காந்திக் கணக்கு
பொது வாழ்க்கையில் தூய்மையாக இருக்க வேண்டும், கணக்கு விஷயங்களில் நியாயமாக நடந்து கொண்டால் மட்டும் போதாது, நியாயமாக நடப்பதும் வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்றெல்லாம் ஸ்ட்ரிக்டாக தானும் இருந்து தம்மைச் சார்ந்தவர்களும் இருக்க வேண்டும் என கண்டிப்பாக இருந்த காந்தியார் பெயரை இவ்வாறு ஏன் தவறாக பயன்படுத்துகின்றனர்?
சின்ன அண்ணாமலையோ சாவியொ இப்போது நினைவில்லை. அவர் எழுதிய ஒரு விஷயம் இதை சற்றே விளக்குகிறது என நினைக்கிறேன்.
1942-ல் வெள்ளையனே வெளீயேறு இயக்கத்தின் உச்சக்கட்டத்தில் நாடே கொதிப்பில் இருந்தது. காங்கிரஸ்காரர்கள் கதர் உடையில் எல்லா ஊர்களுக்கும் சென்று காந்தியின் கொள்கைகளை பரப்பினர். அவர்களோடு சேர்ந்து கொண்டு சந்தடிசாக்கில் சிலர் செயல்பட்டனர். கும்பலாக ஏதேனும் ஹோட்டலுக்கு போவது, மூக்குப் பிடிக்க கொட்டிக் கொள்வது. பிறகு கல்லாவருகில் வந்து “மகாத்மா காந்திக்கு” என ஒருவர் கோஷம் போட மீதிப்பேர் எல்லோரும் (ஹோட்டல் முதலாளியும் அதில் அடக்கம்) ஜே என்று கத்துவார்கள். அவ்வாறு கோஷம் போட்டுக் கொண்டே அவர்கள் பில்லுக்கு பணம் தராது நடையைக் கட்டுவார்கள். அதுதான் காந்திக் கணக்குக்கு சோர்ஸ் என நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
டோண்டு ராகவன் அடாவடியாக நடந்து கொண்ட தருணங்கள்
அவ்வப்போது பின்னால் திரும்பிப் பார்ப்பது நலம் என நான் நினைக்கிறேன். சமீபத்தில் 1958-59 கல்வியாண்டில் நான் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன். ஆசிரியர் ஜயராம ஐயங்கார். (எனது ஆங்கில ஆளுமைக்கு அவரும் என் அன்னையும் காரணம் என்பதை இங்கு போகிறபோக்கில் கூறிவைக்கிறேன்).
அப்போதெல்லாம் ஆசிரியர் பயிற்சிக்கு பி.டி (B.T.) பட்டம் பெற வேண்டும். அவர்கள் பயிற்சியின் ஒரு பகுதி ஏதேனும் வகுப்புக்கு ஒரு பீரியட் பாடம் நடத்த வேண்டும். வழமையான வகுப்பாசிரியரும் மாணவர்களின் பக்கத்தில் அமர்ந்து பயிற்சியாளர் பாடம் எடுப்பதை அவதானித்து பிறகு அவருக்கு மார்க் போடுவார்கள்.
அன்று ஒரு பயிற்சியாளர் எங்களுக்கு ஆங்கில இலக்கணப் பாடம் எடுத்தார். ஜயராம ஐயங்கார் அவர்கள் மாணவர்கள் வரிசையில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தார். பாடம் எடுத்தவர் ஆங்கில இலக்கணத்தைத் தப்பும் தவறுமாக எடுத்தார். நான் சீறி எழுந்தேன். ஜயராம ஐயங்கார் அவர்கள் எனக்கு சைகைகள் காட்டி பேசாமல் உட்காரச் சொன்னதை நான் ஓரக்கண்ணால் கவனித்தாலும் அப்போதிருந்த சண்டைக்கார மனோபாவத்தில் அதை அலட்சியம் செய்தேன். பயிற்சியாளர் நான் சொன்னதை ஒத்துக் கொள்ளாது நான் நம்பத் தகுந்தவனல்ல எனக்கூறினார். ஆசிரியரையே கேட்டுக் கொள்ளுமாறு கூறி நான் அமர, ஆசிரியருக்கு நான் சொல்வதுதான் சரி என்று சொல்வதைத் தவிர வேறு வழியின்றிப் போயிற்று.
அப்பயிற்சியாளரின் முகத்தில் அதிர்ச்சி, அவமானம் எல்லாம் ஒரு சேர வந்ததை இப்போது நினைத்துப் பார்த்தாலும் என் மனம் துவள்கிறது. ஆனால் அப்போதிருந்த அந்த 12 வயது துடுக்குப் பையனான டோண்டு ராகவனுக்கு அது உரைக்கவில்லை என்பதை இப்போது வெட்கத்துடன் ஒப்புக் கொள்கிறேன். அன்று மாலையே ஆசிரியர் என்னை அழைத்து நான் செய்த தவறைக் கூறினார். அப்போதாவது எனக்கு அது உரைத்தது என்று பொய் கூற எனக்கு மனம் வரவில்லை.
என்ன செய்வது, என்னைப் புரட்டிப் போட்ட அந்த ஞாயிற்றுக்கிழமை வர இன்னும் 13 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்ததே.
துக்ளக்கின் தூள் பதில்கள் (துக்ளக் 15.09.2010)
கே: தமிழகத்தில் போலி மருந்துகள், போலி டாக்டர்கள், போலி சாமியார்கள், போலி அதிகாரிகள், போலி மார்க் ஷீட்கள்... என்று தொடரும் நிலையில், தற்போத் வாகனப் போக்குவரத்துக்கு ‘போலி இன்ஷூரன்ஸ்’ தயாரித்து வினியோகித்தவர் சென்னையில் சிக்கியுள்ளாரே?
ப: இது ஒரு போலி மாநிலம். ஒரு குடும்பத்தின் பண்ணை, ஒரு மாநிலம் போல தோற்றமளிக்கிறது. நம்பிவிடக்கூடாது.
கே: காமராஜ் என்றால் கல்வி, எம்.ஜி.ஆர். என்றால் வள்ளல், கருணாநிதி என்றால்...?
ப: குடும்பம்.
கிருஷ்ணலீலை
திண்ணையில் வெளிவந்த மலர்மன்னனின் சிறுகதை மேலே சொன்ன தலைப்பில் மனதுக்கு நிறைவாக உள்ளது. தேவைக்கதிகமாக எளிமையாக்கம் என்று கூறத் தோன்றினால், அது நிஜமாகவே உண்மையாக இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்.
தசாவதாரத்தில் கடவுள் இருக்காருங்கறதை நம்பறேளா என அசின் கேட்க கமலோ கடவுள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் எனக்கூறும் பதில் போல என வைத்துக் கொள்ளுங்களேன். நிற்க:
சமீபத்தில் 1961-ல் ஆனந்த விகடன் இதழ் ஒன்றில் பாண்டிச்சேரியில் பாரதியாரின் பக்கத்து வீட்டில் இருந்தவரை (அப்போதும் அங்குதான் அவர் இருந்தார்) பேட்டி கண்டு பாரதியாரைப் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். “சார் அவரை நாங்கள் எல்லாம் அச்சமயம், பிழைக்கத் தெரியாத பயித்தியக்காரர் என்றுதான் நினைத்தோம். அப்போது எங்களுக்குத் தெரியுமா அவர் பின்னால் அடையப்போகும் புகழ்” என்று கூறியிருப்பது நிஜத்துக்கு அருகே இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
7 hours ago
37 comments:
விகடனில் வந்த "பக்கத்து வீட்டுக்காரர் கண்களில் பாரதியார்" கட்டுரையை இங்கே படிக்கலாம்.
http://koottanchoru.wordpress.com/2009/03/30/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/
@கூட்டாஞ்சோறு
உங்கள் அக்கட்டுரை பற்றிய பதிவை நானும் படித்துள்ளேன். ஆனால் நான் சொல்வது போகிற போக்கில் ஒரு ரிப்போர்டர் 1961-ல் எழுதியதை படித்தது.
அச்சமயம் அப்பக்கத்து வீட்டுக்காரர் இன்னும் வெளிப்படையாகவே பேசியிருந்தார், நான் எழுதியது போல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பஞ்சாமிர்தத்துல உப்பு, காரம் சேர்க்கப்படாதது ஏன்? அதையும் சேர்த்து சாத்தாமிர்தம், நவாவமிர்தம்'னு வைக்கலாமே!
நான் நிஜ பஞ்சாமிர்தத்தைச் சொன்னேன்.
எம்ஜீயாருக்கு நோய் வருவதற்குமுன், ஆமாம் நோய் வருவதற்குமுன், எதை வாரிக்கொடுத்தார் வள்ளல என்று சொல்வத்ர்க்கு?
தெரிந்தால் சொல்லவும்...
மழைக் கோட்டு கொடுத்தார் என்று சொல்லலாம். அதுதான் வள்ளலின் அளவுகோல் என்றால்? இது தான் அகில உலக ஜோக்! வள்ளலுக்கு அர்த்தமே இல்லை. அதுவும் ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ தான் மழைக் கோட்டு கொடுத்தார் (அதை வைத்து திமுக, மக்களை ஏமாத்தி ஒட்டு வாங்கினது வேறு விஷயம்...அது இங்கு தேவை இல்லை).
எனக்கு தெரிந்த "ஒரு" வள்ளல் காரைக்குடி அழகப்ப செட்டியார். அவர் தான் "தமிழ்நாட்டின் கல்வித்தந்தை." மேலும பல உண்மையான வள்ளல்கள் இருக்கலாம். அவர்களுக்கும் அந்த வள்ளல்களுக்கும் எனது நன்றி!
ஆனால் எம்ஜீயார் இந்த லிஸ்டில் வருவதற்கு "ஒரு துளியும்" அருகதை கிடையாது.
செத்தபின் கொடுப்பதற்கு பெயர் வள்ளல இல்லை. மறுபிறவியில் முற்றிலும் நம்பிக்கை இல்லாதனால் எம்ஜீயார் அதை கொடுத்தது. மறுபிறவியில நம்பிக்கிகை இருந்தால் கட்டாயம் கொடுத்து இருப்பார். எதை? வேறு என்ன அதே அரத பழசு மழைக் கோட்டு தான்.
மேலும அந்த வள்ளல் பத்து வருடம் முதல் அமைச்சர். ஹி! ஹி!! ஹிஹ்ஹி!!! ----இவர் வள்ளலாம்.
ஆனால் அதைவிட அதிகமாக விஜயகாந்த் தையல் மிசின்களை வருடா வருடம் வாரி வாரி வழங்கி வருகிறார். ஆகையால் எம்ஜீயாரைவிட விஜயகாந்த் பெரிய வள்ளல. அப்படித்தானே? வீட்டுக்கு வரவன் போறவனுக்கு எல்லாம் பிரியாணி போடுறவன் வள்ளல் என்றால், விஜயகாந்த் "மிக மிகப்" பெரிய வள்ளல்.
தியாகராய நகரில் அவர் வசிக்கும் பொழுது (திருமணத்திற்கு முன்பு) எவன் வந்தாலும் பேசுவார். பழகுவார். அதுவும் மேக்கப் போட்டுக்கொண்டுருக்கும் போதும்....அந்த பின் பக்க குடிசையில்...அந்த "தன்னம்பிக்கை" எம்ஜீயாருக்கு கிடையவே கிடையாது. எவனுக்கும் இருக்காது. இப்றாஹீம் ராவுத்தரம் அவருடன் தங்கி இருந்தார். சாப்பிட்டு விட்டு போங்கள், தயவு செய்தது சாப்பிடாமல் போகவேண்டாம் என்று எல்லோரிடம் கேட்டுக் கொள்வார். அதில் எந்த போலித்தனமும் இருந்தது கிடையாது. இது எனது அனுபவம். அதுவம் படித்தவராக இருந்தால் நாம் படித்த படிப்புக்கும் மரியாதை கொடுப்பார்.
எனக்கு தெரிந்த விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர்....என்னுடைய பார்வையில். எம்ஜீயாரை விட பல படிகள் மேலே.....
எம்ஜியார் வாரி வழங்கியது என்ன? அவருக்கு நோய் வருவதற்குமுன் எதை வாரிக்கொடுதார்??
எம்ஜியார் வள்ளல் என்பது ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கின கதை தான்...
நம் மாநிலத்தின் முதலமைச்சர்களுக்குள் இருக்கும் வித்தியாசம்:
காமராஜர்: உண்மையாக மக்களுக்கு நன்மை செய்தார்
எம்.ஜி.ஆர்: பொய்யாக மக்களுக்கு நன்மை செய்தார்
மு.க.: உண்மையாக தன் குடும்பத்தினருக்கு நன்மை செய்கிறார்
ஜெ:உண்மையாக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை
அது சரி. காமராஜர் அப்படி என்ன என்ன நல்லது செஞ்சாரு.எடுத்து விடுங்க பார்ப்போம்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர்களாக இருந்தவர்கள் நன்மை - தீமை இரண்டையுமே செய்துள்ளார்கள். எனவே, பாராட்டவும் தூற்றவும் இரண்டிற்குமே வாய்ப்பு உண்டு.
காமராசர் நாடங்கும் பள்ளிகளை ஏற்படுத்தியது மிகப்பெரிய சாதனை.
எம்.ஜி.ஆர் கொண்டுவந்த சத்துணவு திட்டம் உலகிற்கே வழிகாட்டி, பள்ளிச்சேர்க்கையை அதிகமாக்கிய சாதனைத்திட்டம் இது. ஆனால், தனியார் பள்ளிகள் - மெட்ரிகுலேசன் பள்ளிகள் என பள்ளிக்கல்வியில் பெரும் சீரழிவை ஏற்படுத்தியவரும் எம்.ஜி.ஆர் தான்.
ஜெயலலிதா செய்த சாதனைகளாக, லாட்டரியை ஒழித்துக்கட்டியதையும், பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் அளித்ததையும், ஜெயேந்திரரை உள்ளே தள்ளியதையும் கூறலாம். கேடுகள் என்ன என்பதற்கு பட்டியல் தேவையில்லை!
கருணாநிதியின் வரலாற்று சாதனை என்பது சமச்சீர்கல்வித் திட்டம், தமிழை கட்டாயப் பாடமாக்கியது, தமிழ்வழியில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் 20 % இடஒதுக்கீடு - ஆகியவற்றைச் சொல்லலாம். கேடுகள் என்ன என்பதற்கு பட்டியல் தேவையில்லை!
Hi! Dondu!
It is really nice!But I can't maximise the page and with the result I am not able to read what is in the right hand corner.Raji
Hi! Dondu! It is nice and entertaining! Can't read the right hand corner. It is not visible.
Raji
@ராஜி
எந்தப் பக்கத்தை பெரிய அளவுக்கு கொண்டு வர முடியவில்லை?
சாதாரணமாக மேலே உள்ள நீலப்பட்டையை இரு முறை க்ளிக் செய்தால் பக்கம் பெரிதாகும் சாத்தியக்கூறு உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
காந்தி உயிருடன் இருக்கும் போதே அவர் பெயரைச் சொல்லி வயிறு வளர்த்த பெரிய "தியாகி"கள் இருந்துள்ளனர் என்பது தான் காந்தி கணக்கு பகுதி சொல்லும் கதை.
இந்தியர்கள் அடிப்படையில் மிகவும் பிழைபட்ட சமூகம் (corrupt society). எதிலுமே அலட்சியப்போக்கு, பொறுப்புணர்ச்சியின்மையே இந்தியர்களின் அடையாளம். அது கடந்த 60 பிளஸ் ஆண்டுகளாக மாறவேயில்லை என்பது தான் அந்தக் கதையின் நீதி.
தென்னாப்பிரிக்க தமிழர்கள் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு ரூ 5000 நல நிதி அளிக்க விரும்பி அந்த பணத்தினை காந்தியடிகளிடம் கொடுத்தனுப்பினர்.கடைசி வரை காந்தி அந்த பணத்தினை சிதம்பரனார் அவர்களிடம் கொடுக்க வில்லை. பல முறை நினைவுபடுத்தியும் கடைசி வரை ஏனோ அந்த பணம் அவருக்கு கிடைக்கவில்லை.
அதுதான் காந்திக் கணக்குக்கு சோர்ஸ் என நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
Part 1...
///அருள் said...எம்.ஜி.ஆர் கொண்டுவந்த சத்துணவு திட்டம் உலகிற்கே வழிகாட்டி, பள்ளிச்சேர்க்கையை அதிகமாக்கிய சாதனைத்திட்டம் இது.///
தவறு. அருள் சொல்வது முற்றிலும் தவறு....
இந்தப் புகழ் முற்றிலும் முற்றிலும் காமாராஜரையே சாரும்."இஸ்கூலுக்கு போனா சோத்துக்கு என்னா பண்றது?" இந்த கேள்வியை கேட்டது ஒரு மாடு மேய்த்த சிறுவன். கமாராஜரே அந்தப் பையனுக்கு தான் "Full Credit" கொடுத்து இருக்கிறார். அதாவது, அந்த வரலாறுப் புகழ் கேள்வியை அந்த சிறுவன் கேட்காவிட்டால் "Midday Meals" என்ற திட்டம் வந்திருக்ககாது என்று...
இலவச பள்ளிகளை ஆரம்பித்தும் அந்த சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் ஏன் மாடு மேய்த்துக் கொண்டு இருக்கிறான்???
இந்த கேள்வி காமராசர் மனதில் வந்ததால் அப்பொழுது பட்டினியுடன் பள்ளிக்கு செல்ல முடியாது, கல்வி கற்க முடியாது என்று தோன்றியதன் விளைவு தான் பள்ளிகளில் "Midday Meals".
Midday Meals, அப்பொழுது PL 480 மூலம் கொடுத்த உணவு, இப்போழது கொடுக்கும் உணவை விட மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக சத்தானது. உதாரணம் அந்த "சத்துப பால்." ஹிந்து உயர் நிலைப் பள்ளியில் "Midday Meals" கட்டாயம் இருந்திருக்கும். டோண்டு அதில் சாப்பிட்டு இருக்க மாட்டார். ஆனால் அந்த "Midday Meals" எல்லா பள்ளிகளிலேயும் இருந்தது. இதைப் பற்றி டோண்டு அவர்கள் எழுதலாம். கட்டாயம் எழுத வேண்டும்.....
Part 2..
இந்த மேற்கோள் "இஸ்கூலுக்கு போனா சோத்துக்கு என்னா பண்றது?" தான் இன்று சத்துணவு திட்டம், சத்துணவுடன் முட்டை போடும் திட்டம் அப்புறம் பரீட்சையிலும் முட்டை போடும் திட்டம்...இப்படி எல்லா திட்டங்களுக்கும் மூல காரணம்.
இந்தப் புகழ் முற்றிலும் "காமாராஜரையும் அந்த கேள்வியை கேட்ட சிறுவனையும் சாரும்." கேள்வி கேட்பதற்கும் மூளை வேணும்...
ஆனால், கருணாநிதியை ஒழிக்க நமது பத்திரிக்கைகள இது எம்ஜியார் மூளையில் உதித்ததாக் கூறியது ஒரு கூட்டு சதி. தமிழ்நாடு காங்கிரஸ்காரன் அப்பொழுது உண்மையை சொல்லி இருக்க வேணும். அவர்கள் எப்படி சொல்வார்கள்? அவர்கள் இந்திரா காங்கிரஸ்.
மேலும, தமிழ்நாட்டில் உன்னொரு காங்கிரஸ்காரன் வேட்டியை உறுவது தானே அவர்களது முழு நேர வேலை!!! அப்புறம் இதுக்கு எல்லாம எங்க நேரம்...
@ஆட்டையாம்பட்டி அம்பி
காமராஜ் அவர்கள் இரண்டாவது வகுப்பில் படித்தபோது அவருடன் படித்தவர் ரோசல்பட்டி பெருமாள். மதிய உணவுக்காக வீடுக்கு செல்லமுடியாத தூரத்தில் வீடு. ஏதேனும் சாப்பிடக் கொண்டுவருவதுதான். அதுவும் முடியாதுபோனால் தண்ணீர் குடித்து பசியாற்றிக் கொள்ள வேண்டியதுதான். காமராஜ் அவர்களின் உயிர்த்தோழனுக்கு இந்த நிலை. காமராஜ் இது பற்றி அறிந்ததும் தனது வீட்டாரிடம் தான் இனிமேல் மதிய உணவுக்கு வீட்டுக்கு வரமுடியாது என்றும் ஆகவே சாப்பாடு கட்டிக் கொடுக்குமாறு கேட்டு அதன்படியே பெற்றுவந்து தன் தோழனுடன் சேர்ந்து மதிய உணவு உண்ணுவது வழக்கமாயிற்று.
ஒரு நாள் பேரன் சாப்பிடும் அழகைப் பார்க்க பாட்டி வர உண்மை அறிகிறார். காமராஜ் பெருமாளின் கஷ்டத்தை எடுத்துக் கூறுகிறார்.
இப்போது புத்தகத்திலிருந்தே கோட் செய்கிறேன்.
"மகிழ்ச்சி! பெருமை! பெருமிதம்! ஒன்றும் பிடிபடவில்லை பாட்டிக்கு!
பேரனை நெருக்கமாகத் தழுவியபடியே, கீழே பழைய இடத்திலேயே உட்கார வைக்கிறாள்! தானும் எதிரில் சப்பணமிட்டு அமர்கிறார்!
சரி, சரி, அதுக்கென்ன? உங்களுக்கு - இரண்டு பேருக்குமே நானே ஊட்டி விடுகிறேனே!"
பிறகு காமராஜ் அம்மாவிடம் இது பற்றி எதுவும் கூறவேண்டாமென கேட்டுக் கொள்ள, ஓண்ணும் பயப்படவேண்டாம், அம்மாவிடம் மட்டும் அல்ல எல்லோரிடமும் கூறலாம் என்று கூறி பாட்டி சிறுவர்கள் இருவருக்கும் ஆளுக்கு காலணா கொடுத்து விட்டுப் புறப்படுகிறார்.
பாட்டியின் உருக்கப் பரவசப் பாசப் பெருமையைக் கண்டு, கேட்டு, உணர்ந்த இரண்டு சிறுவர்களுக்கும் மெய்சிலிர்க்கிறது.
வாஞ்சையோடு, மீண்டும் ஒருமுறை சிறுவர்களைப் பார்த்து முறுவலித்தபடி வீட்டுக்கு விரைகிறார் பாட்டி. பாட்டியின் பெருமித நடை! உணர்த்துவது என்ன? பகுத்துண்டு, பல்லுயிர் ஓம்பும் செல்லப் பேரன் காமராஜ்!
இந்த இளம் வயதிலேயே என்ன ஈவு இரக்கம்? அவரது மதிய உணவு திட்டத்துக்கு இதுவும் ஒரு முன்னோடிதானே.
இது பற்றியும் காமராஜ் பற்றிய மற்ற விவரங்களுக்கும் பார்க்க:
http://dondu.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் சொல்லவந்தது அந்தப் பெருமை காமராஜரையே முற்றும் சாரும். அதற்க்கு எம்ஜீயார் பாத்தியதை கொண்டாடுவதற்கு ஒரு அருகதையும் கிடையாது.
இது அருள் மாதிர் இளைய தலைமுறைக்கு சொல்ல வேண்டியது கடமை. ஏனென்றால் ஒரு பொய்யை மூன்று தடவை சொன்னால் அது தான் உண்மை. அருள் அப்படிதான் பொய்யை உணமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.
ஹிந்து உயர் நிலைப் பள்ளி ஒரு நல்ல பள்ளி. அதே மாதிரி சென்னையில் உள்ள எந்த பள்ளியிலும் ஒரு fees -உம கிடையாது. ஸ்பெஷல் பீஸ் வருடத்திருக்கு பத்து ரூபாய் மட்டுமே. அதுவும் சிறிய நகரங்களில் 5 ரூபாய் மட்டுமே ஒரு வருடத்திற்கான ஸ்பெஷல் பீஸ். அதை தவிர ஒரு மண்ணாங்கட்டி பீஸ் கிடையாது. அதற்க்கு மேல் பத்து பைசா கூட கொடுக்க வேண்டாம். கூடவே இலவச "சத்தான" Midday Meals.
அதையும் செய்தது காமராஜர் தான். அப்படி படித்தவன் தான் இன்று ஐரோப்பாவிலும், ஆப்ரிக்காவிலும் அமேரிக்காவிலும் இருக்கிறான்.
இன்று இளைய தலை முறை அவர்களது குழநத்தைகளுக்கு பணத்தை படிப்பிற்கு செலவு செய்யும் போது எம்ஜியார் நினைவு வர வேண்டும். ஏன்?
இதற்க்கு காரணம், இப்ப இருக்கிற இளைய தலை முறை, அவர்களது செல்வங்களுக்கு படிப்பிற்கு இப்படி பணம் தண்டம் அழுவதற்கு காரணம் (வேற யாரு) நம்ம புரட்சி தலைவர் தான்....
///மன்னர்களின் ப்ரீவி பர்ஸ் ரத்து செய்தது போன்ற நடவடிக்கைகள் இந்திரா காந்தி அவர்கள் தனது நிலையை தக்க வைத்துக் கொள்வதற்காகவே.///
Kamaraj objected to this for 'only' ONE reason: a promise given by the "Then (past)" government should be upheld at all times, irrespective of the consequences. Breaking the promise is tantamount to "Breach of Trust,"and a government should never do this. "Breach of Trust," ஒரு அரசாங்கம் செய்யக் கூடாது எனபதில் அவர் உறுதியாக இருந்தார். அது தான் சரி. காமராஜர் அதிகமாக படிக்கா விட்டாலும் இது அவரது அறிவை காட்டியது.
ஆனால் நடந்தது என்ன? அவரை "ராஜாவின் கூஜா" என்றார்கள். இதை உங்கள் ஆஸ்தான எழுத்தாளரும் எழுதினார் அப்போ. ஏன்? அவரது நாடங்களுக்கு காங்கிரஸ் அரசு இடைஞ்சல் செய்தது.
இது சுயநலம் அல்லவா?
அப்புறம் அவர் காமராஜர் ஜால்ரா ஆனதிற்கு காரணம் கருணாநிதியை ஒழிக்க வேண்டும் என்ற ஒரு குறிக்கோள் தான்...
அதன் பலன்...எம்ஜியார், அம்மையார், இத்யாதி, இத்யாதி...
"டோண்டு அதில் சாப்பிட்டு இருக்க மாட்டார்"
தீட்டாயிருமில்ல...!
”ஹிந்து உயர் நிலைப் பள்ளி ஒரு நல்ல பள்ளி. ”
டோண்டு, கமலஹாசன் போல பெரிய ஆட்களெல்லாம் படிச்சிருக்காங்களே !
”அதற்க்கு எம்ஜீயார் பாத்தியதை கொண்டாடுவதற்கு ஒரு அருகதையும் கிடையாது”
I object Your Honor.
காமராஜரின் மதிய உணவுத்திட்டம் ஒரு இன்ஸ்பிரேசன் என்பதை மறுக்க முடியாது.
ஒரு நல்ல திட்டம் தொடங்கிவைத்தால், அதை மென்மேலும் தொடர்ந்து, மென்மேலும் வலுப்படுத்தவேண்டும்.
அப்படி செய்பவருக்கும் ஒரு பாராட்டு கொடுக்கத்தான் செய்யவேண்டும்.
யு.என். ரிபோர்ட் கண்டது இத்திட்டம் ஏழைப்பெண்களை 10வகுப்புவரையாவது படிக்கவைத்தது. அவர்கள் ட்ராப் அவுட் ஆகவில்லை. மதிய உணவுக்காக வந்தார்கள். அவர்கள் உடல் ஆரோக்கியம் பழுதுபடவைல்லை. பின்னர் வாழ்க்கப்படும்போது குறையில்லாக்குழந்த்தைகளைப்பெற்றனர் மட்டுமன்றி, அளவோடு பெற்றனர். அளவான குடும்பம் சிறந்த வாழ்க்கையின் அடித்தளம் என அரசின் விளம்பரத்தை அவர்கள் புரிந்து அனுசரிக்கும்படி அவர்களுக்க்க் கல்வி வந்திருந்த்தது.
The UN conducted the study of midday meal program of TN during the last two decades of MGR rule. The study found that the women from lower strata were benefited - by acquiring moderate health, moderate education, both led to other positive results in society. The poor women would have become doormats of their alcoholic husbands and sex objects to the men at nights, begetting babies year on year basis. The moderate education has empowered them to become independent thinkers to such extent to know the results of small family norms; and could persuade their illiterate husbands to value such norms - the UN pointed out.
The UN gave the credit to MGR. MGR is not alive to know the commendation.
Kamaraj's scheme benefited many - but of the earlier generations. MGR's contination and bettering the schmed has benefited generations after and till now.
"Kamaraj objected to this for 'only' ONE reason: a promise given by the "Then (past)" government should be upheld at all times, irrespective of the consequences. Breaking the promise is tantamount to "Breach of Trust,"and a government should never do this. "Breach of Trust," ஒரு அரசாங்கம் செய்யக் கூடாது எனபதில் அவர் உறுதியாக இருந்தார். அது தான் சரி. காமராஜர் அதிகமாக படிக்கா விட்டாலும் இது அவரது அறிவை காட்டியது.
"
Weak argument.
In politics, everything is contingent upon present circumstances. No question of ethics. Only question of 'the greatest happiness of greatest numbers'
A politician should not be adamant to cling to a theory monkey-like.
His motto should be:
Change lest
'One good custom should corrupt the society'
அதாவது, நேற்று அது நன்மையாக இருந்து, இன்று அது தீமைபயக்கும் எனில், அதைக்கழட்டிவிடவேண்டும்.
மன்னர்கள், மஹாராஜாக்கள் என்பதெல்லாம், ஒரு காலம். அவர்களுக்கு பிரிட்டிஸ் வாக்குக்கொடுத்தது. ரொம்ப பெரிசா தாராளமோ, இரக்கமோ இல்லை. ஒரு quid pro quo approach தான்.
அவனுக சுதந்திரத்துக்குப்பின்னும் கொழுக்க வாழ ஆசைப்பட்டால் முடியுமா ஜனநாயகத்தில்.
Kamraj's adamancy is not based on such principles of breach of trust etc. It is based on pique.
He was slighted and his ego was pricked.
Even on principles, the principles are odious against the background I have given in the beginning.
100 ஆண்டுகளுக்கு மேல் இயங்கும் மதுரை சவுராஸ்டிரா உயர்நிலைப் பள்ளியில் கடந்த 85-90 ஆண்டுகளாக இந்த மதிய உணவுத்திட்டம் அமலில் உள்ளது. சிலர் தமிழக முதலமைச்சராக காமராசர் இருதபோது இதைப் பார்த்து தமிழகமெங்கும் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார் என்று கூட சொன்னார்கள். உண்மை யாதென யாமறியோம்.
ஏழைகளுக்கு இலவசம். பணம் படைத்தவர்களானால் பணம் கொடுத்து சாப்பிடலாம்.
ஆனால், இது மொழி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளி என்பதால் அந்தச் சமூக மக்கள் மட்டுமே பயன் பெருகின்றனர்.
சென்னை நகரில் பல பள்ளிகளில் அரசாங்கத்தின் மதிய உணவு திட்டம் வருமுன்பே இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டுவந்தது.மதிய உணவிற்காக பெரும் செல்வந்தர்கள் நிதி வழங்கினர்.
சென்னை செளகார் பேட்டையில் இருக்கும் இந்து தியாகலாஜிகல் மேல்நிலைப்பள்ளியில் இது போன்று மதிய உணவு 75 வருடங்களுக்கு மேலாக வழங்கப்பட்டு வருகிறது
Part 1...
இது நேரில் செய்ய வேண்டிய விவாதம். இருந்தாலும் டோண்டுவிடம் ஒரு கேள்வி?
"இதை உங்கள் ஆஸ்தான எழுத்தாளரும் எழுதினார் அப்போ. ஏன்?" என்ற என் கேள்விக்கான பதில் மாதிரி தோன்றுகிறது...இருந்தாலும் எனது பதில். According to my school of thought, a promise by anyone (அவன் எவனாக இருந்தாலும்), in legal terms, should be kept, and more so if it is given by the government. Period. If not, what is the meaning of "I promise to pay...."
"In India, the Privy Purse was a payment made to the royal families of erstwhile princely states as part of their agreements to first integrate with India in 1947...from the Central Government ceased to exist."
Reference: http://en.wikipedia.org/wiki/Privy_Purse_in_India
Removing that "PROMISE" with a constitutional amendment amounts to cheating (circumventing a promise by the, THEN government)...that can be by any government in the world. This is not only a lion and a lamb situation but also a lion and a lamb in a cage situation. I still recall the "Karibi Hato" slogan (have no Hindi knowledge, apologies) used at that time by Madam Indira Gandhi. If this was morally right then the case of Ms. Saira Banu was also morally right. Please recall Ms. "Saira Banu" case at the Supreme Court.
How much time does it take to conduct a study now by the U.N in Tamil Nadu about the effects of "முட்டையுடன் போடும் சத்துணவு" among Tamil Nadu students. Unfortunately, MK does NOT have efficient advisers as how to initiate and conduct a study on the above subject? The results would be on a positive note, anyways. Further, it is not that difficult to tailor a study to get the desired results! Let us switch to my argument.
Part 2...
Pension is not a "matter of right" for government employees. I believe this is true in all democratic countries. Assume it is declared that pension is a "matter of right" for the government retirees by the Supreme Court with supporting votes of all justices of a FULL BENCH. This judgment can be effectively voided by a voting in the Parliament with all you need is just two third "nay" votes to deny pensions to government retirees. If eliminating (by circumventing) privy purses is morally right this is also morally right. Moreover, pension is neither a promise nor a matter of right....it is subject to change as the situation warrants and demands. When something (pension amounts) can go up it can also come down. In other words, it is bound to come down, and it (pension) can be brought down to even ZERO rupee. That is economics. It is not a one-way traffic, it is two-way, by the way.
In India it is estimated that 76% of people make less than 46 rupees/day. I presume LESS THAN 10% of people work for the government including retirees (approx) from both central and ALL state employees. The rest work for private sectors; and some are self-employed, etc in this group.
During my last visit, I have witnessed anger among almost all people against government employees or retirees. Some of the retirees were getting one rupee/kg rice. This is just an example for their anger. I have seen anger among software people also who were laid off and unable to secure a job, and their anger was mainly aimed at the government employees and retirees. பேசாமா ஒரு கிளார்க்க அரசு உத்தியோகதுக்ககுப் போயிருக்கலாம் இப்படின்னு. With Obama tightening the noose you will soon hear more cries such as this in India.
At least in the United States, social security system is in place for all retirees (all workers) and for disabled people. Still there is some resentment among people to cut down pensions for government employees. Many governments are cutting down the pensions for ONLY one reason: Government employees are just another set of employees and they not NOT a privileged class.
In India 90% of the population do not get any pensions. I don't know about private sectors. I trust they would NOT provide pension to retirees as I have full faith in private sectors! Treating government employees and retirees as a different animal with privileged status is morally and ethically wrong that too when there is no social security benefits for the rest of the 90% of Indians.
Part 3...
ஒரு உறுதியான அரசு இருநது, அதற்க்கு மூன்றில் இரண்டு வோட்டுக்கள் பார்லிமென்டில் இருந்தால் ஓய்ஊதித்தை முழுவதும் நிறுத்தலாம். அந்த அரசில் உள்ள கட்சிகாரர்கள் ஊர் ஊரா மீட்டிங் போட்டால் வேறு எந்த கட்சியும் ஆட்சிக்கு வரவே முடியாது. ஒட்டு மொத்தமா 90 விழுக்காடு ஜனங்களின் "கோபத்தை" ஓட்டுக்களாக மாற்ற முடியும். பத்து விழுக்காட்டுக்கும் குறைவான அரசு ஊழியர்கள் மற்றும் "retirees" எல்லாம் ஒரு ஜுஜுபி "minority" தான்.
அனானி அவர்களே நீங்கள் (நீங்கள் என்றால் அரசு ஊழியர் என்று கொள்க) என்ன செய்வீர்கள். அப்ப ஹிந்து எக்ஸ்ப்ரசஸ்ஸுக்கு கடிதம் எழுதுவீர்கள். என்னவென்று? Government should NOT do like this. Our family is dependent on my pension only, etc. மேலும எனக்கு வயதான தந்தையார் மற்றும் தாயார் இருக்கிறார்கள் என்று.
அரசு ஊழியர் அல்லோதொருக்கும் வயதான தந்தையார் மற்றும் தாயார் இருப்பார்கள் எண்பது எனது ஊகம! இப்போ வேலையில் இருக்கும் அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்தால், வேலையே கிடைக்காமல் வாழ்ந்து சாவும் மக்கள் பலர் பென்சனும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் இப்போ இப்போ எனக்கு பசிக்குது. எனக்கு வேலை கொடுங்கள் என்று எந்த அரசு வேலையும் செய்வார்கள்.
Part 4...
If you are less than 50 years of age, you will live long enough to see this happen in India. Trust me.
நீங்கள் என்ன மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்றா சொல்வீர்கள். மாட்டீர்கள். இந்த பழமொழி இங்கு எதற்கு? மாமியார் மெச்சிய மருமகளான சோனியா காந்தி அம்மையார் அவர்களும் "Karibi Hato" என்ற கோஷம் எழுப்பி அரசு ஊழியர்களின் பென்சனை காலி செய்தால்.....சோனியா காந்தி அம்மையார் இத்தாலிக்காரியாக மாற முழு வாய்ப்பு உண்டு! அதையும் நான் பார்க்கத்தான் போகிறேன்!!
PS: டோண்டு, You are welcome to provide your arguments. Let me end with this piece as I do have other time consuming commitments.
எப்படி டோண்டு பார்ப்பனர்களுக்கு உழைப்பதை கூச்சமாக மற்றும் கேவலமாக நினைக்க வில்லையோ அதே மாதிரி நானும் "சத்சூதிரணக்கு" உழைப்பதை கூச்சமாக மற்றும் கேவலமாக நினைக்கவில்லை...However, I sincerely thank for your time and sharing your views...டோண்டு....
ஆட்டையாம்பட்டி அம்பி..!
எம்ஜிஆரின் கொடைத் தன்மை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..! அவர் சார்ந்த துறையான கோடம்பாக்க திரையுலகத் துறையிலும், அவருடைய உற்ற நண்பர்களிடத்திலும், நண்பர்கள் இல்லாத தமிழகத்தின் பொதுஜன தலைவர்கள், பிரபலங்களும், அவரை நம்பி அவரைத் தேடி வந்த ஏழை, எளிய மக்களும் நிறையவே அவரிடமிருந்து பெற்றிருக்கிறார்கள்..!
ஒவ்வொருத்தரும் பெற்ற கதையை சொல்வதானால் இந்த ஒரு பதிவு போதாது..!
விட்டுவிடுங்கள்..!
திரு.காமராஜ் கொண்டுவந்த திட்டத்திற்கும் திரு.எம்ஜீயார் திட்டத்திற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு: காமராஜர் திட்டத்தில் பள்ளிக்கு வரும் ஏழைக் குழந்தைகளுக்கு மட்டும் மதிய உணவு. எம்ஜீயார் திட்டத்தில் பள்ளிக்கு வராவிட்டாலும் மதிய உணவை சாப்பிடலாம். மற்றும் காமராஜர் திட்டம் மற்ற மாணவர்களின் குடும்பங்களின் உதவியோடு நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாணவனும் தனது வீட்டிலிருந்து ஒரு கைப்பிடி அரிசியாவது கொண்டு வரவேண்டும். இதை நானும் செய்திருக்கிறேன் அன்று - நினைவு இருக்கிறது.--
கிரி
Part 1...
///உண்மைத் தமிழன்(15270788164745573644) said. ஆட்டையாம்பட்டி அம்பி..! எம்ஜிஆரின் கொடைத் தன்மை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..! அவர் சார்ந்த துறையான கோடம்பாக்க திரையுலகத் துறையிலும், அவருடைய உற்ற நண்பர்களிடத்திலும், நண்பர்கள் இல்லாத தமிழகத்தின் பொதுஜன தலைவர்கள், பிரபலங்களும், அவரை நம்பி அவரைத் தேடி வந்த ஏழை, எளிய மக்களும் நிறையவே அவரிடமிருந்து பெற்றிருக்கிறார்கள்..!ஒவ்வொருத்தரும் பெற்ற கதையை சொல்வதானால் இந்த ஒரு பதிவு போதாது..!
விட்டுவிடுங்கள்..!///
நன்றி உண்மைத் தமிழரே!
எழுத வேண்டாம் என்று தான் இருந்தேன். இருந்தாலும் வரலாற்று திரிபுகளை (பொய்களை) அம்பலப் படுத்த வேண்டும். வரலாற்றில் பிழைகள் இருக்கக் கூடாது உண்மைத் தமிழரே!
At the outset, I would like to initiate this argument with caveats; caveats here mean warnings or conditions. Why those conditions? அவர் ஒன்றும் வள்ளல இல்லை என்று நான் சொல்லுவதை வைத்து யாரும் என்னைத்தப்பாக புரிந்து கொள்ளக் கூடாது. எம்ஜீயார் என்ற மாமனிதன் மீது எப்பொழுதும் எனக்கு நிறைய மதிப்பு உண்டு. அவரை நான் குறை சொல்லுகிறேன் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. அதற்காக இந்த warnings or conditions...
“...எம்ஜீயார் மீது எப்பொழுதும் எனக்கு நிறைய மதிப்பு உண்டு. ஏன்? ஊழல் செய்யாத ஒரே முதல் அமைச்சர் இந்தியாவில் அவர் தான். எம்ஜீயார் ஆட்சி செய்த பத்து வருடங்கள் தான் தமிழ்நாட்டின் பொற்காலம் என்று (ராஜ ராஜ சோழனுக்கு பிறகு) தமிழ் நாட்டில் உள்ள எல்லா பத்திரிக்கைகளும் எழுதியது. அது உண்மையும் கூட. அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை."
Part 2...
அதே மாதிரி எம்ஜீயார் மீது எனக்கு மதிப்பு அவர் ஆட்சிக்கு வரும் முன்னேயே இருந்தது. ஏன்? ஏனென்றால் அவர் ஒருவர் தான் இந்தியாவில் கறுப்புப் பணம் வாங்காத ஒரே நடிகர். அவர் ஒருவர் தான் உழைத்து சம்பாதித்த பணத்திற்கு ஒழுங்காக “Super Tax” கட்டிய நடிகர் என்று தமிழ் நாட்டில் உள்ள எல்லா பத்திரிக்கைகளும் எழுதியது அது உண்மையும் கூட. ஆகையால் எம்ஜீயார் எனது பார்வையில், அளவீட்டில், மதிப்பில் எப்பொழுதும் ஒரு மாமனிதர் தான்....”
ஆகவே நாம் விவாதிக்கப் போவது எம்ஜீயாருடைய வள்ளல தன்மை மட்டும் தான். வேறு எதுவும் இல்லை...
Another caveat; My knowledge about Income Tax (IT) in India is VERY VERY poor. இருந்தாலும் Super Tax ஒன்று இருந்தது உண்மை. Super Tax: IT dept taxed someone who made more than a certain amount of money but it was a meager (தமிழில் சில்லறை பணம்) amount, I was told. My knowledge about IT in India is poor but Cine Actors across India paid Super Tax; that is for sure. I was told it was more than 90%. I was also told that Mr. Rajiv Gandhi thrashed that Super tax. Apologies, if I am wrong. But MGR’s cine career ended before Mr. Rajiv Gandhi trashed that Super Tax. In essence, MGR paid 'Super Tax" in full and he kept the rest of his earnings...after paying all due taxes. Hats off to MGR. MGR மாதிரி உணமையாக வருமான வரி கட்டிய நடிகர் இந்தியாவில் கிடையாது. அந்த வகையில் சட்டத்தை முழுவதும் மதித்த MGR ஒரு மாமனிதர் தான். இதிலும் எனக்கு மாற்று கருத்து இல்லை.
இறந்த பிறகு கொடுப்பதற்கு பேர் வள்ளல் அல்ல (முன் பதிவில் சொல்லி இருக்கிறேன்; மறு பிறவியில் நம்பிக்கை இல்லாமல் கொடுத்தார் என்று!).
எம்ஜியார் உயிருடன் இருக்கும் போது வள்ளலாக இருந்தாரா எனபது தான் விவாதம். அதை நிருபியுங்கள்... நீங்கள் சொன்னா மாதிரி எம்ஜியார் வள்ளல் தன்மையை நிரூபிக்கும் வகையில் ஒரு புத்தகம் போடுங்கள்.
புத்தகம் வேண்டாம் ஒரு பதிவாவது போடுங்களேன் உண்மைத் தமிழரே! அந்த பதிவை போடாத வரைக்கும் நீங்கள் சொல்வது...
Part 3...
இறந்த பிறகு கொடுப்பதற்கு பேர் வள்ளல் அல்ல (முன் பதிவில் சொல்லி இருக்கிறேன்; மறு பிறவியில் நம்பிக்கை இல்லாமல் கொடுத்தார் என்று!).
எம்ஜியார் உயிருடன் இருக்கும் போது வள்ளலாக இருந்தாரா எனபது தான் விவாதம். அதை நிருபியுங்கள்... நீங்கள் சொன்னா மாதிரி எம்ஜியார் வள்ளல் தன்மையை நிரூபிக்கும் வகையில் ஒரு புத்தகம் போடுங்கள்.
புத்தகம் வேண்டாம் ஒரு பதிவாவது போடுங்களேன் உண்மைத் தமிழரே! அந்த பதிவை போடாத வரைக்கும் நீங்கள் சொல்வது....
Let MGR’s income tax returns made public from the time he started paying income tax until he was called as... பொன்மனச் செம்மல்., கொடுத்து கொடுத்து சிவந்த கைகள், கலியுகக் கர்ணன் இப்படி பல பட்டங்கள். 1967 – இல, ரிக்க்ஷாக்காரன் படம் வந்த போதே அவருக்கு இந்த பொன்மனச் செம்மல், கொடுத்து கொடுத்து சிவந்த கைகள், கலியுகக் கர்ணன் என்ற பட்டங்கள் உண்டு. நாடோடி மன்னன படம் எடுத்தது 1956 என்று நினைக்கிறேன். அப்போ அவர் சொன்னது ஜெயித்தால் மன்னன்; இல்லாவிட்டால் நாடோடி! இந்த 1956 - 1967 வரை அவர் எவ்வளவு சம்பாதித்து இருக்க முடியும்? சொல்லுங்களேன்? அதுவும் Super Tax கட்டியதர்க்கு பிறகு. இதை இங்கு நான் சொல்வதற்கு காரணம் எம்ஜீயார் இந்தியாவின் இறையாண்மையின் மீது உள்ள பற்றினால் எல்லா வருமான வரியையும் முழுவதும் கட்டினார். இப்படி உண்மையாக வரி கட்டியதற்கு அப்புறம் அவர் பல பல சொத்துக்கள் வாங்கி உள்ளார்.
அவைகள் போக அவரிடம் அந்த 11 வருடத்தில் என்ன “Liquid Cash” இருந்து இருக்க முடியும்.....மக்களுக்கு வாரி வாரி வழங்க?
Part 4...
1967 - இல ரிக்க்ஷாக்காரன் படம் வந்த பொது அவர் மழைக்கோட்டு கொடுக்க முடியாத ரிக்க்ஷாக்காரர்களுக்கு “குடை” கொடுத்தார். அவர்களுக்கு எம்ஜீயார் “குடை” கொடுத்தால் அவரை “குடை வள்ளல்” என்று சொல்லிருக்கலாம். அதை நமது பத்திரிக்கைகள் “கொடை வள்ளல” என்று திருத்தி இருக்காலாம். அதைப் பிடித்துக்கொண்டு தமிழர்கள் எல்லோரும் அவரை “கொடை வள்ளல்” என்று சொல்லுகிறார்கள். வரலாற்றில் பிழைகள் இருக்கக் கூடாது உண்மைத் தமிழரே!
பின் குறிப்பு: அவர் உண்மையில் ஒரு “குடை வள்ளல்” தான். அப்புறம் சத்யராஜூக்கு 1978 இல கர்லா கட்டையும் கொடுத்தார். அகவே எம்ஜீயார் “குடை வள்ளல்” மட்டும் அல்ல “கர்லா கட்டை “ கொடுத்த வள்ளலும் தான்....
I am not sure whether one can have have access to someone’s IT returns through the RTI (Right To Information Act). ஆனாலும், ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் நம்முடைய வீட்டுக்கு வந்து எம்ஜீயார் file பன்னிய Income Tax returns கூட அவருடைய ஜாதகத்தையும் நம்ம ஆட்கள் கொடுத்து விடுவார்கள். அப்படியே வேற எதாவது உதவி வேணுமா சார் என்றும் கேட்பார்கள் (உதவி என்றால் லஞ்சம் கொடுங்கள் சார் என்று கொள்க!) அப்படி இந்தியா இல்லை என்கிறீர்களா? சொல்லுங்கள் உண்மைத் தமிழரே!
இதயக்கனி என்ற படத்தில் (1973) எம்ஜீயார் புகழ் உலகம் முழுவதும் பரவியது. அந்த “நீங்க நல்லா இருக்கனும்” எனற பாடல் தான் எம்ஜீயாரை “பதவியில்”அமர்த்தியது எனபது என்னுடைய கணிப்பு. அது மாதிரி ஒரு பாடல் எனது வாழ்க்கையில் கேட்டது இல்லை. இனிமேல் எவனாலும் அது மாதிரி பாடல் எழுதி இசை அமைக்க முடியாது. அந்தப் பாடல் வரலாற்றில் முக்கியம் வாய்ந்த பாடல். அதை மிஞ்சிய பாடல் இனி வராது. நிற்க...
Part 5...
அவர் பதவியில் இருக்கும் போது செய்த உதவிகள் இங்கு தேவை இல்லை. தேவை முதல் அமைச்சர் கை எழுத்து தான். அதை நானே செய்யமுடியும். அதற்க்கு ஒரு எம்ஜீயார் தேவை இல்லை. எனது கேள்வி இந்த 1956 (நாடோடி மன்னன் ) - 1967 (ரிக்க்ஷா க்காரன்) வரை அவர் எவ்வளவு சம்பாதித்து இருக்க முடியும்? உங்களுக்காக, உண்மைத் தமிழருக்காக, இதயக்கனி (1973) வரைக்கும் அவர் வள்ளல் தன்மையை நாம் விவாதிக்கலாம். அதுவும் உங்களுக்காக உண்மைத் தமிழரே!
Let MGR’s income tax returns made public from the time he started paying income tax until he was called as... பொன்மனச் செம்மல்., கொடுத்து கொடுத்து சிவந்த கைகள், கலியுகக் கர்ணன்... அவர் வாங்கிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் (assets) அந்த “income tax returns” –இல இருக்கும். அவருடை liquid Cash...இந்த 11 வருடங்களில் அல்லது 17 வருடத்தில் (1956 to 1967 or, 1956 to 1973 (இதயக்கனி படம் வரை) இருக்கும். அதையும் நாம் பார்ப்போமே! எவனாலேயும் அவன் சம்பாதித்தற்கு மேல் தானம கொடுக்க முடியாது. ஆகவே எம்ஜியார் அவரது liquid Cash இல இருந்து கொடுத்த கொடை அல்லது குடை என்ன என்று நாம் பார்ப்போமே? அவர் வாங்கின அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் (assets) விவரம் அதில் இருக்கும். எம்ஜியார் தனாமாக அவரது வீட்டில இருக்கும் “கதவு, ஜன்னல் மற்றும் செங்கலை உருவி தானமாக கொடுத்து இருக்கமாட்டார் என்று நம்புகிறேன்...”
எம்ஜியார் அவர்கள் கொடுத்த கொடை (குடை அல்ல) எவ்வவளவு என்று சொல்லுனகளேன் உண்மைத் தமிழரே?
எம்ஜியார் நீங்கள் நினைக்கும் அளவிற்கு தனம கொடுத்து இருக்க்க முடியாது. ஏன்? இந்த 1956 (நாடோடி மன்னன் ) - 1967 (ரிக்க்ஷா க்காரன்) வரை அவர் எவ்வளவு சம்பாதித்து இருக்க முடியும்? அவரிடம் அப்போ இருந்த “Liquid cash” ஜுஜுபி தான். இதுலே என்னாத்தை (சென்னைத் தமிழ், எனது தாய் மொழி) அவர் வாரி வழங்கி இருக்க்க முடியும்? பத்திர்க்கைகாரன் புளுகுவான். நமக்கு எங்கே அறிவு போச்சு?
அதாவது தான் சம்பாதித்த பணத்திற்கு மேல் எவனாலையும் தானம் கொடுக்க முடியாது. இந்த அடிப்படை அறிவு இல்லாத...வெட்கம்..வேதனை...
Part 6...
Let MGR’s income tax returns made public from the time he started paying income tax until he was called as... பொன்மனச் செம்மல்., கொடுத்து கொடுத்து சிவந்த கைகள், கலியுகக் கர்ணன்...அதாவது ரிக்க்ஷா க்காரன் படம் வரும் வரை.சரிப்பா உண்மைத் தமிழரே நான் உங்களுக்கு ஆக இதயக்கனி (1973) வரைக்கும் அவர் வள்ளல தன்மையை விவாதிக்க ரெடி நான்கு மணி நேரத்தில் (இரண்டு மணி நேரம் for analysis; இரண்டு மணி நேரம் for preparing a full-fledged report by a Junior Attorney, who has specialized in taxes will rip open MGR’s கொடைத்தன்மை. நீங்க ரெடியா? நான் ரெடி உண்மைத் தமிழரே!
எவனாலும் அவன் சம்பாதிதர்க்கு மேல் தானம் பண்ண முடியாது. அதுவும் எம்ஜியார் சத்ய சீலர். ஊழல் செய்யாத ஒரே முதல் அமைச்சர் இந்தியாவில் எம்ஜியார் தான். மேலும் அவர் ஒருவர் தான் உழைத்து சம்பாதித்த பணத்திற்கு ஒழுங்காக “Super Tax” கட்டிய நடிகர் என்று தமிழ் நாட்டில் உள்ள எல்லா பத்திரிக்கைகளும் எழுதியது அது உண்மையும் கூட. ஆகையால் எம்ஜீயார் எனது பார்வையில், அளவீட்டில், மதிப்பில் எப்பொழுதும் ஒரு மாமனிதர் தான்.
இப்படி எம்ஜீயார் அளவுக்கு மீறிய நல்ல மனிதராக இருந்த போது அவரது வாழ் நாளில் அவரிடம் இருந்த Liquid Cash ஜுஜுபி தான். ..அப்புறம் எப்படி தானம், தருமம் எல்லாம்.
Part 7...
இது இந்த விவாதத்திற்கு சம்பந்தம் இல்லாதது. இருந்தாலும் கொடை எனபது உயிருடன் இருக்கும் பொது கொடுப்பது தான்... அதற்க்கு கீழே உள்ள உதாரணம். இதை பேசி நமது விவாதத்தை திசை திருப்ப வேண்டாம். இதில் ஒருவர் 99% மக்களுக்கும் , உன்னோருவர் தனது குழந்தைகளுக்காக ஒரு 10 million dolllars வைத்து விட்டு மீதி எல்லாம் மக்களுக்கு. தான் ...இந்த இருவரும் கோடானு கோடீஸ்வரர்கள். அதுவும் அவர்கள் கொடுக்கும் நன்கொடையில் நமது மக்களும் அடங்கும்.
http://www.gatesfoundation.org/Pages/home.aspx
http://www.warrenbuffettcentral.com/philanthropy/
http://www.guardian.co.uk/technology/2010/aug/04/us-billionaires-half-fortune-gates
http://marriage.about.com/od/entrepreneurs/p/billgates.htm
தயவு செய்து இதை யாவது படியுங்கள்...
http://givingpledge.org/#enter
“அவர்களுக்கும் நமது இந்திய மக்களுக்கும் என்ன சம்பந்தம்" ஏன் நமது மக்களுக்கு கொடுக்க வேண்டும்.? யோசியுங்கள் உண்மைத் தமிழரே!
Part 8...
Dr. Raja Sekar படம் எடுத்தால் அதன் பெயர். “இதுதாண்டா கொடை..." கொடுத்து கொடுத்து இவர்கள் கை சிவக்க வில்லை. ஏன்? அவர்களிடம் கொடுத்து கொடுத்து அந்த கைகளே இல்லை. அதேசமயம் ஒன்னும் கொடுக்காமல் கொடுத்து கொடுத்து சிவந்த கைகள் என்ற பட்டம். அவர் கையே சிகப்பு. அதனால் அப்படி தவறாக எழுதி இருக்கலாம்!
எந்த நடிகனும் வள்ளல கிடையாது...கலைவாணர் தவிர (அவர் வள்ளல என்பது எனது கணிப்பு). தவறு என்றால் அதையும் மாற்றிக்கொள்ள நான் ரெடி! கவர் வாங்கிய பத்திர்க்கை காரனால் கொடை வள்ளல என்று எழுத முடியும். ஆனால் ஒரு “குடை கூட” அந்த நடிகன் கொடுக்க வில்லை என்றால்? என்ன செய்ய முடியும். தமிழன் நன்றி உள்ளவன். வாங்கிய காசுக்கு அளவுக்கு அதிகமாக குறைப்பான்!
எம்ஜீயார் வள்ளல் தன்மை திமுக வளர்த்த பூதம். அது அவர்களியே முழுங்கி விட்டது. வளர்த்த கடா மாறிலே பாய்ந்த மாதிரி, செடிகள் முள்ளுகளா மாறினா மாதிரி. திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி திமுகவும் கம்முன்னு குந்திக்கிட்டது. இதுதான் உண்மை.
முக்கியமான பின்குறிப்பு உண்மைத் தமிழரே!
நமது விவாதம் எம்ஜீயார் வள்ளல இல்லை எனபது தான். விவாதம் அதை தாண்ட வேண்டாம். அதேமாதிரி , கருணாநிதி அப்படி இல்லையா இப்படி இல்லையா என்று வழக்கம் போல விவாதத்தை திசை திருப்ப வேண்டாம்....
மேலும் இந்த பதிவுலகில் உள்ளவர்களுக்கு:
எதைப் பேசினாலும் கருணாநிதி என்ற ஊறுகாயை தொட்டுக் கொள்ளாமல் சாப்பிட (விவாதம் செய்ய ) பழகிக் கொள்ளுங்கள்...
Post a Comment