2/21/2009

எங்கே பிராமணன் மெகா சீரியல் - பகுதி 15

20.02.2009 இரவு 8 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பான இப்பகுதியை நான் மிஸ் செய்ய வேண்டியதாயிற்று. அந்த முடிவை நான் தெரிந்தே எடுத்தேன். உறவினர் வீட்டு திருமணம். வீட்டம்மா ஏற்கனவே அங்கே ஆஜர். முதல் நாள் நிச்சயதார்த்தத்துக்கு போகாமல் நான் சமாளித்தாயிற்று, எல்லாம் சோவின் இந்த சீரியலுக்குத்தான். நேற்றைய கல்யாண ரிசப்ஷனை முதலில் அவாயிட் செய்யத்தான் நினைத்தேன். அதுதான் காலை திருமணத்துக்கு போயாயிற்றே என்ற சமாதானம் வேறு. ஆனால் அவர் தனியாக இரவு டாக்சியில் திரும்புவது பற்றி கவலை தெரிவிக்க, எனக்கும் மனது கேட்கவில்லை. ஆகவே ஒரு நாள் சீரியல் பார்க்காவிட்டால் பரவாயில்லை என எனது காரை மாலை 5 மணிக்கு வருமாறு ஏற்பாடு செய்தேன். ரிசப்ஷனுக்கு இருந்து விட்டு அவரை என்னுடன் திரும்ப அழைத்து வருவதாக பிளான். இருப்பினும் என்ன ஆச்சரியம், கிருஷ்ணன் என்பவரின் பின்னூட்டம் வந்தது. மனது அமைதியாயிற்ற்று. இப்போது நேற்றைய எபிசோடில் வந்ததைப் பார்ப்போமா?

14-ஆம் பகுதியின் கடைசி சீன் இங்கு முதல் சீன். சற்று முன்புதான் தன்னுடன் நேரடியாக பேசிவிட்டு சென்ற பாகவதர் அதற்குள் எப்படி காஞ்சீபுரத்திலிருந்து தனக்கு ஃபோன் செய்ய முடியும் என திகைப்படைகிறான் அசோக். அதை சமையற்கார மாமிக்கு சொல்ல, அவருக்கு உதறல்.

இப்போது சோவும் அவர் நண்பரும் திரைக்கு வருகின்றனர். பை தி வே ஒரு விஷயத்தை தெளிவு படுத்துகிறேன். நண்பர் இந்த சீரியலின் தயாரிப்பாளராம். பெயர்? டைட்டில்ஸில் பார்க்கலாம். இது பற்றி என்னை பலமுறை கேள்வி கேட்ட நண்பர் ஆவல் தீர்ந்திருக்கும் என நினைக்கிறேன். நண்பர் ஆச்சரியத்துடன் கேட்கிறார், அது பாகவதர் இல்லையென்றால் பின்னே யார் என கேட்கிறார். சோ கிண்டலுடன், “ஆமாம் சார், வில்லனுடைய கூடாரத்தில் ஹீரோவின் அப்பா பிரவேசிக்கிறார். திகைப்படையும் வில்லன் ஆட்கள் முன்னால் தனது மாஸ்க்கை கழட்டினால் அது உண்மையிலேயே வில்லன். அவன் ஆட்கள் பாஸ் பிரமாதம் என்கிறார்கள்”. நண்பர் முகத்தில் பிரகாசம், சீரியல் விறுவிறென போகிறதே என சந்தோஷப்பட, சோ அவரிடம், “அடப்போங்க சார், இந்த மாதிரி உத்தியெல்லாம் இக்கதையில் கிடையாது. பேசாம, சீரியலைப் பாருங்க” என அடக்கி விடுகிறார்.

சீன் மீண்டும் அசோக் மற்றும் மாமியிடம் செல்கிறது. “எல்லாமே மாயையா” என மலைக்கிறான் அசோக். அடுத்த நாள் நாதன் சமையற்கார மாமியிடம் தானும் வசுமதியும் பார்ட்டிக்கு சென்ற நேரத்தில் ஏதேனும் ஃபோன் வந்ததா என கேட்க, மாமி திகைப்புடன் பாகவதர் ஃபோன் விஷயத்தை கூறுகிறார். ஆச்சரியத்துடன் நாதன் அசோக்கை கூப்பிட்டு விசாரிக்க, அவனும் நடந்ததை கூறுகிறான். நாதன் பாகவதருக்கே ஃபோன் போட்டு விஷயத்தை கூற அவரும் திகைக்கிறார். அசோக் பார்த்தது வெறும் பிரமை என நாதன் சாதிக்க, அப்படி இல்லை என சொன்ன அசோக்கோ, பகவான் கிருஷ்ணர் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்ததை கூறுகிறான். பாகவதர் ஒன்றும் கிருஷ்ண பரமாத்மா இல்லையே என சீறுகிறார் நாதன். இப்போதைக்கு மர்மம் நீடிக்கிறது.

அடுத்த சீனில் வசுமதி வீட்டுக்கு வரும் ஒரு பைராகி பிட்சை கேட்க, வசுமதி அவரை பிட்சை போட மாட்டேன் எனக்கூறி விரட்டுகிறார். சமையற்கார மாமி சமயோசிதமாக பேசி, பிட்சை இடுகிறார். இதையெல்லாம் வெளியிலிருந்த வண்ணம் பார்த்த பாகவதர் வசுமதியிடம் நாதன் குடும்பத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் அவரது கொள்ளுத்தாத்தா காலத்தில் இம்மாதிரி அவாத்து மாமி பெண் துறவிக்கு பிட்சையிட மறுக்க, இனி அக்குடும்பத்தில் தலைமுறைக்கு ஒருவர் சந்நியாசியாக போவார்கள், அவ்வாறு போகிறவருக்கு என்னவோ புண்ணியம்தான், ஆனால் மற்றவருக்கு பிரிவுத் துயரமே என அருள்வாக்கு கூறி அத்துறவி செல்கிறார். இதை கேட்டு திகைப்படந்த வசுமதி நாதனிடம் பிறகு அது பற்றி கேட்க, அவரும் சில உதாரணங்களை கூறி அதை ஊர்ஜிதம் செய்கிறார்.

மீண்டும் சோவும் நண்பரும். எல்லாமே விதிப்படித்தான் என்றால் ஏன் முயற்சி செய்து நேரத்தை வீணாக்க வேண்டும் என நண்பர் கேட்க, சோ அது பற்றி நீண்ட விளக்கமே அளிக்கிறார். மழை வருவது விதி. அது வந்தால்தான் விளைச்சல் இருக்கும். ஆனால் அது மட்டுமே போதாது. மற்ற முயற்சிகளும் வேண்டும். இல்லாவிட்டால், மழை வந்தும் என்ன பலன்? அதே சமயம் எல்லா முயற்சிகளும் செய்து கடைசியில் எதிர்ப்பாராத காரணங்களால் கைகூடாமல் போவதும் உண்டு. அதுதான் விதி. ஆக, முயற்சி எப்போதுமே தேவைதான். அல்லாவை நம்பு, அதே சமயம் ஒட்டகத்தையும் நன்றாக கட்டிப்போடு என்னும் பொருளில் இசுலாமிய நண்பர்களிடையே ஒரு சொலவடை உண்டு. அதுவும் இதைத்தான் வலியுறுத்துகிறது. சோவுக்கு தயாரிப்பாளராக இந்த நண்பர் வரவேண்டும் என்பது விதி, ஆனால் அவரையும் அவ்வப்போது பதில்கள் மூலம் சமாளிப்பது சோவின் முயற்சிகள்தானே.

யாதவர்கள் அழிந்தனர். கிருஷ்ணர் யாதவ பெண்மணிகளை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லுமாறு அருச்சுனனை பணிக்க, அவனும் அவ்வாறே செய்கிறான். அப்போது அவனை தாக்கிய கொள்ளைக்கூட்டத்தாரை எதிர்த்து அவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவனது காண்டீப வில்லும் பயன்படவில்லை. அப்போது திகைப்படைந்த அருச்சுனனுக்கு வியாசர் விளக்குகிறார், அருச்சுனனின் விதி முடிந்தது என்று. ஆக, அம்மாதிரி சந்தர்ப்பங்களில்தான் விதி பற்றிய விளக்கம் புரிந்து கொள்ள முடியும்.

கடைசியா முரளி மனோகர் ஒன்று கூற ஆசைப்படுகிறான். “அதானே, பாருங்களேன். பெரிசு சீரியலை துறந்தாலும் சீரியல் பெரிசை விடவில்லை. ஆகவே இப்பதிவு மற்ற பிளாக்கர்களையும் விடுவதாக. ஹூம், விதியின் விளையாட்டே தனி”.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

Anonymous said...

I too had to skip watching this due to unavoidable reasons. But I was confident of reading it here.. Dondu sir irukka bayam en!

-Swami

dondu(#11168674346665545885) said...

அதற்கெல்லாம் இனி அவசியமே இல்லை. அதுதான் சீரியலுக்கான லிங்க் தந்தாயிற்றே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sethu Raman said...

கேள்விகள்

1.வைக்கோலுங்க சாரி வக்கீலுங்க செய்யறது சரியா?

2. அவங்க சட்டத்துக்கு அப்பாற்பட்டவங்களா?

3. உச்ச நீதிபதி பேச்சிலும் கொஞ்சம் வெண்டைக்காயும்
விளக்கெண்ணையும் வாடை அடிக்கிறதே? வ்க்கீல்களை
ஆதரித்துத் தான் அவர் பேச வேண்டுமா? மு.க். உண்மையிலேயே
உண்ணாவிரதம் தொடங்குவாரா, அல்லது வழக்கம் போலக்
கூத்துதானா?

4.முதலமைச்சர் திருவாயைத்திறந்து ஆஸ்கார் அவார்ட்
தம்பி மதத்தைப் பற்றித்தான் பேச வேண்டுமா? சிறுபான்மை
வாக்குகள் இல்லாமல் அவரால் தாக்குப் பிடிக்க முடியாதா?

5. புலிகளின் உண்மை ஸ்வரூபம் இப்போது நன்றாகத் தெரி
கிறதே, போர் நிறுத்தம் வேண்டும், ஆனால் நாங்கள் ஆயுதம்
கீழே போட மாட்டோம் என்றவுடன்!! புலிச்சார்பு கட்சிகளும்
தமிழ் பத்திரிகைகளும் உண்மையிலேயே தமிழர்களின்
நலம் கருதுவார்களாயின், புலித் தம்பிகளுக்கு அறிவுரை
சொல்லுவார்களா?

பட்டாம்பூச்சி said...

எழுத்து வடிவில் தந்து சீரியல் பார்க்காத குறையை நீக்குகிறீர்கள்.நன்றி.

Anonymous said...

Sir,

Thank u very much for mentioning about my e-mail.

I know that the information will reach to the larger audience, by informing you, but I never thought that it will be useful for you also.

Trust you may remember me,
I spoke to u once (2 years back).

Have a nice day,

Krishnan
Qatar

dondu(#11168674346665545885) said...

கிருஷ்ணன் அவர்களே,

உங்களுடன் பேசினேனா? நல்லது. ஏன் இன்னொரு முறை பேசக் கூடாது?

என் மொபைல் எண் (சென்னை) 9884012948.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது