தலித்துகள் முன்னேற்றம் என்னும் பெரிய கடமை முன்னால் நிற்க கிடக்கிறபடி கிடக்கட்டும், கிழவியை தூக்கி மணையில் வை என்னும் கணக்காக குஷ்பு இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியை வைத்து கொண்டு விசியினர் இத்தனை ஆண்டுகள் குதித்தாயிற்று. அவர்களுக்கு செவுளில் அடிப்பது போல நீதிபதியின் கேள்விகள் வைக்கப்பட்டன.
அதுவும் குஷ்புவை harass செய்ய வேண்டும் என்பதற்காகவே பல நீதிமன்றங்களில் பல பினாமிகளை விட்டு வழக்கு போட வைத்தனர். அவர் தலைமை நீதிமன்றத்தை அணுகிய நிலையில் நீதிபதிக்ள் வழக்கு போட்டவர்களை பார்த்து கேள்விகள் கேட்டு மானத்தை வாங்கியுள்ளனர்.
தங்கர்பச்சானை குஷ்பு விமர்சித்தபோதே அவருக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்தவர் திருமாவளவன் என்பதையும் நாம் மறக்கலாகாது. ஆகவே இந்த வழக்கு விவகாரத்தில் திருமாவளவனுக்கு உள்நோக்க இருக்கிறது என்பது வெள்ளீடைமலை.
இந்த அழகுக்கு தான் அட்டெண்ட் செய்த நிகழ்ச்சியில் குஷ்புவும் இருக்க, அவர் இவருக்கு வணக்கம் தெரிவிக்கவில்லை என்ற பொருமல் வேறு. அவ்வாறு வணக்கத்துக்கு நிஜமாகவே அவர் உரியவரா என்பதை பார்த்துத்தான் குஷ்பு வணக்கம் தெரிவிக்காது இருந்திருக்க வேண்டும். குஷ்பு பிறகு பேச ஆரம்பிக்கும்போது ஒரு வணக்கம் போட்டார். அவர் இடத்தில் நான் இருந்திருந்தால் அதைக் கூட செய்திருந்திருக்க மாட்டேன்.
நான் எனது ஆண்பெண் கற்பு நிலை சம்பந்தமாக இட்ட இப்பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்,
“உடல் இச்சை இருபாலருக்கும் பொதுவானது என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதை பற்றி இங்கு விவரமாக எழுதுவேன்.உடல் இச்சையே எந்த ஒரு இனமும் தன்னை பெருக்கிக் கொள்வதற்கான உந்துதல். ஆகவே அது தவறு என்று கூறுபவர்கள் முட்டாள்கள். திருமணத்தை துறந்து சன்னியாசிகளாக போகிறவர்களில் பலர் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபடுவது இதனால்தான். இது எல்லா மதத்தினாருக்கும் பொருந்தும்.
இதிலும் ஆண்களுக்கு அவ்வளவு பாதிப்பில்லை. இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நட்ந்து கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் பெண்கள் பாடுதான் திண்டாட்டம். கருவுறுவது அவர்களே. ஆண் ஓடிவிடுவான். மாட்டிக் கொண்டு அவமானப்படுவது இவர்களே. சில சமயம் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வரை அவர்களுக்கு கிடைத்து விடுகிறது.
இந்த அழகில் ஊடகங்கள் வேறு பாடாய் படுத்துகின்றன. சில உதாரணங்கள் இங்கு கூறலாம். எழுபதுகளில் "இளமை ஊஞ்சலாடுகிறது" என்ற தலைப்பில் ஸ்ரீதர் இயக்கிய படம் திரையிடப்பட்டது. அதில் ஜயசித்திரா ஒரு விதவையாக வருவார். அவர் கூறிய வசனம் ஒன்றில் இவ்வாறு வரும். "பலர் என்னை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார்கள். ஆனால் எல்லோரும் என் உடலையே விரும்பினார்கள். ஆகவே நான் மறுத்து விட்டேன்." என்ன அபத்தமான கற்பனை இந்த வசனத்தை எழுதியவருக்கு. விதவை திருமணம் செய்து கொள்ள வேண்டும், ஆனால் உடல் உறவுக்காக அல்ல என்று கூற ஆசைப்படுகிறாரா? அதே போல "மன்மத லீலை" என்னும் படத்தில் ஜயப்பிரதா கமலிடம் கூறுகிறார்: "நான் உடல் ஊனமுற்ற போர்வீரனை கல்யாணம் செய்து கொண்டேன். அவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது. ஆக, நான் செக்ஸுக்காக கல்யாணம் செய்து கொள்ளவில்லை." இதில் என்ன பெருமையோ. செக்ஸையே தப்பு என்றெல்லாம் எழுதுவார்கள். அதெல்லாம் பெண்களுக்குத்தான் ஆண் கதாபாத்திரங்களுக்கு ஒன்றுக்கு மேல் துணை வைப்பார்கள்.
சரி நம் விஷயத்துக்கு வருவோம். ஒரு ஆண் ஏன் உடலுறவின் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கிறான்? அவன் கருவுருவதில்லை அதனால்தானே? பெண் என்ன செய்வாள்? அறுபதுகளில் கருத்தடை மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கருவுராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை வந்ததும் பெண்கள் பொங்கி எழுந்தனர். அமெரிக்க ஆண்களே அஞ்சும் அளவில் உடல் உறவில் ஈடுபட்டனர். செயல்பட இயலாத ஆண்துணையை விடுத்து வேறு துணை தேடினர். இது நல்லதுக்கா கெட்டதுக்கா என்று இன்றும் விவாதங்கள் தொடர்கின்றன. அதில் நான் போக விரும்பவில்லை. கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்று மட்டும் கூறுவேன்.
குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.
ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும். அதெல்லாம் சினிமாவுக்குத்தான் ஒத்து வரும். ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்”.
சும்மா வறட்டுத்தனமாக கற்பை பெண்களுக்கு மட்டும் கட்டாயமாக்குவது பற்றி பெரியார் அவர்கள் பல இடத்தில் சாடியுள்ளார். அவருடைய பல கருத்துக்களில் எனக்கு ஒப்புதல் இல்லாவிடினும் இந்த விஷயத்தில் அவரை முற்றும் ஆதரிக்கிறேன். இப்படி சொன்னவுடனேயே பெரியார் இவ்வாறு நினைத்து சொல்லவில்லை அவ்வாறு நினைத்து சொல்லவில்லை என்றெல்லாம் நீட்டி முழக்கிக் கொண்டு வருவார்கள். வரட்டும், தமாஷாக இருக்கும். முதற்கண் அவர் சொன்னதில் சிலவற்றை பார்ப்போம்:
பெண்களுக்குப் பகுத்தறிவுக் கல்வியும், உலக நடப்புக் கல்வியும், தாராளமாகக் கொடுத்து, மூட நம்பிக்கை, பயம் ஆகியவற்றை ஊட்டக்கூடிய கதைகளையோ, சாத்திரங்களையோ, இலக்கியங்களையோ காணவும் கேட்கவும் சிறிதும் இடமில்லாமல் செய்ய வேண்டும். (வி.22.3.43;4:2)
பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள்ளும் சொத்துரிமை இல்லாதது ஒன்றே மிகவும் முக்கியமானதாகும். (பெ.சி.மி:170)
ஆண்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது மொழிகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம், ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை. (கு.8.1.28;6:3)
கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலையும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொடுமை ஒழிய வேண்டும். (கு.8.1.28;15:1)
பெண்ணுக்குச் சொத்து கூடாதாம், காதல் சுதந்திரம் கூடாதாம். அப்படியானால் மனிதன் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ரப்பர் பொம்மையா அது? (பெ.க.மு.தொ;134)
பெண்களுக்குத்தான் கற்பு: ஆண்களுக்கு வலியுறுத்தக் கூடாது என்கின்ற தத்துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது. ஏன் என்றால்,பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவளின் நிலைமை. (கு.1.3.36;11:3)
நமது இலக்கியங்கள் யாவும் நியாயத்திற்காக ஒழுக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ அவ்வளவு நிபந்தனைகளை ஆண்களுக்கும் வைத்திருக்க வேண்டுமல்லவா? (வி.1.6.68;3:5)
சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ''ஆண்மை''க்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டன. ''ஆண்மை''க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண் மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.உலகத்தில் இந்த “ஆண்மை” மேலோங்கி நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலன்றி பெண்களுக்கு விடுதலையில்லை என்பது உறுதி. (கு.12.8.28;10:2)
குஷ்புவைத் தாக்கியவர்கள் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் பெண்கள் சித்திரிக்கப்படும் முறையை எதிர்த்து தொடர் போராட்டங்களை பல முனைகளில் இருந்து முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், கடந்த காலங்களில் இதற்கான அடையாளங்களே இல்லை. பெண்களின் தனித்துவங்கள் அங்கீகரிக்கப்படாமல் சுயமரியாதை நிறுவப்படும் பாத்திரங்களாக அல்லாமல் பாலியல் பண்டமாகவே சித்திரிக்கப்படுகின்றனர். தமிழ் உணர்வாளர்கள் இதற்கெதிராக பெருமளவில் போராடவில்லை.
ஆக, வெறுமனே தங்கர் பச்சானுக்கு எதிராக போராட்டம் நடத்திய குற்றத்துக்காக குஷ்புவை பழிவாங்கத் துணிந்ததே இந்த தமாஷா காட்சிகளின் அரங்கேற்றத்துக்கு காரணம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
14 hours ago
18 comments:
எந்த ஒரு கருத்தும் சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல் ஆராய்ந்தால் தவறான முடிவுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம்.
விடுதலைச்சிறுத்தைகள் தங்கள் சமூகத்தை மேம்படுத்தட்டும். அதைச்செய்வதாக காணோம்?
நன்றி முருகேசன். எனது வலைப்பூவில் ஆண்பெண் கற்பு நிலை லேபலின் கீழ் போடப்பட்டுள்ள பதிவுகளை பாருங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பாமக கூட இதில் செயல்பட்டது உண்மைதான் என்றாலும் மருத்துவர் கூடவே வன்னியர்களின் முன்னேற்றத்தையும் கவனித்து கொண்டார். ஆனால் திருமா பற்றி அவ்வாறு கூற இயலவில்லையே. அதுவும் அவர்களுக்கு இருக்கும் பல பிரச்சினைகள் இந்த செயல்பாடு அவர்களுக்கு கட்டிவராதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
குஷ்பூ விவகாரத்தில் ஒரு நீதிபதி கேணைத்தனமாக தீர்ப்பில் கிருஷ்ணா-ராதா பற்றியெல்லாம் சொல்லியிருக்காரு.
கிருஷ்ணனும் ராதையும் லிவிங் டுகெதெர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்களாம். ஆகவே லிவிங் டுகெதர் தப்பில்லை என்றெல்லாம் சொல்லித்தொலைத்திருக்கிறார்.
லிவிங் டுகெதர் தப்பில்லை அது தனிமனித சுதந்திரம் என்று சொல்வதைவிடுத்து இப்படி நீதிபதியே கே.கூ த்தனமாக நீதி வழங்குவது பற்றி கேள்விப்பட்டீர்களா ?
இங்கே நடக்கும் ஒவ்வொரு கூத்தும், போராட்டமும், சிலருடைய தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தி மட்டுமே நடப்பவை என்றாகிப் போன பிறகு,
வி சி மட்டுமல்ல, எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்!
பெண்கள் விடுதலை, பெண்ணீயம் என்று முழக்கமிடுகிறவர்களைக் கவனித்துப் பார்த்தால் கூட, இதே மாதிரிக் கோளாறு தென்படுவதைப் பார்க்கலாம்.
அன்புள்ள ராகவன் சார் அவர்களுக்கு,
""குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்"""
நீங்கள் இதற்கு முழுமனதுடன்தான் ஒத்து போகிறீர்களா என்று புரியவில்லை.சினிமா என்றாலே கவர்ச்சியும்,விபச்சாரம் என்றாகி விட்டது.கவர்ச்சியும் விபச்சாரமும் இல்லையென்றால் சினிமா என்ற உலகமே நகராது.அந்த உலகத்தில் இருக்கும் கலுசடைகள் என்ன வேத வாக்கியங்களையா உமிழப்போகிறது.(இந்த கழுசடைக்குத்தான் நம் நாட்டு சோம்பேரிகள் கோயிலை கட்டினார்கள் என்று நினைக்கும்போது சிரிப்புதான் வருகிறது).
நான் சொல்வதை தயவு செய்து தப்பாய் நினைக்கவேண்டாம்.உங்களுடைய வீட்டிலிருக்கும் பெண்களையும் கருத்தில் வைத்துகொண்டுதான் இந்த கழுசடையின் கருத்துக்கு ஒத்துபோகின்றீர்களா என்பது புரியவில்லை. நான் சொன்னதில் ஏதாவது தவறிருந்தால் என்னை தயவு செய்து மன்னிக்கவும்.
திரு டோண்டு சார்,
உங்களுடைய அனைத்து பதிவுகளையும் விடாமல் படிக்கும் உங்கள் ரசிகன்.. ஆனால், இந்த கருத்து என்னுடைய மனம் ஏற்க மறுக்கிறது.. கற்பு என்பது ஆண் பெண் இருவருக்கும் பொது.. இருவருமே அதில் மான பிரச்சினையாக நினைக்க வேண்டும்.. பெண்ணிற்கு மட்டும் கற்பு ஆணிற்கு கற்பு தேவை இல்லை என்பது போல் உள்ளது உங்கள் பதிவு.. இதனை நான் கடுமையாக எதிர்கிறேன்.. தாங்கள் திரு பாலச்சந்தரின் ஒரு சில படங்களை மட்டும் எடுத்து கருத்து கூறி உள்ளீர்கள்.. அதே பாலசந்தர் ஒரு படத்தில் (கமல் நடித்தது) - நீ விபச்சாரியிடம் பொய் வந்தால் தப்பு இல்லை. ஆனால் ஒரு பெண் விபச்சாரியாக இருப்பது தவறா? முதலில் உன் அம்மா உன்னை செருப்பால் அடித்து விட்டு பிறகு என்னிடம் வந்து நான் ஏன் விபச்சாரியாக மாறினேன் என்று கேட்கட்டும்.. நான் பதில் சொல்கிறேன் என்று சொல்லுவாள்.. அது தான் பாலசந்தர்..
நம்முடைய தலை எழுத்து நமக்கு நல்ல அரசாங்கம் (மாநிலத்திலும், மத்தியிலும் சரி ) கிடையாது.. ஆனால் உச்ச நீதி மன்ற நீதிபதிகளும், தலைமை தேர்தல் அலுவலரும் வைத்தது நாம் செய்த பாவம்.. தயவு செய்து அவர்கள் செய்தது சரி என்று வாதிடாதீர்கள்.. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு.. ஆனால் அவற்றை பொதுவில் வைக்கும் போது அவற்றின் பிரச்சினைகளை பார்த்து விப்பது அனைவருக்கும் நல்லது.. சினிமாகாரர்களிடம் கேட்டல் நாங்க நடப்பதை தான் எடுக்கிறோம் என்று கூறுவார்கள்.. ஒரே ஒரு இடத்தில் நடந்ததை ஊருக்கே சொல்லி இன்னும் 100 இடங்களில் நடப்பதற்கு வழி செய்வார்கள்.. நமது கலாச்சாரம் என்பதை பற்றி பேச இங்கு யாருக்கும் அருகதை கிடையாது.. அந்த அளவில் தான் நாம் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கிறோம்..
இந்த பின்னோட்டம் தங்களை புண்படுத்த அல்ல.. ஆனால் தங்களிடம் இருந்து இது போன்ற பதிவினை எதிபார்க்கவில்லை..
//பெண்ணிற்கு மட்டும் கற்பு ஆணிற்கு கற்பு தேவை இல்லை என்பது போல் உள்ளது உங்கள் பதிவு.. //
ஒரு ஆண் இப்படி அப்படித்தான் இருப்பான், அவனுக்கு மச்சம்டா இவ்ளோ பெண்களை கவர் பண்ணான் என்றெல்லாம் ஆணுக்காக பேச்சு வரும். ஆனால் சம்பந்தப்பட்ட பெண்கள் அவிசாரி, தேவிடியா என்றெல்லாம் அழைக்கப்படுவார்கள். இந்த இரட்டை நிலையைத்தான் நான் சாடியுள்ளேன்.
நீங்கள் சொல்லும் படம் பால சந்தரின் அரங்கேற்றம். அதுவும் நான் சொல்வதைத்தான் இன்னும் உறுதி செய்கிறது. மூத்த பெண்ணுக்கு கல்யாணம் செய்யும் பொறுப்பின்றி அப்பெண்ணின் தந்தை தாய் தங்களுக்கு அடுத்த குழந்தையை உருவாக்கி கொள்ளும் விஷயம் அப்படத்தில் சாடப்படவில்லை. வழக்கம்போல பாலசந்தர் இப்படத்தில் கதாநாயகிகு சரியான திருமண வாழ்க்கை அமையாது அவள் பைத்தியமாவது போல காட்டியிருப்பது இன்னொரு சேடிசம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@மிரட்டல்
இக்கேள்வி என்னை மட்டும்தான் கேட்பீர்களா அல்லது பெரியாருக்கும் சேர்த்துத்தானா? அதை விடுங்கள்.
எய்ட்ஸ் வராமல் தடுக்க ஆணுறை போட்டுக் கொள்ள அட்வைஸ் செய்தால், சொன்னவனுக்கு எய்ட்ஸ் என சொல்லுவீர்கள் போலிருக்கிறதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
2010/3/29 Tamilish Support
Hi Dondu,
Congrats!
Your story titled 'குஷ்பு விவகாரம் - விடுதலை சிறுத்தைகளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 29th March 2010 01:50:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/212975
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழ் ஓவியா விவேகானந்தரை பாராட்டி பதிவிடுகிறார் நீங்கள் பெரியாரை பாராட்டி... என்ன சார் நடக்குது?
Your blogpost is not against VC. It is cover to express your own libertarian views.
You differ from majority opinion - all India basis.
Oraganisations - both hindutva and non-hindutva - some women groups, have condemned SC observations in Kushboo case.
They say SC has no right to prescribe what Indian culture is. According to them, your libertarian views - in other words, the observations of SC - will endanger the Indian culture.
Pl read today's Letters to the Editor in the Hindu.
Your blogspot is also a sort of anti-brahminism. Not because you endorse certain views of Periyar about women; but because you advocate free sex for women. Hindu as well the brahmin culture based on the religion, do not accept it. As a correspondent wrote in today Hindu paper, you cant cite examaples from epics to justify free sex.
If your or SC's or Kusbhoo's views are given carte blanche (spelling correct?), it will dig the grave of Indian culture, according to the culture aficionados (spelling correct?)
Not my views though.
நியாயம் அநியாயம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தியாவில் ஒரு தனி மனிதனுக்கு(மனுஷிக்கு) தன் கருத்துக்களைச்சொல்ல உரிமை உண்டா இல்லையா?
ஒருவரின் கருத்துக்களால் ஒரு கலாச்சாரம் அழிந்து போகும் என்றால் அந்தக் கலாச்சாரத்தின் வலு அவ்வளவுதானா?
திரு கந்தசாமி சார்,
யாராலும் ஹிந்து மதத்தை அழிக்க முடியாது.. அதன் கலாச்சாரத்தையும் அழிக்க முடியாது.. ஏனெனில் அதனுட சாராம்சம் அவ்வளவு ஆழமானது.. இதனை ஒரு மதம் என்கிற அடிபடையில் நான் கூறவில்லை.. அதன் கருத்துக்கள் எந்த அளவிற்கு அலசி ஆராயப்பட்டு உள்ளது என்கிற அர்த்தத்தில் கூறுகிறேன். ஆனால் நம் நாட்டில் எத்தனை பேர் ஒரு கருத்தை சீர் தூக்கி பார்க்கும் ஆற்றல் பெற்று உள்ளனர்? அவர்களை பொறுத்த வரை அதற்கு எல்லாம் நேரம் கிடையாது.. அதற்கு மேல் அறிவும் கிடையாது.. உச்ச நீதி மன்றமே கூறி விட்டது.. குஷ்பூவே கூறி விட்டார்.. எங்கள் தலைவர் கூறி விட்டார்.. இது தான் அவர்களின் மேம்பட்ட அறிவு..
இந்த மாதிரியான கூட்டத்தில் பொதுவில் ஒரு கருத்தை வைக்கும் போது அது சமூகத்தை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை அறிந்து கருத்து சொன்னால் பரவாயில்லை..
" Govinda and me are bum-chums"...
""I say to his wife Sunita, `I've let you have him for 26 years. I can still run away with him."
=========================
There's more a sense of relief than triumph at Bollywoood child-star turned Tamil superstar Khushboo's residence in Chennai. Her much misconstrued comments on pre-marital sex in 2005 provoked 22 criminal cases against her, but were finally defended by a special bench of the Supreme Court last week, which ruled that there was nothing illegal about live-in relationships and premarital sex
"I now know I can speak my mind freely, that freedom of speech does exist in our country and we've a completely dependable judiciary. The reason why I fought against all odds were my daughters. I had to tell them that their mother is
strong and they should be proud of her," she said from Chennai on Sunday.
And now Khushboo is all set to return to Hindi films. Says Khushboo, "I can't remember the last Hindi film I did ... Oh yes, it was Deeewana Mujhsa Nahin with
Aamir Khan and Madhuri Dixit."
Khushboo says very few of her colleagues from Mumbai have kept in touch with her. "Except Govinda, Madhoo and Rajeev Kapoor. Govinda and me are bum-chums. I
say to his wife Sunita, `I've let you have him for 26 years. I can still run
away with him.' We're just a phone call away from each other."
http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Finall\
y-premarital-sex-is-fine-Khushboo/articleshow/5737607.cms
உங்க blog-ஐ சில வருடங்களாக படித்து வருகிறேன்.
"பாப்பாத்தியை தேசீய உடமையாக்கு" அப்படின்னு சொன்னவன எந்தளவுக்கு கேவலமானவன், கீழ்தரமானவன்னு நினைக்கிறேனோ (infact, women of any caste or generally women are not a commodity) அதே அளவுக்கு உங்களோட "குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன்" வாக்கியத்தை படித்ததில் இருந்து உங்களையும் நினைக்கும்படி வைத்துவிட்டீர்கள்.
N.B: விடுதலை சிறுத்தைகள் செய்தது தவறு.
I am not against Kushboo's context based statement.
Court'a approach is immatured, i beleive.
கரு உருவாகாத வரை இது சரி என்கிற ஒரு கருத்தாக கொண்டு செல்வதில் சிக்கல் இருக்கிறது. காரணம் பல சமயங்களில் கரு அழித்தல் என்று சென்று கொண்டிருக்கிறது. மருத்துவம் இன்னும் கரு உருவாகாமை சாதனங்களை உற்பத்தி செய்து விடவில்லை. அறியாமை மற்றும் கவன குறைவு என்று பல காரணங்கள் இருக்கிறது. இது பல குறைபாடுள்ள குழந்தைகளையோ, சில சுகாதாரமற்ற கருச் சிதைவு மரணங்களையோ அதிகப் படுத்த உதவக் கூடும் ஏனென்றால் சட்டம் தெளிவாகஇல்லை. Even though this applies for married couples here for living together there is no proper law.
இந்தியா இன்னும் பிற நாடுகளில் இருந்து வேறுபடுவதற்கு முக்கிய காரணம் ஆண், பெண் என்றே நிலை தாண்டி குடும்பம் என்றே நிலைபாடு கொண்டிருப்பது தான்.
I am writing on this topic kalaviyal as a thodar pathivu.
http://www.virutcham.com
கற்பு என்பது ஒரு சமூக கட்டுப்பாடு .
அது ஒரு உயர்ந்த கொள்கையாகவே திருக்குறள் என்ன... சிலம்பு என்ன எல்லா காவியங்களும் கூறுகின்றன
ஆனா அது அந்தக்காலம். இப்ப என்ன நிலமை ?
100% பெண்களிடம் கற்பை எதிர்பார்பது தப்பு . அப்படியெல்லாம் 100% எதிர்பார்க்காதீர்கள். இது தான் இன்றைய உண்மை நிலை . இதையேதான் குஷ்பு என்ன மற்ற நடிகைகள் என்ன, மருத்துவர்கள் என்ன , பள்ளிகளில் பெண்களைப்பற்றிய கணெக்கெடுப்பு நடத்துவோர் என்ன , எல்லாரும் செல்வது . இதை குஷ்பு சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இது - திருமணத்துக்கு முன் பாலுறவு சரி என்று வாதிடவரவில்லை...இது தான் நிலமை. இதை திருத்த யாருக்கும் நேரமுமில்லை தைரியமும் இல்லை
அத்தோடு , திருமணத்துக்கு முன் ஒரு ஆணுடனோ அல்லது பலருடனோ உடலுறவு அனுபவித்து விட்டு ஒரு பெண், திடீரென்று ஐயோ என்னை இவன் கற்பழித்து விட்டான் என்று குற்றம் சாட்டினால் அந்த ஆணுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை . ஸ்டேஷன் கோர்டு என்ற நடக்க வேண்டியது தான். இதையும் ஆண்கள் புரிந்து கொள்ளவேண்டும். பெண்களை காக்கிறேன் பேர்வழி என்று ஆண்களை கழுவிலேற்றும் காலமாகிவிட்டது
அதே போல திருமணத்துக்கு முன் ஒருவருடனோ அல்லது பலருடனோ பாலுறவு வைத்துக்கொண்டு , இவனை (கணாவனை) விட அவன் (கள்ளக்காதலன்) மேல் என்ற உணார்வுகள் வந்து, திருமணம் ஆனபின் தாலி கட்டிய கணவனால் திருப்தி அடையாத பூவையர் உண்டு.... இது குடும்பத்துக்கு கேடாகிறது. இப்படி பல திருமணங்கள் விவாகரத்தில் போய் முடிகின்றன. சிலர் இந்த தகாத உறவை தொடர்வதும் உண்டும். இப்படிப்பட்ட கேஸ்கள் சில கொலையில் போய் முடிகின்றன.
மேலும் :
http://manakkan.blogspot.com/2010/04/blog-post_03.html
அன்புடன்
Post a Comment