ஹைப்பர்லிங்க் - 1
ஆடுதுறை ரகு
இன்னொரு மீள்பதிவு, இன்னொரு ஹைப்பர்லிங்க். இந்த ஹைப்பர் லிங்குகளின் விசேஷமே அவை எதிர்பாராது வருவதில்தான் இருக்கிறது. ஒரு நிமிடம் வேறு எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருப்போம். அடுத்த நிமிடம் ஹைப்பர் லிங்க் வந்து முடிந்திருக்கும். எல்லோரும், நான் உட்பட, ஆச்சரியத்தில் ஆழ்ந்து போவோம். இப்போது ஹைப்பர் லிங்குக்குக்கப் போவோம்.
வருடம் 1982. ஐ.டி.பி.எல்லில் என்னை அவசர பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வேலைக்காக ஹைதராபாத் பிளாண்டுக்கு அனுப்பியிருந்தனர். அங்கு டவுன்ஷிப்பில் என் சக பொறியாளர் திரு ராமமூர்த்தி அவர்கள் வீட்டில் என்னை சாப்பாடுக்குக் கூப்பிட்டிருந்தார்கள்.
சாப்பாடு முடிந்தது; தூர் தர்ஷனில் சித்ரஹார் ஓடிக் கொண்டிருந்தது.
அப்போது ஷஷி கபூர் மற்றும் ஷர்மிலா டாகோர் நடித்த "ஆ கலே லக் ஜா" என்ற படத்திலிருந்து ஒரு பாட்டை ஒளி பரப்பினார்கள். அதைப் பார்த்த உடன்,
ராமமூர்த்தி: "இப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் நண்பன் செய்த கஜமுஜாதான் ஞாபகத்துக்கு வருகிறது".
நான்: "நீங்கள் குறிப்பிடும் நிகழ்ச்சி சென்னை எமரால்ட் தியெட்டரில் 1973 டிசம்பர் 31-ல் மாலைக் காட்சியில்தானே நடந்தது?"
ராமமூர்த்தி என்னைத் திகைப்புடன் பார்த்தார்.
ராமமூர்த்தி: "எப்படி ராகவன்...?"
நான்: நீங்கள் நண்பர்கள் சேர்ந்து தண்ணியடித்துவிட்டு புது வருடத்தை (1974) வரவேற்க இந்தப் படம் சென்றீர்கள். அப்போது முதல் காட்சியில் சர்மீலா டாகோர் பின்னால் ஓடி வரும் ஷஷி கபூர் 'ஸிர்ப் ஏக் பார், ஆ கலே லக் ஜா' என்று கூறுவார். அன்று திரையில் அவ்வாறு அவர் கூறியதும் இங்கே உங்கள் குழுவில் ஒருவன் 'களக், புளக, தூ தூ தூ என்ற சப்ததுடன் வாந்தி எடுத்தான். முன் ஸீட்டில் உட்கார்ந்திருந்தவர் சட்டையெல்லாம் வாந்தி. நண்பனை டாய்லெட்டுக்கு அழைத்துச் சென்றால், முன் ஸீட்டு நபர் வாஷ் பேஸினில் தன் சட்டையை அலசிக் கொண்டிருந்தார். எல்லாம் கஜமுஜா ஆகி விட்டதல்லவா"?
ராமமூர்த்தி: "ராகவன் எப்படி உங்களுக்கு இது தெரியும்? நீங்கள் அச்சமயம் அங்கு இருந்தீர்களா?"
நான்: "அன்று நான் பம்பாயில் இருந்தேன்".
ராமமூர்த்தி: பின் எப்படி நேரில் பார்த்தது போலக் கூறுகிறீர்கள்?
நான்: ஆனால் சில நாட்களுக்குப் பிறகு என் ரூம்-மேட் கிருஷ்ணமூர்த்தி என்பவன் சென்னைலிருந்து திரும்பி வந்து என்னிடம் இதைக் கூறினான். அவன் குழுவில் ராமமூர்த்தி என்றொருவன் இவ்வாறு செய்ததாகவும், ஆ கலே லக் ஜாவை கஜமுஜா செய்ததாகவும் கூறினான்."
ராமமூர்த்தி (ஆவேசத்துடன்): "செருப்பு பிய்ந்து விடும் என்று கிருஷ்ணமூர்த்தி படவாவைப் பார்த்தால் கூறுங்கள். வாந்தியெடுத்தது அந்த ராஸ்கல்தான்."
நான்: "டேக் இட் ஈஸி ராமமூர்த்தி, இது நடந்து 8 வருடம் ஆகி விட்டன."
இப்படியாக இன்னொரு ஹைப்பர் லிங்க் என் வாழ்வில் நடந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
23 hours ago
7 comments:
super KADHAI mamu!!
சார், இந்த 'ஆ கலே லக் ஜா' தான தமிழ்ல சிவாஜி சார் நடிச்சு 'உத்தமன்'னு வந்து படகு படகு ஆசைப் படகுன்னெல்லாம் பாடி அப்புறமா ஊத்திச்சு.
அன்புடன்
ஆசாத்
"இந்த 'ஆ கலே லக் ஜா' தான தமிழ்ல சிவாஜி சார் நடிச்சு 'உத்தமன்'னு வந்து படகு படகு ஆசைப் படகுன்னெல்லாம் பாடி அப்புறமா ஊத்திச்சு."
படகு கவுந்துக்கிச்சு? இந்தியில் சூப்பர் ஹிட்டான இப்படம் தமிழில் ஊத்திக் கொள்ள முழு காரணம் பாத்திரத் தேர்வுதான். இப்படத்தின் நாயகனாக சஷி கபூர் பொருந்தியதைப் போல சிவாஜி பொருந்தவேயில்லை. இன்னொன்று சிவாஜிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகச் சொல்லி மற்றப் பாத்திரங்களை கனமில்லாமல் ஆக்கி விட்டார்கள். ஹிந்தியில் பையனாக நடித்தவனே தமிழிலும் நடித்தான். ஆனால் இடைபட்ட ஓரிரு வருடங்களில் அவன் முகம் முற்றி பார்க்கவே சகிக்கவில்லை. தமிழில் குழந்தை நடிகருக்கு என்ன பஞ்சம்?
சத்ருக்ன சிஙாவின் இடத்தில் பாலாஜி? நினைத்து பார்க்கவே கஷ்டமாக இருந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பி.கு.
இவ்வளவு நாள் கழித்து இங்கு நான் பின்னூட்டமிடுவது இந்த ஹைப்பர் லிங்கை வெளிக்கொணரவே. ஒரு பின்னூட்டமும் இல்லாதிருந்தால் அப்படியே தேதியை மாற்றிப் போட்டிருப்பேன்.
வணக்கம் தினகர் அவர்களே. எல்லாவற்றுக்கும் ஒரு ஆரம்பம் வேண்டும்தானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
'ஸிர்ப் ஏக் பார், ஆ கலே லக் ஜா'
"ஒரே ஒரு முறை, என் அணைப்புக்குள் வா" என்று இந்த உருது வாக்கியத்துக்கு பொருள்!
அன்புடன்,
டோண்டு ராகவன்
பாவம் ராமமூர்த்தி, ரொம்ப டென்ஷன் ஆயிட்டாரே!
கிருஷ்ணன்
ராமமூர்த்தி பாவம்தான். அதைவிட அவர்மனைவிக்குத்தான் அது அதிகத் தமாஷாக இருந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment