சமீபத்தில் 1964 தீபாவளிக்கு வெளியான படம் படகோட்டி. எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி நடித்த வழக்கமான எம்ஜிஆர் பாணி கதை. ஸ்டீரியோடைப் நடிப்பு. அதெல்லாம் பற்றி இப்பதிவு இல்லை. ஆனால் அதில் வந்த பாடல்கள்? இன்னும் புது பாடலை கேட்பது போன்றே உணர்ச்சி உண்டாகிறது அவற்றை இப்போது கேட்கும்போதும். அதில் வந்த இந்த தொட்டால் பூ மலரும் எனத் துவங்கும் இந்த டூயட்டை முதலில் கேளுங்கள்.
அதே பாடலை ரீமிக்ஸ் செய்து ஒரு புதிய படத்தில் போட்டார்கள். படத்தின் பெயரை யாராவது சொல்லுங்கப்பு. போகட்டும் விடுங்கள். டியூனை கொலை செய்தார்கள்தான், ஆனால் ஒழிகிறது என விட்டு விடுவோம். ஆனால் அந்த ரீமிக்ஸை பழைய விஷுவலுடன் sync செய்து போட்டதை பார்த்துத்தான் புலம்ப வேண்டியிருக்கிறது, இப்படி கற்பழித்து விட்டார்களே பாவிகள்! என. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
பை தி வே இந்த ரசிக்கும் சீமானே ரீமிக்ஸையும் பாருங்களேன். ரிமிக்ஸாக இருந்தாலும் அதே டியூனை வைத்திருக்கிறார்கள் என்பதால் இது பரவாயில்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
14 hours ago
16 comments:
நியூ
//டியூனை கொலை செய்தார்கள்தான், ஆனால் ஒழிகிறது என விட்டு விடுவோம்.//
நல்லாதானே இருந்தது...
கலி முற்றிக் கொண்டிருக்கிறது.
எல்லாம் அப்படித்தான் இருக்கும்!
கவலைப் பட்டு என்ன் ஆகப்போகிறது டோண்டு சார்?
நான் என்னமோ ஏதோன்னுபாத்தா.....
இதுக்கெல்லாம் போய் அலட்டிக்கலாமா, டோண்டு சார்?
பாடலையும் கற்பழிக்க முடியுமா!?
உங்களுக்கு நல்லாயிருக்குறது, மற்றவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் இல்லையா!?
இசை விசயத்தில் உங்களுக்கு வயாதாகி கொண்டிருப்பதை மறைக்கமுடியவில்லை!
பழைய படங்களை ரீமேக் செய்வதும், பாடல்களை ரீமிக்ஸ் செய்வதும் இப்போது ஒரு Fassion ஆகிவிட்டது.
"பழைய படங்களை ரீமேக் செய்வது தவறு அல்ல... அப்படிப் பார்த்தால் கம்பராமாயணமே ஒரு ரீமேக்தான்"
என்று நடிகர் கமல்ஹாசன் சொல்லியிருக்கிறார்.
சுட்டி இங்கே
http://thatstamil.oneindia.in/movies/heroes/2009/07/14-kamal-speaks-on-remakes.html
காலத்தின் போக்கில் எல்லாவற்றிற்கும் சமரசம் வந்துவிடுகிறது!
(அது சரிஇஈஈஈ ? இவ்வளவு பரபரப்பான தலைப்பிற்கு வெரும் 5, 6 பின்னூட்டம் தானா? நம்ப முடியவில்லையே?
நீங்கள் சொல்வது போல், அவ்வளவு ஒன்றும், மோசமான ரீமிக்ஸ் அல்லவே அது...
ஏ.ஆர.ரஹ்மான் போட்ட ரீமிக்ஸ் நன்றாக இருந்தது.....
படத்தின் பெயர் "நியூ"
நல்லா வைக்கிறாங்கப்பா டைட்டிலு...
இதெல்லாம் கால மாற்றம்.
இன்னும் கொஞ்ச நாளில் இந்த பாட்டையே திரும்ப ரீமிக்ஸ் பண்ணி போடுவாங்க. அப்போ, நாங்க இதே மாதிரி கதறுவோம்.
நான் பதிவுலகத்துக்கு புதுசு, ஆனால் நிறய காலம் உங்களையும் மற்ற பதிவர்களையும் படித்திருக்கிறேன் .... முடிந்தால் வந்து பார்க்கவும் ..
http://www.trichisundar.blogspot.com/
தொட்டால் பூ மலரும் ரீ மிக்ஸ் படம் நீயூ
இசை ஏ ஆர் ரகுமான்.
சூப்பர் ஹிட் பாட்டாச்சே ..ரீ மிக்ஸ் என்ற பெயரில் காட்டு கத்தல்கள் ஏதும் இல்லாமல் ரகுமான் பாணியில் அருமையாக வந்த பாடலே அது.
கற்பழிப்பு = வல்லாங்கு
இதுக்கெல்லாம் கவலைப் படறீங்களே? அஜ்மல் கசாப்பே ஒத்துக்கொண்டபிறகும் நம்ம ஆளுங்க என்ன பண்றதுன்னு தெரியாம “திரு திரு”ன்னு முழிக்கிறாங்களே அதுக்கு என்ன சொல்றீங்க?
Back to your original post, ரீ-மிக்ஸ் என்பது காலத்தின் கட்டாயம் (நிஜமான காரணம், இவனுங்களுக்கு புதுசா ட்யூன் போடறதுக்கு மண்டைல ஒண்ணும் இல்ல)! தவிரவும் தவிர்க்கமுடியாதது (இவனுங்க இன்னும் கொஞ்ச காலத்துக்கு காப்பி அடிப்பானுங்க)! உங்களுக்கு வயசாகிடுச்சு (எஸ்.பி.பி. சொன்னதை ஞாபகம் வைத்துக்கொள்ளவும் “எம்.எஸ்.வி., இளையராஜா போட்ட எச்சிலைத்தான் இவர்கள் சாப்பிடுகிறார்கள்”)!
Dondu Sir,
One small request. Please keep titles and also the content inside your blog ...always decent. There are lot of readers who reads your blog with great and high opinion on you.
Dont write about actress front abd back part kind of things...and also dont keep karpalippu kind of titles.....
அது இன்னாது... ஆங்... பணிவன்போடு... ஒண்ணியே ஒண்ணு சொல்லிக்கிறேன். இந்த சின்ன மேட்டருக்கெல்லாம் இம்மாம் கடுமையான தலைப்பெல்லாம் வாணாம் தலீவா. ஒரு மாதிரியா கீது.
திருவள்ளுவரு இன்னா சொல்லிகிறாரு... சரி மாணாம்...உடுங்க.
(முடிஞ்சா தலீப்ப மாத்திருங்க வாத்யார்)
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
1) பலரும் தற்போதெல்லாம் உலக சினிமா என ஈரானிய, கொரிய, இஸ்ரேலிய (எஸ்.ரா - லெமன் ட்ரீ) சினிமா என பதிவுகள் எழுத ஆரம்பித்துவிட்டனரே ? பிரபல, மூத்த, இளைய பதிவர்கள் கூட இந்த உலக சினிமா விமர்சன மாயையில் விழுந்துகொண்டிருக்கின்றனரே ? சொர்க்கமே என்றாலும் நம்மூரு சினிமா போல வருமா ? வடிவேலின் வின்னர் படக் காமெடிக்கு ஈடாகுமா ? உங்களுக்கு உலக சினிமா எல்லாம் பார்க்க ஆசையில்லையா ?
2) ஜெர்மனி/ஹிட்லர் யூதர்களிடம் நடந்துகொண்டதற்கும் (http://www.athishaonline.com/2009/07/blog-post_21.html) இலங்கையில் ராஜபக்ஷே/கோத்தபாய தமிழர்களுக்கு செய்வதற்கும் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள் ?
3) தமிழ்498ஏ (http://tamil498a.blogspot.com) நடத்தும் வலைப்பதிவர் யார் ? ஏன் அவருக்கு பெண்கள் மீது இந்த காண்டு ? பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவியோ ? உங்களையும் அடிக்கடி இழுக்கிறாரே ? உங்களுக்குத் தெரிந்த நண்பரா ? அவர் போடும் செய்திப் பதிவுகளில் உண்மை இருந்தாலும், இதையே தேடித்தேடி பதிவுகள் போடுவது விழிப்புணர்வுக்காகவா இல்லை ஆற்றாமையா ?
Post a Comment