருணாநிதி குடும்பம் பற்றிய கவர் ஸ்டோரி படித்தீர்களா ?
http://www.outlookindia.com/archivecontents.asp?fnt=20090608

http://www.outlookindia.com/full.asp?fodname=20090608&fname=Cover+Story&sid=2

4) விஜிசேகர் பதிவுகள் படிப்பதுண்டா? எழுதுவது ஆணா ? பெண்ணா ?

Anonymous said...

1.அரசியல்வாதிகளுக்கு தரும் தேர்தல் நன்கொடைகளுக்கு மட்டும் முழு வரிவிலக்காம்... உங்கள் கருத்து என்ன?
2.மறைமுக வரி, நேரடிவரி பற்றி விளக்கமாய் சொல்லவும்?
3.காலி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி எதிர்பாரத வெற்றி.பந்து வீச்சாளர் முரளி புண்ணியமா? ஆடுகளமா?
4.பெண்கள் ஆண்களிடம் விரும்புவது/வெறுப்பது என்ன என்ன?
5.ஆண்கள் பெண்களிடம் விரும்புவது/வெறுப்பது என்ன என்ன?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது