இதை விட கேவலமாக திட்ட வேண்டும் எனத் தோன்றுகிறது இந்த முட்டாள் ரசிகர்களை. ஓக்கே முதலில் இப்பதிவின் பின்புலத்தைக் கூறிவிடுகிறேன். விகடனில் வெளியானதாக சொல்லி இட்லிவடையில் வந்த இக்கடிதம்தான் இப்பதிவுக்குக் காரணம்.
விகடனில் ரஜினிக்கு கடிதம். ( இதுவும் வாசகர் விருப்பம் )
அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!
உங்களிடம் நேரில்தான் பேசவே முடியாதே... சில விஷயங்களை மனசைவிட்டு தங்களின் காலடியில் இறக்கிவைக்கவே இந்தக் கடிதம்! தமிழகத்தில் நிறைய அரசியல்வாதிகள் தலைவராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், எல்லோரையும் யாரும் இப்படி அன்பொழுக அழைப்பது இல்லை. எந்தக் கட்சியையும் தொடங்காதபோதே, 'தலைவா' என்று உயிர் உருக உங்களை அழைத்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒரு துளி நான்.
நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா தலைவரே? நாங்கள் சந்தோஷமாக இல்லை! 'போக்குவரத்து நெரிசல், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் மகள் திருமணத்துக்கு வரவேண்டாம்' என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இதே அறிக்கையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது விடுவீர்களா? அப்போதும் தியேட்டரைச் சுற்றிலும் கூட்டம், போக்குவரத்து நெரிசல், பிதுங்கும் ஜனத்திரள் எல்லாமே இருக்குமே!
இந்த நேரத்தில், மூத்த மகள் மணவிழா சென்னை பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் ஹாலில் நடந்ததும் ஞாபகம் வருகிறது. கோட்டு சூட்டு போட்டவர்களையும், கார்களில் வந்தவர்களையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றீர்கள். ஆனால், நாங்களோ மண்டப வாசலிலேயே சத்யநாராயணா மூலம் கெடுபிடியாக வெளியே தள்ளப்பட்டோம். வெள்ளித் திரையில் உங்களுக்கு கற்பூர
ஆரத்தி எடுத்த எங்களின் கண்களில், கண்ணீர்த் திரை அப்போது வழிந்தது நிஜம். உங்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஊருக்கே சோறு போட்டவர்கள், 'உள்ளே வராதே' என்று விரட்டி அடிக்கப்பட்டோம்.
அதே மண்டபத்தில் நடிகர் பிரபுவின் மகன் கல்யாணம். திருமணத்துக்கு முதல் நாள் ரசிகர்களை மண்டபத்துக்கு அழைத்து, மணமக்களை அறிமுகப்படுத்தி விருந்து கொடுத்தார். அந்த பாசத்தை உங்களிடம் நாங்கள் எதிர்பார்த்தது தவறா? ரசிகன் கட்டும் தோரணம் வேண்டும்... கட்-அவுட் வேண்டும்... டிக்கெட் காசு வேண்டும்... நாங்கள் மட்டும் வேண்டாமா? பெரிய பெரிய வி.ஐ.பி-க்களோடு எங்களைச் சேர்த்து வைத்து வரவேற்க வேண்டாம்... உங்கள் குடும்பத்தின் இந்த சந்தோஷ நிகழ்ச்சியை முன்னிட்டு எங்களுக்கென்று தனியாக ஓரிரு மணி நேரம் நீங்கள் ஒதுக்கக் கூடாதா? மேடைகளிலும், அறிக்கைகளிலும் உங்களைத் தூற்றி நகையாடியவர்களுக்குக்கூட நேரில் போய் பத்திரிகை வைத்தீர்களே... தூஷித்தவர்களுக்கு விருந்து வைத்து போஷிக்கிறீர்கள்...... உங்களை வாரி அணைத்தவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்தலாமா?
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். நீங்கள் திடீரென்று விமான நிலையத்தில் ஸ்டைலாக நின்றுகொண்டு, 'இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு' என்று போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிடுவீர்கள். உங்கள் வார்த்தையை உயிராய் சுமந்து ஓடியாடி உழைப்போம். அரசியல்வாதிகள் எங்களைத் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலையாகத் தூக்கி வீசிவிடுவார்கள். ஒரு தடவை தி.மு.க-வை ஆதரிக்கச் சொல்வீர்கள். அடுத்த தரம், ஜெயலலிதா வீட்டில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் போட்டோ ரிலீஸ் ஆகும். எது சொன்னால் என்ன... மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக ஆடி, கடைசியில் சொந்தக் காசில் சூடு வைத்துக்கொள்வோம்!
நிதானமாக யோசித்தால், ஒன்று புரிகிறது... நீங்கள் தெளிவினும் தெளிவு. உங்கள் ஒவ்வொரு படம் வரும்போதும், ரசிகர்களின் மனசைக் கரைத்துவிடுவீர்கள். கடந்த முறை 'குசேலன்' படம் ஓடத் திட்டமிட்டு, கரிசனம் காட்டித் திடீரென ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து, 'என்னையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது.' என்று சொல்லி, கோடம் பாக்கத்தையே கொடைக்கானல் ஆக்கினீர்கள்! ஆனால், ஒரு படம் ஓகோவென ஓடினால் நன்றி சொல்ல அழைத்தது உண்டா? வெற்றிச் செய்தி காதில் விழுந்ததுமே இமயமலையில் கால்வைத்து விடுவீர்கள்!
உங்களை கேவலமாகத் திருமாவளவன் வசை பாடியபோது, கோபமாகி எதிர்த்தோம். விளைவாக, கட்சியினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்தோம். நீங்கள் ஒரு வார்த்தையாவது 'என்னாச்சு?' என்று கேட்டதில்லை. இன்று வரை பகை நெருப்புபற்றி எரிகிறது எங்களுக்குள். ஆனால், பெரியவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். திருமாவின் வீடு தேடி, திருமண அழைப்பு தருகிறீர்கள். ஆனால், அன்று எங்களை அடித்தவர்கள், இன்று மறுபடியும் எங்களைப் பார்த்து மிகக் கேவலமாகச் சிரித்தபடி 'எங்க பவர் புரியுதா?' என்று வாய் கூசாமல் கமென்ட் அடிக்கும் போது உயிரோடு போட்டுச் சிதைப்பது போல் இருக்கிறதே தலைவா!
'பாபா' படம் வந்தபோது, வட மாவட்டங்களில் கலவரம் தலைவிரிக்க... பா.ம.க-வினர் அரங்குகளில் படப் பெட்டிகளையே தூக்கினர். தடுத்த எங்களுக்கு அடி, உதை... ரத்தக் கசிவு நின்றாலும், வடுக்கள் இன்னும் உடலில்! இப்போது நீங்களோ அன்புமணி இல்லம் தேடிப் போய் அழைப்புவைத்து அளவளாவுகிறீர்கள்! 'பகையைப் பாராட்டாத பரந்த உள்ளம்' என்றும் 'நாகரிகம் அறிந்த நல்ல மனிதர்' என்ற பெயர்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்... ஆனால், காயம்பட்ட எங்களை மட்டும் சுத்தமாகப் புறக்கணிக்கும்போது நெஞ்சில் ரத்தக் கண்ணீர் வடிகிறதே!
எங்களைப் பார்த்து வளர்ந்த விஜய காந்த் ரசிகர்கள்கூட கரை வேட்டி கட்டிக்கொண்டு, எங்களை ஏதோ காயலான் கடை பொருள்போல ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள?
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டு திரும்பத் திரும்ப உங்கள் பின்னால் இன்னும் எத்தனை நாளைக்கு நாங்கள் ஓடி வர முடியும்? காலம் எல்லாம் தாங்கிக்கொண்டு சும்மா இருக்க எங்களுக்கு 'எந்திர' இதயம் இல்லையே! அது ரத்தமும் சதையினாலும் அல்லவா ஆனது?
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் தலைவா!
இப்படிக்கு
ஈர விழிகளுடன்,
உங்களின் ரசிகன்
( நன்றி: விகடன் & இட்லிவடை)
இப்போது டோண்டு ராகவன். எனது கோபமெல்லாமே இந்த முட்டாள் ரசிகன் மேல்தான். உனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
இத்தருணத்தில் ரஜனி அரசியலுக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன என்னும் தலைப்பில் நான் இட்ட இடுகை நினைவுக்கு வருகிறது.
அதிலும் எப்படியாவது ரஜனி அரசியலுக்கு வந்தால் தாங்கள் ஏதாவது கல்லா கட்டலாம் என அவர் ரசிகர்கள் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைவதும் எல்லோருக்கும் புரிகிறதே. ஆகவே நான் ஒன்று சொல்வேன், ரஜனி புத்திசாலி. ஆகவே அரசியலுக்கு வரவில்லை. ஒரு எம்.ஜி.ஆர்., ஒரு என்.டி.ஆர் என மிகச்சிலரே வெற்றி பெற்றபோது உதை வாங்கிய சிவாஜி, பாக்கியராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக் ஆகியோர் அதிக பட்சமாக இருந்து தொலைக்கிறார்களே என்ன செய்வது. ஆகவே அவர் செய்வது அவர் மட்டும் சரியே.
ரசிகனுக்குத்தான் மூளையில்லை. ஆகவே அவன் அனுபவிக்க வேண்டியதுதான். அவனவன் போய் வீட்டைக் கவனியுங்கப்பா.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
15 hours ago
31 comments:
ரஜினி புத்திசாலி - ரசிகர்கள் முட்டாள் என்கிற உங்கள் கருத்து சரியானதே.
ரஜினி 'இதோ அரசியலுக்கு வருகிறார், அதோ வரப்போகிறார்' என்று அள்ளிவிட்டு கல்லாகட்டிய பத்திரிகைகள் அவரைக்காட்டிலும் அதிபுத்திசாலிகள்.
உங்கள் பதிவு மிகச் சரியே.
ரசிகர்களும் கலை மீது உள்ள ஆர்வத்தால் கூடுவது இல்லை, தாங்கள் ஏதும் கல்லா கட்ட முடியுமா என்ற எண்ணத்திலே தான் கட் அவுட்டும் பாலாபிசேக நாடகங்களும்.
ரஜினிக்கு மிக நன்றாக தெரியும் யார் எல்லாம் கல்லா கட்டும் எண்ணம் இல்லாதா ரசிகர்கள் என்று, மதுரை ஜாபார், நெல்லை பானுசெகர், தூத்துக்குடி ஈ எம் ஸ்டாலின்.
I endorse Arul's comment. Vikatan has no market , so uses Rajni, Rahman to retain its market share.
பாவம் இந்த ரசிகன்,இந்த மாதிரி கடிதம் எழுத வேறு நேரத்தை வீணடித்திருக்கார்.
பரிதாபப்பட மட்டுமே முடிகிறது.
விகடனின் அதிமேதாவித்தனம்....
ஆனால், அந்தோ பரிதாபம்....
இப்போது, இந்த கடிதம் சொல்ல வருவது என்ன?
இப்படி விகடனில் கடிதம் எழுதி தன் 'தலைவனை' சங்கடத்தில் ஆழ்த்த 'வாக்கப்பட்ட' அல்லது 'அடிமைக்' கூட்டம் எண்ணாது. இது விகடனின் சில்மிஷம் என்றே எண்ணுகிறேன்.
//ஆனால், நாங்களோ மண்டப வாசலிலேயே சத்யநாராயணா மூலம் கெடுபிடியாக வெளியே தள்ளப்பட்டோம். வெள்ளித் திரையில் உங்களுக்கு கற்பூர//
அழையாத வீட்டுக்கு ஏண்டா விருந்துக்கு போனிங்க..
>>ரசிகனுக்குத்தான் மூளையில்லை. ஆகவே அவன் அனுபவிக்க வேண்டியதுதான். அவனவன் போய் வீட்டைக் கவனியுங்கப்பா.
- Agreed, as long as these "so-called fans" (read "clowns") are there, these kind of absurdities happen.
சினிமா வேற ,நிஜம் வேற. இது புரியாத இத்தனை ரசிகர்களா?
இரசிகர் மன்றங்கள் இன்று established entities. தமிழகம், ஆந்திராக்களில். கேரளாவில் கிடையாது. ஆனால், தமிழர்கள் அங்கு வாழுமிடங்களிலுண்டு. திருவனந்தபுரத்தில் தமிழ் நடிகர்களுக்கு உண்டு. கட அவுட் பாலாபிசேகம் போன்று. மும்பையில் தாராவியில் உண்டு.
இதிலிருந்து என்ன் தெரிகின்றதென்றால், மக்களின் குணப்பாங்குக்குத் தக்கவே அவர்கள் வாழ்க்கை கலாச்சாரம் அமையும். குணப்பாங்கு வாழ்க்கைக்கலாச்சாரத்தாலும் அமையும்.
Both impact on each other.
என்வே இரசிகர்களைத் திட்டி பயனில்லை.
ஆனால், இத்தகைய குணப்பாங்கை தனக்கு வேண்டியனேரத்தில் தன் நலத்திற்காக பயன்படுத்தி, வேண்டானேரத்தில் அவர்களை அவமானப்படுத்தி தூக்கியெற்யும் செயல் மிகவும் கீழ்த்தரமானது.
இதையே இக்கடிதம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
கமல், பிரபு, அஜய், எம்ஜிஆர், சிவாஜி - போன்றவர்கள் இரசிகர்களைத் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியவில்லை.
இரஜினி மட்டுமே செய்த்தாக அறிகிறோம் இங்கே.
இரஜின் என்றோ ‘குழந்தைப்புத்தி’ உள்ளவர் என்று நாம் அறிந்ததுதானே!
அரவிந்தன்!
பிரபு தன் இரசிகர்களை வாவென்றா அழைத்தார்? அவர்களை அவர் நடாத்திய விதம் பற்றியும் இக்கடிதம் சொல்ல்வில்லையா?
இரஜினி ஒரு பண்பட்ட மனிதரல்ல என்பது திண்ணம் இங்கே.
When overall culture of the society improves, such fawning on actors as fan clubs, will automatically cease.
What do the Tamilians migrated to other countries do? Do they form fan clubs? No. Even if they do, they are the first generation migrants unbale to dust off their mindset.
After two generations, they will become different.
Do Srilankans Tamil form fan clubs? No. They are also Tamils.
The culture is crucial here. A better culture, I mean one in which each individual flowers into a fine independent personality, is possible with over all improvment in standards of life.
You can do this experiment in your house itself, if you are the head of the family.
I have two sons: they are independent thinkers today. They are not fully adults. They do see Tamil films; and appreciate the heroes.
Yet, they wonder why such things happen in Tamilnadu? What is special in an actor to fawn on him? In other words, as Jagannathan wrote, they could distinguish between real and reel life!
So, all of you - begin with your family.
// ரசிகனுக்குத்தான் மூளையில்லை. ஆகவே அவன் அனுபவிக்க வேண்டியதுதான். அவனவன் போய் வீட்டைக் கவனியுங்கப்பா.//
உலகத்துலே மூளை இருக்கற ஆளுங்க எல்லாம் ப்ளாக் எழுதிட்டு இருக்காகளே !!
பொழுது போவாதவக எல்லாம் அத படிச்சுட்டு இருக்காகளே !!
டோன்டு ராகவன் சாரே ! நீங்க உங்க வீட்டுலே ஒரு ஃப்ங்க்ஸன் நடந்தா உங்க ப்ளாக் க்கு வர
எல்லாத்தயும் கூப்பிட்டு அறுசுவை நடராசன் செய்யற டின்னருக்கு ஏற்பாடு பண்ணுவீக இல்லையா !!
திரு டோண்டு ராகவன் அவர்களே
உங்களை ஏனோ பிடிக்காது .அது உங்களின் தமிழ் இன விரோத பார்வை.அனால்
லூசுப்பசங்களா இன்னுமாடா இவனுங்களை நம்புறீங்க" என்கிற உங்களின் கருத்து மிகவும் உண்மை உண்மை.உண்மையை தவிர வேறு இல்லை.ரஜினி ஒரு காரியவாதி ,சுயநலவாதி. ஆன்மிகம் என்கிற போர்வையில் மகளை முட்டாளாக்கிய ஒரு நரி. தமிழனின் உழைப்பை எல்லாம், ரத்தத்தை எல்லாம் காசாக்கிய ஒரு ஏமாற்று ஆசாமி.தமிழா உனக்கு எப்போது தன புத்தி வருமோ.இந்த டோண்டு கூட புரிஞ்சிட்டு உண்மையை எழுதிட்டார் .உனக்கு புரியவில்லை.
உமா ,திருவனந்தபுறம்
மனிதர் அனைவரும் பிறப்பால் சமம் என்ற அடிப்படை மனித நேயத்தை ஏற்க மறுக்கும் பார்பனியத்தை தூக்கி பிடித்தாலும், உங்களின் இந்த கருத்து முற்றிலும் உண்மை.
தலைவரே,
நீங்கள் எதை எழுதினாலும் நம்புவதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது.
அதற்கு, உங்கள் தலைப்பு பொருந்துமா?
இப்படிக்கு
பயத்துடன்
தலைவர்
அகில உலக பதிவுலகப்புலி பாயும் புலி முதிய தளபதி டோண்டு ராகவன் இரசிகர் மன்றம்
காசிமேடு மீனவர் குப்பம்
சென்னை
ஹலோ FM-ல் சோ பேட்டி ஒலிபரப்பாகிறது.
//
மனிதர் அனைவரும் பிறப்பால் சமம் என்ற அடிப்படை மனித நேயத்தை ஏற்க மறுக்கும் பார்பனியத்தை தூக்கி பிடித்தாலும், உங்களின் இந்த கருத்து முற்றிலும் உண்மை.
//
மனிதர் அனைவரும் பிறப்பால் சமம் என்றபோதும் பிறந்தது முதல் படிப்பு, வேலை, இறந்த பின் மயானத்தில் எரிப்பு/புதைப்பு எல்லாமே பிறந்த ஜாதி அடிப்படையில் தான் என்னும் போது அதை ஒத்துக்கொண்டு வாழ்வது புத்திசாலித்தனம். அது தான் பார்ப்பானீயம் என்றால் எல்லோரும் புத்திசாலியாகவே இருக்க விரும்புவார்கள்.
Hi Dondu,
Marriage is a private affair of Rajini.Why you want to give importance to a trash article in JV.
Has vikatan invited any of its readers or its student journalists to its family function?
This article is just to increase the circulation of JV.I think there is no breaking news this week hence this anonymous article.
Has anyone in the media questioned the attack on Checkers Hotel last week.The so called investigative journalism by JV or any other magazines have totally blacked out this incident.
Anonymous said...
// //பிறந்தது முதல் படிப்பு, வேலை, இறந்த பின் மயானத்தில் எரிப்பு/புதைப்பு எல்லாமே பிறந்த ஜாதி அடிப்படையில் தான் என்னும் போது அதை ஒத்துக்கொண்டு வாழ்வது புத்திசாலித்தனம். அது தான் பார்ப்பானீயம் என்றால் எல்லோரும் புத்திசாலியாகவே இருக்க விரும்புவார்கள்.// //
இது ஒரு பயங்கரவாதக் கருத்து. "அதை ஒத்துக்கொண்டு வாழ்வது புத்திசாலித்தனம்" என்றால், எதை ஒத்துக்கொண்டு வாழ்வது? என்பதை தெளிவு படுத்த வேண்டும்!
குறிப்பாக "படிப்பு, வேலை" இவற்றில் சாதி பார்ப்பதென்பது, ஏற்கனவே இந்தநாட்டில் நீடித்துவரும் சாதீயக்கொடுமைக்கு மாற்றாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் 'இடஒதுக்கீடு' நடைமுறையாகும்.
இதனை சாதிபார்த்து திருமணம், இறந்தபின் சாதி சுடுகாடு என்பனவற்றுடன் இணைத்து பேசக்கூடாது.
சாதிக்கொடுமைக்கு மருந்தாகக் கூறப்படும் 'சமூகநீதி' என்பது வேறு. சாதிக்கொடுமையை நீட்டிக்கும் 'சனாதன தர்மம்' என்பது வேறு. இரண்டும் ஒன்றுக்கொன்று 100% எதிர் எதிரானவை.
இரண்டையும் ஒன்றாக்கி 'சனாதனத்தை' தூக்கிப்பிடிப்பது அயோக்கியத்தனமான கொடுஞ்செயல்.
இந்த அனானிங்க ஏதாவது பிட்டப்போட்டுவிட்டுப் போயிடுறானுங்கப்பா...
பாரு இப்ப அருள் சீரும் சிங்கம் ஆகி விளக்கம் கேட்க்கிறார்.
லூசுல விடுங்கப்பு.
”மனிதர் அனைவரும் பிறப்பால் சமம் என்றபோதும் பிறந்தது முதல் படிப்பு, வேலை, இறந்த பின் மயானத்தில் எரிப்பு/புதைப்பு எல்லாமே பிறந்த ஜாதி அடிப்படையில் தான் என்னும் போது அதை ஒத்துக்கொண்டு வாழ்வது புத்திசாலித்தனம். அது தான் பார்ப்பானீயம் என்றால் எல்லோரும் புத்திசாலியாகவே இருக்க விரும்புவார்கள்.”
பிறப்பாலும் சமம் என்பது தவறு. இறைவனே அப்படி நம்மை எல்லாரையும் படைக்கவில்லை. ஒருவன் ஏழைகளிடையே பிறந்து அங்கேயே வாழ்ந்து பின்னர் வெளியே வரும்போது திணறுகிறான். அவன் வாழ்க்கை எதிர் நீச்சலாகிறது. இன்னொருவன் பெரும்பணக்காரனுக்குப் பிறந்து பெரும் தொழிலதிபரான தன் தந்தையின் தொழிலை ஏற்று வாழ்கிறான். அதைப்போலவே அரசியல்வாதிகள் பிள்ளைகளும்.
ஏழைத்தாயுக்கு சத்துணவில்லை. குழந்தை பிறப்பிலேயே வீக்காக பிறக்கிறது.
சிலர் செழிப்பான் குடும்பத்தில் பிறந்தும், உடற்குறையோடுதான் பிறந்து வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடவேண்டியாதகிறது.
எனவே பிறப்பில் சமம் என்பது இறைவனின் திட்டத்திலே கூட இல்லை.
தொடரும்.
இப்படிப்பட்ட சமமற்ற பிறப்பிலும்கூட நம்மால் ஓரள்வுக்குச் சமம் காணமுடியும். எப்படி அச்சமம் காணப்படுகிறது என்பதை வைத்தே ஒரு சமூகம் உயர்ந்த சமூகமா அல்லது தாழ்ந்த சமூகமா என முடிவு செய்ய முடியும்.
பெண்கள் பிறப்பினால், ஆண்களுக்கு பலவழிகளில் நிகராக முடியவில்லை. ஆயினும், உயர்ந்த சமூகம் அவர்களின் சமமற்ற் நிலையை சுரண்டி மேலும் அவர்களை கீழே தள்ளாமல், என்னென்ன் வழிகளில் அவர்களை சமப்படுத்தாலாம் என ஆராய்ந்து அதைச்செய்யும்.
சாதிமுறைகளைக்கொண்டு வந்த சமூகம் ஒரு கேடுகேட்ட கீழான சமூகம் என்ற அருளின் கருத்தை நான் ஆதரிக்கிறேன்.
ஏனென்றால், பிறப்பில் சமமற்ற இயற்கைத்தன்மையை, மேலும் கெடுக்க, வருணாஷ்ரம் என்ற செயற்கைத்தன்மையை கொண்டுவந்து, ச்மமற்ற் இயற்கை வாழ்க்கை கெட்டுச்சுவராக்கியது.
இன்று எவர் அதைக்கொண்டுவந்தாரோ அவரையே அது நசுக்கிறது.
Frankensetein's monster.
செயற்கையாக இருப்பதால், நம்மால் அதை அழிக்க முடியும் என்ற அருளின் கருத்தை வழிமொழிகிறேன்.
ஆனால் இறைவன் அமைத்த சமமற்ற பிறப்பில் வரும் மேடையை அழிக்கமுடியாது. அதன் கொடுமையை mitigate பண்ணமுடியும் நல்ல் ச்மூகத்தால்.
//மனிதர் அனைவரும் பிறப்பால் சமம் என்றபோதும் பிறந்தது முதல் படிப்பு, வேலை, இறந்த பின் மயானத்தில் எரிப்பு/புதைப்பு எல்லாமே பிறந்த ஜாதி அடிப்படையில் தான் என்னும் போது அதை ஒத்துக்கொண்டு வாழ்வது புத்திசாலித்தனம். அது தான் பார்ப்பானீயம் என்றால் எல்லோரும் புத்திசாலியாகவே இருக்க விரும்புவார்கள்.
//
பார்ப்ப்னீயம் என்ற பேச்சுக்கு இங்கே இடமில்லை. இது வாதத்தை தன் வழியில் திருப்ப நடாத்தப்ப்டும் சூழ்ச்சி.
மற்றபடி சொல்லப்பட்டவை ஒரு கோழைத்தனமானவை. ஏனெனில், சுடுகாட்டுவரை நடப்பவை கொழுப்படுத்த மனிதனின் செயற்கை விளையாட்டு. இப்படி இங்கே துள்ளுபவன் வேறெங்கோ போய் வாழும் சூழலில் அங்கே என்ன்வோ அதன்படி மாறும் இரகசியம் என்ன? அந்த நாட்டு சட்டதிட்டங்கள் அவற்றைத்தடுக்கும்போது இவனால் வாலாட்ட முடியவில்லை. சிலதலைமுறைகள் சென்றபின் தானாகவே மாறிவிடுகிறான். இல்லயா?
மாறும்...கண்டிப்பாக மாறும். பசி வந்திட பத்தும் பறந்துபோம். ”கொழுப்பெடுத்து அலையறவனை பட்டினி போடு அடங்கிகிடப்பான்” என்பார் என்னப்பா. என்னம்மா போடுவார். சுருங்கிக்கிடப்பார்கள்.
நல்ல ட்ரிக். இதைச்செய்து, இந்த அனானியைப்பட்டனி போட்டு அடக்கிவிடலாம்.
பகவத்கீதையை எடுத்துவந்து வருணாஷ்ரம் பேசிவிடுவானா இவன்?
சோற்றுக்கு லாட்டரி அடிக்கும் பார்ப்பனனின் பெண் ஒருத்தி, ஒருவனைக் கூட்டி வந்து இவனைத்தான் கலியாணம் செய்துகொள்வேன் என்று சொல்லும்போது என்ன செய்கிறான்? கட்டிக்கொடுத்து விடுகிறான். ஏன்..எங்கே போயிற்று அவனின் வருணாஷ்ரம்? தொடுவானா பகவத்கீதையை அப்போது? மாட்டான். ஏனென்றால், பெண்ணாவது ஒரு வேளையாவது சாப்பிட்டு உயிரோடிருக்கட்டும்.
காலி வயிறு செய்யும் வித்தை. கடவுளே இடத்தைக் காலி பண்ணவேண்டும்...!
மிஸ்டர் மலம்,
கடைசியில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை.
ரஜினி வாழ்கவா இல்லை ரஜினி ஒழிகவா ?
ஜீசஸ் ஒழிகன்னு சொன்னா ஏத்துக்குவீங்களா ? அவரையும் ரஜினி மாதிரி ஏத்திவெச்சு ஏத்திவெச்சு கடவுளாக்கிட்டீங்க.
ஜீசசின் முக்கிய ரசிகர் மன்றம் வாதிகனில் இருக்கிறது.
Jo Amalan Rayen Fernando,
எதுக்கு கண்டவனிடமும் திட்டு வாங்குகிறீர்கள்? உங்கள் பிளாக்கில் எழுதுங்கள் அல்லது ஏதாவது நாகரீகமான பிளாக்குகளில் பின்னூட்டமிடுங்கள்.
//மிஸ்டர் மலம்,
கடைசியில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை.
ரஜினி வாழ்கவா இல்லை ரஜினி ஒழிகவா ?
ஜீசஸ் ஒழிகன்னு சொன்னா ஏத்துக்குவீங்களா ? அவரையும் ரஜினி மாதிரி ஏத்திவெச்சு ஏத்திவெச்சு கடவுளாக்கிட்டீங்க.
ஜீசசின் முக்கிய ரசிகர் மன்றம் வாதிகனில் இருக்கிறது.
//
மிஸ்டர் ...
எங்கே எழுதினாலும் பழைய பல்லவியே பாடிக்கொண்டிருக்கும் மர்மம் என்ன என்று எனக்கு புரியவில்லை.
ஜீசஸ் மனிதரா? அவரை கடவுளாக கிறுத்தவர்கள் மாற்றிக்கொண்டார்களா ? என்பதைப்பற்றியெல்லாம் நீங்கள் ஏன் வருந்தி வெறிபிடித்தது போல, பதிவு பதிவாக, அலைகிறீர்கள்? எவரும் எவரையும் தெய்வமாக ஏற்றுக் கொள்ளட்டுமே! அஃது அவர்கள் பாடு. ஏன் வருத்தம்? உலகை நம் வழியில் திருத்த முடியுமா?
உங்கள் தெய்வத்தைப்பற்றித் தெரிந்து கொண்டு பிறர் கேட்டால் சொல்லுங்கள். ஏன் இவ்வளவு தூரம் பி.பி.? இதை நான் எழுதுவது ஏனென்றால், எப்பதிவில் பின்னூட்டங்களிலும், அனானிமஸாக வந்து எழுதி உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் இழக்கிறீர்கள். கிருத்துவர்களையும் இசுலாமியர்களையும் அசிங்க அசிங்கமான் சொற்களால் திட்டியும் மத நல்லிணக்கம் பற்றிப் பேசுவோரையும் பகடி பண்ணி அவர்கள் மனங்களைப் புண்படுத்துவது ஏன்? அதில் என்ன இன்பம்? அஃது உண்மையிலேயே இன்பமா?
அவரவர் கடவுள் அவரவர் உணமையில் தொழுதால் அக்கடவுள் அவர்களுக்கு நன்மையே செய்யும் என்பது திருவாய்மொழியின் முதல் பத்து. நம்மாழ்வார் அதைச்சொல்லிவிட்டுத்தான் திருவாய்மொழியையே எழுதத்தொடங்குகிறார். இந்து என்று பெருமைகொள்ளுபவர் ஏன் நம்மாழ்வார் சொன்னதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்?
Please come to my email : vmkarmal@gmail.com
Dont fear. I am very concerned about you. I shall explain to you how not to bother about other people and their faiths; and how to concentrate and devote yourself in your own faith.
I have no hatred of you. Please come and discuss with you. All your wounds will be soothed. என் தாய், தந்தை இவர்களின் ஒழுக்கத்தைப்பற்றி என் பிளாக்க்கில் எழுதியதெல்லாம் நான் மறந்துவிட்டேன். அதை எவருக்கும் சொல்லி நான் அழவில்லை. அவர்கள் மரித்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. உங்கள் வசவு அவர்களை என்ன செய்யும்? ஒருவேளை உங்களை நோகச்செய்யும். ஏனெனில், திட்டப்பட்டவர்கள் நன்றாகத்தான் இருப்பார்கள். திட்டுபவன் வேதனைப்படுவான். தன்னெஞ்சே தன்னைச்சுடும். "Evil consumes itself. It requires no external agency for its destruction" என்றார் St Acquinas.
என் ஒரே வேதனை. இவ்வளவு தூரம் உங்களுக்கு பிறரின் மதம் ஏன் வேதனையைத்தருகிறது என்பதுதான். ஏன் நண்பரே? இததனைக்கும் நான் ஒரு கிறுத்துவ பாதிரியார் என்னும் ஒரு அதீத கற்பனை. கிறுத்துவ ஸ்தாபனங்களோடு எனக்குத் தொடர்பு உண்டு. அப்படியானால், கண்டிப்பாக பாதிரியாராகத்தான் இருக்கவேண்டுமா? ஏன் ஆசிரியராக இருக்கக்கூடாது?
நண்பரே, சென்னை லயோலாவிலும், தாம்பரம் கிருத்துவக்கல்லூரியிலும் ஒன்றல்ல் இரண்டலல், இன்றலல, நேற்றல்ல, பன்னெடுங்காலமாக ஏகப்பட்ட இந்துக்கள், குறிப்பாக பார்ப்பனர்கள் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார்கள். இல்லையா?
நான் எங்காவது இந்து மதக்கடவுள்களைத் திட்டியோ அல்லது பொய்யோ எழுதியிருக்கேனா?
தமிழ் ஹிந்து.காமில் நான் ஜடாயுக்கு எழுதிய பதிலைப்படித்தாயிற்றா? 'ஆழ்வார்கள் பாடல்கள்’ என்ற தலைப்பின் கீழ். எந்த இந்துவுக்காவது தோன்றியதா ஆச்சாரியர்கள் எழுதிய பாசுர உரைகளை தள்ளி வைத்துவிடலாம் என ஹிந்து.காமை கண்டிக்கவேண்டும் எனத்தோன்றியதா? நான் ஒருவனே அதைச்செய்தேன். ஜடாயு சமாளித்தார் தான் அப்படிச்செய்ய்வைல்லையென்று. அது, ‘இந்து..இந்து’ என்று தம்பட்டமடித்து எழுதிக்கொண்டிருக்கும் உங்களுக்குத் தோன்றியதா?
All the wounds you inflict on me in my blog will be definitely forgotten. Come to my email.
Please come. lets discuss personally.
நம் வாழ்க்கையை நாம் வாழவேண்டும். பிறர் வாழ்க்கை நம் வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடாது!
நாகரீகமான பிலாக்கில போய் பின்னூட்டம் போடனுமாம்...கேட்டுக்கப்பு ஜோ மலம்.
ஆமை நுழைந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் விளங்குமா ?
ஜோ மலம் நுழைஞ்ச பிலாகும் அப்படித்தான்.
//Jo - சோற்றுக்கு லாட்டரி அடிக்கும் பார்ப்பனனின் பெண் ஒருத்தி, ஒருவனைக் கூட்டி வந்து இவனைத்தான் கலியாணம் செய்துகொள்வேன் என்று சொல்லும்போது என்ன செய்கிறான்? கட்டிக்கொடுத்து விடுகிறான். ஏன்..எங்கே போயிற்று அவனின் வருணாஷ்ரம்? தொடுவானா பகவத்கீதையை அப்போது? மாட்டான்.//
Friend this is a old idea to convert people. Think something new.
//
//
சோற்றுக்கு லாட்டரி அடிக்கும் பார்ப்பனனின் பெண் ஒருத்தி, ...
//
Friend this is a old idea to convert people. Think something new.
//
சோத்துக்கு லாட்டரி அடிப்பவர்களை மாற்றுவது மட்டுமல்ல, சோத்துக்கு லாட்டரி அடிக்க வைத்து கூட கன்வர்ட் செய்வதை நல்லாவே செய்வார்கள்.
காங்கிரஸ் ஆட்சி, தி.மு.க ஆட்சி எல்லாமே மக்களை சோத்துக்கு லாட்டரி அடிக்கவைக்கவே நடத்தப்படுகிறது.
இன்றைய (10.09.10) மாலை நாளிதழ்களின் பரபரப்பு செய்தி:
"அரசியல் பிரவேசம்? - ரஜினி திடீர் ஆலோசனை"
இதனை இப்படி படிக்க வேண்டும்:
"எந்திரன் படம் விரைவில் வெளியாகிறது - இப்படம் வெற்றிபெற ரசிகர்கள் உயிரைக் கொடுத்து உழைக்கவும்".
Post a Comment