அனானி (15.02.2009 காலை 06.44-க்கு கேட்டவர்):
1. சன் டீவி நகைச்சுவை சேனல் ஆதித்யா பத்து தினங்களுக்குள்ளே போரடிப்பது போலிருக்கிறதே?
பதில்: அதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? விடாது எதை பார்த்தாலும் போர்தான் அடிக்கும். ஆகவே அவ்வப்போது பார்ப்பதே நல்லது. சன் டிவியின் கட்டண காமெடி சேனல் ஐடியா வெற்றியடையாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமே. ஆனாலும் கிராமப் பகுதிகளில் விளம்பரங்களில் நல்ல காசு பார்ப்பதாக கேள்விப்பட்டேன் (நன்றி லக்கிலுக்).
2. கலைஞர் டீவி சன் டீவின் ஜெராக்ஸ் காப்பி போல் இருப்பது மாறுமா?
பதில்: எப்படி மாறும்? அத்தனை கற்பனை வறட்சி அல்லவா கலைஞர் டிவியிடம் உள்ளது. அதுவும் கலைஞர் இன்னும் சற்று அதிகமாக நெஞ்சம் இனித்து கண்கள் பனித்தால் கலைஞர் டிவிக்கே சங்கு என்ற நிலையில் அதில் வேலை செய்பவர்களது ஊக்கம் எங்கேயிருந்து வரும்? எதற்கும் நண்பர் லக்கிலுக்கிடமும் கேட்ட போது அவர் சொன்னார் கலைஞர் டிவி சன் டிவிக்கு அடுத்த நிலையில் பிரபலமாக உள்ளது என கூறினார். விஷயம் தெரிந்த அவ்ர் கூறினால் சரியாகத்தான் இருக்கும்.
3. தரத்திலும் புதிய நிகழ்ச்சிகள் தருவதிலும் விஜய் டீவி நம்பர் ஒன் சரியா?
பதில்: எனக்கு எப்படி தெரியும்? நான் அதை பார்ப்பதில்லையே?
4. ஜீ தமிழ் டீவி போட்டியில் சோபிக்கவில்லையே?
பதில்: முதல் காரணம் அது கட்டணச் சேனலாக துவங்கியது. இரண்டாம் காரணம் எஸ்.சி.வி. அதற்கு ஸ்லாட் தரவில்லை. மூன்றாவது காரணம் டிடிஎச்சிலும் வரவில்லை. மொத்தத்தில் முதலும் கோணல் முற்றும் கோணல் (நன்றி லக்கிலுக்).
5. நீங்கள் மிகுதியான நேரம் பார்க்கும் டீவி ஜெயா டீவியா?
பதில்: கண்டிப்பாக இல்லை. எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு. அதற்கு மட்டும்தான் ஜெயா டிவி.
6. சுதந்திர இந்தியாவின் பெரிய சாதனையாக எதைச் சொல்லலாம்?
பதில்: இன்னமும் ஒரு ஜனநாயக நாடாக இருப்பதுதான் அதன் மிகப்பெரிய சாதனை.
7. சோவியத் ரஷ்யாவின் தற்போதைய பொருளாதார/அரசியல் நிலை?
பதில்: கவலைக்கிடமே என்று கூறுகிறது இந்த கட்டுரையை. பதிவர் ஹேயக் ஆர்டர் பார்த்தாரா என தெரியவில்லை. அவரது கருத்துகள் இங்கே வெல்கம்.
8. 1980 வரை ஒற்றுமையாய் ஒரே விவசாய சங்கமாய் சிவசாமி தலைமையில் இருந்த விவசாயிகள் இன்று?
பதில்: இது பற்றி நான் அதிகம் தெரிந்தவனில்லை.
9. உணவு உற்பத்தி குறைந்து கொண்டே போகிறதே?
பதில்: முதலீட்டு செலவுகள் அதிகரிக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் கணக்கில் எடுத்து விவசாயியால் அரிசி விற்கும் விலையை நிர்ணயிக்க இயலாது. அங்கு மட்டும் அரசு கழுத்தை நீட்டிக் கொண்டு வந்து விடும். யாருக்குத்தான் உற்சாகம் வரும்? இதில் உற்பத்தி பாதிக்கப்படுவது புரிந்து கொள்ளக்கூடியதே.
10. விவசாயத்தை தேசியமயமாக்கினால் என்னவாகும்?
பதில்: நேரு அக்காலக் கட்டத்திலேயே முயற்சித்தார். நல்ல வேளையாக கைவிட்டார். தேசீய மயமாக்கினால் அதோகதிதான்.
11. வைகோ மீண்டும் கழகத்தில் இணைய வாய்ப்பு வருமா?
பதில்: அதற்கு ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினரின் பிடி கட்சி மீதிலிருந்து தளர வேண்டும்.
12. அப்படி ஒரு நிலை வந்தால் அவர் யார் பக்கம் சாய்வார்? 1.ஸ்டாலின் 2.அழகிரி 3.கனிமொழி 4தமிழரசு 5.தயாநிதி. 6.மு.க.முத்து
மு.க.முத்து எடுத்தவுடனேயே அன்செலக்டட். எனக்கென்னவோ அவர் கனிமொழியைத்தான் தேர்ந்தெடுப்பார் என தோன்றுகிறது.
13. திமுகவில் இப்போது யார் கை ஓங்கி உள்ளது?
பதில்: இப்போதைக்கு அழகிரி.
14. கலைஞர் குணமடைய நடக்கும் யாகங்கள் ?
பதில்: பகுத்தறிவுக்கு எதிரானதாக இருந்தாலும் இதை மட்டும் கண்கள் பனிப்பவரும் இதயம் இனிப்பவரும் தடுக்க மாட்டார் என பட்சி கூறுகிறது.
15. மருத்துவர் ஐயாவின் அரசியல் எதிர்காலம்?
பதில்: பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் எதுவும் கூற இயலும்
16. சுயமரியாதை இயக்கத்தின் தற்போதைய நிலை?
பதில்: சுயமரியாதைக்கு ஸ்பெல்லிங் தேடுகிறது.
17. ஜெ-வைக்கோ பிரிவு வந்து விடும் போலுள்ளதே?
பதில்: எனக்கு அப்படித் தோன்றவில்லையே. வைக்கோவுக்கு ஏதாவது மாற்று ஏற்பாடுகள் தெரியும் வரைக்கும் சுலபத்தில் இருக்கும் இடத்தை விட்டு அசைய மாட்டார் என தோன்றுகிறது.
18. இலங்கைப் பிரச்சனையில் பாஜகவின் திடீர் கரிசனம்? ஏன்?
பதில்: அதானே, ஏன்ன்ன்ன்னு ஜில்ஜில் ரமாமணி ரேஞ்சில் கேட்க வேண்டும் போல தோன்றுகிறது.
19. அறிவொளி இயக்கம் வெற்றியா? இல்லை வழக்கம் போல்?
பதில்: எது என்னவானாலும் சரி ஒரு விஷயத்தை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். என்னை கேள்விகள் கேட்பதன் நோக்கம் எதுவாக இருந்தாலும் என்னை பொருத்தவரை அது கற்கும் அனுபவமாகவே இருக்க வேண்டும் என விரும்புவேன். ஆகவே சில கேள்விகள் நான் அதிகம் அறியாத விஷயத்தை அடிப்படையாக கொண்டு கேட்கப்பட்டால், கூகளண்ணனை சரணடைவது என் வழக்கம். அப்படி பார்த்தது இந்த உரல். It was a pleasant surprise.
20. விவசாயிக்கு கட்டுபிடியாகும் விலை கிடக்காவிட்டால் உணவு உற்பத்தியின் கதி?
பதில்: ஒன்பதாம் கேள்வியைப் பார்க்கவும்.
21. சாதாரண மக்களிடையே 1000 ரூபாய் பழக்கம் அதிகமாயுள்ளதே?
பதில்: சந்தோஷமான விஷயம்தானே பணப்புழக்கம். அவர்களும் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா?
22. பணவீக்கம் குறைவதாய் சொல்வது உண்மையா?
பதில்: விலை உயர்ந்தது உயர்ந்ததுதான். அது உயரும் வேகம் மட்டும் அவ்வப்போது ஏறுகிறது அல்லது இறங்குகிறது. இப்போது இறங்குகிறது என படுகிறது.
23. மத்திய அரசு நோட்டாய் அடித்து தள்ளுகிறதே, பணவீக்கம் மீண்டும் வீங்குமா?
பதில்: back upஇல்லாது நோட்டுகள் அடித்தால் ஜிம்பாப்வேயின் கதிதான் நம் நாட்டுக்கும் வரும்.
24. ஏறிய விலைவாசி குறையாதபோது வங்கி சேமிப்பு வட்டி குறைப்பு நியாயமா?
பதில்: நம் ஜனங்களுக்கு சேமிக்கும் வழக்கம் அதிகம் உண்டு. ஆகவே நிறைய பணம் டிபாசிட்டுகளாக கிடைக்கும் போது அவற்றுக்கான டிமாண்ட் குறைவது ஒரு பக்கம். அதே சமயம் கடன்களும் வழங்கப்பட்டால்தான் வங்கிகளும் லாபம் பார்க்க இயலும். ஆகவே டிபாசிட் வட்டிவிகிதம் கிடைக்க இன்னொரு காரணமும் வந்துள்ளது.
25. வங்கிகளில் விவசாயி அல்லாதோரும் ( including bank staff and officers)
வேளான் கடன் பெறுவது தேசத் துரோகம் அல்லவா?(7 % interset bearing agri jewel loan)
பதில்: முதலில் ஒன்று எனக்கு புரியவில்லை. அது என்ன இந்த கடன்களை ஒருசாராருக்கு மட்டும் குறைந்த வட்டியில் தருவது என்ற நிலை? அது ஏன் என புரியாதபோது பலர் அதை பெறவும் முயற்சிப்பார்கள். இதில் என்ன தேச துரோகம் வரவியலும்? எனக்கு விளங்கவில்லை. இடுப்பில கூடை வச்சுண்டிருக்கிறவங்களுக்கு பெட்ர்ரொமாக்ஸ் லைட் கிடையாது என்று சொல்வது தவறுதான். அதே சமயம் இடுப்பில கூடை வச்சுண்டிருந்தால்தான் பெட்ரோமேக்ஸ் லைட் கிடைக்கும் என்று சொல்றதும் தப்புத்தேன். இது என்ன இழவு க்வாலிபிகேஷன்? யாராவது விளக்குங்கள் ப்ளீஸ்.
26. தேக்குமர வளர்ப்புத் திட்டத்தில் போட்ட பணம், கால்வாசியாவது யாருக்காவது தேறியிருக்குமா?
பதில்: யானை வாயில் போன கரும்பு கால்வாசியாவது எடுக்க முடிந்திருக்கிறதா?
27. விவசாயிகள் சங்கத்தின் இன்றைய நிலை எப்படி?
பதில்: எட்டாம் கேள்விக்கு செல்லவும்.
28.அன்றைய வெள்ளையன் ஆட்சிக்கும் இன்றைய கொள்ளையர்களின் ஆட்சிக்கும் உள்ள வேற்றுமை?
பதில்: லஞ்ச அளவில்தான் வேற்றுமை.
29. மீண்டும் விவேகானந்தர் பிறந்து வந்தால்?
பதில்: நினைக்கவே சுகமாக இருக்கிறது, கற்பனை.
30. தமிழக மந்திரிகளில் இருப்பதற்குள் யாரின் செயல்பாடு பரவாயில்லை?
பதில்: ஸ்டாலின், அது கூட அவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அளவால்தான்.
(மன்னிக்கவும் மீதி இருக்கும் 90 கேள்விகள் வாரம் 30 என்னும் கணக்கில் எதிர்காலத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன).
கமலக்கண்ணன்:
1. தன்னைவிட வயதில் முத்த பெண்ணை திருமணம் செய்வது இப்பெல்லாம் சர்வ சாதாரணமாய் உள்ளதாய் செய்திகள் வருகிறதே, இது பற்றி உங்கள் கருத்து?
பதில்: சாதாரணமாக பெண்கள் சீக்கிரம் மனமுதிர்ச்சி அடைவதால், வயதான பெண்ணை மணப்பவன் பாடு சற்றே கடினம்தான். மற்றப்படி உடல் ரீதியாக பிரச்சினை வரக்கூடாது.
2. பொதுவாய் அலுவலக்த்தில் பணிவில்லாமல் நடக்கும் உதவியாளர்களை பற்றிச் சொல்லும் போது "மூத்தவளை கட்டியது போல்" என்பார்களே?
பதில்: அவ்வாறான பணியாளர்கள் பிரமோஷன் வேண்டாம் என எழுதிக் கொடுப்பவர்கலாக இருப்பார்கள். வங்கி, எல்.ஐ.சி. ஆகிய நிறுவனங்களில் உள்ளது போல. அனுபவம் தரும் தைரியமே அது. அதிலும் அவர்களிடம் வேலை வாங்கும் அதிகாரி அவர்களைவிட குறைந்த அனுபவமும், வயதில் இளையவராகவும் இருந்தால் அதிகாரியின் பாடு சங்கடம்தான். அதைத்தான் மூத்தவளை கட்டியது போல என்று சித்தரிக்கிறார்கள் என நினைக்கிறேன்.
3. உடல் ரீதியாக பிரச்சனைகள் வராதா? தன்னைவிட வயது மூத்த பெண்களோடு தாம்பத்ய உறவு கொண்டால் ஆண்களின் இளமை கேள்விக்குறியாகும் என்பார்களே?
பதில்: ஆணுக்கு பிரச்சினை உடல் ரீதியாக இல்லை. ஆனால் மனரீதியான பாதிப்பு உண்டு.
4. உங்களுக்கு பிடித்த நடிகர் கமல்ஹாசன் கூட இந்தச் சிக்கலில் இருந்தார் என்பார்கள்?(முதல் மனைவி வாணிகூட) ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வயதுவித்யாசம் எது வரை சரி?
பதில்: வாணி கணபதி கமலைவிட பெரியவர் என நானும் கேள்விப்பட்டுள்ளேன். என்னைக் கேட்டால் பெண் ஆணை விட குறைந்தது ஏழு வயதாவது இளையவளாக இருத்தல் நலம்.
5. இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் -இது ஒரு பிரச்சனையாகுமா?
பதில்: எந்த சமன்பாடு குறைகளுமே பிரச்சினைதான். சில காலத்துக்கு பின்னால் மணம் செய்ய ஆண்கள் வரதட்சிணை தரவேண்டியிருக்கும்.
மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
8 hours ago
22 comments:
//எப்படி மாறும்? அத்தனை கற்பனை வறட்சி அல்லவா கலைஞர் டிவியிடம் உள்ளது. அதுவும் கலைஞர் இன்னும் சற்று அதிகமாக நெஞ்சம் இனித்து கண்கள் பனித்தால் கலைஞர் டிவிக்கே சங்கு என்ற நிலையில் அதில் வேலை செய்பவர்களது ஊக்கம் எங்கேயிருந்து வரும்? //
கண்டிப்பா சங்கு ஊதமாட்டாங்க ஐயா... சன்னை முந்த முடியலனாலும்.. வியாபாரம் நல்லா இருக்கு....அதனால........
நீங்கள் சொல்வதும் யோசிக்க வேண்டிய விஷயம்தான். லக்கிலுக்கும் அப்படித்தான் அபிப்பிராயப்பட்டார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ன் டீவி நகைச்சுவை சேனல் ஆதித்யா பத்து தினங்களுக்குள்ளே போரடிப்பது போலிருக்கிறதே?//
அரைத்த மாவையே அரைப்பதால்!
//கலைஞர் டீவி சன் டீவின் ஜெராக்ஸ் காப்பி போல் இருப்பது மாறுமா?//
இங்கே ஓடிய மெஷின் தான் அங்கேயும் ஓடுது. ரிசல்ட் மட்டும் எப்படி மாறும்.
கலைஞர் டீவீ இரண்டாவது இடம் தான்
”பொய்திகள்” வாசிப்பதில்
//தரத்திலும் புதிய நிகழ்ச்சிகள் தருவதிலும் விஜய் டீவி நம்பர் ஒன் சரியா?//
இரவு நேர விஜய் டீயியை நீங்கள் பார்த்ததேயில்லையே!
பகலில் பத்தினி வேசம் போடுவது போல் இருக்கிறது. இதற்கு அவர்கள் நேரடியாகவே சொல்லிவிடலாம். காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் செய்வோம் என்று.
//ஜீ தமிழ் டீவி போட்டியில் சோபிக்கவில்லையே?//
காட்டினால் தானே சொல்வதற்கு
//சுயமரியாதை இயக்கத்தின் தற்போதைய நிலை?
பதில்: சுயமரியாதைக்கு ஸ்பெல்லிங் தேடுகிறது.//
:)
//சாதாரண மக்களிடையே 1000 ரூபாய் பழக்கம் அதிகமாயுள்ளதே?//
ரிசர்வ் வங்கியில் பேப்பர் அதிகமா இருக்குன்னு அடிச்சி தள்ளிட்டானுங்க!
//முதலில் ஒன்று எனக்கு புரியவில்லை. அது என்ன இந்த கடன்களை ஒருசாராருக்கு மட்டும் குறைந்த வட்டியில் தருவது என்ற நிலை? அது ஏன் என புரியாதபோது பலர் அதை பெறவும் முயற்சிப்பார்கள். இதில் என்ன தேச துரோகம் வரவியலும்? எனக்கு விளங்கவில்லை. இடுப்பில கூடை வச்சுண்டிருக்கிறவங்களுக்கு பெட்ர்ரொமாக்ஸ் லைட் கிடையாது என்று சொல்வது தவறுதான். அதே சமயம் இடுப்பில கூடை வச்சுண்டிருந்தால்தான் பெட்ரோமேக்ஸ் லைட் கிடைக்கும் என்று சொல்றதும் தப்புத்தேன். இது என்ன இழவு க்வாலிபிகேஷன்? யாராவது விளக்குங்கள் ப்ளீஸ்.//
சந்து சாக்கில் இட ஒதுக்கீட்டடை தாக்குவது உங்களை முழுவதும் புரிந்து கொண்ட எனக்கு தெரியாதா என்ன?
//அன்றைய வெள்ளையன் ஆட்சிக்கும் இன்றைய கொள்ளையர்களின் ஆட்சிக்கும் உள்ள வேற்றுமை?
பதில்: லஞ்ச அளவில்தான் வேற்றுமை. //
தயவுசெய்து கொள்ளையர்களிடம், வெள்ளையர்களை ஒப்பிடாதீர்கள்.
வெள்ளையர்கள் இங்கிருந்து செல்வங்களை அள்ளி சென்றனர், அவர்களது நாடு செழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக,
கொள்ளையர்கள் சுரண்டுகிறார்கள், அவர்கள் குடும்பம் செழிப்புடன் இருக்க!
முன்னதை கூட அவர்களது நாட்டு பற்று என்று ஏற்று கொள்ளலாம்
பின்னது அக்மார்க் சுயநலம்.
//மீண்டும் விவேகானந்தர் பிறந்து வந்தால்?//
கல்யாணம் பண்ணி பிள்ளை குட்டியோடு சந்தோசமாக இருப்பார்.
//பெண்கள் சீக்கிரம் மனமுதிர்ச்சி அடைவதால், வயதான பெண்ணை மணப்பவன் பாடு சற்றே கடினம்தான். மற்றப்படி உடல் ரீதியாக பிரச்சினை வரக்கூடாது.//
உடல் ரீதியாக பிரச்சினை வரக்கூடாது அல்ல வராது!
//வாணி கணபதி கமலைவிட பெரியவர் என நானும் கேள்விப்பட்டுள்ளேன். என்னைக் கேட்டால் பெண் ஆணை விட குறைந்தது ஏழு வயதாவது இளையவளாக இருத்தல் நலம்.//
ஓரிருவரை வைத்து கணக்கிடுவது சரியல்ல!
சச்சின் தன்னை விட வயது அதிகமான பெண்ணுடன் தான் வாழ்ந்து வருகிறார்.
மேல் நாட்டில் இது சகஜம்,
இங்கே தான் ஆணாதிக்க மனோபாவத்தை விடமுடியாமல் சின்ன பெண்ணாய் இருந்தால் நாம் சொல்வதை கேட்பாள் என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லி கொள்கிறோன்.
//மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போமா?//
மீண்டும் அடுத்த வாரம் கலாய்ப்போமா?
// முதலில் ஒன்று எனக்கு புரியவில்லை. அது என்ன இந்த கடன்களை ஒருசாராருக்கு மட்டும் குறைந்த வட்டியில் தருவது என்ற நிலை? அது ஏன் என புரியாதபோது பலர் அதை பெறவும் முயற்சிப்பார்கள். இதில் என்ன தேச துரோகம் வரவியலும்? எனக்கு விளங்கவில்லை. இடுப்பில கூடை வச்சுண்டிருக்கிறவங்களுக்கு பெட்ர்ரொமாக்ஸ் லைட் கிடையாது என்று சொல்வது தவறுதான். //
இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயிகளுக்கு இங்கே சலுகை விலையில் கடன் தருவது தவறல்ல.
அவர்களுடைய தொழில் இயற்க்கையாகவே பல இடையூறுகளை சந்திக்க வேண்டிய ஒன்று. பல நாடுகளில் விவசாயத்துக்கு எக்கச் சக்கமாக மானியமாக தருகிறார்கள். அரபு நாடுகளில் செயற்க்கையாக குளிருட்டப்பட்ட தோட்டங்களை ஏற்படுத்தி விவசாயம் செய்ய ஊக்கம் தருகிறார்கள்.
அன்று மதிய சாப்பாட்டிற்குப் பின், வேலையை ஆரம்பிக்கு முன் ஆபீசில் ஆஜரானார் குப்பண்ணா... அவரது வாயைக் கிளறினால், சுவையான விஷயம் ஏதாவது கிடைக்கும்...
"என்ன, போஜனம் ஆச்சா?' என அவரது பாஷையில் கேட்டு வைத்தேன்.
"உபசரணையைப் பாத்தா, எதுக்கோ அடிபோடற மாதிரி தெரியறதே...' என்றார்.
"புரிஞ்சிட்டீங்கல்ல... சுவையான விஷயம் ஏதேனும் எடுத்து விடுங்களேன்...' என்றேன்!
"அது, 57ம் வருடம்ப்பா... தேர்தலில் அண்ணாதுரை போட்டியிட்டார். ஜாதி, மதங்களுக்கு எதிராக பிரச்சாரம் நடத்திக் கொண்டிருந்தது அவரது கட்சி. ஆனால், வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் அண்ணாதுரை முதலியார் என்றிருந்தது; வாக்குச் சீட்டிலும் அப்படியே பதிவாகி விட்டது.
"இதை ஈ.வெ.ரா.,வின் திராவிட கழகத்தினர் கேலி செய்து பிரசாரம் செய்தனர். அண்ணாதுரையோ, "இது வாக்காளர் பட்டியல் தயாரிக்க வந்த அரசு ஊழியர் செய்த தவறு; நான் எப்போதும் என் பெயருடன் ஜாதிப்பெயர் போட்டுக் கொள்வதில்லை...' என்றார்.
"ஒரு ஊர்க் கூட்டத்தில், "கண்ணீர் துளிக் கட்சிக்காரன்களுக்கு இப்போது வால் முளைத்து விட்டது; பெயருக்கு பின்னால், "முதலியார்' என்று போட்டுக் கொள்கிற வால் தான் அது!' என்றார் ஈ.வெ.ரா.,
"உடனே, "இவரது யோக்கியதை தெரியாதா? மணியம்மையை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட போது தன் பெயரோடு தன் ஜாதிப்பெயரையும் சேர்த்துப் போட்டு பதிவாளர் அலுவலகத்துக்கு விண்ணப்பித்தார். அது, அந்த அலுவலக நோட்டீஸ் போர்டிலும் ஒட்டப்பட்டு, சந்தி சிரித்தது...' என்று தி.மு.க.,வினர் நோட்டீஸ் அச்சிட்டு வெளியிட்டனர்...' என்று முடித்தார்.
"எல்லாமே வெளிவேஷம் தான்!' என நினைத்துக் கொண்டேன்!
http://www.dinamalar.com/weeklys/vmalarnewsdetail.asp?news_id=361&dt=02-19-09
Re-posting
1. இளங்கோவன், வாசன் போன்ற மத்திய அமைச்சர்கள் இதுவரை தமிழ்நாட்டுக்கோ, இந்தியாவுக்கோ என்ன செய்துள்ளனர் ? அவர்கள் துறையில் கடந்த 4 ஆண்டுகளில் என்ன நடக்கிறது என்பதாவது அவர்களுக்குத் தெரியுமா ? இதுபோல தானே ராதிகா செல்வி, ரகுபதி போன்றோரும் ? அன்புமணி, வேலு, பாலு, சிதம்பரம், ராசா தவிர மற்ற அமைச்சர்கள் எல்லாம் சும்மா தானே ?
2. மாலன், சாரு நிவேதிதா, ஞாநி, இரா.முருகன் போன்ற பலரும் உங்களை விட 5 அல்லது 7 வயதே சிறியவர்கள். இவர்கள் எல்லோரும் இளமையுடன் காட்சியளிக்கின்றனறே ? இவர்களிடம் டிப்ஸ் கேட்டதுண்டா ?
3. உங்கள் வீட்டில் ஜெயலலிதாவின் சிறந்த திட்டமான - மழைநீர் சேகரிப்புத்தொட்டி கட்டியுள்ளீரா ? அதனால் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளதா ?
4. பேரன் பேத்திகளுடன் விளையாட நேரம் ஒதுக்குவீர்களா ? அவர்கள் லெவலுக்கு இறங்கி அவர்களுடன் நேரம் போக்க முடிகிறதா ?
5. ஈழத்தமிழர்கள் தத்தளித்துக்கொண்டும், முத்துக்குமார் தியாகம் செய்த போதிலும், தானுண்டு வாராவாரம் ஓசி பாசில் புது படம் பார்த்து ப்ளாகில் விமர்சனம் - யாரு மனசுல யாரு - முதல் காதல் - முதல் முத்தம் என பதிவுகள் போடுவதுதான் வாழ்க்கையின் நிதர்சனம் இல்லையா ?
6. சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக ஹிண்டுவின் ஸ்போர்ட்ஸ் எடிட்டராக, கிரிக்கெட் எடிட்டராக இருந்த (அசாருதீனின் மேட்ச் ஃபிக்ஸிங் சமயத்தில் ஹிண்டுவை விட்டு வெளியேற்றப்பட்ட) ஆர்.மோகன் தற்போது டெக்கான் க்ரோனிகிளின் சென்னை பதிப்பு ஆசிரியராக ஆகியிருக்கிறாரே ? படிக்கிறீரா ?
7. ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார் மகன்கள் திருமணத்தில் ஜெ. வாழ்த்திப்பேசியது சரி. சோ எதற்கு இந்தக் கூட்டத்தில் வாழ்த்திப் பேச போனார் ? ஒரு சீரியல் ஸ்லாட்டுக்காக இவ்வளவா ?
8. டெக்கான் கிரோனிக்கிள் தேர்தல் கணிப்பில் அதிமுகவுக்கு 15 சீட்கள் கிடைக்குமாமே ? ஆக அடுத்த மத்திய அரசுக்கு தலைவலிதானே ?
9. காதலர் தினத்தில் மனைவியும் காதலியுமான வாழ்க்கைத் துணைக்கு என்ன பரிசு கொடுத்தீர்கள்
வியாழன் கேள்விகள் பகுதிக்கு: சுரேஷ் கிருஷ்ணா
@சுரேஷ் கிருஷ்ணா
மன்னிக்கவும். உங்கள் கேள்விகள் இம்முறை மிஸ்ஸாகி விட்டன. அடுத்த பதிவில் இப்போது சேர்த்துள்ளேன். நடுவில் இரண்டு நாட்கள் வெளியே போனதில் இம்மாதிரி நேர்ந்து விட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"திரு.டோண்டு அவர்களின் கருத்துக்களை பற்றியெல்லாம நாம் எதுவும் சொல்வதற்கில்லை.அவர் தெளிவாகவே இருக்கிறார். அவர் கூறுவது என்னவென்றால் சோ பிராமணர்களை ஆதரிக்கிறார்.ஆகவே நான் அவரை ஆதரிக்கிறேன்" -லக்கிலுக்,
http://www.tamilnadutalk.com/portal/lofiversion/index.php/t3306.html
இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
என்ன டோண்டு சார் இதையும் மறந்துடீங்களா?
//என்ன டோண்டு சார் இதையும் மறந்துடீங்களா?//
மறக்கவெல்லாம் இல்லை. அரைவேக்காட்டுத்தனமாக தான் சிறுவனாக இருந்த போது ஒரு பிராமணப்பையன் தன் மேல் எச்சில் துப்பி விட்டான் என்பதற்காகவே பார்ப்பனர்களை வெறுப்பதாக வாக்குமூலம் கொடுத்தவரின் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை என்பதுதான் நிஜம்.
சோ அவர்கள் பார்ப்பனர் என்பதால் நான் ஆதரிக்கிறேன் என்றால் அவர் பார்ப்பனர் என்பதாலேயே ‘தகுந்த’ காரணத்துடன் பார்ப்பனர்களை வெறுக்கும் லக்கிலுக்கும் அவரை எதிர்க்கிறார் போலும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கமலக்கண்ணன் said...
மெகா சீரியலில்
துக்ளக் ஆசிரியர் சோ அவர்களோடு உரையாடுபவரின் பெயர் என்ன?
February 16, 2009 9:03 PM
கமலக்கண்ணன் said...
விஜய் டீவியில் கோபிநாத் நடத்தும் நீயா நானா தொடர் பார்ப்பதுண்டா?
February 16, 2009 9:13 PM
டோண்டு கேள்வி பதில்கள்- க்கு,
1) பாஜக தற்பொழுது இலங்கை பிரச்சனைக்கு ஆதரவு (அத்வானி உட்பட) தெரிவிப்பதன் மூலமாக மறைமுகமாக விடுதலைபுலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. ஒரு வேளை பாஜக ஆட்சிக்கு வந்தால் இதே நிலயை கடைபிடித்து போரை நிறுத்துவதன் மூலமாக புலிகளுக்கு ஊக்கம் அளித்து தமிழகத்துக்கு தீராத துன்பத்தை தந்து விடுவார்களா?
2) நீங்கள் எந்த பாராளுமன்ற தொகுதியை சேர்ந்தவர்? உங்கள் தொகுதியில் பாஜக போட்டியிட்டாலும் ஆதிமுக- வுக்கு தான் வாக்களிபீர்களா?
3) ஆதிமுக தேர்தலுக்கு பிறகு (பெரும்பான்மை இருந்தால்) பாஜக-வுடன் கூட்டணி சேரும் என்று எந்தளவுக்கு நம்புகிறீர்கள். ஆங்கங்கே regional parties மற்றும் communists அதிக இடங்களை பெரும் பட்சத்தில் ஜெயலிதா மூன்றாம் அணி கூடாரங்களில் சேர்ந்து விட வாய்ப்பு இருக்கிறதல்லவா?
Post a Comment