திரைப்படங்களுக்கு தமிழ்ப்பெயர் வைத்தால் வரிவிலக்கு
இந்த கூத்தை நினைத்து என்ன செய்வது என்றே புரியவில்லை. வரி விலக்கு என்றால் சினிமா டிக்கெட்டுகளின் விலைகள் அல்லவா குறைய வேண்டும்? எனக்கு நன்கு நினைவிருக்கிறது. தில்லியில் நான் இருந்த காலகட்டத்தில் காந்தி திரைப்படம் வந்தது. அதற்கு வரிவிலக்கு தந்தனர். பத்து ரூபாய் டிக்கெட்டின் விலை 95 பைசா என்றானது. அப்போதுதான் இந்த தமாஷா வரிகளின் சுமை தெரிந்தது. இவ்வாறு விலை குறைந்தால் அப்படம் பலரால் பார்க்கப்படும் என்பதே அதன் லாஜிக்.
ஆனால் இப்போது என்ன நடக்கிறது? பொது மக்கள் கட்ட வேண்டிய வரிகள் இல்லை, ஆனால் டிக்கெட் விலை மட்டும் அப்படியே இருக்கிறது. சினிமா தயாரிப்பாளருக்கு கொள்ளை லாபம். இது எப்படி சரியாகும்? யாராவது விளக்குங்கப்பூ!
பொன்னர் சங்கர் படத்தில் நெப்போலியன்
என்ன ரோலில் நடிக்கிறாராம்? பொன்னராகவா, சங்கராகவா, மாந்தியப்பனாகவா, குன்றுடையான் ஆகவா? என்ன ரோல், சொல்லு, சொல்லு, சொல்லு என அலைந்து திரிந்து இப்பக்கத்தை கண்டுபிடித்தேன். நெப்போலியன் தலையூர் காளியாக வில்லத்தனமான ரோல் செய்கிறாராம். நல்ல சாய்ஸ்தான்.
கலைஞர் கதையின் முடிவில் பொன்னர் சங்கரை தெய்வமாக வழிபடுவதையும் ஒரு மாதிரி குன்சாக கோடி காட்டியிருப்பார். இம்மாதிரி கதைகள் இந்தியாவில் அனேகம். நைனிதால் ஏரியாவில் கோலு தேவதா என்னும் உள்ளூர் வீரன் அம்மாதிரி தெய்வமாக வழிபடப்படுவதை நான் எனது இப்பதிவில் கூறியுள்ளேன்.
அது சரி, நெப்போலியன் படத்தில் நடிக்க பிரச்சினை ஏதும் இருக்கிறதா என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்துமதத்தின் அடிப்படை சாதியா?
-
சாதியை எதிர்க்கவேண்டும் என்று நாராயணகுரு சொல்லவில்லை, சாதியைப் பற்றி எண்ணவே
கூடாது என்றுதான் சொன்னார். ஏனென்றால் இந்திய மனம் சாதிதவிர எதைப்பற்றியுமே
சிந்தி...
18 hours ago
14 comments:
தமிழ் பெயர் விதிவிலக்கு என்பது சும்மா கண்துடைப்பு தான்!
இவனுக அடிக்கிற கூத்துல ஏற்பட்ட சாணி எந்த சுவத்துல போய் முட்டி தேய்ச்சாலும் போகாதுண்ணே..
இவங்க தமிழ் வளர்க்கிற லட்சணம் அப்படி! உருப்படியாக ஏதாவது இருந்தால் தான் ஆச்சரியப்படவேண்டும்!
/நைனிதால் ஏரியாவில் கோலு தேவதா என்னும் உள்ளூர் வீரன் அம்மாதிரி தெய்வமாக / இதுக்காக, நைனிடால் எல்லாம் போக வேணுமா என்ன?
இங்கே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலிலேயே மதுரை வீரன் தன்னுடைய இரண்டு மனைவிமார்களுடன் வழிபடப் படுவதுண்டே! MGR படம் கூட வந்ததே!
வால்பையன் வேறு ஒரு இடத்தில் கேட்டிருந்த ஒரு கேள்விக்குச் சரியான பதில் சொல்லும் சந்தர்ப்பம் இப்போது தான் கிடைக்கிறது."தெய்வத்துல ஏதையா, பெருசு, சிறுசுன்கிறது அவர் கேள்வி.
இந்த மாதிரி, மக்களுடைய அபிமானத்துக்கும் போற்றுதலுக்கும் உரியவர்களைத் தெய்வமாகவே வழி படும் மரபு இந்த மண்ணில் நெடும் காலமாகவே இருந்து வருகிறது. மதுரை வீரனாக, பாண்டிய மன்னனிடம் வேலை செய்தவன், மதுரை வீரன் சாமி ஆனதைப் போல. அதே மாதிரி, கொங்கு வெள்ளாளர்களுடைய தெய்வமாகவே பொன்னர்-சங்கர் இருவருமே வழிபடப் படுகிறார்கள்.
குலப்பெரியோர்கள், படைவீரர்கள், அரசர்கள் இந்தமாதிரி பலதரப்பட்ட வழிபாட்டு முறை, சிறுதெய்வ வழிபாடாக , இருந்து வருகிறது.
அப்ப எங்க பெரிய தாத்தா பெரிய சாமி!
சின்ன தாத்தா சின்ன சாமி கரைக்டா!
நம்மளுக்கு பிடிச்ச வீரர்களை சாமியாக்குனது இப்போ நடந்த கதையல்ல!
சாமி உருவான கதையே அதான்!
நங்கநல்லூர் பஞ்சாமிர்தத்துல உருப்படிய நாலு விஷயம் தெரிஞ்சிக்கலாம்னு வந்தா ரெண்டு மொக்கையோட முடிச்சிட்டிங்க.
Dondu, this comment is related to previous post. You said: you cannot compare jewis with Tamileelam people" cos' jewish sufferd more then 2000 years. I simply dodn't understsnd your logic dontu! You want tamil suffer 20000 years then only you and your people agree to compare? Dr. Sandler at Fetna compare her own relatives suffering at Askovich with Vanni suffering! could you tell she in not even Jewish because tamil eelam people didn't suffer enough DONDU
//சினிமா தயாரிப்பாளருக்கு கொள்ளை லாபம் //
இதில் பயனைடைவது தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமே. தயாரிப்பாளர் அல்ல.
வால்பையன் சொன்னது:
/அப்ப எங்க பெரிய தாத்தா பெரிய சாமி!
சின்ன தாத்தா சின்ன சாமி கரைக்டா!/
கரெக்டுதான்! இந்த மாதிரி சர வெடிகளை படபடவென வெடித்துவிட்டு ஓடி விடும் இந்த சுறு சுறுப்புத்தான், டோண்டு ராகவனையும் கவர்ந்திருக்கிறது! என்னையும், வால் பையன் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிற அளவுக்குக் கவர்ந்திருக்கிறது!
குதிரைக்குக் குர்ரம்னு ஒரு மொழியில சொல்வாங்களாம்!அதே நியாயத்தில், வால்பையன் இங்கே யானைக்கு அர்ரமான்னு கேட்டிருக்கிறார்!
//மதுரை வீரனாக, பாண்டிய மன்னனிடம் வேலை செய்தவன், மதுரை வீரன் சாமி ஆனதைப் போல. அதே மாதிரி, கொங்கு வெள்ளாளர்களுடைய தெய்வமாகவே பொன்னர்-சங்கர் இருவருமே வழிபடப் படுகிறார்கள்.//
மதுரையில் பிறந்து கொங்கு நாட்டில் பிழைப்பு நடத்துகிறேன்!
மதுரைவீரனோ, பொன்னர்-சங்கரோ! தீர்க்கமான 100% இது தான் உண்மை என்று சொல்லக்கூடிய நம்பதகுந்த ஆதாரங்கள் எதுவுமில்லாமல் கட்டமைக்கப்பட்ட வாய்வழி புனைவுகள் தான் இவர்களையும் கடவுள் லிஸ்டில் சேர்த்தது!
அதற்கு முக்கிய காரணமாக அவர்களது குடும்பத்தினரே அதிகம் இருந்திருப்பார்கள், அவர்களே தினம் பூஜை புணஸ்காரம் செய்து அதை பிரபலபடித்தியிருப்பார்கள்!
எனது தந்தை குலதெய்வமாக கும்பிடும் மூனுசாமி உசிலம்பட்டியில் வாழ்ந்த மூன்று மனிதர்களாம், அவர்களது வம்சாவழிகளே நாங்கள்,
இப்போ கரிகிட்டா
பெரிய தாத்தா பெரியசாமி!
சின்ன தாத்தா சின்ன சாமி!
இப்பவே நாடெங்கும் இருக்கும் பெரியார் சிலைக்கு மாலையோடு பொட்டு வைக்க பழகிவிட்டார்கள்!
பறவைகளின் எச்சத்திலிருந்து பாதுகாக்க சுற்றி கட்டப்படும் மண்டபம் கோயிலாக உள்ளிருக்கும் சிலை கடவுளாக மாறி எவன் கனவிலாவது வந்து ”எனக்கு பெரிய கோயிலா கட்டுடா, உன் பரம்பரை மட்டுமே எனக்கு பூசாரியா இருக்கனும்னு” சொல்லிட்டு போவார்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார், இந்த நாட்டிலே!
//குலப்பெரியோர்கள், படைவீரர்கள், அரசர்கள் இந்தமாதிரி பலதரப்பட்ட வழிபாட்டு முறை, சிறுதெய்வ வழிபாடாக , இருந்து வருகிறது.//
இஸ்லாத்தில் அல்லா ஒருவரே கடவுள்!
நபிகள் கூட அவரது தூதர் தான்!
கிரிஸ்துவத்தில் கர்த்தர் தான் கடவுள்!
ஆனால் சுற்றிலும் தேவ தூதர்கள் உண்டு!(லீசிபர் அதில் ஒருவன்)
இயேசு கூட தேவ தூதர் மட்டுமே!
(மரியாளுக்கும், ஜோசப்புக்கும் சர்ச் இருப்பது வேற பொழப்புக்காக)
அடுத்தது எனகு தெரிந்த இந்து மதம் தான்!
எவனுகெல்லாம் மூளை பிசிகிறுச்சோ அவனெல்லாம் இறைவனின் அவதாரம்! புரியாத மொழியில் காச்மூச்சுனு கத்துறது, டான்ஸ் ஆடுறது! புத்தகத்தில் படிச்ச தத்துவங்களை வாந்தி எடுக்குறது,
கைகுள்ள மறைச்சி வச்சு மோதிரம் கொடுக்குறது, வீபூதி கொடுக்குறது
அப்படியே கடவுள் ஆகிருறது!
இன்னைக்கு எத்தனை சுதந்திரபோராட்ட தாத்தாவும், பார்ட்டரில் உயிர் நீத்த போர்வீரர்களும் சிறு தெய்வங்களாக ஆகிருக்காங்க!
அப்படியே இருந்தால் ஏன் அவுங்களை தெய்வமா வழிபடனும், அவுங்க கடமைய தானே அவுங்க செஞ்சாங்க!
கடமைய செஞ்சதுக்கே கடவுள் போஸ்ட்டுனா, “நான் என் கடமைய தான் செஞ்சேன்னு” சொல்ற போலிஸ்க்கு தெருவுக்கு தெரு கோவில் கட்டனுமே!
வால்பையன் சொன்னது:
/இப்போ கரிகிட்டா
பெரிய தாத்தா பெரியசாமி!
சின்ன தாத்தா சின்ன சாமி!/
வால்பையன் ரசிகர் மன்றம் சொல்வது:
/ரொம்ப ரொம்ப கரீட்டு!/
இத்த உட்டுட்டீங்களே?
வால்பையன்=வால்சாமி அல்லது குழந்தைச் சாமி!
வால்பையன் சொன்னது:
/நான் என் கடமைய தான் செஞ்சேன்னு” சொல்ற போலிஸ்க்கு தெருவுக்கு தெரு கோவில் கட்டனுமே!/
"சொல்றதுக்கே" கோவில்னா உண்மையிலேயே கடமையைச் செய்பவர்களுக்கு எதைக் கட்டுவது?
//உண்மையிலேயே கடமையைச் செய்பவர்களுக்கு எதைக் கட்டுவது? //
நமீதாவுக்கு கோவில் விரைவில் கட்டப்படும்!
//
Dondu, this comment is related to previous post. You said: you cannot compare jewis with Tamileelam people" cos' jewish sufferd more then 2000 years. I simply dodn't understsnd your logic dontu! You want tamil suffer 20000 years then only you and your people agree to compare? Dr. Sandler at Fetna compare her own relatives suffering at Askovich with Vanni suffering! could you tell she in not even Jewish because tamil eelam people didn't suffer enough DONDU
//
Except people like you, nobody wants tamils to suffer, just to compare them with jews.
What happened in Srilanka is not what happened in Nazi Germany. Both are not comparable.
Ethnic admission is not a justification. Thats all.
By the way. Its not Dr. Sandler its Dr. Ellyn Shander and the place jews were sent to for mass killing is Not ASKOVICH! its Auschwitz.
write properly or just don't write.
Post a Comment