11/26/2009

டோண்டு பதில்கள் - 26.11.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?


அனானி (32 கேள்விகள் கேட்பவர்)
1. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா என்னாச்சு?
பதில்: கிடப்பில் உள்ளது. எந்தக் கட்சியுமே அதை எதிர்க்கத் துணியாது. அதே சமயம் மனப்பூர்வமாக ஆதரிக்கவும் செய்யாது. வெறுமனே பம்மாத்து செய்து கொண்டிருக்கும். வேண்டுமென்றே உள் ஒதுக்கீடு எல்லாம் கேட்கும், தாமதமாகும்.
அப்படியே வந்தாலும் என்ன நடக்கும் என்றால் ஒப்புக்கு தம் வீட்டுப் பெண்களை நிறுத்தி ஜெயிக்க வைத்துவிட்டு ஆண் அரசியல்வாதிகளே ஆட்சியை நடத்துவார்கள். அதுதானே பல பஞ்சாயத்துகளில் நடக்கிறது? 

2. திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், ஆணின் வாழ்க்கை என்னவாகும்?

பதில்: ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி காலாகாலத்தில் நடக்க வேண்டியது நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கும் பிரச்சினை, சுற்றியிருப்பவருக்கும் பிரச்சினைதான். காலம் கடந்தபிறகு பச்சாத்தாபபடுவதால் எந்தப் பயனும் இல்லை.   

3. நிரந்தரமான கொள்கை உடைய அரசியல்வாதி யாரும் உளரோ?

பதில்: நீண்டகாலம் அரசியலில் இருப்பவர்கள் கொள்கைகளை மாற்றாமல் இருக்கவியலாது என்பது ஒரு புறம் இருக்க, தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதும் கேலிக்குரியதே. 

4. வாழ்வில் வெற்றி பெற படிப்பறிவு மட்டும் போதுமா?

பதில்: நிச்சயம் போதவே போதது. அதற்காக அது தேவையே இல்லை என்றும் கூறவியலாது.

5. காமம், ஆத்திரம், கோபம் - மூன்றில் எது மோசமான பலனைத்தரும்?

பதில்: இவை இ.என்.டி. (காது, மூக்கு, தொண்டை) மாதிரி ஒன்றுக்கொன்று தொடபுடையவை. தங்கை சூர்ப்பனகையின் மூக்கு அறுபட்டது குறித்து ராவணன் ஆத்திரம் கொண்டான், கரதூஷணர்களை ராமபிரான் அழித்தார் எனக் கேட்டது அது கோபமாக உருவாயிற்று. அதற்கு தூபம் போடுவது போல சீதையின் அழகை பற்றி கேட்டதும் காமமும் உருவாகியது. அவன் அழிந்தான், கூடவே இலங்கையும். 

6. வாய்விட்டு சிரித்தால் மூளை வளரும்; ஆயுள் அதிகரிக்கும் என்பது உண்மையா?

பதில்: மூளை வளருமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும், அப்படியானால் ஆயுளும் அதிகரிக்க வேண்டியதுதானே?

7. வழக்கத்தில் இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் எந்த ஊரை வைத்து சொல்லப்படுகிறது? காரணம்?

பதில்: இண்டியன் ஸ்டாண்டர்ட் டைம் என்பது 82.5° கிழக்கு தீர்க்கரேகையை வைத்து கணக்கிடப்படுகிறது. அலகாபாத் அருகே உள்ள மிர்ஜாப்பூரின் உடனடி மேற்கின் ஊடே கோடியில் இந்த தீர்க்க ரேகை செல்கிறது. எதற்கும் இங்கும் சென்று பார்க்கவும்.  
காரணம் என்று கேட்டால் என்ன சொல்வது?

8. எப்போதும் பதவி, பட்டம், புகழுக்காக அலைபவர்கள்?

பதில்: கலைஞரை கிண்டல் செய்யவும் ஒரு அளவு இல்லையா?

9. செல்வாக்கு, அந்தஸ்து, பணம் இருந்தும் அரசியலில் ஈடுபடாத மனிதர்கள்?

பதில்: பல கோடீஸ்வரர்கள் இருக்கிறார்களே?

10. எப்போதும் லொடலொடவென பேசும் ஒரு சிலரின் பழக்கம்?

பதில்: அது தொட்டில் பழக்கம்.

11. வாழும் மனிதர்களைச் சுற்றி எப்போதும், ஏதாவது பிரச்னை இருந்து கொண்டிருக்கிறதே?

பதில்: செத்தால்தான் பிரச்சினை இல்லை. அதுகூட பிரச்சினையின்மை செத்தவனுக்கு மட்டுமே பொருந்தும். சுற்றி இருப்பவர்களுக்கு அதுவும் பிரச்சினைதான்.


12. உலகில் நல்லவர் யார்? 
பதில்: வாங்கிய கடனைத் திரும்பக் கேட்காதவர், மற்றும் வடிவேலு.

13. உலகில் கெட்டவர் யார்?

பதில்: வாங்கிய கடனை கேட்பவர், வடிவேலு. ஒரு படத்தில் கரணிடம் அவருக்கு தான் கொடுத்த கடனை கேட்க, அவரால் குடிசைக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உதை வாங்கியவர். படத்தின் பெயரை யாராவது சொல்லுங்கப்பூ.

14. வாழும் மனிதனின் திகட்டாத விருந்தாவது யாது?

பதில்: அடுத்தவர் பற்றிய வம்பு.

15. பம்பாய் வாழ் பார்சிகள் இனத்தின் பழக்கவழக்கங்கள் தொடர்கிறதா?

பதில்: தொடர்கின்றன.

16. பொதுவாய் தற்பெருமை ஒரு மனிதனிடம் எப்போது உண்டாகிறது?

பதில்: குறைகுடமாக இருக்கையில்.


17. யாரை திருத்த(வே) முடியாது?
பதில்: முயலுக்கு மூன்றே கால் என வாதம் புரிபவரை.

18. தாராளமாக செலவு செய்வதால் ஒருவனைச்சுற்றும் நண்பர்கள்?

பதில்: அந்த ஒருவனிடம் பணம் இல்லையேன்றால் ஓடிவிடுவார்கள்.

19. நம்பிக்கையானவர்கள் கூட சில நேரங்களில் காலை வாருகின்றனரே?
பதில்: அந்த நம்பிக்கையானவரின் வெர்ஷனையும் கேட்பது நலமாக இருக்கும். ஏதாவது அன்ரீஸனபளாக எதிர்பார்ப்பதும் தவறுதானே.



20. உங்கள் ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள்?
பதில்: மனதுக்கு ரம்மியமான விஷயங்கள் செய்வதாகக் கூறலாம். ஆனால் மொழிபெயர்ப்பே எனக்கு ரம்மியமானதுதானே, பிறகு ஏன் ஓய்வு?



21. தற்சமயம் நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறீர்கள், சமீபத்தில் டெல்லியில் இருக்கும்போது எப்படி?
பதில்: அவற்றை அறியும் முயற்சியில் இருந்தேன். அதே சமயம் பல விஷயங்கள் சென்னைக்கு வந்ததும் இர்ரெலெவெண்டாகிப் போயின. ஆகவே அவை மனதின் பின்னணிக்குப் போய் விட்டன.
மொத்ததில் புது விஷயங்களை கற்பது என்பது எப்போதுமே நடந்தது, நடக்கிறது, இனிமேலும் நடக்கும்.


22. பிற அயல்நாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு வந்து, வேலை செய்பவர்கள் மன நிலை?
பதில்: அது அவர்கள் இங்கு பெறும் வரவேற்பை பொருத்தது. அயல்நாட்டு நிபுணர்களுக்கு நாம் தரும் மரியாதையை கூர்க்காக்களுக்கு தருகிறோமா, இல்லையே.



23. யோகாசனப் பயிற்சி செய்தால், தொப்பை குறையுமென்ற கருத்து?
பதில்: நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் சரியாகத் தெரியாது. என்னைப் பொருத்தவரை உண்ணும் உணவு சீரணமாக வேண்டும், தேவைக்கதிகமாக உண்ணக்லாகாது. உடற்பயிற்சி அவசியம், அவ்வளவே.



24. நிலவும் சமூக ஒழுக்கக் கேட்டுக்கு முக்கிய காரணம் ?
பதில்: மக்களும் அது பற்றி அலட்டிக் கொள்வதை நிறுத்தியதும் ஒரு முக்கியக் காரணம். உதாரணம் லஞ்சம் வாங்கி பணக்காரனாவது. 



25. தமிழ் தெரிந்தும், தமிழர்களிடையே ஆங்கிலம் பேசும் மேதாவிகள்?
பதில்: எரிச்சலை கிளப்புபவர்கள். தங்களது ஆங்கில அறிவை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள். அவர்கள் பேசும் ஆங்கிலத்தைக் கேட்டால் வெள்ளைக்காரன் தூக்கில் தொங்குவான்.



26. அக்கு பஞ்சர் சிகிச்சை முறை பிரபலமாய் வருவது போலுள்ளதே? பயன் எப்படி?
பதில்: உடலில் பல இடத்தில் ஊசியைக் குத்துவாங்களாம், நினைப்பே வலியைத் தருதுங்களே. அய்யோ சாமி எனக்கு அது வேண்டாம்.



27. காதலே கதி என பார்க்கை சுற்றிக் கொண்டிருக்கும் வாலிபர்கள்?
பதில்: ஒழுங்காக வேலை செய்து மனைவியை காப்பாற்றத் துப்பில்லாத கபோதிகளும் காதல் செய்ய அலைவதால், காதலுக்கே கெட்டப் பெயர்.



28. நம் நாட்டிலும் பெண்களும் பரவலாய் மது குடிக்கின்றனர் என வரும் செய்தி?
பதில்: இதில் ஆணென்ன பெண்ணென்ன? மொத்தத்தில் மதுவரக்கன் தீங்கையே இழைப்பான்.



29. சேமிப்பே அர்த்தமற்றது என்று ஆகிவிடும் போல் தோன்றுகிறதே?
பதில்: ஐரோப்பாவில் மிகக் குறுகிய இடைவெளியில் போன நூற்றாண்டில் இருமுறை அரசுகள் திவாலாகி, பலரது சேமிப்புகள் கரைந்து போயின. ஆகவே அங்கெல்லாம் பலருக்கும் சேமிப்பு என்றாலே அலர்ஜிதான். இருக்கும்போது அனுபவிப்போம் என்ற மனப்பான்மையே அதிலிருந்துதான் உருவானது. இந்த மனப்போக்கையும் புரிந்து கொள்ள இயலுகிறது.



30. மது மயக்கம், மாது மயக்கம் - எது கொடியது?
பதில்: மது ஒரு கையில் இன்னொரு கையின் அணைப்பில் மாது என்று இருப்பதுதான் மிகவும் கொடியது.



31. விலைவாசியை கட்டுப்படுத்த முடியுமா? செய்வார்களா?
பதில்: நுகர்வோர்தான் அதை முக்கியமாகச் செய்ய வேண்டும். செய்வார்களா? சிவாஜி படத்துக்கு முதல் ஷோவில் போக ஆயிரம் ரூபாய் தர தயாராக இருக்கும் அசடுகளிடம் இந்த மனவுறுதியை எப்படி எதிர்பார்ப்பது?



32. தமிழ் எழுத்தாளர்களில் இலக்கியத் தரமாக எழுதுவதில் யார் பிரபலமாய் உள்ளார்?
பதில்: ஜெயமோகன்.


ரமணா

செல்தொலைபெசி சேவையில் “நமப்ர் போர்டபிலிட்டி” வரும் 2010 முதல் வருவதாய் செய்திகள் வருகிறதே( ட்ராயின் அறிவிப்பு)
1.யார் யாருக்கு லாபம்?
பதில்: பயனர்களுக்கு.

2. யார் யாருக்கு நட்டம்?
பதில்: மோசமான சேவை அளிக்கும் நிறுவனத்துக்கு.

3. எப்படி அமலாக்கபடுகிறது?
பதில்: நான் வெளியூர்களுக்கு செல்லும்போது எனது வோடஃபோன் நம்பருக்கான சேவை அளிப்பாளர் கார் செல்லும் இடத்தில் செயல்புரியும் இடங்களின் டவர்களுக்கு ஏற்ப ஆட்டமேட்டிக்காக மாறுகிறார். செங்கல்பட்டைத் தாண்டியதுமே எனக்கு வரவேற்பு எஸ்.எம்.எஸ். வருகிறது. அடுத்த சேவை அளிப்பாரின் ஏரியா வரும்போது அம்மாதிரியே வேறு மெசேஜ் வருகிறது.
இதையெல்லாம் செய்ய முடியும்போது நம்பர் போர்ட்டபிலிடி செய்ய முடியாதா? அதற்கெனவே மென்பொருள் நிபுணர்கள் ரூம் போட்டு யோசித்து வைத்திருக்க மாட்டார்களா?

4. பில் குழப்பம் வராதா?
பதில்: சேஞ்ச் ஓவர் காலத்தில் ஒரு பில்லில் பிரச்சினை வர வாய்ப்புண்டு. ஆனால் அதையும் தவிர்ப்பார்களாக இருக்கும், தெரியவில்லை.

5. போட்டியில் பின்தங்கும் அரசுத்துறை என்னவாகும்?

பதில்: அம்போவாகும், அதுவும் ராசா மந்திரியாக தொடர்ந்தால் அதுதான் நிச்சயம் நடக்கும்.




மீண்டும் அடுத்த வாரம் கேள்விகள் ஏதேனும் இருந்தால் சந்திப்போமா?


அன்புடன்,
டோண்டு ராகவன்

55 comments:

பெசொவி said...

//இண்டியன் ஸ்டாண்டர்ட் டைம் என்பது 82.5° கிழக்கு தீர்க்கரேகையை வைத்து கணக்கிடப்படுகிறது. அலகாபாத் அருகே உள்ள மிர்ஜாப்பூரின் உடனடி மேற்கின் ஊடே கோடியில் இந்த தீர்க்க ரேகை செல்கிறது. எதற்கும் இங்கும் சென்று பார்க்கவும்.
காரணம் என்று கேட்டால் என்ன சொல்வது?
//

நான் கேள்விப்பட்டதை சொல்கிறேன். ஒவ்வொரு டிகிரி தீர்க்கரேகைக்கும் நான்கு நிமிடங்கள் என்று கணக்கிட்டு, அதே நேரத்தில் GMT என்று சொல்லப்படுகின்ற கிரீன்விச் பொது நேரத்தில் இருந்து கிழக்கு என்றால் அவ்வளவு நிமிட நேரத்தைக் கூட்டியும், மேற்கு என்றால் அவ்வளவு நிமிட நேரத்தை கழித்தும் அந்தந்த நாட்டு தேசிய நேரமாகக் கணக்கிடுகிரர்ர்கள். இது போக, ஒவ்வொரு நாட்டு நேரத்திற்கும் அதன் அடுத்த நாட்டு நேரத்திற்கும் அரை மணி நேரம் வித்தியாசம் இருக்குமாறு கணக்கிடுகிறார்கள். அப்படி பார்க்கும் பொழுது, இந்தியாவில் 5 1/2 மணி நேரம் கணக்கீடு செய்வது என்று முடிவு செய்து அதற்கு ஏற்ற அளவாக 82.5 டிகிரி உள்ள இடமான அலகாபாத் அருகே உள்ள மிர்ஜாப்பூரின் ஊடே செல்லும் தீர்க்க ரேகையை எடுத்துக் கொண்டுள்ளார்கள்.

அப்பாதுரை said...

'வாழ்க்கையில் வெற்றி' என்றால் என்ன?
ஆத்திரம், கோபம் புரிகிறது. இந்த வரிசையில் காமத்தை எப்படிச் சேர்க்க முடியும்? காமம் மோசமா? புரியவில்லையே? சூர்ப்பனகையின் காமத்தைப் பற்றிச் சொன்னீர்கள் சரி (முறையில்லாக் காமம் என்றே வைத்துக் கொள்வோம்), கண்ணனின் காமம் அவருக்கு இன்னும் உயர்வை அல்லவா அள்ளிக் கொடுத்ததாகச் சொல்கிறது புராணம்?

மங்களூர் சிவா said...

interesting!

nedun said...

//இண்டியன் ஸ்டாண்டர்ட் டைம் என்பது 82.5° கிழக்கு தீர்க்கரேகையை வைத்து கணக்கிடப்படுகிறது. அலகாபாத் அருகே உள்ள மிர்ஜாப்பூரின் உடனடி மேற்கின் ஊடே கோடியில் இந்த தீர்க்க ரேகை செல்கிறது. எதற்கும் இங்கும் சென்று பார்க்கவும்.
காரணம் என்று கேட்டால் என்ன சொல்வது?
//
இந்தியா 68.7 கிழக்கு தீர்க்க ரேகை முதல் 97.25 கிழக்கு தீர்க்க ரேகை வரை பரவியுள்ளது அதன் நடுப்பகுதி 82.5 கிழக்கு தீர்க்க ரேகை யில் வருகிறது எனவே அதனை இண்டியன் ஸ்டாண்டர்ட் டைம் ஆக எடுத்துக் கொண்டனர்.

வால்பையன் said...

//திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், ஆணின் வாழ்க்கை என்னவாகும்?//

அப்துல்கலாமை கேட்டால் தெரியலாம்!

வால்பையன் said...

//பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா என்னாச்சு?//

கூடி பேச ”இட”மில்லாம கிடப்பில் கிடக்கு!

வால்பையன் said...

//நிரந்தரமான கொள்கை உடைய அரசியல்வாதி யாரும் உளரோ?//

எல்லோருமே தான் தான் ஆ(அள்)ள வேண்டும் என்ற நிரந்தர கொள்கை உடயவர்கள் தான்!

வால்பையன் said...

//வாழ்வில் வெற்றி பெற படிப்பறிவு மட்டும் போதுமா?//

கார் ஓட்டுவது எப்படின்னு ஒரு புத்தகம் வாங்கி தர்றேன், யாரையாவது படிச்சு காரை ஓட்டச்சொல்லுங்க நம்புறேன் போதும்னு!

வால்பையன் said...

//காமம், ஆத்திரம், கோபம் - மூன்றில் எது மோசமான பலனைத்தரும்?//

ஆத்திரத்துக்கும், கோபத்திற்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை!

காமம் நிறைவேறவில்லையென்றால் கோபம் வரும், கோபத்தை அடக்க காமம் உதவும்!

எனக்கு எதுவும் மோசமான பலனை தந்ததில்லையே! மத்தவங்களுக்கு எப்படினு தெரியல!

வால்பையன் said...

//வாய்விட்டு சிரித்தால் மூளை வளரும்; ஆயுள் அதிகரிக்கும் என்பது உண்மையா?//

சிருக்கும் போது முகத்தில் பல தசைகள் அசைகின்றன, அவை சுருக்கத்தை போக்கி இளைமை தோற்றத்தை தரும்!, எப்போதுமே “சமீபத்தில்” வாழும் போது ஆயுள் பற்றி யாருக்கு என்ன கவலை!

வால்பையன் said...

//வழக்கத்தில் இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் எந்த ஊரை வைத்து சொல்லப்படுகிறது? காரணம்?//

டில்லியின் சூரிய உதயத்திற்கும், கன்னியாகுமரியின் சூரிய உதயத்திற்கும் அரை மணி நேர வித்தியாசம், ஆனால் ஒரே டைம் தான் இரண்டுக்கும்!

வால்பையன் said...

//எப்போதும் பதவி, பட்டம், புகழுக்காக அலைபவர்கள்?//

அரசியல்வாதிகள்!

வால்பையன் said...

//செல்வாக்கு, அந்தஸ்து, பணம் இருந்தும் அரசியலில் ஈடுபடாத மனிதர்கள்?//

போதும் என்ற மனம் உடையவர்கள்!

வால்பையன் said...

//எப்போதும் லொடலொடவென பேசும் ஒரு சிலரின் பழக்கம்?//


எப்போதும், யாராலும் அப்படியிருக்க முடியாது!

வால்பையன் said...

//உலகில் கெட்டவர் யார்?//

இன்னும் சாகாதவர்!

வால்பையன் said...

//உலகில் நல்லவர் யார்? //

இன்னும் பிறக்காதவர்!

வால்பையன் said...

//வாழும் மனிதர்களைச் சுற்றி எப்போதும், ஏதாவது பிரச்னை இருந்து கொண்டிருக்கிறதே?//

பிரச்சனை மனிதர்களுக்கு மட்டுமல்ல, மரங்களுக்கு கூட உண்டு!
ஆனால் எல்லா உயிரினங்களிலும் கவலைப்படுவது மனிதன் மட்டுமே!

வால்பையன் said...

//வாழும் மனிதனின் திகட்டாத விருந்தாவது யாது?//


அப்படி எதுவும் இல்லை!
வாழ்க்கையே திகட்டும் போது, அதிலுள்ளவை ஜுஜுபி!

வால்பையன் said...

//பம்பாய் வாழ் பார்சிகள் இனத்தின் பழக்கவழக்கங்கள் தொடர்கிறதா?//

மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது!

வால்பையன் said...

//பொதுவாய் தற்பெருமை ஒரு மனிதனிடம் எப்போது உண்டாகிறது?//

மற்றவர்கள் புகழும் போது!

வால்பையன் said...

//யாரை திருத்த(வே) முடியாது?//

தான் செய்தது தவறே இல்லை என்பவர்களை!

வால்பையன் said...

//உங்கள் ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள்?//

ஓய்வு எடுப்பார்!

வால்பையன் said...

//நம்பிக்கையானவர்கள் கூட சில நேரங்களில் காலை வாருகின்றனரே?//

நீங்க நம்புனதுக்கு அவர் எப்படி பொறுப்பாவார்!

வால்பையன் said...

//தாராளமாக செலவு செய்வதால் ஒருவனைச்சுற்றும் நண்பர்கள்?//

பணத்தின் அருமையை நண்பனுக்கு புரிய வைக்கிறார்கள்!

வால்பையன் said...

//பிற அயல்நாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு வந்து, வேலை செய்பவர்கள் மன நிலை?//

அனைவருக்கும் பொதுவானது தானே!

வால்பையன் said...

// தற்சமயம் நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறீர்கள், சமீபத்தில் டெல்லியில் இருக்கும்போது எப்படி?//

கற்பதை(தெரிந்து கொள்வதை) நிறுத்தும் மனிதன் நடமாடும் பிணம்!

வால்பையன் said...

//யோகாசனப் பயிற்சி செய்தால், தொப்பை குறையுமென்ற கருத்து?//

யோகாசனமும் ஒரு உடற்பயிற்சி தான்!

சித்த வைத்தியம் , யுனானி வைத்தியம் இருப்பது போல் இது உடற்பயிற்சி வைத்தியம், ஆனால் ஏன் அதை மதத்துடன் இணைக்கிறார்கள் என்று தெரியவில்லை!

வால்பையன் said...

//நிலவும் சமூக ஒழுக்கக் கேட்டுக்கு முக்கிய காரணம் ?//

நீங்களும் நானும் கூட காரணமாக இருக்கலாம்!

வால்பையன் said...

//தமிழ் தெரிந்தும், தமிழர்களிடையே ஆங்கிலம் பேசும் மேதாவிகள்?//

தாய் மொழி பற்று இருக்கலாம், வெறி இருக்கக்கூடாது!

தூய தமிழில் பேச ஒரு போட்டி வைத்து தமிழை அசிங்கபடுத்துவது இங்கே தான்!
வேறு எந்த மொழியிலிலும் நான் கேள்வி பட்டதில்லை! இதெல்லாம் தானா வரணும், திணிக்ககூடாது!

வால்பையன் said...

//அக்கு பஞ்சர் சிகிச்சை முறை பிரபலமாய் வருவது போலுள்ளதே? பயன் எப்படி?//

உலகம் எப்போதும் அப்படி தான், முதலில் பழயதை தூக்கிப்போடும், பிறகு அது தான் சிறந்த முறை என்கும், அப்போது நடைமுறையில் இருப்பது தூக்கி எரியப்படும், மீண்டும் அது நடைமுறைக்கு வரும்!

எல்லாம் ஒரு சுழற்சி தான்!

அங்குபஞ்சர் சீனவைத்திய முறை என்று நினைக்கிறேன்! பார்த்து சொல்லுங்களேன்!

வால்பையன் said...

/காதலே கதி என பார்க்கை சுற்றிக் கொண்டிருக்கும் வாலிபர்கள்?//

மறைப்பில் உள்ளது என்னவென்று தெரியும் வரை எல்லோருமே அப்படி தான் இருந்தோம்

பழசை மறக்க கூடாதுங்கோ!

வால்பையன் said...

//ஒழுங்காக வேலை செய்து மனைவியை காப்பாற்றத் துப்பில்லாத கபோதிகளும் காதல் செய்ய அலைவதால், காதலுக்கே கெட்டப் பெயர். //

காலையில் படிப்பு, மாலை வேலை என்று ஒரே நாளில் இரண்டு இடத்தில் கவனம் செலுத்துபவர்கள் இருக்கிறார்கள்!

உங்களால முடியலங்கிறதுக்காக மத்தவங்களை குறை சொல்லக்கூடாது!

வால்பையன் said...

//நம் நாட்டிலும் பெண்களும் பரவலாய் மது குடிக்கின்றனர் என வரும் செய்தி?//

ஆல்ஹகால் அனைத்திலும் உண்டு,
அளவுக்கு மீறி போவது தான் தவறு!

அது என்ன ஆண்களுக்கு மட்டுமே உரிய பழக்கம்னு எதாவது சட்டம் இருக்கா!?

வால்பையன் said...

//சேமிப்பே அர்த்தமற்றது என்று ஆகிவிடும் போல் தோன்றுகிறதே?//


பேருந்து விபத்துகுள்ளாகுதுன்னு நாம பயணமே பண்ணாம இருக்கிறோமா?!

எல்லா இடங்களிலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு!

வால்பையன் said...

//மது மயக்கம், மாது மயக்கம் - எது கொடியது?//

மயக்கம் தான் கொடியது,

மதுவும், மாதுவும் கொடியது அல்ல!

வால்பையன் said...

//தமிழ் எழுத்தாளர்களில் இலக்கியத் தரமாக எழுதுவதில் யார் பிரபலமாய் உள்ளார்?
பதில்: ஜெயமோகன். //


:)

சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!

வால்பையன் said...

//விலைவாசியை கட்டுப்படுத்த முடியுமா? செய்வார்களா?//

கைமீறி போய்விட்டது!

வால்பையன் said...

//போட்டியில் பின்தங்கும் அரசுத்துறை என்னவாகும்?//

தனியார் பேருந்துகள் ஓடுவதால் அரசு பேருந்துகள் முடங்கிருச்சா என்ன!?

அரசு தனியார் துறைக்கு போயிருச்சுன்னா டோண்டு திருப்பதிக்கு மொட்டை போடுவார்னு நினைக்கிறேன்!

Krishnan said...

Vadiveli, Karan comedy track is from Karuppusamy Kuthagaitharar I think.

Anonymous said...

4. பில் குழப்பம் வராதா?
பதில்: சேஞ்ச் ஓவர் காலத்தில் ஒரு பில்லில் பிரச்சினை வர வாய்ப்புண்டு. ஆனால் அதையும் தவிர்ப்பார்களாக இருக்கும், தெரியவில்லை.

No Issues... We are using it here. It operates like this
1. New Provider will give a SIM with a dummy number.
2. You have to sign a declaration form authorizing your new provider to process and retain the old number.
3. New provider will give you expected date of transfer
4. Till such transfer you have to pay telephone bill for both provider
5. Once the change over is done, you can retain the same number with the new provider
6. New porvider will give you discount. (sometimes)

If it happens, we can switch plans, switch providers... It will create a level playing field for all the providers.

Enjoy Guys.....

ராஜ சுப்ரமணியன் said...

செல்போன்களில் ”நம்பர் போர்ட்டபிலிடி” பண்ண இருப்பது போல, BSNL landline போன்களிலும் ஒரு மாநகரத்தினுள் நம்பர் போர்ட்டபிலிடி பண்ண முடியாதா?

Beski said...

நம்பர் போர்டபிலிட்டியில் இன்னொரு சந்தேகமும் இருக்கிறது.

ஏதோ ஒரிரு நிறுவனத்தின் சேவை நன்றாக இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அனைவரும் அந்த நிறுவனங்களுக்கு மாறினால், அந்த நிறுவனத்தின் நெட்வொர்க்கில் ஓவர்லோடு ஆகி, நெட்வொர்க் மோசமாகும் வாய்ப்பு இருக்கிறதல்லவா?

Beski said...

//வால்பையன் said...
//போட்டியில் பின்தங்கும் அரசுத்துறை என்னவாகும்?//
தனியார் பேருந்துகள் ஓடுவதால் அரசு பேருந்துகள் முடங்கிருச்சா என்ன!?
அரசு தனியார் துறைக்கு போயிருச்சுன்னா டோண்டு திருப்பதிக்கு மொட்டை போடுவார்னு நினைக்கிறேன்!//

வால்,
ஒப்பீடு சரியில்லை. அரசுப் பேருந்து இன்னும் இருக்கிறதென்றால் அந்த அளவுக்கு தேவை இருக்கிறது. விலையும் குறைவு. இன்னும் 1000 பேருந்துகள் விட்டாலும் டிக்கட் முன்பதிவில் கூட கிடைக்காத நிலைமைதான் இருக்கும்.

மேலும் தபால் துறையையும், தந்தித் துறையையும் எடுத்துப்பாருங்கள். எங்கள் ஊரில் தந்தி அலுவலகமே இல்லை. அங்கு வேலை பார்த்தவர்களெல்லாம் இப்போது பிஎஸெனெல் ஆபீசில். அதே போல போஸ்ட் இன்னும் இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. எனது வீட்டிற்கு வரும் அனைத்தும் கொரியரில்தான் வருகிறது.

அதே நிலைமை பிஎஸெனெல்க்கும் வரலாமல்லவா?

Anonymous said...

1.தாய் தமிழகத்தில் கோஷ்டி சண்டைகளற்ற கட்சியாக காங்கிரஸ் மாறும் காலம் வருமா?எப்போது?
2.கிருபானந்தவாரியார் அவர்களின் மறைவுக்கு பிறகு அவரைப் போன்ற( வாரீசாக) சமய சொற்பொழிவாளர்களில் இன்று பிரபலம் யார்?
3.ஐந்து வயது சிறுமியை கற்பழிக்கும் செய்திகளில் வரும் காமக் கொடுரங்களுக்கான தண்டனை குறைவாய் உள்ளது போல் இருக்கிறதே?
4.சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்து உழைத்து, பெரிய இடங்களைப் பிடித்தவர்களில் அதிகம் பேர் நெல்லையை சேர்ந்தவர்கள் .இது எப்படி சாத்யமாகிறது?(சரவணா ஸ்டோர்ஸ்,சரவண பவன்,விஜிபி,ஈசுன் குருப்ஸ்( ராயல் என்பீல்டு),சிம்ஸன் குருப்ஸ்,வசந்த் குருப்ஸ்,புகாரி குருப்ஸ்,டிவிஎஸ்,பெரிய மளிகை கடைகள்,...இன்னும் பிற)
5. தமிழக குடுப்பங்களில் கூட்டுக் குடும்பம் முறை சிதைவுக்கு காரணம் வேலைக்குப் போகும் மனைவிமார்கள் என்ற கருத்து பற்றி?
6. இன்னும் பார்ப்பனர் குடுபங்களில் இந்த பாதிப்பு கம்மி போலிருக்கிறதே எப்படி?
7.பெண்களின் நடை, உடை, பாவனை ரொம்ப மாறியதற்கு சினிமா மட்டும் காரணமா?
8.கோவில் சொத்துக்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசின் அதிரடி நடவடிக்கை எந்த விதத்தில் பலன் கொடுத்துள்ளது?
9.சென்னையில் கையேந்தி பவன் உணவு... உண்ட அனுபவம் உண்டா? எப்படி?
10.இந்தியப் பெண்களின் முன்னேற்றம் பற்றி?
11. ஜொள் விடும் பேரன், பேத்தி எடுத்த பெரிசுகள் பற்றி?
12.வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் யார் கில்லாடி?
13.பொதுவாய் ஹோட்டல் சர்வர் வேலைகளில் மட்டும் பெண்கள் ஈடுபடுவதில்லை ஏன்?
14.தினம் மலை போல் குவியும் புத்தகங்கள் (வெளியீடுகள்-பப்ளிகிகேஷன்ஸ்) எதை உணர்த்துகின்றன?
15.வேலை வாய்ப்பு அலுவலகத்தை ( மட்டும்) நம்பும் நம் இளைஞர்களின் நம்பிக்கை?எதிர்காலம்?
16.உலக அரங்கில் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் இன்றைய நிலைக்கு காரணம்?

ரமணா said...

//அதி பிரதாபன் said...

//வால்பையன் said...
//போட்டியில் பின்தங்கும் அரசுத்துறை என்னவாகும்?//
தனியார் பேருந்துகள் ஓடுவதால் அரசு பேருந்துகள் முடங்கிருச்சா என்ன!?
அரசு தனியார் துறைக்கு போயிருச்சுன்னா டோண்டு திருப்பதிக்கு மொட்டை போடுவார்னு நினைக்கிறேன்!//

வால்,
ஒப்பீடு சரியில்லை. அரசுப் பேருந்து இன்னும் இருக்கிறதென்றால் அந்த அளவுக்கு தேவை இருக்கிறது. விலையும் குறைவு. இன்னும் 1000 பேருந்துகள் விட்டாலும் டிக்கட் முன்பதிவில் கூட கிடைக்காத நிலைமைதான் இருக்கும்.

மேலும் தபால் துறையையும், தந்தித் துறையையும் எடுத்துப்பாருங்கள். எங்கள் ஊரில் தந்தி அலுவலகமே இல்லை. அங்கு வேலை பார்த்தவர்களெல்லாம் இப்போது பிஎஸெனெல் ஆபீசில். அதே போல போஸ்ட் இன்னும் இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. எனது வீட்டிற்கு வரும் அனைத்தும் கொரியரில்தான் வருகிறது.

அதே நிலைமை பிஎஸெனெல்க்கும் வரலாமல்லவா?//


2002 ல் அரசுத்துறை நிறுவனமாம் பி.எஸ்.என்.எல் செல்பேசிச் சேவையில் நுழைந்த பிறகுதான் ,கட்டணங்கள் மள மள வென குறைந்து இன்று ஒரு பைசா ஒரு வினாடிக்கு ஆகியுள்ளதை நண்பர் மறந்து விட வேண்டாம்(16 ரூபாய் , 8 ரூபாய் அவுட்கோயிங், இன் கம்மிங் கால்களுக்கு).

அரசுத்துறை நிறுவனம் இல்லை என்றால் , செல்பேசிக் கட்டணமும் (இதுவும் ஆன்லையின் ட்ரேடிங்ஙில்
நுழைக்கப்பட்டு-ஒரு கற்பனைதான் மிஸ்டர் வால்பையன் சண்டைக்கு வரவேண்டாம்)

தனியார் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கு உட்படுத்தப்படும் பேராபத்து வரும்..

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்பையன் said...

//தமிழ் எழுத்தாளர்களில் இலக்கியத் தரமாக எழுதுவதில் யார் பிரபலமாய் உள்ளார்?
பதில்: ஜெயமோகன். //


:)

சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
வால்ஸ்!சிரிக்கத் தெரிந்தால் சிரித்துவிடுங்களேன்! ஜெயமோகன் மாதிரி ஒரு பக்கமாவது உருப்படியாக, குழப்பமில்லாமல், எழுதத் தான் முடியாது! சிரிக்கவாவது செய்யலாமே!

Unknown said...

sir tamila type pana mutiyadha

வஜ்ரா said...

//
ஏதோ ஒரிரு நிறுவனத்தின் சேவை நன்றாக இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அனைவரும் அந்த நிறுவனங்களுக்கு மாறினால், அந்த நிறுவனத்தின் நெட்வொர்க்கில் ஓவர்லோடு ஆகி, நெட்வொர்க் மோசமாகும் வாய்ப்பு இருக்கிறதல்லவா?
//

AP,
ஆகும். அப்பொழுது நிறுவன சேவை மொசம் என்று எண்ணி பலர் மாறாமல் இருப்பார்கள். இதெல்லாம் தான் ஓபன் மார்க்கெட் என்பது. ஏர்செல்க்கு ஆச்சு இல்லியா!

வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று நிறுவனங்கள் யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பர்.

Suresh Ram said...

திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், ஆணின் வாழ்க்கை என்னவாகும்?

498a , DV ACT போன்ற ஆண் விரோத சட்டங்கள் உங்களை சிறையில் தள்ளாது

Visit
www.tamil498a.blogspot.com
www.498a.com

வால்பையன் said...

//போஸ்ட் இன்னும் இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. எனது வீட்டிற்கு வரும் அனைத்தும் கொரியரில்தான் வருகிறது. //

ஒரு சில துறைகளின் மெத்தனத்தால் வரும் பிழை அது!

பின்னாளில் அரசே ஸ்பீடு போஸ்ட் என்று ஒன்றை கொண்டு வந்தது, காலம் கடந்ததால் மீள முடியவில்லை!

வால்பையன் said...

//வால்ஸ்!சிரிக்கத் தெரிந்தால் சிரித்துவிடுங்களேன்! ஜெயமோகன் மாதிரி ஒரு பக்கமாவது உருப்படியாக, குழப்பமில்லாமல், எழுதத் தான் முடியாது! சிரிக்கவாவது செய்யலாமே! //

ஜெயமோகனின் இந்த்துவா ஆதரவிற்கும், இலக்கியத்திற்கும் முடிச்சு போட்டு அவர் பதில் சொல்றார், நீங்களுமா!?

கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவர் சங்கம் said...

//
ஜெயமோகனின் இந்த்துவா ஆதரவிற்கும், இலக்கியத்திற்கும் முடிச்சு போட்டு அவர் பதில் சொல்றார், நீங்களுமா!?
//

ஜெயமோகனை இந்துத்வா ஆதரவாளர் என்று கடைந்தெடுத்த முட்டாள் தான் சொல்ல முடியும்.

வால்பையன் அப்படிப்பட்ட முட்டாள் இல்லை என்றே நான் இன்னும் நம்புகிறேன்.

வால்பையன் said...

//ஜெயமோகனை இந்துத்வா ஆதரவாளர் என்று கடைந்தெடுத்த முட்டாள் தான் சொல்ல முடியும்.

வால்பையன் அப்படிப்பட்ட முட்டாள் இல்லை என்றே நான் இன்னும் நம்புகிறேன். //

என்னையவே இந்த்துவா ஆதரவாளர்ன்னு சொல்றாங்க! அவனுங்களை விட நான் இன்னும் வடிகட்டுதலில் சிக்கவில்லைன்னு நினைக்கிறேன்!

ஜெயமோகன் இந்துத்துவா ஆதரவாளராக இல்லையென்றால் நீங்கள் இப்படி வரிஞ்சி கட்டிகிட்டு வரமாட்டிங்க!

¸ñ½ý ÌõÀ§¸¡½õ said...

"சித்த வைத்தியம் , யுனானி வைத்தியம் இருப்பது போல் இது உடற்பயிற்சி வைத்தியம், ஆனால் ஏன் அதை மதத்துடன் இணைக்கிறார்கள் என்று தெரியவில்லை!" - வால்பையன்.

சைவம், வைணவம் முதலாய ஆறு மதங்களோ இவற்றுக்கெல்லாம் மூலமான நான்கு வேதங்களோ ஜாதி வித்யாசங்களையோ தீண்டாமையையோ சொல்லவில்லை; ஆனால் இதற்கெல்லாம் பழியை சிலர் கூசாமல் இந்துக்களது மதங்களின் மீது வீசுகிறார்களே! அதைமட்டும் ஏற்றுக்கொள்ளவேண்டுமெங்க்றீர்கள்; இதற்கான பெருமைகள் மட்டும் வேறு யரைச் சேர வேண்டுமெங்கிறீர்கள். பழிகளுக்கெல்லாம் ஓரிடம்; பெருமைகளுக்கெல்லாம் வேறிடமா!

நல்ல ஞாயம் அய்யா!

கண்ணன், கும்பகோணம்.

வால்பையன் said...

//சைவம், வைணவம் முதலாய ஆறு மதங்களோ இவற்றுக்கெல்லாம் மூலமான நான்கு வேதங்களோ ஜாதி வித்யாசங்களையோ தீண்டாமையையோ சொல்லவில்லை; ஆனால் இதற்கெல்லாம் பழியை சிலர் கூசாமல் இந்துக்களது மதங்களின் மீது வீசுகிறார்களே! அதைமட்டும் ஏற்றுக்கொள்ளவேண்டுமெங்க்றீர்கள்; இதற்கான பெருமைகள் மட்டும் வேறு யரைச் சேர வேண்டுமெங்கிறீர்கள். பழிகளுக்கெல்லாம் ஓரிடம்; பெருமைகளுக்கெல்லாம் வேறிடமா!//


எல்லா மதங்களுமே குப்பை தான், இந்து என்ன முஸ்லீம் என்ன,

சைவம், வைணவம் எவற்றின் கிளை என்று யாராவது விளக்க முடியுமா?!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது