இது ஒரு மீள்பதிவு. இதற்கு காரணமே இப்போது பதிவர் ருத்ரனுடன் நடக்கும் கருத்து மோதலே. நான் எதிர்ப்பர்த்தது போலவே பார்ப்பனீயம் என்னு வார்த்தையை உயர்சாதீயத்துக்காக பிரயோகிக்கின்றனர். அவ்வப்போது ஆஷாடபூதித் தனமான விளக்கங்கள் வேறு, அதாவது பார்ப்பனீயம் என்பது பார்ப்பனர்களை மட்டும் குறிப்பிடவில்லை, மற்ற உயர்சாதியினர் செய்யும் வன்கொடுமையையும் குறிக்கிறது என்று. நான் கேட்கிறேன், அப்புறம் எந்த மயித்துக்குன்னு பார்ப்பனீயம் என்னும் வார்த்தையை பிரயோக்கிக்கிறீர்கள்? உயர் சாதீயம் எனச் சொல்லாமல் உங்களைத் தடுப்பது எது? ஒரு கலைச்சொல் இம்மாதிரி தவறான பொருள் தரும் என்றால் அதை சரியான சொல்லால் ரிப்ளேஸ் செய்வதுதானே அறிவியல் ஒத்த செயல்? ஆனால் செய்ய மாட்டார்கள். நான் சொன்னது போலவே பார்ப்பனீயம் எனச் சொல்லுவது பார்ப்பனர்களை இழிவுபடுத்துவதே என்பதை வினவு, ருத்திரன படித்த வகையறாக்கள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றனர்.
இப்போது ஒரிஜினல் பதிவைப் பார்ப்போமா?
சகபதிவாளர்களே, உங்களுக்கு வேண்டியது என்ன? தலித்துகள் மேல் வன்கொடுமையை நிறுத்துவதா அல்லது எல்லாவற்றுக்கும் பார்ப்பனர் மேல் பழியைப் போட்டு வன்கொடுமை செய்யும் ஏனைய உயர்சாதியினரை மூடி மறைப்பதா என்பதை உங்களுக்குள்ளேயே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். ஒரு பதிவர் எழுதுகிறார் "இது "சூத்திர ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா?" என்று. அவருக்கு நான் கூறுவேன், ஐயா நடப்பது என்னவோ சூத்திரர் ஆட்சிதான். ஏனெனில் முதல்வர் தன்னை சூத்திரர் என்றுதான் கூறிக் கொள்கிறார். ஆகவே உங்களுக்கு ஏன் சந்தேகம் வரவேண்டும் இந்த விஷயத்தில்? உங்களது அப்பதிவிலேயே வன்கொடுமை செய்வது பார்ப்பனர் இல்லை தேவர்களே என்றுதான். அப்படியிருக்க ஏன் பார்ப்பன சாதியை இழுக்க வேண்டும்?
உண்மை கூறப்போனால் பார்ப்பனர்களும் வன்கொடுமைக்கு எதிரானவரே. இரட்டைக் குவளை கொடுமையை எதிர்த்து நான் பதிவும் போட்டுள்ளேன். என்ன, அதற்கு எதிர்ப்பார்த்த ஆதரவு கிட்டவில்லை. அதில் நான் தலித்துகள் தங்கள் சுயமரியாதையைப் பேணுமாறு ஆலோசனை கூறி வழியையும் கூறினேன். விடுங்கள், அது இங்கு வேண்டாம்.
சிலர் கூறலாம் நாங்கள் பார்ப்பனியத்தைத்தான் எதிர்க்கிறோம், பார்ப்பனரை அல்ல. பார்ப்பனியம் என்று உயர்சாதீயத்தையே கூறுகின்றனர். உயர்ச்சாதீயம் என்ற ஒரு தனிச்சொல் இருக்கும்போது தேவையற்று பார்ப்பனீயம் என்று பேசி பார்ப்பனரை ஏன் இழிவுபடுத்த வேண்டும்? இப்போது என்ன நடக்கிறது என்றால் வன்கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட பார்ப்பனருக்கு மோட்டிவேஷன் இல்லாமல் போகிறது. என்ன வேண்டுமானாலும் அடித்து கொள்ளுங்கள் நாங்கள் ஓரமாக நிற்கிறோம் என்ற மனநிலையில்தான் அவர்கள் உள்ளனர்.
இதே போல ஒரு பதிவர் தமிழிசைக்கு ஆதரவாக பதிவுபோடும்போது தேவையின்றி "தமிழில் பாட மறுக்கும் பாப்பாத்திகள்" என்று கொச்சையான தலைப்பை வைத்து பார்ப்பனரை இப்போதைய நிலைக்கு பொறுப்பாக்க முயற்சி செய்ததில், தமிழிசைக்கு ஆதரவு தெரிவிக்கும் குரல்கள் அப்பதிவில் அந்த அளவுக்கு பலமிழந்தன.
ஏதோ என்னால் ஆனது, ஊதற சங்கை ஊதியாயிற்று.
இதற்காகவே நான் வினவு பதிவுக்கு போவதை விட்டு விட்டேன். நண்பர் வால்பையன் நான் எவ்வளவு சொல்லியும் பார்ப்பனீயம் என்று இருப்பதாலேயே அவரது பல பதிவுகளுக்கு செல்வதை நிறுத்தினேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
11 hours ago
40 comments:
ஞானி,ஓ பக்கங்களில் புதுப் பார்ப்பணர்கள் என்ற பொருளில் சுப.வீ க்கு ஒரு கடிதம் எழூதி இருக்கிறார் பாருங்கள்,அது இப்பதிவுக்கு மிகவும் பொருத்தம்
//ஏதோ என்னால் ஆனது, ஊதற சங்கை ஊதியாயிற்று//
டோண்டு அய்யா,
நீங்க ஊதினது செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கா அல்லது 40 ஆண்டுகளாக கேவலமான திராவிடீய சாதி வெறி பிடித்து அலைபவர்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு ஊதப்பட்ட சங்கான்னு பொறுத்திருந்து பார்ப்போம்.என்னிக்கு திராவிட வில்லன்கள் தாங்கள் வில்லன்கள்னு ஒத்துக்கிட்டு இருக்காங்க இப்போ ஒத்துக் கொள்வதற்கு?
பாலா
//ஞானி,ஓ பக்கங்களில் புதுப் பார்ப்பணர்கள் என்ற பொருளில் சுப.வீ க்கு //
சுதந்திரன் அய்யா,
ஞாநி எழுதியதும் தவறு தான்.இது இந்த திராவிட தமிழ் க்ரீமி லேயர் ஓ பி சி கும்பல் என்னமோ முன்னால் சாதி வெறியோடு ஆதிக்கம் செலுத்தாது இருந்தது போலவும்,இப்போது வில்லன்களாக மாறி விட்டது போலவும் பொருள் வருவதாக இருக்கிறது.இந்த க்ரீமி லேயர் திராவிட தமிழ் கும்பல், என்னிக்குமே சாதி வெறி பிடித்து அலைந்தவங்க தான்;என்னிக்குமே வில்லன்களாக இருந்தவங்க தான்.வழக்கம் போல் ஞாநி உண்மையை பளிச்சென்று சொல்லாமல் சொதப்பி விட்டார்.
பாலா
இன்னுமா சாதீயை ஒழிக்கலை!!!!!
இல்லை ஒழிச்சுட்டாங்களா( தெருவின் பெயர்களில் மட்டும்)?
//இன்னுமா சாதீயை ஒழிக்கலை!!!!!//
இல்லை ஒழிக்கவில்லை. அதற்கு பதிலாக அதை மேலும் மேலும் தூண்டி விட்டு கொண்டிருக்கின்றனர். தெருக்கள் விஷயம் கூட ஒரு ஒட்டு முயற்சியே. அதுவும் ஊரான் பிள்ளையை ஆற்றில் இறக்கி ஆழம் பார்த்த கதையாக எம்.ஜி.ஆர். இறந்தவர்கள் சாதிப்பெயரை எல்லாம் தெருப்பெயரிலிருந்து ஒரு அறிவிப்பும் இன்றி ஒரே நாளில் எடுத்தார். அதனால் விளைந்த நிர்வாகச் சிக்கல்கள் அனேகம்.
என்னுடைய அப்பதிவின் போது பலர் எனக்கு எதிராகப் பேசினார்கள். அவர்களில் ஒருவர் பின்னொரு சந்தர்ப்பத்தில் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய "பிரதாப முதலியார் சரித்திரம்" என்னும் தமிழில் முதல் புதினத்தைப் பற்றி குறிப்பிட்டபோது அவரிடம் "ஏன் வேதநாயகம் எழுதிய "பிரதாபன் சரிதம்" என்று கூறுவதுதானே என பாதி வேடிக்கையாகவும் பாதி வினையாகவும் கேள்வி கேட்டேன். பதில் இல்லை.
இவ்வளவு வாய் கிழிய பேசும் அரசியல் கட்சிகள் தேர்தல் சமயங்களில் எந்தெந்த ஜாதியினர் எந்தெந்த தொகுதியில் ஆளுமையுடன் உள்ளனர் என்பதை வைத்துத்தான் வேட்பாளர்களையே தேர்ந்தெடுக்கின்றனர். வன்னியர் வாக்கு அன்னியருக்கில்லை என்ற கோஷம் கேள்விப்பட்டதில்லையா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Hey dude, what's the idea of posting this on a Saturday? Hoped that others will not have time to read it and come upon you like a ton of bricks?
Your strategy seems to work, eh?
Curious Perplexed
பாலாவின்
"விவேகானந்தர் இல்லப் பிரச்சினை - தமிழக அரசு பல்டி ?" - பதிவில் -உங்கள் கருத்தில் "மோடி மாத்திரம்" நல்ல முதன்மந்திரி போல் தேவையின்றி கூறியது தவறு.
நம் அதிர்ஷ்டம், பெண் பித்தர் மோடி நம் முதல்வர் இல்லை
//Hey dude, what's the idea of posting this on a Saturday? Hoped that others will not have time to read it and come upon you like a ton of bricks? Your strategy seems to work, eh?
Curious Perplexed//
இதில் சனி என்ன ஞாயிறு என்ன. நான் ஒரு புதனன்று போட்ட பதிவுக்கும் இடி போன்ற மௌனம்தான் விடையாக இருந்தது. ஏன்? நானும் அவர்கள் தாங்கள் கடைபிடிப்பதாகச் சொல்லப்படும் பகுத்தறிவை கடைபிடித்தால்தான் என நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டுவால் சற்றே திருத்தப்பட்டது: மோடியைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாகச் சொல்லவேண்டுமோ அவ்வளவு கீழ்த்தரமாகச் சொல்லுவது ஜாதி-மத வெறியர்களுக்கு பிடித்த விஷயம். அவரை பெண்பித்தர் என்று சொல்லுவதும் அத்தகையதுதான்.
ஒருவேளை இப்படி புரளியைக் கிளப்பிவிடும் அனானிக்கு மாமா வேலை செய்வதுதான் தொழில்போலும். (இப்படி நான் எழுதக் காரணம்: மோடியைப் பற்றி இழிவாகப் புரளி பரப்புபவர்களை இழிவாகப் பேசுவது தவறாகாது என்பதால்தான்.)
இங்கே மூன்று பெண்டாட்டிகளும், தெருவுக்கு ஒரு வைப்பாட்டியும் வைத்துக்கொள்பவர்கள் ஆளுகிறார்கள். அவர்களது பிள்ளைகள் செய்திவாசிக்கும் பெண்களை தெருவில் துரத்தி வேட்டையாடுவதில் புகழ்பெற்றவர்களாக இருக்கிறார்கள். பிடிக்கவில்லை என்றால் கொலை செய்கிறார்கள். கற்பழிக்கிறார்கள்.
இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தது அவர்களைப்போலவே நடக்க விரும்பும் இந்த அனானிபோன்ற ஜாதி-மத வெறியர்களால்தான்.
இந்த மாதிரியானவர்களது ரத்ததாகத்திற்கு அறம் பலியாவதுதான் வேதனை.
//ஒருவேளை இப்படி புரளியைக் கிளப்பிவிடும் அனானிக்கு மாமா வேலை செய்வதுதான் தொழில்போலும். (இப்படி நான் எழுதக் காரணம்: மோடியைப் பற்றி இழிவாகப் புரளி பரப்புபவர்களை இழிவாகப் பேசுவது தவறாகாது என்பதால்தான்.)
//
அனானி அவர்களே, புரளி பரப்புபவர் மாமா என்றால், தாங்கள்??? .....
நல்லவர் - மோடி, கொடுங்கோலர் -கலைஞர் என்று புரளி பரப்புவது ..... ஏன் ....
மத வெறியர் மோடீய கொடுங்கோல் ஆட்சிக்கு தான் சங்கை ஊத வேண்டும்
//எம்.ஜி.ஆர். இறந்தவர்கள் சாதிப்பெயரை எல்லாம் தெருப்பெயரிலிருந்து ஒரு அறிவிப்பும் இன்றி ஒரே நாளில் எடுத்தார். அதனால் விளைந்த நிர்வாகச் சிக்கல்கள் அனேகம்.//
டோண்டு அய்யா,
1. எம்.ஜி.ஆர். முயன்றது தவறா???
2. தாங்கள் திராவிடர் இல்லையா??
bala ...
//என்னிக்கு திராவிட வில்லன்கள் தாங்கள் வில்லன்கள்னு ஒத்துக்கிட்டு இருக்காங்க இப்போ ஒத்துக் கொள்வதற்கு?//
ஆரீய ஜாதி-மத வெறியர்கள்/வில்லன்கள் எப்படி???
பி.கு - //டோண்டுவால் சற்றே திருத்தப்பட்டது: //
நன்றி
//1. எம்.ஜி.ஆர். முயன்றது தவறா???
2. தாங்கள் திராவிடர் இல்லையா??//
1. எம்.ஜி.ஆர். முயன்றது ஒரு மலிவான யுக்தி, புகழ் பெற. அதனால் வந்த நிர்வாகச் சிக்கல்கள் அனேகம்.
2. நான் தமிழன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// நான் தமிழன்.//
dondu avargale, athai neengale sollik kollakkoodaathu. naangal solla vendum. melum 'neengal thiraavidanaa?'
endra kelvikku neridaiyaaga pathil sollaatha pothe neengal entha inaththai sernthavar enbathu
'vellidaimalai'!!!!
melum thamizan enbathu verum thamiz nandraaga ezuthavaruvathaal mattumalla. thamiz unarvum irukka vendum!!!
thamizil pathi poduvathu thavira neengal enna seythulleergal? ilakkiya noolgal ezuthiyulleergalaa? allathu
ethaavathu ilakkiya noolukku urai ezuthiyulleergalaa? thamizanin varalaaru theriyumaa?
vidai aliyungal dondu avargale.
komanakrishnan
தமிழன் என்றால் இலக்கிய நூலுக்கு உரை எழுதியிருக்க வேண்டுமா??கோமணா, நீ என்னென்ன நூலுக்கு உரை எழுதியிருக்கிறாய்?
// நான் தமிழன்.//
தாங்கள் திராவிடர் என்று ஒத்துக் கொண்டதற்கு!!!! (மறைமுகமாக??!!)
நன்றி .. நன்றி.. நன்றி..
So, தாங்கள் திராவிட தமிழ் கும்பலை சார்தவங்க ...
திராவிடர்=தமிழ்+கன்னடம்+ ...
//
திராவிடர்=தமிழ்+கன்னடம்+ ...
//
தமிழ்நாட்டில் ஒரு கும்பலைத் தவிர இந்தியாவில் வேறெங்கும் தாங்கள் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை. ஆகவே திராவிடர்=தமிழர்+கன்னடர்+...எல்லாம் கிடையாது.
திராவிடர் = முட்டாள்கள் + மடையர்கள் +...என்று வேண்டுமானால் சொல்லலாம்.
திராவிட அசிங்கம்,
//தமிழ்நாட்டில் ஒரு கும்பலைத் தவிர இந்தியாவில் வேறெங்கும் தாங்கள் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை. ஆகவே திராவிடர்=தமிழர்+கன்னடர்+...எல்லாம் கிடையாது.//
நான் படித்த சரித்திரம் தவறா???
//திராவிடர் = முட்டாள்கள் + மடையர்கள் +...என்று வேண்டுமானால் சொல்லலாம்.//
ஆரியர் = ??
ராமர் காவியம்??
// melum 'neengal thiraavidanaa?'
endra kelvikku neridaiyaaga pathil sollaatha pothe neengal entha inaththai sernthavar enbathu
'vellidaimalai'!!!!//
who taught you to hate other people for no reason..
why this caste hatred? rascal.
உங்கள் மனக் குமுறல் நியாயம் தான்.கருத்து மோதல் கள் தான் தேவை. தனி மனித தாக்குதல் அநாகரிகம்.சாதி தூற்றல்களை அறவே தவிர்ப்போம்."பாம்பு பார்ப்பான் "பழயகதை இப்போது எதற்கு.ஆரோக்ககியமான தர்க்கரீதியான முறையான நன்மை பயக்கும் பதிவுலகுக்கு தலமை தாங்கி அனவரையும் நல் வழிப் படுத்த முயலும் ராகவன் சார்க்கு பாரட்டுக்கள்.
மற்ற விவகாரங்களுக்குள் புகுந்து புறப்பட விரும்பவில்லை. ஆனால் 'பார்ப்பனியம்' என்கிற சொல்லுக்கு ஈடான மாற்றுச் சொல் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். இந்தச் சொல் பார்ப்பனர்களைத்தான் குறி்க்கிறது என்கிற தவறான புரிதலோடுதான் நானும் நீண்ட காலமாக இருந்தேன்.
இந்தக் குழப்பம் நிச்சயம் தவிர்க்கப் பட வேண்டியதே. ஆனால் உயர் சாதியம் என்கிற சொல்லாடல் இதற்கு மாற்றாக அமையாது என்றுதான் நான் கருதுகிறேன். உயர் சாதி என்கிற சொல்லாடலே குறிப்பிட்ட சாதியை 'உயர்ந்த சாதி' என்று ஒப்புக் கொள்கிற தொனியில் இருக்கிறது.
சாதியம் என்ற சொல்லே போதுமானது. ஆனால் ஒரு குறிப்பிட்ட சாதி மீதும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதும் வெறுப்பை வளர்க்க அவை போதுமானதல்லவே...
சுரேஷ் கண்ணன் போலவே நானும் உள் விவகாரங்களுக்கு போக விரும்ப வில்லை. சுவாரஸ்யமும் இல்லை.
இன துவேஷம் / இன வெறுப்பு / இன பாகுபாடு என்பது சரியான சொல்லா
Which word should be used can't be forced upon anyone.
If certain people think that the expression 'parppaneeyam' stands for all such evils as casteism, discrimination, holier than thou attitude, feeling superior to fellow humans on the imaginary grounds of religion etc., and if they like to use that expression only, it is no problem of others.
Further, it is not legal to stop them from adopting that expression.
However, if brahmins like Arvind Neelankantan, Bala, Dondu feel that such an expression is referring to their caste people only, and is used only only with the intent to insult, then they should file a case of defamation in a court, seeking not only damages, but a permanent injunction against its use by anyone.
In other words, it is asking for patent right of an expression. I doubt whether the court will grant it.
The case will be complicated; inconvenient and embarrassing social questions will be raised. Both parties have to answer convincingly.
No matter, Finally, a judgement will come from the court - to use or not to use. Whether we like the judgement or not - one party will have to accept it unwillingly - all should abide by it.
I would suggest Arvind Neelakantan to take the initiative by calling for donations from all like-minded brahmins like Dondu, through the blog he runs TamilHindu.com, to fight a case in court, in favour of brahmins, quickly.
Better late than never.
Good luck.
\\brahmins like Arvind Neelankantan//
எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் சொல்லிட்டார். சும்மா மெட்ராஸ்ல வேல பார்க்கும்போது கேட்ட வார்த்த பேசுற பார்ப்பார ட்ரைவர், டெல்லில வேல பார்த்தப்ப, கோயில் குருக்களோட மனைவி உங்க வீட்டுல வேலைக்காரியா இருந்தத பெருமையா சொன்னோமான்னு இல்லாம எதுக்கு இந்த வேலையில்லா வெட்டி வேல? அரவிந்தன் நீலகண்டன் பார்ப்பான்னு சொன்னா மக்கள் வழிச்சிக்கிட்டு சிரிப்பா ஓய். புரிஞ்சதொன்னோ?
அய்யா ! இதில் எனக்கு சொல்ல நிறைய விஷயங்கள் உண்டு.இப்போதைய சூழலில் தவறாகத்தான் அர்த்தம் கற்பிக்கப்படும்.
//Which word should be used can't be forced upon anyone.//
Does it also apply to a term that is seen to be blatantly wrong?
As for filing a case, it is not practical.
Of course I cannot force someone to use or not use a particular term. But it does not prevent me in drawing conclusions about that person's mental makeup and deciding to have no discussions with such a person and to declare this intention from time to time.
Regards,
Dondu N. Raghavan
ஒரு சங்கம் அப்படின்னு இந்தக்காலத்துலே
ஆரம்பிச்சா
என்னென்ன நடக்கும் அப்படின்னு
தெரிஞ்சுக்கறதுக்கு,
உங்க பதிவு ஒரு சிறந்த உதாரணமா இருக்கு.
பொழுது போகாதவங்க
போக்கத்தவங்க
பொறுமை இல்லாம ,
பொருளில்லாம ,
பொறுப்பில்லாம
எதையும் பேசலாம்
என்கிறதுக்கு
பதிவும் ஒரு
ப்ளாட்ஃபாரம்.
பாரமாயிடுத்து மனசு.
உங்க அனைத்துப்பேரிடத்தும் இருக்கும்
சாரம் இது தானா என்னுகூட தோணுது.
என்ன செய்வது !!!
அறிவு ஜீவிகளே !!
அன்பாய் இருக்கக்
கத்துக்கங்களேன்.
அய்யா டோ ண்டு,
ரொம்ப நல்ல காரியம் பண்ணினீர். என்ன துரதிர்ஷ்டம் பாருங்கள். மார்க் ஆண்டனி சீசரை புதைக்க புகழ அல்ல என்று உரையாற்றிய போது கேட்ட மக்களெல்லாம் உம்மைப் போல இல்லை. சரித்திரம் மாறியிருக்கும். குறைந்த பட்சம் சேக்குசுப்பையரின் நாடகமாவது ஊத்தியிருக்கும். நான் மன்னிப்பு கேட்க சொன்னேனாம்....அட ராமா! எதுவானால் என்ன வெண் தாடியில் மண் ஒட்டாமல் விழுந்தெழுந்து face value வில் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு வீராப்பாக நிற்கும் ஈகோ குறித்து சந்தோஷம்.
சரி இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன். நேற்று உங்கள் ப்ளாக்கில் கமெண்ட் போட்ட உடனேயே எனக்கு ஒரு ஈமெயில் "if you want dondu's favour" என திட்டி. முன்பெல்லாம் போலிதான் இப்படி உங்கள் ப்ளாக்கில் கமெண்டிட்ட உடன் திட்டி அனுப்புவான். இதோ மனநலமற்ற போலிக்கு ஒரு வாரிசு வலையுலகத்தில் வந்துவிட்டது. அய்யா டோ ண்டு இதுவரை நீர் எனக்கு என்ன "favour" எல்லாம் செய்திருக்கிறீர்...உம்மிடம் நான் என்ன "favour" எல்லாம் யாசித்திருக்கிறேன்...என்னுடைய ஸ்விஸ் பாங்க் அக்கவுண்டை ஆபரேட் செய்ய உங்களுடைய "favour" எனக்கு எப்படி உதவுகிறது என்பதையெல்லாம் தயவு செய்து விளக்குகிறீர்களா? (இழவு! ஜோக் அடிக்கவும் பயமாயிருக்கிறது சீரியஸாக எடுத்துக்கொண்டு விளக்கினாலும் விளக்குவீர் பிறகு எவனாவது அவன் கிறுக்குகிற நிர்வாண வக்கிரத்தையெல்லாம் ப்ரேம் போட்டு எனக்கு அனுப்புகிறேன் எனக்கு யூரோவில் பணமனுப்பு என்று கேட்டாலும் கேட்டு வைப்பான்! போணியாகமால் கிறுக்குகிற கிறுக்கன்கள் சென்னை வெயிலில் நிறையவே திரியுறான்கள்.)
இது டோ ண்டுவுக்கு அல்ல. எதுவானாலும் அவ்வாறு நான் டோ ண்டுவிடம் "favour" யாசிப்பதாக எனக்கு மெயில் அனுப்பிய ஜென்மத்துக்கு சொல்லுகிறேன். எனக்கு டோ ண்டு நெட்டையா கட்டையா குண்டா ஒல்லியா என்பது கூட தெரியாது. அவரை சந்திக்கவோ பேசவோ எனக்கு ஆசையுமில்லை ஆர்வமும் இல்லை. எனக்கு அவருடைய பல நிலைபாடுகளில் உடன்பாடும் இல்லை.அவரால் எனக்கோ அல்லது என்னால் அவருக்கோ ஆகப் போவதும் எதுவுமில்லை. இப்படி "favour"களால்தான் வலையுலக நிலைபாடுகள் நிகழ்கின்றன என அற்பத்தனமாக நீ நினைத்தாய் என்றால் நல்ல மனநல நிபுணரை -someone with some sense of professional ethics and basic human decency- நீ நாடுவதே நலம்.
அரவிந்தன் நீலகண்டன்
//brahmins like Arvind Neelankantan//
அய்யா நான் பிராம்மணனில்லை. எந்த அளவு கடவுள் உலகைப் படைத்தார் என்கிற உளறலில் எனக்கு நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லையோ அதே போல எனக்கு சாதியத்திலும் நம்பிக்கை இல்லை. சாதியத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்க்கிறேன். நான் சாதியற்ற அவர்ண ஹிந்து. ஏனெனில் ஹிந்துத்துவமே பூரணமான மானுடவிடுதலைக்கு மிக உகந்ததென நான் என் தனிவாழ்விலிருந்து நம்புகிறேன். பார்ப்பனீயம் எனும் வார்த்தையாடலை ஆதிக்க சாதிகள் தங்கள் சாதியத்தை மறைக்க கேடயமாக பயன்படுத்துகிறது என்பதாலும் அன்னிய மதவாதிகள் ஹிந்து ஆன்மிக மரபினை ஒழிக்க ஒரு வக்கிரமான யுக்தியாக பயன்படுத்துகிறார்கள் என்பதாலும் அதை எதிர்க்கிறேன். இதற்கு பொருள் ஏதோ ஒரு சாதியின் மேன்மைவாதத்தை நான் ஆதரிக்கிறேன் என்பதல்ல. எவ்வித பிறப்படிப்படையிலான மேன்மைவாதத்தையும் எதிர்க்கிறேன்.
Bold article.
The whole Parpaneeyam hate campaign tactics has helped a hate concept -helped some to stay in power and amass thousands of crores of people's money- it has helped only THEIR families.
Those who support this kind of hate campaigns sit on the top branch of the tree of this nation and are helping cut the supporting trunk of that tree!
Arivujeevigal thaan.
//As for filing a case, it is not practical.
Of course I cannot force someone to use or not use a particular term. But it does not prevent me in drawing conclusions about that person's mental makeup and deciding to have no discussions with such a person and to declare this intention from time to time.
//
On the spot. you are! (meaning said correctly)
Parppaneeyam is a socio-religious expression.
It cant be categorised along with expletives like Bas...d, etc. No one goes to court for a judicial interpretation of such expletives.
But it is possible to ask the court to intervene in allowing or disallowing sociological expressions that some people use freely with the meaning they want, whereas some others consider it 'abused' and feel hurt by that very expression. Worldwise such cases are common in courts.
An example is the expression 'Hindutva'. Positive or negative meanings to it is given by vested groups. Another word is 'Dravidian'. Tamil brahmins hate it. Arvindan's Tamilhindu.com is seriously bent on demolishing the word saying it is all the wily white men, and after them, the enemies of Hindu religion, who indulge in such semantic gimmicks. But I find it used by respectable scholars, which include Tamilbrahmins as well! Right now, on my hands, is the book The Concept of Man - A study in contemporary philosophy - Edited by S.Radhakrishnan and P.T.Raju (both Telugu brahmins) where, not only the word, Dravidian but also, the most hated word, Aryan, is also liberally used.
Recently I wrote in True Tamilan (Thank god, I am not a Tamilian proper) blog, vis a vis, Geeta sambasivan's remarks that TN government is trying to change the emblem of the State government replacing Andal's temple with Valluvar pic. When pointed out that the temple is a Hindu symbol, she said, no, it is dravidian art.
So, we see, where they want, they cling to the word, Dravidian. Where they do not, they trample upon it.
If someone uses the expression 'Parpaneeyam' to refer to social evils like untouchability, it is his liberty to do so, just like it is your liberty to treat that person 'pariah' (which means in English, a person who is shunned by all, in this case by persons like you).
I said, both have liberties as said above.
But here, an interpreation is being given to the expression 'Parppaneeyam' that it does not stand for social evils; it only refers to customs and practices of Tamil brahmins; and the appropriate word is Uyarjaatheyam or just Jaatheeyam, according to AN if the users want to refer to social evils.
In this mess, what is not understood is that paarppaneeyam comes from the Hindu religion, whereas uyarjaatheeyam may not be said to have come straight and square from that religion. A muslim or a christian can practice such evils discriminating against people on the bases of colour or creed. If the Namboodri Brhamin is avese to touch the pole which has been touched by an Eeelava or a Dalit, it is paarppaneeyam, that comes from the rituals of religious pollution. If vanniar christian or Nadar Christians want Dalit Christians not to enter the same Church, it not parppaneeyam, but uyarjaatheeyam!
I have been maintaining here and elsewhere, that the brahmins who are aggrieved with those who single them out for attack, should keep off from such people. Everything will be happy if you do so.
ஜோ,
முதலில் திராவிடம். திராவிடம் என்கிற வார்த்தை ஒன்றும் தவறான வார்த்தை என எவரும் சொல்லவில்லை. ஆனால் அதற்கு ஒரு இனவாத பொருள் கொடுக்கப்பட்டது தவறு. வக்கிரம். அதைத்தான் தமிழ்ஹிந்து தளம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. ராதாகிருஷ்ணன் போன்ற 1950களின் அறிஞர்கள் ஆரிய-திராவிட பகுப்பை ஏற்றவர்கள். ஆனால் அம்பேத்கர், விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி, ஸ்ரீ அரவிந்தர் ஆகியோர் இத்தகைய இனவாதப் பொருட்கொள்ளுதலை எதிர்த்திருக்கின்றனர். தமிழ்ஹிந்துவும் அதைத்தான் -திராவிடம் எனும் பெயரில் கட்டமைக்கப்படும் இனவாத அரசியலை- எதிர்க்கிறது.
ஒரு பிராம்மணன் ஒரு அபிராம்மணனை தொடாவிட்டால் அது பிராம்மணீயம். ஆனால் ஒரு அபிராம்மணன் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரரை தொடாவிட்டால் அது உயர்சாதீயம் என்கிறீர்கள். தொடர்ந்து பிராம்மணனாக பிறந்து தொலைத்த ஒருவன் என்ன செயல் செய்தாலும் அவனது "ஜினோடைப்" மீது ஏற்றி வசை பாடுவது அவனை எப்படியாவது "ஆமாய்யா நான் பாப்பான்தான் அதுக்கென்ன" என சொல்ல வைப்பது என்கிற நிலைக்கு கொண்டு செல்வது நடக்கிறது. நீங்கள் சுட்டியபடி டோ ண்டு சாதிய நிலைப்பாடு எடுத்தால் அதை கடுமையாக கண்டிக்கலாம். கண்டித்திருக்கிறேன். ஆனால் அவர் செய்யும் எல்லாவற்றிலும் பூணூலைத் தேடித்தடவுவது அருவெறுப்பாக உள்ளது. ஒரு மானுடக்குழுவின் மீதான வெறுப்பை மீண்டும் மீண்டும் கக்குவது - அதற்கு சமுதாய நீதி முலாம் பூசுவது கேவலமாக உள்ளது.
கீழ்வெண்மணியையும் திண்ணியத்தையும் மேல்கோவில்பட்டியையும் என்ன சொல்வீர்கள்? மேல்சாதியமா பார்ப்பனீயமா தேவரீயமா அல்லது கிறிஸ்தவீயமா? மனுவில் கூட இல்லாத தீண்டாமை விவிலியத்தில் பேசப்படுகிறது எனவே தீண்டாமையை கருத்தியலாக கிறிஸ்தவீயம் எனலாமா?
ஹிந்துத்துவவாதி சமுதாய அமைப்பே ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். பிறப்படிப்படையில் இல்லாத பிராம்மண - வேத அறிஞர்கள் உருவாக வேண்டும் என கருதுகிறான். சாதிய அமைப்பே ஜனநாயகத்தன்மை அற்றதெனக் கருதுகிறான். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய சிந்தனை மையத்தின் தலைவருமான ரமேஷ் பதங்கேயின் "ஆர்.எஸ்.எஸ்ஸூம் மனுவாதமும்" எனும் நூலை படித்துப் பாருங்கள்.
By the way "my Hinduism" is not inclusive. It is the other way round. Hinduism is inclusive and that makes me inclusive.
அரவிந்தன் நீலகண்டன்
ருத்ரனின் அறிவுக்கும், புகழுக்கும் அவர் இந்த மாதிரி முக்கியத்துவம் இல்லாத குழாயடிச் சண்டைகளில் இறங்குவது பொருத்தமாக இல்லை.
http://kgjawarlal.wordpress.com
//
ருத்ரனின் அறிவுக்கும், புகழுக்கும் அவர் இந்த மாதிரி முக்கியத்துவம் இல்லாத குழாயடிச் சண்டைகளில் இறங்குவது பொருத்தமாக இல்லை.
http://kgjawarlal.wordpress.com
//
http://www.youtube.com/watch?v=aJFpG5AX7TA
dondu sir,
//1. எம்.ஜி.ஆர். முயன்றது ஒரு மலிவான யுக்தி, புகழ் பெற. அதனால் வந்த நிர்வாகச் சிக்கல்கள் அனேகம்.
2. நான் தமிழன்.//
இரண்டாவது பாயிண்டில் நான் தமிழன் என்பதற்கு பதிலாக நான் மனிதன் என்று சொல்லியிருந்தீர்களானால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இவர்களிடம் தான் தமிழன், கன்னடன், ஹிந்திக்காரன் என்று மொழிவாரியாக பிரிவினைவாதம் வேறு இருக்கே. நமக்கேன் சார் வம்பு.
அன்புடன்
ராம்
www.hayyram.blogspot.com
A group of ppl from a village called naxalbari revolted.. Any group who are inclined to bring revolution are termed as NAXALITES.
Any movement which descriminates and kills people by their race are called NAZISM.
Should we go about changing their name too??
Like wise Parpaneeiam takes its name from its originators.. I don't think there is anything wrong in that.
I got this today thru a mail & felt it can be applied in Tamil blog-world by all the "affected" parties. Hence sharing the same.
The Law of the Garbage Truck: -
One day I hopped in a taxi and we took off for the airport. We were driving in the right lane when suddenly a black car jumped out of a parking space right in front of us. My taxi driver slammed on his brakes, skidded, and missed the other car by just inches. The driver of the other car whipped his head around, started yelling at us, and flipped us the bird. My taxi driver just smiled and waved at the guy. And I mean, he was really friendly. So I asked, "Why did you just do that? That guy almost ruined your car and sent us to the hospital."
This is when my taxi driver taught me what I now call, 'The Law of the Garbage Truck.' He explained that many people are like garbage trucks. They run around full of garbage, full of frustration, full of anger, and full of disappointment. As their garbage piles up, they need a place to dump it and sometimes they'll dump it on you. Don't take it personally. Just smile, wave, wish them well, and move on. Don't take their garbage and spread it to other people at work, at home, or on the streets.
The bottom line is that successful people do not let garbage trucks take over their day. Life's too short to wake up in the morning with regrets, so......
Love the people who treat you right. Pray for the ones who don't.
Life is ten percent what you make it and ninety percent how you take it.
Dear arunachalam,
Thanks for making my day. Good message.
Arunachalam,
Thank you.If every one follows,the world will be a heaven to live.
It is very difficult Arunachalam. But a good one.
-Venkat, NJ
வேளாள சாதி?????
http://www.vinavu.com/2010/04/29/kuspu-i-today/#comment-22039
/சொத்துடைமை கொண்ட பார்ப்பன வேளாள சாதிப் பண்பாடுதான் “கற்பு”. இம்மேல்சாதி பண்பாட்டை, தொன்று தொட்ட தமிழர்களின் கலாச்சாரம் போல ஊதிப் பெருக்கியதில், இந்துத்துவாவாதிகள், திராவிடக் கட்சிகள், தமிழினவாதிகள், தமிழ் சினிமாக்களுக்கு முக்கிய பங்குண்டு/
Post a Comment