இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சாரு நிவேதிதாவுடன் ஒரு சந்திப்பு கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடியில் நடந்தது. அதற்கு சற்று நாள் முன்னால்தான் சாரு தனது வலைப்பூவை கட்டணத்தளமாக மாற்றப்போவதாகக் கூறியிருந்தார். நான் அவரிடம் அவர் அதை செய்து விட்டாரா இல்லை இனிமேல்தான் செய்யப் போகிறாரா எனக் கேட்டதற்கு அவர் அந்த எண்ணத்தையே விலக்கிக் கொண்டுவிட்டதாகக் கூறினார். ஏன் எனக்கேட்டதற்கு ஆனானப்பட்ட சுஜாதாவின் வாசகர்களே அம்பலம் கட்டண தளமாக மாறியதும் அதை பார்ப்பதை நிறுத்தியதாக கேள்விப்பட்டாராம். அவரே அப்படியென்றால் தான் எம்மட்டு என்ற பிரமிப்பு வந்ததுமே ஓசைப்படாமல் அதை கைவிட்டுள்ளார்.
அதன் பிறகு அவர் (அல்லது அவரது புரவலர்கள்) காசு கொடுத்து நடத்தும் தளத்தின் பதிவுகள் திடீரென வைரஸ் தாக்குதலில் மறைந்து போயின. அந்த சந்தர்ப்பத்திலும் அவரை நான் சுஜாதா நினைவுநாள் கூட்டத்தில் சந்தித்து பேசியபோது பேசாமல் பிளாக்கர் சேவைக்கு மற்றிக் கொள்ள ஆலோசனை கூறினேன்.
தேவையின்றி பணம் கொடுத்து இம்மாதிரி வலைப்பூவெலாம் வைத்துக் கொள்ளும் இம்சை பற்றியும் ஒரு பதிவு போட்டேன்.
இதெல்லாம் திடீரென ஏன் மறுபடியும் கூறுகிறேன் என்றால், சாருவின் தளத்துக்கு க்ளிக் செய்து பதிவுகளைப் பார்க்க முயன்றால் இந்தப் பக்கம் வருகிறது. பல விவரங்களை கேட்கிறார்கள். ஆளை விடுங்கள் என அணைத்து விட்டேன். இது யாருடைய அற்புத யோசனை என்பது புரியவில்லை. அப்படியாவது எல்லா கட்டங்களையும் பூர்த்தி செய்து அவரது கட்டுரைகளை படிக்க வேண்டுமா, ஆளை விடுங்கள் என வந்து விட்டேன்.
இந்த தருணத்தில் trade india என்னும் அமைப்பு செய்யும் கூத்துதான் நினைவுக்கு வருகிறது. கணினி வாங்கிய புதிதில் அதன் தளத்தில் இலவச உறுப்பினராகச் சேர்ந்தேன். அதில் இருந்து ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் ஆகியோரது பட்டியல்களை பெற்று மொழிபெயர்ப்பு சேவைகள் பற்றிய ஆஃபர்களை நான் தேர்ந்தெடுக்கும் கம்பெனிகளுக்கு அனுப்பலாம் எனப் பார்த்தேன். அதற்காக ஒரு குறிப்பிட்ட கம்பெனியைத் தெரிவும் செய்தேன். ஆனால் அதன் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை காசு கொடுத்து உறுப்பினரானால்தான் தருவார்களாம்.
அதன் பட்டியல்களில் உள்ளவர்களுக்கு இம்மாதிரி நிபந்தனை இருப்பது தெரியுமா என எனக்குத் தெரியவில்லை. அவர்கள் பட்டியலில் இடம் பெறவே கட்டணம் கட்டியுள்ளனர். நாலு வாடிக்கையாளர்களோ, சேவை அளிப்பவர்களோ அவர்களை தொடர்பு கொண்டால்தானே அவர்கள் வியாபாரமே நடக்கும்? அவர்களிடம் பணம் வாங்கியது போதாது என கேஷுவலாக எப்போதாவது அவர்களது தொடர்பு விவரங்கள் தேடுபவர்களும் பணம் செலுத்த வேண்டும் என்பது எந்த நியாயம்? ஆகவே நான் கண்டு கொள்ளாமல் விட்டேன். கம்பெனியின் பெயர்களை கூகளில் அடித்து கேட்டால் தானே விவரங்கள் தெரிகின்றன, ஆகவே அதில் பிரச்சினை இல்லைதான்.
இதில் தமாஷ் என்னவென்றால், அதே trade india-வின் பிரதிநிதி ஒருவர் என் வீட்டுக்கு வந்து என்னையும் கட்டண உறுப்பினராக்க முயன்றார். இதனால் எனக்கு என்ன லாபம் எனக்கேட்டதற்கு என் பெயரும் மொழிபெயர்ப்பாளர்களின் பட்டியலில் வரும் என்றார். ஆனால் அதனால் எனக்கு என்ன பிரயோசனம்? என்னைப் போலவே இன்னொருவன் என்னை இப்பட்டியல் மூலம் தொடர்பு கொள்ள என்ணினால் அது அவன் கட்டண உறுப்பினனாக இல்லாவிட்டால் அது நடக்காதே? இதை அந்த பிரதிநிதியிடம் கூற அவர் என்ன பதில் தருவதெனத் தெரியாது இடத்தைக் காலி செய்தார்.
பெயரை பதிவு செய்ய கட்டணம் கேட்பது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் கேஷுவலாக பார்ப்பவனும் பணம் கட்ட வேண்டும் என்றால் எப்படி? எல்லோரும் கேனையன் என நினைத்தார்களா இவர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
15 hours ago
11 comments:
Interesting point raised by you.
I also wonder why the publishers charge the 'authors' for publishing research, technical articles on International Journals (of research papers). Those who require needs to buy the articles.. so the publishers earn money. They get money from the people who's research works are published in their journals.
funny, I feel. Ofcourse, there are few publishers who do not charge for some limited number of pages per articles.. Some publishes FREE of cost irrespective of no. of pates. Some charges for extraordinary color graphics / pictures etc only.
சாரு ஒரு லெஜெண்ட்,
அதுனால இப்படியெல்லாம் பேசப்படாது!
லெஜெண்ட் என்ற கம்பெனி பெயரில் ஜட்டி வருதான்னு எனக்கு தெரியாது!
M.Ragavan
Comment allez vous ? Je n'arrive pas trouver la deuxième partie de சுஜாதா இரண்டாம் நினைவு நாள் விழா . J'ai fait une visite éclair à chennai cette année. On essayera de nous voir la prochaine fois.
///சுஜாதாவின் வாசகர்களே அம்பலம் கட்டண தளமாக மாறியதும் அதை பார்ப்பதை நிறுத்தியதாக கேள்விப்பட்டாராம். அவரே அப்படியென்றால் தான் எம்மட்டு என்ற பிரமிப்பு வந்ததுமே ஓசைப்படாமல் அதை கைவிட்டுள்ளார்.///
இது மாதிரி ஒரு ஒப்பீடு தவறு...சுஜாதா ஒரு நல்ல எழுத்தாளர். அதற்க்காக? ஏன் கட்டணம் அதிகமாக இருந்திருக்கலாம். எவ்வளவோ காரணங்கள் உண்டு.
ஒருவனுடைய விலையை அவன் தான் நிர்ணயம் செய்ய வேண்டும்....நாம் அதை செய்யக் கூடாது...
என்றும் எப்போதும் அன்புடன்,
ஆட்டையாம்பட்டி அம்பட்டன் அல்லது அமெரிக்கா அம்பட்டன்!
@Ravia
Quant à la deuxième partie de சுஜாதா இரண்டாம் நினைவு நாள் விழா, voir: http://dondu.blogspot.com/2010/03/27022010-2.html
Salutations,
Dondu N. Raghavan
@ வால்பையன் , ஏற்கனவே உங்களுக்கும் சாருவுக்கும் வாய்க்கால் தகராறு இருப்பதாக கூறி உள்ளீர்கள், இப்போது மேலும் தற்போது ஒரு வரப்பு தகராறுக்கு ஏன் இழுக்கிறீர்கள்,
சைட்டுக்குப் போயி படிக்கற வழக்கொழிந்து காலம் பலவாச்சு. கூகிள் ரீடர் புண்ணியத்தில் எந்த படிவமும் நிரப்பும் அவசியம் இல்லை. ஏதேனும் பின்னூட்டம் இட மட்டும் இது போல் உள்ளே வருவதுண்டு.
சாரு அடிக்கடி தனக்கு 56 வயது, ஆனாலும் இன்னும் இளமையாக இருக்கிறேன் என்று பெருமையடித்துக் கொள்வார். அப்படிப் பார்த்தால் பட்டுக்கோட்டை பிரபாகருக்கு 60 வயது! நம்ப முடிகிறதா? பட்டு, சாருவை விட (தோற்றம்+எழுத்தில்) இளமையாக இருக்கிறார். அதை டமாரம் அடிப்பதும் இல்லை.
அண்ணா!
நான் கீழ் உள்ள இணைப்பிலே வாசிக்கிறேன். எந்த சிக்கலும் இன்றி
வருகிறது.
http://charuonline.com/blog/
charuonline போய் ரொம்ப நாள் ஆச்சு டோண்டு சார். ஒருகாலத்தில் ரெகுலரா விசிட் பண்ற சைட். (???) For long time, it does'n seems to worth reading. Now a days he is using that site as a ventilation of his personal problems/crunch. Nothing is thought provoking. It became that we are not feeling of missing him....
Post a Comment