கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?
ராம்குமார்
1. அம்பானியை கொல்ல நடந்த ஹெலிகாப்டர் சதியின் சாட்சியை கொன்றுவிட்டனர், அந்த கொலையை இப்பொழுது ஊடகங்கள் கண்டுகொள்வதே இல்லையே. இந்த மூடி மறைக்கும் செயல் எதை காட்டுகிறது?
பதில்: இந்த செய்தியைத்தானே கூறுகிறீர்கள்? Possible witness-ஐ யாரோ கொலை செய்து ரயில்வே ட்ராக்கில் போட்டுள்ளனர். மொத்தம் மூன்று பேரை கைது செய்துள்ளனர். அதுக்கப்புறம் நீங்கள் குறிப்பிடுவது போலவே கேஸ் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடக்கிறது. எந்த புற்றில் எந்த பாம்போ யார் அறிவார்?
அனானி (09.08.2009 காலை 07.57-க்கு கேட்டவர்)
1. வரும் விளம்பரங்களை பார்த்தால்,அதற்கும் சென்சார் தேவை போலுள்ளதே?
பதில்: விளம்பரங்களுக்கு கோட் உண்டு என கேள்விப்பட்டிருக்கிறேன். சமீபத்தில் 1977-ல் ஷோலே புகழ் கப்பர்சிங் விரும்புவது பிரிட்டானியா பிஸ்கெட் என்னும் பொருள்பட விளம்பரம் வந்தது. அந்த விளம்பரம் இளைஞர்களுக்கு தவறான சமிக்ஞையையே அளிக்கிறது என நான் ஒரு கடிதம் அப்போதைய மத்தியத் தகவல் மற்றும் ஒலிபரப்பு மந்திரிக்கு எழுதிப்போட அங்கிருந்து எனக்கு இந்த விளம்பரத்தை நிறுத்த ஆணை பிறப்பித்ததாக செய்தி வந்தது. என் தந்தை என்னிடம் “உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை, யாரிடமோ உதை வாங்க போகிறாய்” என கோபித்து கொண்டார். 1979-ல் ஜனதா அரசு வீழ்ந்த சில நாட்களுக்குள்ளேயே இந்த விளம்பரம் மிண்டும் வந்தது. இம்முறை நான் ஒன்றும் செய்யவில்லை.
2. பள்ளியில் நன்றாய் படிப்பவர்களில் ஒரு பகுதியினர், கல்லூரிக் கல்விக்குப் போனதும், கல்வி ஆர்வம் குறைவது ஏன்?
பதில்: பள்ளி தேர்வுகளில் இன்னமும் நெட்டுரு போடும் பழக்கத்துக்கு நல்ல மார்க் கிடைக்கிறது. கல்லூரி தளத்திலோ பாட புத்தகம் தவிர வேறு புத்தகங்களையும் படிக்க வேண்டியுள்ளது. அதற்கு தங்களை ஏற்றவர்களாக மாற்றிக் கொள்ளாவிட்டால் சங்கடம்தான். மார்க்குகள் வரவில்லையெனில் ஆர்வம் தானே குறைகிறது.
3. வசூல் தோல்விகண்டு துவளாமல் மீண்டும் மீண்டும் திரைக்கதை வசனம் எழுதும் கலைஞரின்........?
பதில்: துவள வேண்டியது படத் தயாரிப்பாளர்தானே இவருக்கு என்ன? எப்படியும் இவர் வகிக்கும் பதவிக்கு என அழுத்தமான மரியாதை உண்டு. அதனால் இவர் ஏன் துவள வேண்டும்?
4. வைகோவின் இன்றைய பேச்சுக்கள் இனி எடுபடுமா?
பதில்: எடுபடும் என அவர் நம்பிக்கையாக பேட்டிகள் கொடுத்து வருகிறாரே.
5. திடீரென தமிழக டாஸ்மார்க் பார்களில் பெண்களைக் காணும்போது என்ன எண்ணுவீர்கள்?
பதில்: நான் ஒரே ஒரு முறைதான் டாஸ்மாக் பார் சென்றுள்ளேன். அங்கு அச்சமயம் பெண்கள் யாரையும் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் மட்டும் என்ன, ஒன்றும் நினைத்திருக்க மாட்டேன்.
அனானி (09.07.2009 காலை 11.50-க்கு கேட்டவர்)
1. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: தீர்ப்பு வரட்டும் பார்க்கலாம்.
அனானி (09.07.09 மாலை 06.49-க்கு கேட்டவர்)
1. will you buy things based and believing on ads?
பதில்: Never.
2. What is fringe benefit tax and why it is removed now?
பதில்: நிதி மந்திரி கூறுகிறார், “Announcing the decision of the government to do away with the FBT, he said, "This tax has been perceived as imposing considerable compliance burden. Empathising with these sentiments, I propose to abolish the fringe benefit tax." இந்த வரியை அனுசரித்து நடப்பது மிகுந்த சுமை என்கிறார். யாருக்கு? கம்பெனிகளுக்கா? எது எப்படியானாலும் சுமை தீர்ந்து யாராவது புன்முறுவல் பூக்கலாம் என நினைக்கிறேன். சந்தோஷம். பை தி வே ஃப்ரிஞ்ச் பெனிஃபிட் வரி என்றால் என்ன? “Fringe benefits as outlined in section 115WB of the Finance Bill, mean any privilege, service, facility or amenity directly or indirectly provided by an employer to his employees (including former employees) by reason of their employment.
They also include reimbursements, made by the employer either directly or indirectly to the employees for any purpose, contributions by the employer to an approved superannuation fund as well as any free or concessional tickets provided by the employer for private journeys undertaken by the employees or their family members”. ஓக்கேவா?
3. Not providing services properly under warranty period and the product is not working at all what should be done by the owner?
பதில்: எல்லா ரசீதுகளையும் பத்திரமாக வைத்திருந்தால் நுகர்வோர் நலன் நீதிமன்றத்தை அணுகலாம்.
4. Indians are not very serious in work -reason?
பதில்: அதே இந்தியர்கள் கல்ஃபிலோ, அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ வேலை செய்தால் சீரியசாகத்தான் இருக்கிறார்கள். காரணம், சரியாக வேலை செய்யாவிடில் கல்தாதான். இந்தியா மாதிரி இழுவை மற்றும் அழுவாச்சி வேலைகள் எல்லாம் அங்கே செல்லாது.
5. will you just laugh out loud or cry in times of deep stressfull anxieties?
பதில்: நிறைய முறை அவுட்டு சிரிப்பெல்லாம் விட்டிருக்கிறேன். என் தந்தையின் இறப்புக்கு பிறகு வேறு சமயங்களில் அழுததாக நினைவில்லை. கண் கலங்கியிருப்பேன்.
அனானி (09.07.09 மாலை 07.46-க்கு கேட்டவர்)
இந்த பழமொழிகளுக்கு ஜெயா டீவி புகழ் டோண்டுவின் புதுமொழிகள்?
1. வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்
பதில்: வாளை எடுப்பவன் வாளாலேயே சாவான் (புது மொழி அல்ல என்பதை ஒப்பு கொண்டு விடுகிறேன்)
2. வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
பதில்: தனக்கு நன்கு தெரிந்த விஷயங்களை பிறருக்கு விளங்க சொல்லும் அதே வாயாலே தெரியாத விஷயங்களை பேசி உளறாது இருக்க வேண்டும் என பொருள் கொள்ளலாம்,
3. வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
பதில்: வாயில்லா பிள்ளை உதை வாங்கும்
4. வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
பதில்: நுணலும் தன் வாயால் கெடும்.
5. வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
பதில்: வியாதியே விதியாக இருந்தாலும் அது குணமாக வேண்டும் என்றிருந்தால் மருந்துண்டு.
6. வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக
பதில்: தேவைக்கேற்ற உணவு
7. விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
பதில்: வீம்புதான் விருப்பம் என ஆகிவிட்டால்?
8. விதி எப்படியோ மதி அப்படி.
பதில்: விநாசகாலே விபரீத புத்தி
9. விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
பதில்: வாழ்வு வந்தால் விளக்குமாற்றுக்கும் பட்டுக் குஞ்சம் வரும்
10. விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது
பதில்: இரண்டும் ஒருவருக்கே என்றால் பிரச்சினையில்லைதான். ஆனால் ஒருவருக்கு விளையாட்டு இன்னொருவருக்கு வினை என முடியாமல் இருந்தால் சரிதான்.
வெங்கட்:
1. Have you seen N.Ram's interview in Junior Vikatan? What is your opinion on that interview ? Link to the interview "http://www.vikatan.com/jv/2009/jul/12072009/jv0301.asp"
பதில்: இல்லை, பார்க்கவில்லை. உங்கள் சுட்டி லாக் இன் செய்யச் சொல்கிறது. என்னால் இயலவில்லை. ஆகவே கருத்து ஏதுமில்லை.
2. Compare Cho Vs N.Ram
பதில்: இருவருமே துணிச்சலானவர்கள். ராம் கம்யூனிச சிந்தனையாளர். சோ கம்யூனிசத்துக்கு எதிரி. அவர்களை பிடிக்கிறதோ இல்லையோ அவர்களை புறக்கணிக்க இயலாது.
3. Prabhakaran's latest CD compares Tamils (i think srilankan Tamils) with Jews. Link "http://www.vikatan.com/jv/2009/jul/08072009/jv0301.asp"
பதில்: யூதர்கள் 2000 ஆண்டுகளாக பட்ட அளவுக்கு தமிழர்கள் நிலை மோசமில்லை. ஒப்பிட ஒன்றுமேயில்லை.
4. Compare MGR Vs Jayalalitha
பதில்: இருவருமே கட்சியில் சர்வாதிகாரியாகவே செயல்பட்டனர். ஆனால் எம்ஜிஆருக்கு இருந்த முகராசி ஜெயலலிதாவுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அனானி (32 கேள்விகள் கேட்பவர்)
1. தே.மு.தி.க.வின் வளர்ச்சி தொடருமா? கேப்டனின் முதல்வர் கனவு?
பதில்: ஜெயலலிதா மற்றும் கலைஞர் செய்யப் போகும் சொதப்பல்களை பொருத்தது.
2. அ.தி.மு.க.வுடன் கம்யூனிஸ்டுகள் தேனிலவு?
பதில்: மீசையில் மண் ஒட்டாது காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் சேர முடிந்தால் இந்த தேன் நிலவு நீடிக்காது.
3. சட்டங்களைக் கண்டு பயப்படாமல் உள்ள அரசியல்வாதிகள்?
பதில்: வேறு ஏதேனும் புதிதாக இல்லையா?
4. எழுத்தாளர்களுக்கு அரசு சலுகையை கூட்டலாமே?
பதில்: ஏன் கூட்ட வேண்டும்?
5. இன்றைய பிள்ளைகளிடம் எதற்கெடுத்தாலும் ஆர்க்குமெண்ட் செய்யும் ம்னோநிலை ஏன்?
பதில்: இந்தக் காலத்து பசங்க, ஹூம் என்னும் பதிவில் நான் இது பற்றி எழுதியுள்ளேன்.
6. அரிசி விலை கடுமையாக ஏறிவிட்டதே-ஒரு ரூபாய் திட்டம் காரணமா?
பதில்: அதுவும் ஒரு காரணமே.
7. ‘ஸ்பெக்ட்ரம்’ விவகாரம் கோவிந்தவா?
பதில்: யாராவது பொதுநல வழக்காக போட்டால் ஏதேனும் நடக்கலாம்
8. வேலை கிடைக்கவில்லை என்று அவதிப்படும் இன்றைய இளஞர்களுக்கு டோண்டுவின் அட்வைஸ்?
பதில்: வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
9. ஒரு பெண்ணின் காதல் எதில் ஆரம்பிக்கிறது? எதில் முடிகிறது?
பதில்: பெண் என்று மட்டும் இல்லை, ஆணுக்கும் காதல் என்பது எதிர்பாலரிடம் ஏற்படும் கவர்ச்சியின் ஆரம்பத்தில் தொடங்குகிறது, அதே கவர்ச்சி மறைந்த பின்னால் காதலும் மறைகிறது.
10. எந்திரன் படம் ரஜினிக்கு கைகொடுக்குமா? இல்லை?
பதில்: நிரம்ப எதிர்பார்ப்பை கிளறாமல் இருந்தால், அதிக லாபம் பெறும் பேராசையோடு பொருள் விரயங்கள் செய்யாமல் இருந்தால் கைகொடுக்கும்.
11. உங்களுக்குப் மிகவும் பிடித்த பதிவு? (மிகுந்த மன நிறைவுடன்)
பதில்: தன்னம்பிக்கையை முன்னிறுத்தும் எல்லா பதிவுகளுமே மனதை நிறையச் செய்யும்.
12. இந்த வயதிலும் மன்மோகன் எதற்கும் அஞ்சாமல் அசர மாட்டேன்கிறாரே
பதில்: இந்திய அரசியலில் 77 எல்லாம் ஒரு வயதா?
13. தி.மு.க. இல்லாத காங்கிரஸ் கூட்டணி ?
பதில்: இதுவரை அம்மாதிரி நடக்கவேயில்லையா?
14. ஜெ இல்லாத அதிமுக?
பதில்: அடுத்தமட்ட தலைவர்கள் இல்லாத நிலையில் கஷ்டம்தான்.
15. கலைஞர் ஆங்கிலத்தில் பேசுவதிலும் வல்லவரா?
பதில்: சாதாரணமாக பேசி சமாளித்து கொள்ள இயலும் என்றுதான் நினைக்கிறேன். அப்படியே இல்லாவிட்டால்தான் என்ன, மொழிபெயர்ப்பாளர்கள் எதற்கு இருக்கிறார்கள்?
16. தீவிரவாத எதிர்ப்பு பலப்படுத்தபப்டும் என்று சொல்லி கொண்டிருக்கிறார்களே ஆனால்?
பதில்: தீவிரவாத எதிர்ப்பை இசுலாமியர்களுக்கு எதிரானதாக கற்பனை செய்வதை நிறுத்தாத வரை ஒன்றும் நடக்காது.
17. எல்லாத் திராவிடக் கட்சிகளை மூட்டை முடிச்சுகளோடு வழியனுப்பும் காலம் வருமா?
பதில்: அதற்கு தேசிய கட்சிகள் தங்கள் செயல்பாட்டை மாற்றிக் கொள்ளல் அவசியம்.
18. தந்திக் கட்டனங்கள் மினிமம் ரூ. 25 ஆக்கிவிட்டார்களே?
பதில்: செல்பேசி இணைப்புகள் விரிவாக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தந்தியின் உபயோகம் குறைந்து வருகிறது. இருப்பினும் தந்திச் சேவை இன்னும் தேவையாகவே இருந்து வருகிறது. அதற்கான நிர்வாகச் செலவும் குறைவதில்லைதானே. ஆகவே மினிமம் 25 ரூபாய் ஆவது ஒன்றும் ஆச்சரியமில்லை.
19. விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் போரில் என்றால்? தமிழர் நிலை?
பதில்: மீண்டும் போரில் ஈடுபடும் நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லையே.
20. அரசியல் உலகில் வலிமை வாய்ந்தது மதமா, சாதியா?
பதில்: லோக்கல் அளவில் சாதி, பெரிய அளவில் மதம்.
21. அரசு கேபிள் டி.வி இருக்கிறதா?
பதில்: பேச்சளவில் இருக்கிறது. தேவையானால் தூசு தட்டி எடுத்து கொள்வார்கள்.
22. குழந்தைத் தொழிலாளார்கள் குறைந்து வருவதாய் வரும் தகவல்கள் உண்மையா?
பதில்: இல்லை.
23. பதவி கோரிக்கையுடன் உதார் விடும் தமிழகக் காங்கிரஸைக் கொஞ்சங்கூடக் கண்டு கொள்ளமாட்டேன்கிறாரே, கலைஞர்?
பதில்: பாவம் தமிழக காங்கிரசார்.
24. தமிழ்கத்தில் பத்திரிகைகள் பெருகுவதால் யாருக்கு இலாபம்?
பதில்: பலருக்கு வேலை கிடைக்கும்.
25. அரசியலில் கொடிகட்டி பறக்க என்ன தேவை?
பதில்: முதலில் ஒரு கொடி தேவை
26. மக்கள் தொலைக்காட்சி பார்பீர்களா?
பதில்: இல்லை
27. மேல்நாட்டு நாகரீக மோகத்தில் பெண்களைப் போல ஆண்களும் இப்போது முடி வளர்க்கிறார்கள். கம்மலை போட்டுக் கொள்கிறார்களே?
பதில்: பழங்காலத்தில் கடுக்கன்கள் போட்டு கொண்டார்கள், குடுமி வைத்து கொண்டார்கள். நாகரிகம் திரும்புகிறது.
28. கொங்கு மண்டலத்தில் கள் வேண்டுவோர் அமைப்பின் போராட்டம் பிசுபிசுத்துவிட்டதா?
பதில்: எல்லா மதுவகைகளும் தாராளமாக கிடைக்கும்போது கள்ளுக்கு மட்டும் ஏன் இன்னும் தடை விதிக்க வேண்டும் என்பது புரியவில்லை.
29. மசாஜ் கிளப்பு போன்ற விவகாரமான கிளப்புகளை அரசு அனுமதிப்பதை பார்த்தால்?
பதில்: Law of supply and demand நினைவுக்கு வருகிறது.
30. அரசியல்வாதிகள் ஏன் ‘பினாமி’களையே சார்ந்திருக்கிறார்களே?
பதில்: இந்த பினாமிகள் விஷயம் எனக்கு எப்போதுமே சரியாக புரிந்ததில்லை. சரி, பல விஷயங்கள் புரியத்தான் இல்லை. இதுவும் அவற்றில் ஒன்று என இருக்க வேண்டியதுதான்.
31. உங்களால் மறக்க முடியாத மேடைப்பேச்சு யாருடையது? எந்த நகரில்?
பதில்: மேடைப் பேச்சு எல்லாம் கேட்க பொறுமை இல்லை, நேரமும் இல்லை.
32. ஜெயாடீவியின் காலைமலர் நேர்முக ஒளிபபடக் காட்சியின் இணைப்பு ரெடியா?
பதில்: ஓ
அனானி (11.07.2009 பிற்பகல் 03.55-க்கு கேட்டவர்)
சந்திரகுபதர்கால்த்தில் அர்த்த சாஸ்திரம் தந்த சாணக்கியர் என்ற கெள்டில்யரின் இந்த வாசகங்களை பார்க்கும் போது இன்றைய காலகட்டத்தில் என்ன சொல்ல தோன்றுகிறது?
1. A person should not be too honest. Straight trees are cut first and Honest people are victimised first.
பதில்: இவன் நியாயவான் என்பதை வைத்தே எதிராளி இவனுக்கு விரோதமாக காய்களை நகர்த்துவான். அதற்காகவாவது இவன் எதிர்ப்பார்க்காத நேரங்களில் இயல்புக்கு மாறாக நடந்து கொள்தல் நலம்.
2. "Even if a snake is not poisonous, it should pretend to be venomous."
பதில்: டார்வினின் தத்துவமும் இதுவே.
3. "The biggest guru-mantra is: Never share your secrets with anybody.! It will destroy you."
பதில்: உங்களுக்கு மட்டுமே தெரிந்தால்தான் அது ரகசியம். அதை வெளியே விட்டால் அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லைதானே.
4. "There is some self-interest behind every friendship. There is no Friendship without self-interests. This is a bitter truth."
பதில்: சுயநலன் பார்க்காத செயலே இருக்க முடியாது. தியாகி கூட தான் பெறப்போகும் நல்ல பெயருக்காகத்தான் தியாகமே செய்கிறான். ஆனால் இதை நினைத்து மனம் கசந்து கொள்ள வேண்டியதில்லை.
5."Before you start some work, always ask yourself three questions - Why am I doing it, What the results might be and Will I be successful. Only when you think deeply and find satisfactory answers to these questions, go ahead."
பதில்: நீச்சல் குளத்தில் டைவ் அடிக்கும் முன்னால் முதலில் அதில் போதுமான தண்ணீர் இருக்கிறதா என்பதை பார்த்து கொள். கனவில் செந்திலை பார்த்து தூக்கத்தில் நடந்து வந்து தன்ணீயில்லா குளத்துல கவுண்டமணி மாதிரி டைவ் எல்லாம் அடிக்கக் கூடாது.
6. "As soon as the fear approaches near, attack and destroy it."
பதில்: தைரியம் என்பது பயத்தை வெளிக்காட்டாது பிறரிடமிருந்து மறைப்பது - குருதிப்புனலில் கமல்
7. "Once you start a working on something, don't be afraid of failure and don't abandon it. People who work sincerely are the happiest
பதில்: எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு
8. "The fragrance of flowers spreads only in the direction of the wind. But the goodness of a person spreads in all direction."
பதில்: கண்களில் பட்டை கட்டிய குதிரை, காட்டாறுச் சுழல்.
9. "A man is great by deeds, not by birth."
பதில்: செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்க லாதார்
10. "Treat your kid like a darling for the first five years. For the next five years, scold them.. By the time they turn sixteen, treat them like a friend. Your grown up children are your best friends."
பதில்: குழலினிது யாழினிது என்பர் தன் மக்கள் மழலை மொழி கேளாதவர், அடியாத மாடு படியாது, தோளுக்கு மிஞ்சினால் தோழன்.
11. "Books are as useful to a stupid person as a mirror is useful to a blind person.
பதில்: கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையவர் கல்லா தவர்
12. "Education is the best friend. An educated person is respected everywhere. Education beats the beauty and the youth..."
பதில்: மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ என்று கவலையின்றி போகக்கூடிய கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்புதானே.
எவனோ ஒருவன்
1. நண்பன் ஒருவன் கிண்டலுக்காக ‘அலங்கரிக்கப்பட்ட கோலம் அலங்கோலம், அழகான கோலம் அலங்கோலம்’ என்கிறான். இப்போது நான் அப்படியெல்லாம் அல்ல, அலங்கோலம்னா இதுதான்னு சொல்லணும். என்ன சொல்ல?
பதில்: இதுக்கு டாப்பிகலான பதில் வேண்டும் என்றால், அலங்கோலம் என்பது இப்போதைக்கு “கோலங்கள்” சீரியலின் கதைப் போக்குதான் எனக் கூறிவிடலாம்.
2. பார்க்கப்போனால், வெப்பமாக இருக்கும் நமது இடங்களில் உடல் வெளியே தெரியும்படி ஆடைகளும், குளிர் பிரதேசங்களில் முழுவதும் போத்திக்கொள்ளும் ஆடைகளும்தானே கலாச்சாரமாய் இருக்கவேண்டும். ஆனால், நிலைமை தலைகீழாய் இருப்பதெப்படி?
பதில்: எல்லாம் பழக்க தோஷம்தான். இன்னொரு விஷயம். வெப்ப நாடுகளில் உடல் - முக்கியமாக பெண் உடல் வெளியும்படி உடையணிந்தால் பத்திக்கிச்சு என்னும் நிலைமை வரும். ஆகவே அங்கெல்லாம் இழுத்து போர்த்திக் கொள்ள சொல்கிறார்கள். குளிர் தேசங்களில் உடல் வெளியே தெரிந்தால் அதே பத்திக்கிச்சு கேசால் உடல் வெப்பமாகும், ஹி ஹி ஹி.
3. சென்னையில் விதிப்படி ஆட்டோ, பைக் விட எங்குமே கட்டணம் கிடையாது என்று ஒரு ஆட்டோ டிரைவர் கூறினார். உண்மையா?
பதில்: எனது நண்பர் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரிடம் விசாரித்தேன். அப்படியெல்லாம் கிடையாது என மறுக்கிறார் அவர்.
4. நிறுவனங்கள், அலுவலகங்கள் இருக்கும் கட்டிடங்களில் பார்க்கிங் வசதி கட்டாயம் செய்து கொடுக்கவேண்டும் என்று வரைமுறை இருக்கிறதா? (கேபிள் சங்கர் சார் பதிவைப் பார்த்தவுடன் தோன்றியது)
பதில்: இந்தப் பதிவைத்தானே சொல்கிறீர்கள்? கட்டிடங்களில் செயல்படும் அலுவலகங்களுக்கு வரும் வண்டிகள் நிறுத்த ஏற்பாடு செய்வது கட்டிடம் கட்டுபவரின் பொறுப்பு. ஆனால் அதையெல்லாம் யார் பார்க்கிறார்கள்? இம்மாதிரி சட்டங்கள் இருப்பதே அவற்றை மீறும் செயல்களால்தான் தெரிய வருகிறது. அதற்காகவே நான் கார் வாங்கவில்லை.
5. பாலியல் குற்றங்களைத் தடுக்கும் அரசு, அதற்கு வடிகால் ஏதும் இல்லாததைப் பற்றி எண்ணாதது ஏன்? (புரியும் என்று நினைக்கிறேன்... பாலியல் தொழிலிக்கு அங்கீகாரம் குடுப்பது பற்றி)
பதில்: எப்படி ஆண்/பெண் இருபாலருக்கும் வடிகால் தேவை என்பீர்களா அல்லது வழமை போல ஆண்கள் பார்வை கோணத்திலிருந்துதான் பார்ப்பீர்களா? கணிகைகள் வந்தால் கணிகன்களும் வருவார்கள். பரவாயில்லையா?
ரமணா
1. பாதாள சாக்கடைதிட்டம் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சேவைக்கட்டணம் கொட்டப் போகிறாதா?
பதில்: உள்ளாட்சி அமைப்புகள் சேவைசார்ந்த துறையில் வருகின்றன. அவை வணிக நிறுவனங்கள் இல்லை.
2. டீசல் விலை ஏற்றியவுடன் ஆம்னி அதிபர்கள் ஏற்றும் கட்டணத்தை, அரசு விலைகுறைப்பு செய்த பின்னும்(பலதடவை) குறைக்க மனம் வருவதில்லையே ஏன்?
பதில்: ஆம்னி பஸ்களுக்கு முறையான பஸ் பெர்மிட்டுகள் தந்தால் அவற்றால் இஷ்டத்துக்கு விலையுடன் விளையாட இயலாது. கமெர்ஷியல் வரி பதிவு எண்களுடன் விலைகள் அச்சடித்த டிக்கெட்டுகள் தர வேண்டியிருக்கும். அதிலேயே பாதி போக்கிரித்தனங்கள் குறையும். அரசு போக்குவரத்துக்கும் நல்ல போட்டி இருக்கும். ஆனால் செய்ய மாட்டார்கள். கொள்ளையடிப்பதில் ருசி கண்டு விட்டார்கள் அல்லவா. நண்பர் அதியமான் இது பற்றி நிறைய எழுதியுள்ளார்.
3. வழக்கமாய் உங்களை கலாய்க்கும் பதிவர்களில், பின்னூட்டாளர்களில் உங்களை மிகவும் கவர்ந்தவர் யார்?
பதில்: வால்பையன், லக்கிலுக்.
4. தண்ணிர் விலை ஒரு லிட்டர் ரூபாய் 15, ஆனால் பால் விலை? அவர்களின் கோரிக்கை நியாயம்தானே?
பதில்: தண்ணீரை பாலில் கலக்கிறார்கள் என்ற அரதப்பழசு விஷயத்தைத் தவிர்த்து பால் விலைக்கும் தண்ணீர் விலைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. தேவை, அளிப்பு ஆகியவற்றின் கூட்டு விளைவுதான் ஒரு பொருளின் விலை.
5. தமிழ்மணத்தில் ஒட்டுப்போட ஓபன் ஐடி தேவை. ஓட்டுக்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதே - உங்கள் விமர்சனம்?
பதில்: இத்தனை நாட்கள் வந்த நூற்றுக்கணக்கான ஓட்டுகளுக்கு பின்னால் எத்தனை புருடாக்கள் உள்ளன என்பதை அறிந்து கொள்வோம்.
எம்.கண்ணன்
1. காய்கறிகள், பலசரக்குகள் வாங்குவது - ரிலையன்ஸ் ஃபிரஷ் போன்ற பெருங்கடைகளிலா / அங்காடிகளிலா, பக்கத்து தெருவில் இருக்கும் அண்ணாச்சி கடைகளிலா இல்லை தள்ளுவண்டி, ஸ்டேஷனோரம் கூடையில் விற்கும் தினசரி விற்பனையாளர்களிடமா? ஏன்? என்ன விதமான சாதக, பாதகங்களைப் பார்க்கிறீர்கள்?
பதில்: பெருங்கடைகள் மற்றும் அங்காடிகளில் சாய்ஸ் அதிகமாக இருக்கும். அதுவே சாதகம், அதுவே பாதகம். சில சமயம் தேவைக்கும் மேலே வாங்கி விடும் அபாயம் உண்டு. நாம் பேரம் பேச வேண்டிய நிர்ப்பந்தம் இல்லையென்பது ஆண்களுக்கு பாதகம், பேரத்தை விரும்பி செய்யும் பெண்களுக்கு பாதகம். எங்கள் வீட்டு வாசலுக்கே இரு வியாபாரிகள் தள்ளுவண்டிகளில் வருவார்கள். காலை/மாலை உலாவச் செல்லும்போது மீனம்பாக்கம் ரயிலடியில் புது காய்கறிகள், பழங்கள் கிடைக்கும். மாம்பலத்திலிருந்து மின்வண்டியில் வரும்போது ஓடும் ரயிலிலேயே வியாபாரிகள் வருவார்கள். ஆக என்னைப் பொருத்தவரை சமயத்திற்கேற்ப நடந்து கொள்வதே சரி.
2. மீண்டும் ஜெயமோகன், சாரு யுத்தங்கள் துவங்கிவிட்டனவே? பதிவர்களுக்குக் கொண்டாட்டம்தானே ? அதுவும் ஜெயமோகன் அமெரிக்கா ஐடினரரி எல்லாம் போட்டு தூள் கிளப்புவதில் புகை ஜாஸ்தியாகுமே?
பதில்: இல்லையா பின்னே? இங்கே பதிவர் வட்டத்திலேயே தீபா, சென்ஷி (அடங்குடா நாயே பதிவு போட்டவர்), அபி அப்பா, ஆதிஷா ஆகியோரது குடுமிப்பிடி சண்டையே இத்தனை தூள் கிளப்பியதே. ஜே சாரு சண்டை மட்டும் என்ன சளைத்ததா என்ன?
3. பிளேடு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? அதற்கு முன்பு வரை அந்தக் காலத்தில் (ராஜா காலங்களில்) எப்படி சவரம் செய்யப்பட்டது?
பதில்: ரேஸர் பிளேடுகளுக்கு இந்தப் பக்கத்துக்கு செல்லுங்கள். ஒட்டு மொத்தமான சவரம் பற்றிய தகவல்களுக்கு இங்கே பார்க்கலாம்.
4. பெண்கள் ஷேவ் செய்வதற்கென்றே பலப்பல புது ஐட்டங்கள் மார்க்கெட்டில் (பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட்டுகளில்) வந்துவிட்டனவே ? எனினும் நமது தென்னிந்திய நடிகைகள் கையில்லா உடைகள் அணிந்து நடிக்கும்போது அவ்வளவு க்ளீன் ஷேவாக இருப்பதில்லையே ? (ஹாலிவுட், பாலிவுட் நடிகைகள் ஸ்லீவ்லெஸ் படங்களைப் பார்த்தால் வித்தியாசம் தெரியும்). (எ.கா: சென்ற வார குமுதம் 6ஆம் மற்றும் 49ஆம் பக்க படங்கள்)
பதில்: ஒரு பெண்ணிடம் இத்தனை கவர்ச்சிகரமான முன்னணி மற்றும் பின்னணி அம்சங்கள் இருக்கையில் இதையா போய் பார்ப்பது? நான் அதற்கெல்லாம் ஆள் இல்லை.
5. (துக்ளக் தவிர) தற்போது பத்திரிக்கைகளில் வரும் கேள்வி பதில் பகுதி எந்த பத்திரிக்கையில் நன்றாக வருகிறது ? ஹாய் மதன், அரசு பதில்கள், தராசு பதில்கள் என எல்லாமே செம மொக்கையாக இருக்கிறதே?
பதில்: லோகோ பின்ன ருசி.
6. பாலகுமாரன் 'குரு' தேவை என்கிறார். உங்களுடைய 'குரு' என்று யாரைக் கூறுவீர்கள்? ஏன்?
பதில்: இதுவரை என்னுள் விசேஷமான தேடல்கள் ஏதும் இல்லை. ஆகவே குரு தேவைப்பட்டதில்லை. மற்றப்படி குரு தேவையா இல்லையா என்பது அவரவரே முடிவு செய்ய வேண்டியது.
7. கலைஞர் டிவியை இப்போது யார் நடத்திவருகிறார்கள்? இன்னும் ஏன் தினமும் சன் டிவீக்குப் போட்டியாக படங்களும், பாடல்களும்?
பதில்: இது பற்றி அதிக விஷயம் தெரிந்த லக்கிலுக்குக்கு ஃபோன் போட்டு கேட்டதில் ஆள் வைத்து நடத்தினாலும் கலைஞரின் நேரடி கண்ட்ரோல் அதுபாட்டுக்கு இருக்கிறது, ஏதேனும் தவறு நேர்ந்தால் அவரது போன்கால் உடனே சீறி வருகிறது என அறிந்தேன். சன் டிவியை காப்பியடிக்கும் காரணமே அவர்களது ஃபார்முலா வொர்க் அவுட் ஆகிறது என்பதாலேயே. சன் டிவி எந்த ஊரில் இருந்து ஆப்பரேட் செய்தாலும் உள்ளூர் ருசிக்கேற்ப செயல்படுகின்றனர். அதாவது பக்கா லோக்கலைசேஷன். அது இல்லாததாலேயே விஜய் சோபிக்க இயலவில்லை.
8. இந்த கேள்வியிக்கு பதில் சொல்லும் நீங்களும், இந்தப் பதிவை படிக்கும் பலரும் நன்கு படித்த நல்ல வேலையில் (இருந்த் அல்லது) இருப்பவர்கள். அப்படிப்பட்டவர்களாலேயே சில பல லட்சங்கள் தாண்டி தங்கள் வீட்டு மற்றும் சொந்தக் கணக்குகளை சரியாக வைத்துக்கொள்ள தடுமாறும் போது, பெரும்பாலும் அவ்வளவு படிக்காத அரசியல்வாதிகள் எப்படி பல்லாயிரம் கோடிக்கான பட்ஜெட்டுகள் போடுகிறார்கள் - சமாளிக்கிறார்கள்? என்னதான் அதிகாரிகள் துணை என்றாலும் இவ்வளவு ஆயிரம் கோடிகளை புரிந்துகொள்ளவும் ஒரு திறமை வேண்டுமே?
பதில்: எல்லோருமே எல்லா விஷயங்களையுமே தெரிந்து கொள்ள இயலாதுதானே. பட்ஜெட்டுகள் போடுவதற்கென்றே அந்தந்த துறைகளில் பழ்ம் தின்னு கொட்டை போட்டவர்கள் உள்ளனர். அவர்களுக்கு இதைத் தவிர வேறு வேலையில்லை. பிறகு புள்ளிக் கோடுகளுக்கு கீழ் கையொப்பமிடுவதுதான் பாக்கி. அந்தந்த அமைச்சருக்கு புரியும் அளவில் சுருக்கங்களும் தரப்படுகின்றன. அப்படியே ஒரு நிபுணர் தவறு செய்தாலும் அவரை மந்திரியிடம் போட்டுக் கொடுக்க ஒரு கோஷ்டியே கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு பார்த்து கொண்டிருக்கும். ஆகவே மந்திரிகள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை.
9. சென்னையிலிருந்து நெல்லைக்கு செல்கிறீர்கள் (உங்கள் உள்ளம் கவர் கள்வனைக் காணத்தான்!). தனியார் ஆம்னி பஸ் அல்லது அரசு பஸ்ஸில், விஜயின் அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு மூன்று படங்களையும் தொடர்ச்சியாகப் போடுகிறார்கள். என்ன செய்வீர்கள்? இது மாதிரியான படம் பார்க்கும் வாய்ப்பினை யாருக்கு அளிக்க விரும்புவீர்கள் :-)?
பதில்: நான் இம்மாதிரி யாத்திரைகளுக்கு “எனது காரில்தான்” செல்வேன். ஆகவே நீங்கள் கேட்கும் கேள்விக்கு வாய்ப்பேயில்லை. மற்றப்படி அழகிய தமிழ்மகன் படத்துக்கு என்ன குறைச்சல்?
10. தனியார் மற்றும் அரசு பஸ்களின் இந்த வீடியோ தொல்லை தாங்க முடிவதில்லையே ? இரவில் தூக்கம் கெடும் அளவிற்கு இந்தப் படங்களை ஓட்டுவதை எதிர்த்து டிராபிக் ராமசாமி போல் யாரும் வழக்குப் போடுவதில்லையா?
பதில்: சமீபத்தில் 1975 வாக்கில் வந்த ஷோலே படத்தில் குதிரை வண்டியோட்டியான ஹேமமாலினி வளவளவென பேச, தர்மேந்திரா ஹா என ஜொள் விட்டுக் கொண்டு கேட்க, அமிதாப் பச்சன் இரண்டு காதுகளுக்கும் பஞ்சடைத்து கொண்டு தூங்குவார். அந்த சீனை சிறிது நேரம் லாங் ஷாட்டிலும் காட்டுவார்கள். அப்போதும் ஹேமமாலினியின் குரல் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருந்து கணீரென கேட்கும். நீங்கள் தர்மேந்திராவா அல்லது அமீதாப்பா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்களேன். அதையெல்லாம் விட்டுவிட்டு ட்ராஃபிக் ராமசாமி மாதிரி வழக்கெல்லாம் போடுவது வேண்டாத தலைவலியே. அப்படத்தை கீழே பார்க்கலாம்.
அனானி (14.07.2009 காலை 07.15-க்கு கேட்டவர்)
1. Define corruption and its types and explain with living examples?
பதில்: தேன் எடுப்பவன் புறங்கையை நக்குவதே ஊழல். உதாரணங்கள் எல்லா இடங்களிலும் எக்காலகட்டத்திலும் காணலாமே.
2. What is your opinion about the resignation of Metroman Mr E Sridharan ?
பதில்: அவர் தரப்பிலிருந்து அது ஒரு சமிக்ஞை. ஆனால் அதுதான் ஏற்றுக் கொள்ளப்படவில்லை போலிருக்கிறதே.
3. Offense is the best defense - your view and comment?
பதில்: சமீபத்தில் 1967-ல் ஆறு நாள் யுத்தத்தில் இஸ்ரேல் செய்ததுதான் அது.
4. Kerala CM V. S.Achuthanandan out of Polit Bureau -what next?
பதில்: இரா முருகன், ஜெயமோகன் போன்ற கேரள அரசியல் தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி.
5. poverty makes ignorance or ignorance makes poverty - which is true?
பதில்: இரண்டுமே சரி. பல சந்தர்ப்பங்களில் ஒன்றுடன் இன்னொன்று சார்ந்து ஒரு விஷச்சூழலை உருவாக்குகின்றன.
6. Why number 13 is considered as unlucky.
பதில்: இந்தப் பக்கத்தில் சுவாரசியமான பதில் ஒன்று உள்ளது.
7. What do you think about Naxalism - Terrorism - Social revolt of the deprived?
பதில்: பணக்காரர்கள் எல்லோருமே கெட்டவர்கள், ஏழைகள் எல்லோருமே நல்லவர்கள் என்னும் ரொம்பவும் தட்டையான சிந்தனையின் விளைவுதான் அது. முதலுக்கே மோசம் விளைவிக்கும் செயல்பாடு.
8. What will happen if China attacks India?
பதில்: நீண்ட நாட்கள் இழுத்து கொண்டு போகும் யுத்தம் என்பது சீனாவுக்கும் சரி இந்தியாவுக்கும் சரி, கட்டி வராது. ஆகவே ஏதேனும் தாக்குதல் என வந்தாலும் லோக்கல் அளவில்தான் இருக்கும்.
9. What produces love?
பதில்: இந்த கேள்விக்கு விடையறியாது பலர் வேட்டியின்றி திரிவதாகக் கேள்வி.
10. What is the significance of dream-tell your personal experience?
பதில்: நமது ஆழ்மனத்தில் புதைந்திருக்கும் ஆசைகள் அல்லது பயங்கள் ஆகியவற்றையே கனவுகள் பிரதிபலிகின்றன.
11. Who is responsible for the delay of 26/11 probe? how to set it right?
பதில்: இதில் என்னென்ன உள்குத்து எழவுகள் இருக்கின்றனவோ, யாருக்கு தெரியும்?
12. Why blood pressure flactuates time to time for all?
பதில்: சூழ்நிலைக்கேற்ப உடலின் வெவ்வேறு பகுதிகளுக்கு சப்ளை ஆக வேண்டிய ரத்தத்தின் அளவு மாறுபடும். அதனால் பம்பிங் வேலையும் மாறுதல்களுக்கு உள்ளாகும்.
13. Why great people is called as star all over the world?
பதில்: அவர்களும் நட்சத்திரம் போலவே நம்மை விட மிக உயரத்தில் இருப்பவர்களாக நாம் நினைத்து கொள்வதலேயே.
14. What is the colour of knowledge?
பதில்: Indigo என்று கூறுகிறார்கள், இங்கே.
15. Why plastic carry bag is not hygenic to humanbeings?
பதில்: It is not biodegradable and takes thousands of years to degrade. It chokes up drains, water springs and other waterways.
16. Do u agree in splitting the states into two and tell the merits and demerits?
பதில்: அப்படி என பார்த்தால் உடைத்து கொண்டே போகலாமே. பலன் என பார்த்தால் பல புது போஸ்டுகள் உருவாகும். கெடுதல் என பார்த்தாலும் அதுவேதான்.
17. navratna company-explain the requirements?
பதில்: விடை இங்கு கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
18. Which state Police is functioning o.k?
பதில்: இந்த கேள்விக்கான விடை தெரியவில்லை.
19. will it be possible to forget our past and wholly concentrate on present for a common man?
பதில்: முடியுமா என்று கேள்வி கேட்டு கொண்டிருக்கக் கூடாது. முடிய வேண்டும் என்பதே நிஜம்.
20. Suggest simple ways to stay healthy at the age of 60?
பதில்: மனதின் வயது 25-ஐ தாண்டாமல் பார்த்து கொள்ளுங்கள். மீதி தானாகவே வரும்.
அனானி (15.07.2009 காலை 07.07-க்கு கேட்டவர்)
1. கவி அரசின் இந்த பாடல் வரிகளை கேட்கும்போது என்ன உணர்வு மேலோங்குகிறது?
பதில்: 1981-ல் அவர் மறைந்த பிறகு பிறந்தவர்கள் பலருக்கு கிடைக்க முடியாத பேற்றினை பெற்றவர்கள் என் போன்றவர்கள். கவியரசு செயலில் இருந்து எழுதும்போது நேரடியாகவே அனுபவித்தவர்கள் என்ற நன்றியுணர்வே மேலோங்குகிறது.
a. ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
பதில்: அவ்வாறு இல்லாதவர்கள் எப்போதுமே டென்ஷனில் இருப்பதைத்தான் பார்க்கிறோமே.
b. உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்...
பதில்: ஆம் அதுதான் ஆண்டவன் கட்டளை.
c. அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்
பதில்: ஆகவே காண்பதற்கு அரியவன்.
d. வந்தவரெல்லாம் தங்கி விட்டால் - இந்த மண்ணில் நமக்கெ இடமேது?
பதில்: ஆம், ரொம்ப போர் வேறு அடிக்குமே.
e. ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?
பதில்: இதைத்தான் ஸ்மசான வைராக்கியம் என்பார்கள்.
f. பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் - அதிசயம் காண்பார்
பதில்: மலராத பெண்மை மலரும், முன்பு தெரியாத உண்மை தெரியும் என்றும் கூறலாம்.
g. அன்புக்கோ இருவர் வேண்டும் அழுகைக்கோ ஒருவர் போதும் இன்பத்துக்கிருவர் வேண்டும் ஏக்கத்துக்கொருவர் போதும்.
பதில்: அந்தந்த தேவைக்கு அந்தந்த அளவுக்கு பங்கேற்பார்கள். அதே கண்ணதாசன் எழுதினார், “ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா, இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா”
h. சொத்து சுகம் நாடார், சொந்தந்தனை நாடார் பொன்னென்றும் நாடார், பொருள் நாடார், தான்பிறந்த அன்னையையும் நாடார், ஆசைதனை நாடார், நாடொன்றே நாடித்தன் நலமொன்றும் நாடாத நாடாரை நாடென்றார்.
பதில்: பள்ளிச்சாலை தந்த ஏழைத் தலைவனுக்கு இதைவிட அருமையாக அஞ்சலி செலுத்தவியலுமா?
i. ஒரு கோல மயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு
பதில்: பாரசீகக் கவிஞன் ஓமர்கய்யாமுக்கு தமிழ் தெரிந்திருந்தால் இதை தனது வரிகளின் சிறந்த மொழிபெயர்ப்பாக ஏற்றுக் கொண்டிருப்பார்.
j. உண்டென்றால் அது உண்டு இல்லையென்றால் அது இல்லை
பதில்: கலர் டிவி கிடைச்சாலும் கிடைக்கும், கிடைக்காமலும் போகலாம். ஆகவே உண்டென்றால் அது உண்டு இல்லையென்றால் அது இல்லை. :)))))))
அனானி (15.07.2009 காலை 09.53-க்கு கேட்டவர்)
1. திருமதி. மன்மோகன் சிங்கும் திருமதி சர்கோசி (கார்லா ப்ரூனி) யும் பிரெஞ்சு தேசியதினத்தில் என்ன பேசியிருப்பார்கள் என ஜூ.வி டயலாக் டைப்பில் உங்கள் கற்பனையை வெளிப்படுத்துங்களேன்? (பார்க்க இன்றைய ஹிண்டு கடைசி பக்க போட்டோ). -இந்தியில் இவரும் பிரெஞ்சில் அவரும் சொல்வதாக போட்டால் பேஷ்.
பதில்:
கார்லா: (ஃபிரெஞ்சில்) பரேடில் இந்தியர்கள் மார்ச் செய்யும் போது பேண்ட்காரர்கள் என்ன ட்யூன் வாசிக்கிறார்கள் என்பதை கூற இயலுமா?
திருமதி மன்மோகன் சிங் (ஹிந்தியில்): இது “சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா” என்று ஒலிக்கும் தமிழ்ப்பாட்டு. (அவர்கள் இருவருக்குமிடையே துபாஷியாக செயல்பட்ட டோண்டு ராகவன் இங்கே எல்லாவற்றையும் தமிழிலே தருகிறான் என்பதைக் கூறவும் வேண்டுமோ?).
2. இதுநாள் வரை இந்திய குடியரசு தினத்தில் நாம் தான் பல்வேறு நாட்டு தலைவர்களை அழைத்து 3 மணிநேரம் உட்காரவைத்து அணிவகுப்பை பார்க்க வைப்போம். ஒரு இந்தியப் பிரதமரை ஒரு வளர்ந்த நாடு தங்கள் தேசிய தினத்தில் கூப்பிடுவது இது தான் முதல் முறையா?
பதில்: அப்படியெல்லாம் இல்லையே. இந்த மாதிரி அயல் நாட்டினரை தத்தம் தேசீய தினத்துக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பது எல்லா நாடுகளிலும் உண்டு என்றுதான் நினைக்கிறேன்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்துமதத்தின் அடிப்படை சாதியா?
-
சாதியை எதிர்க்கவேண்டும் என்று நாராயணகுரு சொல்லவில்லை, சாதியைப் பற்றி எண்ணவே
கூடாது என்றுதான் சொன்னார். ஏனென்றால் இந்திய மனம் சாதிதவிர எதைப்பற்றியுமே
சிந்தி...
18 hours ago
40 comments:
//அம்பானியை கொல்ல நடந்த ஹெலிகாப்டர் சதியின் சாட்சியை கொன்றுவிட்டனர், அந்த கொலையை இப்பொழுது ஊடகங்கள் கண்டுகொள்வதே இல்லையே. இந்த மூடி மறைக்கும் செயல் எதை காட்டுகிறது? //
என்ன அண்ணே சின்னபுள்ள தனமா கேள்வி கேக்குறிங்க!
ஏழையின் சொல் அம்பலம் ஏறியிருக்கா, இல்ல மாமியார் உடச்சது பொன்சட்டி ஆயிருக்கா?
//கல்லூரி தளத்திலோ பாட புத்தகம் தவிர வேறு புத்தகங்களையும் படிக்க வேண்டியுள்ளது. //
தெளிவாச் சொல்லுங்க, மக்கள் சரோஜாதேவி, மருதம்னு நினைச்சிக்கப் போறாங்க!
// வசூல் தோல்விகண்டு துவளாமல் மீண்டும் மீண்டும் திரைக்கதை வசனம் எழுதும் கலைஞரின்........?
பதில்: துவள வேண்டியது படத் தயாரிப்பாளர்தானே இவருக்கு என்ன?//
ஆமாம், ஏற்கனவே துவண்டு தலையில் துண்டு என சில தயாரிப்பாளர்கள் திரியுருறாங்க!
ஆனா நண்பர் அதிர்ஷ்டபார்வைகிட்ட கேளுங்க, படம் செமவசூல்ன்னு புள்ளிவிபரம் காட்டுவார், இந்த புள்ளியெல்லாம் எங்க கிடைக்குதோ!
//will you buy things based and believing on ads?
பதில்: Never.//
கொடியசைந்ததும் காற்று வந்ததா?
கதை தான் இதில்,
நீங்கள் உபயோக்கிக்கும் பொருளுக்கு விளம்பரமே இல்லையா?
பத்து பொருளை வரிசைப்படுத்துங்கள்,
அதுக்காக துண்டு, துவரம் பருப்புன்னு சொல்லக்கூடாது!
//Indians are not very serious in work -reason?//
ரஜினி புதிய கீதை சொல்லியிருக்கிறார்!
கடமையை செய், பலனை எதிர்பார்!
அதனால எவ்ளோ பலனோ அதுக்கு தான் வேலை நம்மகிட்ட!
எப்பூடி!?
வாளை எடுப்பவன் வாளாலேயே சாவான் (புது மொழி அல்ல என்பதை ஒப்பு கொண்டு விடுகிறேன்)//
துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியாலே சாவான்னு சொன்னா புதுமொழி ஆகிருமா!?
//வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
பதில்: வாயில்லா பிள்ளை உதை வாங்கும்//
வாயில்லைனா நாய் தூக்கிட்டு போயிரும்!
//நுணலும் தன் வாயால் கெடும்.//
நுணல்னா என்ன?
தவளையா?
//வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
பதில்: வியாதியே விதியாக இருந்தாலும் அது குணமாக வேண்டும் என்றிருந்தால் மருந்துண்டு.//
இதெல்லாம் படிக்கனும்னு விதி இருக்கும் போது அதுக்கு இருக்காதா?
//எம்ஜிஆருக்கு இருந்த முகராசி ஜெயலலிதாவுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.//
எம்.ஜி.யார் கட்சியை கட்டுக்குள் வைத்திருந்தது முகராசியால் என்பது ஏற்றுகொள்ளமுடியாத கருத்து!
கட்சியில் இருந்தவர்களுக்கே தெரியும் மக்களிடையே அவருக்கு இருந்த செல்வாக்கு பற்றி,
இன்று கருணாநிதிக்கு இருக்கும் செல்வாக்கு ஜெயலலிதா மேல் இருக்கும் வெறுப்பு தானே தவிர தனிபட்ட பாசம் அல்ல!
எம்.ஜி.யார் தமிழகத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்!
அவரை ஜெயலலிதாக்கூட ஒப்பீடு செய்வது தவறு!
//எழுத்தாளர்களுக்கு அரசு சலுகையை கூட்டலாமே?
பதில்: ஏன் கூட்ட வேண்டும்?//
எழுதிக்”கொல்ல” தான்!
//அரிசி விலை கடுமையாக ஏறிவிட்டதே-ஒரு ரூபாய் திட்டம் காரணமா?//
விளைநிலங்கள் ப்ளாட் ஆவதும், பணவீக்கமமுமே முக்கிய காரணம்!
//‘ஸ்பெக்ட்ரம்’ விவகாரம் கோவிந்தவா?
பதில்: யாராவது பொதுநல வழக்காக போட்டால் ஏதேனும் நடக்கலாம்//
உயிர்வாழ ஆசை இருப்பவர்கள் செய்வார்களா என்ன?
//வேலை கிடைக்கவில்லை என்று அவதிப்படும் இன்றைய இளஞர்களுக்கு டோண்டுவின் அட்வைஸ்?//
அவரே ஒரு வாழும் அட்வைஸ் தான்!
இந்த வயதிலும் வேலை செய்து சுய சம்பாத்தியத்தில் வாழ்கிறார்!
//எந்திரன் படம் ரஜினிக்கு கைகொடுக்குமா? இல்லை?//
இதுக்கு மேல் கை கொடுத்தால் என்ன? குடுக்காட்டி என்ன?
ஒரு மகள் பாடகி ப்ளஸ் டான்ஸர்(கலைமாமணி)
இன்னொரு மகள் பட தயாரிப்பாளர்!
இனி ஓய்வு தான்! பெஸ்ட்.
//உங்களுக்குப் மிகவும் பிடித்த பதிவு? (மிகுந்த மன நிறைவுடன்)
பதில்: தன்னம்பிக்கையை முன்னிறுத்தும் எல்லா பதிவுகளுமே மனதை நிறையச் செய்யும்.//
எனக்கு மட்டும் ஏன் அப்படி பதிவுகள் படிக்கும் போது கொட்டாவி வருகிறது!
//இந்த வயதிலும் மன்மோகன் எதற்கும் அஞ்சாமல் அசர மாட்டேன்கிறாரே//
காதை டர்பன் அடைத்து கொண்டிருப்பதால் சோனியா கத்துவது கேட்காதாம்!
//தி.மு.க. இல்லாத காங்கிரஸ் கூட்டணி ?//
அடுத்த நாடாளமன்ற தேர்தலில் எதிர்பார்க்கிறேன்!
வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் ஆனால் ஆட்சியில் பங்கு கேட்பார்கள், பிரச்சனை ஏற்ப்படும் என்பது என் கணிப்பு. காலம் பதில் சொல்லும்!
//ஜெ இல்லாத அதிமுக?//
உருப்பட வழி ஏற்படலாம்!
//கலைஞர் ஆங்கிலத்தில் பேசுவதிலும் வல்லவரா?//
டீ.ஆரை விட பெருசா பேசிருவாரோ!
// தீவிரவாத எதிர்ப்பு பலப்படுத்தபப்டும் என்று சொல்லி கொண்டிருக்கிறார்களே ஆனால்?//
மும்பை தாக்குதல் பிரச்சனையில் பாகிஸ்தானுடன் கொஞ்சி கொஞ்சி விளையாடுவதை சொல்கிறீர்களா?
//எல்லாத் திராவிடக் கட்சிகளை மூட்டை முடிச்சுகளோடு வழியனுப்பும் காலம் வருமா?//
எங்க வடக்குக்கா?
எங்க உட்காந்துகிட்டு என்ன பேச்சு?
திராவிடம் என்ற சொல் இல்லாம இன்னைக்கு தமிழகத்தில் கட்சி நடந்த முடியுமாங்கிறேன்!
//கணிகைகள் வந்தால் கணிகன்களும் வருவார்கள். பரவாயில்லையா? //
இப்போ மட்டும் இல்லைன்னு நினைக்கிறிங்களா?
//வழக்கமாய் உங்களை கலாய்க்கும் பதிவர்களில், பின்னூட்டாளர்களில் உங்களை மிகவும் கவர்ந்தவர் யார்?
பதில்: வால்பையன், லக்கிலுக்.//
இதுக்கு பேர் தான் கோர்த்துவிடுறதா!
//பாலகுமாரன் 'குரு' தேவை என்கிறார். உங்களுடைய 'குரு' என்று யாரைக் கூறுவீர்கள்? ஏன்?//
ஒவ்வொரு மனிதனின் செயலிலும் எதாவ்து அல்லது யாருடயதாவது பாதிப்பு இருக்கும், அதிலும் அவனது டச் இருக்கும், இதற்கு குரு என்று தனியாக தேவையில்லை, பாலகுமாரன் யாருக்காவது குருவாக ஆசைப்படுகிறார் போல,
Dondu sir..Please see this thread..What are your comments on this? Why dont u post your views in this?
http://www.tamilbrahmins.com/showthread.php?t=2169
நன்றி,
28. கொங்கு மண்டலத்தில் கள் வேண்டுவோர் அமைப்பின் போராட்டம் பிசுபிசுத்துவிட்டதா?
பதில்: எல்லா மதுவகைகளும் தாராளமாக கிடைக்கும்போது கள்ளுக்கு மட்டும் ஏன் இன்னும் தடை விதிக்க வேண்டும் என்பது புரியவில்லை.
மதுபான தொழிலதிபர்களின் பணம் படுத்தும் பாடு இது. ஆங்காங்கே பணம் கட்டி கள்ளின் மீதான தடையை நீட்டிப்புசெய்ய வழிவகை செய்கின்றனர்.
கே: எனக்கு தெரிந்து சமீபத்தில் என்றால் அண்மையில் என்று அர்த்தம். இதற்கு வேறு அர்த்தம் உள்ளதா? நீங்கள் 1950ல் என்று குறிப்பிடுவதற்கெல்லாம் சமீபத்தில் 1950ல் என்று குறிப்பிடுகிறீர்களே, சில நேரம் வெறுப்பேற்றும்படி உள்ளது. சமீபத்தில் என்ற அடைமொழியை தவிர்கலாமே?
நன்றி,
ராம்குமரன்
"தியாகி கூட தான் பெறப்போகும் நல்ல பெயருக்காகத்தான் தியாகமே செய்கிறான்"
This is the most atrocious statement that I ever heard in my life...
கேள்வி பதில்கள் சூப்பர்!
உண்மைதமிழன் பதிவை விட பெருசா இருக்கு. படிச்சிகிட்டே கடைசில வர வர கண்ணு டயர்ட் ஆகீடுச்சு.
:))
பதிவர் திரு. ஆர்.பி. ராஜநாயஹம் என்ன ஆனார்? இரண்டு மாதங்களாக ஒன்னும் பதிவே காணுமே?
First read this... This incident has happened for one of our citizen in chennai. Might be it will happen in future for us also.Let us not fear to exercise our rights.
http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html
"தூய நீர் என்பது ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனின் எளிமையான கூட்டுக் கலவை. அது வாசமற்றது, வண்ணமற்றது, சுவையற்றது.
- தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம்.
இந்த எளிய உண்மையை சூளைமேடு ராகவா தெருவில் உள்ள சரவணம் மேன்ஷனின் உரிமையாளர் திரு.நாராயணன் அவர்களுக்கு புரிய வைக்க நானும் எனது சில நண்பர்களும் செய்து வரும் முயற்சிகளின் தொகுப்பு இதோ...
இப்படித் தனது வேதனை கலந்த போராட்டத்தைத் தனது பதிவில் பகிர்ந்துகொள்கிறார்,
லிங்க் இங்கே
http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html
உங்களால் ஆன உதவியைச் செய்யுங்கள்! துணை நில்லுங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன்
http://nattunadappu.blogspot.com/2009/07/blog-post.html
உங்கள் உதவி தேவை.நேரமிருப்பின் உதவி செய்யவும்
அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்
கொசாவாவில் செர்பியாவை பிரிக்கிறார்கள்.. ஜோர்சியாவில் இருந்து ஒசட்டியா பிரிகிறது ..எரித்திரியர்கள் பிரிகிறார்கள்.. தமிழன் மட்டும் பிரியகூடாதா? என்ன உங்கள் எண்ணம்?? இங்கு நாம் இந்திகாரனிடம் அடிமையாக இருப்பது போன்று சிங்களனிடம் இன்னும் முட்கம்பிகளுக்குள் ஈழ தமிழர்கள் அடைபட வேண்டுமா? நல்லது உங்கள் ஆரிய வன்மம்!
இந்தியா என்னும் நாடு இந்து என்னும் பார்ப்பனிய மதத்தை அடிப்படையாகவும், இந்தி என்னும் வடமொழியை செயலுத்தியாகக் கொண்டு கண்ணுக்குப் புலனாகாத ஒரு பூணூலால் கட்டப் பட்டுள்ளது. பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ்,மார்க்சிய கம்யூனிஸ்டு, அ தி மு க, போன்ற மிதவாத அரசியல் அமைப்புகள்; ஆர் எஸ் எஸ் , இந்து முன்னணி, பஜ்ரங் தளம், பாரதிய சனதா, மா லெ குழுக்கள், மக இ க போன்ற தீவிர அரசியல் பேசும் இயக்கங்கள், இந்திய இராணுவத் தலைமை, மையப் புலனாய்வுத் துறை, இந்திய தலைமை செயலகம், நீதித் துறை, வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கை ஆகிய அனைத்தும் இந்தப் பூணூல் கட்டமைப்பின் ஒவ்வொரு இழைகளாகும்.
இந்தக் கட்டமைப்பு மிக நுணுக்கமாக, வஞ்சகமாக பின்னப் பட்டுள்ளதால் மிக மிக கவனமாக அணுகப்பட வேண்டும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து ஒடுக்கப் படும் தேசிய இனங்களும் ஒன்று பட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சியை, நிகரமைய (சோசலிச), பொதுமைய (கம்யூனிச) சமூக அமைப்புக்கான போராட்டத்தை மேற்கொள்ள முடியும் என்பது, இந்தியா என்கிற பார்ப்பனிய உருவாக்கம் உள்ள வரை சாத்தியமாகக் கூடிய வாய்ப்புகள் மிக மிக குறைவே. ஏன் சாத்தியம் இல்லை என்று கூடக் கூறலாம். இங்குள்ள தேசிய இனங்கள் அடிப்படையிலேயே ஒன்றை ஒன்று முரண்பட்டு நிற்கின்றன.
கன்னடன் தமிழனின் தனித்துவ முயற்சி கண்டு மனம் பொறாதவனாய் அவன் தன்னை விட தாழ்ந்தவன் எனக் காட்ட முற்படுகிறான். மலையாளி, இந்தியா என்ற கட்டமைப்புக்குள் அங்கங்கின்னாதபடி நிறைந்து ஒட்டுண்ணியாக வாழ்ந்துகொண்டு, தமிழனின் தனித்துவ வேட்கை தன் அடிப்படை வாழ்வாதாரத்தை பிளந்து விடும் என எண்ணி தமிழனின் மென்னியை திருகுகிறான். பிகாரியையும் ஒரியாக்காரனையும் மதராசியையும் வட நாட்டவன் வெறுக்கிறான், அவமதிக்கிறான். உறங்கும் எரிமலையான பஞ்சாப், எரியும் காசுமீர், அசாம், வட கிழக்கு மானிலங்கள் என எத்தனை முரண்பாடுகள்.
இத்தனை முரண்பாடுகளிலும் பார்ப்பனியவாதிகளும், பெரு முதலாளிகளும், அரசியல் அற்பர்களும் மட்டுமே ஒருமைப்பாடு, இந்தியா, இந்தியன் என்று அலறிக் கொண்டிருப்பதை கவனியுங்கள்.
தோழர்களே! ஒரு மார்க்சியவாதி என்ற முறையில் ஒன்றைக் கூறுகிறேன். ஈரோட்டுப் பெரியார் மூலமாகத்தான் நீங்கள் செர்மானியப் பெரியாரை அடைய முடியும். வேறு எந்தப் பெரியவாள் மூலமாகவும் அல்ல! பார்ப்பனியத்தை ஒழிக்க முற்படுங்கள். நீங்கள் புரட்சியெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லாமல் இந்தக் கட்டமைப்பு தானே உதிர்ந்துவிடும்.. என்னை கேட்டால் இந்த இழவு பிடித்த இந்தி தேசியமே தேவை இல்லை ..தமிழன் சூடு சொரணையோடு வாழ தனிதமிழ்நாடே தீர்வு! நானும் என்னால் முடிந்த அளவு பிரச்சாரத்தினை ஆரம்பித்துவிட்டேன்..
வீர தமிழினத்திற்கு தலாய்லாமா போன்று இன்னும் 50,60 வருடங்கள் போராடவேண்டிய அவசியம் இல்லை என்பதே எனது கருத்தாகும் ..நமக்கு அறிவியல் ,ரசாயன..அணுகுண்டு போன்ற அறிவு தேவை ஏற்படுகிறது.. எவனும் இங்கு இப்போது ஏசு போன்று ஒரு கன்னத்தில் அறைந்தால்.. என்று திரிவதில்லை வலிந்தவன் வாழ்வான் இதுவே உலக கோட்பாடு எனவே நாமும் நமது பிள்ளைகளுக்கு அணு ஆயுத வல்லமையை ஊட்டுவோம்.. எதிர்ப்பவன் எவனாக இருந்தாலும் அவன் தலையில் அது கட்டாயம் வெடிக்கட்டும்!!!..
இதற்கு எனது பதில் தான் நான் அனுப்பிய பின்னூட்டம்..
3. Prabhakaran's latest CD compares Tamils (i think srilankan Tamils) with Jews. Link "http://www.vikatan.com/jv/2009/jul/08072009/jv0301.asp"
பதில்: யூதர்கள் 2000 ஆண்டுகளாக பட்ட அளவுக்கு தமிழர்கள் நிலை மோசமில்லை. ஒப்பிட ஒன்றுமேயில்லை.
இதில் இருந்து புரிகிறது உங்கள் இனபாசம்..
Compare Cho Vs N.Ram
பதில்: இருவருமே துணிச்சலானவர்கள். ராம் கம்யூனிச சிந்தனையாளர். சோ கம்யூனிசத்துக்கு எதிரி. அவர்களை பிடிக்கிறதோ இல்லையோ அவர்களை புறக்கணிக்க இயலாது.
இது மாதிரி கத்துக் குட்டி பதில்களையெல்லாம் நீங்க ஒருதரமாவது திருப்பிப் படிக்றது உண்டா
உங்க வயசுக்கு ஏத்த மாதிரி மெச்சூரிட்டியோட இருக்கா உங்க எழுத்து
சார் வேண்டாமே இந்த மாதிரி அமெச்சூர் வேலையெல்லாம்
-சோ.இராமசாமி
கேள்விகள்:
எம்.கண்ணன்
1. ஜெயா செய்திகளில் (அல்லது பெரும்பாலான தமிழ் தனியார் சேனல் செய்திகளில்) 'பரபரப்பு' என்ற வார்த்தை ஒரு நாளைக்கு எத்தனை முறை உபயோகப்படுத்தப் படுகிறது ? எங்கு எது நடந்தாலும் இவர்களுக்கு அது பரபரப்பு தானா ?
2. ஜெயேந்திரரின் சங்கரா டிவி பார்ப்பதுண்டா ? நல்ல கோயில், ஹிந்து பண்பாட்டு நிகழ்ச்சிகள் வருகின்றனவே ?
3. ஹேமா ஆனந்ததீர்த்தன் எழுதிய கிளுகிளு கதைகள் படித்ததுண்டா ?
4. ஒரு எடுத்துக்காட்டிற்கு, திருச்சியிலிருந்து மதுரை செல்ல (சுமார் 10 அல்லது 20 வருடங்களுக்கு) முன்பும் சுமார் 3 மணி நேரம் தான் ஆனது. தற்போது 4 வழி என்றெல்லாம் அகலப்படுத்தினாலும் எல்லா ஊர்களுக்கும் செல்ல முன்பைவிட அதிகநேரமே தேவைப் படுகிறது. புறப்படும் மற்றும் சென்றடையும் ஊரின் எல்லையிலிருந்து ஊர் நடுவில் இருக்கும் பஸ்ஸ்டாண்டை சென்றடைய ஒரே கசகசவென கூட்டம், ஊர்திகள் என பயணத்தையே வெறுப்படையச் செய்துவிடுகின்றனரே ?
5. பதிவர் சந்திப்புகளில் மீண்டும் போண்டா இடம்பெறவேண்டுமானால் அதற்கான சிறந்த இடம் எது (பதிவர் சந்திப்பு நடத்த) ?
6. உபன்யாசங்கள் கேட்கும் பழக்கமுண்டா ? சமீபத்தில் யாருடைய உபன்யாசத்தை மிகவும் ரசித்தீர்கள் ? (ஜெயாடிவியில் எங்கே பிராமணனின் சோவின் உப்யன்யாசத்தைக் கேட்கவில்லை :-))
7. குலாம் நபி ஆசாத் கிராமங்களுக்கு மின்வசதி செய்து டிவிபார்க்க வைத்தால் குடும்பம் கட்டுப்பாட்டில் முன்னேற்றம் ஆகும் என கூறியுள்ளாரே ? இவருக்கெல்லாம் எதற்கு மந்திரி பதவி ? நல்ல உருப்படியான யோசனைகள் தோன்றாதா ? உங்கள் யோசனை என்ன ? (மக்கள் தொகைப் பெருக்கம் கட்டுப் படுத்த)
8. 108 திவ்யதேசங்களில் எவ்வளவு திவ்யதேசங்கள் தரிசித்துள்ளீர்கள் ? அனைத்து இடங்களுக்கும் செல்ல பிளான் உண்டா ?
9. அரசியல் அறியா தமிழனின் விகடன் கடிதத்திற்கும் குமுதத்தில் வாலுபிரசாதின் கற்பனைக்கும் வித்தியாசம் இல்லையென்றாலும் கருணாநிதிக்கு விகடன்மீது மட்டும் கோபம் வருவது ஏனோ ? கடந்த 2 ஆண்டுகளில், கருணாநிதி காழ்ப்பு கட்டுரைகளே அதிகம் இல்லையா ?
10. வருடம் முழுவதும் பாலாற்றில் (பெரும்பாலும்) தண்ணீரே ஓடாதபோது வெறும் மணல் திருட்டு மட்டுமே நடக்கும் ஒரு ஆற்றில் குறுக்கே ஆந்திரம் அணை கட்டினால் என்ன கட்டாவிட்டால் என்ன ? பாலாற்றில் தண்ணீர் இருந்து யார் பார்த்திருக்கிறார்கள் ? எதற்கு இத்தனை சலசலப்பு ?
ஐயா....
எப்படி உங்களால மட்டும் இப்படி விபரமா, ஒரு ஈடுபாட்டோட வேலை செய்ய முடியுது? அபாரம்!
கேள்விகள்-
1. மொழிபெயர்க்க எப்படிப்பட்ட பிரதிகள் அதிகம் வருகின்றன? டெக்னிகல் தவிர வேறு எந்த வகையானவை?
2. ஆங்கிலத்திலிருந்து பிற மொழிகளுக்குப் பெயர்ப்பது அதிகமா அல்லது பிற மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்குப் பெயர்ப்பது அதிகமா?
3. மொழிபெயர்ப்பு மூலம் வரும் வருமானத்திற்கு வரி கட்டுகிறீர்களா? இதை எப்படிக் கணக்கு வைத்துக்கொள்கிறீர்கள்? (சத்தியமா நான் வருமான வரி அதிகாரி அல்ல!)
4. ஹோமியோபதி அனுபவம் உண்டா?
5. சில அனானி கேள்விகள் நீங்களே எழுதிக்கொள்வது போலத் தோன்றுகிறதே!
6. போலி டோண்டு அப்படி என்னதான் செய்தார்?!
சார் கேள்வி பதில்கள் நீளம் ரொம்ப ரொம்ப ரொம்ப அதிகமாக போகுது.. படிக்க ரொம்ப கடினமாக உள்ளது.
தயவு செய்து இரு பதிவுகளாக போடவும்.
வியாழன் முதல் பதிவு வெள்ளி அடுத்த பதிவு இப்படி இருந்தால் படிக்க எளிதாக இருக்கும்,.
Post a Comment