கேரள தொழிலாளர்களை பிச்சைக்காரர்கள் ரேஞ்சுக்கு கொண்டு சென்ற இடதுசாரி இயக்கம் பற்றி நான் இட்ட பதிவு ரொம்பவும் சுட்டு விட்டது போலிருக்கிறது. எண்ணையில் பொரித்த அப்பமாக வினவு துடிக்கிறார். அதில் வரும் ஒரு பின்னூட்டத்தில் தான் பாண்டி என்பதை அறிந்து அடாவடி செய்த போர்ட்டர்களை பற்றி கூற, இன்னொருவர் உடனே திருத்துகிறார். அதாகப்பட்டது கேரள மக்களிடமும் அவ்வாறே நடந்து கொள்வார்களாம். ஆனால் இந்த கேவலமான சிஸ்டம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாதுதானே. இந்த சுயமரியாதையற்ற நிலைக்கு சப்பைகட்டு கட்டும் இப்பதிவுக்கு ஒரு மனநல மருத்துவர் வேறு சான்றிதழ் தருகிறார். வேலை செய்யாது சம்பாதிக்க நினைப்பதற்கு மருத்துவரீதியாக ஒரு பெயர் இருக்குமே? அது என்ன என்பதை அறிவாரா அவர்? அல்லது பரீட்சையில் அக்கேள்வியை விடை தெரியாமல் சாய்சில் விட்டு விட்டாரா?
என்ன துடித்தென்ன வினவு? உண்மையை மறைக்க முடியுமா? பஸ்ஸிலிருந்து இறங்கும் ஒருவன் கையில் ஒரே ஒரு ப்ரீஃப் கேஸ் இருக்கிறது. அவன் தானே அதை சுமந்து செல்ல முயல்கிறான். கேரளாவாக இருந்தால் உடனே ஒரு அடாவடி கும்பல் போர்ட்டர் ரூபத்தில் வந்து போர்ட்டர் வைத்துத்தான் அந்த ப்ரீஃப் கேசை எடுத்து செல்ல வேண்டும் என கேட்கிறது. அப்படியே இவன் தானே எடுத்து சென்றாலும் கவலையில்லை அதற்காக சங்கம் நிறுவியுள்ள அடாவடி கூலியை கொடுத்து போ என்று கூறுகிறது. இதற்கு என்ன பெயர்? பேசாமல் ஐயா பசியாக இருக்கிறது, சோறு போடுங்கள் என்றே கேட்கலாமே. அவ்வளவு சுயமரியாதையற்றவர்களாக ஆக்கி வைத்தவர்களை வையாமல் வாழ்த்துவார்களாமா?
இதற்கு தலைக்கூலி அல்லது அட்டிமறி என பெயர் கொடுத்து ஞானஸ்நானமே செய்திருக்கிறார்கள் கம்யூனிஸ்டு பெரியவர்கள். ஐயா, சாதாரணமாக குழந்தைக்கு பெயர் வைத்தால் மூன்று பெயர்களாவது வைக்க வேண்டும். நான் சஜஸ்ட் செய்யும் பெயர் மூன்றாம் பிச்சைக்காரத்தனம். என்ன வினவு ஓக்கேவா? வினவின் துரதிர்ஷ்டம் என்னுடைய இந்த பார்வைகோணத்தை ஏற்ற மற்றொருவர் ஜெயமோகன். வேறு யாராவது பார்ப்பன பதிவராக இருந்தால் பார்ப்பனர்களின் திமிர் என்றும் போட்டு கொள்வாராக இருக்கும். ஐயோ பாவம் வினவு. Better luck next time!!!
நோக்குக்கூலியையும் நியாயப்படுத்துகிறார் வினவு. எந்த வேலைக்கு எந்த கருவி தேவையோ அதைத்தான் உபயோகிப்பார்கள். ஏன், அவ்வாறு பெறும் தண்ட சம்பளத்துக்கு வேறு ஏதேனும் துணை வேலைகளை செய்யலாமே. இயந்திரம் வைக்கும் இடங்களை சுத்தம் செய்யலாமே? மாட்டார்கள். வெறுமனே சோற்று மூட்டையை கொண்டுவந்து வேடிக்கை பார்க்கவே விரும்புவார்கள். கேட்கவே அருவெறுப்பாக இல்லை? அதுதான் இடது சாரி இயக்கம் சொல்லித் தந்த விஷயம்.
வளைகுடா பகுதிகளுக்கு போன கேரள சகோதரர்களே கூட தாங்கள் சம்பாதித்த பணத்தை நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களாகத்தான் வாங்குகின்றனர். ஏதேனும் தொழிலில் போட்டால் கூட அதை நிச்சயமாக கேரளாவில் செய்ய மாட்டார்கள். சராசரி கேரள தொழிலாளியின் இந்த மனப்பாங்கை மற்ற எல்லோரையும் விட அவர்களே அதிகம் அறிவார்கள்.
இந்த உலகில் இலவச சாப்பாடு என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றுக்கும் விலை உண்டு. அப்படி போடும் ஓசி சாப்பாட்டுக்கும் பெரிய விலையையே கேரளா தருகிறது. அங்கு தொழில் துவங்காது வேறு இடங்களுக்கு செல்லும் வேலைகளால் வரும் இழப்பை அறியும் கற்பனை அங்கு இல்லை. அப்படியே கற்பனை செய்ய முடிந்தவர்கள் இத்தனை காலத்துக்கு கேரளாவை விட்டு வெளியே சென்றிருப்பார்கள்.
கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து தொழிற்சாலைகள் ஓட்டம் எடுப்பதேன்? இரண்டிலும்தான் கம்யூனிஸ்டு மேட்டிமை இருப்பது வெறும் தற்செயலான நிகழ்ச்சிதானா? இதில் என்ன ஆச்சரியம் என்றால் கம்யூனிஸ்டுகளால் ஆளப்பட்ட தேசங்களில் தொழிலாளர்கள் நிலைமை பரிதாபத்துக்குரியதாகவே இருந்து வந்திருக்கிறது. ஸ்ட்ரைக் செய்யும் உரிமை அவர்களுக்கு இருந்ததே இல்லை. Ayn Rand-ன் Atlas shrugged என்னும் புதினத்தில் கற்பனையாக அந்த நாவலாசிரியை சித்தரித்த அபத்தங்களெல்லாம் கம்யூனிச நாடுகளில் நிஜமாகவே நடந்தன. அதன் மரண காலத்தில் சோவியத் யூனியனில் வேலைக்கு வரும் முக்கால்வாசி தொழிலாளிகள் ஃபுல்லாக வோட்கா போட்டுவிட்டே வேலைக்கு வருவார்கள். மேனேஜர்களால் ஒன்றும் செய்ய முடியாது. சம்பளம் மட்டும் தர வேண்டும். அதே நோக்குக்கூலி விஷயத்தின் இன்னொரு வெர்ஷன். அதே நிலைமை மற்ற கம்யூனிஸ்டு நாடுகளிலும் இருந்தது.
அதனாலேயே எண்பதுகளின் இறுதியில் ஒவ்வொரு கம்யூனிஸ்டு அரசாக விழுந்தது. அதற்கப்புறம் இரண்டு ஆண்டுகளிலேயே சோவியத் யூனியனே உலக வரைபடத்திலிருந்து மறைந்தது. இருந்தாலும் நம்ம உள்ளூர் கம்யூனிஸ்டுகளின் சவடால்கள் அடங்கவில்லை என்ன செய்வது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
11 hours ago
69 comments:
டோண்டு ,லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் டாக்டர் அய்யாவும்,அவிங்க சம்சாரமும் நக்சல் பசங்களுக்கு விளக்கு பிடிக்கும் வேலையை செய்து வருவது எதனால்?ஒரு வித பயமா அல்லது கிறுக்கு புத்தியா?
டோண்டு சார்,
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் என் நண்பரின் திருமணத்திற்காக கேரளா சென்றிருந்தேன். அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் இளநீர் பறிக்க ஏறினேன். எங்கிருந்தோ வந்த கம்முனி-ஸ்டுகள் நான் இறங்கும் வரை பிராக்குப் பார்த்து விட்டு பின்னர் ஒரு இளநீருக்கு 6 ருபாய் என்ற வீதத்தில் பிச்சை வாங்கிச் சென்றதை இங்கே பதிவு செய்கிறேன். சார், இனிமே வினவைஎல்லாம் ஒரு ஆளா மதிச்சு பதில் போடாதீங்க.
டோண்டு அய்யா,கார்ல் மார்க்ஸ் அய்யா உயிருடன் வந்து "எங்கே கம்யூனிஸ்ட்" என்று தேடினால் ப்ரகாஷ் கராத்தை தேர்ந்தெடுப்பாரா அல்லது கிஷ்ன்ஜி,வினவு, போன்றவர்களை அடையாளம் காட்டுவாரா?
நான் வினவின் பதிவைப் படித்தேன். context புரியவில்லை.
இப்பதிவை படித்தேன்.
இங்கு சொல்லப்பட்டவைபற்றி.
தமிழ்நாட்டில் பலவூர்களில், பேருந்து நிலையங்களில் உங்கள் பெட்டியை நீங்கள் தூக்கிச்செல்லவிட மாட்டார்கள். If you arrive by a long distance bus. பேருந்து நடத்துனரே ஏன் அவர்களிடம் சண்டை போடுகிறீர்கள்?அவர்கள் சுமை தூக்கித்தான் பிழைக்கமுடியும் என்பார்கள்.
இரயில்வே நிலையங்களில் பயணிகளிடம் இல்லாவிட்டாலும், குட்ஸ் ஷெட், பார்சல் அறைகளில் இவ்வழக்கம் உண்டு.
கேரளாவில் இது well organised. That is all.
என்ன டோண்டு சார் சில்லரைத்தனமா பேசரீங்க அவங்களெல்லாம் போலி கம்யூனிஸ்டுகள் அதான் நொருங்கிவிட்டார்கள் நம்ம தமிழ்நாட்டிலுள்ளவர்களெல்லாம்தான் உண்மையான கம்யூனிஸ்டுகள்(?) என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
//கேரளாவில் இது well organised. That is all.//
இங்கும் அவ்வாறு செய்வது ஒரு இடதுசாரி யூனியனாகத்தான் இருக்கும். எது எப்படியானாலும் நீங்கள் சொல்வதை இப்படி புரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் இந்த பிச்சைக்காரத்தனம் கேரளாவில் உல்ளது போல நிறுவனப்படுத்தவில்லை என்பதுதானே.
வெளி ஆளை கூலிக்கு அழைத்து வரக்கூடாது என்பதை கூட புரிந்து கொள்ளலாம். ஆளே வேண்டாம் என இருப்போரிடம் யார் இவ்வாறு நடந்து கொண்டாலும் அது அடாவடியே. இதை அதிகாரப் பிச்சை என்றும் அழைக்கலாம். என்ன, கேரளாவில் நீங்களே உங்கள் சுமையைத் தூக்கினாலும் துட்டு என்னவோ அழவேண்டியதுதானா? இது தமிழகத்திலும் வந்து விட்டது என்கிறீர்களா? உழைக்காமல் பிச்சை எடுக்கும்/திருடும் சோறு எப்படி ஒட்டும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//வளைகுடா பகுதிகளுக்கு போன கேரள சகோதரர்களே கூட தாங்கள் சம்பாதித்த பணத்தை நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களாகத்தான் வாங்குகின்றனர். ஏதேனும் தொழிலில் போட்டால் கூட அதை நிச்சயமாக கேரளாவில் செய்ய மாட்டார்கள். சராசரி கேரள தொழிலாளியின் இந்த மனப்பாங்கை மற்ற எல்லோரையும் விட அவர்களே அதிகம் அறிவார்கள்.//
பெரிய ஆராய்ச்சியே செஞ்சிருப்பிங்க போல! விஜகாந்த் மாதிரி கொஞ்சம் புள்ளிவிபரமும் கொடுத்திருந்தா எல்லாரும் தெரிஞ்சிகுவோம்!
//அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் இளநீர் பறிக்க ஏறினேன். எங்கிருந்தோ வந்த கம்முனி-ஸ்டுகள் நான் இறங்கும் வரை பிராக்குப் பார்த்து விட்டு பின்னர் ஒரு இளநீருக்கு 6 ருபாய் என்ற வீதத்தில் பிச்சை வாங்கிச் சென்றதை இங்கே பதிவு செய்கிறேன்.//
அவர்கள் வீட்டு தோட்டட்தில் பறித்ததற்காக இருக்காது! நல்லா பாருங்க வேற தோட்டத்துல ஏறியிருப்பிங்க, நியாயமா உங்க மேல திருட்டு கேஸ் போட்ருக்கனும்!
//உழைக்காமல் பிச்சை எடுக்கும்/திருடும் சோறு எப்படி ஒட்டும்?//
டோண்டு அய்யா,
எப்படி ஒட்டுமா?கேள்விக்குறி,கலகம்,ஏகலைவன்,வெளியே மிதக்கும் அய்யா,ஏழரை,நான் மணி போன்ற வினவு கும்பல் மாவோயிஸ்டுக்களைப் பாருங்க.ஒவ்வொருத்தனுக்கும் தமிழக போலீஸ் தொப்பையை விட பெரிய தொப்பை இருக்கும்.இவனுங்களுக்கெல்லாம் ஒட்டவில்லையா என்ன?
இவ்வளவு ஏன்,இவனுகளோட கடவுள் ஸ்டாலினுகே சூப்பரா தொப்பை ஒட்டியதே.ஸ்டாலின் எங்கேயாவது,என்னிக்காவது உழைத்திருப்பதா கேள்விப்பட்டதுண்டா?என்னிக்காவது ரயில்வே ஸ்டேஷனில் பொட்டி தூக்கியிருப்பாரா,கேரளாவில் ஓட்டலில் சர்வர் வேலை பார்த்திருப்பாரா?
பாலா
@வால்பையன்
கைப்பூணுக்கு கண்ணாடி ஏன் வால்பையன்? நீங்கள் கேரளாக்காரராக இருந்து கல்ஃபில் சம்பாதித்தால் அதை வைத்து கேரளாவில் திஒழில் தொடங்குவீர்களா என்பதை உங்களியே கேட்டு கொள்ளுங்களேன். விடை தானாக கிடைக்கும்.
உண்மை கூறப்போனால் இதை என்னிடம் சொன்னதே எனது சக இஞ்சினியர் மலையாளக்காரரே. அவர் கல்ஃபிலிருந்து திரும்பியதும் இண்டஸ்ட்ரி ஆரம்பிப்பது பற்றி பேச்சு வந்தபோது கேரளம், மேற்கு வங்கம் தவிர்த்து எங்கு வேண்டுமானாலும் அதை செய்யலாம் என்றார் அவர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//உண்மை கூறப்போனால் இதை என்னிடம் சொன்னதே எனது சக இஞ்சினியர் மலையாளக்காரரே. //
ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்கள் போல!
//அவர் கல்ஃபிலிருந்து திரும்பியதும் இண்டஸ்ட்ரி ஆரம்பிப்பது பற்றி பேச்சு வந்தபோது கேரளம், மேற்கு வங்கம் தவிர்த்து எங்கு வேண்டுமானாலும் அதை செய்யலாம் என்றார் அவர்.//
தேவை இருக்கும் இடத்தில் அவர் ஆரம்பிக்கும் நோக்கத்தில் இருந்திருப்பார், கொல்லன் தெருவில் ஊசி விற்க ஆசைபடுவார்களா என்ன!?
நான் வினவின் பதிவை முழுதும் படிக்க வில்லை.
ஜெயமோகன் பதிவில் நான் சொன்னதை தான் இங்கும் சொல்ல விரும்புகிறேன்.
தமிழ்நாட்டிலும் (சென்னையில் உள்ளதா என்று தெரிய வில்லை), பேருந்திலோ அல்லது லாரியிலோ பயனியாகியா நாம் சாமன்களை ஏற்றவோ இறக்கவோ முடியாது. மதுரை, நெல்லை, நாஞ்சிலில் உண்டு. சுமை தூக்கும் தொழிலார்கள் சங்க உறுப்பினர்கள் நம்மை அனுமதிக்க மாட்டார்கள்.அவர்கள் மூலம் தான் இறக்க வேண்டும், கூலி கொடுக்க வேண்டும்.
லாரியில் வீட்டு சாமான்களை அல்லது வணிக சாமான்களை சென்னையில் இருந்து மதுரைக்கோ, கோவில்பட்டிக்கோ, நெல்லைக்கோ நீங்கள் கொண்டு சென்றால், அங்கே நீங்கள் இறக்க முடியாது, நீங்கள் சென்னையில் இருந்தும் சுமை தூக்குபவர்களை கூட்டி கொண்டு செல்ல முடியாது. அந்த ஊர் சுமை தூக்கும் தொழிலார்களை தான் பயன் படுத்தி கொள்ள வேண்டும். அதிலும் காவல் நிலையங்கள் போல ஏரியா வரைமுறை உண்டு.
எனது கருத்து, இந்த தொழிலார்களின் போக்கிற்கு கம்முனிச கட்சிகளை மட்டும் குறை கூற முடியாது., கழக ஆட்சிகளையும் குறை சொல்ல வேண்டும்.
உணவு விடுதிகளில் (காளியாகுடி, ரத்னா பவன், சிம்ரன் ஆப்ப கடை, ) இன்னொரு சுவையான வியப்பு மிக்க சம்பவம் நான் பார்த்து இருக்கிறேன் (வர்க்க பேதங்கள்) . அங்கே சப்ளையர் என்ற ஒரு பிரிவினர் உண்டு. வாட்டர் பாய் என்ற ஒரு வகை உண்டு. தெரியாதனமாக வாட்டர் பாய், கொளம்போ சட்னியோ பரிமாறி விட்டால், அவ்வளவு தான் சப்ளையர் அந்த கணமே வாட்டர் பாய் களை உண்டு , இல்லை என்று திட்டி விடுவார், பார்த்து இருக்கிறீர்களா.
வர்க்க பேதங்களை பற்றி நாம் பேசுகிறோம், இதே போலவே திரை உலகில், இயக்குனருக்கும், உதவி இயக்குனர்களுக்கும் இடையே உள்ள வர்க்க பேதம், பின்னணி பாடகருக்கும், கோரஸ் பாடுபவர்களுக்கும் இடையே உள்ள வர்க்க பேதம்.
\\அவர்கள் வீட்டு தோட்டட்தில் பறித்ததற்காக இருக்காது! நல்லா பாருங்க வேற தோட்டத்துல ஏறியிருப்பிங்க, நியாயமா உங்க மேல திருட்டு கேஸ் போட்ருக்கனும்!//
வால் சார், நல்லாவே சோக் அடிக்கிறீங்க. கம்முனி-ச்டுங்க சொன்ன காரணம் - இது எங்க வேலை. அத நீங்களே செஞ்சிருந்தாலும் எங்களுக்குக் காசு குடுத்தாகணும். இல்லன்னா பஞ்சாயத்துதான் என்று பயமுருத்தினார்கள். பொதுவாகவே பிச்சைக் காரர்களிடம் இளகிய மனம் கொண்ட நான் இந்த அடாவடிப் பிச்சைக் காரர்களிடமும் காண்பித்தேன். அப்புறம் வால் சார், அதென்ன ஒவ்வொரு வரிக்கும் ஒரு ஆச்சர்யக் குறி? படிக்கும்போது எரிச்சலா இருக்கு. முக்கியமா உங்க பதிவப் படிக்கும்போது சுவாரஸ்யம் குறையுது. ஏதாவது செய்யுங்க சார்.
//அதென்ன ஒவ்வொரு வரிக்கும் ஒரு ஆச்சர்யக் குறி? படிக்கும்போது எரிச்சலா இருக்கு.//
எனக்கு ஆச்சர்யம் ஏற்படும் போதெல்லாம் ஆச்சர்யகுறி போட்டு பழக்கமாயிருச்சு! உங்க எரிச்சல் கூட எனக்கு ஆச்சர்யம் தான்!
//கம்முனி-ச்டுங்க சொன்ன காரணம் - இது எங்க வேலை. அத நீங்களே செஞ்சிருந்தாலும் எங்களுக்குக் காசு குடுத்தாகணும். இல்லன்னா பஞ்சாயத்துதான் என்று பயமுருத்தினார்கள். //
இது என்னவோ கேனதனமா தான் இருக்கு!
எவனுமே வூட்ல சமைக்ககூடாது, சமைக்கிறது எங்க வேலைன்னு ஹோட்டல்காரங்க எல்லாம் கொடி பிடிக்க போறாங்க!
எம்.ஜி.சுரேஸின் அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேனீரும் நாவலில் எதிர்கால கம்யூனிஸம் என்னவாக அமையலாம் என ஒரு தொகுப்பு உண்டு, முடிந்தால் படித்து சிரியுங்கள்!
This article in BBC talks clearly about the violent trade unions in Kerala....
http://news.bbc.co.uk/2/hi/south_asia/8546952.stm
Well, i believe it is true.
sorry for not typing in Tamil.
டோண்டு சார். நீங்க சொல்வது நூத்துக்கு ஆயிரம் மடங்கு சரியானதே. கேரளாவில் சொந்த மாநிலத்துக் காரணே தொழில் துவங்குவதில்லை. சேட்டன்கள் சாயாக்கடையைக் கூட தமிழகத்தில் தான் துடங்குகிறார்கள்.
அவ்வளவு ஏன் சார்? மம்முட்டியே துபாய்ல தான் ஸ்டார் ஹோட்டல் தொடங்கிருக்காரு. ஏன் அதை கேரளத்தில தொடங்கி அங்க இருக்கிற அடாவடி பிச்சைக்காரனுக்கு வேலை கொடுக்கலாமே! முடியாது என்று அவர்களுக்குத் தெரியும்.
அடித்துப் பிடுங்குவதற்குப் பெயர் கம்யூனிசம் என்றாகிவிட்டது என்று மம்முட்டிக்கும் தெரிந்திருக்கிறது. அவர் ஒன்றே சாட்சி. இருபது வருடங்கள் முன்னால் மோகன்லால் நடித்த ஒரு மலையாளப் படம் பெரும் வெற்றி பெற்றது. பெயர் நினைவில்லை.
அந்தப் படத்தில் மோகன்லால் வளைகுடாவிலிருந்து சம்பாதித்து அந்தப் பணத்தில் கேரளாவில் ஒரு பஸ் வாங்கி டிராவல்ஸ் கம்பெனி நடத்துவார். வேலை துவங்கிய நாள் முதல் சின்னச் சின்ன காரணங்களுக்காக சச்சரவுகளும், சமரங்களையும், அரசியல் ரீதியான பிரச்சனையும் பின் அதே அடிதடியில் முடியும் நிலையும் உண்டாகும். பின்னர் இந்த ஊரே வேண்டாம், இங்கே யாரையும் பிழைக்க விட மாட்டீர்கள் என்று சொல்லி மீண்டும் வளைகுடாவுக்கே போய்விடுவார்.
சென்னையில் கூட ஆட்டோக்காரர்கள் ஆட்டோ ஸ்டாண்டில் சும்மாவாவது உட்கார்ந்தே இருப்பார்கள். ஆனால் ஞாயமான ரேட்டுக்கு வண்டியை நகர்த்த மாட்டார்கள். பகல் கொள்ளைக்காரர்களுக்கு கம்யூனிஸ்டுகள்ன்னு பேரு. என்ன செய்வது. தலை விதி.
//பகல் கொள்ளைக்காரர்களுக்கு கம்யூனிஸ்டுகள்ன்னு பேரு. என்ன செய்வது. தலை விதி. //
காவி உடுத்தி ஆசிரமத்திலும், பூனூல் போட்டு கோவிலிலும் கொள்ளை அடிப்பவர்களுக்கு என்ன பேருண்ணே!?
ஹேராம் அண்ணனுக்கு நான் கேட்ட பதில் பின்னூட்டம் காணாமே!?
வெளிய போயிட்டிங்களா?
கேரளா கம்யுனிஸ்டு எல்லாம் கம்யுனிஸ்டு இல்ல, நாங்க தான் மெய்யாலுமே கம்யுனிஸ்டுன்னு மாரடிச்ச வினவுக்கு புத்தி பேதலிச்சுப் போச்சோ? அந்த ஸ்டாலின் ஆவி வந்துதான் காப்பாத்தணும்.
வால் சார், உங்க ஆச்சர்யக் குறியெல்லாம் சரிதான். ஆனா எதுவுமே அளவோட இருக்கணும்னு தான் என்னோட ஆசை.
\\இது என்னவோ கேனதனமா தான் இருக்கு!//
இந்தக் கேணத்தனத்த கேப்மாறித் தனம்னும சொல்லுவாங்க வால் சார். உண்டியல் குலுக்கின காசுல பீடி சிகரெட் பிடிக்கிறாங்களா இல்லையான்னு மருதையன் கோஷ்டி கிட்ட கேளுங்க, பதில் வராது. பண்றது மொள்ளமாறித் தனம், பேச வந்துட்டானுங்க.
you got 16+ votes in tamilish and no negative votes. :)))
பாராட்டத்தகுந்த பதிவு.
வினவு என்ற பெயரில் எழுதும் கும்பலுக்கு அடிப்படை நேர்மையே கிடையாது. எதிரில் வாதம் புரிபவர் சொல்வதை திரிப்பது, வாதம் புரியவே முடியவில்லை என்றால் பார்ப்பனன் என்று திட்டுவது (அதுவும் இவர்களே பிராம்மணர்களாக இருந்துகொண்டு), இந்திய தலைவர்களை மாமா விபச்சாரி என்று அவதூறு செய்து பாலுறவு தொழிலாளர்களை கேவலப்படுத்துவது, ஆண் அரசியல்வாதிகளை பொட்டை, பேடி என்று திட்டுவது, இவர்களை யாரேனும் எதிர்த்து திட்டிவிட்டால் நாகரிகம் இல்லை என்று சொல்வது ஆகிய அனைத்தும் கொண்ட வக்கிர பிரகிருதிகள்.
என்னுடன் கம்யூனிஸம் பற்றி விவாதம் செய்து தோற்றதும் என்னை அவதூறு செய்ததைத்தான் பார்த்திருப்பீர்களே.
நேற்றுவரை இந்துமதத்தை அவதூறு செய்துவந்த பிரசண்டா என்ற நேபாள மாவோயிஸ்டை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். தனக்கு ஜனாதிபதி பதவி வேண்டும் என்று ஜோசியர் சொன்னதற்காக இன்று எருமை பூஜை செய்கிறார் இந்த பிரசண்டா. பேச்சு மூச்சையே காணவில்லை இவர்களிடம்.
இவர்கள் இந்திய மக்களின் துரோகிகள். முன்பு கம்யூனிஸ்டுகளாக இருந்த சிபிஐ சிபிஎம் ஆகியவைகளின் முகமூடி வெளுத்ததும், இன்று அதே கும்பல், அவன் அயோக்கியன், நான் தான் உண்மையான கம்யுனிஸ்டு என்று புது வேஷம் போட்டு ஆடுகிறது. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை இந்த பதிவில் நன்றாக விளக்கி விட்டீர்கள்.
நன்றி
Dear Dondu Sir,
I like keralite people. But I have nt pass through any of these experience. They are quite good in nature, when compared to Tamils. But if things are happening as you mentioned in this article, its pathetic and it is far most worst than begging for food. What can we say?
But one thing is sure.. Kerala & WB - Both states are not properly developed and state Govt wont take any step in developing.
Dear Dondu sir,
I don't know about keralite. But the way Vinavu handled to write against individual person is strictly nuisance.
According to the Tamilmanam Policy they said individual and indecent post are not allowed in their aggregator. Now it sounds nothing.
///காவி உடுத்தி ஆசிரமத்திலும், பூனூல் போட்டு கோவிலிலும் கொள்ளை அடிப்பவர்களுக்கு என்ன பேருண்ணே!?//
வினவுக் கூட்டத்தினர் வால்பையனைப் பாராட்டி இவர் நம்ம ஆளுன்னு சொன்னவுடனே வால் செல்லத்திற்கு மண்டை கிறுகிறுத்து விட்டது. அதனால் தான் வினவு போலவே பழக்கதோஷம் தொற்றிக்கொண்டு நேர்மையாக விவாதிக்காமல் உடனே மதம், ஜாதின்னு ப்ளேட்டை மாற்றுகிறார். சாமியார்கள் கோவில் பூசாரிகள் பற்றி நீங்களே முடிவு செய்யுங்கள். உங்கள் தினசரி வேலையே அதுதானே. ஆனால் கம்யூனிசம் என்ற பெயரில் ரவுடித்தனத்தனம் நடக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள ஏன் மனம் வரவில்லை. ஒரு பூசாரியாவது குறைந்த பட்சம் சொல்லும் மந்திரத்திற்கும், செய்யும் அர்ச்சனைக்கும் காசு வாங்கிக்கொள்கிறான். நீயே மந்திரம் சொல்லி நீயே அர்ச்சனை பண்ணிக்கோ, எனக்கு தட்டுல காசு போட்டுட்டு போய்டுன்னு சொன்னா விடுவார்களா யாராவது? ஆனால் அந்த கேவலம் தான் கம்யூனிஸம் என்ற பெயரில் நடக்கிறது.
சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் போட்டர்கள் படுத்தும் பாடு சொல்லி மாளாது. ஐந்தாறு பெட்டி தூக்க பத்துபேர் ஒன்றாக வந்துவிடுவார்கள். ஆயிரம் கொடு என்பார்கள். அவர்களுடன் சண்டைபோட்டு 200 அல்லது 300 க்கு ஒத்துக்கொள்ள வைத்தாலும் அந்த பத்துபேரும் ஐந்து பெட்டியை இரண்டு பேருக்கு ஒன்றாகப் பிடித்துக் கொள்வார்கள். எல்லோரும் பணத்தைப் பங்கு போட்டுக் கொள்வார்கள். ஒரே பை தான் என்றாலும் வேண்டுமென்றே பத்து பேர் கூட்டமாக வந்து பத்து பேருக்கும் காசு கொடு என்பதே இவர்கள் கோரிக்கை. இதற்கு டோண்டு சார் சொன்ன பெயர் தான் கொடுக்க முடியும்.
டோண்டு சார், எனக்கொரு சந்தேகம்..இந்தக் கேள்வியை கேள்விபதில் பகுதிக்கு எடுத்துச் சென்றாலும் சரி அல்லது இங்கேயே கூட பதில் சொன்னாலும் சரி. இந்தப் பதிவுக்குச் சம்பந்தம் இல்லை அதனால் சொல்கிறேன்.
நாம் வேறு நபர்களின் வலைதள முகவரியை சில விஷயங்களை மேற்கோள் காட்ட நம் தளத்தில் ஹைபர் லிங்க் மூலம் குறிப்பிடுவோம். அதைத் தொடுபவர்கள் நாம் குறிப்பிடும் வேறு தளத்திற்கு அழைத்துச்செல்லப் படுவார்கள். ஒரு வேளை அந்த நபரின் தளம் வைரஸால் பாதிக்கப்பட்டால், ஹைபர் லிங்க் மூலம் அவரது தள முகவரியை நம் தளத்தில் வெளியிட்டதற்காக நம் தளமும் பாதிக்கப்படுமா? ப்ளாக்கரால் நம் தளம் முடக்கப் படுமா? விளக்குங்களேன் ப்ளீஸ்.
//வினவுக் கூட்டத்தினர் வால்பையனைப் பாராட்டி இவர் நம்ம ஆளுன்னு சொன்னவுடனே வால் செல்லத்திற்கு மண்டை கிறுகிறுத்து விட்டது. //
இது என்ன புதுக்கதையா இருக்கு!?
அவுங்க ஏன் என்னை பாராட்டனும், நான் கம்யூனிஸ்டும் அல்ல, பெரியாரிஷ்டும் அல்ல, மாவோயிஸ்டும் அல்ல பிறகு என்னை ஏன் பாராட்டனும்!
ஒருவேளை உங்களுக்கு வைக்கும் ஆப்பு பிடித்து போய் பாராட்டியிருப்பார்கள்!,
கம்யூனிஷம், எப்படி ஒரு இஷமோ அதோ போல் தான் இந்துயிஷமும், நீங்க மெத்த படித்தவரு, எல்லா வேதத்தையும் கரைச்சு குடிச்சவரு, திருட்டுபயலுககளுக்கு பேரு கம்யீனிஷ்டுன்னு திருவாய் மொழிஞ்சிங்க, அதான் இந்த பிராடுபயலுகளுக்கு என்ன பேருன்னு உங்ககிட்ட கேட்டேன்!
//ஒரு பூசாரியாவது குறைந்த பட்சம் சொல்லும் மந்திரத்திற்கும், //
அந்த மந்திரத்துல ஒரே ஒரு பூசனிக்காய் வர வழைச்சிருங்க, அடுத்து உங்களூக்கு ஆசிரமம் ஆரம்பிச்சிரலாம்!
ஒன்னு மட்டும் உறுதியா சொல்லிகிறேன்!
கம்யூனிஷ்ட் நம்பர் டூ டுபாக்கூர்
நீங்க நம்பர் ஒன் டுபாக்கூர்!
நீங்க தான் நம்பர் ஒன்!
ஓட்டல் சர்வரிடம் என்ன இருக்கு? அப்படின்னு கேக்கறது தப்பா?!
ஹேராம் கடைசியாகக் கேட்டிருந்த டெக்னிகல் சந்தேகத்திற்கு........
கூகிள் வைரஸ்,ட்ரோஜன், குக்கீஸ் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. மால்வேர் எனப்படும் சில நிரல்களைத் தள்ளும் தளங்கள், ஒரு பதிவில் லிங்காக இருந்தால்,அதைக் கவனிக்கிறது. அதை ஒரு கட்டத்தில் பார்க்க முடியாதபடி தடை செய்து விடுகிறது.
பதிவர் உண்மைத் தமிழன், நிலாரசிகன் உட்பட இருபது பேர்களுடைய வலைப் பதிவுகள் சமீபத்தில் இப்படிக் காணாமல் போயின. கொஞ்சம் போராடி, அவரவர்கள் தங்களுடைய பதிவுகளை மீட்டுக் கொண்டார்கள்.
அப்போது கூகிள் எச்சரிக்கைச் செய்தியாக வந்ததில், தமிலிஷ் திரட்டியுமே ஒரு காரணமாகச் சொல்லப் பட்டிருந்தது, ஆனால் தமிலிஷ் தளத்தை இந்த மால்வேர்களைப் பரப்பும் தளம் இல்லை என்ற செய்தியும் உடனேயே வந்தது.
இலவசமாகக் கிடைக்கிற ஏகப்பட்ட விட்ஜெட்டுக்கள்,ஸ்டாட் கவுண்டர்கள் எல்லாவற்றையும் வளைத்துப் போட்டுக் கொள்ளும் இயல்பு, இந்த மாதிரி மால்வேர்களை நாமே அழைத்து வந்து நம்முடைய வலைப்பதிவில் உட்காரவைத்து விடுகிறோம்.
இதைச் சோதித்துப் பார்க்க ஒரு எளிய வழியும் இருக்கிறது.
Google Accounts-->Web Masters Tools-->Labs-->Malware details என்று கொடுத்துப் பாருங்கள். மால்வேர் எதுவும் உங்கள் தளத்தில் இருக்கிறதா, இல்லையா என்ற விவரம் கிடைக்கும்.
உங்கள் பதிவுகளைப் பொக்கிஷமாக நினைத்தால், வாரம் ஒரு முறையோ, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையோ, blogger tools ஐ உபயோகித்தே பாக் அப் செய்து வைத்துக் கொள்வது, உத்தமமான வழி!
when i bought pineapple in guruvayur,i asked him to peel of the skin from the shopkeeper.He said,"you will have to pay labour charges addtionally with the fruit cost. I HAVE NO WORD TO SPEAK. Here in Tamilnadu,it is very common to get pineapple and get it sliced by the shopkeeper.
என்னடா மூணு நாலு பதிவு போட்டும் இன்னும் வால்தம்பி பூணல் பற்றி ஒண்ணும் சொல்லக்கானோம் ன்னு பார்த்தேன்!
you are 100% correct, this indian jews(malalayees) are thinking that they are above all.i am working in saudi arabia, my immediate boss is an indian jew(malayalee) he will recruit only malayalees(i came thru arab manager). but he is keeping business in coimbatore all the staffs in his factory is from tamilanadu, and north indians. single malayalee is not working in his factory.
///நாம் வேறு நபர்களின் வலைதள முகவரியை சில விஷயங்களை மேற்கோள் காட்ட நம் தளத்தில் ஹைபர் லிங்க் மூலம் குறிப்பிடுவோம். அதைத் தொடுபவர்கள் நாம் குறிப்பிடும் வேறு தளத்திற்கு அழைத்துச்செல்லப் படுவார்கள். ஒரு வேளை அந்த நபரின் தளம் வைரஸால் பாதிக்கப்பட்டால், ஹைபர் லிங்க் மூலம் அவரது தள முகவரியை நம் தளத்தில் வெளியிட்டதற்காக நம் தளமும் பாதிக்கப்படுமா? ப்ளாக்கரால் நம் தளம் முடக்கப் படுமா? விளக்குங்களேன் ப்ளீஸ்////
இல்லை. முடக்கப்படாது. கூகிள் க்ரோம் அந்த தளம் வைரஸ் என்பதை எளிதாகவே காட்டிவிடும்.
நேற்றுவரை விளக்கு எதனால் எரியவில்லை ?
10 ஆண்டுகளுக்கு முன் கம்யூனிஸ்டுகள் கூட்டமாக வந்தது உழைக்காமல் பிச்சை எடுக்கவா ??
வால்பையன் பீடி சிகரெட் பிடிக்கிறாங்களா ?
மாற்றம் மட்டுமே இந்த உலகில் மாறாதது.. என்பது உங்கள் பதிவை படிக்கும் போது புரிகிறது
//வால்பையன் பீடி சிகரெட் பிடிக்கிறாங்களா ?//
பிடிக்கலைனா கீழா விழந்துருமே!
எனக்கு கம்யூனிஷத்தின் வரலாறு, புவியியல் எல்லாம் தெரியாது, நான் கம்யூனிஷ்டும் அல்ல!
//என்னடா மூணு நாலு பதிவு போட்டும் இன்னும் வால்தம்பி பூணல் பற்றி ஒண்ணும் சொல்லக்கானோம் ன்னு பார்த்தேன்! //
மூணு நாளா அதுக்கு வேலையில்லாம இருந்ததே! எடுத்து கொடுத்தார் வந்துருச்சு, அம்புட்டு தான்!
நன்றி கிருஷ்ணமூர்த்தி அவர்களே. தங்கள் விளக்கத்தைக் குறிப்பெடுத்துக் கொண்டேன். மற்றவை விதிப்படி நடக்கும்.
செந்தழல் ரவி அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு ஹைபர் லிங்க் கொடுப்பதன் மூலம் தளமே முடக்கப்பட்டு விடாது என்பது ஆறுதலான செய்தியே! மிக்க நன்றி.
அன்புடன்
ராம்
www.hayyram.blogspot.com
//அந்த மந்திரத்துல ஒரே ஒரு பூசனிக்காய் வர வழைச்சிருங்க, அடுத்து உங்களூக்கு ஆசிரமம் ஆரம்பிச்சிரலாம்!//
மந்திரம் சொல்லி காசு வாங்குகிறார்கள் என்று சொன்னேனே ஒழிய அதனால் என்னென்ன பலன் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. தேவையில்லாமல் அதுபற்றி இழுப்பது உங்கள் ஆழ்மன கசப்புனர்ச்சியைத்தான் காட்டுகிறது.
//நீங்க நம்பர் ஒன் டுபாக்கூர்!//
வசிஷ்டர் வாயால் ப்ரம்ம ரிஷி பட்டம். நன்றி.
//மந்திரம் சொல்லி காசு வாங்குகிறார்கள் என்று சொன்னேனே ஒழிய அதனால் என்னென்ன பலன் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. தேவையில்லாமல் அதுபற்றி இழுப்பது உங்கள் ஆழ்மன கசப்புனர்ச்சியைத்தான் காட்டுகிறது. //
மந்திரம்னால ஒரே அர்த்தம் தானே!
மந்திரத்தால் எல்லாம் சாத்தியம் என்று தானே காசு வாங்குறாங்க, ஒரு பூசணிக்கா வர வச்சா என்னவாம், இதுல காழ்ப்புணர்ச்சி எங்கிருந்து வருது, பூசணிக்கா வந்தா நானும் உங்களை மாதிரி ஆத்திகனாகப்போறேன், கடவுள் நேர்ல வந்தா கூட நம்பமாட்டேன்னு நான் சொன்னதேயில்லையே!
//ஒரு ஹைபர் லிங்க் கொடுப்பதன் மூலம் தளமே முடக்கப்பட்டு விடாது என்பது ஆறுதலான செய்தியே! //
அப்படியே முடங்கிட்டாலும் மந்திரம் போட்டு, இல்லைனா நித்திய யாகம் செஞ்சு, இல்லைனா சூனியம் வச்சு மீட்டுக்கலாம் விடுங்க!
வால் ரொம்பவே நீளம்!
இவ்வளவு நீட்டி முழக்கிப் பின்னூட்டம் இடுகிற நேரத்தில் ஒரு சிறு பகுதியைச் செலவழித்துக் கொஞ்சம் விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் முயற்சித்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?
கம்யூனிசம், பெரியாரிசம், மாவோயிசம், ஹிந்துயிசம் எதுவுமே தெரியாது! ஆனால் எல்லாமே தெரிந்தவர் மாதிரி, முடிவு சொல்ல மட்டும் வாலை நீட்டிக் கொண்டு வந்து விடுகிறீர்கள்! இது என்ன இசமோ, நாராயணா!
காரல் மார்க்ஸ் உயிரோடு திரும்ப வந்தால், நிச்சயமாக, சிவாஜி படம் போட்ட பாலாவை, அடையாளம் காட்ட மாட்டார் என்பதற்கு நான் காரண்டீ!
//இது என்ன இசமோ, நாராயணா!//
கிருஷ்ணமூர்த்தி அய்யா,
இந்த இசத்துக்கு பெயர் "எத்னோ சென்ட்ரிஸம்" mother of all isms.டாக்டர் ஷாலினி அம்மாவைக் கேட்டுப் பாருங்க.இதைப் பத்தி அரை மணி நேரத்துக்கு உணர்ச்சிகரமா சொல்லுவாங்க.அதாவது கற்றதை மறந்தால் புதிதாக கற்க ஏதுவாக இருக்கும் என்பது தான் அடிப்படை.அதாவது எதைப் பற்றி வேண்டுமானாலும் உளறிவிட்டு "நான் இப்போ எத்னோ சென்ட்ரிஸ்ட்" னு சொல்லி எஸ்கேப் ஆகிடலாம்.
பாலா
ps:
அது சரி, சென்னையில மட்டும் இந்த சைக்கியட்ரிஸ்ட் டாக்டர்கள் ஏன் ஒரு மாதிரி ஆயிடறாங்க அவங்களுக்கு தாடி இருந்தாலும் சர்,இல்லையென்றாலும் சரி.பாவம் மன நலம் குன்றிய தமிழ் குஞ்சுகள்.
//கம்யூனிசம், பெரியாரிசம், மாவோயிசம், ஹிந்துயிசம் எதுவுமே தெரியாது! ஆனால் எல்லாமே தெரிந்தவர் மாதிரி, முடிவு சொல்ல மட்டும் வாலை நீட்டிக் கொண்டு வந்து விடுகிறீர்கள்! இது என்ன இசமோ, நாராயணா!//
உங்களுக்கு எல்லாம் தெரியும் * நீங்கள் ஒரு புத்திசாலி
+ * + = +
எனக்கு ஒன்றும் தெரியாது * நான் ஒரு முட்டாபய
- * - = +
கடைசில ரெண்டுமே ப்ளஸ் தான் வருது, என்ன கொடும சார் இது!
வால்பையனின் விவாதம் கேணத் தனமானது.
இங்கே கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றி பேசும் போது அது சரியா, தப்பான்னு கருத்து சொல்வதை விட்டு விட்டு தேவை இல்லாத சங்கதிகளை கருணாநிதித்தனமாக இழுத்து திசை திருப்புகிறார்.
இப்படி திசை திருப்பும் வேலைக்கு யாராவது ஒரு பெயர் சூட்டுங்களேன்!
மனநல மருத்துவரா? லொல்.
அந்தாளுடைய பதிவு, பதில்களையெல்லாம் படிக்கும் போது விசுவோட பழைய டயலாக்கு தான் நியாபகத்துக்கு வருது!
என்ன ஒரு காழ்ப்புணர்ச்சி. குறிப்பிட்ட சமூகத்தினர் எதுவும் மருத்துவத்துக்கு (தப்பித்தவறி வந்தா!) நான் மருத்துவம் பார்க்க மாட்டேன்னு சொல்ல தைரியம் இருக்க அந்தாளுக்கு?
கேட்டா 'நாய் வித்த காசு குரைக்குமானு' பினாத்துவாய்ங்க!
ஆன்லைன் வர்த்தகத்தில் எல்லா வேலைகளையும் கம்புயூட்டரும் இண்டர்நெட்டும் தொழில் நுட்பமும் பார்த்துக் கொள்கிறது என்பதால் நமது அருமை அண்ணன் வால்பையன் அவர்கள் இன்று முதல் ஆன்லைன் வர்த்தகத்தில் சம்பாதிக்கும் காசு அனைத்தையும் மக்களுக்கே முழுவதும் தருவதாக முடிவெடுத்துள்ளார்.
//குறிப்பிட்ட சமூகத்தினர் எதுவும் மருத்துவத்துக்கு (தப்பித்தவறி வந்தா!) நான் மருத்துவம் பார்க்க மாட்டேன்னு சொல்ல தைரியம் இருக்க அந்தாளுக்கு?//
நீங்கள் சொல்லும் அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் தான் மனநோயாளிகளே, ருத்ரனுக்கு மட்டுமல்ல, எல்லா டாக்டர்களும் அந்த குறிப்பிட்ட சமூகத்திற்கு மருத்துவம் பார்த்து தான் பயன்னடைகிறார்கள்!( நீங்களும் அந்த குறிப்பிட்ட சமூகம் தானே)
//வால்பையன் அவர்கள் இன்று முதல் ஆன்லைன் வர்த்தகத்தில் சம்பாதிக்கும் காசு அனைத்தையும் மக்களுக்கே முழுவதும் தருவதாக முடிவெடுத்துள்ளார். //
இன்று முதலா!
டாஸ்மாக் ஆரம்பிச்சதிலிருந்து மக்களுக்கு தான்யா கொடுத்துகிட்டு இருக்கேன்! மக்கள் அரசிடமிருந்து வாங்கும் சலுகை அனைத்திலும் என் பங்கும் உள்ளது நண்பரே!
//இங்கே கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றி பேசும் போது அது சரியா, தப்பான்னு கருத்து சொல்வதை விட்டு விட்டு தேவை இல்லாத சங்கதிகளை கருணாநிதித்தனமாக இழுத்து திசை திருப்புகிறார்.//
டாக்டர் மட்டும் எப்படி வந்தாராம், இங்கே பின்னூட்டத்தில்!
//இப்படி திசை திருப்பும் வேலைக்கு யாராவது ஒரு பெயர் சூட்டுங்களேன்!//
திசை திருப்புவது மட்டுமல்ல,வேறு சில அயோக்ய குணங்களும் ஒருங்கே சேர்ந்து இருப்பதற்கு பெயர் Tamil dravidianism.
/////இப்படி திசை திருப்பும் வேலைக்கு யாராவது ஒரு பெயர் சூட்டுங்களேன்///
ஏற்கனவே தான் சொல்லிவிட்டீரே !!! கருணாநிதித்தனம் என்று ? உமக்கு ரொம்ப தான் குசும்பு மாயவரத்தாரே..
வால்பையனும் மாயவரத்தானும் ஐபிஎல் போல அடித்து ஆடுவதை பார்த்த்துத்தான் டோண்டு பார்முக்கு வந்துவிட்டாரோ ?
என்ன ஒரு காழ்ப்புணர்ச்சி. குறிப்பிட்ட சமூகத்தினர் எதுவும் மருத்துவத்துக்கு (தப்பித்தவறி வந்தா!) நான் மருத்துவம் பார்க்க மாட்டேன்னு சொல்ல தைரியம் இருக்க அந்தாளுக்கு?////////////////////////////////////
அப்படி எதுவும் இருப்பதாக தோன்றவில்லையே மாயவரத்தான். ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா ?
/வால்பையனின் விவாதம் கேணத் தனமானது./
மாயவரத்தாரே! தப்பாச் சொல்றீங்க!
வால்பையனின் வாதம் வால் தனமானது! மூடுக்குத் தகுந்த மாதிரி நீளும், வளையும், ஒரு நிலையில் எப்போதுமே நிற்கவிடாது, தாவிக் கொண்டே இருக்கும்!
அம்புட்டுத்தேன்!
//எனக்கு ஒன்றும் தெரியாது * நான் ஒரு முட்டாபய//
வால் இந்த சுயதம்பட்டம்தானே வேனன்றது. இதல்லாம் நீங்க சொல்லித்தான் எங்களுக்கு தெரியனுமா?
வாலறிவன்
திருச்செந்தூர், சிதம்பரம்,பழனி உள்ளிட்ட கோவில்களில் எளியவர்களிடம் பிடுங்கித் தின்று கொழுக்கும் பார்ப்புகள் பற்றியும் எழுதுங்களேன்!
Mayavarathan > u said why vaal paiyan bringing in hinduism here when this post is abt communist ... valid point.
but what you did ???
this is abt communism and u r writing against the comemnt by vaal paiyab.. why to bring in karunanidhi here?? ....
now u see the difference?? how irrelavant things are coming up ???
we need to be perfect when we point finger towards others.. !
ஆஹா.. ராபின் ஹூட் இப்போ அடுத்த அவதாரமா? நடத்துங்க.
செந்தழில் சார்.. உங்க லொள்ளுக்கு எல்லையே இல்லையா?
உங்களுக்கு தெளிவா கருணாநிதித்தனமா சொன்னா தான் புரியும் போல.
நான் எங்கய்யா திசை திருப்பினேன்?
அவரு தானே அதை செஞ்சாரு. அவரை கேட்டீங்களா?
நீங்க என்ன அவரோட ஆளா?
ஆரம்பத்திலே இருந்தே அவரு அதை செய்யுறாரு அதை கேட்காம என்ன மட்டும் கேள்வி கேட்க வந்திட்டீங்களே.
நான் 'கருணாநிதித்தனம்' அப்படீன்னு தான் சொன்னேன். கருணாநிதியை அல்ல.
//this is abt communism and u r writing against the comemnt by vaal paiyab.. why to bring in karunanidhi here?? .... //
Dear Sanjay,
Karunanidhi and communism are like conjugal twins.You cant separate them .Did you not know that Karunanidhi once said that if at all he gets a second life he would like to be born a communist.In another occasion he said that in the third life he would like to be born as a jihadi (Sunni not Shia).
Therefore Mr Yellow Towel can be compared with any thing perverse,morbid and vulgar; communism ,maoism,jihadism,nazism,fascism,Dr Shalini type ethnocentrism, etc.Nothing wrong in what Mayavarathan said.
bala
//வால் இந்த சுயதம்பட்டம்தானே வேனன்றது. இதல்லாம் நீங்க சொல்லித்தான் எங்களுக்கு தெரியனுமா?
வாலறிவன் //
snake's legs other snakes only knows brother
val from banglore, no tamil font here
mr bala - you have your own valid points to say karunanidhi can be compared with communism....
sameway, vaalpayan can also have his own points to compare hinduism and communism... !
morever mayavarathan didnt use it in the context u explained... !
got the point?
what i meant to say is when mayavarathan is pin pointing vaal for bringing in hinduism in this communism post... he should also make sure that doesnt do the same..
anyway... i am neither a follower of communism,hinduism nor karunanidhi..
while reading all the comments, i felt the way mayavarathan pin pointed someone else and did the same mistake in his comments.. so said abt it..
enna orey seruppadi kozhayadi sandaiyaa irukku
//enna orey seruppadi kozhayadi sandaiyaa irukku//
வினவின் பதிவைத்தானே சொல்கிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஹே ராம்
அந்த மோகன்லால் படத்தின் பெயர் வரவேழ்ப்பு. அப்படியே ஸ்ரீநிவாசனின் அரபிக் கதாவும் பாருங்க. கம்னாட்டிஸ்டுங்க நாக்கப் புடுங்கிக் கொண்டு சாகணும்
டோண்டு சார்
சொளக்யமா, ஏதோ நானும் உங்க ப்ளாக்கைப் படிக்கிறேன் என்று ஒரு அட்டெண்டண்ஸுக்கு ஒரு சின்னப் பின்னூட்டம்
ச.திருமலை
Post a Comment