7/25/2009

காமெடி சேனல்களுக்கு ஒரு ‘இயற்கையான’ கேள்வி!

பதிவர் இயற்கையால் காமெடி சேனல்களுக்கு ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதை நான் முழுமையாகவும், கன்னாபின்னாவென்றும் ஆதரிக்கிறேன்.

இந்த காண்டிட் கேமராக்காரர்கள் செய்யும் அலம்பல்கள் சகிக்கவில்லை.

இயற்கை கூறுகிறார்:
“1.பேய் முக‌மூடியைப் போட்டுக் கொண்டு ரோடில் செல்லும் ஒருவ‌ர் முன் திடீரென‌ப் போய் குதிப்ப‌து, அவ‌ர் ப‌ய‌ந்து அல‌றுவ‌தை அப்ப‌டியே ஒலிபரப்புவ‌து..
கேள்வி:
ரோடில் போன‌வ‌ர் இத‌ய‌ம் ப‌ல‌வீன‌மாக‌ இருப்ப‌வ‌ராக‌ இருந்தால் என்ன‌ ஆவ‌து?

2.ரோடில் ந‌ட‌ந்துவ‌ருப‌வ‌ரின் எதிர்திசையிலும், பின்தொட‌ர்ந்தும் வ‌ரும் இருவ‌ர்,திடீரென ஒருவ‌ரை நோக்கி ஒருவ‌ர் ஓடி வ‌ந்து க‌ட்டிப் பிடித்து அள‌வ‌ளாவிக் கொள்வ‌து..அந்த‌ ம‌னித‌ர் தம்மை நோக்கி ஓடிவருவதாய் நினைத்து ஒரு நொடி புரியாம‌ல் திகைப்பார்.சில‌ ச‌ம‌ய‌ம் ட‌க்கென‌ ரோடின் ம‌றுப‌க்க‌ம் ஒதுங்குவார்.
கேள்வி:
அப்ப‌டி ரோடின் ப‌க்க‌ம் பயந்து ஓடும்போது அவ‌ருக்கு ஏதேனும் விப‌த்து ஏற்ப‌ட்டால் யார் பொறுப்பு?


3.ரோடில் பெரிய பெட்டி ஒன்றைத் தூக்கமுடியாமல் தூக்கி கொண்டு இருப்பர்.அப்போது வழியில் செல்லும் யாரோ ஒருவரை உதவி செய்ய அழைப்பர்.அவர் வந்து பெட்டியைத் தூக்க உதவ முயல்கையில்,அப்பெட்டியில் மறைந்திருக்கும் ஒருவர்,திடீரென அவர் காலைச் சுரண்டுவார்.
4.ரோடில் போகும் ஒருவர் பர்சைத் தவற விடுவார்.(அறியாமல் போடுவதைப் போல,வேண்டுமென்றே கீழே போடுவார்.) பின்னால் வரும் யாரோ ஒரு அப்பாவி, அதை எடுத்து அவரிடம் கொடுக்க கையில் எடுத்தால், எங்கிருந்தோ வரும் மற்றொருவர்(தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்) "உங்க பர்சை இவர் எடுத்துகிட்டு ஓடறார்" என்பது போல சீன் கிரியேட் பண்ணி அந்த அப்பாவியை டென்சனாக்கி ஓட ஓட விரட்டுவார்
5.கண் பார்வை இல்லாதவர் போல் நடித்து, ரோடில் போகும் ஒருவரிடம் ரோடை கடந்து போக உதவி கேட்பார் ஒருவர்.அந்த அப்பாவி மனிதர் இவரை ரோடை கடந்து கொண்டுபோய் விடும் நேரத்தில்,எதிர் திசையில் வருபவர்(தொலைக்காட்சியை சேர்ந்தவர்) ஏதோ ஒரு அட்ரஸ்க்கு வழி கேட்பார்.அவர் குனிந்து அட்ரஸைப் படிக்கும் வேளையில், கண் தெரியாதவரின் பாக்கெட்டில் இருந்து பணத்தை இவர் எடுத்து விடுவார். பின்னர் இருவரும் சேர்ந்து,அந்த அப்பாவி மனிதரிடம் பணத்தை குடுங்கள் என கலாட்டா செய்வார்கள்.

கேள்வி(3,4,5): உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களைக் கூட, இவர்கள் நடிக்கிறார்களோ என்ற சந்தேகக் கண் கொண்டு பார்க்க வழி இருக்கிறது அல்லவா?இவற்றால் மனிதனுக்கு மனிதன் சிறு உதவிகள் செய்யும் எண்ணம் தடைப்படாதா”?


எனக்கு வரும் ஆத்திரத்துக்கு யாரேனும் கேண்டிட் கேமராக்காரரை அடி அடி என அடித்து நொங்கு எடுப்பதையும் ஷோவின் பகுதியாகக் காட்டினால் நலமாக இருக்கும். இல்லாவிட்டால் சமயம் போல இருக்காது, இந்த கேண்டிட் கேமரா ஷோவில் ஆனது போல ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மேலே குறிப்பிட்ட கேண்டிட் கேமரா காட்சியின் விபரீத முடிவும் இன்னொரு உடான்ஸ் என்றும் பலர் கருதுகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

16 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

முழுமையாக ஆதரிப்பது சரி! அது என்ன கன்னாபின்னாவேன்றும் ஆதரிப்பது?

கேண்டிட் காமெரா என்றாலே கண்றாவி புடிக்கும் காமிரா என்று இத்தனை நாள் தெரியாமலா இருந்தீர்கள்?

little boy said...

எனக்கும் கூட இந்த பயல்களை இழுத்து போட்டு நல்லா உதைக்க வேண்டும் என்றுதான் ஆசை

Jawarlal said...

டோண்டுஜீ சொல்வதை நான் முழுசாக வழி மொழிகிறேன்.

கொஞ்சம் உபரித் தகவல்-பேச் என்று ஒரு (ரஷ்ய?) சேனலில், (வெள்ளி அல்லது சனி இரவுகளில், ராத்திரி பனிரெண்டு மணிக்குப் பிறகு) பெண்கள் இது மாதிரி காண்டிட் காமெரா செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

பெரிய்ய கொட போட்டு ஒரு பெண் வருவாள்.

ஒரு பெரியவர் பூங்காவில் தனியாக உட்கார்ந்திருப்பார். திடீரென்று அவர் முன் போய் அங்கியை அகற்றுவாள். டாப் லெஸ்ஸாக வெறும் இடையில் உடுத்தும் உள்ளாடையுடன் காட்சி தரும் அவளைப் பார்த்ததும் பெரிசு அதிர்ச்சியில் உறையும்.

இது மாதிரி நிறைய..

http://kgjawarlal.wordpress.com

மங்களூர் சிவா said...

விடியோ சூப்பர். அது மாதிரி ரெண்டு பேர நம்ம ஊர்ல சுட்டு தள்ளினா அதுக்கப்புறம் அடங்கிருவானுங்க
:)))

SanjaiGandhi said...

எனக்கும் இவனுங்கள போட்டு நல்லா உதைக்கனும்னு ஆசை. வசந்த் டிவில ஒருமுறை நடந்ததை பார்த்து கண்ணீர் முட்டியது.வெளிநாட்டு வேலை இழந்து வாழ்க்கையே கேள்விக் குறியான நிலையில் வயதான ஒருவர் வேலைத் தேடி அலைந்துக் கொண்டிருந்தார். மதிய சாப்பாடி எடுத்துக் கொண்டு வெயிலில் அலைந்து வேலைத் தேடிக் கொண்டிருந்தார். அவரிடம் போய் இந்த பொறம்போக்குகள் ,பர்ஸ் தொலைந்து விட்டதாகவும் ஊருக்கு செல்ல காசு கொடுக்க வேண்டும் என்பது போலவும் கேட்கிறார்கள். அவர் யோசிக்கவே இல்லை. பையில் வைத்திருந்த சாப்பாட்டு பாக்ஸ் எடுத்துக் கொடுத்து, தன்னால் இது தான் முடியும் என்கிறார். சிறிது நேரம் அவரை கிண்டல் செய்துவிட்டு பின் கேமிராவைக் காட்டுகிறார்கள். அந்தப் பெரியவர் உடைந்துப் போய் அழுகிறார். தன் நிலை இப்படி சிரிப்பாய் ஆகிவிட்டதே என. தன் குடும்பத்தை காப்பாற்ற தான் படும் அவஸ்தையை சொல்லி, வேலை தேடி அலைவதாக சொல்லி அழுகிறார். அப்போது வந்த ஆத்திரத்துக்கு நேரில் இருந்தால் செருப்பால் அடித்திருப்பேன் அந்த பன்னாடைகளை. அந்தப் பெரியவர் மனதுடைந்து பிழைக்க வழி தேடி அலையும் போது இவனுங்க காமெடி பண்ணால், அவர் மனம் எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கும். என்ன ஜென்மங்களோ..:(

Anonymous said...

அடுத்த வார கேள்வி பதில் பதிவுக்கு
1.மண்ணாசை பிடித்தவனின் முடிவு?
2.பெண்ணாசை பிடித்தவனின் முடிவு?
3.பொன்னாசை பிடித்தவரின்(பெண்) முடிவு?
4.சுப்பிரமணிய சுவாமியின் லேட்டஸ்ட் மூவ் என்ன?
5.இதில் எது சூப்பர் 20-20 ஓவர் போட்டி- ஒரு நாள் போட்டி

Anonymous said...

6.தி.மு.க. ஆட்சி -உங்கள் விமர்சனம்?
7.ஸ்டாலின் சட்டமன்ற செயல்பாடு பற்றி?

8.சேமிப்பதில் அக்கறை இல்லாதவ்ர் நிலை?
9. உங்கள் நிலையில் -மனைவி, அம்மா இவர்களில் யாருக்கு அதிகமாகப் பயப்பட வேண்டும்?
10.தமிழக அமைச்சர்களுக்குப் பிடிக்காத அரசு ஊழியர்கள் ?

ஐந்திணை said...

இதையே ஏதேனும் பத்திரிக்கைகள் சுட்டிக்காட்டினால் அவர்கள் திருந்த வாய்ப்புள்ளது,,,

ஜோசப் பால்ராஜ் said...

இந்தியாவில் இந்த நிகழ்சிகளை எப்படி எடுக்கின்றார்கள் என தெரியவில்லை. ஆனால் வெளிநாடுகளில் இது முழுக்க முழுக்க திட்டமிடப்பட்டு படமாக்கப்படுகின்றது. அதாவது இந்த நிகழ்சியில் ஏமாறுபவர்களாக நடிப்பவர்களும் நடிகர்களே. அவர்களுக்கே தெரியாமல் யாரும் ஏமாறுவதில்லை. அவர்களுக்கே தெரியாமல் இது படமாக்கப்படுவதில்லை.
இது தான் நிஜம். எனவே அதை ஒரு திரைப்படத்தில் வரும் நகைச்சுவை போல திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்ட நகைச்சுவை காட்சியாக தான் பார்க்கிறோம். ( எப்படி வடிவேலு அடிவாங்கினாலும் சிரிக்கிறோமோ அப்படி)

காட்சியில் சம்பந்தப்பட்டவர் அறியாமல் படம்பிடிப்பது என்பது சாதாரன விசயமில்லை. அந்த காட்சிகளில் ஏமாறுபவர்களது மேக் அப்பை நன்கு கவனியுங்கள். அதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அது திட்டமிடப்பட்ட காட்சியா அல்லது யாருக்கும் தெரியாமல் எடுக்கப்பட்டதா என்று.

பட் உங்க சமூக அக்கறை எனக்கு புடிச்சுருக்குங்க.

இயற்கையின் பதிவுக்கு போட்ட அதே பின்னூட்டத்தை இங்கும் இடுகிறேன்.

இய‌ற்கை said...

தங்கள் மூலம் என் பதிவு மேலும் பலரது பார்வைக்குச் சென்றதற்கு நன்றி

இயற்கை

kuyil said...

இதே போல கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் 'தில் தில்' மனதில் நிகழ்ச்சி பற்றியும் எழுதுங்க சார். பாத்தாலே மனசெல்லாம் பதறுது. சிறுவர்களை எல்லாம் வைத்து இப்படியான பயங்கர சாகசங்கள் செய்ய எவ்வாறு அரசாங்கம் அனுமதி அளிக்கிறது??

Anonymous said...

கேள்விகள்:

எம்.கண்ணன்

1. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஓடும் ஆட்டோக்கள் பஜாஜ் கம்பெனியுடையதுதானாமே ? ஏன் வேறு எந்த கம்பெனியும் இந்த ஆட்டோ மார்க்கெட்டில் புகவில்லை அல்லது புகமுடியவில்லை ?

2. ஹமாரா பஜாஜ் என இந்தியா முழுவதும் பிரபலமான பஜாஜ் சேடக் ஸ்கூட்டர் எத்தனையோ குடும்பங்களுக்கு வாழ்வின் ஓர் அங்கம். ஆனால் தற்போது சேடக் ஸ்கூட்டர்கள் நிறுத்தப்பட்டுவிட்டன போலுள்ளதே ? எல்லோரும் 100சிசி பைக்குகள் (மைலேஜ் மற்றும் ஸ்டைல்) வாங்க ஆரம்பித்து விட்டதாலா ?

3. டாடா நாநோ ஹிட் ஆகிவிட்டால், பஜாஜ் ஆட்டோவும் மறைந்துவிடுமா ?

4. பாலகுமாரன் 'உடையார்' நாவலில் ராஜராஜ 'தேவர்' என்கிறாரே ? 'தேவர்' என்பது ராஜராஜனின் ஜாதியா இல்லை படித்து வாங்கின பட்டமா ? (இல்லை தஞ்சை மாவட்டதில் அதிகமுள்ள 'கள்ளர்' 'அகமுடையர்' போன்ற (உபிச குடும்பத்து தேவர் ஜாதி) தேவர் ஜாதியைச் சேர்ந்தவரா ? (http://balakumaranpesukirar.blogspot.com/2009/07/blog-post_21.html)

5. நமீதாவின் 'இந்திர விழா' பார்த்துவிட்டீரா ? இல்லை வேலு பிரபாகரனின் காதல் கதை ? எது சூப்பர் ? இல்லை ரெண்டுமே மொக்கையா ?

6. கம்பராமாயணத்தில் உங்களுக்குப் பிடித்த பகுதிகள் எது ? ஏன் ? சில பாடல்களுடன் எடுத்துக்காட்டினால் நன்று.

7. நடிகர் சிவகுமாரின் கம்பராமாயண பேச்சுரை கேட்டதுண்டா (ஆடியோவில்) ?

8. குறுவை சாகுபடி செய்ய இந்த முறை பருவ மழை கைகொடுக்கவில்லையே ? வெறும் சம்பா சாகுபடி மட்டும் தானா ? அதுவும் வடகிழக்குப் பருவமழையில் மூழ்காமல் இருக்கவேண்டுமே ? தமிழக அரசும் மத்திய உர அமைச்சரும் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதாக தெரியவில்லையே ? பருப்பு கிலோ ரூ.100 போல அரிசியும் ரூ.100 ஆகிவிடுமா ?

9. ஈரானில் நடந்த தேர்தலில் அஹ்மதிநெஜாத் (உச்சரிப்பு சரியா ?) வென்றதற்கும் திருமங்கலம், சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் வெற்றிகளுக்கும் வித்தியாசம் இல்லை தானே ?

10. தினமும் இரவில் என்டிடிவி, ஐபிஎன், டைம்ஸ்நவ் என ஓபி வேன்கள் மாறி மாறி பேட்டி எடுப்பதில் எந்த சானலில் யாரிடம் பேசுகிறோம் என்பதில் குழப்பத்தில் பிரணாய் ராயை அர்நாப் கோஸ்வாமி என்று பாஜகவின் ரவிஷங்கர் பிரசாத் அழைத்தாலும் பிரணாய் பெருந்தன்மையுடன் எடுத்துக்கொண்டுள்ளாரே ? (http://wearethebest.wordpress.com/2009/07/22/it-happened-one-night-on-the-day-of-the-eclipse/)

மதிபாலா said...

நியாயம் தான்.......

ஆனால் இதே போன்றதொரு நிகழ்ச்சி...கிச்சு கிச்சு.காம் என்ற பெயரில் சில ஆண்டுகளாக வெளிவருகிறது...வசந்த் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட போதிருந்து வருகிறது....

கேள்வி ஒன்று.

இப்படி இது போன்ற தொலைக்காட்சிகளில் வந்தாலும் காமெடித் தொலைக்காட்சிகளை மட்டும் குறி வைத்துக் கொதிப்பது ஏன்?

கேள்வி இரண்டு

முதலில் சன் தொலைக்காட்சி கேன்டிட் கேமரா வைப் போட்டபோதும் சலசலப்பும் , எதிர்ப்பும் எழுந்தது.....ஆனால் இடைப்பட்ட காலத்தில் இருந்த கிச்சு.கிச்சு .காம் என்ற நிகழ்ச்சிக்கும் மட்டும் எதிர்ப்பது எழாததது ஏன்?

கேள்வி - மூன்று...

தோழர் இயற்கையின் பதிவிலும் சரி , இங்கேயும் சரி...சிரிப்பொலியில் வரும் பெரும்பான்மையான நிகழ்வுகளே சொல்லப்படுகின்றன....மற்ற நிகழ்ச்சிகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.....

இது இயற்கையானதுதானா? உள்நோக்கம் இல்லாததா?

வால்பையன் said...

எல்லாம் டுபாக்கூர் மாதிரி தான் தெரியுது!

Anonymous said...

sir,
plz become a member of indian bloggers at www.indiblogger.in

கிறுக்கன் said...

எத்தனை பேருக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சோ...

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது