வால்பையன் கேட்டுக் கொண்டதற்கிணங்க எனக்கு பிடித்த பாடல்களை இங்கே பட்டியலிடுகிறேன்.
அவர் சொன்னதுஇ போல எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளில் முக்கிய இடம் வகிப்பது மச்ச மச்சினியே பாட்டுதான், ஸ்டார் படத்தில் பிரசாந்த் மும்தாஜ் நடனத்துடன் வருகிறது. அப்பாட்டை யூட்யூபில் இருந்து ஏதோ ஒரு நாதாரி சொன்னான் என எடுத்து விட்டார்கள். ஆகவே அதே ட்யூனில் வரும் ஹிந்தி பாடலை இங்கு சுட்டுகிறேன். ருத் ஆ கயீ ரே என வரும் அப்பாடலில் நடிப்பு ஆமிர்கான் (லகான் புகழ்) மற்றும் (அழகி புகழ்) நந்திதா தாஸ்.
ஆனால் ஆல் டைம் ஃபேவரைட் என்றால் சமீபத்தில் 1964 தீபாவளி ரிலீசாக வந்த படகோட்டி பாடல்கள்தான்.
எல்லா வகைகளுக்கும் சேர்த்து என் மனதில் முதல் ரேங்க் பெறும் பாடல் பெண் தனிக்குரல், படகோட்டியில் வரும் என்னை எடுத்து தன்னைக் கொடுத்து என்னும் பாடல்:
டூயட் ஒரு பக்க ரிகார்டிங், தொட்டால் பூமலரும். இதைத்தான் ரீமிக்ஸ் எனக்கூறி பின்னால் எஸ்.ஜே. சூர்யா என்பவர் கற்பழித்தார். அப்பாடல்:
ஆண்குரல் சோலோ, அதே படகோட்டி படம்தான், கடல் மேல் பிறக்க வைத்தான்:
டூயட் இரு பக்க ரிகார்டிங்கிலும் படகோட்டிதான் மன்னிச்சுக்கங்கப்பூ. அதன் வீடியோ தலைகீழாக நின்றாலும் எம்பெட் செய்யக் கிடைக்கவில்லை, ஆகவே முழு பாடல் வரிகள்:
பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ
கொத்தும் கிளி இங்கிருக்க
கோவைப் பழம் அங்கிருக்க
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ
இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக
இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு
இல்லாத ஆசையில என் மனச ஆடவிட்டான்
ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே
ஓடம் விட்டு போனானே ஓடம் விட்டு போனானே
ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு
மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து
பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு
மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போனேனே
மை எழுதும் கண்ணாலே போய் எழுதிப் போனாளே
ஆசைக்கு ஆசை வச்சேன்
நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய்
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு
வாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து
ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு
ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன்
நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க
நான் மட்டும் இங்கிருக்க ...நான் மட்டும் இங்கிருக்க
தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க
சாட்சி சொல்லும் சந்திரனே நீதான் ஓடிப்போய் தூது சொல்லு
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ
அன்புடன்,
டோண்டு ராகவன்
Manasa Book Club, Chennai.
-
Hi Sir, Hope you’re doing well. Manasa Publications has launched the
‘Manasa Book Club’ — a monthly gathering for readers and writers. The meet
will be on ...
8 hours ago

6 comments:
நல்லா இருக்கு தல !!
அது என்னமோ தெரியல, எனக்கு எல்லா நடிகையையும் பிடிச்சிருக்கு, சரோஜாதேவியை தவிர!
அந்த மேக்கப்பும், ஓவர் ஆக்டிங்கும் சகிக்கல!
//வால்பையன் said...
அது என்னமோ தெரியல, எனக்கு எல்லா நடிகையையும் பிடிச்சிருக்கு, சரோஜாதேவியை தவிர!
அந்த மேக்கப்பும், ஓவர் ஆக்டிங்கும் சகிக்கல//
*******
வாலு....வாலு.... நீங்க என்ன கிண்டல் பண்றீங்கன்னு தெரியுது.. அப்புறம் நான் உங்க கிட்ட பேசவே மாட்டேன்...
(இங்கே வாலு என்றிருப்பதை பாலு என்று மாற்றி போட்டு பார்த்தால், அப்படியே “அன்பே வா” படத்தில் எம்.ஜி.ஆர். & சரோஜா தேவி காட்சி வரும்...
::))
நிறைய 'சமீபம்' கால் நூற்றாண்டுக்கு முன்னாடி மாதிரி இருக்கே சார்?
என் வலைத்தளத்திற்கு வந்து பின்னூட்டம் இட்டதிற்கு நன்றி ராகவன். நீங்கள் நீயூ ஜெர்ஸிவிற்கு வந்தால் நான் உங்களை ரோலர் கோஸ்டில் அழைத்து செல்கிறேன். உங்கள் போட்டோ பார்த்தேன் இன்னும் உங்கள் எழுத்தை போல இளமையாகத்தான் இருக்கிறிர்கள், வாழ்க வளமுடன்.
Post a Comment