எது எப்படியானாலும் கீழே நடந்த விஷயத்தைப் பார்த்தப்புறம் கொஞ்ச நாளைக்கு அந்த கோல்கீப்பர் நடக்கும் நிலையில் இருப்பார் எனத் தோன்றவில்லை.
இதைப் பார்த்ததும் சமீபத்தில் 1958-ல் நடந்த ஒரு கில்லி விளையாட்டு ஞாபகத்துக்கு வருகிறது. முதலிலேயே ஒரு டிஸ்கி போட்டு விடுகிறேன். இம்மாதிரி கில்லி, கோலி, காத்தாடி விடுதல், பம்பரம் அப்பீட் எடுத்தல் ஆகிய விளையாட்டுகள் எனக்கு சுத்தமாகவே வராது. ஆகவே என்னை அந்த விளையாட்டுகளுக்கு சேர்த்துக் கொள்பவர்கள் ‘உப்புக்கு சப்பாணி ஊருக்கு மாங்கொட்டை’ என்ற அடிப்படையில்தான் தங்கள் கட்சிக்கு எடுப்பார்கள். இரண்டு சைட் கேப்டன்களும் (எந்த விளையாட்டாயிருந்தாலும் சரி) அப்போது சுற்றியிருக்கும் பையன்கள் கும்பலிலிருந்து தத்தம் கட்சிக்காக பிளேயர்களை தேர்ந்தெடுக்கலாம். இந்தத் தேர்வு மாற்றி மாற்றி நடக்கும். முதல் கேப்டன் ஒரு பையன் பெயரைக் கூற, இரண்டாம் கேப்டன் தனது சாய்ஸைக் கூறவேண்டும். பிறகு மறுபடியும் முதல் கேப்டன், பிறகு இன்னொரு கேப்டன் என்று போகும். முக்கால்வாசி தருணங்களில் யார் டோண்டு ராகவனை தேர்ந்தெடுக்காமல் இருப்பது என்பதிலேயே போட்டி நடக்கும் என்பதையும் கூறிவிடுகிறேன்.
எனது விளையாட்டுத் திறமையின் லட்சணம் எனக்கே தெரிந்திருப்பதால் இதனால் எல்லாம் நான் மனம் ஒடிந்து விட மாட்டேன் என்பது வேறுவிஷயம்.
இப்போது நான் மேலே குறிப்பிட்ட கில்லி விளையாட்டு. எங்கள் டீம் கேப்டன் அவுட் ஆகாமல் ஆடிக்கொண்டிருக்கிறான். அப்போது அவன் கில்லியை பலமாக அடிக்க அது எங்கள் கட்சியைச் சேர்ந்த குருமூர்த்தியின் வயிற்றைத் தாக்க அவன் வலியில் வயிற்றைப் பிடிக்க கில்லி அவன் கையிலே தங்கி விட்டது. உடனே எங்கள் கேப்டன் அவுட் எனக் கூறிவிட்டார்கள். அதுதான் விதி. யார் எப்படி எங்கே அவுட் ஆவார்கள் எனக்கூற முடியாதுதானே.
இந்த ஃபுட்பால் மேட்ச் பலருக்கு எமனாக முடிந்திருக்கிறது. நீங்களே பாருங்களேன் கலியப்பெருமாள ஐயம்பேட்டை இந்திரன் ஆஃபீசில் அமமாவுக்கு உடல் நலம் சரியில்லை எனப் பொய் சொல்லி மேட்சுக்கு வர, அவன் முதலாளியும் அதே மேட்சுக்கு வர, அடுத்த நாள் கலியப்பெருமாள் இந்திரன் மேட்சுக்கு வந்தது தனது சகோதரன் கலியப்பெருமாள் சந்திரன் என்றேல்லாம் கூறி சந்தியில் நிற்க வேண்டியிருந்ததல்லவா?
இதே மாதிரி இன்னொருவன் தன் மாமா மரணப்படுக்கையில் இருப்பதாகக் கூறி ஃபுட்பால் மேட்சுக்கு செல்ல, குலவழக்கப்படி அங்கு முதலாளியிடம் மாட்டிக் கொள்கிறான். “என்னப்பா மாமா மரணப் படுக்கையிலே இருப்பதாகச் சொன்னியே” என கிண்டலுடன் முதலாளி கேட்க, “அப்படித்தான் சார் நிஜமாகவே ஆயிடும் போல இருக்கு. இந்த மேட்சுக்கு நடுவராக ஓடுகிறாரே அவர்தான் என் மாமா” என அவன் அசராமல் பதிலளித்த விஷயத்தை ரீடர்ஸ் டைஜஸ்டில் படித்திருக்கிறேன்.
இம்மாதிரி விசித்திர நிகழ்வுகள் விளையாட்டுகளில் சகஜம். பேட்ஸ்மான் பந்தை அடிக்க அது அவனுக்கு ஜோடியான ரன்னர் காலில் பட்டு எதிர் ஸ்டம்பில் பட, ரன்னர் கிரீசுக்கு வெளியில் இருக்க அவர் அவுட் என தீர்ப்பு கொடுத்தது எனக்குத் தெரிந்து மஜ்சிரேக்கருக்கு நடந்தது என என் நினைவு. யாரவது கிரிக்கெட் நிபுணர்கள் கன்ஃபர்ம் செய்யலாம்.
போகிறபோக்கில் கையில் பிடிக்க வேண்டிய ஸ்னிட்சை ஹாரி பாட்டர் வாயில் பிடிப்பதைப் பாருங்களேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கலாமின் கனவு
-
ஜெ, அப்துல்கலாம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவருடைய பொன்மொழிகள். இன்று
பரவலாக உள்ளன. அவர் கனவுகாணுங்கள் என்று சொன்ன பொன்மொழியை நான் என்
டெஸ்க்டாப்பில் வைத...
2 hours ago
9 comments:
‘உப்புக்கு சப்பாணி ஊருக்கு மாங்கொட்டை’
இன்னும் அப்படித்தான் இருக்கின்றீரா?
அருள்.
விளையாட்டில் தான் உப்புக்குச் சப்பாணி எல்லாம். ரியல் லைஃப் என்கிற ரேஸில் வெள்ளிப்பதக்கம் கூட கிடையாது.
அதிலே அவர் ஜெயித்திருக்கிறார். அந்த மரியாதை அவருக்கு நீங்கள் கொடுப்பது நல்லது.
@வஜ்ரா:
அருள் சும்மா விளையாட்டுக்குத்தான் கேட்டுள்ளார். டென்ஷ ஆகாதீர்கள் வஜ்ரா.
@அருள்:
இப்போதும் யாரும் கோலி, பம்பரம், கிரிக்கெட், ஃபுட்பால், கில்லி ஆகிய விளையாட்டுகளில் என்னைத் தங்கள் கட்சியில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
uppuku illai oppukku.
டோண்டு சார்.
சீட்டு (ஏஸ், ரம்மி, ட்ரம்ப்), கேரம் ஆட்டங்களில் நீங்கள் எப்படி.
இந்த மாதிரி மரண மொக்கை பதிவுகளுக்குகூட தவறாமல் வந்து me the first
பின்னூட்டம் இடும் அருளுக்கு, டோண்டுவின் ஆஸ்த்தான பின்னூட்டர் என்ற பட்டம் அளிக்க நான் சிபாரிசு செய்கிறேன்.
:).....
ethuvum seyya mudiyuma?
iyalaamai thaan sir
Post a Comment