எபிசோட் - 46 (08.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
அசோக் தங்களுடன் வந்து விடுவான் என கற்பனை கோட்டைகள் கட்டுகின்றனர் நாதனும் வசுமதியும். ஆனால் பிரின்சிபாலை பார்த்து விட்டு வருவதாக சொல்லி சென்ற அசோக்குக்கு பதிலாக பிரின்சிபாலே வந்து அசோக் அவர்களுடன் வர இஷ்டப்படவில்லை என்றும், இனிமேல் இது சம்பந்தமாக அவர்கள் அங்கு வரவேண்டாம் என சொல்லச் சொன்னதாக கூறிவிட்டு அப்பால் செல்கின்றார். நாதனும் வசுமதியும் நிராசையில் மூழ்குகின்றனர்.
பர்வதம் வீட்டுக்கு வந்த நாதன் வீட்டு சமையற்கார மாமி உமாவின் கணவருக்கு நாதன் கம்பெனியில் வேலை கிடைத்த முழுபின்புலனை வம்பாக கூறிவிட்டு செல்கிறாள்.
அசோக் வழக்கமாக பிட்சைக்காக போகும் வீட்டு பெண்மணி தனது இரட்டைவட சங்கிலி தொலைந்ததாகவும் அது தொலைந்த நேரத்தில் சரியாக காலை 8 மணிக்கு பிட்சைக்காக வந்த அசோக்தான் அதை எடுத்திருக்க முடியும் என சந்தேகப்படுவதாக கூறுகிறாள். அவள் கணவரோ பதறிப்போய் அசோக்கை அம்மாதிரி சந்தேகப்படுவதே கூட பாவம் என கூறுகிறார். அப்பெண்ணோ கேட்காமல் அசோக்கின் பாடசாலைக்கே கணவரை அழைத்து வருகிறாள். அசோக்கிடம் தனது சங்கிலி தொலைந்தது பற்றி கூற, அவனோ காணாமல் போன பொருளை கண்டுபிடிக்கும் சித்தி தன்னிடம் இல்லை என அமைதியாகக் கூறுகிறான்.
“என்ன சார் சொல்றான் அவன், என்னவோ சித்தி அப்படீன்லாம் பேசறானே” என நண்பர் கேட்க சோ அவரிடம் சித்தர்கள் பற்றி கூறுகிறார். அஷ்டமாசித்தி என எட்டுவகை சித்துகள் பற்றியும் பேசுகிறார். ஆனால் இந்த சித்துக்கள் எல்லாம் ஆண்டவனை அடையும் வழியில் உள்ள படிக்கற்களே எனவும், அதை தாண்டித்தான் அவர்கள் செல்ல வேண்டும், அதன்றி அதிலேயே நேரத்தை செலவழித்து கொண்டிருந்தால் வெறுமனே மேஜிக் செய்து கொண்டுதான் இருக்க வேண்டும் எனக் கூறுகிறார்.
அப்பெண்மணி அசோக்தான் அந்த இரட்டைவட சங்கிலியை எடுத்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை அவனிடமே கூற, அவனோ பதற்றமேயின்றி தான் அதை எடுக்கவில்லை என கூறுகிறான். தான் போலீசுக்கு போவேன் என அவள் மிரட்டியபோது அவ்வாறே செய்யுங்கள், அவர்கள் நகையை கண்டுபிடித்து தருவார்கள் என சின்சியராகவே கூறிவிட்டு தனது வகுப்புக்கு செல்லும் அசோக்கை பார்த்து அவன் ஒரு ஆஷாடபூதி என பொருமுகிறாள் அப்பெண். அவளது கணவனோ அசோக் செய்திருக்கவே முடியாது என சாதிக்கிறான்.
“ஆஷாடபூதி என்றால் போலிச் சாமியார் என்பது எனக்கு தெரியும்” என கூறுகிறார் சோவின் நண்பர். சோவும் இந்த போலிச் சாமியார் அனாதிகாலமாகவே இருந்து வந்திருக்கின்றனர் என்பதை பல சுலோகங்களால் விளக்குகிறார். ஒரு சன்னியாசியின் தோற்றமே மரியாதையை தூண்டுவதாக இருக்க வேண்டும். அதன்றி அவர்கள் ஏமாற்றுவேலையில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கதே என்றும் கூறுகிறார்.
போலீசில் அப்பெண் புகார் தருகிறார். அங்கும் அவள் கணவர் தான் இந்த குற்றச்சாட்டுக்கு துணைபோகவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறார். இருப்பினும் அசோக்கை போலீஸ் ஜீப் வந்து அழைத்து செல்கிறது. பிரின்சிபால் திகைக்கிறார்.
(தேடுவோம்)
எபிசோட் - 47 (09.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
பதறிப்போகும் பிரின்சிபாலிடம் அசோக் தான் போலீஸ் ஸ்டேஷன் போய் அந்த நகையை தான் எடுக்கவில்லை எனக்கூறிவிட்டு வந்து விடுவதாக அமைதியாகக் கூறிவிட்டு போலீஸ் வண்டியேறுகிறான். பிரின்சிபால் நாதனுக்கு ஃபோன் செய்து நடந்ததைக் கூற அவர் பிரின்சிபாலிடம் கோபப்படுகிறார். பிறகு போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார்.
அங்கு விஷயத்தை கேட்டு அறிந்து கொண்ட அவர் நகையின் மதிப்பாக லட்ச ரூபாய் என அப்பெண்மணி கூற, அதற்கான செக் எழுத முயல. அசோக் அவரை தடுத்துவிடுகிறான். அவ்வாறு செய்தால் தான் திருடன் என்பதை அவரே ஒத்து கொண்டதாகி விடும் எனக்கூறி விடுகிறான். பிறகு நாதன் எவ்வளவு கேட்டுக் கொண்டும் அப்பெண்மணி பிடிவாதமாகவே தன்னிலையில் நிற்கிறாள். அவள் கணவர் கூட அவளிடம் கேசை வாபஸ் வாங்குமாறு கெஞ்சிப் பார்க்க அதுவும் பலிக்கவில்லை. பிறகு அவர்களிருவரும் விடைபெற்று செல்கின்றனர்.
இன்ஸ்பெக்டரே நாதனிடம் அவரது வக்கீலுக்கு ஃபோன் செய்து அசோக்கை ஜாமீனில் எடுக்க ஏற்பாடு செய்யுமாறு ஆலோசனை கூற, அவரும் போன் செய்து தனது வக்கீலின் ஜூனியரும், சாம்பு சாஸ்திரியின் மருமகளுமான பிரியா வந்து சேர்கிறாள். இதற்குள் நாதனின் அலுவலகத்தில் பிரச்சினை வர, அவர் கிளம்ப வேண்டியதாகிறது.
பிரியா அசோக்கிடம் தான் பிட்சை கேட்கபோன சமயம் நகை காணாமல் போன சமயமான காலை 8 மணி அல்ல, ஏழரைக்கே அங்கு சென்றதாக எழுதித் தர வேண்டும் என்றும் ஜாமீனை வாங்கி விடலாம் என்றும் இல்லாவிட்டால் சனி ஞாயிறு ஆகிய இரு நாளும் போலீஸ் லாக்கப்பில்தான் கழிக்க வேண்டும் எனக்கூறி மன்றாடுகிறாள். அசோக்கோ கேட்க மாட்டேன் என்கிறான். பொய் உள்ளே வந்தால்தான் தான் வெளியே போக முடியும் என்னும் நிலை வந்தால், பொய் வெளியில் நிற்பதே நலம் என அவன் அழுத்த்ந்திருத்தமாக கூறுகிறான். ஒரு நீண்ட குகைக்குள் அவன் மாட்டியிருப்பதாக அவள் கூற, அவனோ குகையின் அடுத்த முனையில் வெளிச்சம் வரும் என்கிறான். இன்ஸ்பெக்டர் அவன் சிக்கலில் இருப்பதாக கூற அவனோ சத்யமேவ ஜயதே என்கிறான்.
நாதனிடமும் வசுமதியிடமும் நடந்ததை கூறுகிறாள் பிரியா. அசோக் பிடிவாதமாகவே பொய் கூற மறுத்து, லாக்கப்பிலேயே இருக்கப்போவதாக கூறியதை கேட்டு வசுமதி வேதனைப்படுகிறாள். திங்களன்றுகூட ஜாமீன் கிடைப்பதில் சிரமம் என பிரியா கூறுகிறாள். மகாத்மா காந்திக்கு பிறகு உன் பிள்ளைதான் சத்திய சோதனை மேற்கொண்டான் போல என நாதன் வயிற்றெரிச்சலுடன் கூறுகிறார்.
தெருவில் பெருமாளை ஆதிசேஷன் வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு வருகிறார்கள். நகைக்கான புகார் கொடுத்த பெண்மணியும் அவள் கணவரும் பட்டாச்சாரிக்கு அருகில் வந்து சடாரி பெற்று கொள்கின்றனர். அது பற்றி விசாரித்த தனது நண்பரிடம் சோ அவர்கள் சடாரியின் தத்துவத்தை எடுத்துரைக்கிறார். அது நம்மாழ்வாரை குறிக்கிறது என்று விளக்கம் அளித்த கையோடு ஆதிசேஷனையும் குறிப்பிடுவதாகவும் கூறுகிறார். ஆதிசேஷன் பற்றி பொய்கையாழ்வார் அருளின பாசுரத்தையும் கூறுகிறார்.
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம்,
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம்புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு
சடாரி வாங்கிய கையோடு அப்பெண்மணி தன் நகையை அசோக் திருப்பித் தருவானா என கணவரை கேட்க, அவரோ அப்போதும் அசோக் நிரபராதிதான் என்னும் தனது கருத்தை மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறுகிறார். எப்படியும் நகை கிடைக்கும் என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறார். அரவு வாகனத்தில் வீற்றிருக்கும் எம்பெருமானின் திருவுருவம் திரையில் க்ளோசப்பில் காட்டுகிறார்கள்.
(தேடுவோம்)
சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
14 hours ago
8 comments:
இந்த கதையில் வரும் அசோக், அடுத்த நித்தியானந்தாவாக மாறுவானா!?
//வால்பையன் said...
இந்த கதையில் வரும் அசோக், அடுத்த நித்தியானந்தாவாக மாறுவானா!?//
டோண்டு சார்,
வால்பையனுக்கு இருக்கும், அதே சந்தேகம் தான் எனக்கும்.
@வால்பையன் & கோவி. கண்ணன்
முதலில் என் சந்தேகத்துக்கு பதில் சொல்லுங்கள். வால்பையன் கேட்டு ஒரு நிமிடத்துக்குள் அவரை கோட் செய்து அதே சந்தேகத்தை எப்படி கோவி. கண்ணன் இட்டார்? அதுவும் நான் மட்டுறுத்தக்கூட இல்லை?
எதேனும் சேட்டில் பேசி வைத்து கொண்டீர்களா? சும்மா தகவலுக்காகத்தான் கேட்டேன்.
மற்றப்படி உங்கள் கேள்வி பதில் சொல்ல லாயக்கற்றது. இதை நான் கோபத்தில் சொல்லவில்லை. உங்கள் மேல் பரிதாபத்தால்தான் கூறுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
யார் அடுத்த நித்தியானந்தர் என்பது ஊரெங்கும் இருக்கும் கேள்வி!?
உங்கள் ஆசிரமம் பாதுகாப்பா தானே இருக்கு!
@வால்பையன்
வால்பையன் கேட்ட அதே கேள்வியைத் தானும் கேட்பதாக கோவி கண்ணன் எப்படி எழுத முடிந்தது என்பதே எனது கேள்வி.
நான் சொன்னது போல நீங்கள் இருவரும் முதலிலேயே சேட் செய்து கொண்டீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
பல பக்கம் இதே கேள்வியை தான் கேட்டு கொண்டிருக்கிறோம்!
@வால்பையன்
ஓக்கே, புரிகிறது. இதே போல முதலில் நீங்கள் கேட்க, அடுத்த நிமிடத்துக்குள் உங்களை கோட் செய்து அவர் கேட்க, இப்படி எல்லா பதிவுகளிலும் விஸ்வநாதன் ராமமூர்த்தி போல செல்கிறீர்கள் என நினைக்கிறேன்.
ஜாக்கிரதை, நீங்கள் கேள்வி கேட்பதற்கு முன்னமேயே அவர் உங்களை கோட் செய்ய, நீங்கள் அந்த குறிப்பிட்ட பதிவரை கேள்வி கேட்பதில் மேலும் தாமதம் ஏற்பட, இதுவே பெரும் தமாஷாகப் போகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
from Tamilish Support
reply-to support@tamilish.com
to raghtransint@gmail.com
date Wed, Mar 10, 2010 at 4:51 PM
subject Made Popular : சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 46 & ௪௭)
mailed-by u15347499.onlinehome-server.com
hide details 4:51 PM (13 minutes ago)
Hi Dondu,
Congrats!
Your story titled 'சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 46 & ௪௭)' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 10th March 2010 11:21:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/200851
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
மிக்க நன்றி, தமிழிஸ்
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment