2/12/2009

டோண்டு பதில்கள் 12.02.2009

காண்டீபன் தனஞ்செயன்:
முதலில் இவரது கேள்விகளை பற்றி சில வரிகள். அவை எனது தூங்கியது போதும் மாணவர்களே விழிமின், எழுமின் என்னும் பதிவுக்கான பின்னூட்டத்தில் கேட்கப்பட்டவை. பாவம், அவர் பாட்டுக்கு எதார்த்தமாக கேட்டு வைக்க நானும் அவற்றை மாட்டிக் கொண்டீர்களா என்ற ரேஞ்சில் இந்த பதில்கள் வரைவுக்கு கொண்டு வந்து விட்டேன். முரளி மனோகர் வேறு “இந்த பெரிசுக்கு வேறு வேலை இல்லை” என்றெல்லாம் கோட்டா செய்ய ஆரம்பித்து விட்டான். ஓக்கே இப்போது முதலில் அந்த பின்னூட்ட கேள்விகளுக்கு போவோமா?
1) இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகிட்ட எல்லாரையுமே முட்டாள்கள்னு சொல்லுகிறீர்களா?
பதில்: முட்டாள்களோ இல்லையோ, ஆனால் சொந்த நாட்டின் விடுதலைக்கு போராடினார்கள். சிலருக்கு தியாகி பென்ஷன் கிடைத்தது. பலருக்கு கிடைக்கவில்லை. பலரது படிப்பு பாதிக்கப்பட்டது. அவர்கள் முட்டாள்கள்னு அவங்களோட பிள்ளைகள் எல்லாம் இப்ப சொல்லறாங்க. நிறைய தியாகிங்களே பல சமயங்களிலே நொந்திருக்காங்க. இதுல கொடுமை என்னன்னா சுதந்திர போராட்ட காலத்துலே தன்னோட வேலையை பாத்துட்டு இருந்தவங்க சுதந்திரம் வந்ததுமே பெரிய பதவியெல்லாம் பெற்று செட்டில் ஆனாங்க. தியாகிங்க பாவம். இதெல்லாம் கூட பரவாயில்லை. சொந்த நாட்டுக்காக செஞ்சாங்க. ஆனால் எங்கோ சம்பந்தமே இல்லாது துருக்கியில் கிலாஃபத் போராட்டத்துக்கு நம்ம காந்தி ஆதரவு தந்து இங்கே கேரளாவிலே மாப்பிளா கலவரம் போன்ற இனக்கலவரமே நடந்தது. அதுகாக இன்னமும் காந்தியை பாதிக்கப்பட்ட எல்லோருமே எல்லாம் திட்டறாங்க.

2) பகத்சிங்க், வாஞ்சிநாதன் இன்னும் பலரெல்லாம் உயிர விட்டது உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவுன்னு சொல்லுகிறிர்களா?
பதில்: வாஞ்சிநாதனின் விதவைக்கு அறுபதுகளில் பென்ஷன் தர முயற்சிகள் நடந்த போது அவர் பார்ப்பனர் என்பதற்காகவே திராவிடக் கழகம் தடுத்தது. அந்த ஏழைப் பெண்மணி, கணவனை இழந்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் கஷ்டப்பட்டவர், பென்ஷன் பெறாமலேயே இறந்து போனார். இதுக்கென்ன சொல்வீங்க?

3) இதேபோல இந்திய சுதந்திர போராட்ட காலத்துல மாணவர்களைப் புத்தகங்களோட பூட்டி வெச்சிருந்தா இன்னைக்கு நாம சுதந்திர காற்றை சுவாசிக்க முடிந்திருக்கும்னு நினைக்கிறீங்களா?
பதில்: உங்களுக்கு வேணும்னா நீங்களும் இறங்கி போராடுங்களேன். யார் தடுத்தது? நான் கூறியது சராசரியான, உணர்ச்சிவசப்படும் மாணவர்களுக்கு அறிவுரை. அவ்வளவே. மற்றப்படி இரண்டாம் உலக மகாயுத்தத்திலே பிரிட்டன் பயங்கரமா சேதம் அடைந்தது. அவங்களாலே காலனிகளை சமாளிக்க முடியல்லைங்கறதுதான் நிஜம். உண்மையை சொல்லப் போனா 1947-லேயே அது கிடைக்கும்னு நம்மவங்களிலே யாருக்குமே அப்ப தெரியாது. நிறைய பேர் அதிர்ச்சியே அடைஞ்சாங்க. காலனி இந்தியா ஒரு உள்ளுக்குள் உளுத்த மரம். வெளியில் தெரியவில்லை. இரண்டாம் உலக மகா யுத்தம் வந்து அதுக்கு மரண அடி கொடுத்தது. அதெல்லாம் மேக்ரோ அளவுக்கான விஷயங்கள். இப்ப உங்க கேள்விக்கு வரேன். அப்படி சுதந்திரம் வந்த ஆண்டு அதை துக்க நாளாக அறிவித்தார் பெரியார் அவர்கள். குறைந்த பட்சம் தமிழகத்தையாவது வெள்ளைக்காரனே ஆள வேண்டும் என்ற பொருளில் கூட பேசியிருக்கார். அவர் உங்களோட கேள்விக்கு என்ன பதில் சொல்லியிருப்பார் என்பதை நினைத்து பாருங்களேன். சுவாரசியமான பொழுதுபோக்கு.

4) மாணவர்கள் அரசியலில் தலையிடக்கூடாதென்றால் அரசியலில் தலையிடும் உரிமை அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் உள்ளதா?
பதில்: வாழ்வில் அததுக்கு நேரம் என உண்டு. மாணவப்பருவம் என்பது திரும்ப வராது என்பதை மறக்காமலிருந்தால் சரி.


வஜ்ரா:
1. மங்களூரில் முதலில் பப் அம்னீசியா மீது குண்டர்கள் தாக்குதல் நடந்தது. எல்லா செய்தி சேனல்களும், செகுலர் பிளாக்குகளும் ஃபாசிசம் என்றே கத்தினார்கள். இது போல் சென்னையில் 5 நட்சத்திர ஓட்டல்களில் அடிக்கடி ரவுடிகள் புகுந்து தமிழ் பண்பாட்டைக் காப்பாற்றியுள்ளனர். அப்பொழுதெல்லாம் ஒரு செய்திச் சேனலும், இப்படி பின்னாடியே போய் லைவ் டெலிகாஸ்ட் செய்வது கிடையாது. ஏன்?
பதில்: அதற்காக ராம சேனையினர் செய்தது அட்டூழியம் இல்லை என ஆகிவிடாது. அதே சமயம் நீங்கள் சொல்வதிலும் உண்மை உண்டுதான். தமிழ்ப்பண்பாட்டை காப்பதாக புருடா விடுபவரை கண்டு கொள்வது குறைவுதான். தமிழ்த் தீவிரவாதம் செய்யும் வீரப்பரை ஆதரித்த முதல்வர் இருக்கும் நாட்டில் வேறு என்ன எதிர்ப்பார்ப்பது?

2. பா.ஜ.க ஆட்சி என்றாலே அதை கவிழ்ப்பதற்கு ஏன் இவ்வளவு வெறியுடன் திரிகிறார்கள் ? (பா.ஜ.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இப்படித்தான் நடக்கும் என்று ஓப்பன் ஸ்டேட்மெண்டை ஒரு பதிப்பக நிறுவனருமான பிரபல வலைப்பதிவர் எழுதுகிறார்) பா.ஜ.க மீது ஏன் இந்த கொலை வெறி?
பதில்: அது அவரது அரசியல் அஜெண்டாவாக இருக்கலாம். ஆளைவிடுங்கள்.


அரசு:
1. "ஸ்வீட் ட்ரீம்ஸ்" "வெட் ட்ரீம்ஸ் " விளக்கவும்?
பதில்: ஸ்வீட் ட்ரீம் ரொம்ப நேரம் ஓடினால் அது வெட் ட்ரீமாக மாறும் அபாயம் உண்டு.

2. உங்கள் அனுபவம் எப்படி?
பதில்: எல்லோருக்கும் வந்தது போன்ற அனுபவம்தான். இதில் ஸ்பெஷலாக சொல்ல ஒன்றுமில்லை.

3. எத்தனை வயது வரை மருத்துவ ரீதிரியாக இந்த வகைக் கனவுகள் சாத்தியம்?
பதில்: சாதாரணமாக கல்யாணம் ஆனவுடன் நிற்க வேண்டும். ஏனெனில் இயற்கையான வடிகால் கிடைத்து விடுகிறது (pun intended).

4.இதற்கு ஏதாவது ஹைபெர் லிங் உண்டா?
பதில்: இல்லை

5. அதிகாலை காணும் கன‌வுகளுக்கு நடக்கும் என பலன் சொல்வது உண்மையா?
பதில்: இதற்கு விஞ்ஞான பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை.

6. வானில் பறப்பது போல் கனவு காண்பவர் பொருளாதார உச்சிக்கு செல்லும் செய்தி சொல்வதாக உள்ளது மிகைபடுத்தும் செயலா?
பதில்: பல முறை பறப்பதாக நான் கனவு கண்டுள்ளேன். இதில் என்ன வேடிக்கை என்றால் ஒவ்வொரு முறையும் அக்கனவு வரும்போது, இத்தனை நாள் கனவாகக் கண்டது இப்போது பலிக்கிறது பார் என்ற உணர்வுதான். ஆனால் கடைசியில் எழுந்த உடனேயே இம்முறையும் இதுவும் கனவுதான் என்றவுடன் ஏமாற்றமாக இருக்கும். என்னைத் தொடர்ந்த கனவு ஒன்று மாதிரின்னு வச்சுக்கலாமே.

7. கனவுகளைக் கூட பதிவு செய்து பின் பார்க்கும் வசதி செய்யப்பட்டுவிட்டது பற்றி?
பதில்: என்னது? அப்ப எல்லோரும் பார்ப்பாங்களா? அப்புறம் எப்படி பேரறிஞர் கனவுல வந்ததெல்லாம் சொல்லி கப்சா அடிக்கிறதாம்?

8. கனவுகள் ஆழ்ந்த தூக்கமா? இல்லையா?
பதில்: கனவுகள் வந்தால் சரியான தூக்கம் இல்லை என ஒரு கோஷ்டி சொல்லித் திரிகிறது. என்னைப் பொருத்தவரை அது உண்மையில்லை. எனக்கு கனவு வராத நாளே கிடையாது. என்ன, முக்கால்வாசி கனவுகள் நான் முழித்த சில நொடிகளில் நான் அதை உணரும்போதே விலகிச் சென்று விடும். எனக்கு பல கிண்டலான கனவுகள் கூட வருவதுண்டு. அதெல்லாம் பற்றி ஒரு நாள் நான் பதிவாகப் போடலாம் என்று எச்சரிப்பது முரளி மனோகர். அவனுக்கு எனது எல்லா கனவுகளும் அத்துப்படி.

9. பகலில் காணும் கனவுக்கும் இரவுக் கனவுக்கும் விதியாசம் என்ன?
பதில்: எனக்கு அவற்றுள் ஒரு வித்தியாசமும் புலன்பட்டதில்லை. நான் கல்லூரி வகுப்புகளில் தூங்கும்போதும் கனவு கண்டுள்ளேன்.

10. சிலசமயம் கனவுகள் தடை பெற்ற பிறகும் சீரியல் போல் தொடர்வது எப்படி?
பதில்: இது ஆழ்மனதின் கைங்கர்யம்.


அனானி (09.02.2009 காலை 07.56-க்கு கேட்டவர்):
1. இவர்களில் யாரையெல்லாம் நீங்கள் கண்டிக்க விரும்புகிறீர்கள்.விளக்கத்துடன்?
1. தனது வேலைக்கரார்களை இந்த நூற்றாண்டிலும் கொத்தடிமை போல் நடத்தும் மூர்க்க முதலாளி; 2. அரசின் சலுகைகளை உரியவர்களுக்கு கிடைக்காமால் தனதாக்கி கொள்ளும் சுயநலம் மிகுந்தவர்கள்; 3. நல்ல மாமியார் மாமனாரை கொடுமை செய்து உணவு கூட கொடுக்காத கொடிய மன‌துடன் உலாவரும் மருமகள்கள்; 4. நல்ல மருமகளை மீண்டும் மீண்டும் பணம் கொண்டுவரத்தூண்டும் வ்டிவுக்கரசி/நளினி டைப் மாமியார்கள்; 5. கொழுத்த சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்ய கையேந்தும் அரசு பணியாளர்கள்; 6. யு.டி சட்டத்தை பிறர் மேல் தவறாய் பயன்படுத்துவோர்; 7. இட ஒதுக்கீட்டு சலுகையால் கிடத்துள்ள‌ அரசு வேலையை சரிவர நிறை வேற்றாதவர்கள்; 8.பொருட்களின் விலை குறையும் போதும் விலையை குறைக்க மன‌தில்லா பகல் கொள்ளை அடிக்கும் வியாபாரிகள்; 9. சொந்தங்களின் இயலாமையை பயன்படுத்தி பாலியிய‌ல் பலாத்காரம் செய்யும் ராவணவம்சம்; 10. அப்பாவி மக்களின் உண்ர்ச்சியை தூண்டி குளிர் காய நினைக்கும் அரசியல் வித்தகர்கள்

பதில்: இதில் என்ன சாய்ஸ் வேண்டியிருக்கிறது? எல்லோரையுமேதான் கண்டிக்க விரும்புவேன். 6-ஆம் நம்பர் கேள்வி தவிர, ஏனெனில் யு.டி. என்றால் என்ன எனக்கு புரியவில்லை.


எம். கண்ணன்:
1. வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு உங்கள் ஓட்டு? திமுக? அதிமுக? விஜய்காந்த்? டி.ஆர்.பாலு?
பதில்: அதிமுக

2. 'நான் கடவுள்' படத்திற்காக ஜெயமோகனுக்கு அரசு விருது (வசனத்திற்காக) கிடைத்துவிட்டால் சாரு நிவேதிதா என்ன செய்வார்? (மேலும் பல பட வாய்ப்புகள் கிடைத்து பணமும் அதிகம் ஜெமோவுக்கு கிடைக்கக் கூடும்)
பதில்: இதெல்லாம் ஒரு கேள்வியா? வயிறெரிவார், வேறு என்ன செய்வார் என நினைக்கிறீர்கள்?

3. சிவாஜி கணேசனின் படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த 10 படங்கள் யாவை? ஏன்?
பதில்: பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், தில்லானா மோகனாம்பாள், தேவர் மகன், என் தம்பி, எங்க மாமா, தங்கைக்காக... இதுக்கு மேல் தேறவில்லையே.

4. எந்த ஹீரோயின்களைப் பார்த்து அதிகம் (அந்தக் காலத்தில்) ஜொள்ளு விட்டிருக்கிறீர்கள் ? எந்த அழகிற்காக ? (கண்கள், முகம், எடுப்பான மார்புகள், இடை, நடனம், overall சூப்பர் ஃபிகர்...)
பதில்: தேவிகா, பத்மினி எடுப்பான மார்புகளுக்காக, அஞ்சலிதேவி, நக்மா கண்களுக்காக, பத்மினி, வைஜயந்திமாலா நடனம், ஜெயமாலினி ஓவரால் சூப்பர் ஃபிகர்

5. மருத்துவ இன்சூரன்ஸ் பிரிமியம் மிகவும் அதிகமாகிவிட்டதே? பல மருத்துவ மனைகளிலும் இன்சூரன்ஸ் இல்லாமல் உள்ளேயே விடுவதில்லையே? பெரும்பாலான மிடில் கிளாஸ் எப்படி சமாளிப்பது?
பதில்: அமெரிக்காவின் பிரச்சினையாக இருந்தது இப்போது இந்தியாவுக்கும் பரவி விட்டது. கடவுள் தயவால் இதுவரை அது எதுவும் இல்லாது நாட்களை ஓட்டி விட்டேன். இனிமேல் பார்ப்போம்.

6. லக்கிலுக், அதிஷா, கேபிள் சங்கர் போன்ற பதிவர்கள் முதல் நாள் முதல் ஷோ முறையில் பெரும்பாலான படங்களை பார்த்து விமர்சமும் உடனுக்குடன் எழுதுகின்றனரே - எப்படி டிக்கெட் கட்டுப்படியாகிறது ? Free PASSசா ? வலைப் பதிவில் எழுதுவதை விட, இவர்கள், பத்திரிக்கையில் எழுதினால் பணமும் கிடைக்குமே ? இவர்களின் விமர்சனம் பத்திரிக்கைகளின் விமர்சனத்தை விட மிக நன்றாக எழுதப்படுகிறதே ? பத்திரிக்கைகள் ஏன் இவர்களை(யும் அதைப் போல நன்றாக எழுதும் பதிவர்களையும்) பயன்படுத்திக் கொள்ளவில்லை?
பதில்: சினிமா பாஸ்கள் கிடைப்பதுவே காரணம். அதிஷா அவர்கள் பற்றீத் தெரியாது. கேபிள் சங்கர் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர். லக்கியின் கம்பெனியும் சினிமா தயாரிப்பில் அதிக செயல்பாட்டில் உள்ள நிறுவனம். அவர் சினிமா பார்ப்பது கூட அவர் வேலை சம்பந்தப்பட்ட விஷயமே.

7. ஜெயமோகன் வெளிநாடுகள் செல்லப் போகிறாராமே ? அவர் சென்றுவிட்டு வந்த பிறகு வாசகர்களுக்கு படிக்க நல்ல கட்டுரைகள் கிடைக்கும்தானே? அவரது 'எனது இந்தியா' கட்டுரை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: ஜெயமோகனுக்கென்ன. அற்புதமான எழுத்தாளர். நீங்கள் கேட்டது எல்லாம் கிடைக்கும். மற்றப்படி அவர் ‘எனது இந்தியா’ பற்றி எழுதியதுடன் கிட்டத்தட்ட முழுக்கவே ஒத்து போகிறேன்.

8. ஸ்டாலின் பதவியை வைத்து பல நல்ல காரியங்கள் செய்து வருகிறார். தன்னுடைய துறையை நன்றாகவே கையாள்கிறார். அழகிரி முதல்வரானால் தமிழ்நாட்டில் என்னவெல்லாம் நடக்கும்?
பதில்: பிரியாணி கிடைக்கும்.

9. (சசிகலா) நடராஜன் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? தேர்தல் நெருங்கினாலே அவர் சுறுசுறுப்பு ஆவாரே?
பதில்: பாஜகவுடன் நெருக்கமாகப் போவது போன்ற ஒரு தோற்றம் எனக்கு தெரிகிறது.

10. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பொறுப்பில் ஒரு பிராமண அதிகாரியை (மாலதி - ஹோம் செக்ரடரி) வைத்திருப்பது கலைஞரின் சாதுரியமா ? இல்லை ராஜ தந்திரமா ? இல்லை மாலதி அவர்களின் திறமையா?
பதில்: முழுக்க முழுக்க நிர்வாக சம்பந்தமுள்ள விஷயம். இதில் இருக்கும் பல உள்குத்துகள் எனக்கு புரியவில்லை.


அனானி (09.02.2009 பிற்பகல் 03.34-க்கு கேட்டவர்):
1. அதிமுகவில் இருக்காரா இல்லையா எனும் கேள்விக்கு விடை தெரியாச் சூழலில்,திடிரென பார்ப்பனர்களுக்கு 7 % இட ஒதுக்கீடு கலைஞர் தருவார் என புதுக் கோஷத்துடன் வரும் எஸ்.வி சேகர் திமுக பக்கம்?
பதில்: அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா.

2. திமுகாவின் இலங்கைத் தமிழர் காப்பு போராட்டம் ஒரு ஏமாற்று வித்தை என்பதை மக்கள் அறிவார்களா?
பதில்: முதற்கண் திமுகவினர் அறிவார்களா என்பதை யோசித்தல் சரியாக இருக்கும்.

3. நெல்லை மாவட்ட ஸ்டாலின் விசுவாசிகள் அழகிரியாருக்கு(தென் பகுதி காவலர்) அடிபணிய மறுப்பது சரியா? என்னவாகும்?
பதில்: அது என்னவோ தெரியவில்லை, முக அவர்களின் குடும்ப சண்டையில் கட்சி எடுக்காது இருப்பது கட்சியில் உள்ள மற்றவர்களுக்கு நல்லது. இல்லையானால் அடித்து கொள்பவர்கள் திடீரென ஒன்றுபட்டு, பெரியவருக்கு கண்கள் பனிக்கச் செய்து இதயத்தை இனிக்கச் செய்து விடுவார்கள். அது சரி என்ன கேட்டீர்கள்? அழகிரியின் கொத்தடிமையாக இல்லாமல் ஏன் ஸ்டாலினின் கொத்தடிமையாக இருக்கிறர்கள் என்றுதானே? சுயமரியாதை தத்துவத்தில் ஊறிய கட்சி என ந்சொல்லிக் கொள்ளும் ஒரு கட்சி ஆட்களுக்கு இதெல்லாம் தேவைதான்.

4. மு.க முத்துவின் வாழ்க்கை கதை குமுதத்தில் பார்த்தீர்களா? எப்படி? அழ்கிரியாரின் ஆடு புலியாட்டம் முன்னால் ஸ்டாலின் பாச்சா பலிக்குமா?
பதில்: மு.க. முத்து பற்றிய கதையை படிக்கவில்லை. மற்றப்படி ஸ்டாலின் அழகிரி மோதலில் அழகிரிக்கு சாதகமாக பல விஷயங்கள் உள்ளன.

அனானி (10.02.2009, மாலை 06.22-க்கு கேட்டவர்):
1. அரசு திட்டங்களில் மொத்தச் செலவில் 50 - 60 % அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கமிஷனாய் போய் விடுவதால்தான் அரசு வேலைகள் தரம் சொல்லிக் கொள்ளும் விதமாய் இல்லாமலிருக்கிறதா? இதற்கு விடிவு உண்டா?
பதில்: என்ன, மிகுதி 40 % நல்லபடியாகச் செலவாகிறதா? ரொம்பத்தான் ஆப்டிமிஸ்ட் சார் நீங்கள்.

2. திமுக அரசில் இது மாதிரி வேலைகள் கனஜோராய் நடப்பது பற்றி?
பதில்: ஊழல் விஷயத்தில் திமுக மற்றும் அதிமுகவுக்கிடையில் பலத்த சரியான போட்டி. ஒரு கட்சியின் ஊழலை மட்டும் சிறப்பாகக் கூறி இன்னொரு கட்சியின் ஊழல் சாதனையை கூறாமல் விடுவது அநீதி. அவர்களுக்கும் கிரெடிட் வேண்டாமா?

3. திட்டங்கள் போடுவது கடன் வாங்கி கமிஷன் அடிக்கவா?
பதில்: பின்னே வேறு எதுக்காம்?

4. எந்த வேலையும் செய்யாமல் கோடீஸ்வர்களாய் சுற்றிவரும் அரசியல் வாதிகளின் மீது வருமானவரித் துறையின் நடவடிக்கை அவ்வளவு சொல்லிக் கொள்வதுமாதிரி இல்லையே?
பதில்: இத்தனைக்கும் வருமான வரிச்ச்ட்டங்கள் கடுமையானவை அதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக பிராசிக்யூஷன் குற்றத்தை நிரூபிப்பதைவிட, குற்றம் சாட்டப்பட்டவர்தான் தன்னை நிரபராதி என்பதை நிறுவ வேண்டியுள்ளது. இருப்பினும் ஏன் இந்த மந்த நிலை? ஆனால் ஒன்று, கருப்புப்பணம் பல வருமான வரி ஆய்வாளர்கள் வீட்டில் ரெய்டுகளில் சிக்கியுள்ளது. ஏதோ புரிகிற மாதிரி இல்லை?

5. மத்திய மாநில பட்ஜெட்டில் சலுகை மழை கொட்டப்போகிறதா?
பதில்: கொட்டாவிட்டால்தான் ஆச்சரியம்.

6. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை,வக்கத்தவனுக்கு வாத்யார் வேலை என காமராஜ் ஆட்சியில் சொல்வார்களே இப்போது கலைஞர் ஆட்சியில்?
பதில்: குடுமத்தில் உள்ளவருக்கு மந்திரிப் பதவிகள்

7. அரசுப் பள்ளியில் வேலைபார்க்கும் செகண்டிகிரேடு ஆசிரியர்கள் கூட, அரசு பள்ளியின் கல்வியை நம்பாமல் தன் பிள்ளைகளை மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்ப்பது நியாயமா?
பதில்: அவர்களுக்குத்தானே அரசு பள்ளிகளில் உள்ல ஆசிரியர்களின் தரம் பற்றிய சுய தரிசனம் அதிகம்?

8. இன்று கணவன் மனைவி இருவரும் செகண்டிகிரேடு ஆசிரியர், ஆசிரியை என்றால் அவர்களின் மாத மொத்தவருமானம் பல ஆயிரங்கள், ஆனால் அவர்களின் கற்பிக்கும் திறமை?
பதில்: நல்ல ஆசிரியர்கள் எக்காலத்திலும் இருந்திருக்கிறார்கள். ஆனால் எப்போதுமே சிறுபான்மையினராகவே உள்ளனர்.

9. பல கிராமங்களில் இவர்கள் உபரிப் பனத்தை பிறருக்கு கந்து வட்டிக்கு கொடுப்பது பற்றி?
பதில்: கொடுமை, இது உண்மையாக இருக்கும் பட்சத்தில்.

10. அரிசி விலை ஒரு கிலோ 50 ரூபாய் ஆகப் போவது பற்றி?
பதில்: கூடிய சீக்கிரம் அந்த நிலை வந்து விடும்.

11. நதிகள் இணைப்பு திட்டம் எந்த நிலையில் உள்ளது?
பதில்: வரைபட அளவில்தான் உள்ளது.

12. அரசியல்வாதிகள் இதை நடக்கவிடுவார்களா?
பதில்: ஏன் மாட்டார்கள்? நிறைய கமிஷன் கிடைக்குமே?

13. விவசாயம் இதனால் பலன் பெறுமா?
பதில்: நல்லபடியாக திட்டமிட்டால் நிச்சயம் பலன் உண்டு.

14. பசுமைப் புரட்சியால் கிடைத்த நன்மைகள்?
பதில்: சௌகரியமான அளவில் உணவுப்பொருள்கள் கையில் இருப்பது. ஆனால் கடந்த சில காலமாக அதற்கும் ஆபத்து போலிருக்கிறதே.

15. நெல்லை மாவட்டத்தில் இதற்கு பிள்ளையார் சுழி போடப் போவது உண்மையா?
பதில்: எதற்கு? நதிநீர் இணைப்பு பற்றி கேட்கிறீர்களா, அல்லது பசுமைப் புரட்சி பற்றியா? நதிநீர் விஷயம் என்றால் ஒரு படத்தில் தாமிரபரணியில் எல்லா நதி நீர்களையும் இணிக்கிறேன் எனக் கூறி மக்களை கூட்டி, தாமிரபரணி நதியில் ஒவ்வொரு நதியின் நீரிலிருந்தும் ஒவ்வொரு பாட்டில் தண்ணீர் பிடித்து வந்து ஊற்றிய கஞ்சா கருப்பு மாதிரி செய்யாதிருந்தால் சரிதான். பை தி வே அந்தப் படம் தாமிரபரணிதானே? விஷால், நதியா, பிரபு ஆகியோர் நடித்தது?

16. தமிழ்நாட்டில் யாருடைய (அரசியல்,ஜாதி) சிலைகள் அதிகம்?
பதில்: தகவல் பெரும் உரிமை சட்டத்தை உபயோகித்து கேட்க வேண்டிய விஷயம்.

17. தினம் போற்றி பராமாரிக்கப்படுவது யாருடையது?
பதில்: அது என்ன வோ தெரியாது, ஆனால் அம்பேத்கர் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு உண்டு.

18. கவனிப்பு இல்லாமல் இருப்பது யாருடையது?
பதில்: மக்கள் கவனிக்காவிட்டால் என்ன, காகங்கள், புறாக்கள் ஆகியவை கவனிக்கின்றனவே.

19.பிற மாநிலங்களில் நிலவரம் எப்படி?
பதில்: தமிழகம் அளவுக்கு மோசமாக இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

20. வருங்காலத்தில் தமிழகத்தில் யாருடைய சிலைகள் அதிகம் நிறுவப்படலாம்?
பதில்: அண்ணா, ஏனெனில் அவரை ஆதரிப்பதில் வம்பு வராது.

21. மேல் மருத்துவத்தூர் பங்காரு அடிகளை நோக்கி இவ்வளவு கூட்டம் ?காரணம்?
பதில்: பெண்களை எல்லா உடல்நிலையிலும் கடவுள் சன்னிதியில் வந்து பூஜை செய்ய அனுமதிப்பது ஒரு முக்கியக் காரணம்.

22. இன்றைய நிலையில் நிரந்திர அடிமை யார்? 1.விவசாயக் கூலிகள் 2. விவசாயிகள் 3. கிராமக் கைத்தொழில்புரிவோர்
பதில்: மாறும் பொருளாதார நிலைக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொள்ளத் தெரியாதவர்களூம் அடிமைகளே. நீங்கள் மேலே சொன்ன மூவர் மட்டுமல்ல.

23. கோவை சத்குரு ஜக்கி வாசுதேவ்(ஈசா யோகா மையம்) அவர்களின் மகா சத்சங்கத்தில் கலந்த அனுபவம் உண்டா? 24. அவர் நடத்தும் மகாசிவராத்திரி பற்றி? 25.அவரது பசுமைக்கரங்கள், மக்கள் உடல் நலத்திட்டம், படிப்புதவி, கிராம முன்னேற்றம் இதில் எது முழு வெற்றியை நோக்கி?
பதில்: மூன்று கேள்விகளுக்கும் சேர்த்தே பதில் சொல்லி விடுகிறேனே. ஜக்கி வாசுதேவை விகடனில் படித்தது தவிர வேறு ஒன்றும் அவரைப் பற்றி எனக்கு தெரியாது.

சேதுராமன்:
1.கிரீன்வேஸ் ரோடின் பெயர் மாற்றம், வரும் லோக்சபா தேர்தல் சமயம் சிறுபான்மை கட்சி ஓட்டுகளுக்காக செய்யப்படுகிறதா?
இந்த செய்தியையா கூறுகிறீர்கள்? டி.ஜி.எஸ். தினகரனின் பெயரை ஏன் வைக்க வேண்டும்? ஒன்றும் புரியவில்லையே?

2. இன்று ஹிந்து பத்திரிகையில் நாலு பக்கங்களுக்கு மேலாக, மத்திய அரசு விளம்பரங்கள் உள்ளன. இரண்டு தவிர மற்றவை தமிழ் நாடு சம்பந்தமுள்ளவையல்ல! ஆனால் சேது மாவீரன் பாலு (2), ஸ்பெக்ட்ரம் ராஜா(2), ரெயில் வேலு (2) அவர்களுடைய புகைப்படங்களுடன் வெளி வந்துள்ளன - இவை தேவைதானா?
பதில்: மிக மிகத் தேவை, லாலுவுக்கு.

3. நேற்று ஹிந்துவில் ஒரு முழு பக்க விளம்பரம் பார்த்தீர்களா? பீஹார் சம்பந்தப்பட்டது - ரெயில் வேலு ஃபோட்டோவுடன். லாலுவின் கைங்கர்யம் இது - இந்த விளம்பரத்தில், பீஹாரின் மாஜி முதல்வர், மாஜி எம்.எல்.ஏக்கள்,அன்னை சோனியா உள்பட எல்லோரும் காட்சி தந்தனர் - தற்போதைய பீஹாரின் முதல்வரைத்தவிர! என்ன அரசியல் இது? ரயில்வே லாபத்தில் நடக்கிறது என்றால் அரசு பணத்தை இவ்வாறு ஊதாரித்தனமாக செலவு செய்யலாமா?
பதில்: வெறும் அரசியல் காழ்ப்பு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல இயலும்?


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

28 comments:

Anonymous said...

//1. வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு உங்கள் ஓட்டு? திமுக? அதிமுக? விஜய்காந்த்? டி.ஆர்.பாலு?
பதில்: அதிமுக//

1.உங்கள் தொகுதியில் பாஜக நிற்கிறது.திறைமையான, நேர்மையான,மெத்தப் படித்த வேட்பாளர்
2.உங்கள் நெருங்கிய சொந்தக்காரர் (மருமான்,சம்பந்தி,சகலை, மைத்துணர்,சகோதரர்கள்-இவர்களில் ஒருவர்)திமுக சார்பில் நிற்கிறார்
3.அதிமுக சார்பில் நிற்பவர் மோசமான "பேக்கிரவுண்ட்" உள்ளவர்,திறமையற்றவர்,பார்ப்பன துவேஷம் மிகுந்தவர்
4.அதிமுக வேட்பாளர் தேர்வின் மேல் கோபப் பட்டு சுயேச்சையாக சோ நிற்கிறார்
5.வால்பையன்(உங்கள் ஆதரவுடன்)


இப்போ உங்கள் ஓட்டு யாருக்கு?

dondu(#11168674346665545885) said...

@அனானி
இதென்ன கேள்வி? பாஜகவுக்குத்தான். அதற்கு முன்னால் வால்பையனிடம் பேசி வாபஸ் வாங்க வைப்பேன்.

பாஜக வேட்பாளர் நிற்கும் பட்சத்தில் சோ மைதானத்துக்கே வரமாட்டார். அதுவும் தன்னால் நின்று அவரால் எலெக்‌ஷனில் டிபசிட் கூட வாங்க முடியாது என்பது அவருக்கே தெரியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//சிவாஜி கணேசனின் படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த 10 படங்கள் யாவை? ஏன்?
பதில்: பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், தில்லானா மோகனாம்பாள், தேவர் மகன், என் தம்பி, எங்க மாமா, தங்கைக்காக... இதுக்கு மேல் தேறவில்லையே//

முதல் மரியாதை,கெளரவம்,வியட்னாம்வீடு,திருவருட் செல்வர்,பாகப்பிரிவினை இவைகளையும் தங்கள் லிஸ்ட்டில் சேர்க்கலாமே?

dondu(#11168674346665545885) said...

முதல் மரியாதை மற்றும் பாகப்பிரிவினை ஓக்கே. மீதி மூன்றும் எனக்கு அவ்வளவாக பிடித்தம் இல்லை.

கூற மறந்தவை படிக்காத மேதை, பார் மகளே பார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//மருத்துவ இன்சூரன்ஸ் பிரிமியம் மிகவும் அதிகமாகிவிட்டதே? பல மருத்துவ மனைகளிலும் இன்சூரன்ஸ் இல்லாமல் உள்ளேயே விடுவதில்லையே? பெரும்பாலான மிடில் கிளாஸ் எப்படி சமாளிப்பது?
பதில்: அமெரிக்காவின் பிரச்சினையாக இருந்தது இப்போது இந்தியாவுக்கும் பரவி விட்டது. கடவுள் தயவால் இதுவரை அது எதுவும் இல்லாது நாட்களை ஓட்டி விட்டேன். இனிமேல் பார்ப்போம்.//


தனியார் இன்சூரன்சஸ் கம்பெனிக்கு பேராசையில் தாவி ஏமாந்த நிலையில் உள்ள அதிகாரிகள் மீண்டும் அரசின் எல் ஐ. சி க்குள் நுழைய முயற்சிப்பதை தடுக்கும் நிர்வாகத்தின்
செயலை வரவேற்கிறீர்களா?

அரசுத்துறையில் எல்லாச் சலுகைகளியும் அனுபவித்துக் கொண்டு ,தன்னையும் தன் குடுபத்தையும் வளர்த்து ஆளாக்கி விட்ட நிர்வாகத்துக்கு, எதிராய் தொடங்கியுள்ள தனியார் நிறுவனத்திற்கு தாவி,தனது பழுத்த அனுபவத்தை அரசுக் கம்பெனியை நிர்மூலம் ஆக்க செயல் புரியும் நம்பிக்கைத் துரோகிகளை,காட்டிக் கொடுக்கும் கயவர்களுக்கு இயற்கை என்ன தண்டனை தரும்?
எமலோகத்தில் என்ன தண்டனை கிடைக்கும்?
உங்கள் தீர்ப்பு என்ன?

Sethu Raman said...

சமீபத்தில் அந்தக்காலத்தில் ஜொள்ளு பற்றி பேசும்போது, தேவிகா,பத்மினி,அஞ்சலி சரி!
இந்தக் கும்பலில் நக்மா எங்கே உள்ளே புகுந்தது? வசுந்தராவையும் ராஜகுமாரியையும் மறந்து விட்டீர்களே??

dondu(#11168674346665545885) said...

//இந்தக் கும்பலில் நக்மா எங்கே உள்ளே புகுந்தது?//
அதானே, மிஷ்டீக் ஆகிப்போச்சு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

வன்னியில் வாழ்ந்த ஓர் தாயின் திடுக்கிடும் தகவல்.

வெளிநாட்டில் வாழ்ந்த ஓர் இளைஞன், புலிகளின் சமாதான காலத்தில் வன்னி மக்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க என்று பல இளைஞர்கள் யுவதிகள் சென்றபோது இவனும் வன்னி சென்றான். அம்மக்களோடு சிலநாட்கள் கழிந்தது. புலிகளின் சுற்றுலாவில் கண்ணைக் கவரும் கல்லறைகளும், வெளிநாட்டு வாகனங்களில் உலாவரும் புலிகளின் இடைநிலைத் தலைவர்களும், அவர்கள் வைத்திருந்த சுடு கருவிகளும் இவனையும் கவர்ந்தது. புலிகளின் உலகப்பொறுப்பாளர் காஸ்ரோவின் வார்த்தையாலங்களால் கவரப்பட்டவன். அவருக்களித்த வார்தைப் பிரகாரம் வெளிநாட்டிற்கு திரும்பி ஒரு வருடமே படித்து முடிக்கவேண்டிய பட்டப்படிப்பை முடித்துவிட்டு ( அந்த காலங்களில் வெளிநாட்டு புலி அமைப்போடு ஆழ்ந்த தொடர்புகள் இருந்தது) மீண்டும் வன்னி செல்கிறான். பெற்றோரால் அழுது குளறியும் தடுக்கமுடியவில்லை. ஆறு மாதங்கள் பிள்ளை எங்கே இருக்கிறான் என்று தெரியாமல் வன்னிக்கும் கொழும்பிற்கும் வெளிநாட்டிற்குமாக அலைந்து திரிந்த தாய்க்கு தகவல் கிடைக்கிறது. “அம்மா என்னை எப்படியும் புலிகளிடம் இருந்து காப்பாற்றுங்கள்” பதறித்துடித்த தாய் மீண்டும் வன்னியை நோக்கி ஓடுகிறாள் ஆறுமாதங்களாக வன்னியில் இவளது மகன் மீட்புப் போர். அந்தக்காலத்தில் அவள் கண்ட வன்னியின் நிலமையை அவள் சொல்லக் கேட்டு அதை அப்படியே தருகின்றேன்.

விசா எடுத்துக்கொண்டு பஸ்சில போறன் எனக்கு பழக்கமே இல்லாத வன்னிநிலப்பரப்பு. அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வீட்டில் இறக்கப்படுகின்றேன். விசாலமான வசதிகள் நிறைந்த வீடு. வீடுவசதியாக இருந்தாலும் சுற்று வட்டாரங்கள் பயங்கர அமைதியாகவும் மனிசற்ற முகத்தில ஒரு சிரிப்போ கலகலப்பையோ காணமுடியாது. ஒரு சில தம்பிமார் மோட்டசைக்கிளில வந்து சில கேள்விகள் கேட்டு குறித்துக்கொண்டு பிறகுவாறம் எண்டு போவினம். பொழுது பட ஒரு பெடியனும் பெட்டையும் வந்தினம் ரெண்டுபேரும் கலியாணம் கட்டியிருக்கீனம். ரெண்டுபேரும் புலியின்ர காம்பிலதான் வேலை. எனக்கு கொண்டுவந்த சாப்பாட்ட தந்தினம். அந்த பிள்ளை சொல்லும். அன்ரி என்ன வேணுமெண்டாலும் கேளுங்க எண்டு. சாப்பாடு தண்ணிவென்னி பழவகை குளிர்பானம் ஒண்டுலையும் ஒரு குறையுமில்ல. என்ர பிள்ளைய நான் எப்பயம்மா பாக்கலாம்? பாக்கலாம் அன்ரி அது வேற பிரிவு எங்களுக்கு தெரியாது அவயள் வந்து சொல்லுவினம். இப்பிடியே நான் கேள்வி கேக்கிறதும் அந்தப்பிள்ள மறுமொழி சொல்லுறதாவும் இருக்கும். அதுகளின்ர முகத்தில ஒரு சந்தோசம் கிடையாது. ஏந்த நேரமும் ஓடுறதும் வந்து படுக்கிறதும் அப்பிடியே போகும்.தங்கச்சி நீங்க என்ன வேலை செய்யுறீங்கள் நான் கேப்பன் கொடுப்புக்கள்ள சிரிச்சுப்போட்டு போவாள். நான் அந்த வீட்ட விட்டு வெளிக்கிடும் வரைக்கும் இந்தக் கேள்விக்கு அதின்ர பதில் அந்த சிரிப்புத்தான்.

பகல் ரெண்டுபேரும் காம்புக்கு வேலைக்கு போனபிறகு வெளியில போயிற்று வருவமெண்டு நடந்தன் றோட்டில ஒன்றிரண்டு சனத்ததான் பாக்க கூடியதா இருந்துது. நான் பார்த்து சிரிச்சா அதுகள் ஒரு மாரிப்பாத்துக்கொண்டு போகுங்கள். அந்தப்பார்வையில ஒரு கோவம், ஒரு வெறுப்பு தெரியும். இதுகள் ஏன் இப்பிடி எண்டு நினைச்சுக்கொண்டு போவன். ஒரு அம்மன் கோயில் இருக்குது. அதில போயிருந்து அழுவன். அம்மனை ஆயிரம் நேத்திவைச்சு கும்பிட்டன் என்ர பிள்ள எனக்கு கிடைக்க வேணுமெண்டு. அங்க பல தாய்மார்கள் கதறி அழுது கொண்டிருப்பினம். சாப்பாடுகூட இல்லாம மணிக்கணக்கா அம்மனட்ட வாய்விட்டே முறையிடுவினம். எல்லாரும் தங்கட பிள்ளையள புலியள் கடத்திக்கொண்டு போனதால அழுகின்ற தாய்மார்கள்தான். இந்த கோயில் உறவில சிலபேர் என்னோட கதைக்க தொடங்கிச்சினம். அப்பதான் தெரியவந்துது நான் நிக்கிற இடம் வெளிநாட்டில புலியளுக்கு உதவி செய்யிற ஆக்கள் நிக்கிற இடமெண்டும். அதால அங்க நிக்கிற நானும் அப்பிடியான ஆளெண்டு புலி வெறுப்பால என்னையும் வெறுத்து பார்த்த பார்வைதான் அது எண்டு.

அதுக்குப் பிறகு சில சனம் கதையள் சொல்லிச்சுதுகள். வீடு வீடா புலியள் சுத்திவளைச்சு பெடியள் பெட்டையள பிடிச்சுக்கொண்டு போவினம் அவசர அவசரமா சுடச்சொல்லிக் குடுத்துப்போட்டு முன்னுக்கு அனுப்பிப் போடுவினம். ரெண்டு மூண்டு கிழமைக்குள்ள பலபேருக்கு செய்தி வரும் வீர மரணமெண்டு. பாவியள் ஒளிச்சோடின பிள்ளையளயும் மாட்டன் மாட்டன் எண்டு சொன்ன பிள்ளையளையும் கொண்டுபோய் கொண்டு போட்டு வீரமரணம் எண்டுவாங்கள். அந்ததாய்மார் தான் அந்த அம்மன்கோயில் வாசல்ல கிடந்து சாப்பாடும் இல்லாம கதறுங்கள். அவங்கள மண்ணள்ளி திட்டுங்கள். அது கூட அவங்கட ஆக்களின்ர காதில விழுந்துதெண்டால் அடியும் உதையும்தான். கொஞ்ச நாள்ள நானே இதெல்லாத்தையும் என்ர கண்ணால கண்டன் என்ர ஈரல் குலையெல்லாம் அதை நினைச்சால் இப்பயும் நடுங்குது. நானும்; இங்க இருக்கிறபோது மற்றாக்களப்போல ஆரும் இப்பிடிக் கதை சொன்னா பொய்யெண்டுதான் நினைப்பன், ஆனா கண்ணால பாத்தப்பிறகு நினைக்கிறன் இவன்ர ஆட்சி ஆண்டவனே வரவே கூடாது வந்தா விடுதலை கேட்ட மக்கள் ஆபிரிக்க அடிமையவிட கேவலமாதான் வாழவேணும்.

செஞ்சோலை பிள்ளையளுக்கு குண்டு போட்ட கொடுமைய நினைச்சா நெஞ்சு பதறுது. ( சுற்றுமுற்றும் பார்த்து தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு தொடர்கின்றார்) அவங்கட முகாம்கள் எல்லாமே சனத்தோட தொடர்பு பட்டுத்தான் இருக்கும். அம்மன் கோயில் தேர்முட்டி ஓலையால மூடிக்கட்டியிருக்கும் அதுக்குப்பக்கத்தில இவங்கட கரும்புலி முகாம் அதிலயும் இந்த தேர்முட்டி மாரி கட்டியிருக்கும். பள்ளிக்கூடத்துக்கு அருகில பெட்டையளின்ர பெரிய காம்ப் இருக்கு. கோப்பிறட்டிக்கு ஒரு சுவரோட இன்.னொரு முகாம். இப்பிடி எல்லாமே மக்களோட சேத்துதான் இருக்கு. செஞ்சோலையிலயும் ஒவ்வொருநாளும் பிள்ளையளுக்கு பயிற்சிதான் நடக்கும். வெளி ஆக்கள கூட்டிக்கொண்டு வாறபோது இதெல்லாத்தையும் நிப்பாட்டிபோடுவினம்.

அண்டைக்கும் அந்த பயிற்சி நடக்கிறபோது வேவு விமானம் குறுக்கால போச்சுது கொஞ்சநேரத்தில ரெண்டு கிபீர் வந்து அடிச்சுது. நான் பதறிக்கொண்டு ஓடிப்போய் மரத்தின்ர மறைப்புக்கு கீழ இருந்த பங்கருக்குள்ள போனன் வேற பக்கத்தில இருந்த ரெண்டுபேரும் அதுக்குள்ள ஓடிவந்து இருந்தினம் ஒரு பசுமாடும் அதில வந்து நிண்டுது. உண்மையா என்ர உச்சம்தலையில விழுந்தமாரித்தான் இருந்துது. பிறகு கிபீர் போனபிறகு கொஞ்ச பேர்தான் ஒடிப்போச்சினம் நானும் போனன். அதுக்கிடையில சில வாகனங்கள்ள பெடியள் வந்து இறங்கினாங்கள். ஆக்கள கிட்டபோக விடயில்ல. கொஞ்ச பிள்ளையள் செத்துப்போச்சுதுகள் கொஞ்சம் காயங்களோட கிடந்ததுகள். அந்தப்பிள்ளையள தூக்கி காப்பாத்த எந்த முயற்சியும் எடுக்கயில்ல. பிளீட்பண்ணித்தான் அதுகளெல்லாம் செத்ததுகள். நான் என்னோட கதைக்கற சனத்தோட கதைச்சன் ஏன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனால் காப்பாத்தலாம் தானே எண்டு. அவயள் என்ன பேசாமல் இருக்கச்சொல்லி சத்தம் போட்டினம். எனக்கு ஓரளவுக்கு இப்ப விளங்கீற்ருது. பிறகு புத்தகங்கள கொணந்து செத்த பிள்ளையளுக்கு பக்கத்தில போட்டுட்டு படமெல்லாம் எடுத்திச்சினம். அந்தக்கொடுமைய கண்ணால பாத்த பாவியா நான் இருக்கிறன். என்ர நெஞ்செல்லாம் படபடக்குது. ( நிறுத்திவிட்டார் நான் அதுபற்றி மேலும் சில கேள்விகள் கேட்கிறேன்)

அது அரசாங்கம் சில ஆக்களட்ட ஏதோ ஒரு சாமான் குடுத்திருக்காம் ஒரு இடத்தில இருந்து அதை அமத்தினா ஆமிக்காரனுக்கு இடம் தெரியுமாம். இல்ல நான் காணயில்ல. ஆனா ஒரு கிழவன்தான் அத அமத்தி காட்டிக்குடுத்ததெண்டு அவற்ர மனிசிதான் சொல்லிக் குடுத்து மற்ரநாள் அந்தாள வந்து அடிச்சு இழுத்தெண்டு போனவங்களாம். இல்ல அத நான் காணயில்ல சொன்னவயள். ( இந்த சம்பவம் நடந்தபோது வெளிநாட்டு தூதுவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு வீடியோ காட்டியதாக செய்திவந்தது அது என்ன வீடியோ என்பது மறைக்கப்பட்டது. இவர் சொன்னதில் இருந்து முதலில் வந்த விமானம் வீடியோ எடுத்த பின்தான் கிபீர் குண்டு போட்டுள்ளது. புலிகள் விளம்பரத்திற்காக அந்த பிள்ளைகளை இறக்கவிட்டு படமெடுத்து வியாபாரம் செய்துள்ளார்கள் என்பது கணிக்கப்படுகின்றது) அதால சனமெல்லாம் சரியான வெறுப்பும் ஆத்திரத்தோடயும்தான் இருக்குதுகள்.

புpடிச்செண்டு போற பிள்ளையளுக்கு சப்பாத்து கூட குடுக்கிறதில்ல வெறும் றபர் செருப்போட இல்லையெண்டால் வெறும் காலோடதான் சண்டைக்கு அனுப்புறவங்கள்.அங்க ஒரு ரீச்சர் இருக்கிறா அவாக்கு நாலு பிள்ளையள். மூத்தது பெடியன் ரெண்டாவதும் மூண்டாவதும் பெட்டையள் கடைசி பெடியன் எட்டுவயசு. எனக்கு நல்ல உதவி. ஒரு நாள் பெடியன வரச்சொல்லி சொல்லிவிட பெடியன் போக விருப்பமில்லாம ஒளிச்சு திரிஞ்சான் ரெண்டாம் நாள் இரவு சுத்திவளைச்சு வீட்டுக்க புலியள் பாஞ்சாங்கள் அப்பயும் அந்தப்பிள்ள ஒடி ஒளிச்சிட்டான் அவங்கள் பெட்டைய பிடிச்சுக்கொண்டு போயிற்றாங்கள். அது சரியான கெட்டிக்காறப் பிள்ளை தான் படிச்சு டொக்டரா வருவன் அம்மா எண்டுசொல்லும். தமயன் பிறகு தான்போய் சறண்ட பண்ணிக்கொண்டு தங்கச்சிய எடுத்து விட்டவன். மூண்டு கிழமையில மன்னார் சண்டையில செத்துப்போனதா வந்து சொன்னாங்கள்.அந்த தாய் கதறின கதறல் இப்பயும் என்ர காதுக்குள்ள கேட்டுக்கொண்டே இருக்குது. அந்த கடசி குழந்தப்பிள்ளை தாயட்டக் கேக்கும் “அம்மா அக்காவ வந்து கொண்டுபோனாங்களெண்டா நானாம்மா போகவேணும்” எண்டு. எனக்கே அழுகவந்து நெஞ்செல்லாம் கனக்குது அந்த தாய்க்கு எப்பிடி இருக்குமெண்டு நினச்சுப்பாருங்க. ( சொல்லும்போது சிந்திய கண்ணீர்த் துளிகளை துடைத்துக்கொள்கிறார்).

இப்படி பல விடயங்களை கூறினார் கடைசியாக மகனைப்பற்றி கூறும்போது இந்த நாட்டில் படித்த பிள்ளைகள் திருப்பி கதைக்குங்கள்தானே இப்படியான அனியாயங்கள் செய்வதற்கு இவன் ஒத்துக்கொள்ளவில்லை அதனால் பல முரண்பாடுகள் அதே நேரத்தில் வெளிநாட்டில் இருந்து போனகாரணத்தால் இவரை கொல்லுவதற்கோ அல்லது கடுமையாக தண்டிப்பதற்கோ சற்று தயங்கினார்கள் சிலவேளைகளில் வெளிநாட்டு அரசுகளுக்கு மறுமொழி சொல்ல வேண்டி ஏற்பட்டு விடும் என்று நினைத்திருக்கலாம். அதே நேரம் மகன் இவற்றைப் பார்த்த காரணத்தால் சாப்பிட மனமின்றி சைவம் மட்டுமே சாப்பிட ஆரம்பித்து விட்டார். ஏன்னுடைய தொடற்சியான அழுத்தமும் மகனின் போக்காலும் மகனை விடுவதாக கூறி கடைசியாக ஆறு மாத வன்னி வாழ்கையின் பின் தெய்வாதீனமாக உயிர்தப்பி நானும் எனது மகனும் இந்த நாட்டிற்கு வந்து சேர்ந்து விட்டோம்.

நான் வணங்கிய தெய்வங்கள்தான் என்னையும் என்ர மகனையும் காப்பாற்றி உள்ளது. அங்க பிரபாகரனின் இந்த கொடிய வதைகளில் இருந்து அந்த மக்கள் எப்படித்தான் வெளியேறப்போகின்றார்களோ தெரியாது. தமிழீழத்திற்காக உதவி செய்தவர்கள் நாங்கள் ஆனால் இப்போது நான் நினைப்பதெல்லாம் தமிழீழம் கிடைக்கவே கூடாது அதுவும் புலிகளின் அடக்குமுறையில் அதுஇருக்கவே கூடாது.(நீண்ட பெருமூச்சோடு கூறி முடித்தார்) அவர் பல விடங்கள் கூறியிருந்தார் அவற்றையெல்லாம் பார்க்கின்ற போது நாம் கற்காலத்துக்கு சென்றுவிட்டோமா என்று எண்ணத் தோன்றுகின்றது..ஆபிரிக்க அடிமைகளை விட கேவலமான அடிமைகளாக வன்னி மக்களின்; வாழ்வு இருக்கின்றது. இதிலிருந்து மக்கள் வெளியேற முடியுமா?

http://thenee.com/html/120209-3.html

Anonymous said...

//காண்டீபன் தனஞ்செயன்:
முதலில் இவரது கேள்விகளை பற்றி சில வரிகள். அவை எனது தூங்கியது போதும் மாணவர்களே விழிமின், எழுமின் என்னும் பதிவுக்கான பின்னூட்டத்தில் கேட்கப்பட்டவை. பாவம், அவர் பாட்டுக்கு எதார்த்தமாக கேட்டு வைக்க நானும் அவற்றை மாட்டிக் கொண்டீர்களா என்ற ரேஞ்சில் இந்த பதில்கள் வரைவுக்கு கொண்டு வந்து விட்டேன். முரளி மனோகர் வேறு “இந்த பெரிசுக்கு வேறு வேலை இல்லை” என்றெல்லாம் கோட்டா செய்ய ஆரம்பித்து விட்டான். ஓக்கே இப்போது முதலில் அந்த பின்னூட்ட கேள்விகளுக்கு போவோமா?
1) இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகிட்ட எல்லாரையுமே முட்டாள்கள்னு சொல்லுகிறீர்களா?
பதில்: முட்டாள்களோ இல்லையோ, ஆனால் சொந்த நாட்டின் விடுதலைக்கு போராடினார்கள். சிலருக்கு தியாகி பென்ஷன் கிடைத்தது. பலருக்கு கிடைக்கவில்லை. பலரது படிப்பு பாதிக்கப்பட்டது. அவர்கள் முட்டாள்கள்னு அவங்களோட பிள்ளைகள் எல்லாம் இப்ப சொல்லறாங்க. நிறைய தியாகிங்களே பல சமயங்களிலே நொந்திருக்காங்க. இதுல கொடுமை என்னன்னா சுதந்திர போராட்ட காலத்துலே தன்னோட வேலையை பாத்துட்டு இருந்தவங்க சுதந்திரம் வந்ததுமே பெரிய பதவியெல்லாம் பெற்று செட்டில் ஆனாங்க. தியாகிங்க பாவம். இதெல்லாம் கூட பரவாயில்லை. சொந்த நாட்டுக்காக செஞ்சாங்க. ஆனால் எங்கோ சம்பந்தமே இல்லாது துருக்கியில் கிலாஃபத் போராட்டத்துக்கு நம்ம காந்தி ஆதரவு தந்து இங்கே கேரளாவிலே மாப்பிளா கலவரம் போன்ற இனக்கலவரமே நடந்தது. அதுகாக இன்னமும் காந்தியை பாதிக்கப்பட்ட எல்லோருமே எல்லாம் திட்டறாங்க.

2) பகத்சிங்க், வாஞ்சிநாதன் இன்னும் பலரெல்லாம் உயிர விட்டது உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவுன்னு சொல்லுகிறிர்களா?
பதில்: வாஞ்சிநாதனின் விதவைக்கு அறுபதுகளில் பென்ஷன் தர முயற்சிகள் நடந்த போது அவர் பார்ப்பனர் என்பதற்காகவே திராவிடக் கழகம் தடுத்தது. அந்த ஏழைப் பெண்மணி, கணவனை இழந்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் கஷ்டப்பட்டவர், பென்ஷன் பெறாமலேயே இறந்து போனார். இதுக்கென்ன சொல்வீங்க?

3) இதேபோல இந்திய சுதந்திர போராட்ட காலத்துல மாணவர்களைப் புத்தகங்களோட பூட்டி வெச்சிருந்தா இன்னைக்கு நாம சுதந்திர காற்றை சுவாசிக்க முடிந்திருக்கும்னு நினைக்கிறீங்களா?
பதில்: உங்களுக்கு வேணும்னா நீங்களும் இறங்கி போராடுங்களேன். யார் தடுத்தது? நான் கூறியது சராசரியான, உணர்ச்சிவசப்படும் மாணவர்களுக்கு அறிவுரை. அவ்வளவே. மற்றப்படி இரண்டாம் உலக மகாயுத்தத்திலே பிரிட்டன் பயங்கரமா சேதம் அடைந்தது. அவங்களாலே காலனிகளை சமாளிக்க முடியல்லைங்கறதுதான் நிஜம். உண்மையை சொல்லப் போனா 1947-லேயே அது கிடைக்கும்னு நம்மவங்களிலே யாருக்குமே அப்ப தெரியாது. நிறைய பேர் அதிர்ச்சியே அடைஞ்சாங்க. காலனி இந்தியா ஒரு உள்ளுக்குள் உளுத்த மரம். வெளியில் தெரியவில்லை. இரண்டாம் உலக மகா யுத்தம் வந்து அதுக்கு மரண அடி கொடுத்தது. அதெல்லாம் மேக்ரோ அளவுக்கான விஷயங்கள். இப்ப உங்க கேள்விக்கு வரேன். அப்படி சுதந்திரம் வந்த ஆண்டு அதை துக்க நாளாக அறிவித்தார் பெரியார் அவர்கள். குறைந்த பட்சம் தமிழகத்தையாவது வெள்ளைக்காரனே ஆள வேண்டும் என்ற பொருளில் கூட பேசியிருக்கார். அவர் உங்களோட கேள்விக்கு என்ன பதில் சொல்லியிருப்பார் என்பதை நினைத்து பாருங்களேன். சுவாரசியமான பொழுதுபோக்கு.

4) மாணவர்கள் அரசியலில் தலையிடக்கூடாதென்றால் அரசியலில் தலையிடும் உரிமை அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் உள்ளதா?
பதில்: வாழ்வில் அததுக்கு நேரம் என உண்டு. மாணவப்பருவம் என்பது திரும்ப வராது என்பதை மறக்காமலிருந்தால் சரி.

//

நாலு பதிலும் சொல்வது என்ன?

பிரிட்டிஷ்காரன் ஆட்சியென்றால் ஆங்கிலம் படித்து விட்டு அவனுக்கு அடியைத் தடவிக்கொண்டிருந்தால் காசு கொடுப்பான்,எல்லோரையும் அதிகாரம் செய்து கொண்டு பிழைத்துக் கொள்ளலாம்;எவனாவது அடிபட்டு மிதிபட்டு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தாலும் காலாட்டிக்கொண்டு மொழிபெயர்ப்பு செய்து கொண்டு பதிவு எழுதிக் கொண்டு பிழைத்துக் கொள்ளலாம்.ஆனால் உடம்பு புண்ணாகும் எந்தக் காரியத்துக்கும் போகவே கூடாது என்ற கொள்கை வெளிப்பாடு என்று கொள்ளலாமா?

komanakrishnan

வால்பையன் said...

//துருக்கியில் கிலாஃபத் போராட்டத்துக்கு நம்ம காந்தி ஆதரவு தந்து இங்கே கேரளாவிலே மாப்பிளா கலவரம் போன்ற இனக்கலவரமே நடந்தது.//

இன்றும் யாரும் திருந்துன மாதிரி தெரியலையே!

சமீபத்தில் இஸ்ரேல், பாலஸ்தீனம் பற்றி செயா அம்மையார் எதோ அறிக்கை விட்டாங்களாமே!

வால்பையன் said...

//வாஞ்சிநாதனின் விதவைக்கு அறுபதுகளில் பென்ஷன் தர முயற்சிகள் நடந்த போது அவர் பார்ப்பனர் என்பதற்காகவே திராவிடக் கழகம் தடுத்தது.//

பார்பனர்களுக்கு பசிக்கதுன்னு திராவிடர்கள் நினைச்சிட்டாங்களோ

வால்பையன் said...

//ஸ்வீட் ட்ரீம் ரொம்ப நேரம் ஓடினால் அது வெட் ட்ரீமாக மாறும் அபாயம் உண்டு.//

என்ன மாதிரி குழந்தை பசங்கள வச்சிகிட்டு இப்படியா பேசுறது!

வால்பையன் said...

பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், தில்லானா மோகனாம்பாள், தேவர் மகன், என் தம்பி, எங்க மாமா, தங்கைக்காக... இதுக்கு மேல் தேறவில்லையே.//


பராசக்தி பிடிக்காததன் காரணம்?

வால்பையன் said...

//அழகிரி முதல்வரானால் தமிழ்நாட்டில் என்னவெல்லாம் நடக்கும்?
பதில்: பிரியாணி கிடைக்கும்.//

:)

வால்பையன் said...

வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு உங்கள் ஓட்டு? திமுக? அதிமுக? விஜய்காந்த்? டி.ஆர்.பாலு?
பதில்: அதிமுக//


ஊழல் விஷயத்தில் திமுக மற்றும் அதிமுகவுக்கிடையில் பலத்த சரியான போட்டி.//

இரண்டுக்கு உள்ள வித்தியாசங்கள் தெரிகிறதா?

என்ன மாதிரி நுண்ணரசியல் செய்யலாம்

அதிமுக ஊழல் கட்சி ஆனாலும் பார்பன தலைமைக்காக டோண்டு ஆதரிக்கிறார் என்று சொல்லலாமா?

சும்மா லுலுலாயி

Anonymous said...

மாப்ளா முஸ்லீம் விவசாயிகளின் போராட்டம் அன்றைய கூலிவிவசாயிகளின் போராட்டம். 50 ஆண்டுகள் நடந்த போராட்டம். கடைசி 5 ஆண்டுகளில்தான கிலாபத் வந்தது. இனப்போராட்டம் என்பது புதிய வரலாற்றுச் செய்தி. பொய் சொல்வதற்கு அளவேயில்லையா ?
பாதிக்கப்பட்டவர்கள் என நம்பூதிரி பண்ணையார்களைச் சொல்கின்றீர்களா அல்லது மாப்ளா முஸ்லீம் விவசாயிகளுடன் இணைந்து போராடிய இந்து நாடார்களை சொல்கின்றீர்களா?
கேள்வி கேட்டவர் பாலியல் பலாத்காரம் செய்பவர்களை ராவணவம்சம் எனக் குறிப்பிட்டதை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை.
இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை கிடைத்து சரிவர வேலை செய்யாதவர்களைப் பற்றி கேள்வி கேட்டவருக்கு சுதந்திர இந்தியாவின் ஐ.சி.எஸ் அதிகாரிகளில் பிராமணரல்லாதோர் 1% தான் ஆரம்பத்தில் இருந்தனர் என்பதையும், அவர்கள் சரியாக வேலை செய்யாததால்தான் நாடு கெட்டு குட்டிச்சுவராகி விட்டது என்பதையும் ஏன் சோ போல ஞாபகப்படுத்தவில்லை.
பசுமைப்புரட்சியை நீஙகள் ஆதரித்தாலும் அதற்கு வித்திட்ட எம்.எஸ். சுவாமிநாதனே அதனது தோல்வியை ஒத்துக்கொண்டு விட்டார் என்பது தாங்கள் அறியாத செய்தியா

வால்பையன் said...

இந்த பதிவில் இணைப்பதற்காக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பார்பனர்களின் லிஸ்ட் தேவைப்படுகிறது, நேரம் இருக்கும் போது எடுத்து தருகிறீர்களா?

dondu(#11168674346665545885) said...

வால்பையன்
“வெறுக்கத்தக்கதா பார்ப்பனீயம்” என்ற தலைப்பில் சோ அவர்கள் புத்தகம் எழுதியுள்ளார். அதில் நீங்கள் கேட்ட லிஸ்டைத் தவிர, மற்ற துறைகளில் சாதனை செய்த பார்ப்பனர்களது பெயர்களையும் காணலம்ம். மயிலாப்பூர் மேற்கு குளக்கரையில் 5B- பஸ் டெர்மினசுக்கு எதிரே உள்ள அல்லயன்ஸ் பதிப்பகத்துக்கு சென்று அப்புத்தகத்தை வாங்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//மயிலாப்பூர் மேற்கு குளக்கரையில் 5B- பஸ் டெர்மினசுக்கு எதிரே உள்ள அல்லயன்ஸ் பதிப்பகத்துக்கு சென்று அப்புத்தகத்தை வாங்கலாம்.//

அது சரி, ஈரோட்டுல உட்கார்ந்துகிட்டு உங்ககிட்ட லிஸ்ட் கேட்ட நீங்க சோ புத்தகத்த விக்க பாக்குறிங்க!

நான் பார்பனிய எதிர்ப்பாளர்களுக்கும் எதிரி
பார்ப்பனிய ஆதரவாளர்களுக்கும் எதிரி!

சோ பார்ப்பனிய ஆதரவாளர்!
அவரது சாட்சியங்கள் செல்லாது, செல்லாது

Arun Kumar said...

//அழகிரி முதல்வரானால் தமிழ்நாட்டில் என்னவெல்லாம் நடக்கும்?
பதில்: பிரியாணி கிடைக்கும்.//

சூப்பர். நல்ல டைமிங் பதில்.:)

Anonymous said...

1.சன் டீவி நகைச்சுவை சேனல் ஆதித்யா பத்து தினங்களுக்குள்ளே போரடிப்பது போலிருக்கிறதே?
2.கலைஞர் டீவி சன் டீவின் ஜெராக்ஸ் காப்பி போல் இருப்பது மாறுமா?
3.தரத்திலும் புதிய நிகழ்ச்சிகள் தருவதிலும் விஜய் டீவி நம்பர் ஒன் சரியா?
4.ஜீ தமிழ் டீவி போட்டியில் ஜோபிக்கவில்லையே?
5.நீங்கள் மிகுதியான நேரம் பார்க்கும்
டீவி ,ஜெய டீவியா?

Anonymous said...

6.சுதந்திர இந்தியாவின் பெரிய சாதனையாக எதைச் சொல்லலாம்?
7.சோவியத் ரஷ்யாவின் தற்போதைய பொருளாதார/அரசியல் நிலை?
8.1980 வரை ஒற்றுமையாய் ஒரே விவசாய சங்கமாய் ,சிவசாமி தலைமையில் இருந்த விவசாசயிகள் இன்று?
9.உணவு உற்பத்தி குறைந்து கொண்டே போகிறதே?
10.விவசாயத்தை தேசியமயமாக்கினால் என்னவாகும்?

Anonymous said...

11.வைகோ மீண்டும் கழகத்தில் இணைய வாய்ப்பு வருமா?
12.அப்படி ஒரு நிலை வந்தால் அவர் யார் பக்கம் சாய்வார்?
1.ஸ்டாலின்2.அழகிரி3.கனிமொழி4தமிழரசு5.தயாநிதி.6.முகமுத்து
13.திமுகவில் இப்போது யார் கை ஓங்கி உள்ளது?
14.கலைஞர் குணமடைய நடக்கும் யாகங்கள் ?
15.மருத்துவர் ஐயாவின் அரசியல் எதிர்காலம்?

dondu(#11168674346665545885) said...

@அனானி (15 கேள்விகள் கேட்டவர்)
முன்பு 120 கேள்வி கேட்ட அதே அனானியா நீங்கள்?

15 கேள்விகள் அடுத்த பதிவின் வரைவுக்கு சென்று விட்டன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

venki (a) baba said...

"திரு.டோண்டு அவர்களின் கருத்துக்களை பற்றியெல்லாம நாம் எதுவும் சொல்வதற்கில்லை.அவர் தெளிவாகவே இருக்கிறார். அவர் கூறுவது என்னவென்றால் சோ பிராமணர்களை ஆதரிக்கிறார்.ஆகவே நான் அவரை ஆதரிக்கிறேன்" -லக்கிலுக்,
http://www.tamilnadutalk.com/portal/lofiversion/index.php/t3306.html

இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

வால்பையன் said...

//அவர் கூறுவது என்னவென்றால் சோ பிராமணர்களை ஆதரிக்கிறார்.ஆகவே நான் அவரை ஆதரிக்கிறேன்" -லக்கிலுக்,//

அப்படியானால் டோண்டுவுக்கு சுயமாக அறிவு இல்லை, அவர் சோ சொல்வதை தான் பின்பற்றுகிறார் என்று லக்கி சொல்வதாக நீங்கள் சிண்டு முடிகிறீர்களா?

(மனசாட்சி-பத்த வச்சிட்டியே பரட்ட)

கலகம் (கழகம் இல்லை) நன்மையில் முடியலாம்

Simulation said...

டோண்டு அவர்களே,

இன்றைய தினம் பொது நூலகத்தில் ஒரு புத்தகம் பார்த்தேன். பிரபல புகைப்படக் கலைஞர் சுபா சுந்தரம் எழுதியது. “ஆல்பம்” எனபது புத்தகத்தின் பெயர். அதில் கூறப்பட்டுள்ள செய்தி:-

வாஞ்சிநாதன் மனைவி, தான் வறுமையில் வாடுவதாகவும், தனக்கு அரசுப் பென்ஷன் வேண்டுமென்றும் அரசிடம் கோரிக்கை வைத்தாராம். அப்போது முதல்வராக இருந்த பக்தவத்சலமோ, “வாஞ்சிநாதன் தியாகியாக இருந்தாலும், தற்கொலை செய்து கொண்ட காரணத்தினால் பென்ஷன் தர அரசுச் சட்டம் இடம் கொடுக்காது என்று குறிப்பு எழுதி கோப்பை மூடினாராம். இதே கோப்பு மீண்டும் அண்ணா அவரகள் முதல்வராக இருந்த போது அவர் பார்வைக்கு வந்ததாம். அவர் “சட்டம் சொல்வது சரிதான்; இருந்தாலும் மனிதாபிமானம் என்று ஒன்று உள்ளதே. எனவே மனிதாபிமான அடிப்படையில் வாஞ்சியின் மனைவிக்குப் பென்ஷன் வழங்க உத்தரவிடுகின்றேன்” என்று சட்டசபையில் அறிவித்தாராம். காங்கிரஸ், திமுக என்று கட்சி வித்தியாசம் பாராமல் அனைத்து உறுப்பினர்களும் கைதட்டி அரசு அறிவிப்பினை வரவேற்றார்களாம்.

- சிமுலேஷன்

//வாஞ்சிநாதனின் விதவைக்கு அறுபதுகளில் பென்ஷன் தர முயற்சிகள் நடந்த போது அவர் பார்ப்பனர் என்பதற்காகவே திராவிடக் கழகம் தடுத்தது. அந்த ஏழைப் பெண்மணி, கணவனை இழந்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் கஷ்டப்பட்டவர், பென்ஷன் பெறாமலேயே இறந்து போனார்.//

dondu(#11168674346665545885) said...

@சிமுலேஷன்
அப்படியா, இது எனக்கு புதிய செய்தி. ஆனால் விடுதலை அவருக்கு பென்ஷன் தரக்கூடாது என்று எழுதியதை நான் அக்காலகட்டத்திலேயே படித்திருக்கிறேனே.

எது எப்படியானாலும் அப்பெண்மணி பென்ஷன் வாங்குவதற்கு முன்னால் இறந்து போனார் என்பதும் நினைவிலிருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது