எனது ஆங்கில வலைப்பூவில் உள்ள ப்ளாக் ரோலில் காட்டப்படும் பதிவுகளில் முக்கியமானவற்றில் ஒன்று get rich slowly என்னும் வலைப்பூ. அதில் இன்று நான் கண்ட இணையம் மூலம் பணமாற்றல் மோசடிகள் என்னும் இடுகை பற்றி இங்கு பேச ஆசைப்படுகிறேன். அது ஒரு பெரிய பதிவு, ஏராளமான ஹைப்பர் லிங்குகள் அதில் உண்டு. ஒவ்வொரு ஹைப்பர் லிங்கிலும் கிளை லிங்குகள் வேறு. எல்லாவற்றையும் படித்து முடிக்க பல மணி நேரங்கள் ஆகும்.
சுருக்கமாக பார்ப்போம். மீதியை சம்பந்தப்பட்ட பதிவுகளில் பார்க்கவும். இணையத்தின் மூலம் விற்பனை செய்யும் ஒரு தளத்தில் ஒவ்வொரு பொருளுக்குமான விளம்பர பக்கத்திலும் இம்மாதிரியான எச்சரிக்கை வருகிறது.
ஏமாற்று மற்றும் மொள்ளமாறி வேலைகளை தவிர்க்கவும். அதற்கு உள்ளூரிலேயே உங்கள் வணிகம் இருக்கட்டும்! Western Union, Moneygram, தந்தி பணமாற்று, வங்கியாளர் காசோலை, மணியார்டர், கப்பலில் அனுப்புவதாக, escrow, அல்லது வேறுவிதமான வாக்குறுதிகள் ஆகிய விஷயங்களில் கவனமாக இருக்கவும்.
இணையம் இவ்வளவு விரிந்து கிடக்கும் காலத்தில் இம்மாதிரியான அறிக்கை? காலம் கெட்டுப் போச்சு அப்பூ என்ற ரேஞ்சில் பலர் குரல் கொடுக்கின்றனர்.
இன்னொரு சினோரியோ தருவேன். எனக்கு ஒரு மின்னஞ்சல் ஒருவரிடமிருந்து வருகிறது மொழிபெயர்ப்பு செய்யக் கோரி. அவர் அனுப்பும் கோப்பை நான் எனது கணினியில் இறக்கி மொழி பெயர்க்க வேண்டுமாம். முன்னே பின்னே தெரியாதவர்கள் என்றால், பணத்தை முதலிலேயே தந்து விடுமாறு கேட்டு, அது வந்த பிறகே வேலை செய்வது உத்தமம். ஆனால் அதிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பல அனுபவஸ்தர்கள் கூறுகின்றனர்.
எனது வேலைக்கு 1000 ரூபாய் தேவை என வைத்து கொள்வோம். திடீரென 10000 ரூபாய்க்கான டிமாண்ட் ட்ராஃப்ட் வரும். அது சென்னையிலேயே லோகல் க்ளியரன்சில் க்ளியர் ஆகும்படி அமைவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் அந்தோ, தவறுதலாக அதிக தொகைக்கு செக் வெட்டி விட்டதாகவும், தயவு செய்து உபரி 9000 ரூபாயை உடனே தான் குறிப்பிடும் முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுகோளும் வரும். நானும் சரி என, அந்த செக்கை எனது அக்கவுண்டில் போடுகிறேன். டிமாண்ட் ட்ராஃப்ட் ஆனதால் அடுத்த நாளே எனது அக்கவுண்டில் பணம் ஏறி விடும். நானும் 9000 ரூபாயை அனுப்பி விட்டு எனது மொழி பெயர்ப்பு வேலையை செய்து அதை அனுப்பியும் விடுகிறேன்.
பிறகு சில நாட்கள் கழித்து ஆப்பு வரும். அதாகப்பட்டது அந்த டிமாண்ட் டிராஃப்டே போலி என தரிய வரும். எனது வங்கி என் மேல் உள்ள நம்பிக்கையில் அக்கவுண்டில் பணம் ஏற்றியிருந்திருக்கும். என அக்கவுண்டில் பணம் இருந்தால் முழு 10000 ரூபாயும் டெபிட் செய்யப்படும். அது போதாது என செக் பவுன்ஸ் ஆனதற்கான அபராதத் தொகை வேறு அழ வேண்டியிருக்கும்.
மேலே சொன்ன விஷயத்தை எனது ப்ரோஸ் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலில் சித்தரித்திருந்தார்கள். அதில் ஒரு விஷயம் சொன்னார்கள். அதாகப்பட்டது, மோசடி பேர்வழிகள் தங்களால் ஏமாற்றப்படுபவரது நாணயத்தை நம்பியே செயல்படுகின்றனர் என்று. நான் பேசாமல் அந்த செக்கை அக்கவுண்டில் செலுத்தி கம்மென்றிருந்தால் என்ன நடக்கும் என கேட்டதற்கு, செக் பவுன்ஸ் ஆனதும் அதற்கான அபராதத் தொகை செலுத்த வேண்டியிருக்கும் என சுட்டிக் காட்டப்பட்டது. ஆக கதை கந்தல்தான். ஒன்றுமே செய்யாது கம்மென நமது வேலையை பார்த்து கொண்டு போவதுதான் இம்மாதிரி விஷயங்களில் நல்லது. ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யத் துணிவீர்களா?
எங்கள் ப்ரோஸ் தலைவாசல் மன்றத்தில் இந்த விவாதத்தை பார்க்கவும். நானும் அதில் ஏமாந்திருக்க வேண்டியது. நல்ல வேளையாக தப்பித்தேன்.
மின்னஞ்சல் முகவரியில் ஓரெழுத்தை மாற்றியே அடையாள திருட்டையும் நடத்துகின்றனர். இம்மாதிரி தில்லாலங்கடி வேலையால் நானே மிக மோசமாகவே பாதிக்கப்பட்டேன். பண நஷ்டம் இல்லையென்றாலும் மன உளைச்சல் மிகவும் அதிகமாகவே இருந்தது. அது பற்றி நான் யோம் கிப்பூர் யுத்தம் டோண்டு ராகவனுடையது என்ற தலைப்பில் நான் இட்ட இடுகையில் விவரித்துள்ளேன்.
ஆகவே நான் கூறுவேன், “எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறாங்கப்பு”! என்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
8 comments:
நோகமால் நோன்பு கும்மிட நினைப்பவர்கள் இப்படி போய் சிக்கி கொள்கிறார்கள்..நல்ல பகிர்வு..எத்த்னை பிராடுதனங்கள் வந்தாலும் நம்ம மக்கள் ஏமாறத்தான் செய்வாங்க
அன்பின் ராகவன் ஸார்,
ஆஹா, இந்த நைஜீரியன் 419 திருடர்கள் எல்லாம் இப்ப இந்த வழியில் வர ஆரம்பித்து விட்டார்களா? நல்ல வேளை இந்த ஏமாற்றுவழிமுறையை பற்றி தெரிவித்தீர்கள்.
இதை தான் நான் இப்படி கூறுவேன். "நீங்கள் முன்னர் ஒரு விஷயத்தில் ஏமாற்றப்பட்டிருந்தால் ,உண்மையிலேயே உங்களுக்கு அந்த விஷயத்தில் முழுமையான அறிவு/ஞானம் இல்லை என அர்த்தம்."
ஆனால் உங்களிடம் இது பற்றிய அறிவு இருந்ததால் தப்பிவிட்டீர்கள். நன்றி இறைவனுக்கு.
இது போல விஷயங்களை நீங்கள் மற்றவர்களுக்கு கற்று கொடுக்க ஆரம்பித்து விட்டால் உங்களை யாரும் 'பார்ப்பான்' என அழைக்க இயலாது. நீங்களும் பிராமணன் ஆகி கொண்டு வருகிறீர்கள். ;-),
இங்கே பாருங்கள் ஒரு பிராமணனை, இவரை எனக்கு 15 வருடங்களாக தெரியும். டோண்டு ராகவனைத் தெரியும் முன்னரே எனக்கு அரசவனங்காடு ராகவனை நன்றாக தெரியும். அவரைப்பற்றி மேலும் அறிய http://www.absolsoftec.com/netact/ சுட்டியை சொடுக்கவும்.
எங்கே பிராமணன் என தேடியலையும் நீங்கள் இந்த அரசவனங்காடு ராகவனைப்பற்றி ஏன் ஒரு இடுகையை இடக்கூடாது. எனது பதிவல் இட்டால் நிறைய பேருக்கு போய் சேராது. நான் 'பிரபல பதிவர் இல்லை' ஆகவே நீங்களோ அவரைப்பற்றி ஒரு இடுகை இடவும்.
with care & love,
Muhammad Ismail .H, PHD,
gnuismail.blogspot.com
உபயோகமான தகவல் நன்றி முடிந்தால் சிலவற்றை தமிழில் கொடுங்கள்..
ஹூம்! 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு யோசிச்சிருப்பாங்க போல் இருக்கு!!
அரசவங்காடு ராகவனை வணங்குகிறேன்.மிகப்பெரிய பணி.
திரு முகமது ஸ்மாயில் மிக்க நன்றி.
இதெல்லாம் பொழக்குறதுக்கு ஒரு வழி சார்!
எவனும் வேலை கொடுத்துருக்கமாட்டான்!
படிக்காதவன் நோட்டு அடிக்கிறான், படிச்சவன் செக்கு அடிக்கிறான்!
ரெண்டும் ஒன்னு தானே!
useful post
எம்புட்டு உஷாரா இருந்தாலும் ஆட்டைய போட ட்ரை பண்றானுங்களே :(
உபயோகமான பதிவு.
Post a Comment