என்னுடைய இனிய நண்பர் ஒருவரிடமிருந்து எனக்கு இந்த மின்னஞ்சல் வந்தது:
"டோண்டு அவர்களே
இந்த அன்னியன் யார்? திடீரென வந்து நம் டெம்ப்ளேட்டில் எதையோ இணைக்க சொல்கிறார்.நமது கடவு சொல்லை அறிந்து வலை பதிவை முடக்க செய்யும் முயற்சி இது என நினைக்கிறேன்.அல்லது தமிழ் மணத்தையே முடக்க செய்யும் சதியாகவும் இருக்கலாம்.
தான் யார் என்பதை பொதுவில் சொல்லவில்லை என்றாலும் உங்களிடம்,அல்லது தருமி, ராம்கி போன்ற எதாவது ஒரு வலை பதிவரிடமாவது அவர் வெளிப்படுத்துவாரா?அப்படி செய்தால் அவர் ஒரிஜினல்.இல்லையேல் போலி.மகேந்திரன் மகேஷ் அவர்களின் இந்த பதிவை பாருங்கள்."
அங்கு போய் பார்த்ததில் மகேஸ் இவ்வாறு எழுதியிருக்கிறார்.
"நம்முடைய அந்நியன் அவர்கள் போலிப் பின்னூட்டங்களைத் தடுக்க சில வழிமுறைகளைச் செய்திருக்கிறார். அது மிகவும் நல்ல முயற்சி. வரவேற்கத்தக்கது. ஆனால் இதில் சில தொழில் நுட்ப ஓட்டைகள் உள்ளன.
அவரின் ப்ளாக் முழுவதையும் பிரித்துப் போட்டுப் பார்த்ததில், XSS (Croos site scripting) எனப்படும் குறுக்கு வழித் தொழில் நுட்பம் மூலம் உபயோகிப்பவர்களின் user id மற்றும் password ஆகியவற்றை போலி திருடிக் கொள்ளும் வாய்ப்புகள் 100 சதவீதம்.
நம்ம போலி கம்ப்யூட்டர் கில்லாடி என்று சொல்லிக் கொள்கிறார்கள். எனவே இது குறித்து கலந்தாலோசனை செய்ய நான் தயாராக இருக்கிறேன். அந்நியன் அவர்களே உங்களின் E-Mail முகவரியைப் இந்தப் பதிவில் பின்னூட்டம் இடுங்கள், நான் தொடர்பு கொள்கிறேன், அதை வெளியிட மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன். வாருங்கள், போலியை ஒரு கை பார்ப்போம்."
எனக்கு மென்பொருள்களைப் பற்றி ஒன்றும் தெரியாது. பலரும் அப்படித்தான் என நினைக்கிறேன். இருப்பினும் தட்டுத் தடுமாறி நாமும் தமிழ் மணத்தில் இருந்து வருகிறோம், காசி, மதி போன்ற நல்ல உள்ளங்களின் உதவியுடன்.
இப்போது அந்நியன் உண்மையா போலியா என்ற பிரச்சினைக்கெல்லாம் நான் செல்லவில்லை. நான் இந்த போலி டோண்டு விஷயத்தை ஒரு அடிப்படையான முறையில் அணுகுகிறேன். பின்னூட்ட மட்டுறுத்தல் ஒரு கவசம். பிளாக்கர் பின்னூட்டங்களை மட்டும் அனுமதிப்பது இன்னொரு கவசம். இந்த இரு கவசங்களும் மிகுந்த பலனளிக்கின்றன.
அனானி ஆப்ஷனை கூட சேர்த்துக் கொள்ளலாம், ஏனெனில் அது அனாமத்து பின்னூட்டம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் இந்த அதர் ஆப்ஷன் இருக்கிறதே, அதுதான் மிகுந்த விஷமகரமானது. அதை உபயோகித்து யார் வேண்டுமானாலும் வேறு எவரின் பிளாக்கர் எண்ணுடனும் பின்னூட்டமிட்டு விட முடியும். எலிக்குட்டி சோதனையிலும் வெற்றி பெற்றுவிட முடியும். அதனால்தான் நான் என் ப்ரொஃபைலில் ஃபோட்டோ போட்டேன். ஆனால் நான் பின்னூட்டமிடும் மற்றவர் பதிவில் ஃபோட்டோக்கள் எனேபிள் செய்யப்படவில்லையென்றால் கஷ்டமே.
இன்னுமொரு விஷயம் பிளாக்கர் இல்லாத பதிவுகள். அவற்றில் எலிக்குட்டி விஷயம் பிரயோசனமேயில்லை. ஆகவே நான் அங்கு இடும் பின்னூட்டங்களை என்னுடைய ஒரு குறிப்பிட்ட தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இட்டு வருகிறேன்.
உண்மையைக் கூறவேண்டுமென்றால், முதலில் பின்னூட்ட நகலை என் பதிவில் போடுவது ஒரு டிஃபால்டாகவே இருந்தது. ஏனெனில் மிகச் சுலபமான எலிக்குட்டி சோதனையை செய்யக்கூட யாரும் தயாராக இல்லை. சமீபத்தில் சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பில் இது பற்றி பேசினோம். நான் ஒரு பிளாக்கரின் பெயரைச் சொல்லி "அவர் இந்த விஷயத்தில் பல முறை அலட்சியம் காட்டினார்" என்று சீற, அங்கிருந்த ஒரு பதிவாளர் கடவென்று சிரித்து இன்னொருவரை என்னிடம் காட்டி, "நீங்கள் இப்போது குறிப்பிட்ட வலைப்பதிவாளரின் உயிர் தோழர் இவர்" என்று குறிப்பிட்டார். "அப்படியா ரொம்ப சந்தோஷம், உங்கள் உயிர் நண்பரிடம் கூறுங்கள், டோண்டு ராகவன் உங்கள் மேல் கோபித்துக் கொண்டான்" என்று என்னிடம் அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டவரிடம் கூறினேன்.
இதெல்லாம் நான் பலமுறை கூறி வந்திருக்கிறேன். அந்நியனின் மென்பொருள் கூட அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை செயலற்றதாக செய்வதைத்தான் வலியுறுத்துகிறது.
இன்னொரு விஷயத்தைப் பார்ப்போம். ஒரு வெள்ளைப் பட்டியல் தயார் செய்து அதிலுள்ளப் பதிவுகளை மட்டும் அனுமதிப்பது என்பது ஒரு சள்ளை பிடித்த காரியம். மேலும் எனக்கு பின்னூட்டம் இட வேண்டுமென்று ஒருவர் மெனக்கெட்டு பிளாக்கரில் பதிவு செய்கிறார். வலைப்பூவெல்லாம் திறக்க நேரம் இல்லை. நான் நெருப்புச் சுவர் வைத்தால் அது அவர் பின்னூட்டத்தைத் தடுத்து விடும். ஆகவே அவர் மெனக்கெட்டு வலைப்பூ ஓபன் செய்து, தம்ழ்மணத்தில் சேர்ந்து, பிறகு நான் அவரை என் வெள்ளைப் பட்டியலில் சேர்த்து என்றேல்லாம் ஆகிவிடும். நடக்கும் காரியமா இது?
இப்போது என்ன ஆகிவிட்டது? ஐந்து நிமிட வேலையில் பிளாக்கராக பதிவு செய்து கொண்டு ஒருவர் பின்னூட்டமிடுகிறார். நான் அவர் பின்னூட்டம் நல்லதாக இருந்தால் அனுமதிக்கப் போகிறேன், இல்லையென்றால் மறுத்துவிடப் போகிறேன். அதர் ஆப்ஷன் இல்லாததால் அது சம்பந்தமாக நான் மேலே கூறிய விஷமமும் இல்லை. என்ன, அசிங்கப் பின்னூட்டத்தைப் படிக்க வேண்டும். படித்தால் போகிறது. ஒரு விஷயம் தெரியுமா, பல நாட்கள் கழித்து நேற்றுதான் அந்நியன் பெயரில் போலி டோண்டுவிடமிருந்து எனக்கு அசிங்கப் பின்னூட்டங்கள் நான்கு வந்தன. அத்தனையையும் தடுத்தேன். அவ்வளவே.
ஆகவே நான் கூறும் ஆலோசனை:
1. பின்னூட்ட மட்டுறுத்தல்.
2. அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை செயலற்றதாக்குதல்.
இவையே எதேஷ்டம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
கூழாங்கல்லில் இருந்து மலைகளை உருவாக்க நான்கு வழிகள்
-
பயணங்கள் வழியாக இயற்கையை விரித்துக்கொள்ளும் கனவு இன்று நம்மில் சிலருக்கு
உண்டு. ஆனால் அப்பயணத்தை எப்படி நடத்துவதென்று தெரிவதில்லை. பெரும்பாலும்
தவறான சுற்ற...
16 hours ago
29 comments:
மகேந்திரன் மகேஷ் அவர்களின் இந்த பதிவை பாருங்கள்."//
அந்நியனுக்கு பின்னூட்டமிட்டவர்கள் தங்கள் வலைப்பதிவின் கடவு சொல்லை உடனடியாக மாற்றிகொண்டால் நல்லது என்று நினைக்கிறேன்
Mr.Dondu,
Anniyan had put some "Un necessary feedback" in my blog.
Vinaiyuukki, vous voulez dire un commentaire nécessaire ou autrement? Il faut toujours faire le mouse-over et contrôler s'il s'agit de vrai Anniyan ou pas. Il y a déjà un Poli Anniyan.
Salutations,
Dondu N.Raghavan
//1. பின்னூட்ட மட்டுறுத்தல்.
2. அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை செயலற்றதாக்குதல்.
இவையே எதேஷ்டம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?//
வணக்கம், ஐயா,
போலி விசயம் உங்களை மிகவும் பாதித்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அதை சாதாரணமாக கணிப்பொறி திரையில் பார்ப்பதற்கு கூட சங்கடமாக உள்ளது.
நேரடியாக பாதித்தால் அது எப்படி இருக்கும் என்பதை உணரமுடிகிறது.
ஆனால், அதற்காக அதர் மற்றும் அனானி மதிப்பீடு செய்தலை செயலற்றதாக்குதலை என்னால் ஆதரிக்க இயலவில்லை.
அப்படிச் செய்தால் கணிப்பொறியை பற்றி அதிகம் தெரியாத, அல்லது பதிவு செய்யாத ஒருவர் தம் கருத்தை பதிவு செய்வது இயலாத காரியமாகிவிடும்.
பதிவு செய்து பின் பின்னூட்டம் அளிக்கும் தேவை எல்லோருக்கும் இல்லை.
இப்போது பதிவு செய்து கொண்டு பின்னூட்ட மிட்டு மிரட்டும் அவரை என்ன செய்யமுடிந்தது.
ஆகவே,
பின்னூட்ட மட்டுறுத்தலை உறுதி செய்து கொள்வது சரியான தீர்வாகும்.
அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை செயலற்றதாக்குதல் என்பது, நம் எழுத்துக்கள் பற்றி வெளியில் இருப்பவர்களின் என்ன கருதுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை நாம் மறுத்துக் கொள்வதாகும்.
Ici après que je vérifie avec mouse-over.
"Ici après que je vérifie avec mouse-over"
Est-ce que vous parlez vraiment d'un commentaire pas souhaitable de la part d'Anniyan? Cela n'est pas bien. Dans ce cas, il faut faire attention.
Salutations,
Dondu N.Raghavan
சுகுமாரன் அவர்களே, நிலைமையின் தீவிரம் புரியாமல் பேசுகிறீர்கள். உதாரணத்தால் விள்க்குகிறேன்.
".... என்ற பெயர் உடைய மத்திய மந்திரி லஞ்சம் வாங்கினார்"
இப்படிக்கு,
சுகுமாரன்
ஆப்ஷன்: அதர்
வெப் தளம்: http://www.blogger.com/profile/15940110
என்று ஃபில்லப் செய்தால், சந்திக்கு வருவது உங்கள் பெயர்தான். இந்தழகில் உங்களிடம் போட்டோ கூட இல்ல. புரிகிறதா இப்போது?
இருப்பதிலேயே ரொம்ப ஆபத்தானது இந்த அதர் ஆப்ஷனே. இதை மட்டும் செயலற்றதாக ஆக்கிட முடிந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அது முடியாது. இரண்டே இரண்டு தெரிவுகள்தான் உங்களுக்கு உண்டு.
நான் ஒன்றும் இல்லாததைச் சொல்லிவிடவில்லை. இதெல்லாம் படிப்படியாக அந்த போலி டோண்டு என்ற இழிபிறவி நடத்தினான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அந்நியன் என்பவரது பெயரில், உங்களைப் பற்றி தகாத வார்த்தைகளில் எனக்கு ஒரு பின்னூட்டம் வந்து இருந்தது. நான் அதை பதிவிடாமல் ரிஜெக்ட் செய்து விட்டேன். நான் மட்டுறுத்தல் செய்து உள்ளேன். அதர் மற்றும் அனானி ஆபஷன்களும் எடுத்து விட்டு விட்டேன். எந்தப் பின்னுட்டமாக இருந்தாலும் ஒரு முறைக்கு இரு முறை சரிப்பார்த்து விட்டே போடுவது. மட்டுறுத்தலில் நான் உங்கள் கருத்தை ஒத்துப் போகின்றேன்.
வினையூக்கி அவர்களே, அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை தூக்கியதற்கு பாராட்டுகள்.
அந்நியன் பெயரில் உங்களுக்கு அசிங்கப் பின்னூட்டம் அனுப்பியது கண்டிப்பாக நெருப்புச் சுவரை எழுப்பியவராக இருக்காது. அதுவும் போலி அந்நியனான போலி டோண்டுவே. இப்போது கே.வி.ராஜா என்பவர் பெயரிலும் பதிவிட்டு வருகிறான் அந்த போலி டோண்டு என்ற (இழி)³ பிறவி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மகேஸ் அவர்களே,
அந்நியன் போலி பேர்வழி என்று நானும் நினைக்கவில்லை. வெள்ளைப் பட்டியலிலும் ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் இப்போது மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகளே போலி டோண்டு என்ற (இழி)³ பிறவியிடமிருந்து என்னை பாதுகாத்துக் கொள்ளப் போதுமானது.
முதலில் நேற்று நானும் சற்று குழம்பினேன். அன்னியனுக்கு நான் இட்டது ஒரே ஒரு பின்னூட்டமே. பிறகு உஷா அவர்களது பதிவைப் பார்த்ததும் சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஆகவே உடனடியாக என்னுடைய கடவுச் சொல்லை மாற்றி விட்டேன்.
இப்போது நீங்கள் கூறுவதைப் பார்த்தால் டெம்பிளேட்டை மாற்றினால்தானே பிரச்சினை வர வாய்ப்புண்டு? அதை நான் செய்யப் போவதில்லை.
ஆகவே அந்நியன் நல்லவரா இல்லையா என்ற பிரச்சினையில் என் நேரத்தை வீணாக்க மாட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கடைசியில் நான் கூறியபடித்தான் ஆகிவிடும் போல இருக்கிறது. நீங்கள் சொல்லும் காம்ப்ளிகேஷனைப் பார்க்கும்போது டெம்பிளேட் மாற்றத்தில் வரும் சௌகரியங்களையெல்லாம் போலி டோண்டு ஹேக்கிங்க் செய்ய முடியும் என்ற சாத்தியக்கூறுக்கு முன்னால் ஒன்றுமில்லாமல் போகின்றன.
மேலும் மட்டுறுத்தலை நிறுவிக் கொண்டாலே போதுமானது. உங்கள் பதிவில் நான் ஏற்கனவே பின்னூட்டம் இட்டிருக்கிறேனே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"டோண்டு இப்போதுள்ள மட்டுறுத்தல் முறைக்கு என்ன குறை என்று கேட்டுள்ளார். வலைப்பதிவு வாசலிலேயே நிறுத்த வேண்டியவற்றை தேவையில்லாமல் வீட்டிற்குள் (மின்னஞ்சல்) அனுமதிப்பது போலாகும் அது. அதுவுமில்லாமல் உங்கள் பதிவு lively ஆக இருக்காது. நீங்கள் தூங்கப்போகும்போதும் மற்ற timezoneகளில் உள்ளவர்கள் பின்னூட்டமிடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்."
மேலே உள்ள வரிகளை அந்நியன் அவர்கள் தான் பதிவில் கூறியுள்ளவை. பார்க்க: http://anniyan2006.blogspot.com/2006/05/blog-post_114672096346530273.html
அவருக்கு அங்கு போய் நான் பதிலளிக்கத் தயங்குகிறேன். ஆகவே இங்கே என் பதிவில் அதை செய்கிறேன்.
பதிவு லைவ்லியாக இருக்காதா? என்ன நண்பர்களே, என் பதிவுகள் போதுமான அளவு லைவ்லி இல்லையா? நீங்களே கூறுங்களேன்.
மாறாக வைட்லிஸ்ட் என்பது வேண்டாத வேலை. நான் கூறியபடி, என் பதிவுக்கு பின்னூட்டமிடவேண்டுமென்றே பலர் பிளாக்கர்கள் ஆகியுள்ளனர். நானும் அதே போல என்றென்றும் அன்புடன் பாலாவின் பதிவில் பின்னூட்டமிட வேண்டுமென்பதாலேயே பிளாக்கர் கணக்கு துவக்கினேன். வைட்லிஸ்டை வைத்துக் கொண்டால் காசி அவர்கள் கேட்டது போல அதை இற்றைப்படுத்துவது யார்? அந்நியனின் டெம்பிளேட்டை செயலாக்கும் ஒவ்வொருவரும்தானே? அப்படியெல்லாம் மெனக்கெட்டால், கிடைக்கும் பலன் என்ன? மட்டுறுத்தத் தேவையில்லை. அவ்வளவுதானே. ஆனால் அதற்கு பதிலாக செய்ய வேண்டிய முயற்சிகள்? எதில் பாடு அதிகம்?
ஐயா ஒரு கேள்வி. திடீரென்று வைட்லிஸ்டில் உள்ள ஒரு பிளாக்கருக்கு மூளை பிறழ்ந்து போய் ஆட்சேபகரமான பின்னூட்டங்களைப் போட்டு விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். மட்டுறுத்தல் இருந்திருந்தால் அதை நடக்காது தடுக்கலாம் அல்லவா?
எப்படிப் பார்த்தாலும் வைட்லிஸ்ட் தயாரிப்பது அவ்வளவு உபயோகம் தராது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"ஐயா ஒரு கேள்வி. திடீரென்று வைட்லிஸ்டில் உள்ள ஒரு பிளாக்கருக்கு மூளை பிறழ்ந்து போய் ஆட்சேபகரமான பின்னூட்டங்களைப் போட்டு விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். மட்டுறுத்தல் இருந்திருந்தால் அதை நடக்காது தடுக்கலாம் அல்லவா?"
சார்,
நீங்கள் கேட்பது சரியான கேள்வி. எல்லா பின்னூட்டங்களும் பதிப்பதற்கு உகந்தவை தானா என்பது அதனை படித்த பின்னரே தெரியும். அன்னியனின் ஆர்வம் பாராட்ட பட வேண்டிய ஒன்று என்றாலும் கூட, பாஸ்வேர்ட் மற்றும் யூசர் ஐடி போன்றவற்றை என்டர் செய்ய வேண்டிய இடங்களில் , நமக்கு ஏற்றவாரு மாற்றி கொள்ளும் போது , மிகுந்த கவனம் தேவை.(இதை பற்றி மகேஸ் தெளிவாகவே எச்சரித்துள்ளார்.)
மேலும் அன்னியனின் தற்போதைய முயற்சியில், வெட் லிஸ்ட் , புதிய பதிவர்கள் வர வர மாற்றி கொள்ளவேண்டியிருக்கும் . அதற்கு ஆகும் நேரத்திற்கு நீங்கள் நேரடியாகவே ஒவ்வொறு பின்னூட்டத்தையும் சரி பார்த்து வெளி இட்டு விடலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக , நீங்கள் கூறியது போல யாராவது கிறுக்கு தனம் பண்ணினால் அதை அன்னியனின் முறை தடுத்து நிறுத்தாது.
"அதற்கு ஆகும் நேரத்திற்கு நீங்கள் நேரடியாகவே ஒவ்வொறு பின்னூட்டத்தையும் சரி பார்த்து வெளி இட்டு விடலாம்."
மேலும், டெம்பிளேட் மாற்றத்தில் வரும் சௌகரியங்களையெல்லாம் போலி டோண்டு ஹேக்கிங்க் செய்ய முடியும் என்ற சாத்தியக்கூறுக்கு முன்னால் ஒன்றுமில்லாமல் போகின்றன.
புது மாற்றங்களுக்கு இப்படித்தான் தடை எல்லாம் வருகிறது என்று அலுத்துக் கொள்பவர்களுக்கு ஒன்று கூறுவேன். அவை உண்மையிலேயே தேவைதானா என்பதைத்தான் முதலில் பார்க்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"தான் ஒரு பெரிய ஆள் என்றும், தன்னால் அனைத்தையும் ஹேக் செய்ய முடியும் என்றும் "உதார்" காட்டிக்கொள்ள மட்டுமே போலியால் முடியும்."
எது எப்படியானாலும் நாம் ஜாக்கிரதையாகக் கதவைப் பூட்டாவிட்டால், போலி டோண்டு போன்ற இழிபிறவிகள் உள்ளே வந்து விடுமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நீங்கள் சொல்வது சரியே!
இருந்தாலும், 'அந்நியனின்' முயர்சியும் ஊக்குவிக்க வேண்டிய ஒன்றென்றே கருதுகிறேன்.
நிலைத்த, நீடித்த பயனுக்காக!
[lasting benefits]
"'அந்நியனின்' முயற்சியும் ஊக்குவிக்க வேண்டிய ஒன்றென்றே கருதுகிறேன்."
ஊக்குவித்தால் போயிற்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வைட்லிஸ்ட் வைத்து ப்ளாக்லிஸ்ட் செய்வதெல்லாம் வேண்டாம் என்று தான் தோன்றுகிறது. நான் டோண்டு அவர்களுக்கு கருத்து சொல்லும் ஒவ்வொரு முறையும் எனக்கும் லட்சார்ச்சனை வரத் தான் செய்கிறது. ஏதாவது புதிய கெட்ட வார்த்தை கிடைக்கிறதா என்று பார்த்து விட்டு [:-)] அதை/ அவற்றை அழித்து விடுகிறேன். அவ்வளவு தான். எதற்கு இதைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டும்?!
அவ்வளவு அழகாக இருக்கிற நிலவைப் பார்த்தே நாய்(கள்) குரைக்கின்றன. அதற்காக நிலவு விழுந்து புரண்டு கவலைப் படுகிறதா என்ன?!
இருநூறு முறை நீங்கள் இதே மாதிரி செய்தால் இருநூற்றாவது ஒன்றாவது முறை வரவே வராமல் போகும் என்பது தான் எனது கருத்தும்!
இன்னும் சொல்லப் போனால் இதைப் பற்றி பதிவுகளில் எழுதாமலேயே இருக்க வேண்டும் என்பது முக்கியம். கண்டு கொள்ளாமல் நடந்து கொண்டே இருந்தால், கடிக்க வருகிற நாய் கூட தயங்கி, பின் தங்கி நின்று விடும்.
போலி டோண்டுகளை வளர்ப்பதே நாம் தான்! இதை சொல்ல வருத்தப் படுகிறேன்!
அன்புடன்,
சுபமூகா
"திருவாளர்.டோண்டு மற்றும் அவரைப் போன்று பாதிக்கப் பட்டதாய் ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்து விளம்பரம் தேடிக்கொள்ளும் நண்பர்களுக்கு..."
மட்டுறுத்தல் செய்து போலி டோண்டுவை தனிமைப் படுத்திவிட்டதாக நீங்கள்தான் எல்லா இடங்களிலும் ஒப்பாரி வைத்தீர்கள். உங்கள் பெயரில் விஷப் பின்னூட்டங்கள் போலி டோண்டு என்ற இழிபிறவி இட்டிருந்தால் அப்போது நீங்கள் பாடுவதே வேறு ட்யூனாக இருக்கும்.
இப்போது போலி டோண்டுவின் லேட்டஸ்ட் தாக்குதல் கேவிராஜா என்ற அருமையான மனிதர் மீது. அவன் அவரது பெண் உறவினர்களையெல்லாம் பெயரிட்டு என்னென்ன அசிங்கமான பின்னூட்டங்கள் இட்டு வருகிறான் என்பதை பார்த்தால் நீங்கள் இவ்வாறு மன சாட்சியே இல்லாமல் பேச மாட்டீர்கள். இல்லை பார்த்துவிட்டதாக நீங்கள் தெரிவிக்கும் பட்சத்தில் உங்களை என்னவென்று கூறுவது? ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம், டோண்டு ராகவன் ஜாதி பேசினான் என்று. கே.வி.ஆர். என்ன செய்தார்?
பார்க்க: http://kvraja.blogspot.com/2006/05/kvr.html
இந்தத்க் தருணத்தில் உங்களது பதிவு ஒன்றில் நான் கடைசியாக இட்ட இந்தப் பின்னூட்டத்துக்கு இன்று வரை பதிலில்லாமலேயே வைத்திருக்கிறீர்கள். அதில் கொட்டேஷன் குறிகளுக்குள் வருவது நீங்கள் எழுதியவையாகும். எனக்கப்புறம் இரண்டு அனானிகள் வேறு உங்களை நாக்கைப் பிடுங்கிக் கொள்வதுபோல கேள்வி கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் பதில்கள் இல்லை.
"தாக்குதலுக்குள்ளாகும் நபர்களை எளிதில் இனம் காணலாம், அவர்களால் தாக்குதல்களை எதிர் கொள்ள முடியாதபோது அவர்கள் மட்டில் தற்காப்புச் செய்ய சொல்லியிருக்க வேண்டும் தமிழ் மணம். அதை விடுத்து அவர்களுக்கு கோவனத்தை இறுக்கிக் கட்டுவது வசதியாய் இருக்கிறது என்பதற்காக அனைவரும் கோவணத்தை இறுக்கிக் கட்ட வேண்டுமென்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?"
பிரச்சினை என்னவென்றே புரியாமல் இருக்கிறீர்கள் என்றுதான் தோன்றுகிறது. தாக்குதலுக்குள்ளாகும் நபர்களுக்கு அவர்கள் சொந்தப் பதிவில் பிரச்சினை இல்லை. உதாரணமாக நான் எடுத்த தற்பாதுகாப்பு நடவடிக்கையால் என் பதிவில் போலி டோண்டு வரமுடியாது. ஆனால் மற்றவர்கள் பதிவுகளில் போய் என் பெயர், காசி அவர்கள் பெயர், மாயவரத்தான் அவர்கள் பெயர் ஆகியவற்றை மற்றவர்களைத் திட்டி வந்தான். பல சமயம் அப்பின்னூட்டங்கள் நாங்கள் எழுதியதாகவே கருதப்பட்டு எதிர் வினைகளும் கொடுக்கப்பட்டன. முக்கிய உதாரணங்கள் மகேஸ், மூக்கு சுந்தர், என்றென்றும் அன்புடன் பாலா, காஞ்சி பிலிம்ஸ், டி.பி.ஆர். ஜோசஃப், ரயாகரன், வா.மணிகண்டன் (கடைசியாகக் கூறப்பட்ட இருவரும் போலிப் பின்னூட்டம் என்று தெரிந்தும் அதை அழிக்க மறுத்தனர்). கடைசியாக பலர் பதிவுகளுக்குப் போய் என் பதிவுக்குப் பின்னூட்டங்கள் தரக்கூடாது என்று பயமுறுத்த ஆரம்பித்தான். That was the last straw.
ஆகவே தமிழ்மணம் மட்டுறுத்தல் செய்ய வேண்டும் என்று கூறியது. அவ்வாறு செய்யாவிட்டால் சம்பந்தப்பட்டவர் பதிவுகளில் பின்னூட்டங்கள் வரும்போது இற்றைப் படுத்தப்படமாட்டாது என்றும் கூறப்பட்டது.
"டோண்டு சார் பாரா சாரிடமே கேட்டுப் பாருங்க உங்க நான் போட்ட பின்னூட்டங்கள ரெண்டு புக்கா பைண்டு செஞ்சு செம்பதிப்பாகவே போட வசதிப்படுமான்னு ;-)"
சீரியசாகவே கூறுகிறேன், அப்பதிவுகளைப் பின்னூட்டங்களுடன் படியுங்கள். அக்காலக்கட்டத்தில் வந்த பதிவுகளைப் பற்றிய ஒரு குறுக்குவெட்டுப் பார்வையே கிடைக்கும். பதிவுகளுக்கான சுட்டிகளும் கிடைக்கும்.
இப்பின்னூட்டமும் வழக்கம்போல என்னுடையத் தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
முக்கியமாக அதர் ஆப்ஷனை எனேபிள் செய்து வைத்திருக்கும் நீங்கள் என் பெயரில் பின்னூட்டங்கள் வந்தால் ப்ளாக்கர் எண், போட்டோ மற்றும் என் தனிப்பதிவில் நகலிடப்படல் ஆகிய சோதனைகளைப் பார்ப்பீர்கள் என நம்புகிறேன்.
பார்க்க: http://sadhayam.blogspot.com/2006/01/blog-post_26.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
P.S. Strange that Poli Dondu does not seem to have left any obscene remarks in your own posts. This makes me wonder, when I combine this observation with your constant dig against the comment moderation policy of Thamizmanam.
If I am wrong and that Low Life Poli Dondu did leave such obscene comments in your posts, you are really an obtuse person.
சிலரைப் பற்றிக் கூறுவார்கள்: சொன்னாலும் தெரியாது, தனக்காவும் தெரியாது. A hopeless case. Have your choice.
"கருத்துச் சுதந்திரத்தில் கைவைக்க வேண்டாம் என்பதை மையப்படுத்தி எழுதப்பட்ட பதிவு அது."
யாருக்கு கருத்து சுதந்திரம் என்று கூறுகிறீர்கள்? மட்டுறுத்தவும் மாட்டீர்கள், எலிக்குட்டின் சோதனையும் செய்ய மாட்டீர்கள். ஆகவே மற்றவர்களை பற்றிய அசிங்கப் பின்னூட்டங்களை அந்த இழிபிறவி இட்டுக் கொண்டே போவான், அதிலும் என் பெயரை, காசியின் பெயரை, இன்னும் சிலரின் பெயரை உபயோகித்து நாங்கள் இட்டது போல தோற்றம் தருவான். நீங்கள் ஒன்றும் செய்யாமல் இருக்க வேண்டும், இதையா கருத்து சுதந்திரம் என்கிறீர்கள்?
"என்னுடைய பதிவுகளில் திரு.போலிடோண்டு அவர் பாணியில் எழுதவில்லை என்று நீங்கள் நினைத்தால் உங்கள் சந்தேகத்தை திரு.குமரனிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள்."
சதயம் என்ற பேரில் வேறு எங்காவது போலி பின்னூட்டம் இட்டிருக்கிறானா? இல்லைதானே. ஆனால் அதுதான் என் விஷயத்தில் முதல் நாளன்றிலிருந்தே நடந்து வந்திருக்கிறது.
இப்போது கே.வி.ஆர். அவர்களின் பதிவைப் பாருங்கள். http://kvraja.blogspot.com/2006/05/kvr.html
அந்த மனிதர் என்ன தவறு செய்தார்? மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள். உயிர் போகும் பிரச்சினை நடக்கிறது, நீங்கள் கருத்து சுதந்திரம் பேசுகிறீர்கள்.
"தமிழ்மணத்தை தரம் தாழ்த்தியதில் மிகச்சமமான பங்கு உங்களுக்கு இருப்பதாகவே கருதுகிறேன்."
உங்களை ஒருவன் செருப்பால் அடிப்பான், நீங்கள் வாங்கிக் கொள்வீர்களா?
நான் வாங்கிக் கொள்பவன் அல்ல, நீங்களும் அப்படி அல்ல என்றுதான் நினைக்கிறேன். ஆனால் செருப்படிக்கு ரியேக்ட் செய்யக்கூடாது என்பதை மற்றவர்களுக்கு வேண்டுமானால் உபதேசம் செய்வீர்கள்.
எல்லோரையும் பீடித்த ஒருவனை யாரிடமும் வர முடியாது செய்ததில் என் பங்கு உண்டு என்பதை பெருமையாகவே நினைக்கிறேன். பாதிக்கப்பட்ட மற்றவர்கள் பதிவு செய்வதையே நிறுத்தி ஓடினார்கள். நான் நின்று யுத்தம் செய்தேன். இப்போது அவன் தனிமை படுத்தப்பட்டானா இல்லையா? இதில் என்ன உங்களுக்கு வருத்தம்?
தரக்குறைவான பின்னூட்டங்களை வரவிடாமல் தடுத்ததில் தமிழ்மணத்தின் தரம் குறைந்தது என்று நீங்கள் கூறினால், உங்கள் தரத்தின் மீதுதான் சந்தேகம் வருகிறது.
"ஒரு மாதத்திற்கு உங்கள் நிழல் எதிரியை சம்பந்தப் படுத்தாமல் அது பற்றி வாய் திறவாமல் ஆரோக்கியமான பதிவுகளை இட முயற்சியுங்கள்"
என்னுடைய பதிவுகளெல்லாம் ஆரோக்கியமானவைதான். நீங்கள் உங்கள் பதிவுகளின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படுங்கள்.
No, sir, I can do without such silly advices.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்த அந்நியன் போன்ற கோமாளிகளால்தான் டோண்டு சார் போன்றவர்களுக்கு ஓயாத தலைவலி. அவரவர்தள் தம் அளவிற்கு மட்டுறுத்திவிட்டு போகிறோம். இதற்குப் போய் நெருப்புச்சுவர், தண்ணீர்ச்சுவர் என்று பினாத்திக்கொண்டு பின்னர் அனைவரின் பிளாக்கர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைத் திருடக்கூடிய டெம்ளேட்டை உருவாக்குவது.
எனக்கு இந்த அந்நியனே போலியோ என்று ஒரு ஐயம் இருக்கிறது.
சிபி அவர்களே,
எனக்கும் அந்த சந்தேகம் முதலிலேயே வந்தது. ஆகவே அவர் பதிவில் ஒரு பின்னூட்டமிட்ட உடனேயே என் கடவுச் சொல்லை மாற்றி விட்டேன். பிறகு காசி சொல்வதைப் பார்த்தால் அவர் போலியில்லை என்பதுபோல தோன்றுகிறதே?
எது எப்படியானால் என்ன? எனக்கு நான் செய்யும் மட்டுறுத்தலே போதும் சுவாமி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எனக்கும் அந்த சந்தேகம் முதலிலேயே வந்தது. ஆகவே அவர் பதிவில் ஒரு பின்னூட்டமிட்ட உடனேயே என் கடவுச் சொல்லை மாற்றி விட்டேன்//
நான் கூட அவருக்கு/அவனுக்கு பின்னூட்டமிட்டவுடனேயே கடவுச்சொல்லை மாற்றிவிட்டேன்.
நல்ல வேலை செய்யறாங்கன்னு நம்பி போனா கழுத்தறுக்கறாங்களே சார்!
//எனக்கும் அந்த சந்தேகம் முதலிலேயே வந்தது.//
உங்களுக்காவது சந்தேகம் வந்தது! நான் முழுசா நம்பினேன். :(
நான் கூட அவருக்கு/அவனுக்கு பின்னூட்டமிட்டவுடனேயே கடவுச்சொல்லை மாற்றிவிட்டேன்
நல்லது சார்.
அன்புஅடன்,
டோண்டு ராகவன்
உங்களுக்காவது சந்தேகம் வந்தது! நான் முழுசா நம்பினேன். :(
இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"குப்பாச்சு குழப்பாச்சு நிலை தான் உங்கள் நிலையோ என நினைக்க தோன்றுகிறது"
குப்பாசுமில்லை குழப்பாச்சுமில்லை. மனிதன் தெளிவாகவே இருக்கிறார். போலியை நான் மற்றவர்கள் செய்ததுபோல இக்னோர் செய்திருக்க வேண்டுமாம். மற்றவர்களுக்கென்ன, என் பெயரில்தானே அவன அசிங்கப் பின்னூட்டமிட்டான்? அது பற்றி அவருக்கு கவலையில்லை. ஆனால் இக்னோர் செய்ய வேண்டுமாம்.
நான் அவருக்கு என் செய்கையால் கூறியது என்னவென்றால் அவர் எண்ணம் பற்றி எனக்கும் கவலையில்லை. என் மேல் வரும் தாக்குதல்களை எப்படி எதிர்கொள்ள வேண்டுமா அதை செய்தாகி விட்டது. கடைசியில் மட்டுறுத்தலும் வந்து விட்டது.
அதுதான் சதயம் போன்றவர்களுக்கு சங்கடமாகப் போயிற்று. மட்டுறுத்தல் செய்ய வேண்டுமே என்ற எரிச்சல். அதனால் இப்படிப்பட்டப் பின்னூட்டங்கள்.
சதயம் போன்றவர்கள் பேசுவதைப் பார்க்கும்போது எனக்கு லாரல் ஹார்டியின் சினிமாப் படம் ஒன்று நினைவுக்கு வருகிறது. இருவருக்கும் நல்ல பசி. ஜூவில் இருக்கிறார்கள். சிங்கத்தின் கூண்டில் அதற்கான இறைச்சி வைத்திருக்கிறார்கள். அதைத் திருடி உண்ண இருவருக்கும் ஆசை. குண்டு ஹார்டி ஒல்லி லாரலிடம் கூறுகிறார், "சிங்கத்தின் கண்களையே பார், அவ்வாறு செய்து கொண்டே இறைச்சியை எடுத்து வந்து விடு, அவ்வாறு கன்ணையே பார்த்தால் சிங்கம் ஒன்றும் செய்யாது என்று ஒரு புத்தகத்தில் படித்துள்ளேன்" என்று.
லாரல் தயங்கிக் கொண்டே கேட்கிறார், "அது சரி, சிங்கமும் அந்தப் புத்தகத்தைப் படித்திருக்கும்தானே" என்று.
சதயம்,
பதிவு போடுங்கள் பார்க்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment