அதற்குள் ஓராண்டு ஆகிவிட்டது என்பது திகைப்பை அளிக்கிறது. பலரை பொருத்தவரையில் சுஜாதா அவர்களின் மறைவு சமீபத்தில் நடந்ததாகவேதான் தோன்றியிருக்கும் என நம்புகிறேன். சமீபத்தில் 1956-ல் என்ற ரேஞ்சில் எழுதும் இந்த டோண்டு ராகவனையும் சற்றே சுலபமாக புரிந்து கொள்ள இயலும் என நினைக்கிறேன்.
ஓராண்டு முடிந்ததற்கான பதிவை போட நினைத்து போன ஆண்டு இட்ட பதிவைப் பார்த்தால் அதுவே இப்போதும் பொருந்துகிறது என்றே நினைக்கிறேன். ஆகவே அதையே இங்கு சில சேர்க்கைகளுடன் மீள்பதிவு செய்கிறேன்.
தனக்கு சொர்க்கம் ஒரே நாளில் அலுத்துவிடும் என சுஜாதா ஓரிடத்தில் தீர்மானமாக எழுதியிருந்தார். ஏனெனில் அங்கு நடக்கும் அகண்ட பஜனை ஒரு நாளைக்கு மேல் தன்னால் பொறுத்து கொள்ள முடியாது என்பது அவரது துணிபு. ஆகவேதான் தலைப்பில் நான் கூறியபடி, “சுவாரசியமாக தினங்கள் இப்போது செல்கின்றனவா சுஜாதா அவர்களே”? என்ற கேள்வியையும் அவர் முன்னே வைக்கிறேன்.
முதலில் பழைய பதிவுக்கு செல்வோமா?
அறுபதுகளில் சில கதைகள் என் மனதைக் கவர்ந்தன. அவற்றில் ஒன்றுதான் "ஒரு கதையில் இரு கிளைக்கதைகள்". ஒரு கிளைக்கதை சரித்திரக்கதை, இன்னொன்று தற்காலக் கதை. இரண்டாவதில் வந்த கதாநாயகனை அவன் காதலிக்கும் பெண் நிராகரிக்கிறாள். முதல் கதையில் வந்த ராஜகுமாரி தனது முறைமாப்பிள்ளையை துரத்தி விட்டு பல்லக்கில் செல்கிறாள். திடீரென ஒரு உருவம் வந்து நிற்கிறது. பல்லக்கின் திரையை விலக்குகிறது. ராஜகுமாரி "யார் அது" என்று கேட்க, "ராஜகுமாரி, நான் பக்கத்துக் கதையில் நிராகரிக்கப்பட்டவன்" என்று கூறுகிறது. அவனை பல்லக்கில் ஏற்றிக் கொள்கிறாள் ராஜகுமாரி, பயணம் தொடர்கிறது. சர்ரியலிசம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் அக்கதையைப் படித்ததுமே என் மனதைக் கொள்ளை கொண்டது அது. எழுத்தாளர் பெயரை அப்போது கவனிக்கவில்லை.
அதே போல இன்னொரு கதை, தலைப்பு மறந்து விட்டது, ஆனால் கடைசி வரி ஞாபகத்தில் இருக்கிறது. "இஞ்சினியர்கள் நாசமாப் போக". ஹோட்டலில் ஒரு பெண்ணின் நெக்லஸைத் திருட திட்டம் போடுகிறான் ஒரு இளைஞன். விளக்கையெல்லாம் அணைக்க ஏற்பாடு செய்து விட்டு, நெக்லஸையும் வெற்றிகரமாக பறித்து ஓடுகிறான். ஆனால் திடீரென விளக்குகள் எரிகின்றன. கதையிலிருந்து சில வரிகள்: "நான் கோழிக்குஞ்சு மாதிரி ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆறடி உருவமும் மிகுந்த அகலமும் கொண்ட தர்வான் கைகளை விரித்து கொண்டு வந்து, என்னை தடுத்து, தமிழ் சினிமாவில் அப்பா மகனை அணைத்துச் செல்வது போல என்னைத் தூக்கிச் செல்கிறான்". விஷயம் என்னவென்றால், எமெர்ஜென்சி ஜெனெரேட்டர் தானாகவே செயல்படத் துவங்கியுள்ளது. அதனால்தான் "இஞ்சினியர்கள் நாசமாப் போக". இக்கதையின் எழுத்தாளர் பெயரையும் அச்சமயம் கவனிக்கவில்லை.
சமீபத்தில் 1971 ஜனவரியில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு மெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தேன். அப்போதெல்லாம் ரயில் வண்டிகளில் மூன்று வகுப்புகள் உண்டு. பிறகுதான் இரண்டாம் வகுப்பு நீக்கப்பெற்று, அப்போதைய மூன்றாம் வகுப்பு இப்போதைய இரண்டாம் வகுப்பாயிற்று. கம்பார்ட்மெண்டில் ஒரே கூட்டம். நால்வர் அமர வேண்டிய பெஞ்சில் ஏழு பேர் அமர்ந்திருந்தோம். என் பக்கத்தில் இருந்தவரை எங்கோ பார்த்த உணர்வு. அப்போது ஐ.ஓ.பி. மீனம்பாக்கம் கிளையின் மேனேஜர் திரு. கோபு அவர்களது முகஜாடை இருந்தது, ஆனால் அவர் இல்லை. ஆகவே அவரிடம் அவர் கோபு அவர்களது சகோதரரா எனக்கேட்க, அவர் அதை மறுத்து தான் எழுத்தாளர் சுஜாதா என்றார். எனக்கு ஒரே சந்தோஷம். இந்த நிகழ்ச்சி பற்றி நான் எழுதியிருந்த இந்தப் பதிவிலிருந்து சில வரிகள்.
"இதற்குள் சுஜாதா அவர்களும் சேட்டில் வந்தார். ஆங்கிலத்தில்தான் சேட் நடந்தது. அவரிடம் நான் சமீபத்தில் 1971-ல் அவரை நேரில் சந்தித்த நிகழ்ச்சியை தேதி, இடம் விவரங்களுடன் எழுதியிருந்தேன். தனக்கு ஞாபகமில்லை என அவர் எழுத, நான் அதற்கு "Of course it is difficult for you to remember. While I met a celebrity, you did not" என எழுத அவர் அதெல்லாம் இல்லை தன் வயது காரணமாக மறந்துவிட்டது என எழுதினார். ஹாரி பாட்டர் புத்தகம் பற்றியும் அவருடன் பேசினேன். அதியமான் வந்திருப்பதையும் கூறினேன். அதியமானை விசாரித்ததாக அவர் கூறினார்".
அப்பதிவின் ஒரு பின்னூட்டமும், என் எதிர் வினையும்:
//இருந்தாலும் உமக்கு ஜாஸ்திதான். சொல்லியிருக்கலாமே, உமக்கு 1950 என்ன அதற்கு முன்பு அல்லது நீர் பிறக்கும் முன்னர் நடந்த நிகழ்வுகள் கூட நினைவில் இருக்கும் என்று!!!//
"ஓ, சொன்னேனே. ஆனால் அதை சமீபத்தில் 1971-ல் அவரை சந்தித்தபோது சொன்னேன். அவரது நைலான் கயிறு நாவலிலிருந்து எனக்கு பிடித்த வரிகளை கோட் செய்த போது அவருக்கு மிக்க மகிழ்ச்சி".
அந்த ரயில் பயணத்தின்போது திடீரென நான் மேலே சொன்ன கதைகள் ஞாபகத்துக்கு வர, ஒரு வேளை அவர்தான் அவற்றை எழுதியதோ எனக்கேட்க, அவரும் ஆமோதித்தார். ஆக, ஒரு நல்ல கதை எழுத்தாளர் யார் என்றே தெரியாத நிலையிலும் நினைவில் நிற்கும் என்பது நிரூபணம் ஆயிற்று.
அவரது ”ரத்தம் ஒரே நிறம்” என்ற கதை அக்காலக் கட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அது பற்றி நான் எழுதிய பதிவில் எனது அனுமானங்கள் சிலவற்றை வைத்திருந்தேன். அவற்றை சரி பார்த்துக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதே போல கணேஷும் வசந்தும் ஒருவரே என்பது பற்றியும் கன்ஃபர்ம் செய்து கொள்ள முடியவில்லை.
இனிமேலும் முடியாதாம். அவர் இறந்து விட்டார் என்றெல்லாம் கூறுகிறார்கள். நம்புவதற்கு கஷ்டமாக உள்ளது. அவருக்கெல்லாம் இறப்பு எப்படி வரலாம்?
அதுவும் அவர் மறைந்து ஓராண்டு ஆகிவிட்டதாம், அதை மட்டும் நம்ப முடிகிறதா என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
21 comments:
ஆமாம் டோண்டு சார்! நம்ப முடியவில்லை! ஆனால் ஒன்று! அவர் எழுத்துக்கள் சாகப்போவதில்லை!!
காலையில் Breaking News படித்ததிலிருந்து I wasn't moving at all. And I don't when I will!
செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும்.
அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய வாசகர்களுக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்
ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், எழுத்துக்களை ஏணியாக்கி அதன் உச்சத்திலே வாழ்ந்துவிட்டுப் போயிருப்பதால், துக்கத்திலும் சற்று நிம்மதி நெஞ்சிலே தெரிவது உண்மையே. ஊன் மறைந்திட்டாலும், அவரது எழுத்துக்கள் உயிராய் எந்நாளும் வாழும்.
உண்மையிலேயே மிக நெருங்கிய உறவினரை இழந்தது போல் மனம் கஷ்டப் படுகிறது. வேறு வேலையே ஓடவில்லை.
அவர் ஆன்ம சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!
avar paarppanar enRaalum nanDraaga suvaiyaaga ezuthi vanthaar. enathu anuthaapangaL
komanan
நான் சுஜாதா எழுதியதை படித்ததே கிடையாது. இருந்தாலும் சிவாஜி படத்தினால்தான் அவரை எனக்கு தெரியும். electronic voting machine உருவாக்கியவர் இவர்தான் என்பதும் தெரியாது.
எதையும் மிக எளிதாக எழுதுவார் என்று கூறுகிறார்கள். நான் இதையே இவர் செய்த மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன். எளிதாக எழுதினால்தான் மக்களுக்கு புரியும்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இவரது எழுத்துக்கள் மிகவும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.
சுஜாதா - RIP
கோமணம்,
உன் ஈன புத்தி உன்னை உருப்படவிடமல் தடுக்கிறது. எதற்கெடுத்தாலும் ஜாதி பேசுகிறாய்.
உனது பார்பன வெறிக்கு என்ன காரணம், திராவிட சித்தாந்தமா. அதை விட்டொழி மனிதனை வாழ தொடங்கு.
intha idaththil athigam pesa viruppamillai. sujatha thamizarukkum thiraavidarukkum paguththarivikkum onrum seyyavillai. athai veru idaththil solliyiruppen. aanal avar nalla ezuththaalar enbathai oppukkolkiren. miindum enathu varuththangal.
komanan
வாசகர்களுக்கும், அன்பர்களுக்கும் பெரும் இழப்பு. அவரின் இடத்தை நிறப்ப வேறு யாரும் இல்லை. முடியாது.
இரு முறை நேரில் சந்தித்து உரையாடினேன். (மெரினா பீச்சில்) ; ஒரு புத்தகம் பரிசளித்தேன் ; (முச்சந்தி இலக்கியம்) மிகவும் மகிழ்ந்தார் ; சில் ஆண்டுகளாக, வார வாரம் சனிக்கிழமை காலை அம்பலம்.காமில் அவருடன் பல மணி நேரங்கள் பல பல விசியங்கள் குறித்த சாட். அருமையான நினைவுகள்.
அவரின் முழு எழுத்தக்குகளையும் படிக்காமல், சினிமா வசனங்கள், க்ரைம் திரல்லர்கள் மட்டும் படித்து அதன் பாலியல் வர்ணனைகளை மட்டுமே குறை சொல்லும் வாசகர்கள், அவரது non-ficiton கட்டுரைகள், புதுக்கவிததை, சங்க இலக்கியம் அறிமுகங்கல், விஞ்ஞான தொடர்கள் மற்றும் பல நூறு ஆக்கங்களை அனைத்தையும் படித்தால் தான் அவரது வீச்சும், ஆழமும்ஜ் புரியும். பலருக்கும் பல அருமையான, புதுமையான் விசியங்களை, புத்தகங்களை, எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
a versatile genius indeed.
---------------
பெரியார், ராஜாஜியை பார்பனியவாதியாகவும், தனது அரசியல் எதிரியாகவ்ம் கருதினார். ஆனால், தனிப்பட்ட முறையில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக விளங்கினர். 1972இல் ராஜாஜி மறைந்த போது, சக்கர நாற்காலியில் சுடுகாட்டிற்கு சென்று, பெருங்கண்ணீர் வடித்து, தன் 'நண்பருக்கு' இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அவர் பெரியார். ஆனால் இன்று ஒரு எழுத்தாளரரின் மரணத்திற்க்கு அஞ்சலி செலுத்தும் வாசகர்களை, சிறிதும் நாகரீகம், பண்பாடு இல்லமல் நோகச் செய்வது 'காட்டுமிராண்டித்தனம்'. இடம், பொருள், ஏவள் அறியாமல், இவ்வேளையில் இவ்வாறு தூற்றுவது கீழ்த்தரமான இழிச்செயல். பெரியாரின் பண்பு இவர்களுக்கு கொஞ்சமும் இல்லை.
Couldnt believe. Good writer.
Recently on my vacation, i bought Meendum Juno on my journey from Salem to Madras. A very good writer.
என்னைதான் குறிப்பிடுகிறீர்கள் என தெரியும். அதனால்தான் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மறைவிற்கு எனது அனுதாபத்தையும் வருத்தமும் தெரிவித்து அதிகம் பேசாது முடித்து கொண்டேன். ஆனால் உண்மைகளை மறைக்க முடியுமா? எனது கருத்து மற்றும் சிந்தனை எதிரியான டோண்டு அவர்கள் புரிந்து கொள்வாரென நினைக்கிறேன். இவ்விடத்தில் அதிகம் பேசுவது தமிழ் பண்பாடு அல்ல. மீண்டும்... மறைந்த திரு. சுஜாதா அவர்களுகு எனது அஞ்சலி.
கோமணன்
சுஜாதா மறைவை தமிழ்மணத்தில் கொண்டாடுபவர்கள் மூர்த்தி & கோவும்(மூர்த்தி, கேடி குண்டன், டிபிசிடி) அசுரன் & கோவும் தான்.
சுஜாதா செத்ததுக்கு இதுகள் சாக்லட் கொடுக்காதது தான் பாக்கி.அதையும் கூடிய விரைவில் செய்தாலும் ஆச்சரியமில்லை.
இதுகள் இருக்கும் லட்சணத்தில் மற்றவர்கள் எல்லாம் ஆட்டுமந்தைகளாம்.இதுகள் தான் மேய்ப்பர்களாம்.
திராவிடம்,பார்ப்பனியம் என்ற கோணத்தை தவிர வேறெதிலும் மனிதனை அளக்க தெரியாத இதுகள் தான் ஆடுகள்.ஆனால் பாவம் தாம் ஆடுகள் என்பதை இவைகள் அறிவதில்லை.ஆடுகள் தம்மை ஆடுகள் என அறிந்திருந்தால் தன் எப்போதோ மந்தையிலிருந்து விலகி இருக்குமே.(நன்றி கலீல் கிப்ரான்)
சுஜாதாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் கணேஷ் வசந்த் கதைகள் ஸர் ஆர்தர் கோனன் டோயல் எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸ் டாக்டர் வாட்சன் கதைகளை inspiration ஆகக் கொண்டு எழுதப்பட்டவையா என்று நான் கேட்க எண்ணியிருந்தேன்...
ஏனென்றால் வங்காள மொழி எழுத்தாளரான ஷராதிந்து பந்தோபாத்யாய் எழுதிய வியோம்கேஷ் பக்ஷி கதைகளைப் படித்திருக்கிறேன்..அதை தூர்தஷனில் பார்த்த பின்பு தான் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்தேன்..அதில் வரும் வியோம்கேஷ் பக்ஷி கதாப்பாத்திரமும் அவருடன் வரும் அஜீத் பாத்திரமும் அப்படியே ஷெர்லாக் ஹோம்ஸ் மற்றும் டாக்டர் வாட்சன் போலவே இருப்பார்கள்.
//
electronic voting machine உருவாக்கியவர் இவர்தான் என்பதும் தெரியாது.
//
electronic voting machine ஐ உருவாக்கிய டீமில் அவர் பங்கு வகித்திருக்கிறார். அவர் மட்டும் தனியாளாக அந்த கருவியை உருவாக்கவில்லை.
The followers of the Kazhagams go by the tenets of Periyar, and as such you cannot expect anything decent from them:
யார் பகுத்தறிவாளர்கள்?
1948ல் தூத்துக்குடி மாகாண மாநாட்டில் தந்தை பெரியார் உரை.
*** புத்திசாலிகள் சண்டையிட்டுக்கொள்வது எப்போதுமே இயற்கைதான்.
நான் நீடாமங்கலம் மாநாட்டில் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறேன்.
என்னைப் பின்பற்றுவர்கள் தங்கள் சொந்தப் பகுத்தறிவைக்கூட
கொஞ்சம் தியாகம் செய்யவேண்டுமென்று.. " யாராவது ஒருத்தன் தான்
நடத்தக்கூடியவனாக இருக்கமுடியுமே தவிர, எல்லோருமே தலைவர்களாக
இருக்க முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க
வேண்டியவர்கள் தான்." தோழர்களே! நான் இப்போது கூறுகிறேன். நீடாமங்க
லத்தைவிட ஒரு படி மேலே செல்லுகிறேன் -- நீங்கள் இந்த இயக்கத்தில்
உள்ளவரை உங்கள் சொந்தப் பகுத்தறிவை மட்டுமல்ல, உங்கள்
மனச்சாட்சி என்பதைக் கூடக் கொஞ்சம் மூட்டைகட்டி வைத்து விட
வேண்டியது தான்.. கழகத்தில் சேருமுன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு
கொண்டு, கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும்
ஆராய்ந்து பார்க்கலாம், என்னுடன் வாதாடலாம். உங்கள் மனச்சாட்சி
என்ன கூறுகிறது என்றும், என்னுடைய தன்மை எப்படிப்பட்டது என்றும்
நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் ஆர அமர இருந்து
யோசித்துப் பார்க்கலாம்.
ஆனால், எப்போது உங்கள் மனச்சாட்சியும் பகுத்தறிவும் இடங்கொடுத்து
நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாக சேர்ந்து விட்டீர்களோ அப்போதில்
இருந்து உங்கள் பகுத்தறிவையும் மனச்சாட்சியையும் ஒரு புறத்தில்
ஒதுக்கி வைத்துவிட்டுக் கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றி
நடக்க வேண்டியதுதான் முறை!!..(பெரியார் வாழ்வில் வள்ளுவர்
பார்வை - பகுத்தறிவுப் பாவலர் தென்மொழி ஞானபண்டிதன்)
சுஜாதா போன்ற எழுத்தாளர்களுக்கு மரணம் ஒரு போதும் இல்லை...he will live forever in his words.
ஓ.. இன்றுதான் முதல் வருட நினைவு நாளா??
அவர் மறைந்து ஒரு வருடம் ஆன மாதிரியே தெரிய வில்லை..
நான் இன்று காலைதான் எதேச்சையாக அவர் நாவல் குறித்த ஒரு இடுகையை போட்டேன்
http://lazyguy2005.blogspot.com/2009/02/blog-post_27.html
அவர் எழுத்துக்கள் என்றும் நம்மிடம் வாழ்ந்து கொண்டிருக்கும்..
sujatha could have lived another 10 years, (just for our selfish) He would have taught us how effectively we should use chat, net, blog, google, gdrive etc.
Missing him very much.
அவரின் எழுத்தக்கள் மூலம் அவர் தொடர்ந்து நம்முடன் வாழ்கிறார்.
மரணத்தை பற்றி அருமையான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
குஸ்வந்த் சிங்கின் "Death at my door step" என்ற நூலை பற்றி சேட்டில் ஒரு முறை அவரிடம் சொன்னேன்.
படித்துவிட்டு அதை பற்றி சிலாகித்தார்.
எந்த சூழ்னிலையிலும் நகைச்சுவை உணர்சி கொண்டவர் அவர்.
ஒரு முறை சாட்டில், மோகள்முள் நாவல் பற்றி பேசிய போது, அதில் வரும் முக்கிய கதாபாத்திரமான ரங்கண்ணா என்ற இசை குரு போல் யாரைவாது நிஜத்தில் சந்திதிருக்கிறீர்களா என்று கேட்டேன்.
உடனே அவர் : "அதியமான், I have met Yamuna "என்றாரே பார்க்கலாம்.
70 வயதிலும் இந்த குசும்பு !! :))
கேள்விகள்:
எம்.கண்ணன்.
1. பா.ம.க, வி.சி போன்ற கட்சிகளை அதிமுக, திமுக இரண்டும் தங்கள் கூட்டணியில் சேர்க்கவில்லையெனில் - மருத்துவர் ஐயா என்ன செய்வார் ?
2. தமிழ்நாட்டின் முதல்வராக அன்புமணி வந்தால் நல்லது என நான் நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன ?
3. பாஜக ஏன் விஜய்காந்தோடு சேர்ந்து போட்டியிடக் கூடாது ?
4. 'எ வெட்னஸ்டே' இந்திப் படம் பார்த்தீர்களா ? அதை கமல்ஹாசன் சரியாக எடுப்பாரா ? இரா.முருகனின் திரைக்கதை + வசனம் எவ்வளவுதூரம் எடுபடும் ?
5. உங்கள் நங்கநல்லூர்வாசிகளுக்காக ஏதேனும் பொது சேவை செய்துள்ளீர்களா ? செய்யும் / செய்ய போவதில்லை போன்ற எண்ணங்கள் உண்டா ?
6. ஜெயலலிதா இந்த வருட கோடைக்கு கோடநாடு செல்வதற்கு ஆப்பாக தேர்தல் வந்துவிட்டதே ? எப்படி பல்வேறு தலைவர்களும் உடல் உபாதைகளுடன் கத்திரி வெயிலில் பிரச்சாரம் செய்யப் போகின்றனர் ?
7. அதிமுகவுக்கு 17/40 (திமுகவுக்கு 6) சீட்கள் கிடக்கும் என சில கருத்து கணிப்புகள் (பயனீர் நாளிதழ்) சொல்கிறதே ? அப்படிக் கிடைத்தால் ஆனால் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் திமுகவின் நிலை என்ன ?
8. பெரும்பாலான பிராமணர்கள் விரும்பிப் பார்க்கும் பல நிகழ்ச்சிகள் ஜெயாடிவியில் ஒளிபரப்பாகின்றன (பக்தி, சங்கீதம், இன்ன பிற). அப்படி இருக்கையில் ஏன் சன்டிவி மட்டுமே உங்கள் வீட்டில் ? சினிமா, சீரியல் தவிர எந்த மாதிரியான வித்தியாசமான நிகழ்ச்சிகளும் சன் டிவியில் இல்லாத நிலையில் ?
9. அலோபதி தவிர மற்ற மாற்று மருத்துவ முறைகளில் நம்பிக்கை உண்டா ? - ஹோமியோபதி, சித்தா, யுனானி, ரெய்கி... ?
10. விஜய்காந்த், சரத்குமார் - இருவருக்கும் எந்தப் படமும் கடந்த 4-5 ஆண்டுகளில் ஹிட் ஆகாமல் இருக்கையில் எப்படி அவர்களுக்கு பட வாய்ப்பும் கட்சி நடத்த பண வாய்ப்பும் வருகிறது ? யார் funding செய்கிறார்கள் ? இவர்களை நம்பி யார் படமெடுக்கிறார்கள் ?
Post a Comment