செவ்வியின் முதற்பகுதி
6. சுஜாதா தமிழில் அனைவருக்கும் பிடித்த எழுத்தாளர். அவரை தவிர்த்து உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர் யார்? என்ன காரணம்?
ஒருவர் என்ன பலர் உண்டு. ஆனால் அவர்களில் முக்கியமானவர்கள் கல்கி, தேவன், நாடோடி, ரமணி சந்திரன், சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி ஆகியோர். காரணங்கள் என்னவென்றால் அவர்களது உழைப்பு, கதையை சுவாரசியமாக கொண்டு செல்லும் பாணி ஆகியவைதான்.
7. அது என்ன டோண்டு? எதாவது காரணம் உள்ளதா?
என் அன்னைக்கும் தந்தைக்கும் கருத்து வேறுபாடு என்று ஏதாவது ஒன்றிருந்தால், அது இக்கேள்விக்கான பதிலில்தான் இருக்கும். என் தந்தை அது ஒரு மராட்டிப் பெயர் என்றும், நான் பிறந்த செய்தி அவர் பம்பாய் போஸ்டிங்கில் இருந்த போது அவருக்கு வந்தது என்றும் கூறிக்கொள்வார். எனது அன்னையோ டோண்டு என்றால் அசடு என்று அர்த்தம் என அழுத்தம் திருத்தமாகக் கூறுவார். அதுவும் குழந்தையாக இருந்தபோது திருதிருவென்று முழிப்பேனாம், ஆகவே இது என்ன டோண்டு மாதிரி முழிக்கிறது என்று யாரோ சொல்ல, என் அன்னை அதை எனக்கு செல்லமாக சூட்டி, டோண்டு, மண்டு, குண்டு என்றெல்லாம் கொஞ்சியிருக்கிறார். மற்றப்படி டோண்டு என்ற பெயர் எனது தனித்தன்மையை காப்பாற்றி வந்திருக்கிறது.
8. உங்கள் பதிவுகளில் நீங்கள் வருடங்களை குறிப்பிடும்பொழுது சமீபத்தில் என்று சொல்லுவீர்கள்.(1953 என்று சொல்லும்பொழுது கூட). அதற்கு ஏதேனும் காரணம் உண்டா?
"சமீபத்தில் 1955-ல் நான் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் படித்த போது" என்று ஆரம்பித்து நான் எழுதிய/எழுதும் போதெல்லாம் பல வலைப்பதிவர்கள் டென்ஷன் ஆவது வழக்கம். என்ன செய்வது, எனக்கு எல்லாமே சமீபத்தில் நடந்தது போலவே தோன்றுகிறதே. என் வாழ்வில் நான் நேரடியாக அனுபவித்த பல நிகழ்ச்சிகள் என் நினைவுக்கு வரும்போது சும்மா வருவதில்லை. முழு அளவில் வருகின்றன. அவற்றை மறுபடியும் உணர முடிகிறது.
நான் சாதாரணமாக குறிப்பிட்ட தேதி ஒன்றுக்கான கிழமையைக் கூறவியலும். அதற்கு சில நிமிடங்கள் ஆகும். கூறப்பட்டத் தேதிக்கு மிக அருகில் உள்ள தேதியில் என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஏதாவது இருந்தால் அதிலிலிருந்து வொர்க் அவுட் செய்வேன். ஒருவர் 1964 ஜனவரி முதல் தேதிக்கானக் கிழமையைக் கேட்க, அவரிடம் புதன் என்று கூற, எப்படி கண்டு பிடித்தீர்கள் என்று கேட்க, அவரிடம் ஏப்ரல் முதல் தேதி 1957 ஆம் வருடம் திங்கள், அதிலிருந்து கண்டுபிடித்தேன் என்று கூறி விடுவேன். ஆகவே நேரம் பிடிக்கும். அதே நேரத்தில் என் வாழ்வில் நடந்த அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை அசைபோடவும் நேரம் கிடைக்கும். அதனால்தான் நான் என் பதிவுகளில் சமீபத்தில் 1955 வருடத்தில் என்றெல்லாம் எழுத முடிகிறது.
உதாரணமாக, மேலே குறிப்பிட்ட 1957, ஏப்ரல் 1-ஆம் தேதி நயா பைசா அமுலுக்கு வந்தது, அதன் சம்பந்தப்பட்ட நினைவுகள், அன்று என் வாத்தியார் கே. ராமஸ்வாமி அய்யர் அவரிடம் உதை வாங்கியது, நான் மட்டும் உதை வாங்குவானேன் என்ற நல்லெண்ணத்தில் என் நண்பன் டி.வி. ரங்காச்சாரியையும் போட்டுக் கொடுத்தது எல்லாம் ஞாபகம் வரும். மறுபடியும் என் வயது 11 ஆகி விடும். அம்புடுத்தேன்."
பொதுவாகவே என்னை மாதிரி பெருசுகள் காலம் எவ்வளவு வேகமாகச் செல்கிறது என்பதை குறித்து வியப்படைந்துள்ளோம். இது பற்றி யோசித்ததில் எனக்கு சில விஷயங்கள் தோன்றின. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.
முதலில் தோன்றுவது வாழ்நாளின் சதவிகிதம். விளக்குவேன். உதாரணத்துக்கு 1955-ஐயே எடுத்து கொள்வோம். கல்கியில் "அமரதாரா" என்ற தொடர்கதை வந்து கொண்டிருந்தது. அதில் ஒரு கோர்ட் சீன். நான்கு வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை பற்றி ஒரு சாட்சி வாக்குமூலம் அளிக்க எனக்கு சற்றே வியப்பு. அதாவது, அவ்வளவு ஆண்டுகளுக்கு பின்னால் சாட்சி எப்படி ஞாபகம் வைத்து கொண்டு சாட்சி அளிக்கிறார் என்று. ஆனால் இப்போது? 2006 ஜனவரி நமக்கு சமீபத்தில் இருப்பது போலத்தானே தோன்றுகிறது? என்னைப் பொருத்தவரை இப்போது நான்கு ஆண்டுகள் என்பது என் வயதில் 6.25% தான். ஆனால் 1954-ல் அதே காலம் என் ஆயுளில் 50%-க்கு மேல். இன்னும் கூறப்போனால் எனக்கு நினைவு தெரிந்து அப்போது 5 ஆண்டுகள்தான் ஆகியிருந்தன, ஆகவே 80% என்றுகூட கூறலாம். இதே கணக்கில் பார்த்தால் நான் திருவல்லிக்கேணியை விட்டு 23-ஆம் வயதில் நங்கநல்லூருக்கு குடிபெயர்ந்தபோது நான் நினைவு தெரிந்தபின் அங்கு வாழ்ந்த 14 ஆண்டுகள் என் அப்போதைய வயதில் 50%-க்கு மேல். ஆகவே ரொம்ப நாள் நான் திருவல்லிக்கேணியில் வாழ்ந்த உணர்வு. அதே உணர்வு இப்போது வர வேண்டுமானால் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தேவைப்படும்.
இப்போது வேறு கோணத்திலிருந்து நோக்குவேன். Windows 95 என்பது எவ்வளவு பழையதாகத் தோன்றுகிறது? பத்து ஆண்டுகளிலேயே பலருக்கு அது அரதப் பழசாகத் தோன்றுகிறதே. ஆகவே இங்கே இன்னொரு மெக்கானிஸம் வேலை செய்கிறது. கணினித் துறையில் உள்ள தொழில் நுட்பங்களின் ஆயுள் ஓரிரு ஆண்டுகளே. ஏனெனில் நிகழ்ச்சிகள் அவ்வளவு அடர்த்தியாக வருகின்றன. பத்தாண்டுகளுக்கு முன்புவரை கூட இருந்த வி.சி.ஆர்கள் எங்கே போயின?
நான் சமீபத்தில் 1971-ல் விமானப்படையில் பொறியாளர் தேர்வுக்காக மைசூரில் மூன்று நாட்கள் நேர்க்காணலுக்காக சென்றிருந்தேன். எல்லா நாட்களும் நிகழ்ச்சிகளால் நிரம்பியிருந்தன. மூன்றாம் நாள் அன்று அங்கு ரொம்ப நாள் இருந்தது போல் உணர்வு.
Now to sum up:
காலத்தை பற்றி நம் புரிதல்கள் இரண்டு தளங்களில் நடக்கின்றன. சாதாரண ரொட்டீன் வாழ்க்கை மற்றும் பல நிகழ்ச்சிகளால் நிரம்பிய வாழ்க்கை ஆகியவையே அவை. வெறுமனே தினமும் எழுந்து, சாதாரணமாக பொழுதைக் கழிக்கும்போது நாட்கள் வெகு சீக்கிரம் ஓடி விடுவது போலத் தோன்றுகிறது. ஆனால் அதுவே ஒரு குறிப்பிட்ட காலநேரம் (உதாரணத்துக்கு ஒரு மாதம்) பல நிகழ்ச்சிகள் நிரம்பியிருந்தால் கணிசமானதாகவே தோன்றுகிறது. வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருந்து பல நிகழ்ச்சிகளால் அதை நிரப்பிக் கொள்கிறவர்கள் தங்கள் வாழ்நாளை இன்னும் அதிக அளவில் அனுபவிக்கின்றனர் என்றே தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
9. 60-70 களில் மிக தீவிரமாக இருந்த பார்ப்பனீய எதிர்ப்பு இப்பொழுது புத்துணர்வு பெற்று இருப்பதுபோல் தோன்றுகிறது? இதை பற்றிய உங்கள் கருத்து?
அது எப்போதுமே அப்படியேதான் இருந்து வந்திருக்கிறது. என்ன, இப்போதெல்லாம் வலைப்பூக்கள் பெருகியதால் எல்லாமே சீக்கிரமாகவே பதிவாகி எதிர்வினைகளும் அதிகமாகின்றன.
10. ஒரு இனத்தை அழிக்கிறார்கள்(இலங்கையில்) என்று குரல் குடுக்கும் சிலர் இங்கும் அதே பணியை (பார்ப்பனிய எதிர்ப்பு) செய்கிறார்கள். அதை பற்றிய உங்கள் கருத்து?
பார்ப்பன இனத்தையெல்லாம் அவ்வாறு அழித்துவிட முடியாது. இது சம்பந்தமாக நான் மேலும் கூறியதை இங்கேயும் பார்க்கலாம்.
11. மொழிபெயர்ப்பை பிரதான வேலையாக எடுத்து செய்ய இயலுமா? ஒரு நல்ல மொழி பெயர்ப்பாளருக்கு தேவையான தகுதிகள் என்ன?
எடுத்தவுடனேயே ஃப்ரீலேன்சராக வருவது கஷ்டம். எங்காவது முதலில் மாத சம்பளத்துக்கு வேலை பார்ப்பது நலம். என் விஷயத்தில் நான் பொறியாளராக முழுநேர வேலையில் இருந்தபோதே மொழிபெயர்ப்புகளும் செய்தேன். இந்த இரட்டை செயல்பாடு 18 ஆண்டுகள் நடந்தது. பிறகுதான் விருப்ப ஓய்வு பெற்றேன். அதற்குள்ளேயே எனது வாடிக்கையாளர்களின் லிஸ்ட் நல்லபடியாக உருவானது.
மொழிபெயர்ப்பு ஒரு புறம். கூடவே பொறியியல், மருத்துவம், விஞ்ஞானம், சட்டம் ஆகிய ஏதேனும் துறையில் ஸ்பெஷலைஸ் செய்வது அவசியம். ஏனெனில் மொழிபெயர்ப்புகள் எல்லாமே கிட்டத்தட்ட 90% இம்மாதிரியான தொழில்நுட்ப விஷயங்களுக்குத்தான் தேவைப்படுகின்றன. வெறுமனே எம்.ஏ. ஜெர்மன் அல்லது பிரெஞ்சு காரியத்துக்காகாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
13 hours ago
11 comments:
Q no. 8 remained in my mind also. Your answer/explanation is fantastic. It's true if one pays attention (to past events) & keeps in mind.. he/she can easily say it when any associated things comes in mind.
2010/3/21 Tamilish Support
Hi Dondu,
Congrats!
Your story titled 'வேழம் இணைய பத்திரிகையில் எனது செவ்வி பகுதி - 2' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 21st March 2010 05:49:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/207693
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
Thanks a lot, Tamilish
Regards,
Dondu N. Raghavan
டோண்டு சார்,
காலத்தைப் பற்றிய உங்கள் பதில் அப்படியே நான் யோசித்தது போலவே இருந்தது, சில வார்த்தைகள் உட்பட. நன்றி.
yosithaar pol என்று எழுதினால் யோசித்தார் போல் என்று சின்ன ர தான் வருகிறது. ற் வரமாட்டேன் என்கிறது. unicode இல் இது சாத்தியம் இல்லையா?
//yosithaar pol என்று எழுதினால் யோசித்தார் போல் என்று சின்ன ர தான் வருகிறது.//
You should actually type "yoosiththaaRpool
Regards,
Dondu N. Raghavan
பார்ப்பன இனத்தையெல்லாம் அவ்வாறு அழித்துவிட முடியாது
-----
I wish it's true but am afraid it's a wishful thinking. Look at the ground situation. All the anti-Brahmin gangs of today have all that one could get to completely eliminate an (especially unorganized harmless and silent) enemy.
1. Money and Muscle power.
2. Social and economical ostracization of their enemy backed by the National constitution and politics.
3. Tonnes of Hatred backed by a fictious history.
What else one could dream of...!?
thanks sir. it works.
//
10. ஒரு இனத்தை அழிக்கிறார்கள்(இலங்கையில்) என்று குரல் குடுக்கும் சிலர் இங்கும் அதே பணியை (பார்ப்பனிய எதிர்ப்பு) செய்கிறார்கள். அதை பற்றிய உங்கள் கருத்து?
பார்ப்பன இனத்தையெல்லாம் அவ்வாறு அழித்துவிட முடியாது. இது சம்பந்தமாக நான் மேலும் கூறியதை இங்கேயும் பார்க்கலாம்.
//
பார்ப்பான இனம் என்று ஒரு இனம் உண்டா ?
//அதுவும் குழந்தையாக இருந்தபோது திருதிருவென்று முழிப்பேனாம், ஆகவே இது என்ன டோண்டு மாதிரி முழிக்கிறது என்று யாரோ சொல்ல, என் அன்னை அதை எனக்கு செல்லமாக சூட்டி, டோண்டு, மண்டு, குண்டு என்றெல்லாம் கொஞ்சியிருக்கிறார். //
Anonymous !
You are paranoid.
The anti-brahminism is not a permanent social factor. It fulfilled a need at some point of time; and the need has long since been fulfilled by Tamil OBCs coming to powers after the era of Rajaji was over.
That a brahmin (Jeyalalitha) still is around and was CM, more than once, does not mean Brahmin has taken over power. She just represents OBCs. A poor mouthpiece of thevars - a strong OBC clan of TN.
After the need has become a thing of past, what next is the question? That next wont warrant any anti-brahminism. So, the ism will die a natural death.
The generations gone before, and the generation is, and gen-next - of the paarppanar inam - are different. The kind of brahmin like Dondu Raagavan is a sore thumb hanging out. It will soon fall out. On his going, we can be sure a generation that lingered somewhat longer, also left.
Gens-next of brahmins will be assimilated and the difference between them and Tamil OBCs will be lost.
Paarppnar inam will be there: but totally a different one. The entity called 'Orthodox Brahmins' and their vicarious supporters like Dondu (vicariousனா தான் அப்படி இருக்கமுடியாது, ஆனால் அது வேணும் என்று நினைப்பவர்கள்0will be extinct. Every brahmin will be unorthodox.
The brahmins are quick to move along the current of times - as history has shown. Their girls getting married across castes - is sufficient to give a lie to Dondu Raagavan's theory of purity of blood. There will be brahmins in whom there will be only mixed blood.
Some time back, there was a proposal to build an exclusive colony of brahmins at the outskirts of Hyderabad. They wanted to build a small township where they would practice ancient type of brahminism. The proposal fell flat because it dawaned upon them that their girls will have to go out to work in the city and soon marry non-brahmins. In matters of love, no girl, whichever caste or religion she belongs to, can be trusted. 'Frailty, thy name is woman' - said Shakespeare.
It is women who should perpetuate a clan or a caste, by bearing children to the men of the same clan or caste. How is it possible to retain the caste if the girls get married outside; and the parents cant do anything?
Also recall the tragic episode here; a UP brahmin boy hacked to death the members of a whole family of the husband of her sister, because the husband was an Eelvaa (a low Kerala caste). Tamil brahmins wont be enraged enough to kill. They therefore let go their girls!
It is my considered view that Tamil brahmins as a pure community, will be undone by brahmin themselves!
What is your opinion, Mr DR?
Kallapiraan
//
10. ஒரு இனத்தை அழிக்கிறார்கள்(இலங்கையில்) என்று குரல் குடுக்கும் சிலர் இங்கும் அதே பணியை (பார்ப்பனிய எதிர்ப்பு) செய்கிறார்கள். அதை பற்றிய உங்கள் கருத்து?
பார்ப்பன இனத்தையெல்லாம் அவ்வாறு அழித்துவிட முடியாது. இது சம்பந்தமாக நான் மேலும் கூறியதை இங்கேயும் பார்க்கலாம்
//
அது எப்படி பார்ப்பண இனத்தை அவ்வளவு சுலபமாக அழித்துவிடமுடியுமா?நீங்கள் மற்ற இனங்களை அழிக்காமல் இருந்தாலெ அதுவே போதும்.
எப்படி பட்ட கோல்மால்களை பண்ணி எதிரியை அவன் கையால் குத்திக்கொள்ளுமப்டி செய்வதில் பார்ப்பணர்களுக்கு நிகர் பார்ர்ப்பணர்களே.
உங்களை அழிப்பதற்கு தான் கிருஷ்ண பரமாத்மா கல்கி அவதாரம் எடுப்பாரே.அப்ப அழிந்து போங்கள்..
Kalappirar,
Brahmin women folks marrying outside their caste means they are more self reliant and are surviving in a competing environment.
There are some castes in which if women folks marry outside their caste they are killed immediately. first you and your "tholargal" go and preach your sermon there.
Post a Comment