ஆஹா, காதல் என்பது எதுவரை?
சமீபத்தில் 1962-ல் வந்த படம் பாதகாணிக்கை. அதில் எல்லா பாட்டுகளுமே செம ஹிட்தான். முக்கியமாக வீடுவரை உறவு வீதி வரை மனைவி என்னும் கண்ணதாசனின் வரிகளை மறக்கவும் இயலுமோ? ஆனால் இங்கு நான் குறிப்பிட விரும்புவது அதே படத்தில் வரும் “ஆஹா காதல் என்பது எதுவரை” என்னும் பாடலைத்தான். “கல்யாண காலம் வரும்வரை” என சந்திரபாபு ஜெமினி கணேசனின் கேள்விக்கு விடை தருகிறார். பிறகு பாடல் வரிகள் வேறு விஷயங்களை தொட்டு செல்கின்றன.
ஆனால் என்ன உண்மையான வரிகள்? ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு, அம்பிகாபதி அமராவதி காதல்கள் இன்னும் ஏன் பேசப்படுகின்றன எனப் பார்த்தால் அவை ஒன்றுமே திருமணத்தில் முடியவில்லை என்பது தெரியவரும். முடிந்திருந்தால் அவை ஒன்றுமே காவியமாகியிருக்காது என்பதும் நிஜம். தெரியாமலா சொன்னார்கள் மோகம் 30 நாள் ஆசை அறுபது நாள் என்று?
எழுபது வயதை கடந்த நாட்டியப் பேரொளி பத்மினியிடம் ஒரு ஐம்பது வயது பெண்மணி ஒரு கேள்வி கேட்டாராம், “நீங்கள் ஏன் சிவாஜியை திருமணம் செய்து கொண்டிருக்கக் கூடாது” என. அவர் உடனே பதில் சொல்லவில்லையாம். வெகு நேரம் கழித்து, திடீரென எங்கோ சூன்யத்தை பார்த்தவாறு கூறினாராம், “நடக்கிற காரியமா அது? அவரோ கள்ளர் ஜாதி, நானோ நாயர் சாதி பெண்மணி” என. அந்த வயதிலும் அவரது அந்த மெல்லிய உணர்வு அப்படியே இருந்திருக்கிறது. அதுவே அவர்கள் நிஜமாகவே திருமணம் செய்து கொண்டிருந்தால்? இருவருமே உணர்ச்சிவசப்படும் கலைஞர்கள். 90 சதவிகிதம் அது தோல்வியாகத்தான் முடிந்திருக்கும். அந்த மென்மையான உணர்வு போன இடம் தெரிந்திராது. பிரபு குஷ்பு விவகாரம் போதாதா?
நாடக அனுபவம்
சினிமாவுக்கு ஆள் எடுத்து கொண்டிருந்த கம்பெனி ஒன்றில் நடந்த நேர்காணல் இந்த விஷயம் நடந்ததாக சம்பந்தப்பட்ட உப்புமா கம்பெனியின் ஆல் இன் ஆல் அசிஸ்டண்ட் சுப்பிரமணியம் என்னிடம் சத்தியம் செய்கிறான். அவனிடம் போய் இதை நான் சமீபத்தில் 1966-ல் விகடனில் படித்தேன் எனக் கூறி அவனை ஆஃப் செய்ய விரும்பவில்லை என வைத்து கொள்ளுங்களேன்.
- என்னப்பா ரோல் வேணுமா?
- ஆமாம் சார். நல்லா நடிப்பேன் சார்.
- முன்னாலே நடிச்ச அனுபவம் ஏதேனும் இருக்கா?
- எங்க ஸ்கூல் நாடகத்துலே நடிச்சேன் சார்.
- அப்படியா, சொல்லு, சொல்லு. என்ன நாடகம்?
- சாம்ராட் அசோகனை பத்திய நாடகம் சார். அதுல நான்..
- அசோகனா நடிச்சாயா?
- இல்ல சார், கலிங்க போர்க்கள காட்சியிலே அசோகன் வரும்போது எதிரே புத்த பிட்சு ஒத்தரு வருவார் சார்
- அந்த புத்த பிட்சுவா நடிச்சாயா?
- இல்ல சார். அந்த பிட்சு வர வழியிலே ஒரு கிழவி அழுதுக்கிட்டுருப்பா சார்
- அந்த கிழவியா நடிச்சியா?
- இல்ல சார் அந்த கிழவி மடியிலே ஒரு பிணம் சார்
- அந்த பிணமா நடிச்சியா
- பக்கத்து பிணம் சார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
8 comments:
கேள்வி பதிலுக்காக:
’மனதளவில் நான் யூத்துதான்’ என சொல்லிக்கொள்பவர்களிடம், என்னைப் போன்ற குழந்தைகள், ‘என்னடா மச்சான், சௌக்கியமா?’,’ஏ மாப்பு! என்ன ஆளையே காணோம்’, என்றமாதிரி பேசினால் ஏற்றுக்கொள்வார்களா? நீங்கள் எப்படி?
சிவாஜியும், பத்மினியும் மட்டும் தான் உணர்ச்சிவசப்படுபவர்கள் போலயும், மற்றவர்களெல்லாம் ஜடங்கள் போலயும், ஒருவேளை சிவாஜியும் பத்மினியும் கல்யாணம் செய்திருந்தால் அது முறிவில் தான் முடிந்திருக்கும் என்ற கற்பனை அபாரமாக உள்ளது!
பல படங்களில் ஒன்றாக நடித்தவர்களுக்கு மனம் பரிமாறி கொள்ள வாய்ப்பில்லாமலா இருந்திருக்கும், அதான் உடைத்தே சொல்லிவிட்டாரே, இந்த கேடுகெட்ட சாதியால் தான் முடியவில்லை என்று!
Simply said, Many people strongly believe the motto of the Love is it should end with marriage. may be because of that people stop loving each other after marriage.
If the journey of the Love only destined towards marriage, Odds are high for failure for thier marriage life. Marriage is a predominant phase in love and thats not the end.
The other thing is sex propells the Love more than any before marriage.
There is a lots of difference in sharing a relation for 2 hours a day from 24 hours a day.
// வால்பையன் said...
சிவாஜியும், பத்மினியும் மட்டும் தான் உணர்ச்சிவசப்படுபவர்கள் போலயும், மற்றவர்களெல்லாம் ஜடங்கள் போலயும், ஒருவேளை சிவாஜியும் பத்மினியும் கல்யாணம் செய்திருந்தால் அது முறிவில் தான் முடிந்திருக்கும் என்ற கற்பனை அபாரமாக உள்ளது//
கல்யாணம் கட்டவில்லை ஆனால்............
Tragic incidents will take time to linger.. The intresting things in life has its own tragic substance.. A well laughed comedy is also a tragedy happened to someother person..
You are very good in translation & blog writing but that itself has a reason to feel.
In your own words :
இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
பதில்: நான் இப்படி மொழிகளில் விளையாடுவதை பார்க்க எனது தாய் தந்தையர் உயிருடன் என்னுடன் இல்லையே என்பதில்தான் வருத்தம்.
சிவாஜி பத்மினியை பாப்ஜி,பப்பி என அன்பாய் கூப்பிடுவார் என அந்தக்கால திரைச் செய்திகள் சொல்லும்.
:)
1.அரசே இப்படி அநியாயமாய் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4 கூட்டியது பற்றி?
2.பெட்ரோல் நிறுவன் உழியர்களின் உயர் சம்பளஙகள், அதிகமான சலுகைகள் ,நிர்வாக முறைகேடுகள்,நிதி நிர்வாகத்தில் சீர்கேடுகள் ஆகியவற்றால் ஏற்படும் நஷ்டத்தை அப்பாவி பொதுஜனம் மேல்?
3.மந்திரி சபை கூடித்தானே இது மாதிரி கொள்கை முடிவுகளை அறிவிப்பார்கள்?
4.80 டாலரை தண்டாத போதே இப்படி என்றால் ?
5.முகமூடி போடாத ஆட்டோ காரர்களுக்கு கொண்டாட்டமா? திண்டாட்டமா?
Post a Comment