என் வீட்டம்மாவின் பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு திடீரென முடிவு செய்து, ஸ்ரீரங்கம், திருமயிச்சூர், திருவிண்ணகரம் ஆகிய இடங்களுக்கு போவதற்காக எனது காரில் எல்லோரும் சென்றோம். 16-ஆம் தேதி இரவு ஜெயா டி.வி.யில் எட்டு மணிக்கு வரும் இத்தொடர், இரவு 9 மணிக்கு சன் டிவியில் வரும் கோலங்கள் தொடர் ஆகிய இரண்டையுமே மிஸ் செய்யக் கூடாது என உறுதியாக இருந்து மாலை 6.50-க்கு ஹோட்டல் அறையை அடைந்து டி.வி.ஐ ஆன் செய்தவுடன் நிம்மதியாக இருந்தது. இப்போது எங்கே பிராமணன் தொடர் 16-ஆம் தேதிக்கான எபிசோட் பற்றி.
இதற்கு முந்தைய பகுதியில் நான் ஊகித்த ஒரு விஷயம் சரி என்பதை காண முடிந்தது. அதில் நான் இவ்வாறு எழுதியிருந்தேன்.
“பாகவதரின் பேரனை பார்க்க அவன் தாய் தந்தையர் முன்னறிவிப்பின்றி ஒரு ஞாயிறு அன்று வந்து பார்த்தால் அவன் ஹாஸ்டலில் இல்லை. அவன் ஒவ்வொரு ஞாயிறன்றும் ஹாஸ்டலை விட்டு சென்று மாலை லேட்டாகத்தான் வருவான் என அவன் நண்பன் கூறுகிறான். பாகவதரின் மகன் தனது தாய் தந்தையை காஞ்சீபுரம் சென்று பார்க்கும் விருப்பத்தைத் தெரிவிக்க அவன் மனைவி அதற்கு தடா போடுகிறாள். தாங்கள் வந்தது தம் பையனைப் பார்க்க மட்டுமே தனது மாமனார் மாமியாரை அல்ல என அழுத்தம் திருத்தமாக கூறுகிறாள். பையன் எங்கே போயிருப்பானென்பது தெரிந்தால் அந்த அம்மையார் குதிக்கப் போவதை வரும் திங்களன்றுக்கான பகுதியில் பார்க்கலாம். ஆனால் அதை யாருமே சுலபமாக ஊகித்து விட முடியும் என்று மட்டும் சொல்லி வைக்கிறேன். இந்தக் காட்சி நாவலில் வராவிட்டாலும் என்னால் ஊகிக்க முடிகிறது”.
ஆம், பிள்ளையாண்டான் தனது தாத்தா பாட்டியை பார்க்க அவர்கள் ஊருக்கு சென்றிருந்தான். அங்கு வந்து அவன் தாயார் ருத்ர தாண்டவமே ஆடுகிறார். பொறுமையாக இருக்கும் பாகவதருக்கே சற்று கோபம் வந்து பேரன் நல்ல சாப்பாட்டை பெறுவதில் தனக்கு இருக்கும் அக்கறையை தெளிவுபட கூறி விடுகிறார். சாதாரண பட்டை சாதத்துக்கா இந்த கூத்து என அன்னை வியப்பை தெரிவிக்க, சோ அவர்களும் அவர் நண்பரும் திரையில் வருகின்றனர்.
அதானே, ஆஃப்டர் ஆல் பட்டை சாதத்துக்கா இந்த கூத்து என நண்பர் கேள்வி கேட்க, சோ அவருக்கு அன்னத்தின் மகிமை பற்றி கூற ஆரம்பிக்கிறார். பட்டை சாதம் என்பது இறைவனின் பிரசாதம் எனக் கூறிவிட்டு சோறு இல்லாமல் யாரால் வாழ முடியும் என்ற கேள்வி போடுகிறார். அன்னத்தை இகழலாகாது என பெரியவர்கள் கூறுகிறார்கள். சோறு இல்லாமல் உன்ணாவிரதம் இருப்பவர்கள் பலரும் காலை மூக்கு பிடிக்க சாப்பிட்டு விட்டு மாலை வரைதான் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அல்லது முன்னமேயே பசி ஏற்பட்டு விட்டால் உண்ணாவிரதத்தையும் முடித்து கொண்டு விடுகிறார்கள்.
இது சம்பந்தமாக பகவத் கீதையில் ஒரு சுலோகமும் சோ சொன்னார். அவருக்கு பகவத் கீதை முழுக்கவும் தெரியுமா என நண்பர் வியக்க, ஏதோ சில சுலோகங்கள் அங்கங்கே தெரியும் என்றும், இந்த தேதியில் இந்த விவாதத்தை மனதில் வைத்து தயார் செய்து வந்ததுதான் சம்பந்தப்பட்ட சுலோகம் என்ற விஷயத்தையும் ராபணா என போட்டு உடைத்து விடுகிறார்.
பிறகு ஒரு கதையும் கூறுகிறார். ராஜா விரும்பி வேண்டிக்கொண்டபடியால் ராஜகுரு அவன் வீட்டில் விருந்துண்டார் என்றும், அவ்வாறு விருந்துண்டு செல்லும் சமயத்தில் திடீரென துராசை ஏற்பட்டு முத்துமாலை ஒன்றைக் களவாடிச் சென்று விடுகிறார். பிறகு அடுத்த நாள் அவர் சாப்பிடதெல்லாம் வாந்தி பேதியாக வெளியேற, புத்திவந்து முத்து மாலையை திரும்பத் தருகிறார். அவர் வேறு வேலையாள் ஒருவரை காப்பாற்றவே அம்மாதிரி முயற்சி செய்கிறார் என சந்தேகப்பட்ட அரசனை அவர் மிகுந்த சிரமத்துடன் கன்வின்ஸ் செய்கிறார். பிறகு விசாரித்ததில் அந்த அரிசி ஒரு கொள்ளைக்காரனிடமிருந்து கைப்பற்றப்பட்டது என்பது தெரிய வருகிறது.
இப்போது சோவின் நண்பருக்கு ஒரு சந்தேகம். அப்படியானால் யார் கொடுத்தாலும் தீர விசாரித்துத்தான் சாப்பிட வேண்டுமா? கொள்ளைக்கரனிடமிருந்து கைப்பற்ற அரிசி தீய எண்ணத்தை உருவாக்கும் என ஏன் தீர்மானிக்க வேண்டும்? (நாய் விற்றக் காசு குரைக்குமா என்று கேட்கவில்லைதான்).
நோய் வாய்ப்பட்டடவன் உணவை வினியோகம் செய்ய விட முடியுமா என்ற எதிர்க் கேள்வியை சோ எழுப்ப, அவர் நல்லாவே கதை விடுகிறார் என நண்பர் அலுத்து கொள்ள, நல்லது சொன்னா கதை விடுவதா என சோ அங்கலாய்க்க, முதல் விளம்பர இடைவேளை. இப்போது திடீரென ஆற்க்காட்டார் உபயத்தில் பவர் கட். ஹோட்டலில் என்னவோ ஜெனெரேட்டர் இருந்தது. ஆனால் கேபிள் டிவி அறைக்கு இணைப்பு இல்லாமல் போனதில், மிகுதி சீரியலை பார்க்க இயலவில்லை. யாரேனும் பார்த்திருந்தால் பின்னூட்டத்தில் கூறுங்களேன். உங்கள் உபயத்தில் போட்டு கொள்கிறேன்.
எதிர்பாராத இடத்திலிருந்து உதவி வந்தது, பின்னூட்ட ரூபத்தில். முதலில் பின்னூட்டம்.
“Dondu Sir,
You are doing a great job. I found a link to see this TV Serial, telecasted from 16t Feb. onwards. http://www.blog.isaitamil.net/?s=enge+brahman
Have a nice day,
Krishnan”
மிக்க நன்றி கிருஷ்ணன் அவர்களே. நிஜமாகவே நைஸ் டே தான் இன்று எனக்கு. உங்கள் உபயத்தில் தவறவிட்டதை பார்க்க முடிந்தது.
அதை தடித்த சாய்வெழுத்துகளில் கீழே சேர்க்கிறேன்.
விட்டுப்போன பகுதி ஆரம்பம் ஆகிறது.
விளம்பர இடைவேளை முடிந்ததும் மறுபடியும் சீன் பாகவதரின் வீட்டுக்கு செல்கிறது. அவரது மாட்டுப் பெண் அவரை எடுத்தெறிந்து பேசுகிறாள். பாகவதர் சமாதானமாக போக நினைத்தாலும் சண்டைக் கோழி மாதிரி சீறுகிறாள். அவள் கணவன் பாகவதரிடம் அழாக்குறையாக மன்னிப்பு கேட்கிறான். அப்பாவுக்கு உன்னால் ரத்த அழுத்தம் ஏறுது என்று அவளிடம் மன்னாட, அவரை அதுக்கான மாத்திரை சாப்பிடச் சொல்லும்படி அவள் எடுத்தெறிந்து பேசுகிறாள். அவன் தம்பிக்கும் மனைவிக்கும் நடுவிலும் வாக்குவாதம். இடிந்து போயிருக்கும் தன் மனைவி ஜானகியை பாகவதர் தேற்றுகிறார். எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள், லோகோ பின்ன ருசி என்கிறார்.
அடுத்த சீனில் நாதன் வீட்டுக்கு அரசியல்வாதி வையாபுரி தன் உதவியாளர் சிங்காரத்துடன் வருகிறார். அவரை தான் க்ளப் எலெக்ஷனில் ஜெயிக்க வைத்ததால், அவரிடமிருந்து ஒரு லம்ப்பாக பணம் எதிர்பார்க்கிறார். நாதனோ அவருடன் சாதாரணமாக பேசி நன்றி கூறிவிட்டு அப்பால் செல்கிறார். ஏமாற்றத்துடன் அவர் வீடு திரும்ப, அவர் அங்கு வருவதற்கு முன்னமேயே நாதன் அனுப்பிய பண சூட்கேஸ் வந்து சேருகிறது.
கடைசி சீனில் நாதன் வீட்டுக்கு அவர் உறவினர் நீலக்ண்டன், மனைவி மகள் சகிதம் வருகிறார். பாகவதர் அச்சமயம் நாதனுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். நீலகண்டன் அவரை கிண்டலாக அவரது சௌகரியங்கள் பற்றி கேட்க, அவரும் எல்லாம் ஈஸ்வரகிருபை என கூறிவிட, இல்லை நாதன் கிருபை என அவரை நீலகண்டன் திருத்துகிறார். நாதன் தனக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்கு தந்ததே ஈஸ்வரனே என பாகவதர் சிக்ஸர் அடிக்க, வெறுப்பேற்றப்பட்ட கோபத்தில், தான் அவர் கையிலிருந்த காப்பியை தட்டிவிட்டால் அதுவும் ஈஸ்வர கிருபையா என கேட்டு யார்க்கர் போட, அப்படி நடந்தால் சனீஸ்வரன் நீலகண்டன் ரூபத்தில் வந்து உபத்திரவம் கொடுத்து சோதிக்கிறான் என தான் புரிந்து கொள்வதாக கூறி லேட் கட் மூலம் பவுண்டரிக்கு பந்தை ஒதுக்குகிறார் பாகவதர். நாதன் கலகலவென சிரிக்க, நீலகண்டன் முறைக்கிறார்.
விட்டுப்போன பகுதி முடிந்தது.
17.02.2009 காலை குடந்தையை விட்டு புறப்பட்டோம். டிரைவருக்கு ஒரே ஒரு இன்ஸ்ட்ரக்ஷன் மட்டும் தந்தேன். மாலை ஆறு மணிக்குள் சென்னையில் இருக்க வேண்டும். டிரைவரும் வண்டியை விரட்டி கொண்டு வந்ததில் மேகலா சீரியல் பார்க்க சரியான நேரத்துக்கு சென்னையை அடைய முடிந்தது
17.02.2009 மாலை 12-வது பகுதி காட்டப்பட்டது.
இதில் நாதனின் உறவினர் நீலகண்டன், பாகவதரை கிண்டல் செய்யும் முறையில் கேள்விகள் கேட்கிறார். அவரது கதாகாலட்சேப பிசினஸ் எப்படி நடக்கிறது என்று கேட்பதை நாதனாலேயே ஜீரணிக்க இயலவில்லை. அப்போது அங்கு வரும் அசோக் பாகவதர் பதில் தரும் முன்னரே பிசினஸ் என்றால், டாஸ்க் மற்றும் மிஷன் என்ற பொருளும் வருமெனக் கூறி, பாகவதரின் மிஷன் பக்தியை பரப்புவதே என்ன்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறான். எல்லாம் உடான்ஸ் என்ற ஒரேயடியாக நிராகரிக்கும் தோரணையில் நீலகண்டன் கூற, ராமாயணம், பாரதம் எல்லாம் கேட்பவர்கள் மூடர்களா என அசோக் கேட்க, ஆமாம் என்கிறார் நீலகண்டன்.
சோவும் நண்பரும் மீண்டும் திரையில். நீலகண்டன் கூறியதை ஆமோதிக்கும் நண்பர் ராமாயணம் மகாபாரதம் ஆகிய இரண்டுமே பார்ப்பனர்களை தூக்கி பிடிப்பனவையே என்று கூறுகிறார்.
அவுரங்கசீப் இருந்ததை நேரில் பார்க்காத நிலையில் இருப்பவர்கள் அது புத்தகத்தில் இருக்கிறது என்று சொல்லி ஏற்று கொள்கிறார்கள். அதே போலத்தானே ராமாயணமும் மகாபாரதமும் புத்தகத்தில் உள்ளன என கேட்கிறார் சோ. உங்க தாத்தாவுக்கு தாத்தா நல்லவரா என சோ கேட்க, ஆமாம் என நண்பர் கூறி அவர் தாத்தா கூறியதை ஆதாரமாகக் காட்டுகிறார்.
பிறகு பார்ப்பனர்கள் விஷயத்துக்கு வருகிறார் சோ. பாரதம் எழுதிய வியாசர் செம்படவ பெண்ணுக்கு பிறந்தவர், அவர் புகழ்வது கிருஷ்ணர் என்னும் யாதவரை. வால்மீகியோ வேடர் குலத்தில் பிறந்தவர். அவர் புகழ்வது ராமர் என்னும் ஷத்திரியரை. இங்கு பார்ப்பனர்கள் எங்கிருந்து வந்தனர்? அவ்வாறு பார்ப்பனர்களை புகழ வேண்டும் என்றால் ஒரு பார்ப்பனரை அரசராக சித்தரித்து அவர் எப்படியெல்லாம் நன்றாக நாட்டையாண்டார் என எழுதியிருக்கலாமே. சொல்லப்போனால் ராமாயணத்தில் பக்கா நாத்திகராக ஜாபாலி என்னும் பார்ப்பனர் முன்னிறுத்தப்படுகிறார்.
மேலும் ஒரு கதை என்று எழுதும்போது பொதுவாக கதாநாயகன் எல்லாவித கல்யாண குணங்களும் பொருந்தினவாக இருப்பான். வில்லனோ எல்லாவித கீழ்த்தரமான குணங்களின் உருவகமாக இருப்பான். ஆனால் வால்மீகியோ வியாசரோ அவ்வாறு செய்யவில்லை. கிருஷ்ணரை துரியன் மற்றும் சிசுபாலன் வாயிலாக தூற்றும்போது வியாசர் கடுமையான சொற்களை பிரயோகம் செய்கிறார். ஏனெனில் அவர் உண்மையை எழுதுபவர். யாருக்கும் அஞ்ச வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கில்லை. துரியன் கிருஷ்ணரை திட்டி முடிந்ததும் தேவர்கள் அவன் மேல் பூமாரி மழை பொழிவதாக காட்டியிருப்பது வியாசரின் நியாய உணர்ச்சிக்கு ஒரு பெரிய உதாரணமோ.
ராமாயணத்தில் ராவணன் எப்படிப்பட்ட பெருமை வாய்ந்தவன். ராமரே அவனைப் புகழ்வதாக வால்மீகி ஒரு காட்சியில் கூறுகிறார். அவன் ஒரு தீவிர சிவபக்தன். செல்லுமிடமெல்லாம் சிவலிங்கத்தை எடுத்து சென்று, சந்தர்ப்பம் அமையும்போதெல்லாம் பூசை செய்பவன். பகுத்தறிவுவாதிகள் சிலை மற்றும் சமாதிகளை மட்டுமே வணங்குபவர்கள். ராவணனோ சிவ பெருமானை வணங்குபவன்.
சேதுவைப் போல ஒரு கட்டுமானம் உலகில் எங்குமே இல்லை. அதன் பெருமையை ராமரே கூறுகிறார், அதை பார்ப்பவர்களுக்கு எல்லா புண்ணியமும் வரும் என்று. அதே போல துவாரகையில் கடலுக்கடியிலிருந்து கிடைக்கும் பல ஆதாரங்கள் துவாரகை அங்கு இருந்ததைக் காட்டுகின்றன. எல்லாமே facts. அவற்றையெல்லாம் வெறுமனே உடான்ஸ் என கூறும் தனது நண்பரை பார்த்து தான் பரிதாபப்படுவதாக சோ கூறுகிறார்.
இப்போது காட்சி அசோக் நீலகண்டன் விவாதத்துக்கு போகிறது. இப்போது நீலகண்டன் பாகவதரிடம் விசுவாமித்திரர் பலா அதிபலா என்னும் மந்திரத்தை ராமருக்கு சொல்லி கொடுத்து அவருக்கு, பசி, தூக்கம் ஆகியவை வராமல் இருக்கச் செய்த விஷயம் பற்றி கேட்கிறார். தனக்கு அந்த மந்திரத்தை சொலமுடியுமா என்றும் அவரை சேலஞ்ச் செய்கிறார்.
மீண்டும் சோ மற்றும் நண்பர். “ஆமா சார் எனக்கும் அதை சொல்லுங்களேன்” என நண்பர் கேட்க சோ அவர்கள் பேச ஆரம்பிக்கிறார். விசுவாமித்திரர் எப்படிப்பட்ட பிரம்மரிஷி. அதே சமயம் ராமர் எப்படிப்பட்ட அவதார புருஷன். தான் விசுவாமித்திரரும் இல்லை நண்பர் ராமபிரானும் இல்லை ஆகவே அதையெல்லாம் தன்னால் கூறமுடியாது என்று கூறுகிறார். இதே விடையை அமரர் கிருபானந்த வாரியாரே கூறியதாகவும் ஆகவே அதை கூறியதற்கான கிரெடிட்டும் தனக்கில்லை என்றும் சோ கூறுகிறார். அது சரி அப்படியாரேனும் அம்மாதிரி உணவு நீர் இன்றி யாரேனும் வாழ்ந்ததாக சரித்திரம் இருக்கிறதா என நண்பர் கேட்க 1953-ல் தனலட்சுமி என்ற பெண் அன்ன ஆகாரம் இன்றி பல நாட்கள் இருந்ததாகவும் மருத்துவர்களும் அவளை பரிசோதித்ததாகவும் சோ கூறுகிறார்.
மீண்டும் காட்சி அசோக், பாகவதர், நீலகண்டன், நாதன் ஆகியோர் இருக்குமிடத்துக்கு செல்கிறது. புராணங்களுக்கு பின்னால் இருக்கும் தத்துவங்களை புரிந்து கொள்ள நீலக்ண்டனுக்கு தீட்சண்யம் போதாது என அசோக் கூறுகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் பத்திரிகைகளில் வருபவை எல்லாமே உடான்ஸ் என நீலகண்டன் கூற முந்தைய தினம் கூட ஆழ்வார்பேட்டை டைம்சில் நீலகண்டன் திறமையாவர் என வந்ததும் உடான்சா என கேட்க, நாதன் அவனைக் கண்டித்து அப்பால் போகும்படி கூறி விட அவனும் செல்கிறான். அசோக் அப்பால் சென்றதும் அவன் ஏன் எப்போதும் பாகவதரையே சப்போர்ட் செய்கிறான் என்னும் கேள்வியை நீலக்ண்டன் கேட்கிறார்.
இப்போது காட்சி அசோக்குக்கும் நீலகண்டனின் மகள் உமாவுக்கும் இடையில் நடக்கும் சம்பாஷணைக்கு செல்கிறது. அசோக் பாரதியாரை தான் ஆராதிப்பதாகக் கூற அவரிடம் அப்படி என்ன விசேஷங்கள் என்பதை கூறுமாறு உமா சேலஞ்ச் செய்கிறாள். அவரது விசேஷமே அவரது அசையாத தெய்வ நம்பிக்கை என ஆரம்பித்து அசோக் பேசுகிறான். அவர் வாழ்ந்த சிறிய கால அளவான 39 ஆண்டுகள் ஒரு அமர ஜீவித துளிகள். Why should I not worship such a multi-faceted personality என அழுத்தம் திருத்தமாகக் கேட்கிறான்.
கடைசி காட்சியில் பாகவதரும் அசோக்கும் பேசி கொண்டிருக்க அவன் தாயார் அவனைத் தேட, அவன் பாகவதருடன் இருப்பதை சமையற்கார மாமி கூறுகிறார். பாகவதரால் அசோக் கெடுவதாக அசோக்கின் அன்னை வசுமதி கூறுகிறாள்.
எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
8 hours ago
15 comments:
சீரியல் முக்கியம் தான் ஆனால் ஓட்டுனரை சீறிப் பாய அனுமதித்தது தான் என்னவோ போல் இருந்தது.ரிஸ்க் எதற்கு?
ரிஸ்க் ஒன்றும் இல்லை. அதாவது எங்கும் லிங்கர் ஆகாது செல்ல வேண்டும் என்பதே நோக்கம். இல்லாவிட்டால் எனது வீட்டம்மா நடுவில் பார்க்கும் பெருமாள் கோவில்களில் எல்லா நிறுத்த சொன்னால் என்ன செய்வதாம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு. //
எங்கே ப்ராமனன் பதிவு எல்லாம் முடிக்கறப்போ, ஜெயா டீவிக்கு விளம்பரம் கொடுத்து தான் முடிக்கறீங்க .. :) ஜெயா டீவியே இத்தனை முறை விளம்பரம் போடறாங்களா தெரியல..
அடுத்து கோலங்கள் பற்றி எழுதுவீங்களா?
@வாக்காளன்
கோலங்களில் சோ இல்லையே?
மேலும் எங்கே பிராமணன் சீரியல் கோலங்களை விட பல மடங்கு மேல்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தன்னைவிட வயதில் முத்த பெண்ணை திருமணம் செய்வது இப்பெல்லாம் சர்வ சாதரணமாய் உள்ளதாய் செய்திகள் வருகிறதே,இது பற்றி உங்கள் கருத்து?
பொதுவாய் அலுவலக்த்தில் பணிவில்லாமல் நடக்கும் உதவியாளர்களை பற்றிச் சொல்லும் போது "மூத்தவளை கட்டியது போல்" என்பார்களே?
உடல் ரீதியாக பிரச்சனைகள் வராதா?
தன்னைவிட வயது மூத்த பெண்களோடு தாம்பத்ய உறவு கொண்டால் ஆண்களின் இளமை கேள்விக்குறியாகும் என்பார்களே?
உங்களுக்கு பிடித்த நடிகர் கமல்ஹாசன் கூட இந்தச் சிக்கலில் இருந்தார் என்பார்கள்?(முதல் மனைவி வாணிகூட )
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வயதுவித்யாசம் எது வரை சரி?
இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் -இது ஒரு பிரச்சனையாகுமா?
ஒன்னும் முடியல!
பார்க்கும் போது மேட்டரை தனியாக கழட்டி வைத்து பார்ப்பீர்களா?
அதில் எந்த முரண்பாடும் உங்களுக்கு தெரியவில்லையா?
//dondu(#11168674346665545885) said...
@வாக்காளன்
கோலங்களில் சோ இல்லையே?//
சோ நிறைய படங்களில் லூசு மாதிரி ரியலாக! வாழ்ந்திருப்பார் பார்த்திருக்கிறீர்களா?
அதை பற்றி எழுதுவீர்களா?
ஏன்னா இங்கே தான் சோ இருக்காரே!
//தன்னைவிட வயது மூத்த பெண்களோடு தாம்பத்ய உறவு கொண்டால் ஆண்களின் இளமை கேள்விக்குறியாகும் என்பார்களே?/
உங்களின் காதல் கேள்விகுறியாகலாம்.
ஆனால் உங்களின் “குறிக்கு” ஒண்ணும் ஆகாது.
//சோ நிறைய படங்களில் லூசு மாதிரி ரியலாக!//
அப்படி நடித்த சிலபடங்களில் முக்கியமானது லட்சுமி கல்யாணம், தேடி வந்த மாப்பிள்ளை ஆகியவை முக்கியமானவை. அவசியம் பார்க்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
///சோ நிறைய படங்களில் லூசு மாதிரி ரியலாக!//
அப்படி நடித்த சிலபடங்களில் முக்கியமானது லட்சுமி கல்யாணம், தேடி வந்த மாப்பிள்ளை ஆகியவை முக்கியமானவை. அவசியம் பார்க்கவும்.//
எதுக்கு! நானும் அதுமாதிரி ஆவுறதுக்கா?
//டிரைவரும் வண்டியை விரட்டி கொண்டு வந்ததில் மேகலா சீரியல் பார்க்க சரியான நேரத்துக்கு சென்னையை அடைய முடிந்தது.
//
ஒரு சீரியலையும் விட மாட்டிங்களா? கொடுமையடா சாமி. இது என்னமாறி masochism?
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
//எதுக்கு! நானும் அதுமாதிரி ஆவுறதுக்கா?//
Which means are you under the illusion that you are not a Loosu now?
//Which means are you under the illusion that you are not a Loosu now? //
நல்ல கேள்வி
நான் லூசு தான், ஆனால் எனக்கு அது தெரியும்,
ஆனால் நான் குறிப்பிட்ட ஆட்களுக்கு அது தெரிவதில்லை,
லூசாக இருந்து அதை தெரியாமல் அல்லது ஒப்பு கொள்ளாமல் இருப்பது ரொம்ப கேவலமானது,
இப்போ புரியுதா! நான் ஏன் ஜெயா டீவீ பாக்குறதில்லைன்னு!
சோவை விட மிக மிக ஆபத்தான அரை, முக்கால், முழு லூசுகள் எல்லாம் நம்ம ஊர்ல நெறைய இருக்கு.
Post a Comment