பதிவு - 5
பதிவு - 4
பதிவு - 3
பதிவு - 2
பதிவு - 1
நான் ஏற்கனவே கூறியிருந்தபடி பிளாண்டில் வேலை செய்ய வேண்டிய என்னை கார்ப்பரேட் ஆஃபீசிலேயே உட்கார வைத்து, அதன் லைட் மற்றும் ஃபான்களை மேற்பார்வை செய்யுமாறு பணித்திருந்ததால் நான் பாட்டுக்கு தேமேனென்று எனது மொழிபெயர்ப்பு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கள் மேனேஜருக்கு மட்டும் என் மேல சிறிது சம்சயம் என்று நினைக்கிறேன். வேறு ஒன்றும் இல்லை, நான் ஆஃபீசுக்கு வராமல் எங்காவது மட்டம் அடித்து விடுகிறேனா என்றுதான். ஆகவே தினமும் தான் காலையில் வேலைக்கு வந்ததும் என்னை இண்டர்காமில் கூப்பிட்டு ஏதாவது பேசி அறுப்பார். நானும் சமயம் கிடைத்தது என்று அவரைப் போட்டு எதிர்மரியாதையாக அறுத்து விடுவது உண்டு.
வருடம் 1987. எம்.ஜி.ஆர். அவர்களது இறுதிச் சடங்குகள் நடந்த தினத்தன்று ஐ.டி.பி.எல். கார்ப்பரேட் ஆஃபீஸில் திடீரென காலை 10 மணிக்கு அமைச்சகத்திலிருந்து வந்த தகவல்களின்படி விடுமுறை அறிவிக்கப்பட்டது. மொத்தம் 5 பஸ்கள் ஸ்டாஃபுகளுக்காக. அடுத்த 5 நிமிடத்தில் எல்லோரும் பஸ்களில் ஏறிக் கொள்ள, கட்டிடமே காலியானது. நான் மட்டும் என் சீட்டில் இருந்து கொண்டு எனது மொழிபெயர்ப்பு வேலைகளைத் தொடர்ந்தேன். அடுத்த நாளிலிருந்து நான் பத்து நாட்கள் லீவில் போகவிருந்தேன். ஆகவே கையில் இருக்கும் வேலையை முடிக்க வேண்டுமே என்ற அவசரம் வேறு.
எண்ணி ஐந்தாவது நிமிடம் இண்டர்காம் ஒலித்தது. எடுத்துப் பேசினால் மேனேஜர். அவர் நான் இன்னும் என்னிடத்தில் இருப்பதைப் பார்த்து வியப்படைந்தது போல இருந்தது. சாதாரணமாகப் பேசுவது போல நினைத்துக் கொண்டு என்னெனாவோ சம்பந்தம் இல்லாத கேள்விகள். பிறகு கார்ப்பரேட் ஆஃபீஸ் நிலவரம் பற்றிக் கேட்க எல்லோரும் வீட்டுக்குப் போய் விட்டதைக் கூறினேன். நான் ஏன் இன்னும் அங்கேயே இருக்கிறேன் என்பதை கடைசியில் கேட்க, பிளாண்டுக்கும் லீவா என்று "ஆச்சரியத்துடன்" நானும் கேட்டேன். சிறிது நேர மௌனம். அவருக்கு பின்னால் லாம்பா என்னும் ஆஃபீஸர் "ராகவன் போயிருக்க மாட்டான் என்று நான் கூறியது சரியாகப் போய் விட்டது பார்த்தீர்களா" என்று கேட்டது மேனேஜர் டெலிபோன் மவுத் பீசை சரியாக மூடாததால் எனக்குத் தெளிவாகக் கேட்டது.
"உங்களைப்போல் எத்தனைப் பேரை நான் பார்த்திருக்கிறேன்" என்று நான் நினைத்தேன், ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. இன்னும் சற்று நேரம் அறுத்து விட்டு, பேச்சை முடித்து கொண்டார் மேனேஜர். நானும் விறுவென்று மூட்டை கட்டிக் கொண்டு, கீழே வந்து, என் சைக்கிளில் ஏறி வீடு நோக்கி விரைந்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாசன் மலர்
-
Pa Raghavan
உத்வேகம் தரக்கூடிய புத்தகங்களுக்கு என்று ஒரு பெரிய சந்தை உண்டு. 2003ம்
ஆண்டு விகடன் வெளியிட்ட இந்த மலர் அப்படிச் சந்தையில் இருக்கும் எந்தப்
...
4 days ago
3 comments:
இப்போது எழுத நினைப்பவர்கள் பலருக்கும் சுஜாதா அவர்கள் ஒரு இன்ஸ்பிரேஷனே. பாலகுமாரனுக்கும் அவரே இன்ஸ்பிரேஷன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல எழுத்தாளனாக வேண்டுமென்றால் நிறையப் படிக்க வேண்டும் என்று சுஜாதா, ரா.கி.ரங்கராஜன் போன்றவர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். அதனால் ஒரு எழுத்தாளருக்கு பலர் இன்ஸ்பிரேஷனாக அமைவது தவிர்க்க முடியாததே.
கிருஷ்ணன்
மன்னிக்கவும் பஜ்ஜி அவர்களே, உங்கள் பின்னூட்டத்தை பிளாக்கர் ஏற்க அழும்பு செய்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Bajji(#07096154083685964097) has left a new comment on your post "IDPL நினைவுகள் - 6":
பெரிய ஆளா இருந்திருப்பீங்க போலிருக்கு?
பஜ்ஜி
http://bajjispeaks.blogspot.com/
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.
Post a Comment