3/14/2010

முரளிமனோகரின் மொக்கைகள்

அம்புலிமாமா கதை
இன்று டோண்டு பெரிசு ஒரு பதிவரின் இடுகையை பார்த்து பகபகவென சிரித்துக் கொண்டிருந்தது. எட்டிப் பார்த்தேன், எனக்கும் சிரிப்பு வந்தது. பிறகு அது தனது பதிவில் புது இடுகையை போட தயார் ஆனது. நான் அதை தடுத்து, இம்முறை நானே போட்டுவிடுகிறேன் எனச் சொல்லி அதை தள்ளீப் போக சொல்லிவிட்டு நானே இப்போது பதிவை போடுகிறேன். அதுவும் நானும் ஒன்று என்பதால் அது போட நினைத்த பதிவை நான் போடுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

இப்போது அம்புலிமாமாவில் சமீபத்தில் 1954-ல் வந்த ஒரு கதை.

வீரபுரம் என்னும் ஊரில் பாணபத்திரன் என்னும் ஒரு வியாபாரி இருந்தார். அவர் தெருவில் செல்லும்போது மாட்டுச்சாணியில் காலை வைத்து வழுக்கி விழுந்தார். அதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. வைத்தியரிடம் போய் கட்டு போட்டுக் கொண்டு வந்தார்.

அவரைப் பார்ப்பவர்கள் எல்லாம் என்ன ஆயிற்று எனக்கேட்டு கேட்டு அவருக்கே அலுத்து விட்டது. ஆகவே அவர் ஒரு காரியம் செய்தார். கஷ்டப்பட்டு கோவில் கோபுரத்தின் மேலேறி எல்லோரையும் உரக்க அழைத்தார். எல்லோரும் என்னவோ ஏதோ என எண்ணி கீழே கூடினர். அவர் அப்போது உரக்க, “நான் சாணி வழுக்கி கீழே விழுந்து காலில் அடிப்பட்டு கொண்டேன். ஆகவே கட்டு போட்டு கொண்டேன். இது உங்கள் தகவலுக்காக. இனிமேல் யாரும் என்னிடம் காலில் எப்படி அடிப்பட்டது என கேட்காதீர்கள்”.

கோபம் அடைந்த ஊர்க்காரர்கள் அவர் கீழே இறங்கியதும் மொத்து மொத்து என மொத்தியதில் இன்னொரு காலிலும் அடிப்பட்டு, அதிலும் கட்டு போட வேண்டியதாயிற்று. ஆனால் இந்த முறை அவர் மீண்டும் கோபுரம் ஏறத் துணியவில்லை.

அப்படி என்ன பதிவால டோண்டு பெரிசுக்கு இந்தக் கதை ஞாபகம் வந்ததுன்னு கேட்டா அது ஏதோ ஹைப்பர்லிங் என்று சொல்லி படுத்தும். ஆகவே நானே இப்பதிவை போட்டு விட்டேன். அந்த ஹைப்பர்லிங் பதிவு இதோ.

நித்யானந்தரும் சோவும்
நித்யானந்தர் விஷயத்தில் எல்லா பத்திரிகைகளும் ருத்ர தாண்டவமே ஆடிவிட்டன, துக்ளக் தவிர. முக்கிய செய்திகளை கூறினாலும் கிளுகிளுப்புகளுக்காக எந்த மசாலாவையும் சேர்க்கவில்லை. அதுதான் சோ.

2002-க்கான துக்ளக் ஆண்டுவிழா மீட்டிங் என ஞாபகம். அதில் சோ நகைச்சுவையாக பல விஷயங்களை கூறினார். சரவணபவன் அண்ணாச்சி சம்பந்தப்பட்ட பலான விஷயங்கள பற்றி பேசுகையில் அது பற்றியெல்லாம் தனது பத்திரிகை ஆசிரியர் குழாம் விவாதிப்பதில் ஒன்றும் குறைவு இல்லை என்றும், ஆயினும் அவை எதுவும் பத்திரிகையில் வரவுமில்லை என்றும் அவர் சொன்னபோது ஒரே சிரிப்பு.

இந்த நித்தியானந்தர் விஷயத்திலும் அவ்வாறே நடந்து கொண்டது மனதுக்கு நிறைவை தருகிறது. சோ அவர்களின் தரத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கும் நக்கீரன் கோபால்/குமுதம் ரிப்போர்டர் போன்ற அரைகுறைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை இந்த ஒரு விஷயமே நன்றாக காட்டி விடுகிறது.

அன்புடன்,
முரளி மனோகர்

8 comments:

dondu(#11168674346665545885) said...

2010/3/15 Tamilish Support


Hi Dondu,

Congrats!

Your story titled 'முரளிமனோகரின் மொக்கைகள்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 14th March 2010 10:00:02 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/203707

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team
நன்றி தமிலிஷ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வழிப்போக்கன் said...

வண்டுகள் மலரைத்தான் மொய்க்கும்.
துக்ளக் இதழ் உலகில் ஒரு வண்டு.

kaliraj - Qatar said...

உண்மையில் பெருமிதப்படவேண்டிய விஷயம்தான் சார். மக்கள் இதைததான் விரும்புகிறார்கள் என்று இந்த அரைவேக்காடுகளே மஞ்சள் பத்திரிக்கை அளவிற்க்கு செய்திகளை வெளியிட்டு,தங்களின் தரத்தை குறைத்துக்கொண்டனர்.

ஒரு பக்கம் மக்களை லஞ்சம் வாங்கவைத்து தர்மத்தின் சீரழிவுக்கு தாத்தாவும். அந்தரங்கங்களை வீட்டின் வரவேற்ப்பறைக்கு கொண்டுவந்து கலாச்சார சீரழிவுக்கு பேரனும் போட்டிபோட்டுக்கொண்டு செயல்படுகிறார்கள்.

2கோடிக்கு செட் போடுகிறார்கள்.சினிமாக்காரன் புத்தி எங்கே போகும். யார் வீட்டு காசு?

மக்களால் அமையப்பட்ட ஆட்சி அல்ல இது. விலைகொடுத்து வாங்கப்பட்டது

இவர்கள் மேலே உயர உயர போவது, ஒருநாள் அதலபாதாளத்தில் விழுவதற்க்குதான். அவர்கள் இன்னும் மேலே போக வேண்டும் என எண்ணுகிறேன். அப்படியென்றால்தான் அடி இன்னும் பலமாய் இருக்கும்.

விக்னேஷ்வரி said...

எனக்கும் துக்ளக் இதழ் பிடிக்கும்.

Suresh Ram said...

http://bit.ly/bCLslQ
துக்ளக் சோவுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ்
சனவரி-பிப்ரவரி 2006 'நாளை விடியும்' இதழில் வெளியானது இது:
துக்ளக் சோ-குருமூர்த்தி பிபிசியின் பெயரால் மோசடி

smart said...

ஐயா,
இவ்வளவு நாள் சாமியார் சாமியார் என சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றியதற்காக எல்லா சாமியாரும் போலிச் சாமியார் என சொல்லுகிறார்கள் நாத்திக நண்பர்கள்.

இவ்வளவுநாள் கடவுளில்லை கடவுளில்லை என சொல்லி மக்களை ஏமாற்றி இப்ப மதம் சேர்ந்துள்ள பெரியார்தாசனால் எல்லா நாத்திகர்களையும் போலிகள் என அழைக்கலாமா?
அடுத்த கேள்வி பதிலில் இதற்கு விடைசொல்லுங்கள்
{முடிந்தால் விளக்கமாக ஒரு பதிவு போடுங்கள் }

pichaikaaran said...

பகுத்தறிவு என்றால் என்ன?
உண்மையை தேடி கண்டி பிடிப்பதா? அல்லது, கடவுள் இல்லை அல்லது இருக்கிறார் என , முன்பே முடிவு செய்து கொள்வதா?

வஜ்ரா said...

smart,
டோண்டு அவர்கள் கேள்வி பதில் பகுதியை நிறுத்திவிட்டார்.

பெரியாரிஸ்டுகள் மயான அமைதி காக்கும் போதோ தெரியவில்லையா...விஷயம் அவர்கள் கை மீறிப்போய் விட்டது. இதுக்கெல்லாம் பதிவு போட்டு நம் நேரத்தை நாம் வீணடித்துக்கொள்ளக்கூடாது. தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி தானே.
தள்ளாத வயதில் சிறு பெண்ணை பதிவுத் திருமணம் செய்தார் தலைவர். ஊருக்கெல்லாம் பகுத்தறிவுத் திருமணம் பற்றியும் பொருந்தாத் திருமணத்தைப் பற்றியும் உபதேசித்தவர் கடைசியில் செய்தது அது. அதே போல் ஊருக்கு பகுத்தறிவும் நாத்தீகமும் உபதேசித்துவிட்டு ஒட்டக பிரியாணிக்கும் சுவனத்தில் 72 கன்னிகளுக்கும் ஆசைப்பட்டு "அல்லாவுஅக்குபர்" சொல்லிவிட்டார் அவரது தாசர். லூசுல விடுங்க...தமிழ் நாட்டில் இப்புடிப்பட்ட லூசுத்தனத்துக்குத் தான் பகுத்தறிவுன்னு பேரு.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது