சக வலைப்பதிவாளர்கள் மன்னிக்க வேண்டுகிறேன். இந்த மீள்பதிவுக்கும் கிருஷ்ணாவே காரணம். கிருஷ்ணாவும் என்னை மன்னிக்கவும். இப்பதிவிலும் உங்களைப் படுத்திய அதே 1961-ஆம் ஆண்டு வந்து தொலைக்கிறது. இப்போது பதிவுக்கு:
சமீபத்தில் 1970-ஆம் ஆண்டு என்னுடன் பத்மா சந்திரசேகரன் என்பவர் ஜெர்மன் படித்து வந்தார். அவருடன் ஒரு நாள் மேக்ஸ் ம்யுல்லெர் பவன் நூலகத்தில் பேசிக் கொண்டிருந்தேன்.
தன்னைப் பற்றிக் கூறுகையில் தான் ஐ.ஏ.& ஏ.எஸ் என்றும் தன் கணவரும் ஐ.ஏ.& ஏ.எஸ் என்றும் கூறினார். உடனே என் தலைக்குள் வழக்கமான பல்ப் எரிந்தது போன்ற உணர்ச்சி.
நான்: "நீங்கள் 1948-ல் பள்ளியிறுதித் தேர்வு குறைந்த வயதுக் காரணமாக பனாரஸ் மெட்ரிக்கில்தானே தேர்ச்சிப் பெற்றிர்கள்?"
பத்மா: "ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரியும்?"
நான்: "அதன் பிறகு பனாரஸ் இன்டெர் செய்தீர்கள் அல்லவா?"
பத்மா: "ஆமாம், ஆனால் எப்படி இது உங்களுக்கு...?"
நான்: "அதே போல பி.ஏ.வும் செய்தீர்கள் அல்லவா?"
பத்மா: முதலில் உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கூறுங்கள்"
நான்: "பிறகு சொல்கிறேன். நீங்கள் ஐ.ஏ.எஸ். எழுதலாமா என்று சாயி பாபாவிடம் கேட்ட போது, அவர் உங்களிடம் 'எஸ்.ஏ.ஐ திருப்பிப் போட்டால் ஐ.ஏ.எஸ் என்று வருகிறது. முயற்சி செய்' என்று கூறினார் அல்லவா?"
பத்மா (பொறுமை இழந்து): "இதற்கு மேல் உங்களுடன் பேச வேண்டுமானால் இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும் என்பதைக் கூற வேண்டும்!"
நான்: இதைப் பற்றியெல்லாம் நீங்கள் சமீபத்தில் 1961- ல் குமுதத்தில் எழுதியிருந்தீர்கள். அதை நான் படித்தேன்."
பத்மா: "அதைப் பற்றி நானே மறந்து விட்டேன். நீங்கள் எப்படி நினைவு வைத்திருக்கிறீர்கள்?"
நான்: "அந்தக் கட்டுரையில் மேலே கூறியதையெல்லாம் எழுதிய நீங்கள் உங்கள் பேட்சில் ஐ.ஏ.எஸ் பிரிவில் போதுமான காலியிடம் இல்லாததால் ஐ.ஏ.& ஏ.எஸ் ஆக பணி ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது என்றும் கூறினீர்கள். உங்கள் பேட்சில் இருந்த சந்திரசேகரன் என்பவரை காதலித்து மணம் புரிந்ததாகவும் கூறினீர்கள். இப்போது பேசுகையில் நீங்கள் ஐ.ஏ.& ஏ.எஸ். என்றும் உங்கள் கணவரும் ஐ.ஏ.& ஏ.எஸ் என்றும் கூறினீர்கள். உடனே நான் படித்த உங்கள் கட்டுரை நினைவுக்கு வந்தது. ஆகவே கேட்டேன்."
கால வரிசைப்படிப் பார்த்தால் இது என் நினைவிலிருக்கும் முதல் ஹைப்பர் லிங்க் ஆகும். ஹைப்பர் லிங்குக்கான சொற்கள் இங்கு: "நான் ஐ.ஏ.& ஏ.எஸ், என் கணவரும் ஐ.ஏ.& ஏ.எஸ்"
மேலும் பல ஹைப்பர்லிங்குகள் போட்டு படுத்துவேன் என்பதை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
8 hours ago
13 comments:
இப்பதிவின் பகடியாய் பெயரிலி போட்டப் பதிவு அருமை. அதைப் படிக்கும்போதே என் மண்டைக்குள் சீரியல் பல்புகள் எரிந்தன. பார்க்க http://wandererwaves.blogspot.com/2005/06/6.html
என்ன, ஒரே ஒரு வித்தியாசம்தான். என்னுடைய ஹைப்பெர்லிங்குகள் நிஜமாக நடந்தவை. அடுத்த லிங்குக்கு ஒரு சகவலைப்பதிவரே சாட்சி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எனது மண்டைக்குள் ஒரு பல்பு எரிகிறது!
ஒப்புரான சத்தியமா பத்மாசந்திரசேகரன் என்பவரும் 100%பிராமனராக இருக்க வாய்ப்புகள் உண்டு.
This comment was posted by me in Peyarili's blog at http://wandererwaves.blogspot.com/2005/06/6.html#comments as a follow up to the first comment in this blog:
"விசுவாமித்திரர் வாயாலேயே இராசரிசி பட்டம் கிடைத்ததுபோல"
வசிஷ்டர் வாயால் ஐயா, விசுவாமித்திரர் இல்லை. அதுவும் பிரும்மரிஷி, ராஜ ரிஷி இல்லை. மற்றப்படி உங்கள் கூற்றில் தவறில்லை!
சரி, ஹைப்பெர் லிங்கில்தானா பிரச்சினை? விளக்கினால் போயிற்று.
பத்மா சந்திரசேகரன் விஷயத்தையே எடுத்து கொள்வோம். அவர் தன்னைப் பற்றிப் பேசும்போது குறிப்பிட்ட வாக்கியங்களில் ஒன்றுதான் "நான் ஐ.ஏ.& ஏ.எஸ், என் கணவரும் ஐ.ஏ.& ஏ.எஸ்". இது சாதாரண வாக்கியம்தானே. ஆனால் அதுவரை நினைத்தும் பார்க்காத, 1961-ல் பத்மா அவர்கள் எழுதிய அந்தக் குமுதம் கட்டுரை உடனே (அந்த நொடியே) ஏன் ஞாபகத்துக்கு வர வேண்டும்? இம்மாதிரித் தருணங்களில் எனக்கே பிரமிப்பாக இருக்கும். அவரிடம் அவர் வாழ்க்கையை பற்றி நான் கேள்விகள் இட்ட போது என்னில் ஒரு பகுதி மூன்றாம் மனிதனாக நின்று கொண்டு கவனித்து கொண்டிருந்தது போலத் தோன்றியது. கேள்வி கேட்டது நான், ஆனால் அது வேறு யார் குரலாகவோ என் காதுக்கு கேட்டது. அத்தருணத்தில் என் ஆழ் மனது என் கட்டுப்பாட்டில் இல்லை என்றே எனக்கு தோன்றியது.
நம் கோப்புகளில் வரும் ஹைப்பர் லிங்குகளும் எலிக்குட்டியை க்ளிக்கியதும் வேறு பக்கத்துக்குத் தாவுவதில்லையா? அதே போலத்தானே இப்போதும் நடந்தது? ஆடு துறை ரகு நிகழ்ச்சியும் அதே போலத்தான். நான் அடுத்ததாகக் கூறப்போகும் ஹைப்பர் லிங்குக்கு சக வலைபதிவர் ஒருவரே சாட்சி. சில மாதங்கள் முன்புதான் நடந்தது.
இம்மாதிரி ட்ரிக்கெர் செய்யும் வாக்கியங்களை நான் ஹைப்பெர் லிங்க் என்று அழைக்கிறேன். நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள்? மேலும் உதாரணங்களைப் பார்க்கத்தானே போகிறீர்கள், அப்போது பார்க்கலாம். ஆனால் ஒன்று பூர்ணிமா ஜெயராம் விவகாரம் இங்கு பொருந்தாது.
ஆனால் இங்கு வேறு மாதிரியான ஹைப்பெர் லிங்குகளைப் பார்க்கிறேன். ஆடுதுறை ரகு விவகாரத்தில் ஒருவர் ஷட்டகர் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் நான் ஐயங்கார் என்பது நினைவுக்கு வந்து விட்டது (ஆனால் மறந்தால்தானே நினைவுக்கு வரும்? யாருமே மறக்கவில்லை என்று நினைக்கிறேன்). உடனே என் அறிவைப் பற்றியெல்லாம் கருத்து கூற ஆரம்பித்தார். அவருக்கு முதலில் கோபமாக பதிலளித்த நான், பிறகு பொறுமையாக விளக்க, அவரும் ஏற்று கொண்டு சமாதானம் வந்தது). பத்மா அவர்கள் விஷயத்தில் பத்மா 100% பிராம்மணர் என்பது இன்னொருவர் துணிபு. வலைப்பூவில் எல்லோரும் இவ்வாறு ஜாதி ஃபிக்ஸேஷனுடன் அலைகிறார்களே என்பது வேடிக்கையாக இருக்கிறது.
"//இராசரிசி// இது என்ன புது அரிசி? இதுவும் குஜராத் க்ரோஸரீஸ் கடையில் கிடைக்குமா? 20 பவுண்ட் மூட்டை எவ்ளோ?"
இது ஆடுதுறை 88 மற்றும் பொன்னி 101 நெல்லை க்ராஸ் செய்து விளைவிக்கப்படுகிறது. திருவல்லிக்கேணி பைக்ராஃப்ட்ஸ் சாலையில் மரைக்காயர் ஸ்டோர்ஸில் 50 கிலோ மூட்டைக்கு 1000 ரூபாய் விலையில் கிடைக்கும். டோண்டு ராகவன் உங்களை அனுப்பினார் என்றால் ஒரு மூட்டை வாங்கினால் கடை முதலாளியே மூட்டையைத் தன் தலையில் தூக்கிக் கொண்டு வந்து வீட்டில் போடுவார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
/அடுத்த லிங்குக்கு ஒரு சகவலைப்பதிவரே சாட்சி./
அவரசத்தில், "அடுத்த விலங்குக்கு ஒரு சகலைப்பதிவரே சாட்சி" என்று படிக்க, என் மண்டைக்குள் சீரியஸாக எரிந்துகொண்டிருந்த பல்புகள் சுட்டுபோய்விட்டன. ;-)
நான் சமீபத்தில் 1957-ல் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது ஒரு கணக்கு எனக்குத் தெரியவில்லை. என் அம்மாவிடம் சொன்னேன். அவர் கணக்கை ஒரு தரம் உரக்கப் படிக்கச் சொன்னார். நான் ஆரம்பித்தேன் "ஒருவன் தன் மனைவியை ரூபாய் 1000-க்கு வாங்கி ரூபாய் 1550-க்கு விற்றால் அவன் லாபம் எவ்வளவு? அதன் சதவிகிதம் எவ்வளவு" என்று படிக்க, என் அம்மா கையில் இருந்த பாத்திரத்தைக் கீழே போட்டார். ஷேவ் செய்து கொண்டிருந்த அப்பாவுக்கு வெட்டுக்காயம். அம்மா என்னிடமிருந்து புத்தகத்தைப் பிடுங்கிப் பார்க்க அதில் ஒருவன் ஒரு மனையை (வீட்டு மனை) வாங்கி விற்ற கணக்கு இருந்தது. தலையில் குட்டு எனக்கு. இதில் புத்திசாலித்தனமாக ஒரே ஒரு காரியம் செய்தேன். அவ்வளவு நாட்களும் மனையை மனைவி என்றே படித்து வந்திருக்கிறேன். அதை அப்போது கூறாது இன்னொரு குட்டிலிருந்து தப்பித்தேன்.
அது சரி அடுத்த ஹைப்பர் லின்க் வந்து விட்டதே. பார்த்தீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
தரம் கெட்டப் பின்னூட்டங்கள் அழிக்கப்படும். லிங்க் வைத்து கொள்ளப்படும். செய்தி ஹெடெர்ஸுடன் ஜி மெயிலில் இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்னங்க,
dondu (கைதி நம்பர்) 4800161 ங்குறதத் தூக்கிட்டீங்க...?
அப்பின்னூட்டங்களின் தேதியைப் பார்க்கவும் வஜ்ரா அவர்களே. இப்பின்னூட்டத்தின் டிஸ்ப்ளே பெயரைப் பார்க்கவும்.
இது மீள்பதிவு, பழைய பின்னூட்டங்களுடன் சேர்த்து.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Sorry...
ஆமா, அப்ப இருந்தே இதே கதை தானா?
//
எனது மண்டைக்குள் ஒரு பல்பு எரிகிறது!
ஒப்புரான சத்தியமா பத்மாசந்திரசேகரன் என்பவரும் 100%பிராமனராக இருக்க வாய்ப்புகள் உண்டு.
//
வெளக்கம் சொல்லிச் சொல்லியே கீ போர்டு தேய்ஞ்சிருமே?!!
"ஆமா, அப்ப இருந்தே இதே கதை தானா?"
ஆம்.
"வெளக்கம் சொல்லிச் சொல்லியே கீ போர்டு தேய்ஞ்சிருமே?!!"
:)))))))))))))))
உண்மையாகக் கூறுங்கள். அந்த நிகழ்ச்சிகள் அதிசயமாகத் தோன்றவில்லையா?
இன்னும் வரும் ஹைப்பர் லிங்குகளையும் நோக்குங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நீங்கள் சொல்லும் ஹைபர் லிங்குகள் சுவாரஸ்யமானவையாக இருக்கின்றது. இது போல் செலிப்ரிடி லெவலில் நமக்கு டச் இல்லை என்றாலும் ஹைபர் லிங்குகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது...
மற்ற பழய பதிவுகளின் சுட்டி தந்தீர்கள் என்றால் சிறப்பு.
அன்னியலோகம் கொடுக்கும் archive utility யை பயன் படுத்தவேண்டுகிறேன்.
"மற்ற பழய பதிவுகளின் சுட்டி தந்தீர்கள் என்றால் சிறப்பு."
ஹைப்பர்லிங்குகள் அத்தனையும் புதுப்பிக்கப்பட இருக்கின்றன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பத்மா சந்திரசேகரன் மயக்கமாக விழுந்திருப்பாரே?
:)))))))))))))
கிருஷ்ணன்
Post a Comment