ஜூன் மாதம் ஜெயா டிவி தரப்பிலிருந்து காலை மலர் சிறப்பு விருந்தினருக்காக அழைப்பு வந்தபோது, முதலில் தயங்கினேன். ஏற்கனவேயே ஜனவரி 2008-ல் அதே காலை மலரில் நான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதை குறிப்பிட்டபோது, இம்முறை நேர்காணல் வேறு விஷ்யங்களை தொடும் என கூறப்பட்டது. நானும் ஒப்புதல் தெரிவித்தேன். எனக்கு இந்த வாய்ப்பை பெற்று தந்த நண்பர் உண்மை தமிழனுக்கு முதற்கண் என் நன்றி.
ஜூன் ஆறாம் தேதி நேர்காணலுக்கான ஷூட்டிங் நடந்தது. முந்தைய முறை பேட்டி கண்ட அதே ஜோடிதான் இம்முறையும். அவர்களுக்கு என்னை நன்றாக ஞாபகம் இருந்தது. இம்முறை நேர்காணலில் எனது வலைப்பூ செயல்பாடுகள் பற்றி அதிகம் கேட்கப்பட்டன. இது பற்றிய சம்மரியை நான் தருவதற்கு முன்னமேயே நண்பர் நக்கீரன் பாண்டியன் பின்னூட்டமாக தந்து விட்டார். அதை முதற்கண் இங்கு தருகிறேன். (ஹைப்பர்லிங்குகள் எனது உபயம்).
ஜெயா தொலைகாட்சியின் காலை மலரில் டோண்டு ராகவன் அவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி அருமையாய் வடிவமைக்கப் பட்டிருந்ததற்கு பாராட்டுக்கள்.
நிகழ்ச்சி சரியாய் 07 :30 க்கு தொடங்கி 08: 10 வரை இனிதாய் முடிந்தது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ராகவன் அவர்களது ஆறு மொழிப் புலமையைப் பாராட்டி வெப்சைட்-ப்ளாக் பற்றிய பல தகவ்ல்கள் சொல்லப் பட்டன்.
சொல்லப் படும் வார்த்தைகளுக்கு பொறுப்பு உள்ளது போல் எழுதுவதற்கு முன்னால் ஆலோசித்து எழுதுவது நலம் என்றும், அனைத்து பிளாக்களையும் மானிட்டர் பண்ணுவது சைபர் போலிஸுக்கு சாத்யமில்லை.ஆனால் பண்புமீறும் செயல்களை பற்றிய குற்றச்சாட்டுகள்
பற்றிய வழக்குகள் அவர்களால் விசாரிக்கப்படுகிறது என்று சொல்லியபோதும், பழைய கசப்பான அனுபவங்களை தவிர்த்தது ஒரு சிறப்பு. வலையில் பிஸ்ஸிங் (phishing) ஏமாற்று செய்திகளை விளக்கியது, பலருக்கு ஒரு நல்ல எச்சரிக்கையாய் அமைந்தது.
வலைப்பூ நண்பர்கள் மூலம் தென்திருப்போரை பெருமாள் திவ்விய தேச தரிசனம் நினைவு கூர்ந்தார்.
அது போல் அனைவருக்கும் வரும் கனவுகள் பற்றிய பதிவு பற்றி பலரின் பின்னூட்டங்கள் ப்ற்றிய தகவல்கள் கேள்வியாளரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
அடுத்து மொழிபெயர்ப்புபற்றி பற்றி பல் அரிய தகவ்ல்கள் பரிமாறப்பட்டன.
1993 லிருந்து 16 வருடங்களாய் இந்த துறையில் தமிழகத்தில் முதன்மையாய் இருப்பதையும், இதனால் மொழிபெயர்ப்பு வெப்சைட்டில் பிளாட்டினம் உறுப்பினர் சலுகையில் (முழு இலவசமாகவே கிடைத்தது) கிடைத்ததையும், டெல்லியைவிட சென்னையில் மொழிபெயர்ப்பு வாய்ப்புகள் அதிகம் எனவும் மதிப்பும் அதிகம் எனவும் சொன்னார்.
மொழிபெயர்ப்பாளர்கள் த்குதிகேற்ற ஊதியம் தைரியாமாய் கேட்கவேண்டும்.மொழிபெயர்ப்பு மென்பொருளால் மனிதன் போல் சிந்தித்து மண்வாசனையுடன் மொழிமாற்றம் செய்தல் முடியாது அதனால் இன்னும் 50 வருடங்களுக்கு மெஷின் மனிதனுக்கு போட்டியாகாது என்றார்.
மொழிபெயர்ப்பாளர் மண்வாசனையுடன்,அங்குள்ள கலாச்சார சுவையுடன் மொழிபெயர்ப்பு செய்தால் அனைவராலும் ரசிக்கப்படும். அதற்கு திறமை அதிகம் வேண்டும். ஹேரிபார்ட்டரின் ஏழு புத்தகங்கள் இதற்கு சாட்சி.அனைத்து மொழிகளிலும் மேஜிக் அழகாய் சித்தரிக்கபட்டுள்ள்து.
மொழிபெயர்ப்பாளர் பார்ப்பதை மனதில் வாங்கி அதை தனது தாய் மொழியில் இமேஜாய் உள்வாங்கி தேவையான மொழியில் அதனுடைய மண்வாசனையுடன் மொழிபெயர்த்தால் முழு வெற்றி நிச்சயம்.தான் அப்படி செய்வதாகச் சொன்னார். ஜெர்மன்,பாகிஸ்தான் போன்ற மொழி சீரியல்களை பார்க்கும் போது அவ்ர்களைப்பற்றிய நம் கணிப்பு மாறுகிறது.
ப்ளாக்கில் உள்ள வசதிகள்-தீமைகள் -மொழிபெயர்ப்பு துறை பற்றிய பல அரிய தகவ்ல்களை தெரிவிததற்கும்,ஜெயா தொலைகாட்சியில் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தற்கும் பரஸ்பர நன்றியுடன் நிகழ்ச்சி இனிதாய் முடிந்தது.
நன்றி நக்கீரன் பாண்டியன் அவர்களே. ஒரே ஒரு சிறு திருத்தம். 1993 தொடங்கி 2001 வரை தில்லியில் இருந்தேன், அதன் பிறகுதான் சென்னைக்கு வந்தேன். மற்றப்படி கடந்த 16 ஆண்டுகளாக முதன்மையாக இருப்பது என்ற செய்தி சரிதான்.
மேலும் சில எண்ணங்கள் டோண்டு ராகவனிடமிருந்து.
நேர்காணலின் ஆரம்பத்திலேயே தயாரிப்பாளர் என்னிடமும் பேட்டி கண்டவர்களிடமும் ஒரு விஷயம் கூறினார். அதாவது முந்தைய நேர்காணலின் சாயல் இதில் அதிகம் விழாது பார்த்து கொள்ள வேண்டும் என்பதே அது. ஆகவேதான் வலைப்பூக்களுடன் பேட்டி துவங்கியது. வலைப்பூவை ஹோஸ்ட் செய்யும் பிளாக்கர் போன்ற அமைப்புகளை வலைப்பூக்களில் உள்ளவற்றுக்கு பொறுப்பேற்கும்படி கூறுவது நியாயமாகாது என்பதை நான் வலியுறுத்தினேன். அதற்கு ஆதாரமாக எனது கடந்தகால அனுபவங்களையும், சைபர் கிரைம் போலீசாருடன் நான் ஒத்துழைத்ததையும் சான்றாகக் காட்டினேன். சொன்ன சொல்லை எவ்வாறு திரும்ப பெறவியலாதோ அதே போல எழுதிய இடுகையையும் வாபஸ் பெறுதல் கடினமே. நாமே அதை அழித்தாலும் யாரேனும் ஒருவர் அதை முன்னமேயே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்து கொள்வதற்கு நாம் ஒன்றும் செய்யவியலாததுதானே. ஆகவே எழுதும் முன்னரே யோசித்துத்தான் செயல்பட வேண்டும். முழு பொறுப்பும் வலைப்பூ அதிபருக்கே.
எதை பற்றி எழுதலாம் என்ற கேள்விக்கு வானமே எல்லை என பதிலளித்தேன். வாடிக்கையாளரை அணுகும் முறைகள் பற்றி பத்து பதிவு போட்ட அதே நான் ஒரு மெகா சீரியலுக்கு முழு கவரேஜ் தந்ததையும் பெயர் எதுவும் குறிப்பிடாது சொன்னேன். ஆனால் எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பேற்க வேண்டும். பூச்செண்டாக இருந்தாலும் சரி, உதைகளாக இருந்தாலும் சரி.
எந்தக் கடையில் அவள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா என்ற சொலவடைக்கு நான் கொடுத்த ஆங்கில மொழிபெயர்ப்பின் உதாரணம் மூலம் கலாச்சார ஷாக் பற்றி விளக்கினேன். (தமிழில் அதை விளக்கும்போது எனது தொண்டை அடைத்தது துக்கத்தால். மிகவும் கஷ்டப்பட்டு அழுகையை அடக்கினேன்). அகில இந்திய ரேடியோவில் பிரெஞ்சு ஒலிபரப்பில் ஏற்பட்ட க்ரைசிஸ் பற்றியும் பேசினேன்.
என்னை நேர்காணல் கண்டவர்கள் திறமையாக செயல்பட்டனர். நேரமின்மை காரணமாக இம்முறையும் எனது திருக்குறள் மொழிபெயர்ப்பு பற்றிய முயற்சிகளை கவர் செய்யவியலவில்லை என்பதில் எனக்கு வருத்தமே.
இந்த நேர்காணலை எனது மைத்துனி சிடியாக ரிகார்ட் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார். அது கிடைத்ததும் கூடிய சீக்கிரம் வலையேற்றுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
14 hours ago
16 comments:
Dondu sir let me reiterate the interview was nice and you proved to be an excellent communicator. It is time you starting penning books.
நானும் தான் பார்த்தேன், நானும் தான் எழுதியிருக்கேன்.
Congrats Sir! I saw your first interview live, not this one due to power cuts in Bangalore. Can you please post it in You tube?
பேட்டி நன்றாக இருந்தது டோண்டு சார். ஆரம்ப நிமிடங்களை தவற விட்டு விட்டேன்.
வீடியோ இணப்பை விரைவில் வழங்கவும்
நானும் இந்தப் பேட்டியைப் பார்த்தேன் (முழுதாக இல்லாவிட்டாலும்!). சரளமாக இருந்தது.
நன்றி.
பாண்டிய நக்கீரன்
ஜெயா T.V. பேட்டிக்கு வாழ்த்துக்கள்!!
வீடியோ இணப்பை விரைவில் எதிர்பார்க்கிறேன்!
வாழ்த்துக்கள் சார்.
இங்கு பார்க்க முடியாது நீங்கள் வலை ஏற்றிய பிறகு பார்த்துக்கொள்கிறேன்.
வாழ்த்துக்கள் டோண்டுசார்.. மொதல்லயே தெரிஞ்சிருந்தா நானும் பாத்திருப்பேன்.
I saw your interview today in Jaya TV. It was very informative. Congratulations.
wow, best wishes, I missed that programme. will they re telecast or you please try to get cd and upload in your blog or you tube.
என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னிக்கி சீக்ரமா எழுந்தேன் இந்த நிகழ்ச்சிய பாக்றதுக்காக... அருமை... போலி டோண்டு கதைய சொல்லுவாருன்னு நெனச்சேன்... சொல்லல... மத்தபடி கொஞ்சம் வேகமா பேசினீங்க... எப்போதும் இப்படி தானா?
1.பகுதிநேர மொழிபெயர்ப்பாளர்,முழுநேர மொழிபெயர்ப்பாளர்களில் இன்றைய நிலையில் உங்களுக்கு அடுத்தபடியாக பிரபலமாய் உள்ள தமிழக,அகில இந்திய மொழிபெயர்ப்பாளர் யார் யார்?
2ஈசா யோக மையம் சார்பில் வருட வருடம் நடைபெறும் மகா சிவராத்திரி விழா சமயம்,சத்குருவின் ஆங்கிலப் பேச்சை மிகத்திறமையாய் தமிழில் மொழிபெயர்க்கும்கலை மாமணி மரபின் மைந்தன் ,உங்களுக்கு அறிமுகம் உண்டா?
3.தமிழ் எழுதிகளில் ஈகலப்பையை மிஞ்சி ஏதும் உண்டா?
4.சுயமுன்னேற்றத் தொடர்கள் எழுதும் எண்ணம் உண்டா?
5.ஜெயா டீவில் உங்கள் நேர்முகம் நிகழ்ச்சியை பாராட்டி,விமர்சித்தவர்களில் (தொலை பேசி,மின்னஞ்சல்,செல்பேசி ,நேரில் )உங்களை கவர்ந்தவர் யார்?
6.முதல் நேர்காணலுக்கும் இரண்டாவது நேர்காணலுக்கும் என்ன வித்தியாசம்?
7.எங்கேபிராமணன் பற்றிய தொடரின் தொடர்பினாலா இந்த நேர்முக நிகழ்ச்சி?
8.சோ அவர்கள் ஏதாவது வகையில் தொடர்பு கொண்டாரா?
9.இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்களை உங்கள் சென்ன பதிவர் வட்டத்திற்கு தெரிவித்தீர்களா?
10. ஜெயா மாதிரி சன்டீவி,கலைஞர்டீவி அழைப்பு ஏதும் முன்பு வந்ததா?
Congratulations Dondu Sir. Waiting for the video link.
I missed this...
Can somebody share the video link?
@பாஸ்கி
எனது லேட்டஸ்ட் பதிவில் நான்கு பகுதிகளின் வீடியோ சுட்டிகளும் தரப்பட்டுள்ளன. http://dondu.blogspot.com/2009/07/blog-post_14.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment