இன்று விற்பனைக்கு வந்த மேற்சொன்ன துக்ளக் இதழில் வந்துள்ள அட்டைப்பட கார்ட்டூன் தூள் ரகத்தைச் சேர்ந்தது. “நேசம் புதிது” என்னும் படத்தில் வரும் சங்கிலி முருகன் மற்றும் வடிவேலு பங்கேற்கும் பஞ்சாயத்து காட்சியை இங்கு அரசியல் கார்ட்டூனாக்கியிருக்கிறார்கள்.
சங்கிலி முருகனாக சுப்ரீம் கோர்ட், வடிவேலுவாக சி.பி.ஐ.
கார்ட்டூனை ஸ்கேன் செய்து போட நேரமில்லாததால் வசனத்தை மட்டும் போட்டு விடுகிறேன். படம் இல்லாத குறையை ஈடு செய்ய சம்பந்தப்பட்ட அக்காட்சியின் நேரொளியையும் கீழே தருகிறேன். முதலில் வசனம்.
சுப்ரீம்கோர்ட்: 2 G ஸ்பக்ட்ரம்லே...
சி.பி.ஐ.: என்ன 2 G ஸ்ப்க்ட்ரம்லே?
சு: முறையா ஏலம் விடாம...
வ: என்ன முறையா ஏலம் விடாம?
சு: வேண்டியவங்களுக்கே ஒதுக்கீடு செஞ்சு...
வ: என்ன வேண்டியவங்களுக்கே ஒதுக்கீடு செஞ்சு?
சு: 70000 கோடி ரூபா ஊழல்...
வ: என்ன 70000 கோடி ரூபா ஊழல்?
சு: இதைப் பத்தி ஒண்ணுமே தெரியாதா?
வ: என்ன இதைப் பத்தி ஒண்ணுமே தெரியாதா?
அப்படத்தில் அடாவடி செய்த அப்பாத்திரமே உயிருடன் இருந்து சி.பி.ஐ.யின் இந்த அழிச்சாட்டியத்தைப் பார்த்தால், நம்மள இப்படியெல்லாம் காப்பி அடிக்க ரூம் போட்டு யோசனை செய்யறாங்களேப்பா, அவ்வ்வ்வ்வ்வ் என அழும்போல ஆகிவிடுவார்.
நான் ஏற்கனவே எனது இப்பதிவில் கூறியபடி:
“ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மதம், இனம், ஜாதி எல்லாவற்றையும் கடந்தவர்கள். ஊழல் செய்கிறார்கள். மாட்டிக் கொண்டாலும் தங்களுக்கிருக்கும் பிற திறமைகளை உபயோகித்து பிழைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் சற்றே சலுகை தர முடிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதாகப்பட்டது தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த அரசியல்வாதி என்றால், ஒரு குறிப்பிட்டத் தொகை அளவுக்கு ஊழல் செய்யலாம் என நிர்ணயித்து விடலாம். அந்தக் குறிப்பிட்ட தொகையும் ராசா போன்றவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டுமானால் 2000 கோடி ரூபாய்க்கு குறையாமல் இருக்க வேண்டும். அப்படி வைத்தால் தினகரனும் automatically covered. ஆகவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய்”.
அது அப்படித்தான் என ஆயாசம் கொள்பவர்கள் கொஞ்சமாவது வடிவேலு “நேசம் புதுசு” படத்தில் வரும் அக்காட்சியைப் பார்த்து சிரித்தாவது ரிலேக்ஸ் ஆகிக்கொள்ளட்டுமே.
அக்காட்சி எப்படத்தில் வருகிறது எனத் தெரியாததால் கேபிள் சங்கருக்கும் உண்மைத் தமிழனுக்கும் ஃபோன் போட்டுக் கேட்டால் ‘தெரியாது’ன்னு சொல்லிட்டாங்கல்ல. இருந்தாலும் இந்த டோண்டு ராகவன் விடுவானா, யூ ட்யூப்பில் வடிவேலு பஞ்சாயத்துக் காமெடிகள் என (ஆங்கிலத்தில்தான்) போட்டு தேடியதில் கெடச்சுச்சு இல்ல! இப்ப பாருங்க!
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் சேர்க்கை: இட்லி வடையின் உபயத்தால் துக்ளக் அட்டைப்பட கார்ட்டூனும் இப்போது இங்கே. நன்றி இட்லிவடை.:
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
10 hours ago
12 comments:
nice comparison
டோண்டு சார் ஸ்பெக்ட்ரம் காட்சிகள் அருமை. நன்றாக சிரித்தேன். எனக்கு அது போல் வசனம் தோன்றியது.
சங்கிலி முருகனாக சுப்ரீம் கோர்ட், வடிவேலுவாக சி.பி.ஐ.
கார்ட்டூனை ஸ்கேன் செய்து போட நேரமில்லாததால் வசனத்தை மட்டும் போட்டு விடுகிறேன்.
கோர்ட்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமால் கோவிலுல...
சி.பி.ஐ.: என்ன பெருமாள் கோவிலுலே?
சு: கூலிப் படைகளால் கொலைசெய்யப்பட்ட...
வ: என்ன கொலை செய்யப்பட்ட?
சு: கோவில் தருமகர்தா சங்கரராமனை....
வ: என்ன சங்கரராமனை ?
சு: நீங்க தான் கொல்லச் சொன்னதாக...
வ: என்ன கொல்லச் சொன்னதாக ?
சு: இதைப் பத்தி ஒண்ணுமே தெரியாதா?
வ: என்ன இதைப் பத்தி ஒண்ணுமே தெரியாதா?
அப்படத்தில் அடாவடி செய்த அப்பாத்திரமே உயிருடன் இருந்து சி.பி.ஐ.யின் இந்த அழிச்சாட்டியத்தைப் பார்த்தால், நம்மள இப்படியெல்லாம் காப்பி அடிக்க ரூம் போட்டு யோசனை செய்யறாங்களேப்பா, அவ்வ்வ்வ்வ்வ் என அழும்போல ஆகிவிடுவார்.
“கொலை செய்யும் ஆசாமிகளுக்கு மதம், இனம், ஜாதி எல்லாவற்றையும் கடந்தவர்கள். கொலை செய்கிறார்கள். மாட்டிக் கொண்டாலும் தங்களுக்கிருக்கும் பிற திறமைகளை உபயோகித்து பிழைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களில் பார்பன சாமியார்களுக்கு சற்றே சலுகை தர முடிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதாகப்பட்டது பார்பன சாமியார் லோக குரு என்றால், ஒரு குறிப்பிட்டத் எண்ணிக்கைக்குள் கொலை செய்யலாம் என்கிற மனு தரும சூத்திரப் படி நிர்ணயித்து விடலாம். அந்தக் குறிப்பிட்ட கொலையும் பெரியவா போன்றவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டுமானால் கொலை செய்யப்பட்டவர் சக பார்பனர் என்றாலும் கொலையாகது, மற்றவர்களுக்குத்தான் பார்பானைக் கொன்ற பிரம்மஹத்தி தோசம் அப்படி நடந்தால் துக்ளக்கும். automatically covered. ஆகவே இலையில் மாவடுவும் தயிர்சாதமும்.
அது அப்படித்தான் என ஆயாசம் கொள்பவர்கள் கொஞ்சமாவது வடிவேலு “நேசம் புதுசு” படத்தில் வரும் அக்காட்சியைப் பார்த்து சிரித்தாவது ரிலேக்ஸ் ஆகிக்கொள்ளட்டுமே.
அந்த கொலை சம்பவம் எங்கு நடந்தது என்று இந்துத்துவ நண்பர்களிடம் கேட்டால் தெரியாது என்றார்கள் இருந்தாலும் கூகுளில் சங்கராமன், அப்பு, ரவிசுப்ரமணியன் என்று தேடிப்பாருங்கள், பெரியவா படத்தோடு தகவல்கள் கொட்டும்.
//சங்கராமன், அப்பு, ரவிசுப்ரமணியன் என்று தேடிப்பாருங்கள், பெரியவா படத்தோடு தகவல்கள் கொட்டும்.//
கண்டிப்பாக கோவி அவர்களே. கூடவே கருணாநிதியின் அரசு செய்யும் சொதப்பல்களும், அவை ஏன் என்பதற்கும் தேவையான விஷயங்களும் கிடைக்கும் என நம்புகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கோவி.கண்ணன் said...
////
HA HA RIGHTU......
கோவி.கண்ணன் said...
// //அவர்களில் பார்பன சாமியார்களுக்கு சற்றே சலுகை தர முடிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. // //
லோகத்தைக் காக்கிற லோக குரு அப்பிடி இப்பிடி இருக்குறது ஒரு பெரிய விஷயமா? பெரியவாளுக்கு எல்லா உரிமையும் இருக்கு.
அந்த காலத்துல கோயிலைச் சுற்றி ஏராளமான 'ஆடல்மகளிரை' மன்னர்கள் 'ஏற்பாடு செய்து' வச்சுருந்தாங்க. அதனால, அவாளுக்கெல்லாம் நினைத்த நேரத்துக்கு நிறைய 'ஆடல்மகளிர்' கிடைச்சாங்க.
மாலை நேரத்துல பரதக்கலை வளர்த்து, இரவில் அவாள்கள் ஆசையையும் தீர்த்தாங்க.
இப்போ இருக்கிற மன்னர்களுக்கு அந்த அளவுக்கு அக்கறை இல்லாமல் போயிருச்சு! ராஜராஜனுக்கு விழா எடுத்து என்ன பிரயோசனம்? - அவனைப்போல கோயிலை சுத்தி பரதக்கலை வளர்க்க தெரியலையே!
Scanned copy of this cover page is already available in idlyvadai.
அது என்னமோ நம்ம மக்கள்ஸ் ஒன்றுக்கு இன்னொன்றை உதாரணம் சொல்லி சமாதானப் படுத்திக் கொள்ளுவதையே வழக்கமாக வைத்து இருக்கிறார்கள்.
ஒருவர் செய்த பல கோடி ரூபா ஊழலுக்கு அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு கொலை சரியாப் போச்சு . நல்லா இருக்கு
கோவி அண்ணன்தான் சுப்ரீம் கோர்ட்டு (அவருதான் எல்லாம் தெரிஞ்ச அறிவுஜீவி என்பது எல்லோருக்கும் தெரிந்ததால்), மேலும் அவரே டபுள் அக்டிங், அதாவது சி பி ஐ (எல்லாம் தெரிஞ்சவருக்கு CBI தெரியாதா?)
கோர்ட்டு : கருத்து ...............
சி பி ஐ : ஆமாம் கருத்து.....
கோ : மூளை...
சி: அமாம மூளை
கோ: பகுத்தறிவு.......
சி: அமாமாம் பகுத்தறிவு.......
கோ: அதாங்க அறிவு..
சி: அமாம் அறிவு....
கோ: அதான் மத்தவன் எவனுக்கும் இல்லேன்னு நீங்க சொல்லுவீங்களே
சி: என்ன மத்தவனுக்கு இல்லையா?
கோ: நீங்கதான் சொல்லிகிட்டே இருப்பீங்களே
சி: என்ன சொல்லிகிட்டே இருப்பீங்களா?
கோ: அதாங்க உங்களுக்கு இருக்கு மத்த எவனுக்கும் இல்லையின்னு
சி: என்ன உங்களுக்கு இருக்கா, மத்தவனுக்கு இல்லையா?
கோ: இதபத்தி ஒண்ணும் தெரியாதா?
சி: என்ன இதபத்தி ஒண்ணும் தெரியாதா?
உளரும் ஆசாமிகள் மதம் இனம் ஜாதி எல்லாவற்றையும் கடந்தவர்கள். நாளுக்கொரு பக்கம் என்று உளறுகிறார்கள், இருந்தும் அதை யாரும் படிக்காததால், கிறுக்கு என்று புரிந்துகொள்ளப்படாமல் பிழைப்பை நடத்துகிறார்கள். இதில் பகுத்தறிவு என்று கூறிக்கொண்டு கண்டதை பேசும் டுபாகூர்களுக்கு சற்று சலுகை
தர முடிவு செய்தாலும் ஆச்சரிய படுவதற்க்கில்லை. அதாகப்பட்டது, பகுத்தறிவு மற்றும் சுய மரியாதை என்ற போர்வையில் பிதற்றும் பித்துகுளிகளுக்கு
வாரத்தில் ஆறு நாளும் உளற உரிமை உண்டு என்று பகுத்தறிவுவாத சட்டத்தின்படி நிருணயித்து விடலாம். அந்த குறிப்பிட்ட உளறல்களும் நாங்கதான் பகுத்தறிவு என்று கொடி தூக்கும் சக லூசுகளுக்கு சாதகமாக இருக்க வேண்டுமானால், உளறுபவர் பகுத்தறிவாளராக இருந்தாலும் அது உளறல் ஆகாது.
மற்றவர்களுக்குதான் உளறினால் மடையன் பட்டம். அப்படி நடந்தால் இதை போன்ற அறிவாளிகளும் Automatically covered. ஆகவே வலையில் உளறலும்
வயித்தெரிச்சலும்!
அது அப்படித்தான் என ஆயாசம் கொள்பவர்கள் கொஞ்சமாவது வடிவேலு “நேசம் புதுசு” படத்தில் வரும் அக்காட்சியைப் பார்த்து சிரித்தாவது ரிலேக்ஸ் ஆகிக்கொள்ளட்டுமே.
இந்த மாதிரி உளறல்கள் எங்கு நடக்கின்றது என்று பகுத்தறிவு நண்பர்களிடம் கேட்டால், தெரியாது என்கிறார்கள் இருந்தாலும் கூகிளில் கோவிகண்ணன், *&^(&, **(&* என்று தேடிப்பாருங்கள், பெரியார் படத்தோட தகவல்கள் கொட்டும்!
Nalla thaaney poikutu irunthudu....
Ennada ithu commentu yeosikiravangaluku,
"ippadi sambantha sambantham illama commentula olarina, perum pugazhum kedaikumnu sonnanaga athaan konjam try panni paakkalamenu..."
"பகுத்தறிவு மற்றும் சுய மரியாதை என்ற போர்வையில் பிதற்றும் பித்துகுளிகளுக்கு
வாரத்தில் ஆறு நாளும் உளற உரிமை உண்டு என்று பகுத்தறிவுவாத சட்டத்தின்படி நிருணயித்து விடலாம்"
வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களுக்கு வாரம் ஏழு நாளும் -இல்லையில்லை எட்டு நாளும் [ பகுத் -அறிவு இருந்தால் எண்ணிக்கையெல்லாம் ஒரு பொருட்டல்ல ] உளற உரிமை உள்ளது.
ஆறு நாள் மட்டுமே என்பது மனித உரிமை மீறல்.
யோவ் திரு அனானி,
என்ன புரியாம பேசுதீங்க.... ஏழாவது நாளுல்ல வாஸ்து பார்க்கணும், ஜோசியம் பார்க்கணும். அதுக்கு மேல சுயமரியாதை சானேல்களில் மானாட, போட்டிக்கு போட்டி, குத்துபாட்டு போன்றவற்றை பார்த்து பகுத்தறிவை வளர்க்கணும்..............எல்லாம் முடிச்சு அடுத்த வார முதல் நாள் வந்து விடும் என்ற நினைப்பில், அந்த ஏழாவது நாளில், வயித்தில் கரைந்து போன பகுத்தறிவை எனிமா போட்டு வெளிய எடுக்க என்ன செய்யவேண்டுமோ, அதை செய்ய வேண்டும்..ஏனென்றால் அடுத்தநாளில் ஒரு பதிவு போட்டாலும் சும்மா பகுத்தறிவு அதிரணுமில்ல?
மேலே உள்ளது போல சொல்லத்தான் ஆசை. ஆனால் பாருங்க, சரியான காரணம், இவர்களுக்கு வீட்டிலிருந்து இந்த வெட்டி பகுத்தறிவு பதிவுகளை சும்மா செய்ய முடியாதே. ஆபிசில்தானே ஓசியில் கணினி கிடைக்கும். ஏழாவது நாளில் கண்டிப்பா லீவுதானே. ஆதலால் பகுத்தறிவு முற்போக்கு நோய் ஆபிசில் மட்டும்தான் வரும், ஏனென்றால் அங்கதான் கேட்க்க ஆள் இல்லை.....எந்த கருமத்தை வேண்டுமானாலும் எழுதலாம்....
govi kannan the most intellligent personin the world already gave his judgement for jayendiran.
immediately he should be excecuted. who knows more than govi kannan?
Post a Comment