யாழ்தேவி நட்சத்திர வாரம் பங்குனி முதல் வாரம்
இப்போது ஒரு குழப்பமுமில்லாது பங்குனி முதல் வாரம் என ஈழக்கணக்குப்படி எழுதி விட்டேன். அதே போல எந்த ஆங்கில நாட்காட்டி தேதியையும் என்னால் ஈழநாட்காட்டிக்கு மாற்றவியலும். ஆனால் அதெல்லாம் செய்யக்கூடிய ஆற்றல் எனது இந்தப் பதிவுக்கு பின்னால்தான் வந்தது. ஒரு பிறப்பு சான்றிதழை ஈழத்தமிழ்லிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தபோது தமிழ் பெயரில் மாதங்களை குறிப்பிட்டதால் எனக்கு சரியான ஆங்கில தேதி மாற்றத்துக்காக ஈழ சகோதரகளை நாட வேண்டியிருந்தது. ஆகவே அப்பதிவை இட்டேன். சும்மா சொல்லக்க்கூடாது, உடனேயே உதவியும் வழங்கினார்கள் பல ஈழப் பதிவர்கள். அவர்கட்கு மீண்டும் இங்கு எனது நன்றி.
தாய்மொழி தரும் உற்சாகம்
எனது இப்பதிவில் குறிப்பிட்டது போல ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்க முடிந்ததில் தமிழ்வலைப்பூவை பாவிப்பது ஒரு முக்கிய பங்கு வகித்தது/வகிக்கிறது என்றால் மிகையாகாது. தாய்மொழியில் எழுதுவதால் வாக்கிய கட்டமைப்பு தானாகவே வருகிறது. எண்ணங்களை மட்டும் கோர்வையாக்கிக் கொண்டால் போதும். இப்போது ஜெர்மனிலிருந்து மற்றும் பிரெஞ்சிலிருந்தும் கூட தமிழுக்கு மொழி பெயர்க்க வேண்டியிருக்கிறது அம்மாதிரியான வேலைகள் பெரும்பாலும் சுவிஸ், கனடா, அமெரிக்கா நாட்டு அரசு துறைகளிலிருந்தே வருகின்றன. அவை முக்கியமாக அந்தந்த நாடுகளுக்கு அகதிகளாக போய் சேர்ந்து பிறகு அன்னாட்டு குடிமக்களாக மாறும் ஈழத் தமிழருக்காகவே. அதனால் ஓரிரு வேலைகளை அனுப்பியவர்கள் ஈழத்தமிழுக்கு மொழிபெயர்க்க வேண்டும் என்று கேட்டனர். அப்போது, நான் அவர்களுக்கு தெளிவாக ஒன்றைக் கூறினேன். அதாவது, ஈழத்தமிழில் இருந்தால் என்னால் அதை உள்வாங்க முடியும். ஆங்கிலத்துக்கோ, பிரெஞ்சுக்கோ அல்லது ஜெர்மனுக்கோ மொழிபெயர்க்க இயலும். ஆனால் அதற்காக நான் ஈழத்தமிழில் எழுதுவது என்பது என்னால் முடியாத காரியம் என்றே குறிப்பிட்டு விடுவேன். என்னுடையது தமிழ்நாட்டு தமிழ்தான் என தெளிவுபடுத்திவிடுவேன். எனது இப்பதிவில் நான் குறிப்பிட்ட ஈழவாலிபர் தெனாலி படத்தில் மிகவும் சிலாகிக்கப்பட்ட ஈழத்தமிழில் பல பிழைகள் இருந்ததாக கூறினார். அம்மாதிரி நானும் முயற்சி செய்து மொழிபெயர்ப்பில் குறை வருதல் கூடவே கூடாது என்பதாலேயே நானும் அம்மாதிரியான வேலைகளை தவிர்த்து விடுவேன்.
இதே போல சிலசமயம் பிரெஞ்சுக்கு மொழிபெயர்க்க கனேடிய ஃபிரெஞ்சை பயன்படுத்த வேண்டும் என்ற தருணத்தில் இதே நிலைப்பாட்டை எடுத்தேன். எது நம்மால் முடியும், எது முடியாது என்பதில் தெளிவாக இருப்பது வேறு யாருக்கு அவசியம் இருக்கிறதோ இல்லையோ, மொழிபெயர்ப்பாளர்களுக்கு மிகவும் அவசியமே.
நித்தியானந்தர் விவகாரம்
இப்போது மெதுவாக பேச ஆரம்பித்திருக்கிறார் நித்யானந்தர். அவர் அவ்வாறு செய்து மக்களை கன்வின்ஸ் செய்கிறார் என வைத்து கொண்டால், அதற்கான கிரெடிட் முழுக்க முழுக்க அவரை எதிர்த்து செயல்பட்ட எல்லோருக்கும் போய் சேரும். அந்த அளவுக்கு அவர்கள் மிகைப்பட செயல்பட்டனர். சன் டிவி குழுமத்தினர் அடல்ட்ஸ் ஒன்லி காட்சிகளை போட்டனர். நக்கீரன் குழுமமோ இன்னும் அதிக போர்னோகிராஃபியை உள்ளடக்கிய சிடிக்களை பார்க்க நாக்கூசாமல் பணம் கேட்டது. ஒரு தருணத்தில் இவர்கள் எல்லோருமே ரொம்பத்தான் அலட்டுகிறார்கள் என்னும் எண்ணம் தோன்றிவிட்டது. மேலும் சன் டிவி குழுமத்துக்கும் நித்யானந்தர் ஆஸ்ரமத்துக்கும் இடையில் உள்ள ரியல் எஸ்டேட் பிரச்சினைதான் அக்குழுமம் இவ்வளவு அலட்டலுக்கு காரணம் என்பதும் புரிய ஆரம்பித்து விட்டது. அப்படியெல்லாம் இல்லை என சன் டிவி நிர்வாகம் விட்ட ஸ்டேட்மெண்ட் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்னும் ரேஞ்சில் பார்க்கப்படுகிறது. அதுவும் அழகிரி விவகாரத்தில் அது அடித்த பல்டிகளுக்கு பிறகு அதன் நம்பகத்தன்மை அரோகரா ஆகி விட்டது.
நித்யானந்தருக்கு இங்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. மற்றவருக்கு செய்யும் உபதேசத்தை தானே பின்பற்றாவிட்டால் இப்படித்தான் ஏற்படும் எனப்தைத்தான் நான் எனது நித்யானந்தரும் பெரியாரும் இடுகையில் ஏற்கனவேயே எடுத்து காட்டியிருக்கிறேனே.
யாழ்தேவிக்கு என் நன்றி
முதலில் என்னை யாழ்தேவி நட்சத்திரபதிவராக இருக்க சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை. உடனே சுதாரித்து கொண்டு அதை ஏற்றேன். தமிழ்நாட்டு பதிவர்களிடமிருந்து முதல் நட்சத்திரமாக என்னை தேர்ந்தெடுத்தது எனக்கு மிகவும் கௌரவம் அளித்த செயல். அதற்காக யாழ்தேவிக்கு என் நன்றி. ஈழபிரச்சினையில் என் கருத்து ஈழத்தவர் பலருக்கு ஒப்புதல் இல்லை என்பது எனக்கு தெரியும். இருப்பினும் என்னை தேர்ந்தெடுத்தது அவர்கள் பெருந்தன்மை. அதற்கு தலை வணங்குகிறேன். இன்று தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் புதிய நட்சத்திரத்துக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். எனக்கு கொடுத்த அன்பான ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கிறிஸ்துவமே ஐரோப்பாவின் பண்பாட்டுமையம்
-
நியூயார்க் நகரின் மையத்தில் அமர்ந்து செய்த ஒரு காணொளி. அந்த இடத்தில்
அப்போது உருவான எண்ணம் அப்படியே வெளிவரவேண்டும் என நினைத்தேன். மைக்
பொருத்துவது வரை ஒரு ...
6 hours ago
13 comments:
யாழ்தேவியிடமிருந்து வந்த மின்னஞ்சல்:
2010/3/8 Yaaldevi.com webmaster
அன்பின் திரு.டோண்டு ராகவன்,
உங்களுடைய நட்சத்திர வாரம் இன்றுடன் முடிவடைந்துள்ளது.கடந்த உங்கள் நட்சத்திர வாரப்பணிகளுக்காக யாழ்தேவி மற்றும் வாசகர்கள் சார்பிலும் உங்களுக்கு நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறது.
அன்புடன்
யாழ்தேவி நண்பர்கள்
நன்றி, யாழ்தேவி நண்பர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்..
என்ன எழவோ, உள்குத்தோ சன் டிவிக்கு இதனால் ஆயிரம் ஏக்கர் ரியல் எஸ்டேட் கூட கிடைத்து விட்டு போகட்டும். நித்யானந்தர்-ஐ எக்ஸ்போஸ் செய்ததற்காக என் பாராட்டுகளும் நன்றிகளும் சன் டிவிக்கு எப்போதும் உண்டு.
கல்பதருவில் கேட்ட வரத்தை தருகிறார் என்று சாரு போன்ற அறிவு ஜீவி எழுத்தாளர் சொல்கிறாரே என்று பேசாமல் 300 $ கட்டி அவரை பார்க்கலாமா (சிலபல பர்சனல் பிரச்னைகளுக்காக) என்று நினைக்க கூட செய்திருக்கிறேன். குளத்துக்கரைக்கு போன எனக்கே இவ்வளவு கோவம் வருகிறதே, அவரை நம்பி குளத்தில் இறங்கிய அவர் பக்தர்களுக்கு எவ்வளவு ஏமாற்றமா இருந்திருக்கும். இது வெறும் பணம் லாஸ் இல்லை. இந்த குருவை நம்பி போனால் நல்லது நடக்கும், ஞானம் கிடைக்கும் என்று நம்பியவர்களுக்கு எவ்வளவு ஏமாற்றம் இருந்திருக்கும்! உங்கள் தொழில் சார்ந்த உதாரணமே சொல்கிறேன். புதுசாக italian கற்றுக்கொள்கிறீர்கள் ஒரு குருவிடம் 3 வருடத்திற்கு. 3 வருடத்துக்கு அப்புறம் அவர் டுபாக்கூர், கற்று தந்தது மகா ஓட்டை italian என்று தெரிந்தால் எப்படி இருக்கும்?
எது எப்படியோ, அந்தாளை இப்பொழுதாவது எக்ஸ்போஸ் செய்தவகையில் சன் டிவி செய்தது சேவையே என்னை பொறுத்தவரையில்..காரணம் எதுவாயினும்.
@நடராஜ்
நீங்கள் கொடுக்கும் உதாரணம் சரியில்லை. நான் மூன்றாண்டுகளுக்கு பிறகுதான் எனக்களிக்கப்பட்ட இத்தாலிய பாடங்கள் டுபாக்குர் என்பதை உணர்ந்து கொண்டேன் என்றால் நான் ஏமாற்றப்பட வேண்டியவனே.
பிரச்சினை அதுவல்ல. நித்யானந்தரின் தரப்பையும் தெரிந்து கொள்வது நலம். சன் டிவியினர் மக்களை மடையர்களாக்க நினைக்கிறார்கள். அதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் நித்யானந்தரின் யோகா வகுப்பால் பலனடைந்தவர்கள் இருக்கவே இருப்பார்கள். ஆகவே கறுப்பு வெள்ளையாக பார்க்கும் மனோபாவம் சரியல்ல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரு குருவிடம் 3 வருடத்திற்கு. 3 வருடத்துக்கு அப்புறம் அவர் டுபாக்கூர், கற்று தந்தது மகா ஓட்டை italian என்று தெரிந்தால் எப்படி இருக்கும்?
////
குரு கற்றுத்தந்தது ரஷ்யன் என்றால் இன்னும் காமெடியாக இருக்கும்....
//
ஒரு குருவிடம் 3 வருடத்திற்கு. 3 வருடத்துக்கு அப்புறம் அவர் டுபாக்கூர், கற்று தந்தது மகா ஓட்டை italian என்று தெரிந்தால் எப்படி இருக்கும்?
////
குரு கற்றுத்தந்தது ரஷ்யன் என்றால் இன்னும் காமெடியாக இருக்கும்....
//
அது ரஷியனா, இத்தாலியனா, இல்லை டுபாக்கூர் இத்தாலியனா என்று கூடத் தெரியாமல் பாடம் படிப்பவன் எவ்வளவு பெரிய முட்டாள்.
nice post sir.
from Tamilish Support
reply-to support@tamilish.com
to raghtransint@gmail.com
date Mon, Mar 8, 2010 at 10:12 PM
subject Made Popular : நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 08.03.2010
mailed-by u15347499.onlinehome-server.com
hide details 10:12 PM (25 minutes ago)
Hi Dondu,
Congrats!
Your story titled 'நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 08.03.2010' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 8th March 2010 04:42:02 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/199047
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஸ் குழுவிற்கு என் நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
\\நான் மூன்றாண்டுகளுக்கு பிறகுதான் எனக்களிக்கப்பட்ட இத்தாலிய பாடங்கள் டுபாக்குர் என்பதை உணர்ந்து கொண்டேன் என்றால் நான் ஏமாற்றப்பட வேண்டியவனே.\\
தவறு டோண்டுசார்..
நமக்கு அறிவுத்தேவை இருப்பதனால்தான் கற்கவே போகிறோம்.
இன்னொருவன் காட்டிக்கொடுக்கவே உண்மை புரிகிறது..
அப்படி இருக்க நாம் எப்படி முட்டாளாக இருக்க முடியும்.
ஏமாற்றத்தின் மூலம் பாடம் படிக்காதவன் வேண்டுமானால் முட்டாள், ஆனால் ஏமாறுபவன் முட்டாள் அல்ல..
//
நமக்கு அறிவுத்தேவை இருப்பதனால்தான் கற்கவே போகிறோம்.
இன்னொருவன் காட்டிக்கொடுக்கவே உண்மை புரிகிறது..
அப்படி இருக்க நாம் எப்படி முட்டாளாக இருக்க முடியும்.
//
அறிவுத் தேவை இருப்பவர்கள் ஒரே குரு சொல்வதை மட்டும் ஏற்பவர்களாக இருக்க மாட்டார்கள்.
+2 படிக்கும் போதே வாத்தியார் சொல்லும் விளக்கத்திற்கும் டியூசன் செண்டருக்கு வரும் பசங்களிடம் அவர்கள் வாத்தி சொல்லிக்கொடுத்த மாற்று விளக்கத்திற்கும் இருக்கும் வேறுபாடுகளால் குழப்பம் அடைபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பிறகு தேடி அலைந்து தெளிவார்கள். சிலர், வாத்தி சொல்வதே வேத வாக்கு என்று எண்ணிக்கொண்டு பப்ளிக் எக்ஸாமில் கோட்டை விடுவார்கள்.
இரண்டாம் வகையரா முட்டாள்கள் (அக்மார்க், ISI முத்திரை பதித்த...)
///சன் டிவியினர் மக்களை மடையர்களாக்க நினைக்கிறார்கள். அதையும் புரிந்து கொள்ள வேண்டும்.///
அண்ணா அத மட்டுமா புரிஞ்சுகணும்.. மொத மொதல்ல பெரியார் போஸ்ட் போட்டீரே ... அப்போ உம்மையும் பத்தி பலர் புரிஞ்சுண்டா தெரியுமோ...? இது ஒரு புறம் இருக்கட்டும்..அப்படியே ஜெ சங்கராவுக்கு நடுவே என்ன "பிரச்சன" கொ்ஞசம் இப்ப எழுதறது... அவா அலட்டலுக்கு என்ன காரணம்னு சித்த சொன்ன தேவல...
/அவா அலட்டலுக்கு என்ன காரணம்னு சித்த சொன்ன தேவல.../
ஓட்டை வாய்தான்! வேறென்ன?
மடங்கள், வம்புமடங்களாகி விடுவது ஒன்றும் புதிதல்லவே! ஞான சம்பந்தர், தமிழ்ச் சைவம் வளர்க்கப் பாண்டிநாட்டுக்கு வந்து ஆரம்பித்த மடத்தின் முன்னாள் ஆதீனம், வேறு வேலை எதுவும் இல்லாமல் ஆவிகளுடன் பேசுவது எப்படி என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அந்தத் தலைப்பில் ஒரு புத்தகமும் எழுதினார்!
அடுத்துவந்தவர், கிடைத்த மேடையெல்லாம் ஏறி, தூக்குவோம் தூக்குவோம் துப்பாக்கியைத் தூக்குவோம் என்று வீரவசனம் பேசிக் கொண்டிருந்தார்.
மடங்கள் என்றாலே, வெட்டிப் பேச்சுத்தான்! கழகங்கள் என்றாலே, கலவரமும், தில்லுமுல்லும் தான்!
நாப்பது வருஷம் முன்னாடி செத்துப் போன பெரியாரைப் பத்தி நெனைக்கும் போதெல்லாம், நேத்துப் பொறந்த பாப்பானுக்குக் கூட ஒரு நடுக்கம் வருது பாருங்க, அதுக்குப் பேருதான் சிம்ம சொப்பனம். கெட்ட கனவு கண்டு கண் முழிச்சா செல பேரு தண்ணி குடிச்சிட்டுப் படுப்பாங்க, இன்னும் செல பேரு தலைமாட்டுல செருப்பு தொடப்பம் இதெல்லாம் வச்சுக்குவாங்க, நெத்தீல சாம்பல அள்ளிப் பூசிக்குவாங்க. இப்படி எதையாவது செஞ்சா அந்த பயம் போயிடும்னு அவுங்களா ஒரு மூட நம்பிக்கை வச்சிருக்காங்க.
இந்த மாதிரி ஒரு வேலைதான் நித்திப் பயலையும் பெரியாரையும் ஒப்பிடுறது. நித்திப் பய கிட்டயும் பார்ப்பணியம் இருக்குடான்னா, அவந்தான் பாப்பான் கிடையாதே, இங்கே எதுக்கு பார்ப்பணியத்தக் கொண்டு வற்றேங்கறான். இதக் கேட்ட ஒடனேதான் நித்திய ஏண்டா பெரியாரோட ஒப்பிடுறாங்கறது புரியுது.
இருள்நீக்கி அலையஸ் ஜெயந்திரன் கூட ஒரு சின்ன வயசு டிவி தொகுப்பாளியோட சல்லாபிச்சதா ஊரெல்லாம் நாறுச்சு. ஆனா அவனை பெரியாரோட ஒப்பிடல, ஏன்னா அவன் பாப்பான். கோயில் கருவரையிலேயே கில்மா வேலை பாத்த தேவநாதனையும் பெரியாரோட ஒப்பிடல, ஏன்னா அவனும் பாப்பான். அதனால தான், பெரியார்ங்கற சிங்கத்த சொப்பனத்தில கண்டுட்டு, இது மாதிரி, தண்ணி குடிக்கிற, சாம்பல் பூசிக்கிற, தலைமாட்டுல செருப்பு வைச்சுக்குற முட்டாள் வேலையெல்லாம் செய்யிறானுங்க.
@பரிதிநிலவன்
நீங்கள் சொல்வது போலவே 40 ஆண்டுகளுக்கு முன்னால் இறந்தவரது பேச்சுக்கள் அவை இன்னும் தற்காலத்துக்கும் பொருந்துகிறதா என்றுகூட பார்க்காமல் வாந்தி எடுப்பவரின் பேசாகத்தான் நீங்கள் கூறுவது எனக்கு படுகிறது.
நான் ஏற்கனவேயே சொன்னது போல நித்யானந்தருக்கு இங்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. மற்றவருக்கு செய்யும் உபதேசத்தை தானே பின்பற்றாவிட்டால் இப்படித்தான் ஏற்படும் எனப்தைத்தான் நான் எனது நித்யானந்தரும் பெரியாரும் இடுகையில் ஏற்கனவேயே எடுத்து காட்டியிருக்கிறேனே. பெரியார் தான் சொன்னதுக்கு மாறாக தன் விஷயத்தில் மட்டும் நடந்து கொண்டதைத்தான் உதாரணங்களுடன் சுட்டிக் காட்டியிருந்தேன். முடிந்தால் அவற்றுடன் வாது புரியுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment