2/14/2009

எங்கே பிராமணன் மெகா சீரியல் - பகுதிகள் 8, 9, 10

அவ்வப்போது சோ அவர்களும் அவர் நண்பரும் திரையில் தோன்றி சீரியலில் அப்போதுதான் பார்த்த விஷயத்தை விவாதிப்பது போன்ற காட்சியை என்னைப் பொருத்தவரை சீரியல்களில் அதிகம் பார்த்ததில்லை. அவரது “சரஸ்வதியின் சபதம்” என்னும் நாடகத்தை சமீபத்தில் 1972-ல் பம்பாய் ஷண்முகாநந்த சபாவில் வைத்து பார்த்த போது இம்மாதிரி உத்தியை கவனித்துள்ளேன். அது பற்றி பின் எப்போதாவது கூறுவேன்.

இந்த சீரியலைப் பற்றி இதற்கு முன்னால் வந்த பதிவில் கூறியிருந்த ஒரு விஷயத்துடன் எட்டாவது பகுதி ஆரம்பிக்கிறது. அசோக் ஒரு ஆட்டோ டிரைவரிடம் கூறிய விஷயம் பலித்தது பற்றி திகைப்புடன் பாகவதரிடம் அசோக் வீட்டு சமையற்கார மாமி பேசுகிறார். இதை அறிந்த அக்கம்பக்கத்திலிருந்து பலரும் தன்னை இது விஷயமாகக் கேட்டதாகவும் அசோக்கிடம் கூறி தங்களுக்கு ஜோசியம் சொல்ல ஏற்பாடு செய்யுமாறு கேட்டு படுத்துவதாகவும் அவர் கூறுகிறார். பாகவதரும் திகைக்கிறார். அத்துடன் பாகவதரால்தான் அசோக் இம்மாதிரி விசித்திரமாக நடந்து கொள்கிறான் என சில கோஷ்டிகள் பேசுவதாக வேறு சமையற்கார மாமி பாகவதருக்கு கூறுகிறார்.

அப்போது அப்பக்கமாக வந்த அசோக்கிடம் பாகவதர் கேட்க, ஒரு வெள்ளந்தியான புன்னகையை சிந்தி விட்டு அசோக் இது காக்கா உட்கார ஏதோ விழுந்த மாதிரி இருப்பதாகக் கூறி சற்றே நிறுத்த, மாமி பனம்பழம் என எடுத்து கொடுக்கிறார். அசோக் பாட்டுக்கு எதையும் கவனியாது அங்கிருந்து செல்கிறான்.

இது இப்படியிருக்க தனது தோப்பனாருக்கு பதிலாக ஜட்ஜாத்துக்கு புரோகிதம் செய்யப் போன அந்த இளைஞன் கிருபா இப்போது தனது வழக்கமான நவீன உடையில் பைக்கை ஓட்டிக் கொண்டு வர, ஜட்ஜினுடைய பெண்ணான பிரியாவைப் பார்த்து அவளுக்கு அவள் வீடு வரை லிஃப்ட் தருகிறான். அங்கு சற்று நேரம் அப்பெண்ணுடன் பேச்சு. ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகம் செய்து கொள்கின்றனர். அவனுக்கு கிரிக்கெட்டில் லயிப்பு என்றால், அவளுக்கு நடனத்தில். அப்போதுதான் அந்த சுட்டிப் பெண் கிரிக்கெட்டும் நடனத்துக்கும் பல ஒற்றுமைகள் உண்டு எனக்கூற, கிருபா திகைக்கிறான். கிருபா சில பேட்டிங் ஸ்ட்ரோக்குகளை காண்பிக்கிறான். உதாரணத்துக்கு பிட்சில் முன்னேறி பந்தை அடிப்பது, ஒரு முட்டி போட்டு பந்தை சுழற்றி அடிப்பது, ஹூக் ஷாட் அடிப்பது, பின்வாங்கி கட் செய்வது ஆகிய ஒவ்வொன்றையும் அவன் செய்து காட்ட காட்ட அப்பெண்ணும் அதற்கேற்ற நடன அசைவுகளைக் காட்டுகிறாள். ரொம்பவும் புத்துணர்ச்சியை தந்த காட்சி இது.

இந்த இடத்தில் ஒரு சிறு திசைமாற்றல். சமீபத்தில் 1968-ல் வெளி வந்த எம்.ஜி.ஆர். படம் காதல் வாகனம். அதில் ஒரு சீன். ஒய். விஜயா வெவ்வேறு மேற்கத்திய இசை ராகங்களை வாசித்து காட்ட, எம்.ஜி.ஆர். கர்நாடக இசையில் அந்தந்த ராகங்களுக்கான பெயரைக் கூறி வாசித்தும் காட்டுவார். இதை எடுத்து கொடுத்தது குன்னக்குடி வைத்தியநாதன் என்று படித்ததாக ஞாபகம். அதே போல சங்கராபரணம் படத்தில் சங்கர சாஸ்திரிகள் மேற்கத்திய இசையில் ஒரு ட்யூன் போட்டுக் காட்டி அவரை கேலி செய்தவர்களை வாயடைக்கச் செய்வார்.

இப்போது சோ அவர்களும் அவர் நண்பரும் வந்து பரத நாட்டியம் பற்றி பேசுகின்றனர். பரதம் தேவைதானா என நண்பர் கேட்க, அதன் பெருமைகள் ப்ற்றி சோ பேசுகிறார். பரத முனிவரால் வடிவமைக்கப்பட்டது இந்த மகோன்னதமான கலை. சிவபெருமானே அதன் போஷகர். பால சரஸ்வதி, சுதாராணி ரகுபதி போன்ற மேதைகளால் சீரமைக்கப்பட்ட வழிமுறைகள் கொண்டது அது. ஒரு கால்த்தில் கொச்சைப்படுத்தப்பட்டு வந்த அக்கலை இவரைப் போன்றவர்களால் சமுதாயத்தில் எல்லோரும் ஏற்று பலர் விரும்பிக் கற்கும் கலையாக வருகிறது. ஆனால் தற்போதைய வணிகமயமாக்கலில் சற்றே பாதிக்கப்பட்டுள்ளது.

நாதன் அவர்கள் தலைவராக இருக்கும் ஒரு கிளப்பில் தலைவருக்கான தேர்தல் வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தலைவராக நாதன் இருந்து வந்த நிலையில் இவ்வருடம் தலைவர் தேர்தலில் அவரை எதிர்த்து இன்னொரு பார்ப்பனர் போட்டி போடுகிறார். தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே நாதன் ஒரு பார்ப்பன வெறியர் என்றெல்லாம் உதார் விடுகிறார். வீட்டில் பூஜை புனஸ்காரம் என்றெல்லாம் வைத்து கொண்டு வெளியில் பார்ட்டிக்கு போவது, அசைவம் சாப்பிடுவது என்பது பற்றியெல்லாம் பேசப்படுகிறது.

ஒரு சாதாரண கிளப் எலெக்‌ஷனுக்கா இத்தனை பந்தா என்று கேட்கும் அளவுக்கு விஷயங்கள் போகின்றன. அது பற்றி சோ கூறுகையில் கேவலம் 40 பேர் மட்டுமே உறுப்பினராக உள்ள கிளப்புகளில் கூட இந்த தேர்தல் ஜுரம் விளையாடுவது பற்றி கிண்டல் அடித்தார். அரசியல் அவ்வளவு தூரம் நம் வாழ்வில் ஊடுறுவியுள்ளது என்றும் அவர் கூறி கவலை தெரிவித்தார்.

இந்த சீரியலின் ஒன்பதாம் பகுதி தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏமாற்றமே அளித்தது. கிருபா பேசும் சமயம் அவன் அம்மா குரலோ அண்ணா குரலோ வர, அப்பா கம்பர் ஜெயராமன் பேசும் போது தங்கை குரல் வர முதல் விளம்பர இடைவேளை வரும்வரை சொதப்பலாகி போயிற்று. ஜட்ஜ் வீட்டுக்குப் போய் தங்கள் ஆத்து கொலுவுக்கு அழைக்க வேண்டும் என கிருபா தூண்டில் போட, அவனும் அவன் தங்கையும் அங்கு போக, அவாத்து பெண்ணை இவன் தூரத்திலிருந்து ரசிக்க, இவன் ரசிப்பதை பார்க்கும் தங்கையும் அவனை குறும்பு பார்வை பார்க்க என சீன்கள் செல்கின்றன. காதல் இண்டெரஸ்டையும் மெதுவாக இந்த சீரியலில் நுழைக்கப் பார்ப்பது புரிகிறது.

பாகவதரின் பேரனுக்கு சென்னையில் ஒரு பொறியியல் கல்லூரியில் நாதனின் சிபாரிசால் அட்மிஷன் கிடைக்கிறது. பாகவதரின் மாட்டுப் பெண்ணுக்கு மாமனார் மாமியாரைக் கண்டால் ஆகாது என்பதை விளக்கும் காட்சிகள் வருகின்றன. பாகவதரும் அவர் மனைவியும் பேரன் ஹாஸ்டலுக்கு சென்று அவனை பார்க்கின்றனர். அவனும் அவர்களை கண்டு மகிழ்ச்சியடைகிறான். தலைமுறை இடைவெளிகள் காட்டப்படுவது மனதில் தைக்கும் வண்ணம் உள்ளன.

சீரியலின் பத்தாம் பகுதி அதற்கு முந்தைய பகுதியினை பார்த்ததும் தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்பட்ட ஏமாற்றத்தைப் போக்கியது. சோ அவர்கள் பார்ப்பனர் தமிழர்களா என்ற கேள்விக்கு பதிலளிப்பதுடன் இப்பகுதி ஆரம்பித்தது. பர்ப்பனர்கள் தமிழர்கள் இல்லையெனக் கூறப்படுவதை சோ அவர்கள் நையாண்டி செய்தார். இந்த அரசியல்வாதிகள் மட்டும் வீட்டில் தெலுங்கு பேசுவார்கள், உருது பேசுவார்கள் ஆனால் அவர்கள் எல்லாம் தமிழர்கள். ஆனால் வீட்டிலே தமிழ் மட்டுமே பேசும் பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை என ஏன் கூற வேண்டும்? ஏனெனில் அவர்கள் வடமொழியையும் ஆதரிக்கிறார்கள் அத்னாலா? அப்படியே வடமொழிக்கு என்னதான் ஆட்சேபணை இருக்கவியலும்?

வடமொழி இந்த நாட்டின் பொக்கிஷம். பல படைப்புகள், பொன்மொழிகள், நாடகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அந்த மொழியை ஒரு சாதியினருக்கு மட்டும் உரித்தாக பார்ப்பது வெறும் துவேஷம் அன்றி வேறொன்றும் இல்லை. இன்னொரு ஆட்சேபணை பார்ப்பனர்களது பேச்சு மொழி. அகத்துக்காரர், அகத்துக்காரி ஆகியவை மறுவி முறையே ஆத்துக்காரர், ஆத்துக்காரி என வருவதில் மற்றவருக்கு என்ன பிரச்சினை? அவர்கள் என்பது மறுவி அவாள் என வருகிறது. இதில் என்ன ஆட்சேபணை. வூட்டுக்காரி, வூட்டுக்காரன்னா பரவாயில்லை, அவுங்க, அவுக, அவுங்கன்ங்கன்னா பரவாயில்லை. என்ன நடக்கிறது நாட்டில்? தமிழை பிழையின்றி பேசுபவர்களிள் ஒரு குழுவினரான பார்ப்பனரைக் கண்டு மட்டும் ஏன் இந்த துவேஷம், என்றெல்லாம் விளாசினார் சோ அவர்கள். இதையெல்லாம் எடுத்து கூறும் நோக்கத்திலும் தான் கிளப் சீன்களை சேர்த்ததாக சோ அவர்கள் கூறினார்.

பாகவதரின் பேரனை பார்க்க அவன் தாய் தந்தையர் முன்னறிவிப்பின்றி ஒரு ஞாயிறு அன்று வந்து பார்த்தால் அவன் ஹாஸ்டலில் இல்லை. அவன் ஒவ்வொரு ஞாயிறன்றும் ஹாஸ்டலை விட்டு சென்று மாலை லேட்டாகத்தான் வருவான் என அவன் நண்பன் கூறுகிறான். பாகவதரின் மகன் தனது தாய் தந்தையை காஞ்சீபுரம் சென்று பார்க்கும் விருப்பத்தைத் தெரிவிக்க அவன் மனைவி அதற்கு தடா போடுகிறாள். தாங்கள் வந்தது தம் பையனைப் பார்க்க மட்டுமே தனது மாமனார் மாமியாரை அல்ல என அழுத்தம் திருத்தமாக கூறுகிறாள். பையன் எங்கே போயிருப்பானென்பது தெரிந்தால் அந்த அம்மையார் குதிக்கப் போவதை வரும் திங்களன்றுக்கான பகுதியில் பார்க்கலாம். ஆனால் அதை யாருமே சுலபமாக ஊகித்து விட முடியும் என்று மட்டும் சொல்லி வைக்கிறேன். இந்தக் காட்சி நாவலில் வராவிட்டாலும் என்னால் ஊகிக்க முடிகிறது.

நாதனின் தூரத்து உறவினர் நீலக்ண்டன் அசோக் ஒரு மடத்துக்கு செல்வதைப் பார்த்து நாதனிடம் போட்டு கொடுக்க, நாதன் அசோக்கை கூப்பிட்டு விசாரிக்கிறார். அவனோ தான் சில சந்தேகங்களுக்கு விடை பெறவே அங்கு சென்றதாகக் கூற அவர் கோபப்பட்டு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தன்னை கேட்குமாறு கூறுகிறார். அவனும் சீரியசாக் ‘ஆத்மானுபூதி’ என்றால் என்ன பொருள் என கேட்க, நாதன் பேய்முழி முழிக்கிறார். அசோக் தான் யார் என்னும் கேள்வியில் ஆழ்ந்திருப்பதால் இவரது ஆட்சேபங்களை சட்டை செய்யாது அங்கிருந்து செல்கிறான்.

இப்போது மீண்டும் சோவும் அவர் நண்பரும் திரையில் தோன்றுகின்றனர். நண்பர் சோவிடம் சீரியசாக ‘ஆத்மானபூந்தி” என்றால் என்ன என்று கேட்க, சோ அவரை நட்புடன் கலாய்த்து சாடுகிறார். “ஆமா ஆத்மானபூந்திதான், காராபூந்தி மாதிரின்னு வெச்சுக்கோங்களேன். தயிரில காராபூந்தி போட்டு தயிர் வடை பண்ணா இன்னும் பிரமாதமாக இருக்கும். ஏன் சார் படுத்தறீங்க? அது ‘ஆத்மானபூதி’ என விளக்குகிறார். தன்னை அறியும் முயற்சிகளின் அனுபவங்களையும் இந்த வார்த்தை குறிக்கிறது.

அசோக் ஏன் இப்படி இருக்கிறான், அவன் எதைத் தேடுகிறான், அவன் யார் ஆகிய விடைகளுக்கு பதிலளிப்பதே இந்த சீரியல்.

இப்போது டோண்டு ராகவன்.

ஆத்மானபூந்தி என்றதுமே என் நினைவுக்கு வந்தவர் நம்ம செந்தழல் ரவிதான். எனது சம்பவாமி யுகே யுகே என்னும் பதிவுக்கு அவர் இட்டப் பின்னூட்டம், “என்னாது, சாம்பார்ல பல்லி உழுந்துடுச்சா”?

அசோக் மடத்துக்கு செல்வது பற்றி நாதன் கவலைப்பட்டது போல எனது தந்தையும் நான் அடிக்கடி கதாகாலட்சேபங்களுக்கு விரும்பிப் போவதை மிகவும் கண்டித்தார். அதுவும் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் வடமொழி ஆசிரியராக அச்சமயம் பணியாற்றிய பிரும்மஸ்ரீ ராமகிரூஷ்ண சாஸ்திரிகள் உபன்யாசம் என்றால் அடியேன் தவறாது ஆஜர் ஆகிவிடுவேன். அப்போது எனக்கு 9-10 வயது. இந்த வயசில் விளையாட வேண்டிய பையன் இம்மாதிரி சென்றால் அவன் எங்காவது மடம், சாமியார் என்றெல்லாம் போய்விடப்போகிறானோ என அவர் அக்காலக் கட்டத்தில் கவலைப் பட்டது இப்போது நினைவுக்கு வருகிறது. பாவம் அவர். அதே சிறுவன் தற்சமயம் 63 வயது ஆகப்போகும் நிலையிலும் நன்கு அனுபவித்து வாழும் ஆசையை விடாது இருக்கப்போகிறான் என்பதை சமீபத்தில் 1956-ல் உணரவில்லை.

இந்த சீரியலில் இன்னொரு விஷயமும் என் கண்ணுக்கு தெரிகிறது. அதுதான் பார்ப்பனர்களுக்குள் ஒற்றுமையின்மை. பெரிய வித்வத் விஷயங்களில் வார்த்தை உச்சரிப்பு முதற்கொண்டு ஒருவருக்கொருவர் அடித்து கொள்வார்கள். கோவில் யானைக்கு விபூதிப் பட்டை போடுவதா, நாமம் போடுவதா, நாமம் போட்டாலும் வடகலை நாமமா, தென்கலை நாமமா என்றெல்லாம் அடித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே ஒற்றுமையின்மையை வெளியிலிருந்து அடாவடியாக தாக்குதல்கள்கள் வரும்போதும் பிடித்து கொண்டு தொங்கலாமா என்று என்னை நானே பலமுறை கேள்வி கேட்டிருக்கிறேன். இந்த கிளப் எலெக்‌ஷன் சீன்கள் அக்கேள்வியை என்னுள் மறுபடியும் எழுப்பியுள்ளது. பிராம்மணாம் அனேகத்வம் (பார்ப்பனர்களுக்குள் கருத்து வேற்றுமைகள் உண்டு) என்ற வடமொழி சொலவடையும் இங்கு நினைவுக்கு வருகிறது.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

26 comments:

Anonymous said...

ஜெயா டீவியில் வரும் சோவின் நெடுந்தொடரை தொகுத்து தந்தற்கு நன்றி.

நக்கீரன் பாண்டியன்

Venkat said...

Dondu Sir,

Many thanks for writing about the serial. This really helps me.

Thanks

Venkataraghavan R

Anonymous said...

/// இந்த சீரியலில் இன்னொரு விஷயமும் என் கண்ணுக்கு தெரிகிறது. அதுதான் பார்ப்பனர்களுக்குள் ஒற்றுமையின்மை. ///

ஒற்றுமையின்மை என்பது சடங்கு, சம்பிரதாயங்களை முதன்மைப் படுத்தும் எல்லா இனங்களிலும் சடங்கு சம்பிரதாயங்களில் உண்டு. மிகவும் நெறிமுறைப்படுத்தப்பட்டதாக கருதப்படும் இஸ்லாமியர்களிடையே கூட ஆழமான சடங்கு வேறுபாடுகள் பரவியுள்ளன. அவை அவர்களிடையே ஒருவித வெறுப்பு நிலையைக் கூட எடுத்துள்ளன. அதுபோல கிருத்துவ சமுதாயமும் பல்வேறு நிலைகளில் வெவ்வேறு சடங்குகளை எடுத்து வேறுபட்டுக்கிடக்கிறது.

பொதுவாக அறிவையும், சாத்திரங்களையும் முக்கியமாக எடுத்துவைக்கும் எல்லா குழுக்களிலும் வேற்றுமை என்பது இயல்பு. முட்டாள்களை சேர்க்கலாம், அறிவாளிகளை சேர்ப்பது கடினம்.

பிராமணர்கள் என்பது இந்தியாவில் தலித்துக்கள் போன்ற ஒரு மிகப்பெரிய இனக் குழு. இந்தியாவில் முழுக்க 5 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணிக்கையுள்ள ஒரு வர்க்கம் சடங்கு வித்தியாசங்களால் பீடிக்கப்பட்டதில் வியப்பு என்ன? தெற்கே குறைவாகவும் வடக்கில் அதிகமாகவும் இந்தியா முழுதும் பரவியுள்ள பிராமண சமுதாயம் இன்று இந்தியாவில் கிருத்துவ சமுதாயத்தை ஒத்த எண்ணிக்கையில் இருந்தாலும் பாரதத்தின் ஒரு இணைபிரியா அங்கமாய் இயங்குகிறார்கள். சிறுபான்மை அரசியலும், காழ்ப்பும் இவர்களை தனித்தே பிரிக்க முயன்றாலும், தனித்துப் பிரிப்பது குறுகியகால அரசியல் லாபத்தை இந்த சமுதாயத்திற்கு தரும் என்பது உண்மையானாலும், அவர்கள் அதை மறுத்து தங்களை அச்சுறுத்தல்களுக்கு இடையையும் பிராமண சமுதாயம் இந்து மதத்தின் ஒரு அடிப்படை அம்சமாய் எப்போதுமே மனதார அடையாளம் காட்டி வந்துகொண்டிருக்கிறது. இது பாராட்டப்பட வேண்டிய பொருள்.

பிராமணர்கள் அடிப்படையில் சடங்குகளில் வேறுபாடுகள் கொண்டவர்களாக இருந்தாலும் வரலாற்றில் பல்வேறு கணங்களில் அவர்கள் பாரதத்தையும், இந்து மதத்தையும், தங்களையும் ஒற்றுமையால் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் கர்வப்படவேண்டிய வரலாறு. மாலிக்காபூர் தாக்குதல் முதலிய வரலாற்று சோதனைகளில் இனம், இடம் வித்தியாசம் பாராமல் அவர்கள் ஒன்றிணைத்து இயங்கி இந்து மதத்தைக் காத்திருக்கிறார்கள். பல நூறு மைல் இடம் பெயர்ந்து சமுதாயங்கள் மற்ற பிராமணர்களால் அரவணைக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளன.

எண்ணூறு வருட முஸ்லிம் ஆதிக்கத்தில் இந்து மதத்தை அழியாமல் காத்ததில் பிராமணர்களின் பங்கு மகத்தானது. சிவாஜி ராஜ்ஜியத்தில் பிராமணர்களின் பங்கும், ராமதாஸர் முதலியவர்களின் பின்புல பலமும் சிறந்தவை. இவை பல்வேறு பிராந்திய, சமுதாய வேறுபாடுகளை மீறி நடந்தவை என்பதே முக்கியம்.

சாரஸ்வத் பிராமணர்கள் மேற்கிந்திய கடலோரக்கரைகளில் தேடி அழிக்கப்பட்டும் அவர்கள் பல நூறு மைல்கள் புலம்பெயர்ந்து தழைத்து வந்ததற்கு பிராமணர்களின் ஒற்றுமையே காரணம்.

தாங்கள் சொல்வது போல வித்தியாசம் இருந்தாலும் அது துவேசமாக எப்போதுமே ஆனதில்லை. இஸ்லாமியர்களையும் கிருத்துவர்களையும் போல பிராமணர்கள் என்றுமே ஒருவரை ஒருவர் அழிக்கவோ, அடக்கவோ முயன்றதில்லை.

கிருத்துவர்களிடையிலான துவேசம் அவர்களின் பிராமணர்களான பாதிரிகளிடையிலான துவேசமே அன்றி வேறல்ல.

வரலாற்றின் முக்கிய தருணங்களில் பிராமணர்கள் எப்போதுமே ஒன்றாய் இணைந்தே இருந்திருக்கின்றனர். ஒரு சிறுதுளி காலங்களில் நிகழந்த பிராமண மதச்சண்டைகள் உண்மையே, ஆனால், அவை இந்த சமுதாயத்தின் அடிப்படை சுபாவம் அல்ல.

தஞ்சைக்கு ஏகப்பட்ட மராட்டிய பிராமணர்கள் வந்து பல நூறு நூற்றாண்டுகளாக தமிழகத்தில் தழைத்ததாக கல்வெட்டுகள் அறிகின்றன. அவர்கள் வடமர்கள் என்றே முதலில் அழைக்கப்பட்டதும் உண்மை.

இந்தியாவில் தலித்துகளும், பிராமணர்களும் மட்டுமே ஒன்றிணைந்த ஒரு குழுக்களாகும். இந்தியா முழுமை சார்ந்த இந்த இனங்களை பிராந்திய சாதிகளுடன் ஒப்பிடுவது சரியல்ல.

இன்றைய சூழலில் பிராமண ஒற்றுமை என்பது நிதர்சனமாய் எழுச்சி பெற்றிருக்கிறது. புனாவில் போன மாசம் நடந்த பிராமண சமுதாய இந்திய மாநாட்டில் பல்வேறு மாநிலத்திலிருந்து 2 லட்சம் பிராமணர்கள் பங்கேற்றனர். ஷீலா தீட்சித், உத்தவ் தாக்கரே போன்றோர் பங்கேற்ற இந்த மாநாட்டில் காஞ்சி மடம் முதல் காஷ்மீர் மடம் வரை ஒன்றிணைத்து ஆசி வழங்கி இருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையிலும்கூட எல்லா பிராமண அமைப்புகளும் இப்போது ஒன்றிணைத்து பனியாற்றுவதில் தயங்குவதே இல்லை.

மாயாவதி கட்சியின் பிரசாரம் வெற்றி பெறுமோ என்னவோ, ஆனால், இந்த ஒருங்கிணைப்பில் இன்னும் வேகம் கூட்டிவிட்டது. தமிழகத்தில் முன்பெல்லாம் நினைத்துக்கூட பார்க்க இயலாமல் இருந்த பிராமண அடையாளத்தை இன்று சில அரசியல்வாதிகள் தயங்காமல் காட்டுவது பிராமணர்களின் ஒன்றிணைப்பால் விளைந்தது. இந்த ஒருங்கிணைப்பு அரசியல் எதிர்ப்பாகவோ, எதிர்மறையாகவோ இல்லாததால் இது அச்சுறுத்தலாக இல்லை. அவ்வளவுதான்.

திராவிட கட்சிகளின் பிராமண துவேசம் இன்றைய தேதியில் அவர்களை பிற இந்தியர்களிடம் ஒரு தலிபான்கள் போல சித்தரித்துள்ளது. ஈழத்தமிழர்கள் குறித்த நியாயமான குறிக்கோள்கள் கூட பிற இந்தியர்களால் சரியாக கவனிக்கப்படாததற்கு இந்த பிம்பமே முக்கிய காரணம். கடந்த இருபது முப்பது ஆண்டுகளாக தமிழகர்கள் இந்திய மைய கருத்தாக்கத்தில் தனிமைப்பட்டு ஒரு கார்ட்டூனாய் உருவகப்படுத்துள்ள கொடுமை திராவிட அரசியல் விதைத்தது. கலைஞர் அவர்கள் பிற மாநிலங்களில் எவ்வாறு கருதப்படுகிறார் என்பது அவரின் வடக்கு மந்திரிகள் அறிவார்கள்.

அப்பட்டமான பிராமண துவேசம் இன்று அரசியலில் வெற்றிபெறாது – தமிழகத்தைத் தவிர. தமிழகத்திலும் அது கடைசி காலில் நின்றுகொண்டிருக்கிறது.

தமிழக வெறுப்பு அரசியலால் பிராமணர்கள் முதலில் பாதிக்கபட்டுள்ளது போலத்தோன்றினாலும், கடைசியில் பாதிக்கப்பட்டது தமிழகம் முழுமையுமே. ஒரு விதத்தில் பிராமணர்கள் முதலில் அவர்கள் மேற்கொண்ட எதிர்போராட்டங்களை கைவிட்டு பிற யதாரத்தமான வாழ்க்கைகளில் நகரத்தொடங்கியது இந்தப்போராட்டத்தின் வெற்றி அல்ல, மாறாக தமிழகத்தின் தேக்க நிலைக்கு சான்று.

நான் பார்த்தவரை, தமிழகத்தின் கடைசி இரண்டு தலைமுறைகள் தற்போதைய பிராமணர்களின் நிதர்சன நிலைகளையும் அடங்கிய நடைத்தைகளையும் கண்டு தொடரும் பிராமணதுவேசத்தை புரிந்துகொள்ள முடியாமல் கைவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுவும் நல்லதற்கே.

தமிழகம் இந்தியாவில் ஒழுங்கு, சமுதாய பழக்கம் ஆகியவற்றில் உயரிய நிலைக்கு அறியப்பட்ட காலம் உண்டு. பிராமண துவேசத்தை கைவிட்டு ஒன்றுபட்ட சமுதாயமாய் இயங்கும் தமிழகத்தின் அந்த நிலையை அடையும் நாள் சீக்கிரம் வரும்.

சொல்மண்டி

Anonymous said...

நன்னா சொன்னீங்கண்ணா

Anonymous said...

// மாலிக்காபூர் தாக்குதல் முதலிய வரலாற்று சோதனைகளில் இனம், இடம் வித்தியாசம் பாராமல் அவர்கள் ஒன்றிணைத்து இயங்கி இந்து மதத்தைக் காத்திருக்கிறார்கள். பல நூறு மைல் இடம் பெயர்ந்து சமுதாயங்கள் மற்ற பிராமணர்களால் அரவணைக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளன.//

சைக்கிள் கேப்-ல புல்டோசர் ஓட்ட வேணாம். பிராமணதுவேசத்தில் தேவையற்றது என்பது சரியே.

ஆனால் அவர்கள் தான் இந்து மதத்தைக் காத்தார்கள் என்பதெல்லாம் சும்மா டுபாக்கூர். மராட்டிய சிவாஜி பிராமணரா ? இல்லை இந்துக் காப்பியங்களில் வருகிற முனிவர்கள் ரிஷிகள் அத்தனை பேரும் பிராமணாரா என்ன. சேக்கிழார், கம்பர் போன்றவர்கள் கூட பிராமணர் கிடையாது.

நல்லவை அனைத்துக்கும் நாங்கள் மட்டும் தான் காரணம் என்று உரிமை கொண்டாடுவோம் என்றால் திராவிடக் குஞ்சுகள் சொல்கிற எல்லாக் குற்றசாட்டையும் ஏற்பீர்களா என்ன ?

அந்தக் காலங்களில் ஜாதிக்கு இப்போதிருந்த குணம், மணம், திடம் & நிறம் கிடையாது. அதானால் பொத்தாம் பொதுவாக நாங்கள் தான் நாங்கள் தான் என சொல்ல வேண்டாம்.
பாரதப் புதல்வன்,

Anonymous said...

சிவாஜி ராஜ்ஜியத்தில் பிராமணர்களின் பங்கும், ராமதாஸர் முதலியவர்களின் பின்புல பலமும் சிறந்தவை. இவை பல்வேறு பிராந்திய, சமுதாய வேறுபாடுகளை மீறி நடந்தவை என்பதே முக்கியம்.

You are travesting History. Brahmins of Maharastra stood against Shivaji. They refused to corornate him as Chakraparti. Because, he was a sudra, not a Kshatriya.

Shivaji brought some Varanasi brahmins to coronote him. His love of Hindu religion came to him from his mother, first which made him to seek a guru in Ramdas.

Ramdas was not a brahmin.

Bhakti movement in Maharastra coincided with the reign of Shivaji saw anti-brahminism in Hindu religion: many lower caste members rose to be saints: Eknath, Tukaram, Ramdas. The one saint who was born into a brahmin family, Gnaneshwar was hated by brahmins. His father was exiled to live in a forest because he violated certain accepted cannons of brhaminism.

The sacred hymns are loaded with cries of the lower castes made against the Brahmins.

Maharastra Brahmins believe in supermacist theory of being pure and glorious than the fellow human beings.

No wonder, it is in Maharastra that the Bhakti movement turned into a movement of lower castes for equality in the religion; and it is here that the great dalit leaders rose Ambedkar, Mahatma Pule and others.

Pl. dont try to change history to show brahmins in a falsey glorious light.

Anonymous said...

நீஙகள் சொல்ல வருவது

1. கிரிக்கெட் விளையாட நமக்கு பரத நாட்டியம் ஆட பயிற்சி பெற்று இருந்தால் உபயோகமாக இருக்கும்.

2. ஆனால் 400 ஆண்டுகள் கூட வயதில்லாத கர்நாடக சங்கீதம் மேல்நாட்டு சங்கீதத்திற்கு இணையானது.

3. பாப்பாத்திகள் ஆட ஆரம்பித்த பிறகு அதிலிருந்த பொது மகளிர் முறை விலகி விடட்டது.

4. தமிழ பேச தெரிந்தால் தமிழர்கள். சமஸ்கிருதம் பேச தெரிந்தால் ... என்ன என்று சொல்ல வேண்டும் ... புரியும்படி விளக்கலாமே

5. அவர்களில் உள்ள 'க' மீதுள்ள துவேசத்தால் (அதாதவது ஹ உச்சரித்த வாயால் க வா எனக் கருதி) அவர்கள் என்பதை அவாள் என மருவிக்கவில்லை. அகம் புறம் போன்ற சொற்களை இனிசியல் வச்சு அ+காரர் = அகத்துக்காரர் ஆகவில்லை.

6. மற்ற சாதிக்காரன் படிப்பதை பார்ப்பனர்கள் தடுத்தால் கூட வீ யை வூ என்றோ, உடலுழைப்புககு மத்தியில் ரகரம் அமைதி பெறும் என்ற அறிவியல்படியோ நடப்பவர்க்ள் அகத்துக்காரர்களை கிண்டல் செய்யக் கூடாது

பின்னூட்டமிட்ட பெரிய மனிதரே

தமிழகம் பார்ப்பன எதிர்ப்பால் தாழ்ந்து போகவில்லை. இந்தியா உங்களை தமிழகத்தில் நாங்கள் கோலோச்ச விட்டால் கூட ஈழத்திற்கு உதவாது, உதவ முடியாது. நீங்கள் ஒற்றுமையானவர்கள்தான் ஆனால் மற்றவர்களுக்கு கல்வியை மறுத்ததன் மூலம் உங்களை அறிவாளிகளாக்கி கொண்டவர்கள். எனவே தலித் உடன் நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது. வட இந்திய முட்டாள் சத்திரியர்கள் உங்களுடையொரு யாகத்தால் சூத்திர சாதியலிருந்து மாற்றப்பட்டவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளாத அடிமைகள். அடிப்படையில் கலைஞரை வெறுப்பவன் நான். ஆனால் இதற்காக வட இந்தியா அவரை மதிக்கவில்லை என்றார் நான் அவரை ஜனநாயக உணர்வுக்காக, அடிமைத்தன எதிர்ப்பிற்காக ஆதரிப்பேன்.

Anonymous said...

மெகா சீரியலில்
துக்ளக் ஆசிரியர் சோ அவர்களோடு உரையாடுபவரின் பெயர் என்ன?

Anonymous said...

விஜய் டீவியில் கோபிநாத் நடத்தும் நீயா நானா தொடர் பார்ப்பதுண்டா?

Anonymous said...

51.25 % 30% வட்டிக்காக தனது வாழ் நாள் சேமிப்பையெல்லாம் தனியார் நிதிநிறுவனகங்களில் போட்டு ஏமாந்தவர் நிலை இன்று?
52.தேக்குமர வளர்ப்புத் திட்டங்களின் இன்றைய நிலை?
53.மக்களின் பேராசை குறைந்துள்ளதா?
54.உங்களின் நெருங்கிய உறவினர்கள்/நண்பர்கள் இந்த லிஸ்டில் உண்டா?(deposited heavy amount in private companies and lost all)
55.இப்போ சென்னையில் பெனிபிட் பண்ட் கம்பெனிகள் நடமாட்டம் உண்டா?

Anonymous said...

56.இலவசம்,மான்யம் யாரால் எப்போது தொடங்கி வைக்கப் பட்டது?
57.இந்த உலகில் அதிசயங்களுக்குள் பேரதிசியாமாய் திகழ்வது எது?
58.தமிழ்நாட்டுக்கு திருப்பூர் போல் ஆந்திராவுக்கு எது?
59.இப்ப்போ நம்ம மில்கள் எல்லாம் ஆந்திராவை நோக்கியாமே?
60.தாராளமயமாக்கலுக்குப் பின் கிராமங்களின் பொருளாதார வளர்ச்சி,நகரம் போலுள்ளதா?

Anonymous said...

61.பிராமணியத்தை எதிர்ப்பவரின் எண்ணிக்கை கணிசமாய் குறைந்துள்ளதா?
62.தமிழ் நாட்டில் உடையாத அரசியல் கட்சி ஏது?
63. பெரிய பொறுமைசாலி, மிகுந்த சகிப்புத்தன்மை இவைகளுடன் வாழும் அரசியல் வாதி யார்?
64.வாழ்ந்து மறைந்த அரசியல்வாதி யார்?
65.வருங்காலத்தில் இவர்கள இருவரையும் மிஞ்சுபவர் யாரும் உளரோ?

Anonymous said...

66.பழைய விவசாய சங்கம்தான் இன்று உதயாமாயுள்ள கொங்கு வேளாளக் கவுண்டர் கட்சியாய் ?
67.புதிய நீதிக்கட்சி-முதலியார்
பாமக-வன்னியர்
கொ,வே.கட்சி-கவுண்டர்
ச.ம.கட்சி-நாடார்
பா.பிளாக்-தேவர்
தாம்பிராஸ்-பிராமணர் கட்சியை நோக்கி(அகில இந்திய அளவில் முயற்சிகள் தொடக்கம்- 5 - 7% இடஒதுக்கீடு கோரியும்)
ஆதிதிராவிடர்-திருமாவளவன் கட்சி
தே.குல.வே-கிருஷ்ணசாமி கட்சி புதிய தமிழகம்

இனி யாரெல்லாம் பாக்கி?

68.விஜயகாந்த் புத்திசாலியா,இலங்கை விசயத்தில்?
69.இலங்கப் பிரச்சனை தமிழக தேர்தல் களத்தில்
பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற உளவுத்துறை அறிக்கை உண்மையா?
உண்மையில் உல்டா ஆகுமா?
70.இந்த விசயத்தில் இயக்குனர் சீமான் அதிக தீவிரம் காட்டுகிறாரே? அமீரின் நிலை?

Anonymous said...

71.ஸ்டாலின் அடுத்த தேர்தல் தயாரிப்பில் இறங்கிவிட்டாரே?முடிவு எப்படி இருக்கும்?
72.தென்பகுதி இந்த தடவை திமுக வசமாகுமா, அழகிரியாரின் கடைக்கண் பார்வையில்?
73.அதிமுக இந்தமுறையும் தோற்றால்?
74.மீண்டும் தூசிதட்டி ஜெ எடுத்துள்ள எம்ஜிஆர் பார்முலா எடுபடுமா?
75.கறுப்பு எம்ஜியார் திமுகவிடம் கூட்டணி சேர்ந்தால்,மீண்டும் எம்ஜிஆர் ரசிகர் ஜெ பக்கம் சாய்வார்களா?

Anonymous said...

76.அரசியலில் சுய விளப்பரப் பிரியர் ஜெவை ,பல வகைகளில் உ.பி மாயாவதி மிஞ்சுவாரா?
77.சரத் பவாரை பிரதமராக்குவோம் எனும் முலயாமின் திடீர் கோஷம்?
78.வயதில் 75,85 ஐ தாண்டியவர்கள், உடல் நலக்குறைவு உள்ளவர்கள் ஒதுங்கி இளையவர்களுக்கு (மத்தியில் பிரனாப் அல்லது ராகுல்,தமிழ் நாட்டில்
ஸ்டாலின் அல்லது அழகிரி)வழிவிடவே மாட்டார்களா?
79.பொதுத்துறை நிறுவனங்களில் ஓய்வுபெறும் வயது 62 ஆகப்போகிறதாமே?இது சரியா?
80.ஓபமா நின்னு ஆடுவார் போலிருக்கே?

Anonymous said...

81.தமிழக அரசுத்துறையில் லஞ்சம் பெற்று கொழிப்பதில் யார் நம்பர் ஒன்?
82.மத்திய அரசில் இந்த பரிசை தட்டிச் செல்வது யார்?
83.தமிழ்க அமைச்சரில் இந்த ஊழல் குற்ற்ச்சாட்டுக்கு தப்பியது யார்?
84.மத்திய அரசில் காந்தி கொள்கையுடன்( அன்றைய கக்கன்ஜி போல்) யாராவது?
85.லஞ்சம்,லாவண்யம் இவற்றின் இன்றய விஷ்வரூப நிலையை ஒப்பிட்டு சொலவதென்றால் எதோடு ஒப்பிடலாம்?

Anonymous said...

86.இலங்கையில் இன்றைய உண்மையான நிலவரம்?
87.பிரபாகரனின் பையன்தான் போரை வழிநடத்திச் செல்வது எதைக்காடுகிறது?
88.பிரபாகரன் தப்பிவிட்டாரா? இல்லை அடுத்த தாகுதலுக்கு தயராகுகிறாரா?
89.புலி பதுங்குவது முழுப்பலத்துடன் பாயவா?
90.ஒரு வேளை இலங்கைப் பிரச்சனையின் போக்கு அங்கு வாழும் தமிழருக்கு எதிராய் போனால் அதனுடய தாக்கம் இங்கு எப்படியிருக்கும்?

Anonymous said...

91.வறுமையில் வாடும் விவசாயிகள் பயிரிடுவதை நிறுத்திவிட்டால்?
92.அரசின் உதவிகள் கொழுத்த நிலச் சுவான்தார்களால் சுவாக செய்யபட்டு விடுகிறதே?(விவசாயக் கடன் தள்ளுபடி)
93.இலவசமின்சாரத்தை பிறருக்கு விற்பனை செய்யும் செயல் மட்டுபடுத்தப் பட்டுள்ளதா?அரசின் கண்காணிப்பு இதில் சரியில்லையே?
94.பத்திரிக்கை ஆசிரியர்,பள்ளி ஆசிரியர் ஒப்பிடுக?
95. ஒரு லிட்டர் பாலுக்கு 20 ரூபாய் கேட்பது நியாயம் தனே?( ஒரு லிட்டர் மினரல் வாட்டர் விலையை ஒப்பிடுக)

Anonymous said...

96.ரஜினியின் அரசியல் பிரவேசம் கலைஞருக்கு பின்னால் நடக்க வாய்ப்புள்ளதா?( அவரது ஜாதகம் வேறு சாதகமாய் உள்ளதாம்)
97.பாதாளச் சாக்கடை திட்டம் பகல் கொள்ளைதிட்டமாமே ( சென்னையில் வீட்டு வரியின் சமமான பணம்(amopunt equal to house tax as maintenace charge for u/g mtce) அதற்காக கட்டுவது உண்மையா)
98.தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி வருமா?(மீண்டும் திமுக பிளவு பட்டால்)
99.செஞ்சி,எல்ஜி -ஆப்பை புடுங்கிய குரங்குகளின் நிலையில் முன்னேற்றம் உண்டா?
100.சமீபத்தில் தமிழக அரசியலில் பிள்ளையையும் கிள்ளிவிட்டு,தொட்டிலையும் ஆட்டியது யாரெல்லாம்?

வஜ்ரா said...

தொடரைவிட சோ சொல்லுவதைக் கேட்பதுதான் சுவாரஸ்யமாக இருக்கிறது.

R.DEVARAJAN said...

’ப்ராம்மணாநாம் அநேகத்வம்’ என்பது அறிவுசார் விவாதங்களின்
அடிப்படையில் சரிதான் என்றாலும் உள்ளத்தளவில் அவ்வாறு
இருப்பதாகத் தெரியவில்லை.
அப்பைய தீக்ஷிதரவர்கள் எல்லா ஸித்தாந்தத்திற்கும்நூல் எழுதிக் கொடுத்துள்ளார்.
‘ஸர்வ தர்சந ஸங்க்ரஹம்’ எல்லாக் கோட்பாடுகளையும் சமத்துவத்தோடு எடுத்துரைக்கிறது.
ஸ்வாமி தேசிகன் தாம் விமர்சிக்கும் எதிர்த்தரப்பை தாமே பலப்படுத்திக் கொடுத்துவிட்டுப் பின்னர் அதை அலசுவார்.உள்ளபடி உய்த்துணர்வோர் மிகச் சிலரே.
ஆங்கில ஆராய்ச்சியாளரின் பிடியிலிருந்து நாம்முற்றிலும் விடுபடவில்லை.

தேவ்

Anonymous said...

பாரதப்புதல்வன்,

/// ஆனால் அவர்கள் தான் இந்து மதத்தைக் காத்தார்கள் என்பதெல்லாம் சும்மா டுபாக்கூர். ///

பிராமணர்கள் தான் இந்து மதத்தைக் காத்தார்கள் என்று நான் சொல்லவில்லை. நீங்கள் சொல்வது போல் நல்லது எல்லாவற்றிற்கும் பிராமணர்கள் "தான்" காரணம் என்று நான் சொல்லவில்லை. இது நீங்கள் திரிப்பது.

பிராமணர்களின் பங்கு இந்திய வரலாற்றில் மகத்தானது. அதற்கு அவர்கள் கர்வப்படலாம் என்பதே என் கருத்து.

/// மராட்டிய சிவாஜி பிராமணரா ? ///

இல்லை. அவர் பிராமணர் என்றும் நான் சொல்லவில்லை. சிவாஜி ராஜ்ஜியத்தில் பிராமணர்கள் பங்கு என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

அதற்கு மராட்டிய பிராமணர்கள் சிலர் அவரை எதிர்த்தார்கள் என்றும் வாராணசி பிராமணர்கள்தான் ஆதரவளித்தார்கள் என்றும் ஒரு அபத்தமான பின்னூட்டம் வருகிறது. அதனால் வாராணசி பிராமணர்கள் பங்கு என்று சொல்லட்டுமா.

சாத்திரம் சடங்கில் ஆழந்த பிராமணர்கள் பலரை எதிர்த்திருக்கிறார்கள். அப்பபடி எதிர்த்தவர்களையும் பலப்பல பிராமணர்கள் ஆதரித்துள்ளார்கள்.

ரிஷிகளும், தெய்வங்களும் பிராமணர்கள் அல்ல. பிராமணர்கள் சாதிவெறியர்கள் அல்ல என்பதும் இந்துமதம் என்பது பிராமணர்களால் திரிக்கப்பட்டடது அல்ல என்பது இதனால் நிரூபணம் ஆகிறது.

பக்தி இயக்கம் பிராமணர்களுக்கு எதிரானது என்பது கேலிக்கூத்தானது. பக்தி இயக்கத்தில் தோய்ந்த அனைவரும் - நீங்கள் சொன்னவர்கள் உட்டபட - பிராமணர்களை தாங்கள் வணங்கும் தெய்வத்திற்கு சமமாய்தான் போற்றியிருக்கிறார்கள்.

மேலும், பக்தி இயக்கம் என்பது மராட்டிய மாநிலத்தில் மட்டும் நிகழ்ந்தது அல்ல.

வரலாறு புரிந்து, என் கருத்துக்களை நிதானமாக விருப்பு வெறுப்பின்றி அறிந்து கருத்து தெரிவித்தால் மனநிறைவாய் இருக்கும்.

சொல்மண்டி

Anonymous said...

101.பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகம்,நல் ஒழுக்கம் கலாச்சாரம் இவைகளின் இன்றைய உண்மையான நிலை?
102. as on date: அரசியல்/அலுவலக/வாணிப உலகில் நீல மலைத் திருடன் யார்,கொல்லிமலை கொள்ளைக்காரன் யார்,
103.பொருளாதாரத்தில் இந்தியா சீனாவை மிஞ்சுமா?இல்லை மக்கள் பெருக்கத்தில்?
104.பாரதியார் இப்போது இருந்தால் என்ன பாடுவார்?
105.கேரளா சட்ட மன்றம்-தமிழக சட்ட மன்றம் தற்போதைய சூழ்நிலையில் ஒப்பிடுக?
106.விஜயன் -அச்சுதானந்தன் மோதல் சின்னத்திரை சீரியல்களையும் மிஞ்சுமா?
107.தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனெக்கொரு குணமுண்டு சொன்னதில் இப்போது எதைச் சேர்க்கலாம்?
108.முக்கிய தமிழக அரசியல் கட்சிகளின் இன்றய நிலைபற்றி விமர்சனம் தனித்தனியாக ஒரு வரியில் சொல்ல முடியுமா?
109.உலகில் கம்யூனீசம்- இந்தியாவில் பொதுயுடமைதத்துவம் என்ன ஒற்றுமை-வேறுபாடு?
110.மீண்டும் தேர்தல் கமிஷன் ஆளும் கட்சியின் கைப்பாவை ஆகிவிடுமா?
111.இந்த வருடம் தண்ணிர்ப் பிரச்சனை
தமிழகத்தை ஒரு வழி பண்ணிவிடும் போலிருக்கே?
112.தமிழ்க மாணவர்கள் புத்திசாலி என்பதை மீண்டும் நிறுபித்துள்ளனரா?(வேலை நிறுத்தம் நீண்டு விடாமல் செய்ததின் அடிப்படையில்)
113.மக்கள் தொலை காட்சி பார்ப்பீர்களா?இலங்கையில் அதற்கு தடையாமே?
114.குடிகாரன் பேச்ச்சு-அரசியல் வாதியின் பேச்சு ஒப்பிடுக?
115.கள்ள ஓட்டை தடுக்க என்னவொல்லாம் கமிஷன் கெடுபிடி செய்தாலும்
திருமங்கல வீரர்கள் கெலித்துவிடுவது எப்படி சாத்யமாகிறது?
116.2010ல் பொருளாதார சரிவு சரி ஆகிவிடும் என்பதை ?
117.பதவி ஆசை இல்லாத ஒருவரின் பேர்?( வாழும் மனிதர்களில்)
118.அரசியல் அம்மா-ஆன்மீகத்தில் அம்மா-யோகக்( அன்பை பரவலாக்குவதில் )கலையில் அம்மா-
இதில் யார் சூப்பர்?
119.அரசியல்/ஆன்மீகம்/சாதிக் கட்சி மாநாடு இவற்றில் கட் அவுட் கலாச்சாரம் போய் ப்ளக்ஸ் பேனர் கலாசாரம் -அடுத்து வருவது?
120.விதி வலியது




விதியை மதியால் வெல்லலாம்

உங்கள் ஓட்டு யாருக்கு?என்ன காரணம்?
சான்றுகள் உண்டா?உங்களின் அனுபவம்?

Anonymous said...

அன்புள்ள சொல் வேர்ஹவுஸ்,
//ஒற்றுமையானவர்கள்தான் ஆனால் மற்றவர்களுக்கு கல்வியை மறுத்ததன் மூலம் உங்களை அறிவாளிகளாக்கி கொண்டவர்கள்.//
இதுக்கு எதுனா பதில் வச்சுருக்கீங்களா ?

மேலைநாடுகளில் கல்வி எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தது. ஆனால் நம் நாட்டில் அது சமுதாயப் பிரிவுகளால் ஒரு சிலருக்கே என்று ஆனாது.
பாரதத்தின் இறக்கத்துக்கு காரணமாக ஒரு நாடறிந்த வீரத் துறவி சொன்னது இது.

பாரதத்தின் எழுச்சிக்கும்/வீழ்ச்சிக்கும் பல்வேறு மக்களும் காரணம் என்று உணர்பவர்கள் அந்தச் சிலர் பிராமணர் என்று அடையாளம் காணமாட்டார்கள்.

ஆனால் உங்களைப் போன்றவர்கள் தான் பிராமணர்கள் மட்டுமே காரணம் என்று அடம் பிடிப்பவர்களின் வாதத்துக்கு வலுச் சேர்ப்பவர்கள்.

ஏண்ணா, முரசொலி விரும்பிப் படிப்பீங்களா ? சொல்றதை எல்லாம் சொல்லிட்டு நான் அப்படி சொல்லலை என்று அழுவாச்சி காட்டுறீங்களே !!! மஞ்சள் கவிதைகளை அதிகம் படிக்க வேணாம்.
பாரதப் புதல்வன்.

Anonymous said...

பாரதப்புதல்வன்,

நான் நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு மறுத்தும் அது பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லக்காணோம். நீங்கள் சொன்னவை எல்லாம் தவறானவை என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டதாகவே ஆகிறது.

பின்னர், அதை விட்டு நீங்கள் வேறு ஒரு புதிய கருத்தை வைத்து இதுக்கு பதில் வெச்சுறுக்கீங்களா என்று கேட்கிறீர்கள்? தங்களின் விவாதத்தில் நீங்கள் சொன்ன தவறான கருத்துக்களை மறைக்க நீங்கள் வேறு ஒன்றை பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள் என்றுதான் தோன்றுகிறது.

/// //ஒற்றுமையானவர்கள்தான் ஆனால் மற்றவர்களுக்கு கல்வியை மறுத்ததன் மூலம் உங்களை அறிவாளிகளாக்கி கொண்டவர்கள்.//
இதுக்கு எதுனா பதில் வச்சுருக்கீங்களா ? ///

மிகவும் தவறான கருத்து. தங்களுக்கு வரலாற்று ஆதாரங்கள் தெரியவில்லை என்று நினைக்கிறேன். திராவிட மற்றும் பல இந்து விரோத சக்திகளின் பொய் பிரசாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றும் சந்தேகமாய் இருக்கிறது.

எக்காலத்திலும் பிராமணர்கள் கல்வியை யாருக்கும் மறுத்ததில்லை. கல்வி என்பது வேதம் படிப்பது என்பது தப்பு. எல்லா வியாபார தொழில்நுட்பங்களும், அரசியல் கல்விகளும் பிராமணர்கள் படிக்கவே கூடாது என்றும் சட்டம் போட்டார்கள். வேதம் அறிவது கூட எல்லோருக்கும் பொதுவாய் இருந்தது. இடையர் வகுப்பில் பிறந்த கிருஷ்ணர் கூட வேதம் படித்ததை புராணங்கள் அழகாக பேசுகின்றன. நீங்கள் புராண காலத்தை எடுத்துக்கொண்டால் இம்மாதிரி கல்வி எல்லோருக்கும் பொதுவாகவே இருந்தது. சொல்லப்போனால், பிராமணர்கள் தாம் வேதத்தை தவிர வேறு எதுவும் படிக்கக்கூடாது என்று விதி இருந்திருக்கிறது. மற்றவர்களுக்கு இல்லை.

சரி, சமீபத்திய வரலாற்றைப் பார்த்தாலும், கல்வி சாலைகளில் இருந்தவர்களில் பெரும்பான்மையோர் பிராமணர்கள் அல்லாதவர்களே என்று ஆங்கிலேயர்களின் குறிப்பேடுகள் சொல்கின்றன. பிராமணர்களும், தலித்துகளும் கல்வி நிறுவனங்களில் மிகவும் குறைவாகவே இருந்ததாக 1810 வருட இந்தியாவின் முதல் சென்சஸ் - சாதி வாரியாக எடுக்கப்பட்ட முதல் சென்சஸ் - சொல்கிறது. இன்றைய ஆதிக்க சாதிகள் தாம் கல்விகளில் பிரதானமாய் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்பதே உண்மை. முகலாயர் காலத்திலும் பிராமணர்கள் கல்வி சாலைகளில் நிர்வாகமோ, படிப்போ மிக்க் குறைவு. மேலும், வரலாற்று ஆதாரம் வேண்டுமானால் அருண் ஷோரி அவர்கள் எழுதிய falling backwards புத்தகத்தைப் படியுங்கள்.

சொல்மண்டி

புராண கால

Anonymous said...

Is thete any video download available in web for this serial?

-Dhana

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது