10/27/2006

ரொம்ப நாளைக்கப்புறம்

ரொம்ப நாளாயிற்று புதிர்கள் போட்டு.

1. ராஜாமணி தான் கையில் பிடித்திருந்த பந்தை மிக மெதுவாகத்தான் தள்ளி விட்டான். ஆனால் அதற்கு பிறகு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகப் போக வேண்டியிருந்தது. ஏன்?

2. ஒருவன் தனது காரின் முன்சீட்டில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறான். கதவுகள், ஜன்னல்கள் எல்லாம் மூடி உள்பக்கமாக லாக் செய்யப்பட்டுள்ளன. சுட்ட துப்பாக்கியோ காரின் பின் சீட்டில் அவன் கைக்கு எட்டாத தூரத்தில் உள்ளது. காரின் எந்தக் கண்ணாடியும் உடையவில்லை, குண்டு புகுந்த துளைகளும் எங்கும் இல்லை. என்ன நடந்தது?

3. ஒரு போலீஸ்காரன் கடற்கரையில் நின்று அழுது கொண்டிருக்கிறான். அவன் ஒரு பேப்பரில் எதையோ படித்துக் கொண்டிருக்கிறான். சிகரெட் புகைக்க ஆரம்பிக்கிறான். அதன் நெருப்பு அவன் கையைத் தீண்டினாலும் அவன் அதை கவனிக்கவில்லை. அப்படி என்னத் துயரம்?

4. ஒரு பெண்மணி மைக்ரோ அவனில் இரண்டு நிமிட செட்டிங் செய்து கொண்டு காப்பி தயாரிக்கிறாள். இரண்டு நிமிடம் கழித்து கதவைத் திறந்து பார்த்து விட்டு மறுபடி இரண்டு நொடிகளுக்குக் கதவை மூடி விட்டு பிறகு கப்பை வெளியே எடுக்கிறாள். ஏன்?

5. ஒருவன் அவன் மனைவி அவனுக்கு பரிசாக அளித்த ஆஃப்டர்ஷேவ் லோஷனைப் போட்டுக் கொண்டு வேலைக்குப் போகிறான். இறக்கிறான். என்ன நடந்தது?

6. ஒருவன் தனது மனைவியுடன் சினிமாவுக்குப் போகிறான். அந்த தியேட்டரில் ஹவுஸ்ஃபுல். படம் பார்க்கும்போது மனைவியைக் கொன்று விடுகிறான். பிறகு பதட்டப்படாமல் அவள் பிணத்தை ஒருவருக்கும் தெரியாமல் வீட்டுக்கு கொண்டு செல்கிறான். எப்படி?

7. தில்லியில் வசிக்கும் ராமகிருஷ்ணமாச்சாரி ஒரு சாதாரண மனிதர். ஒரே நாளில் விசா, பாஸ்போர்ட் ஏதும் இல்லாமல் 8 அயல்நாடுகளுக்கு சென்று திரும்புகிறார், காலணா செலவில்லாமல். யாரும் அவரை எங்கும் கைது செய்யவில்லை. எப்படி?

அன்புடன்,
டோண்டு ராகவன்

40 comments:

லதா said...

6. அது (போண்டா இல்லாத) ட்ரைவ் - இன் தியேட்டர் :-)))

dondu(#11168674346665545885) said...

சரியான விடை. ஆனால் பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டரில் போண்டா கிடைக்கும். :))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

லதா said...

7. அவர் 8 நாடுகளுக்கு ஒரே நாளில் பயணம் செய்யும் விமானத்தில் பணி செய்கிறார். ( ஃப்ளைட் க்ரூ மெம்பர் )

dondu(#11168674346665545885) said...

7 வது கேள்விக்கு லதா அளித்த விடை தவறானது. பைலட்டாக அல்லது க்ரூ மெம்பராக இருந்தாலும் விசா, பாஸ்போர்ட் தேவை.

அன்புடன்,
டோஒண்டு ராகவன்

வஜ்ரா said...

//
ஒருவன் தனது காரின் முன்சீட்டில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறான். கதவுகள், ஜன்னல்கள் எல்லாம் மூடி உள்பக்கமாக லாக் செய்யப்பட்டுள்ளன. சுட்ட துப்பாக்கியோ காரின் பின் சீட்டில் அவன் கைக்கு எட்டாத தூரத்தில் உள்ளது. காரின் எந்தக் கண்ணாடியும் உடையவில்லை, குண்டு புகுந்த துளைகளும் எங்கும் இல்லை. என்ன நடந்தது?
//

அவனை கொலை செய்து முன் சீட்டில் பிணத்தை அமர்த்திவிட்டு, பின் சீட்டில் துப்பாக்கியை வீசி விட்டு காரை மூடிவிட்டுச் சென்று விட்டான் கொலைகாரன்.!

//
ஒரு பெண்மணி மைக்ரோ அவனில் இரண்டு நிமிட செட்டிங் செய்து கொண்டு காப்பி தயாரிக்கிறாள். இரண்டு நிமிடம் கழித்து கதவைத் திறந்து பார்த்து விட்டு மறுபடி இரண்டு நொடிகளுக்குக் கதவை மூடி விட்டு பிறகு கப்பை வெளியே எடுக்கிறாள். ஏன்?
//

கப் சூடாக இருக்கும்ல..? அதுக்குத்தான்.

//
ஒருவன் அவன் மனைவி அவனுக்கு பரிசாக அளித்த ஆஃப்டர்ஷேவ் லோஷனைப் போட்டுக் கொண்டு வேலைக்குப் போகிறான். இறக்கிறான். என்ன நடந்தது?
//

Axe என்றால்...எக்கச்செக்க பெண்மணிகள் மொய்த்து மூச்சுத் திணறி இறந்துவிடுகிறான்...

மற்ற brand என்றால்...தெரியாது..

//
தில்லியில் வசிக்கும் ராமகிருஷ்ணமாச்சாரி ஒரு சாதாரண மனிதர். ஒரே நாளில் விசா, பாஸ்போர்ட் ஏதும் இல்லாமல் 8 அயல்நாடுகளுக்கு சென்று திரும்புகிறார், காலணா செலவில்லாமல். யாரும் அவரை எங்கும் கைது செய்யவில்லை. எப்படி?
//

அவர் ஒரு விமானம் ஓட்டும் Pilot.

dondu(#11168674346665545885) said...

"அவனை கொலை செய்து முன் சீட்டில் பிணத்தை அமர்த்திவிட்டு, பின் சீட்டில் துப்பாக்கியை வீசி விட்டு காரை மூடிவிட்டுச் சென்று விட்டான் கொலைகாரன்.!"
தவறு. கதவு, ஜன்னல்கள் செண்ட்ரல் கண்ட்ரோல்ட். இறந்தவருக்கு மட்டுமே கட்டுப்படும் கண்ட்ரோல்.

மைக்ரோ அவன் விடை தவறு. அடுத்த இரண்டு நொடிகளும் அடுப்பு வேலை செய்கிறது.

ஆஃப்டர் ஷேவ் லோஷன் விடையும் தவறு.

பைலட் இல்லை என்று லதாவின் விடையை நிராகரித்தபோதே கூறி விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லதா said...

7. ட்ரேட் / பிசினஸ் / மொனாப்பலி என்ற விளையாட்டில்

லதா said...

2. அது ஒரு டாப்லெஸ் மொட்டை கார்.

வஜ்ரா said...

//
தில்லியில் வசிக்கும் ராமகிருஷ்ணமாச்சாரி ஒரு சாதாரண மனிதர். ஒரே நாளில் விசா, பாஸ்போர்ட் ஏதும் இல்லாமல் 8 அயல்நாடுகளுக்கு சென்று திரும்புகிறார், காலணா செலவில்லாமல். யாரும் அவரை எங்கும் கைது செய்யவில்லை. எப்படி?
//

அவர் இறந்துவிட்டார்...ஆனால் உடல் luggage போல்...தொலைந்து போய்...பல நாடுகளுக்குச் சென்று மீண்டும் வருகின்றது...

dondu(#11168674346665545885) said...

அது ஒரு டாப்லெஸ் மொட்டை கார்
சரியான விடை.

டிரேட் அல்லது மொனாப்லி தவறான விடை. முந்தையதில் பம்பாயில் உள்ள இடங்களும், பிந்தஒயதில் நியூ யார்க்கில் உள்ள இடங்களும்தான் இருக்கும்.

ராமகிருஷ்ணமாச்சாரி இறக்கவில்லை. நன்றாக சௌகரியமாகத்தான் இருக்கிறார். விசா, பாஸ்போர்ட் இல்லாமல் நேரடியாகவே எட்டு நாடுகளுக்கும் சென்று ஒரே நாளில் திரும்புகிறார். பிளேனில் எல்லாம் செல்லவில்லை. எவ்வளவு முறை வேண்டுமானாலும் செல்வார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sridhar Narayanan said...

1. ராஜாமணி ஒரு மருத்துவர்.

3. அந்த போலீஸ்காரர் படித்துகொண்டிருப்பது அவருடைய மெடிகல் ரிபோர்ட். அவர் கையில் உணர்ச்சி அற்றுபோய் விட்டது என்று அந்த ரிப்போர்டில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் துயரப்பட்டு அழுது கொண்டிருக்கிறார். சிகரெட் நெருப்பு சுட்டாலும் அவருக்கு உறைக்கவில்லை.

7. அவர் around the world in 80 days படம் பார்த்தார். (அ) அவர் video conferencing செய்தார்.

dondu(#11168674346665545885) said...

ஸ்ரீதர் வெங்கட் அவர்களே,

கேள்விகள் 1 மற்றும் 7/க்கான விடை தவறு. 3 கேள்விக்கு கிட்டத்தட்ட நெருங்கி விட்டீர்கள். கடைசி ஸ்டெப் எடுக்கிறீர்களா என்று பார்க்கிறேன். இன்னும் 4 மணி நேரத்துக்கு வேறு யாரிடமிருந்தாவது முழு விடை வராவிட்டால், முழு க்ரெடிட்டும் உங்களுக்கே. எப்படியானாலும் பாதி கிரெடிட் வந்து விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜே அவர்களே,

தவறான விடை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
ிகரெட் புகைக்க ஆரம்பிக்கிறான். அதன் நெருப்பு அவன் கையைத் தீண்டினாலும் அவன் அதை கவனிக்கவில்லை. அப்படி என்னத் துயரம்?
//
அது மெடிகல் ரிப்போர்ட். (ஸ்ரீதர் வெங்கட் சொல்லிவிட்டார்).

அவருக்கு கேன்சர்...சிகரேட் பழக்கத்தை விடவேண்டும், கடைசி தம்மை விடாமல் இழுக்கிறார்...:D

2. அது கன்வர்டிபிள் என்று யூகிக்க முடியாமல் போயிற்று...!

7. ஒரு வேளை ராமகிருஷ்னாச்சாரி என்பவர் யோகியோ...? தியானத்தில் சென்று வருகிறாரோ?! pilot ம் இல்லை. Crew member ம் இருக்க முடியாது...IFS ஆபிசர், Principle seceratary, Minister என்றாலும், Diplomatic passport இல்லாமல் செல்லமுடியாது...!

5. ஒவ்வாமை....After shave lotion ல் இருக்கும் கெமிகலுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு Anaphylactic shock மூலம் இறக்கிறாரோ!

4. அந்த காபி கப்பின் Handle பின் புறம் இருக்கிறது...அதை ஒவன் இயங்க...அதில் சுற்றி எடுப்பதற்கு இலகுவாக முன்னே வர அந்த இரண்டு வினாடிகள்..!

1. Bowling....?!! விரல் எலும்பு உடைந்துவிட்டது!

dondu(#11168674346665545885) said...

"அவருக்கு கேன்சர்...சிகரேட் பழக்கத்தை விடவேண்டும், கடைசி தம்மை விடாமல் இழுக்கிறார்...:D"
இல்லை.

காப்பி கப் விடை சரியானது.

மற்ற விடைகள் தவறானது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

test

dondu(#11168674346665545885) said...

5.ஆஃப்டர்ஷேவ் லோஷனை குடிச்சிட்டான்

1.கன்னாடி பந்து அல்லது கனமான உலோக பந்து
இரண்டுமே தவறான விடைகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Doctor Bruno said...

3. Leprosy !!! (Or Syringomyelia, Sensory Neuroapthy etc )

7. Dreams

Doctor Bruno said...

1. He pushed the ball (slowly) when they were testing his recovery after some illness. So he continued the therapy

dondu(#11168674346665545885) said...

டாக்டர் ப்ரூனோ,

தொழுநோய் சரியான விடை. மீதி இரண்டு விடைகளும் தவறே. ராமகிருஷ்ணமாச்சாரி கனவெல்லாம் காணவில்லை, நேரடியாகவே செல்கிறார். தெராபி விடையும் சரியில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Doctor Bruno said...

1. The ball fell on some one else and he took them for treatment

//ராமகிருஷ்ணமாச்சாரி ஒரு சாதாரண மனிதர். //
7. He is man and not a bird, which can fly without passport visa. That makes the puzzle interesting

Doctor Bruno said...

Or the countries he visit includes Chera Naadu, Chola Naadu, Pandiya Naadu etc (Just for fun)

OR

He is visiting the Embassies( I think this is more valid answer)

dondu(#11168674346665545885) said...

ராமகிருஷ்ணமாச்சாரி மனிதர் என்று கூறிய பிறகும் அவர் பறவை என்றால் எப்படி.

டாக்டர் ப்ரூனோ மற்றும் Mukin கூறியது சரியான விடை. அவர் பல தூதரகங்களுக்கு தினமும் வேலை விஷயமாகச் செல்பவர். நான் வைத்திருக்கும் விடையில் அவர் கூரியர் கம்பெனியில் வேலை செய்பவர். தில்லியில் வசிக்கும் அவருக்கு சாந்தி பத் வட்டாரத்தில் வேலை. அங்குதான் வரிசையாக பல நாடுகளின் தூதரகங்கள் உள்ளன. ஒரு தூதரகம் சம்பந்தப்பட்ட நாட்டின் பகுதியே என்பது ஜினீவா ஒப்பந்தப்படி உண்மை. இதில் mukin கூறிய வேரியேஷன் ஏற்றுக் கொள்ளத் தக்கது. அவர் முதலாவதாக வேறு விடை அளித்துள்ளார்.

டாக்டர் ப்ரூனோ வெறுமனே தூதரகம் என்று கூறி விட்டு விட்டார். ஆகவே பாயிண்ட் Mukin பெறுகிறார்.

முதலாம் கேள்வி மற்றும் ஐந்தாம் கேள்வி பாக்கி நிற்கின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

GiNa said...

//5. ஒருவன் அவன் மனைவி அவனுக்கு பரிசாக அளித்த ஆஃப்டர்ஷேவ் லோஷனைப் போட்டுக் கொண்டு வேலைக்குப் போகிறான். இறக்கிறான். என்ன நடந்தது?//

ஆஃப்டர்ஷேவ் லோஷனைப் போட்டதால் இறந்ததாக் சொல்லவில்லையே! அது ஒரு coincidence? அவர் ஹார்ட் அட்டாக்கால் இறந்திருக்கலாம்.

rajavanaj said...

Dondu,

1) It's an Iron ball tied to legs, and rajamani is standing on top a big tower/building.

2)he is distracted by the smell of the lotion and got into an accident.

dondu(#11168674346665545885) said...

என் அருமை நண்பர் ஒருவர் சேட்டில் வந்து ஒரு க்ளூ கேட்கிறார்.

முதல் கேள்விக்கான க்ளூ என்னவென்றால் முயற்சி செய்யுங்கள் என்பதே. அதுவா இதுவா என்று முடிவில் ஊசலாடிப் பாருங்கள்.

ஐந்தாம் கேள்விக்கான பதில் ஆஃப்டர்ஷேவ் லோஷனால்தான் மரணம் என்பதில்தான் அடங்கியுள்ளது. சுறுசுறுப்பாக விடையாகியத் தேனைத் திரட்டவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

rajavanaj said...

1) pushing the ball and hospitalising were two different incidents.

dondu(#11168674346665545885) said...

I am disappointed Rajavanaj. I gave clue after all.

Regards,
Dondu N.Raghavan

வஜ்ரா said...

5. After shave lotion ல் உள்ள pheramone களினால் ஈர்க்கப் பட்ட குளவிகள் கொட்டி இறக்க நேரிடுகிறது..!

dondu(#11168674346665545885) said...

வஜ்ரா அவர்களே, முழுவிடை அல்லவென்றாலும் ஏற்றுக் கொள்கிற மாதிரி கொடுத்திருக்கிறீர்கள்.

அவன் தேனீ வளர்ப்பவன். சாதாரணமாக அவனைத் தேனீக்கள் கொட்டாது. ஆனால் அன்று வேறு வாசனையில் இருந்ததால் அவற்றால் அவனை அடையாளம் காண இயலவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வாழ்த்துக்கள் Mukin அவர்களே. ஊசலாடி ஊசலாடிக் கண்டுபிடித்து விட்டீர்கள். :)))))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

subbu said...

7. He is a postman & deliver post to seven different consulate that day

dondu(#11168674346665545885) said...

என்ன சுப்பு அவர்களே,

இவ்வளவு லேட்டாக விடை கூறுகிறீர்கள். இந்த விடை ஏற்கனவே கூறப்பட்டு விட்டதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
அவன் தேனீ வளர்ப்பவன். சாதாரணமாக அவனைத் தேனீக்கள் கொட்டாது. ஆனால் அன்று வேறு வாசனையில் இருந்ததால் அவற்றால் அவனை அடையாளம் காண இயலவில்லை.
//

அப்ப தேனீ வளர்க்கும் புருஷனைக் கொல்ல வேண்டும் என்று அவன் பெண்டாட்டி நினைத்தால், அவனுக்கு After shave lotion கொடுக்கவேண்டியது தானா...! நல்லா ஐடியா கொடுத்தீங்க...இனி பாவப்பட்ட ஆண்கள் பாடு என்ன பாடோ!

:D

dondu(#11168674346665545885) said...

"அப்ப தேனீ வளர்க்கும் புருஷனைக் கொல்ல வேண்டும் என்று அவன் பெண்டாட்டி நினைத்தால்..."

:))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"I totally missed this post"
Better luck next time.

Regards,
Dondu N.Raghavan

ரவி said...

4. சூடு தாங்க கையுறை அணிந்தாள்
6. அது ஒரு ஹாரர் படம். மனைவி மயக்கமடைந்துவிட்டதாக ஏமாற்றுகிறான்
7. அவர் ஒரு விமான டிரைவர். அல்லது ராமகிருஷ்னமாச்சாரி ஒரு விமானம்.

dondu(#11168674346665545885) said...

மூன்றுமே தவறான விடைகள் செந்தழல் ரவி அவர்களே. சரியான விடைகள் ஏற்கனவே கூறப்பட்டு விட்டன, இங்கில்லை. அவை கேரி ஓவர் செய்யப்பட்ட அடுத்த பதிவுகளில்.

எதற்கும் இங்கும் சரியான விடைகளைத் தருகிறேன்.

4. சூடு தாங்க கையுறை அணிந்தாள். இல்லை. மைக்ரோ அவனில் பாத்திரத்தின் கைப்பிடி உள்பக்கமாக இருந்ததால் இரண்டு வினாடிகள் சுற்றவிட்டு, வெளிப்புறமாக கைப்பிடி வந்ததும் ஈஸியாக எடுத்து விட்டார்.
6. அது ஒரு ஹாரர் படம். மனைவி மயக்கமடைந்துவிட்டதாக ஏமாற்றுகிறான். அது டிரைவ்-இன்-தியேட்டர். அவரவர் கார்களிலேயே உட்கார்ந்திருந்தனர்.
7. அவர் ஒரு விமான டிரைவர். அல்லது ராமகிருஷ்ணமாச்சாரி ஒரு விமானம். ராமகிருஷ்ணமாச்சாரி கூரியர் கம்பெனியில் வேலை செய்பவர். புது தில்லியில் சாந்திபத் வட்டாரத்தில் டியூட்டி. அங்கிருக்கும் எம்பஸிகளுக்கு போய் கடிதங்கள் டெலிவரி செய்ய வேண்டும். ஜெனிவா ஒப்பந்தப்படி ஒவ்வொரு தூதரகமும் சம்பந்தப்பட்ட நாட்டின் பிரதேசம்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Radha Sriram said...

2) he comitted suicide the revolver he used fell in the back seat due to ricochet(i think i spelled right!! let me also have right pronounciation Dondu!!)

oops has itbeen already answered if so ignore this please.....!!

dondu(#11168674346665545885) said...

அதை ரிக்கோஷெட் என்று உச்சரிக்க வேண்டும் என நான் இப்போது பார்த்த ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி கூறுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது