வாராந்தரி ராணி பத்திரிகைக்கு நான் சற்று நேரம் முன்னால் அனுப்பிய மின்னஞ்சலை கீழே தருகிறேன்.
அன்புள்ள ஆசிரியருக்கு,
சற்று நேரத்துக்கு முன்னால் உங்கள் நியூஸ் எடிட்டருடன் பேசிக் கொண்டிருந்தேன். வாராந்தரி ராணியில் எழுத்தாளர் இந்துமதி அவர்கள் “நல்லதோர் வீணை செய்தே” என்னும் தலைப்பில் எழுதி வந்த தொடர்கதை முடிவடைந்ததாக எனக்குக் கூறப்பட்டது.
அக்கதை சிட்னி ஷெல்டன் எழுதிய “Rage of angels"என்னும் நாவலின் அப்பட்டமான காப்பி. அதே நாவலை ரா.கி. ரங்கராஜன் அவர்கள் “ஜென்னிஃபர்” என்னும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார் (இது முறைப்படி வெளிப்படையாகவே நடந்த மொழிபெயர்ப்பு). அதே கதை சத்யராஜ், அம்பிகா ஆகியோர் நடித்து “மக்கள் என் பக்கம்” என்னும் தலைப்பில் வந்தது. இதில் கொடுமை என்னவென்றால் முதலிலெல்லாம் தமிழ் மசாலா எல்லாம் சேர்த்து அழுவாச்சி சீன்கள் எல்லாம் போட்டு வந்தது. திடீரென கோர்ட்டில் நடக்கும் ஒரு கேஸ் விவரிக்கப்பட்டதுமே புரிந்து விட்டது இது ஜெனிஃபர் கதையின் காப்பி என்று. இருந்தாலும் விடாது படித்து அதை ஊர்ஜிதம் செய்து கொண்டேன். ஆகவே ஒரு வெறுப்பில் ராணி பத்திரிகை வாங்குவதையே நிறுத்தினேன், கடைசி சில இதழ்களாக.
இன்று எதேச்சையாக பார்த்தால் தேவி பாலாவின் கதை வருவதாக அறிந்தேன். இந்துமதியின் கதை முடிந்து விட்டது என்பதையும் அறிந்தேன். அதுதான் ஆச்சரியமாக உள்ளது. இன்னும் எவ்வளவோ அக்கதையில் வரவேண்டியது உள்ளது. பின்னே எப்படி அதற்குள் முடிந்தது?
ஒரு வேளை ராணி பத்திரிகையிலேயே யாராவது கண்டு கொண்டீர்களா?
அது இருக்கட்டும் தேவிபாலாவின் கதையும் முதல் காட்சியிலேயே தேவர் ஃபிலிம்ஸ் 1969-ல் எடுத்த ”அக்கா தங்கை” என்னும் திரைப்படம் நினைவுக்கு வருகிறது (சௌகார் ஜானகி, கே.ஆர். விஜயா, ஜயசங்கர், மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் நடித்தது). என் ஊகம் தவறானால் மகிழ்ச்சியடைவேன். ஆனால் பழைய அனுபவம் என ஒன்று இருக்கிறதே. தேவிபாலாவும் பலமுறை காப்பி அடித்து எழுதியுள்ளார். உதாரணம், குங்குமத்தில் வெளியான “சக்தி” என்னும் நாவல். எழுபதுகளின் துவக்கத்தில் வந்த “சபதம்” என்னும் படத்தின் அப்பட்டமான காப்பி அது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்துமதி போன்ற பிரபல எழுத்தாளர்கள் இவ்வாறு செய்வது வியப்பாகவே உள்ளது. நான் கூட முதலில் நினைத்தேன், சற்றே அந்த நிகழ்ச்சியை மாற்றி எழுதுவார் என. அதெல்லாம் இல்லை அப்படியே காப்பி அடித்து விட்டார். ஆகவே நான் ஒரு வெறுப்பில் ராணி வாங்குவதையே நிறுத்தினேன். இன்றுதான் சற்று நேரம் முன்னால் தேவிபாலாவின் தொடர் “அந்த அந்திநேரம்” இன்றைய இதழிலிருந்து வெளியாவதாக அறிந்து அதை வாங்கினேன்.
சற்றுமுன்னால் வாராந்தரி ராணி பத்திரிகைக்கு ஃபோன் செய்தேன். நியூஸ் எடிட்டருடன் பேசினேன். நான் படிக்காமல் விட்ட இதழ்களில் கதையை இந்துமதி ஒரிஜினலிலிருந்து மாற்றினாரா என்பதை அறியேன். எது எப்படியானாலும் நான் பார்த்தவரை அது காப்பிதான்.
தேவிபாலா ரிகார்டும் இந்த விஷயத்தில் சொல்லும்படியாக இல்லை. சக்தி தொடர்கதையையே எடுத்துக் கொள்ளுங்களேன். (சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது). அப்போது குங்குமத்தின் பொறுப்பில் சாருபிரபா சந்தர் இருந்தார். சக்தியின் கதை சமீபத்தில் 1972-வாக்கில் வெளிவந்த சபதம் என்னும் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி. சாருபிரபா சந்தரிடம் இதை சொன்னவுடனேயே அவர் ஆவலுடன் கேட்டார் “வெள்ளாட்டின் சபதம்”னு பாட்டு வருமே அப்படமா என. ஆகவே அவருக்கும் விஷயம் இப்போது தெரிந்து விட்டது. ஆனால் என்ன பயன்? தேவிபாலா அவர் பாட்டுக்கு கதையை தொடர்ந்தார். ஆனால் ஒன்று, அவருக்கு நான் சொன்னது போய் சேர்ந்து விட்டது போலிருக்கிறது. தனது கதையில் செயற்கையான மாறுதல்களை வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்தார்.
ஒரு முறை பிரபல எழுத்தாளர் ஆதவன் தான் ஏற்கனவேயே எழுதி சன்மானம் பெற்றக் கதையை மீண்டும் ஆனந்த விகடனுக்கு புதிய கதை போல தந்து மீண்டும் பணம் வாங்கிச் சென்றது பற்றி அக்காலகட்டத்தில் விகடனில் விவாதமாக நேரடியாகப் படித்தவன். அது பற்றி நான் சாருபிரபா சந்தரிடம் இத்தருணத்தில் கூறியபோது அவர் அதை விகடனுக்குத் தெரியப்படுத்தியது தானே என கூறிக் கொண்டார். அப்படிப்பட்டவர் இப்போது பத்திரிகையின் பொறுப்பில் இருக்கும்போது அதை தட்டிக் கழித்ததும் சரியில்லைதானே. பிறகு அவருக்கு ஃபோன் போட்டு கேட்டபோது பிரபல எழுத்தாலர்களின் விஷயத்தில் தான் அடக்கிவாசிக்க வேண்டிய கட்டாயத்தை கூறினார்.
பெனிஃபிட் ஆஃப் டவுட் என்பார்கள். ஒரு வேளை சபதம் படத்தின் திரைக்கதை தேவிபாலாவுடையதோ? அப்படியே இருந்தாலும் அதை மீண்டும் ஒரு முறை 30 ஆண்டுகள் கழித்து தொடர்கதையாக வெளியிடுவது நியாயமானச் செயல் அல்ல.
இந்தப் போக்கு பற்றி நான் எழுதிய பதிவுதான் பதிப்பாளர்களின் நாணயமற்றப் போக்கு.
அதிலிருந்து சில வரிகள்:
பல மாத நாவல்கள் வெளி வருகின்றன.அவற்றில் கணிசமானவை ஏற்கனவே பத்திரிகைகளில் தொடர்க் கதையாக வெளி வந்தவையே. ஆனால் சம்பந்தப்பட்ட மாத நாவலில் அதை பற்றி ஒன்றும் கூற மாட்டார்கள். தலைப்பை வேறு மாற்றி விடுவார்கள்.
இந்தப் பழக்கத்துக்கு ஒரு மோசமான உதாரணம் திரு. சாவி அவர்கள். அவருடைய தொடர் கதை "ஓ" மாத நாவலாக உருவான போது "அன்னியனுடன் ஒரு நாள்" என்றப் பெயரில் வந்தது. நல்ல வேளையாக நான் அதை வாங்கி ஏமாறவில்லை. ஓரு சைக்கிள், ஒரு ரௌடி, ஒரு கொலை" என்று 1978-ல் வெளியான தொடர் கதை தொண்ணூறுகளில் வேறு பெயரில் வந்தது. இந்த முறை ஏமாந்தேன். ஆனால் முதல் பாரா படிக்கும் போதே ஏற்கனவே படித்த கதை என்றுத் தெரிந்துப் போயிற்று. சாவியின் இம்முயற்சிகள் எல்லாம் அவருடைய சொந்தமான மோனா பப்ளிகேஷனில் வெளியாயின. ஆகவே அவர் பொறுப்பு இதில் இரட்டிப்பு ஆகிறது.
சாவியின் எழுத்துக்கள் மட்டும் இம்மாதிரி முயற்சிகளில் ஈடுபடுத்தப் பட்டன என்றுக் கூற முடியாது. பால குமாரன், ராஜேஷ் குமார் ஆகியவர்கள் புத்தகங்களும் இம்மாதிரியான முயற்சிகளிலிருந்துத் தப்பவில்லை.
ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் அவசர அவ்சரமாய் பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வண்டி ஏறுகிறோம். வண்டி கிள்ம்பியப் பிறகு ஏமாந்ததுத் தெரிந்து ஙே என்று விழிக்கிறோம்.
ஏற்கனவே ஒரு புத்தகம் தொடர்க் கதையாகவோ அல்லது புத்தகமாகவோ வெளியாகி விட்டது என்றுக் கூறுவது சட்டப்படிப் பதிப்பாளரின் கடமை அல்லவா? பிறகு எந்தத் தைரியத்தில் இந்த நாணயமற்ற வேலை நடக்கிறது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
3 hours ago
48 comments:
பதிவை படிக்க ஆரம்பிச்ச உடனேயே ஒரு சந்தேகம்...சற்று நேரம் முன்னால்னா....1960களா, 70 களா, 80 களா....இதுக்கு விளக்கம் சொன்னாத்தான் மேற்கொண்டு படிப்பேன் :)
கதையை காப்பியடிப்பது plagiarism.
தன் கதையை தானே காப்பியடிப்பது recycling fraud என்று ஆங்கிலத்தில் விளிக்கிறார்கள். இதைத் தடுக்க ஒரே வழி. பப்ளிகேஷன் துறையில் இருப்பவர்கள் கூட்டமைப்பு வைத்து எழுத்தாளர்கள் இப்படி ரீசைக்கிள் செய்யும் போது பிரசுரிக்க முடியாது என்று நிராகரிப்பது தான்.
--
பிரசுரிக்கும் கம்பெனியே இப்படி ஒரே கதையை வெவ்வேறு தலைப்பு வைத்து வெவ்வேறு புத்தகமாகப் போடுவது சட்டப்படி குற்றம் ஆகாதா ? பப்ளிகேஷன் துறையில் இருப்பவர்கள் தான் விளக்கவேண்டும்.
இதையெல்லாம் படிப்பவர்கள் குடும்ப பெண்கள் தானே அவர்களுக்கு தெரியவா போகிறது என்ற அலட்சியம் தான் காரணம்
டுபாக்கூர் பதிவர் மாதிரி டுபாக்கூர் எழுத்தாளர்கள்.
ஆனால் உங்களுக்கு அபார ஞாபக சக்தி
எனக்கு எல்லாம் காலையில் படித்த சினிமா விமர்சனப் பதிவு மதியம் மறந்து விடுகிறது. இதில் எங்கே சிறுகதை, தொடர்கதை எல்லாம் ஞாபகம் வைத்து கொள்ள.
அதுக்குத்தான் படிச்சத உடனே மறந்துடனும்...ஆனா உங்க சமிபகாலம் போன நூற்றாண்டு வரைக்கும் இருக்குதே. நினைவு ஒரு நோய்..மறதி அதிர்ஷ்டம்..:)
//
நினைவு ஒரு நோய்..மறதி அதிர்ஷ்டம்..:)
//
பொஞ்சாதியைப் பார்த்து, அமா, நீங்க யாரு? எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே...நீங்க என் கல்யாணத்துக்கு வந்திருந்தீங்கள்லை ? என்று கேட்கும் அளவுக்கு மறதி வந்தால் அதிர்ஷ்டம் தான்.
(இது மாது +2 டிராமாவில் வரும் கிரேஸி மோகன் ஜோக்)
Sad to know
thuul kilappitingka
வாராந்தரி ராணி பத்திரிகைக்கு நான் சற்று நேரம் முன்னால் அனுப்பிய மின்னஞ்சலை கீழே தருகிறேன்.
அன்புள்ள ஆசிரியருக்கு,
...
இதைப்படிச்சவுடனேயே இதை ஏற்கன்வே எங்கேயோ படிச்ச ஞாபகம் வந்தது. அட..சரிதான். சமீபத்தில் 1961ல் நான் எழுதிய பதிவின் அப்பட்டமான காப்பி. கொஞசம் மாற்றுவார் என்றால் அதுகூட இல்லை.
பதிவாளர்கள் எல்லாம் ஒரு கூடடமைப்பு வைத்து ஒரு காப்பிரைட் வச்சுக்கொள்ளனும் என்பது அவசியமாகிற்து.
Bad to see copying. Don't copy - not just in exams.. but also in these context too.
Infact I stressed the need of "one's own thoughts / views" etc in my latest post too http://madhavan73.blogspot.com/2010/09/blog-post_07.html
உண்மைதான் டோண்டு சார், குமுதத்தில் அன்றைக்கு பிரபல பெண் எழுத்தாளர் ஒருவரின் தொடர்கதையொன்றை ஆரம்பித்தார்கள். அந்தக்கதை சாவியில் நான் எழுதிய தொடர்கதையான 'கங்கையெல்லாம் கோலமிட்டு...' என்ற கதையின் அப்பட்டமான காப்பியாக இருந்தது. உடனடியாக இதனை ஆசிரியர் எஸ்ஏபி அவர்களுக்குத் தெரிவித்தேன். அன்று இரவே என்னுடைய புத்தகத்தை தமிழ்ப்புத்தகாலயத்திலிருந்து வாங்கிப் படித்துவிட்டு குமுதத்தில் தொடங்கிய அந்தப் பெண் எழுத்தாளரின் தொடர்கதையை நிறுத்திவிட்டார். இம்மாதிரி சம்பவங்கள் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
சுஜாதா எழுதிய ஒரு சிறுகதை. பெயர் ஞாபகமில்லை. நீங்களும் படித்திருக்கலாம். கதையை சொன்னால், உங்களுக்கு ஞாபகம் வரலாம். கணவன், அன்று மாலை தான் அலுவலகத்தில் இருந்து வேகமாக வந்து விடுவதாகவும், சினிமாவுக்கு போகலாம் என்கிறான். மாலை. அவன் ஒரு விபத்தில் சிக்கி கொள்கிறான். அவனை ஒருவன் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு வீட்டுக்கு வருகிறான். கதைப்படிக்கும் அனைவருக்குமே, விபத்தில் சிக்கியவனே கணவன் என்கிற ஒரு எண்ணத்தை உருவாக்கி, கடைசியில் காப்பாற்றியவன் தான் கணவன் என்று ஒரு வித திருப்பத்துடன் எழுதி இருப்பார். இதே கதையை ராஜேஷ் குமார் எடுத்து எழுதி இருக்கிறார். சுஜாதா கதையான ப்ரியா திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அப்படத்தின் இறுதி காட்சியில் ரஜினியின் கண்ணை கட்டி அழைத்து போவார்கள். பிறகு ரஜினி தன் கண்ணை தானே கட்டி அதே இடத்திற்கு போவார். இதே காட்சியை ராஜேஷ்குமார் சுட்டு, தன் கதையில் பயன் படுத்தி இருப்பார். இப்படி நிறைய பேரை சொல்லலாம்.
பிரபஞ்சன கூட தனது சிறுகதை ஒன்றை, குறுநாவலாக குங்குமச்சிமிழில் எழுதி இருந்தார்.
Originality consists in concealing the original என்பார்கள். இன்றைய காலகட்டத்தில் 30 வருஷத்திற்க்கு முன்பு எழுதிய நாவலை, MS-WORD- ல் போட்டு, கதாபாத்திர்ங்கள், ஊர் பெயர்கள் ஆகியவற்றை FIND and Change போட்டு மாற்றி புது நாவலாக கொடுத்து விடுகிறார்கள்!
BENNETT cERF ஒரு புத்தகத்தில்,
ஒரு லிஃப்ட் கம்பெனி சேல்ஸ்மென், தன் கம்பனியின் லிஃப்ட்டுகள் மிகவும் பத்திரமானவை; கதவு மூடிக்கொள்ளும்போது சுண்டுவிரல் இருந்தால் கூட உடனே திறந்து கொள்ளூம் என்றெல்லாம் சொல்வார். விடைபெறும்போது கை கொடுப்பார். அவரது வலது கை செயற்கைக் கையாக இருக்கும்!
இதையே ஒரு எழுத்து மாறாமல் தனக்கு நேர்ந்ததாக அனுபவமாக சுஜாதா எழுதி இருக்கிறார்!
சுப்பிரமணிய ராஜு கல்கியில் ஒரு கதை எழுதினார். அதன் ஆங்கில ஒரிஜினலை யாரோ கல்கிக்கு அனுப்ப, கல்கியில் ஆங்கிலக் கதையை ஆங்கிலத்திலும் இவருடை கதையையும் பக்கத்து பக்கத்தில் பிரசுரித்து இருந்தார்கள்... படிப்பவர்கள் படிக்கணுமே தவிர,ஆராய்ச்சியெல்லாம் பண்ணிக்கொண்டிருக்ககூடாது!-
ராம்
அட இதெல்லாம் ஒரு பிரச்சினையா....?!
காப்பியடிப்பதும் நமது கலாச்சாரத்தில் ஒரு அங்கம்தானே!
வால்மீகி இராமாயணத்தை 'நேர்மையாக' காப்பியடித்து கம்பர் ஒரு காவியம் படைக்கவில்லையா? கம்பராமாயணம் தாய்லாந்தின் 'தாய்' (Thai) மொழியில் காப்பியடிக்கப்பட்டு, அந்த நாட்டின் முதன்மை இலக்கியமான 'ராமாகியான்' ஆக இருக்கிறதே! http://en.wikipedia.org/wiki/Ramakien
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட நடனக்கலை - வடமொழிக்கு காப்பியடிக்கப்பட்டு, அது இன்று பரதக்கலை நூலாக இருக்கிறதே?
தமிழிசையே கருநாடக இசையாக 'காப்பியடிக்கப்பட்டு' - இப்போது மொழிமாறி நம்மீதே திணிக்கப்படுகிறதே?
காப்பியடிப்பது என்கிற கலை ஒன்றுமட்டும் இல்லாமல் போயிருந்தால் - ஹாலிவுட், பாலிவுட்-டிற்கு அடுத்ததாக உலகின் மூன்றாவது பெரிய திரைப்பட பகுதியாக கோலிவுட் மாறியிருக்குமா?
காப்பியடிப்பது நமது சிறப்பு தன்மை என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
//
இதைப்படிச்சவுடனேயே இதை ஏற்கன்வே எங்கேயோ படிச்ச ஞாபகம் வந்தது. அட..சரிதான். சமீபத்தில் 1961ல் நான் எழுதிய பதிவின் அப்பட்டமான காப்பி. கொஞசம் மாற்றுவார் என்றால் அதுகூட இல்லை.
பதிவாளர்கள் எல்லாம் ஒரு கூடடமைப்பு வைத்து ஒரு காப்பிரைட் வச்சுக்கொள்ளனும் என்பது அவசியமாகிற்து.
//
அறிவு கெட்ட முண்டம்.
Recycling என்ற்வுடன் எனக்கு இதுதான் ஞாபகம் வருகிற்து.
சுஜாதாவின் முதற்கதை கணையாளியில் வந்தது. ஓரிடத்தில் படிக்கக்கிடைத்தது.
ஒரு இளம்பெண் எதிர்வீட்டுப்பையனின் மீது மையல் கொள்கிறாள். அவள் செய்யும் சேட்டைகளைப்பார்க்கும் தாய்க்கு அதே சேட்டைகள்த் தானும் செய்தோம் என மெல்லமெல்ல புரிகிறது. அப்புரிதலே கதையின் கிளைமாக்ஸ். இது வந்தது 1960க்ளில்
பின்னர் ஒரு ஆனந்தவிகடன் தீபாவளி மலரைப்பார்த்தேன். 1980களில். அதே கதையை புதிதாக எழுதியிருந்தார் சுஜாதா. அப்படியே. பெயர்கள் மட்டுமே மாற்றம்.
முதற்கதை படிக்காத்வர்களுக்கு இது தெரியாது.
என்னது உங்கள் கலாச்சாரமா அருள்! அதுவும் ராமாயணத்தை உங்கள் "கலாச்சாரம்" என்கிறீர்களா...தலையில் பலமான அடி ஏதும் பட்டுவிட்டதா ?
ஆரியப் பார்ப்பான ராமனின் கதை. திராவிட தமிழ் ராவணனை கொல்லும் கதை இல்லையா ?
யாருங்க இது அருளு ? அடி வாங்கறதுக்குனே வறாரு? பித்தம் தலைக்கு ஏறி இருக்கு? என்னைய தெய்கப்பா. கம்பர் மறைக்கலா. remake than பண்ணாரு.
Couple of years back Geetha Bennet - who is living in the US- wrote a short story in ananda vikatan about a family living in a apartment and the in-laws staying in the same building. the plot is about the lady and her husband(the narrator of the story) telling a chain of lies to hide a small incident from her MIL, later the MIL catches them...that was copied from an episode of "Everybody loves raymond" sitcom, popular in the US. I sent an email to vikatan about it but no reply from them...
இது போல் பல நிகழ்வுகள் முன்பிலிருந்து இன்று வரை நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது...
பாலகுமாரன் கதையை பெயர் மாற்றி புதிய கதை போல் வெளியிட்டு, வாசகர்களின் தொடர் கேள்விக்கணைகளால் அவர் நொந்ததை அவரே எழுதி இருந்தார்...
இவர்கள் அனைவரும் தீய சக்தியே...
வஜ்ரா said...
// //அதுவும் ராமாயணத்தை உங்கள் "கலாச்சாரம்" என்கிறீர்களா...தலையில் பலமான அடி ஏதும் பட்டுவிட்டதா ?// //
"காப்பியடிப்பதும் நமது கலாச்சாரத்தில் ஒரு அங்கம்தானே!" என்றுதான் நான் கூறியுள்ளேன். இராமாயணம் நமது கலாச்சாரம் என்று கூறவில்லை.
மற்றபடி அடுத்தவன் மனைவி மீது மோகம் கொண்டதால் உடலெல்லாம் பெண்குறி பெற்ற இந்திரன், ரிக் வேதம், மனுஸ்ம்ரிதி - இவற்றைத் தவிர்த்து பார்ப்பன இதிகாசம் என்று எதுவும் இல்லை. எல்லாம் 'பார்ப்பன மயமாக்கப்பட்ட'இந்திய மக்கள் கூட்டத்தின் கதைகளைதான்.
"காப்பியடிப்பது" என்று வரும்போது - அது ஒன்றும் குற்றமில்லை. உலகமயமாக்கல் சக்திகளின் "அறிவு சொத்துரிமை" சதியில் நாம் சிக்கக் கூடாது என்பதே எனது கருத்து.
மேலைநாட்டு மருந்து நிறுவன தயாரிப்புகளை, இந்திய மருந்து நிறுவனங்கள் காப்பியடிக்கத் தவறியிருந்தால் - இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் பல லட்சம் பேரின் உயிர் காப்பாற்றப்படாமல் போயிருக்கும்!
//
மேலைநாட்டு மருந்து நிறுவன தயாரிப்புகளை, இந்திய மருந்து நிறுவனங்கள் காப்பியடிக்கத் தவறியிருந்தால் - இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் பல லட்சம் பேரின் உயிர் காப்பாற்றப்படாமல் போயிருக்கும்!
//
இது மிகவும் மேம்போக்கான கருத்தாக்கம். மிகவும் ஆபத்தான நிலைப்பாடு கூட.
மேலைநாட்டினர் மருந்தை இந்திய நிறுவனங்கள் காப்பியடிக்கவில்லை. வேறு முறையில் தயார் செய்து விற்கின்றனர். Product patent and process patent என்று இருக்கிறது. அதெல்லாம் இங்கு வேண்டாம்.
எல்லாம் காப்பியடித்துச் செய்தார்கள் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு. அதில் உண்மை இருக்க வாய்ப்புகள் குறைவு. பதிவின் சப்ஜெக்டில் இது இல்லாத காரணத்தால் ஓவர் அன்ட் அவுட்.
வஜ்ரா said...
// //எல்லாம் காப்பியடித்துச் செய்தார்கள் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு// //
எல்லாம் காப்பியடிக்கப் பட்டது என்று கூறவில்லை. காப்பியடிப்பதும் நமக்கு 'வழக்கமான' ஒன்றுதான் என்று கூறுகிறேன்.
எழுதப்படாத வேதம் தலைமுறை தலைமுறையாக காப்பியடிக்கப் படவில்லையா?
கிராமப்புற கோவில்களில் நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் தொடங்கி, இப்போதுவரை "பாரதம் படிப்பதை" காப்பியடித்து காப்பியடித்து பயன்படுத்தவில்லையா?
வேதத்திற்கும் பாரதம் படிப்பதற்கும் ஒவ்வொருமுறையும் - உரிமத்தொகை (ராயல்டி) கொடுத்தால் மக்கள் நிலை என்னவாகும்?
"ஆரியப் பார்ப்பான ராமனின் கதை. திராவிட தமிழ் ராவணனை கொல்லும் கதை இல்லையா ?
"
ராமன் சத்திரியன். ராவணன் பிராமணன்.
கதையையே மாற்றுகிறீர்
காப்பி அல்லது டீ அடிப்பதை விடுங்கள். சுவையாகச் செய்தால் நல்லது தான்.
கண்ணதாசனின் காப்பி சுவையை அறிய நா.காமராசனின் ஒரு நூலை (பொன் வசந்தத்தில் ஒரு கறுப்புக்குயில்?) படிக்க வேண்டும்.
அதுபோல, வைரமுத்துவுக்கு அறிவுமதியின் "கவிப்பேரரசுவின் பாநிரை கவர்தல்.
இப்போதுள்ள முன்னணி எழுத்தாளர்கள் தமிழில் தப்புந்தவறுமாக பன்மை ஒருமை, ஒற்றுமிகுதலில் பிழைகள் என்று ஒன்னுக்குப் போவது போல எழுதுவது சகிக்கமுடிகிறதா?
அது சரி...
சரக்கு தீர்ந்து போச்சுன்னு கடைய மூட முடியாதுல்ல...
யாருக்கு தெரியப் போகுதுன்னு ஒரு எண்ணம்தான்...
ஒரு முறை ஃபெரெட்ரிக் ஃபோர்ஸித்தின் சிறுகதைத் தொகுப்பைப் படிக்கும்போது பொறி தட்டியது. ஆம், ஏற்கனவே சுபா இரட்டையர்கள் அதனைத் தமிழில் எழுதியிருந்தார்கள்.
நல்லா புடிச்சிருக்கீங்க.......
//
ராமன் சத்திரியன். ராவணன் பிராமணன்.
கதையையே மாற்றுகிறீர்
//
அதெல்லாம் தெரியும் சார். அதை சொல்லிச் சொல்லி வாய் வலிச்சது தான் மிச்சம்.
அருள் கேட்டுக்கொண்டதாக இல்லை.
திராவிட அரசியலைப் பொருத்தவரை ராமன் ஒரு பார்ப்பான். ராவணன் திராவிடக் குலக்கொழுந்து.
ஆகவே அப்படி கேள்வி கேட்கப்பட்டது.
@Arul
copy அடிப்பதற்கும் என்பதற்கும் story retold வித்யாசம் இருக்கு என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கணுமே.
அப்புறம் நியாமான கேள்விகளுக்கு மட்டும்நீங்க பதில் சொல்லுவதே இல்லையே. பிறர் சிந்தனையின் வழி தான் எப்போதும் உங்கள் புரிதல் இருக்குமோ ?
தமிழ் உதயம் கூறிய சுஜாதாவின் கதையினை 'கேபிள் சங்கர்' தனது கதை என்று
'accident ' என்று குறும் படமாக இயக்கி உள்ளார். அதற்க்கான இணைப்பு இதோ.
http://cablesankar.blogspot.com/search?updated-min=2007-01-01T00%3A00%3A00%2B05%3A30&updated-max=2008-01-01T00%3A00%3A00%2B05%3A30&max-results=8
@நாகராஜன்
நீங்கள் கூறியது சரிதான். கேபிளின் அப்பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒருவர் செய்யும் தவறு மற்ற எழுத்தாளர்கள் மீதும் சந்தேகம் கொள்ள வைக்கிறது...
டோண்டுவின் இப்பதிவை ‘டீ’ அடித்து - அதுதான் சார் கொஞ்சம் உல்டா பண்ணி - என் பதிவில் போடப்போறேன்.
எனி அப்ஜக்சன்?
68-70 வருடங்களின் வாக்கில் குமுதத்தில் “ஒளிவதற்கு இடமில்லை” என்ற தொடர்கதை வெளிவந்தது. இதை எழுதியவர் யார் என்பது நினைவில்லை. ஆனால் அவர் பெயர் பிரபலமில்லாதது. இதே கதை வரிக்கு வரி பெயர்கள் உட்பட எதுவும் மாற்றப்படாமல், ஐந்தாறு வருடங்களுக்கு முன் பாக்யா வில் வெளி வந்தது. தலைப்பின் பெயர் நினைவில் இல்லை. எழுதியவர் பெயர். மிகப் பிரபலமான எழுத்தாளரும், குமுதம் இதழின் முன்னாள் துணை ஆசிரியருமான ரா.கி.ரங்கராஜன்!. பாக்யாவில் இந்தத் தொடரைப் பார்த்தவுடனே பளிச்சென குமுதத்தில் வந்த ஒளிவதற்கு இடமில்லை ஞாபகத்தில் வந்து விட்டது அந்த அளவிற்கு அந்தக் கதை மனதில் நின்றிருந்தது. பிரபல எழுத்தாளர், வேறு ஒருவர் எழுதியதை இப்படியும் தன் பெயரைப் போட்டு வெளியிடுவாரா என ஆச்சரியப் பட்டேன்!.
நான் முன்பு சொன்ன குமுதத்தில் வெளிவந்த “ஒளிவதற்கு இடமில்லை” என்ற தொடரை எழுதிய எழுத்தாளரின் பெயர் இப்போது நினைவுக்கு வந்துவிட்டது. அவர் பெயர் D.துரைசாமி. யாருக்காவது அவரைப் பற்றித் தெரியுமா?.தகவல் இருந்தால் சொல்லலாம்.
@நல்லதந்தி
நீங்கள் சொன்ன கதையை நானும் படித்திருக்கிறேன். ஹீரோ பெயர் ரமணன் என்றும் வில்லன் பெயர் நஞ்சுண்டன் என்றும் நினைவு. டி. துரைசாமி என்பதும் சரியே.
ஆனால் அது ரா.கி.ர. வின் புனைப்பெயர் என்றே நினைக்கிறேன், ஏனெனில் அத்தொடர்கதையில் அவரது டச் அதிகம் தென்பட்டது.
மோகினி என்னும் புனைப்பெயரில் அவர் எழுதிய சரித்திர நாவல் “அடிமையின் காதல்”. ஆகவே அவர் புனைப்பெயரில் எழுதுவது புதிதல்ல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒளிவதற்கு இடமில்லை எழுதியது ரா.கி. ரங்கராஜன்தான். கிராம நூலகத்தில் அவர் பேரில் இந்த புத்தகத்தை முப்பது முப்பத்தைந்து வருஷத்துக்கு முன் படித்திருக்கிறேன்.
நீங்கள் சொன்னது போல் அந்தத் தொடரில் திரு.ரா.கி.ரங்கராஜனின் சரளமான,அற்புதமான நடை இருப்பது உண்மையே நானும் அவ்வண்ணமே நினைத்தேன். இருந்தாலும் புனைப் பெயரை மோகினி என்று வைக்கும் போது அது புனைப் பெயர் என்பது நன்கு விளங்குகிறது.ஆனால் டி.துரைசாமி என்று இன்ஸியலோடு வைத்துக் கொள்வது என்ன மாதிரி வகை என்பது புரியவில்லையே.
டி. துரைசாமி என்பது ரா.கி.ர. வின் 20+ புனைப்பெயர்களில் ஒன்று. -- ராம்
பொதுவாகவே ராஜேஷ் குமார் கதைகள் என்னை ஒரு போதும் ஈர்த்ததில்லை. போன வருடம் ஒரு பத்துப் பதினைந்து துப்பறியும் சிறு கதைகள் கல்கியில் எழுதியிருந்தார். கல்கியும் இந்த ஒவ்வொரு கதையின் முடிவிலும் வாசகர்களுக்கு போட்டியும் வைந்திருந்தது.
இவற்றைப் படித்தவுடனேயே "சுட்ட சமாச்சாரம்" என்று தெரிந்து விட்டது. கூகிளிட்டுப் பார்த்தால், இந்தக் கதைகளுக்கான கருத்து அனைத்தையும் ஒரே தளத்திலிருந்து எடுத்தாண்டிருப்பது தெரிந்தது.
- சிமுலேஷன்
அடுத்தவர் எழுதிய கதைகளை சொந்தக் கதைகள் என்று வெளியிட்டவர்களைத் தோலுரித்த உங்கள் அறச் சீற்றம் பாராட்டுக்குரியது. அதேபோல, அந்தக் காலத்தில் கிருத்துவப் பாதிரியார்கள் இந்து மதம் பற்றிப் பேசிவந்த அவதூறுப் பிரச்சாரங்களை எல்லாம் நானே சொந்தமா யோசிச்சுக் கண்டுபிடிச்சுச் சொல்றேன் என்று புளுகிய ஈவேரா பற்றிய உண்மைகளை யார் வெளியிடப் போகிறார்களோ?
D. Duraisamy = "Detective" Duraisamy (:-)
அப்படியே....நம்ம டோண்டு மாமாவுக்கும் "Detective" டோண்டு னு ஒரு பேர் குடுக்கலாம்னு நினைக்கிறேன்!!!
DONDU=Detective ON Duty.
காவ்யா விஸ்வனாதன் கேட்டகரியா ? போச்சு.
இந்துமதி அவர்கள் காவ்யா விஸ்வனாதன் மாதிரி "அப்படி" என்றால் ரவி ஸ்ரீனிவாஸ் வக்காலத்துக்கு வந்துடுவார். அப்புறம் டோண்டுவும் சேர்ந்துக் கொள்வார்.
ஆனால் இந்துமதி "அப்படி" இல்லை போல தெரியுது
What is originality? Undetected plagiarism. - Dean Inge
Post a Comment