சுகி சிவம் இலங்கையில் தற்போது வாழும் தமிழர்களின் அவல நிலை பற்றி பேசிய வீடியோ இதோ:
அவர் கூறியவை சரியாகவே எனக்கு படுகின்றன. சமாதானம் ஏதேனும் ஏற்பட்டாலும் கூட அதை கெடுத்துவிடவே புலிகளின் ஆதரவாளர்கள் முயல்கின்றனர். அதிலும் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றெல்லாம் வதந்தியை கிளப்பி விடுபவர்கள் ராஜபக்சே அங்குள்ள தமிழர்கள் மீதான கொடுமைகளை இன்னும் அதிகமாக செய்யவே வாய்ப்பளிக்கின்றனர்.
சுகிசிவம் சொல்வது போல இப்போதைய ஈழத் தமிழர்கள் தேவை செயல்களே, வெட்டி வீறாப்பு பேச்சுக்கள் அல்ல. உள் நாட்டு போர் நடந்து முடிந்த எந்த நாட்டிலும் வெவேறு பிரிவினரிடையே அவநம்பிக்கையே அதிகம் நிலவும். அதை குறைப்பதை விட்டு இப்போது பல இடங்களிலும் பொறுப்பில்லாமல் பேசுவதை தவிர்ப்பதே நலம்.
சுகிசிவத்தை தனிப்பட்ட முறையில் தாக்குவதை விடுத்து அவர் கூறவருவதை முதலில் கேளுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு:
இப்பதிவில் எம்பெட் செய்யப்பட்ட வீடியோ வேலை செய்யவில்லையெனில் அதை இங்கு சென்றும் பார்க்கலாம்.
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
11 hours ago
12 comments:
இரண்டு ஆச்சரியங்கள்!
சன் டிவியில், இப்படிப் பொறுப்பான பேச்சைக் கூட ஒளிபரப்புகிறார்களா என்பது! அதை நினைத்தபோது, பெருத்த ஆச்சரியமே மிஞ்சியது.
அடுத்ததாக, அவர்கள் பங்கேற்றிருக்கும் மத்திய அரசும், இங்கே அவர்கள் குடும்பத்து அரசும் இந்தக் கருத்தை ஒப்புக்கொள்கிறார்களா, ஒப்புக் கொள்வார்களா என்பதான ஆச்சரியம்.
புலிகள் விதைத்துவிட்டுப் போன கண்ணி வெடிகள், தமிழ் மக்கள் தங்களுடைய பழைய இருப்பிடத்தில் குடியேறுவதற்குப் பெரும் தடையாக இருக்கும்.
கண்டிக் கதிர்காம வேலன், அவர்களுடைய நெஞ்சில் நம்பிக்கையையும், கடந்த நிகழ்வுகளின் அவலங்கள், நினைவுகளில் இருந்து மீண்டு வருவதற்கான தைரியத்தையும் அருளட்டும்!
//அதிலும் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றெல்லாம் வதந்தியை கிளப்பி விடுபவர்கள் ராஜபக்சே அங்குள்ள தமிழர்கள் மீதான கொடுமைகளை இன்னும் அதிகமாக செய்யவே வாய்ப்பளிக்கின்றனர்.//
என்ன டோண்டு சார். கலைஞர் சொல்வது போல சொல்கிறீர்கள்? இந்த விஷயத்தில் தான் நீங்கள் இருவரும் ஒரே மாதிரி பேசிகிறீர்கள்.
//சன் டிவியில், இப்படிப் பொறுப்பான பேச்சைக் கூட ஒளிபரப்புகிறார்களா என்பது! அதை நினைத்தபோது, பெருத்த ஆச்சரியமே மிஞ்சியது.//
:)
2010/3/25 Tamilish Support
Hi Dondu,
Congrats!
Your story titled 'இலங்கையில் தற்போது உள்ள தமிழர்களின் உடனடி தேவைகள் பற்றி சில எண்ணங்கள்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 25th March 2010 05:00:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/210693
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
நன்றி தமிலிஷ்
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
ஆங்கிலத்தில் ஒரு சிறு சந்தேகம்.
1) நீங்கள் எத்தனையாவது இட்லி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்? என்பதையும்.
2) உங்கள் career-ல் உங்களுக்கு இது எத்தனையாவது கம்பெனி? என்பதையும்.
எப்படி கேட்பது.
ஏற்கனவே தாங்கள் விளக்கிய அமெரிக்காவின் எத்தனையாவது ஜனாதிபதி என்ற பதிவை இரு நாட்களாக தேடுகிறேன். உகூம்.. கண்டுபிடிக்க முடியல.
@Kaliraj Qatar
நீங்கள் சொல்வதை நேரடியாக மொழிபெயர்க்க் இயலாது. எதற்கும் நீங்கள் தேடிய எனது இப்பதிவின் பின்னூட்டங்களையும் பார்க்கவும்.
http://dondu.blogspot.com/2006/12/blog-post_17.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்... அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு...
I don't agree with him fully... But the 1st part is okay...
"Angirukira arasodu nal uravai eatpaduthi kondu... " ... See more
"avarhal vaazhvathatku aaduhal thevai, kozhihal thevai, maaduhal thevai etc. etc. - ivai ellaam irunthaal meendum anigirukira thamilarhal nichayamaaha souhariyamaana, sugamaana, sugamaana, suganthamaana oru vaazhvai pera mudiyum..."
BULLSHIT
"Nadanthathai patri pesi kondu irunthu oru pirayosanamum illai..." - India's help to genocide theriya vanthidum....
டோண்டு சார்,
நீங்கள் குறிப்பிட்ட அந்த வீடியோ வேலை செய்யவில்லை.
அந்த வீடியோவை தூக்கி விட்டார்கள் என அறிவிப்பு வந்துள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
புலிப் பினாமிகள் இந்த விடியோவைப்பார்த்தாவது ??//? திருந்துவார்களா? மனிதப் படுகொலைகளையே தேசியமாக கற்பிக்கும் புலிப் பினாமிகள் mullaimukaam.blogspot.com
ஐயா
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம். அது மாதிரி நீங்க அவங்களுக்கு அறிவுரை வழங்குவது...
உண்மையச் சொன்னா யாரு ஒத்துப்பாங்க. அதான் கோவம் பொத்துகிட்டு வந்து கண்டபடிக்கு கத்துறாங்களா?!
வீடியோவை பார்க்க முடியவில்லை. ஆனால் நிலமையை விளங்கி கொள்ள முடிகிறது. புலி அழிக்கப்பட்டுவிட்டதினால் குண்டுகள் வெடிக்கவில்லை, மனிதர்கள் கொல்லப்படவில்லை, அழிவுகள் நடக்கவில்லை. புலி பினாமிகள் மிகவும் சோர்ந்து போய்யுள்ளார்கள். இலங்கை தமிழர்களுக்கு துன்பம் நடக்காதா? அதைவைத்து தங்கள் பண வசூலை தொடங்க இனி வழி கிடையாதா என்று ஏங்குகின்றனர்.
வெளிநாடுகளில் தமிழர்களிடம் பணம் சுருட்டுவதற்காக நாடுகடந்த தமிழீழ அரசு என்று எல்லாம் சொல்லி பார்த்தார்கள் ஒன்றும் சரிவரவில்லை.
Post a Comment